இந்தக் காணொலியை ஏற்கனவே நான் பார்த்து இருக்கிறேன் ஐயா.
போகர் மூன்று நவபாஷாண சிலைகள் செய்ததாகவும்; அதில்...
ஒன்று: பழனிமுருகன் திருவுருவம்
இரண்டு: பூம்பாறை குழந்தை வேலப்ப சாமியின் திருவுருவம்
மூன்று: எது என்பது இன்னும் அறியப்படவில்லை (கருத்து வேறுபாடுகள் உள்ளன) என்பார்கள்.
இப்போதெல்லாம் பழநிமுருகனைத் தரிசிப்பது ரொம்பக் கஷ்டமான விஷயமாக உள்ளது. எப்போது போனாலும்; எந்தக் கிழமையானாலும் கூட்ட நெரிசல்; காசு கொடுத்துச் சிறப்பு தரிசனத்திற்குச் சென்றால் அப்ரதக்ஷணமாகச் சுற்றுவது போல் உணர்வு. மனநிறைவு கிடைப்பதில்லை.
குழந்தை வேலப்ப சாமியின் சந்நிதியில் நிறைவாக வழிபட முடிகிறது.
பழனிமுருகன் கால் ஒன்று சூம்பிவிட்டது எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன் (தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக அபிஷேகம் செய்தது காரணமாகலாம்). அதில் மீண்டும் நவபாஷாணப் பூச்சு ஒட்டவைக்கும் முயற்சி தோற்றது என்றும் சொல்லக் கேள்வி. எது உண்மையோ? யாமறியோம் பராபரமே.
சக