ஸ்வர தேவதைகள் குளிக்கும் போது....

35 views
Skip to first unread message

Mohanarangan V Srirangam

unread,
Mar 3, 2014, 1:13:36 PM3/3/14
to min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
கொஞ்ச நாள் வாய்ப்பாட்டுடன் ஹார்மொனியமும் கற்றுக்கொண்டேன், ஒரு பாட்டு வாத்யாரிடம். சிறு வயதில், தந்தையின் ஏற்பாட்டில். அப்பொழுதெல்லாம் அந்த வாத்யார் ஸ்வரக் கட்டைகளைக் கையாளும் விதத்தைப் பார்த்து பிரமிப்பாய் இருக்கும். ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்குப் போகும் போதோ அல்லது ஒன்று விட்டு ஒன்றுக்குத் தாவும் போதோ இரண்டு ஸ்வர வீடுகளும் கூடவே வந்து பிரிவுபசாரம், வரவேற்பு விருந்துபசாரம் இரண்டையும் ஒரே சமயம் கலந்து செய்வது போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவித்து வாசிப்பார். அடேயப்பா...என்று ஒரு மலைப்பு. நானும் கொஞ்சமாக அதைப் போல் முயற்சி செய்தால் அது குளிரில் நடுங்கும் கிழவியின் சொற்கள் போல் அலையலையாக வந்து கடுப்படிக்கும். அவர் சிரித்துக் கொண்டே, அதெல்லாம் போகப் போக கைவரும் என்பார். அந்தத் தான்சேனுக்கு நான் ஒரு மஹாராஜா. 

சிறு வயதில் பிரமிக்கும் ஒன்று விழிப்பு ஏற்பட்டதும் எப்படி விரஸமாகக் காட்சியளிக்கிறது! அவர் வாசித்த முறை எப்படியென்றால் ஸ்வரங்கள் எல்லாம் நன்றாக மொந்தைக்கள்ளைக் குடித்துவிட்டு, ‘அண்ணாச்சி....நீ தனியாவே போகக் கூடாது..ஆமா சொல்லிட்டேன்...’ என்று கட்டித் தழுவி, தடுமாறி இழைந்து நெளிந்து குலாவுவது போன்ற வேலை. 

It is a mart of doping the notes. 

அதுவும் ஹார்மொனியத்தில் இது போன்ற சில்லரை வேலை நன்றாகவே செய்யலாம். 

அது போல் வாய்ப்பாட்டிலும் நம்மவர்கள் ஸ்வரங்களைச் செங்கல் ஜல்லி போல் பயன்படுத்தி ஏதாவது கட்டடம் எழுப்பும் கொளுத்து வேலைதான் கற்று வைத்திருக்கிறார்களே அன்றி, தூய ஸ்வர தேவதைகளின் அழகிய உடலை, அந்தத் தேவதைகள் சப்தம் என்னும் நதியில் பிறந்த மேனிக்குக் குளிக்கும் போது மர இடுக்களிலிருந்து ஒளிந்து பார்க்கும் சாகசங்களைச் செய்து பார்ப்பதே இல்லை. எல்லாம் சமத்துப் பிள்ளைகள்! அனா ஆவன்னா அஃகன்னா வரைக்கும் பார்க்காமல் சொல்லும். 

நானும் இந்த ஸ்வர தேவதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவர்கள் காடுகளில் திரியும் போது, அருவிகளில் சுதந்திரமாகக் குளிக்கும் போது காணும் வாய்ப்பு கிட்டாதா என்று யோசித்ததுண்டு. ஆனால் நான் பார்க்க நேர்ந்த இசையெல்லாம் ஒரே ஸ்வரக்கட்டு கிட்டங்கியாக அங்கப்ரதக்ஷிணம் கணக்காக உருண்டனவேவொழிய நிற்கக் கூட இங்கு இசையின் கொழுந்துகளுக்கு நாம் வாய்ப்பளிப்பதில்லை என்பது போல் பட்டது. 

எனக்கு என்னவோ நம்மிசைகளில் இந்த ஓவர் பக்தி உணர்ச்சி இசை உணர்வு என்பதையே மழுங்க அடித்து, மானிடத்தைப் புதைத்த இடத்தில் ஓங்கிப் படரும் கொடிகளோ இவர்கள் கட்டும் ஸ்வர வரிசைகள் என்ற ஐயம்தான் எழுகிறது. தூய இசையை மீட்டெடுப்பதற்கு என்றே நாம் ஒரு தடவை அவதாரம் செய்தால்தான் என்ன என்ற வீண் எண்ணம் குடிக்காத போதை உளறலாய் எப்பொழுதாவது ஆதங்கம் என்ற வகையில் எழுகிறது. 

ஆனால் ஏதோ கொஞ்சம் சில விதயாசமான வாத்ய விநோதர்களும், வீணை பாலசந்தர் போன்று, இல்லாமல் இல்லை. ஆனால் அது தொலைந்து போன இடத்தில் தட்டுப்படும் தடயம் என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆனால் ஸ்வர தேவதைகள் காட்டின் ஆழத் தனிமையில், பொங்கும் ஒலி வெள்ளத்தில், ஒளிரும் முழு திருமேனிகளுடன், அந்தத் திருமேனிகளின் பூரித்த அத்தனை லாவண்யங்களுடனும் குளிப்பதை ஒரு சமயம் தர்சனம் செய்யத்தான் செய்தேன். அது எப்பொழுது என்றால் செர்கய் ராக்ஹ்மனினோஃப் (Sergei Rachmoninoff) அவர்களின் இசை ஊழியில்தான். அவருக்கு முன்னால் பிதாமகர் ச்ட்செய்கோவ்ஸ்கி போன்றவர்களும் உண்டு. ஆனால் வியாசரைப் பார்த்தால் அப்சரசுகள் குளிக்கும்போது தங்களை மூடிக்கொண்டது போன்று ஸ்வரங்கள் அவர்களிடத்தில் எல்லாம் always in attire. ஆனால் படுபாவி, ராக்ஹ்மனினோஃப் விஷயத்தில் என்றால் அந்த தேவதைகள் எல்லாம் சுதந்திரமாக, சுய ரூபத்தில் முழுமையாகத் திரிகின்றன. வேண்டாம் நீங்களே கேட்டுப் பாருங்கள் -- 


***

Sk Natarajan

unread,
Mar 5, 2014, 12:11:34 AM3/5/14
to தமிழ்ச் சிறகுகள், min tamil, vallamai
கேட்டேன் ஐயா அருமை
ஒவ்வொரு முறை நான் இசை பயில செல்லும் போதும் தடை ஏற்பட்டது
அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்


Mohanarangan V Srirangam

unread,
Mar 5, 2014, 10:38:23 AM3/5/14
to min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
ரஷ்யாவின் செவ்வியல் இசை மரபு என்பது கிராமிய இசையில் ஊற்றம் கொண்டு எழுந்த இயல்பான வளர்ச்சி. கிளிங்கா அவர்களின் காலம் தொடக்கமாக ஐரோப்பிய செவ்வியல் இசையில் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. கிளிங்காவிற்குப் பின் பலர் செவ்வியல் இசையின் ஆலமரங்களாய்த் தொடர்ந்தனர். அந்த மரபில் ச்டெய்க்கோவ்ஸ்கி அவர்களுக்கு ஓர் தனி இடம் உண்டு. அவரது பயானோ முதலிய வாத்யங்கள் மூலமான இசை மொழியின் ஆழங்களால் ஈர்க்கப்பட்ட ராஹ்க்மனினோஃப் 1917ல் ரஷ்யா விட்டுக் கிளம்பு முன்பே தமது மஹத்தான படைப்புகளை யாத்துவிட்டார். அமெரிக்கா அவருக்குப் புகல் நாடாக உதவியது, பெவர்லி ஹில்ஸில் அவர் இறுதி நாட்கள் வரை. ரஷ்யாவின் இசை மரபு விமரிசகர்கள் அவரின் படைப்புகளைப் பெரிதும் குற்றம் கண்டே எழுதினர். மென்மையான மனம் கொண்ட ரஹ்க்மனினோஃப் மிகவும் மனம் உடைந்தார். தன்னை உளவியல் சிகிச்சை மூலம் அடுத்த படைப்புகளைத் தர உதவிய மருத்துவருக்கே தமது மீண்டு வந்த இசை யாப்பை அர்ப்பணித்தார். அவரது இசையில் எப்பொழுதும் சொல்லவரும் அரட்டை குறைவாகவும், உணர்த்தவரும் ஸ்வரங்களின் தூய பிரஸன்னம் அதிகமாகவும் இருந்த இயல்பால் இன்றும் அவரது இசை ஆதி நாதத்தில் குளித்து வந்த புத்துணர்ச்சியை நமக்கும் கடத்த வல்லதாகிறது.

Rachmoninoff plays his Piano Concerto No 2 Moderato part


Rachmoninoff's Prelude in G Minor Op 23 


***

Mohanarangan V Srirangam

unread,
Mar 9, 2014, 2:52:59 PM3/9/14
to min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
செர்கி ராஹ்மனினோஃப் அவர்களின் ஸிம்ஃபொனி எண் 2, ஈ மைனர், ஓபஸ் 27 என்பது அவர் யாத்த சூழ்நிலையையும், முதன் முதலில் அந்த ஸிம்ஃபொனி மாஸ்கோவில் அடைந்த வரவேற்பையும் பற்றி நிகோலை பஷனோவ் தமது நூலான ‘Rachmoaninov' என்பதில் அருமையான விவரணை தருகிறார். இசைக்கான உரைநடையையே மேற்கத்திய இசை தத்துவ இய்லாளர்கள் வளர்த்துள்ளனர். 

அந்த விவரணைகளைக் கொஞ்சம் தமிழ்ல் தர முயற்சி செய்கிறேன்.: 

26ஆம் தேதி ஜனவரி 1908ல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஸிம்ஃபொனி 2 வழங்கப்பட்டது. மூன்றாவது ஒத்திகையும் முடிந்து இசை யாத்தவர் தமது இசையீன் குழவியைத் தந்த உடனே சென்றுவிட்டார். மாஸ்கோ என்ன சொல்லுமோ என்று எதிர்ப்பார்ப்பு. ஆனால் மாஸ்கோவும் அவருக்காகக் காத்துக் கொண்டுதான் இருந்தது. 

பழைய தலைமுறைகள் போய்விட்டன. புதிய இளைய தலைமுறைகள் புதிய ஆர்வத்தின் தொனிகளை வெளிப்படுத்தினர். 

நேரே வந்தார் இசை அரங்கிற்கு ராஹ்மனினோஃப். இதயம் கொஞ்சம் அடித்துக் கொண்டது. ஆனால் உள்ளே நுழையும் போதே அவரால் உணர முடிந்தது கூடியிருந்த உள்ளங்கள் அனைத்தும் இதயத் துடிப்பில் ஒத்திசைத்தன என்று! 

லாகவமான ஒரு உடல் வணக்கம் செய்து விட்டுத் தொடங்கினார். சட்டென்று திரும்பி வாத்ய அணிவரிசையைப் பார்த்தார். ஒரே சில்லென்ற அமைதி. அவருடைய உடல் நெடிய அந்த உருவம் உறைந்தது ஒரு கணம். கைகள் இசைக்குறிப்புகள் மயமாயின. முதல் இசைக் குறிப்பு அவருடைய கைகளில் முகிழ்த்தது. 

ஆழ்ந்த நிதானத்துடன் அமைதியின் விக்கல்களாய் செல்லோக்கள் தொடங்கின. கீழ்ஸ்தாயியில். திடீரென்று ட்ரம்பட்டுகளின் முழக்கம், பிரெஞ்சு ஊது குழல்களின் எக்காளம் மன்றத்தில் வெடித்தன. மொத்த ஊழி இசையும் சேர்ந்து கூரையில் கீழே தொங்குவது போன்ற பிரமை உள்ளே காற்றில் எங்கும் அப்பிக் கிடந்தது. 

ராஹ்ம்னனினோஃப் விட்டுப் பிடிக்கத் தெரிந்தவராய் இருந்தார். கை அபிநயங்களில் கச்சிதம். அவரது கையசைவுகளோடு சேர்ந்து மொத்த வாத்ய அணிகளும் மூச்சிழுத்து விட்டுப் பழகின. வாத்யங்கள் மட்டுமா? அவற்றோடு சேர்ந்து எண்ணற்ற இசைப் பிரியர்கள் ஹாலில், அவர்களுடைய உள்ளங்களும் ஊக்கங்களும் அவரோடு எழுந்து அவரோடு மயங்கி முயங்கின. அவர்களை எதுவுமே அச்சுறுத்த முடியாது என்றுதான் படட்து. எதுவுமே, சூறைக் காற்று ஓலமிட்டால் என்ன, இடிகள் குழல் வேட்டுகளாய் உடைந்தால் என்ன, ட்ரம்பட்டுகளின் உயிர் உறையும் போர் ஓலம் கேட்டால் என்ன, உயர எழும் குளம்படிகள், பூட்ஸ் குதிகால் படு ஓசைகள் படியாய் எழுந்தால் என்ன, எதுவும் பொருட்டில்லை. 

வயல்வெளிகளில், காற்று வீசும் இரவுகளில் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே மக்கள் அவரை இசையில் மனத்தால் பின் தொடர்ந்தனர். 

இசையின் இந்த மந்த கதி மயங்கும் கட்டத்தில் இசையின் நடைபெயர்வு கண்ணுக்கே புலனாகிறது போன்ற ஒரு தோர்றரவு! ஒவ்வொரு முகிழ்ப்பிலும் விருப்பமின்றிப் பிரியும் ஒரு சிணுங்கள் தயக்கத்துடன், ஒவ்வொரு இசைச் சங்கதியும் அதிஅற்புதமான இசையின் மொத்த நெசவில் பின்னிப் பிணைந்து அந்த சுடரும் நிறங்களுடன், தழல் கொண்ட அந்த இங்கிதத்துடன்.....அப்படியே இசை சிறுக சிறுக ஓய்வது போல் உள்ளொடுங்க....கிளாரினட் திடுமென்று சில்மிஷம் போல் கொஞ்சும் குரலில் சிந்து பாட, மூலையில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி, கருநீல ஆடையில், தன்னை மறந்து மகிழ்ச்சியில் துள்ளிச் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். 

ராஹ்மனினோஃப் அவர்களுக்குக் கொஞ்சம் தயக்கம். தன் ஆசான்களில் ஒருவரான அந்த செர்கி இவானோவிச் தனயெவ் வருவாரா? நுழைவுச் சீட்டு அனுப்பி வைத்தாயிர்று. ஆனால் தான் போய் நேரில் கூப்பிட நேரம் இலலமல் போனது. இல்லை வரமாட்டார். கண்ணுக்குப் பக்கத்து ஒளியும் காரிருளும் கலந்து மறைத்த கலவைக் காட்சியினூடு ஆஹா வாசலில் வந்து நிற்பது தனயெவ் அவரேதான். வந்து அழைத்து அமரச் செய்கின்றனர். ஒரு கணம் கண்கள் சந்தித்தன. கோபம் இல்லை. பெருமிதம். பேராநந்தம் அவரது கண்களில் மிளிர்ந்தது கண்ணீரில் நெளியும் மின்னலாய். 

விமரிசகர்கள் எழுதினர்: ‘செர்கியின் இந்த ஸிம்ஃபொனி மறுமை உலகங்களையோ, அதிமானுட திறப்புகளையோ பற்றிய ஆவேச ஊக்கங்களாய் இல்லாமல் ஓ எவ்வளவு புத்தம் புதிய, இயல்பான, இயற்கையான தூய, எழிலாய் ஒளி விடுகிறது!’ 

ஆம் அவர்தம் இசைமொழி உள்ளதைப் பேசியது; உள்ளதை மட்டுமே பேசியது. 



***

Reply all
Reply to author
Forward
0 new messages