Re: சங்க இலக்கியம் - பட விளக்க உரை

92 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 2, 2013, 9:37:17 PM2/2/13
to மின்தமிழ், Santhavasantham, vall...@googlegroups.com
On Feb 1, 10:48 pm, Pandiyaraja <pipir...@gmail.com> wrote:

> 3)தம்பலப்பூச்சியை நீங்கள் பார்த்து ரசித்த காலம் நினைவிருக்கிறதா? அது
> மழைக்காலமாய் இருந்திருக்கும். அதை  எங்கே பார்த்தீர்கள்? எந்தச் சூழலில்
> பார்த்தீர்கள்? அதனைப் பிடித்து விளையாடியிருக்கிறீர்களா? நீங்கள் பார்த்தபோது
> அப் பூச்சி என்னென்ன செய்தது? எங்கள் ஊர்ப் பக்கம் (சின்னமனூர் - ஓடைப்பட்டி)
> அது இருந்ததாக நினைவில்லை. மழைக்காலத்தில் ஓடைகளில் நிறைய 'விட்டிகளை'ப்
> பிடித்து விளையாண்டிருக்கிறோம். வெல்வெட் பூச்சிகளை முனைவர்.தமிழண்ணல்
> பார்த்திருப்பதாகச் சொன்னார். மேல் விபரங்கள் நினைவில் இல்லை என்றார்.
> அப்போதெல்லாம் தம்பலப்பூச்சி என்பது cochinel என்று பேரகராதியில் (தவறுதலாகக்)
> கொடுககப்பட்டிருக்கும் சப்பாத்துக் கள்ளிப் பூச்சிதான் என்று
> நினைத்திருந்தேன். எனவே அது பற்றி  அவரிடம் விபரம் கேட்கவில்லை. உங்களுக்குத்
> தெரிந்த விபரங்களை விளக்கமாகத் தெரிவியுங்கள். எனது அடுத்த கட்டுரைகளுக்கு
> உதவியாக இருக்கும். இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் தகவல்களை வைத்து, பல
> ஆய்வுக்கட்டுரைகளையும் படித்து இந்திரகோபம் அல்லது தம்பலப்பூச்சி பற்றி  ஒரு
> ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். படக் கட்டுரைகளைப் படிப்பதற்கே பலருக்கு நேரம்
> இல்லாதபோது ஆய்வுக்கட்டுரையைப் படிக்க யார் இருக்கப் போகிறார்கள் என்ற
> நினைப்பில் நான் அக் கட்டுரையை இணைப்பாக அனுப்பவில்லை.
>

தம்பலப்பூச்சி பற்றிய உங்கள் கட்டுரை அனுப்புங்கள், ஐயா.

தாங்கள் பல்லாண்டுகளாய் உள்ள செந்தமிழ் (பாரிஸ்) குழுவில் ஜார்ஜ் ஹார்ட்
ஈயல் மூதாய் பற்றிக் கேள்வி எழுப்பினார். அதன் உயிரியல் பெயரிம் சென்ற
ஜூன் 2012-ல் அளித்தார். பி. எல். சாமி ‘சங்க இலக்கியங்களில்
விந்தைப்பூச்சி’
என்ற நூலே எழுதியுள்ளார். பி. எல். சாமி தான் தமிழ்ப் பேரகராதியில் உள்ள
தவறைத்
திருத்தியவர் என நினைக்கிறேன். செந்தமிழில் ஸ்ரீநிவாஸ் ஆண்டாள்
பாசுரம் தந்தார்:

> From a mullai-nilam perspective, it occurs exactly in a monsoon context. This is from Nāycciyār tirumozi:
>
> சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்,
> இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்,
> மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
> சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ.

மழைக்காலத்தில் ஒரிசா மக்கள் வாழ்க்கையில் இன்றும் மூதாய் முக்கிய இடம்
உண்டு:
http://www.youtube.com/watch?v=mKIP4NwVmhs

டெக்சாஸ் மாநிலத்தில் மூதாய் பூச்சி:
http://www.youtube.com/watch?v=8cU3Hhsidbo

இந்திரகோபம்/மூதாய்:
Trombidium grandissimum
http://www.flickr.com/photos/erica_marshall/2608523728/
http://www.flickr.com/photos/tripcatsrevenge/123484290/
http://www.flickr.com/photos/shreya-a420/5408315764/
http://www.flickr.com/photos/prankf/5574475076/
http://www.flickr.com/photos/briangratwicke/3597074494/in/photostream/
http://www.flickr.com/photos/47108884@N07/5338016887/
http://hproctor.files.wordpress.com/2010/12/rvm_ptproctor-9may2010.jpg
http://www.thefeaturedcreature.com/2011/10/wish-i-may-wish-i-velvet-mite.html

அபிதான சிந்தாமணி ஈயல் மூதாய் பூச்சியைப் பற்றிப் பேசுகிறது:
தம்பலப்பூச்சி - இதனை இந்திரகோபப் பூச்சியென்பர்.
இப் பூச்சி பட்டின் நிறமாப் பூமியின் உள்ளிருந்து
பனிக்காலத்தில் மேல் வந்து உலாவுவது. இதனைக்
கவிகள் சிந்திய மணிகளுக்கு உவமை கூறுவர்.
இது ஒரு சிறு வண்டு.

ஈயல்-ஈசல் மழைக்காலத்தில் சில நாள்/வாரம் வரும் உயிரிகள் போலும்.

> 4) தீம்பால் நமது சீம்பாலாக இருக்கலாம். எனக்குச் சீம்பால் மிகவும்
> பிடிக்கும். கடைசியாகக் குடித்தபோது சீனி போட்டுக் கொடுத்தார்கள். நாட்டுச்
> சர்க்கரை போட்டிருந்தால் நன்றாயிருக்கும் என்று சொன்னேன். இப்போது சென்னையில்
> எங்கே? பாடலில் கூறப்பட்டுள்ள வருணனைகளை மீண்டும் படிக்க, அது சீம்பால்தான்
> என்று எண்ணத் தோன்றுகிறது. சுட்டியமைக்கு மிக்க நன்றி. தீம்பால்தான் சீம்பால்
> ஆயிருக்குமா? தீ > சீ மாற்றத்துக்க்கு வேறு  உதாரணங்கள் உண்டா? ஆராய வேண்டும்.
> எனினும் மிக்க நன்றி திரு காளைராஜன்.

தீம்பால் - இனிப்பான பால். தீந்தேன், தீங்கனி, தீஞ்சுவை,... இதிலிருந்து
சீம்பால்
வார்த்தை பிறப்பில்லை.

சீ போல தானாகவே தாய்ப்பசு ஒழுக்கும் பால் சீம்பால்.
கன்னடம், துளுவில் கீவு என உள்ளதுடன் தமிழ்ப் பேரகராதி ஒப்பிடுகிறது.
சீ- இதிலிருந்து ஈங்கு/ஈஞ்சு/ஈச்சை மரம் பெயரிடுவதும் பாருங்கள்.

நா. கணேசன்

> ப..பாண்டியராஜா
>
>
>
>
>
>
>
> On Saturday, February 2, 2013 3:40:01 AM UTC+5:30, kalai wrote:
> > வணக்கம் ஐயா,
>
> > 2013/1/31 Pandiyaraja <pipi...@gmail.com <javascript:>>
>
> >> அன்புடையீர்,
> >> இத்துடன் அகநானூறு - பாடல் 14 -க்கான படவிளக்க உரை இணைக்கப்பட்டுள்ளது -
>
> > அருமை ஐயா,
>
> > 1) சொற்பிரிப்பு மூலம் என்போன்றோர் படிப்பதற்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது
> > ஐயா.
>
> > 2) காயாம்பூ - நான் இப்போதுதான் தங்களது படத்தில் பார்த்து அறிந்து கொண்டேன்.
> >  நான் இதுவரை இது சிவபெருமானின் பெயர் என்று மட்டுமே எண்ணியிருந்தேன்.
>
> > 3) ஈயன்மூதாய் = தம்பலப்பூச்சி
> > சிறுவனாக இருக்கும்போது இந்தப் பூச்சியின் பட்டுப் போன்ற உடலைப் பார்த்துப்
> > பார்த்து வியந்துள்ளேன்.  தங்கள் வழியாக அதன் பெயரை இப்போதுதான் அறிந்து
> > கொள்கிறேன். நன்றி ஐயா.
>
> > 4) தீம்பால் என்பது கன்றுஈன்றவுடன் கறக்கும் பாலைக்குறிக்கிறதா? திருப்பூவணம்
> > பகுதியில் “சீம்பால்“ என்பர்.
>
> > நல்லதொரு விளக்கத்தை நல்கியதற்கு நன்றி ஐயா.
>
> > அன்பன்
> > கி.காளைராசன்
>
> > ஆனால் இப்போதெல்லாம் தலைவியர் மாலைநேரம் ஆனவுடன் தொலைக்காட்சியை எதிர்நோக்கி
> > அமர்ந்து விடுகின்றனர்
> > தலைவன் செல்போன் பேச்சுடன் சரி.

தேமொழி

unread,
Feb 14, 2013, 12:30:47 PM2/14/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

Effective communication technique முறையை தோழி பொடிவைத்து பேசும் உரையுடன் ஒப்பிட்டு விளக்கிய விதம் (அதுவும் எடுத்துக்காட்டாக குழந்தை-தாய் உரையாடல்) நன்கு புரிய வைத்தது.  நான் உரையாடல் கலையை இனிமேலாவது கற்றுக் கொள்ள உதவும். நன்றி.

அன்புடன்,
..... தேமொழி




On Thursday, February 14, 2013 2:29:16 AM UTC-8, Pandiyaraja wrote:
அன்புடையீர்,
இத்துடன் அகநானூறு - பாடல் 18 -க்கான படவிளக்க உரை இணைக்கப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு கோப்புகளில். இது விட்டுப்போன வாரத்துக்கான மூன்றாம் கட்டுரை. அடுத்த கட்டுரை வழக்கம்போல் திங்கள் கிழமை வரும்.
நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
 
இப் பாடலும் முந்தைய பாடலைப் போல, 'சுபா வருகை' என்ற ஆடிக்காற்றில் அடித்துக்கொண்டுபோய்விடப்பட்டுவிடுமோ?
பார்க்கலாம்

On Monday, February 11, 2013 12:44:41 AM UTC+5:30, Pandiyaraja wrote:
அன்புடையீர்,
இந்த வாரத்துக்கான அகநானூறு படவிளக்க உரைக்கு பாடல் - 17 -இன் உரை அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு இணைப்புக் கோப்புகளில்.
நன்றி,
ப.பாண்டியராஜா
 

On Thursday, February 7, 2013 3:29:56 AM UTC+5:30, kalai wrote:
வணக்கம் ஐயா,

இத்துடன் அகநானூறு - பாடல் 16 -க்கான படவிளக்க உரை இணைக்கப்பட்டுள்ளது -
அருமை ஐயா,
நீர் நாய்,
அல்லிவட்டம், (6ஆம் வகுப்புப் பாடத்தில் அல்லிவட்டம் புல்லிவட்டம் முதலான பாகங்களைப் படித்தது நினைவிற்கு வருகிறது),

படங்களுடன் விளக்கியிருப்பது, மனதில் பாடலைப் பதிவு செய்துவிட்டது.

நன்றி ஐயா,

Karuannam Annam

unread,
Feb 16, 2013, 12:45:24 AM2/16/13
to mint...@googlegroups.com, Santhavasantham, vall...@googlegroups.com


2013/2/14 Pandiyaraja <pipi...@gmail.com>
இத்துடன் அகநானூறு - பாடல் 18 -க்கான படவிளக்க உரை இணைக்கப்பட்டுள்ளது 

 பாடலுக்குப் பட விளக்கவுரை சிறப்பாக இருக்கிறது. செய்தி சொல்லுதல் நுட்பத்தை அருமையாக விளைக்கியுள்ளீர்கள்.
 
இப் பாடலும் முந்தைய பாடலைப் போல, 'சுபா வருகை' என்ற ஆடிக்காற்றில் அடித்துக்கொண்டுபோய்விடப்பட்டுவிடுமோ? பார்க்கலாம்

மேற்குறித்த ‘சுபா வருகை’ ‘ஆடிக்காற்று’ சொற்றொடர் மூலம் தாங்கள் குறிக்கும் செய்தி என்ன? தங்கள் பதிவு ஏதாவது விடிபட்டுப்போய்விட்டதா? வரிசை சரியாகத்தானே வந்துகொண்டிருக்கிறது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

Karuannam Annam

unread,
Feb 18, 2013, 10:48:35 AM2/18/13
to mint...@googlegroups.com, Santhavasantham, vall...@googlegroups.com
குவளை இதழ் கண், மூங்கில் மென் தோள் எனப் படவிளக்க உரை சிறப்பு. 
மூங்கில் வழவழப்பு எனத் தெரியும். இருந்தாலும் தோளுக்கு வேறெப்படிப் பொருந்தும் என எண்ணிக்கொள்வேன். கணுவில் திரட்சிக்கும் முன்பு இரண்டு பதிவுகளில் படங்கள் பார்த்தேன்! 
குவளை இதழும் கண்ணும் , அகல் விளக்கொளியில் மின்னுதலும் இரசித்தேன்.

உள்ளகம், நெஞ்சு சொல்லாட்சி இருக்கிறது. மனம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளதா? 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

2013/2/18 Pandiyaraja <pipi...@gmail.com>
அன்புடையீர்,
இந்த வாரத்துக்கான அகநானூறு படவிளக்க உரைக்கு பாடல் - 19 -இன் உரை அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு இணைப்புக் கோப்புகளில்.
நன்றி,
ப.பாண்டியராஜா

On Saturday, February 16, 2013 4:58:58 PM UTC+5:30, Pandiyaraja wrote:
மிக்க நன்றி, திரு.வினைதீர்த்தான்!,
ஜூன், ஜூலை மாதங்களில் பூப்பந்து ஆடியிருக்கிறீர்களா? ஒழுங்காக நாம் ஆடிக்கொண்டிருப்போம். நீங்கள் ஒரு பந்தைக் குறிபார்த்து அடிக்கிறீர்கள். திடீரென்று ஒரு சுழிக்காற்று வரும்போது, பந்து பாதை மாறிப்போய் கோட்டுக்கு வெளியில் போய் விழும். பாடல் 17 அப்படிப் போய்விட்டதோ என்ற ஐயம் எழுந்தது. அதனால்தான் அப்படி எழுதினேன். அதுபற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. என் ஐயம் உறுதியாகிற நிலையில் உங்கள் மடல் வந்திருக்கிறது. ஐயம் தீர்ந்துவிட்டது. நன்றி,
ப.பாண்டியராஜா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

K. Loganathan

unread,
May 27, 2013, 12:08:41 AM5/27/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

இன்றையத் தமிழர்களிடையே நல்ல ஆராய்ச்சி உணர்வோடு தமிழ் இலக்கியங்களை ஆய்கின்றவர்கள் இல்லாது போய்விட்டார்களா என்ற கவல எனக்குண்டு. எத்தனையோ மெய்ஞானப் பனுவல்கள் படிப்பாரின்றி ஆய்வாரின்றி கிடக்கின்றன. இந்நிலையில் தங்களது சங்க இலக்கிய ஆய்வுரைகள் பெரிதும் பாராட்டிற்குரிய நற்பணியாகும்  தமிழ் ஆராய்ச்சிக்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது, தங்களது இந்த நற்பணி இனிதே தொடர இறைவனது அருள் தங்களுக்கு என்றென்றும் வாய்க்கட்டும்.

உலகன்


2013/5/27 Pandiyaraja <pipi...@gmail.com>
அன்புடையீர்,
இத்துடன் அகநானூறு பாடல் 30-க்கான படவிளக்கவுரை இணைக்கப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf கோப்புகளாக. நன்றி.
ப.பாண்டியராஜா

On Thursday, May 23, 2013 12:20:16 AM UTC+5:30, Pandiyaraja wrote:
ஆச்சரியம் திரு.வினைதீர்த்தான், இரத்தினம். Tiger hunting prey videos என்ற தலைப்பில் சுமார் அரை மணி நேரம் கூகுளில் தேடிப் பலவகையான படங்களைப் பார்த்தேன். அவற்றில் ஒன்றில்கூட புலி தன் இரையை இடப்பக்கம் வீழ்த்தவில்லை. வலப்பக்கம் நெருங்கும்போது இரையை வலப்பக்கம் சாய்க்கின்றன. இடப்பக்கம் நெருங்கும்போது இரையின் கழுத்தைக் கவ்வி,  ஒரு திருகு திருகி வலப்பக்கமே வீழ்த்துகின்றன. இடப்பக்கம் வீழ்ந்தால் திங்காமல் போகும் படக்கள் கிடைக்கவில்லை!!! நீங்களும் தேடிப்பாருங்கள்.
நன்றி,
ப.பாண்டியராஜா

On Wednesday, May 22, 2013 10:49:27 PM UTC+5:30, rathinam.chandramohan wrote:
The question is interesting sir. May be... tigers always attack from left. In that case the prey will always fall to the right. But in the case of big elephants they may fall any side. When it falls to the left the tigers might have got some injury and hence may run away without eating. Any how we must enquire a forestor or tiger watcher. 


2013/5/21 Pandiyaraja <pipi...@gmail.com>
>> வேட்டையில் தன்னுடைய இடப்புறத்தில் விழுந்த இரையைப் புலி உண்ணாது என்பது உண்மையா? 
 
தெரியவில்லை, திரு.வினைதீர்த்தான். உரைகள் அப்படிக் கூறுகின்றன. உண்மையாக இருக்குமா என்பது ஐயமே. வேட்டைக்காரர்கள், வன அலுவலர்கள் யாரையாவது விசாரிக்கவேண்டும். இப்போது புலிகளின் கணக்கு எடுக்கப்படுகிறது. அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கேள்வி எழுப்பினால் விடை கிடைக்கலாம். ஆனால் உரைகாரர்கள் இதற்குச் சான்றாக மேலும் இரண்டு இடங்களைச் சுட்டுகிறார்கள்.
1. கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
    அன்று அவண் உண்ணாதாகி வழிநாள்
   பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
   இருங்களிறு ஒருத்தல் நல்வலம் படுக்கும்
   புலிபசித்தன்ன மெலிவில் உள்ளத்து - புறம் 190
 
2. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
   இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - நாலடியார் 300
 
எனவே, அன்றைக்கு இது ஒரு நம்பிக்கையாக இருந்திருக்கிறது. செய்யுளின்பம் கருதி ஏற்றுக்கொள்ளலாம். நாம் ஒப்புக்கொள்ளுகிறோமா இல்லையா என்பது வேறு. கிறித்துவ இறை நம்பிக்கை உடைய விலங்கியலார் பரிணாமக்கொள்கையைப் பயிற்றுவிக்கும்போது இப்படித் தடுமாறுவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா
 
 

On Tuesday, May 21, 2013 6:51:19 PM UTC+5:30, சொ.வினைதீர்த்தான் wrote:
வேட்டையில் தன்னுடைய இடப்புறத்தில் விழுந்த இரையைப் புலி உண்ணாது என்பது உண்மையா? 

சொ.வினைதீர்த்தான்.

uannam Annam <karu...@gmail.com>
தொடர்கிற தமிழமுதிற்கு நன்றி. எண்பதும் தொடர வேண்டுகிறேன்.

மடம் கெழு நெஞ்சம் உடையவனாக அன்புக்குரியர் முன்பு ஆண்மாறுகிற இடம்! 
.
தொடங்கு வினை தவிரா அசைவுஇல் நோன்தாள், தாழ்வுஇல் உள்ளம், தலைத்தலை சிறத்தல் சொற்றொடர்கள் ஊக்கம் தருவன.

மாவடு, வகிர் கண் படங்கள் தேடித் தந்துள்ளீர்கள். அருமை.
 
‘நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் வாழலென்’ விளக்கம் கணிதப்பேராசரியர் எனப் பறைசாற்றியது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/5/20 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

2013/5/20 Karuannam Annam <karu...@gmail.com>

ஒரு பதிவுக்குப் பிற்பாடு சொல்லப்படுகிற சொற்கள் என்பதால் பின்னூட்டம் என்ற சொல் பொருந்துவதாகவே காண்கிறேன். இந்த இழையைவிடுத்துத் தனி இழையில் தொடர்ந்தால் நலம்.

தடங்கலுக்கு வருந்துகிறேன்.


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Dr.R.Chandramohan
Associate Professor of Physics,
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Banukumar Rajendran

unread,
Sep 15, 2013, 10:26:35 AM9/15/13
to மின்தமிழ், vallamai



2013/9/15 Pandiyaraja <pipi...@gmail.com>
திரு.ருத்ரா அவர்களுக்கு மிக்க நன்றி. கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறீர்கள் - கவிஞர்களுக்கே உரித்தானதுதான்.  தமிழ் சார்ந்த  நிறுவனங்கள் தமிழுக்காகப் பல தரப்பட்ட பணிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. என்ன, அங்கிங்கெனாதபடி எங்கெணும் நீக்கமற நிறைந்திருக்கும் அரசியல்தான் அங்கும் ஊடுருவியிருக்கிறது. அதற்கு அவர்களைச் சொல்லிப் பயனில்லை.
சங்க காலத்தில் தமிழகத்தில் வேர்கொண்டிருந்த சமண பௌத்த மதங்களின் தாக்கங்கள் அந்த இலக்கியங்களில் மட்டுமல்ல, அன்றைய சாதாரண மனிதரின் வாழ்க்கையிலும் கலந்துதான் இருந்திருக்கவேண்டும். அதைப் பற்றித் தனியான ஆய்வு தேவை.

மிக்க நன்றி. நடுநிலைமையான கருத்துக்கள். காய்த்தல் உவத்தல் அகற்றி ஆராயவேண்டுதல் அவசியம்.

தங்களுக்கு திரு.ருத்ரன் ஐயாவிற்கும் நன்றி!

இரா.பானுகுமார்,
சென்னை



 
அதன் தேவை பற்றித் தங்களின் கருத்து குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்களைப் பற்றிய இப்படிப்பட்ட பன்முக ஆய்வுகள் இன்னும் தேவை. இதைத் தமிழாசிரியர்கள் மூலம் தமிழில் ஆய்வுசெய்யும் மாணவர்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும். தங்களின் பாராட்டுரைக்கு மிக நன்றி. அப்புறம், ஒரு சின்னத் திருத்தம்! என்னுடைய பெயர் பாண்டியராஜா - ...........ராஜன் அல்ல.
பி.கு:எட்டுத்தொகைக்கும் எட்டாத, பத்துப்பாட்டுக்கும் பத்தாத தங்களின் பேத்தி கீர்த்தி நலமா?
நன்றி,
ப.பாண்டியராஜா

On Saturday, September 14, 2013 11:55:37 AM UTC+5:30, ருத்ரா இ.பரமசிவன் wrote:

செந்தமிழ் ஆய்வுசெம்மல் திரு ப.பாண்டியராஜன் அவர்களே

அகநாற்றுப்பாடல் எண் 35க்கு உங்கள் படங்களும் பொருள் விளக்கமும்
மிக மிக நன்று.அகநானூற்று பாடல் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் கட்டி வைத்து 
காட்டிவியக்கவைக்கும் சொற்கட்டிடங்களின் முன்னே தமிழ்ப்பல்கலைக்கழக கட்டிடங்கள் எல்லாம் கை கட்டி  வாய் புதைத்து நிற்கின்றன.கல்லும் சாந்தும் கொண்டு கட்டப்பட்ட அவை வெறும் "பதுக்கைகள்"தானோ?தமிழ் உயிர்ப்புடன்  உலவவேண்டும் என்றால் உங்கள் சொற்கட்டிடங்கள் அங்கே கொண்டுபோய் வைக்கப்பட்டு தமிழர்களின் அறிவுப்புலங்களில் ஒளி பாய்ச்சப்படவேண்டும்.

சொற்களின்  பொருள்கள் அகராதிப்பட்டியல் தந்த பொருளைச்சுட்டினாலும் அதன் உள்ளார்ந்த சுவடுகளை தொட்டு அதில் ஏற்படும் சில வரலாற்று உள்ளுர்ண‌வுகளையும் கிளறி விடத்தான் செய்கின்றன.இதுவே உங்கள் படைப்பின் வெற்றி ஆகும்.

"...
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர் 
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார், 
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து, 
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும் 
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம்"..

மேலோட்டமாக பார்த்தால் நடுகல்லுக்கு பூசனை செய்து
கள் ஆடு முதலியன பலிகொடுத்து தங்கள் "வில் ஏர்" வேட்டையை
துவக்குவது போல் தான் இதில் தெரிகிறது.

கற்குவியல் எனும்  பதுக்கை "சமணர் முனிவர்களின்"
படுக்கைக்கல் ஆக தெரிகிறது.இங்கு "பீலி" சூட்டுவதும்
சமணர்களின் "மயில் தோகை"யையே குறிக்கிறது.திருவள்ளுவரை சமணர் என்று கருதுவதற்கு "பீலி பெய்ச் சாகாடும்.."என்ற குறளை சான்று கூறலாம்.அனிச்சம் அன்னத்தூவி போன்ற சொற்களை விட்டு "பீலியை"பயன் படுத்த வேறு யாது காரணம்? மேலும் அது வணிகப்பொருளாக (சமண சிந்தனையுடையவர்கள் சமணப்பள்ளிகளுக்கு செல்ல பீலிகள் வாங்கிச்செல்லலாம். 
அந்த "அருகற்"கடவுளை பேணும் வழக்கமும்
அவர்களிடம் அதுவும் பலிகொடுக்கும் குணமுடைய‌
அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்படுவதாக‌
அம்மூவனார் எனும் குடகு கீரத்தனார் பாடுவதாகவும் 
எனக்கு தோன்றுகிறது.அம்மூவன் என்பது அழகிய மூவர்களை
அதாவது மும்மூர்த்திகளை குறிப்பதாக எடுத்துக்கொள்வதில் 
பொருத்தம் இல்லை.மூத்த அருகக்கடவுளையே தனக்கு பெயராக வைத்திருக்கலாம்.அந்த கொடுந்தொழில் புரிவோரிடம் கொல்லாமை 
பண்பை விதைக்கும் முயற்சியும் அங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கலாம்.

எப்படியும் இந்த அகநானூற்றுப்பாடலில் ஒரு "உள்ளுறை"வரலாற்று சித்திரம் ஒளிந்து தான் இருக்கிறது.

உங்கள் ஒவ்வொரு பாடலும் அதன் பொருள் ஓவியமும் எங்களை பிரம்மாண்டமான அந்த சங்க காலத்துக்கே இட்டுச்செல்கிறது.

உங்கள் இலக்கியப்படைப்பு உலகளவில் ஒரு பெரும்பரிசு (தமிழுக்கு நோபல் பரிசு)கொடுத்து கௌரவிக்கப்படத்தகுந்தது ஆகும்.

என் நெஞ்சு விம்மிய பாராட்டுகள்.

அன்புடன் ருத்ரா
 

On Sunday, September 23, 2012 9:57:32 PM UTC-7, Pandiyaraja wrote:
அன்புடையீர்,சங்கப் பாடல்களுக்குப் பட விளக்கங்களுடன் விரிவான உரை எழுதும் நோக்கத்துடன், 'அ'-கரத்தை முதலாக வைத்து, அதில் வரும் கடவுள் வாழ்த்தை முதற்பாடலாகக் கொண்டு தொடங்கும் இழை இது. ( அகநானூற்றுக் கடவுள் வாழ்த்து சங்கப் பாடலா? என்ற சர்ச்சை வேண்டாம்.) தங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். அன்புடன், முனைவர்.ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Sep 15, 2013, 11:14:00 AM9/15/13
to vall...@googlegroups.com, மின்தமிழ், tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com
On Sunday, September 15, 2013 7:26:35 AM UTC-7, R Banukumar wrote:

2013/9/15 Pandiyaraja <pipi...@gmail.com>
திரு.ருத்ரா அவர்களுக்கு மிக்க நன்றி. கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறீர்கள் - கவிஞர்களுக்கே உரித்தானதுதான்.  தமிழ் சார்ந்த  நிறுவனங்கள் தமிழுக்காகப் பல தரப்பட்ட பணிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. என்ன, அங்கிங்கெனாதபடி எங்கெணும் நீக்கமற நிறைந்திருக்கும் அரசியல்தான் அங்கும் ஊடுருவியிருக்கிறது. அதற்கு அவர்களைச் சொல்லிப் பயனில்லை.
சங்க காலத்தில் தமிழகத்தில் வேர்கொண்டிருந்த சமண பௌத்த மதங்களின் தாக்கங்கள் அந்த இலக்கியங்களில் மட்டுமல்ல, அன்றைய சாதாரண மனிதரின் வாழ்க்கையிலும் கலந்துதான் இருந்திருக்கவேண்டும். அதைப் பற்றித் தனியான ஆய்வு தேவை.

மிக்க நன்றி. நடுநிலைமையான கருத்துக்கள். காய்த்தல் உவத்தல் அகற்றி ஆராயவேண்டுதல் அவசியம்.

தங்களுக்கு திரு.ருத்ரன் ஐயாவிற்கும் நன்றி!

இரா.பானுகுமார்,
சென்னை



சிந்து சமவெளி நாகரிகம், அதில் தொல்தமிழர் பங்கும் ஆளுமையும் பற்றிய ஆய்வுகளில்
கவனம் செலுத்தி வரும் பரமசிவன் ருத்ரா அவர்களின் கவிதைகள் இன்றைய தமிழுக்கு
முக்கியமானவை. வரலாற்று மொழியியல் பேராசிரியர்களின் வழியில் உலகத்தின்
தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுடன் இணைந்து தமிழ் ஆராய்ச்சிகள்
வளரவேண்டும். அப்பொழுது சுமேரியன் தமிழ் மொழியா? என்று ஆராய்ச்சி மாணவர்களுக்கு
எளிதில் விளங்கும். அணு உலை விஞ்ஞானி ஜெயபாரதன் ஐயா போன்றோர் 
பாராட்டும் கவிஞர் ருத்ரா கவிதைகளைத் தேடிப் படிக்க வேண்டும். பேரா. பாண்டியராஜா
சொல்வதுபோல். தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. உதாரணமாக,
பேரா. கா. மீனாட்சிசுந்தரம் அவர்கள் ஆரம்பித்த ஜர்னல் ஆப் தமிழ் ஸ்டடீஸ் இன்று
இணையத்தில் சில ஆண்டுகளாய்க் கிடைக்கிறது. இப்பொழுது நூல்களைப் பிடிஎப் 
செய்யும் திட்டத்துக்கு பணமளிப்பதும், இணையப் பல்கலையில்
ஏற்றுகிறோம் என்ற அரசாங்கம் சொல்வதும் தமிழ்நாட்டில்  தமிழ் ஆய்வுகளுக்குப் 
புத்துணர்ச்சி ஊட்டும். 10 ஆயிரம், 100 ஆயிரம் நூல்கள் என தமிழக அரசாங்கம் இணையத்தில் 
தமிழ்க்கொடை வழங்குவது அரசாங்கமும், முதல்வர் ஜெயலலிதா அவர்களும் நினைத்து உத்தரவிட்டு
மனிதவளங்களை வழங்கினால் எளிதில் நிறைவேறும். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள்,
முதல்வெர் போன்றோருக்கு பேராசிரியர் நாகராஜன், பாண்டியராஜா, ... இன்னும் பல
இணையர்களும் எழுதினால் நிறைவேறும்.

வளர்க வரலாற்று மொழியியல் விஞ்ஞானம் தமிழில்! ஆதரவு அரசு தருக!
அதற்கு, கவிஞர் ருத்ரா போன்றோர் கவிதைகள் உணர்வூட்டுபவை,

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 22, 2015, 9:14:27 PM4/22/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vallamai
On Tuesday, April 21, 2015 at 2:49:03 AM UTC-7, Pandiyaraja wrote:

அன்புடையீர்,
அகநானூறு பாடல் 51-இன் முன்னோட்டத்தைப் படித்தோர், ரசித்தோர், பின்னூட்டம் இட்டோர் ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றி. இத்துடன் பாடலின் படவிளக்கவுரை வருகிறது.
அனைவருக்கும் மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

முழுதும் படித்தேன் ஐயா. மிகச் சிறப்பான உரை. ஒவ்வொரு சங்க நூலுக்கும் உரை செய்தபின், த. சீனிவாசன் போன்றோரிடம் தனி மின்னூல் ஆக்கிவிட வேண்டுகிறேன். அகம், புறம், நற்றிணை, ... பத்துப் பாட்டில் தனித்தனியே என மின்னூல்கள் ஆனால், தரவிறக்கிப் படிப்பர்.

இன்று பூமிதினம்.
நம் சங்க இலக்கியம் பயிலுவோருக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வில் தமிழர் விஞ்சினர்
என்னும் உண்மையை வியக்காமல் இருக்கமுடியாது. சிந்து கலைவடிவங்களில் பல புதிய
செய்திகளைச் சொல்வதற்கும் கிராமங்களில் இன்றும் உள்ள தமிழர் வாழ்க்கையே துணைவருகிறது.

பாவாணர் துள்பு (துளை) > தும்பு என விளக்கியுள்ளார்கள். தொம்பை/தொப்பை < தொண்மை < தொள்- 
என்றும் சொல்லியுள்ளார். ஆனால், கம்பு தானியம்  கண்பு என்னும் சொல் எனச் சொல்லவில்லை.
அதற்கு, அருமையான கொங்குக் கல்வெட்டு பற்றி துரை. சுந்தரம் வலைப்பதிவில் கண்டேன்.
சண்பை, க-ப்ரத்யம் பெற்று சண்பகம் > சம்பகம் (வடமொழி) தமிழில் பெற்ற பெயர் புரிந்தது.

நெடுந்தாள் யா மரம் என்கிறார் புலவர். இதனை ஒருவகை மரம் என்றே கூறுகின்றன அகராதிகள். 
> இந்த யா என்பது shorea robusta என்ற மரம் என்கிறார் திரு.நாசா கணேசன். அதற்கு அவர் சங்க 
> இலக்கியங்களினின்றும் பல்வேறு சான்றுகள் காட்டியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளலாம். இந்த வகை 
> மரங்கள் வெகு ‘நெடு நெடு’-வென்று உயரத்துக்கு வளரக்கூடியவை. உச்சியில் ஓரளவு கிளைகள் பரந்திருக்கும்.

குறிப்பிட்டமைக்கு நன்றி ஐயா. ஃழான் - லூய்க் செவ்வியார் தொல்காப்பியத்தில் வரும் மரங்களைப்
பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதினார். அதில் பல நூல்களைப் பார்த்துச் சொல்லியுள்ளார். யாமரம்
இன்னது என்று கு. சீனிவாசன் (தமிழ்ப் பல்கலை) போன்றோர் எழுதவில்லை. ஆனால் நச்சினார்க்கினியர்
உரையில் சொன்னதும், ஆ மலரை பாலைக்கு தெய்வம் கொற்றவை அணிதலை தேவாரம் சொல்லுதலும்
shorea இனங்களில் கம்பீரமான ஷோரியா ரோபஸ்டா என எழுத வைத்தது. ஷோரியா மரங்களில் 300
வகைகள் உண்டு. அனேகமாக, கிழக்கிந்தியா தவிர இந்தியாவில் அழிந்தன. ஆனால் இந்தோனேசியா 
போன்ற தென்கிழக்கு ஆசியாவில் யா மரங்கள் மிகுதி. எனவே கம்போடியா தலை எடுக்கும் வரை
அந்தப் பிரதேசத்திற்கு தலைமை வாய்ந்த தீவை யாவகம் என்றே பெயர் சூட்டினர் தமிழர். 
யவத் தீவு என்றால் பார்லி தானியம் அங்கில்லை என்று சொல்லியிருந்தேன். சென்ற வாரம் பார்த்தேன்
பார்லிக்கும் யாவகத்திற்கும் தொடர்பில்லை என ஃழான் பிலியோசா எழுதியிள்ளார். இது தமிழோடு
தொடர்புடைய பேர் என்றும் எழுதியுள்ளார். ஆனால், அதற்கு மேல் சொல்லாது விட்டுவிட்டார்.

யா மரம்  பற்றி யான் எழுதிய இழை. எனது அந்த இழையில் ஃழான் பிலியோசா குறிப்பை தருவேன்.
சங்க இலக்கியத்தில் யா மரங்கள் (Shorea robusta, சாலம்)
மணிமேகலையின் ஜாவா

யா மரங்களுக்கு தாவரவியற் பெயர் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஜான் ஷோர் மீது மதிப்பினால்
சூட்டப்பட்டது. http://en.wikipedia.org/wiki/John_Shore,_1st_Baron_Teignmouth

அன்புடன்,
நா. கணேசன்
 

அகநானூறு

பாடல்  51 - விரிவுரை - விளக்கப்படங்களுடன்

பாடியவர்: பெருந்தேவனார்

திணை : பாலைத் திணை

துறை  : பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது

51 - மரபு மூலம்நினை மாண் நெஞ்சம்

ஆள்வழக் ற்ற சுரத்திடைக் கதிர்தெற
நீளெரி பரந்த நெடுந்தா ளியாத்துப்
போழ்வளி முழங்கும் புல்லென் னுயர்சினை
முடைநசை யிருக்கைப் பெடைமுகம் நோக்கி
யூன்பதித் ன்ன வெருவரு செஞ்செவி                   5
யெருவைச் சேவற் கரிபுசிறை தீய
வேனில் நீடிய வேயுயர் நனந்தலை
நீயுழந் தெய்துஞ் செய்வினைப் பொருட்பிணிப்
பல்லிதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற்
பிரியிற் புணர்வ தாயிற் பிரியா                          10
தேந்துமுலை முற்றம் வீங்கப் பல்லூழ்
...
Reply all
Reply to author
Forward
0 new messages