On Thu, Jul 7, 2022 at 2:14 AM kanmani tamil <
kanmani...@gmail.com> wrote:
>
> /// இன்றும் ஜம்மு காஷ்மீர் மாகாணத்தில் வைஷ்ணோதேவி ஆலயத்திலும்,......... புலி மீது ஆரோகணிக்கும் துர்க்கை வழிபாடு. ///
>
> முனைவர் கணேசன்,
> இந்தக் கருத்து தவறு. நான் வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். அது ஒரு பௌத்த வழிபாட்டிடமாக இருந்து; இப்போது பாரதத்தில் இந்து சமயம் பெருவாரியாகப் பின்பற்றப் படுவதால்; வேறு வழியில்லாமல்; பொதுமக்களை திருப்திப்படுத்த உருவ வழிபாட்டிற்கு இடம் கொடுத்துள்ள தலம். நான் சென்றது 2018. எனக்கு முன்னர் அங்கு சென்று வந்தவரும் அங்கு உருவமே இல்லை என்று தான் கூறினர். Devi mataa ki moorti kahaang hai? என்ற கேள்வியைக்
> கேட்டு முழித்துக் கொண்டு நின்ற அனுபவம் பற்றிப் பேசினர்.
தகவல்களுக்கு நன்றி. ஆனால்,
சில ஆயிரம் ஆண்டுகளாகவாவது, புலி மீதுள்ள துர்க்கையின் கோவிலாக வழிபடப்படும் கோயில் இந்த வைஷ்ணவதேவி கோயில்.
Pl. read History section:
https://en.wikipedia.org/wiki/Vaishno_Devi_TempleFirst I learnt about this ancient Mandir in Alf Hiltebeitel and Tracy Pinchman's works.
திரிகூட மலை எனப்படும் மலை. எனவே, மூன்று துருத்தங்களைப் பிண்டிகள் என்கின்றனர். பிண்டி < பிழி- என்னும் தமிழ்ச்சொல். வேதத்தில் இருப்பதும், இந்தியா முழுமையும் உள்ளதுமான திராவிடச் சொல் பிண்டம்/பிண்டி. 3 பிண்டிகள் காளி, சரஸ்வதி, லக்ஷ்மி என்கின்றனர். இப் பிண்டிகளே இயற்கை. பின்னால், மாதுர்க்கை புலி மீதுள்ளாள். புலிகள் துருத்தம் முன்னாலும் உண்டு.
வைஷ்ணவிதேவி புலிமீது வழிபாடு புத்தர் பிறப்பதற்கு முந்தையது.
https://en.wikipedia.org/wiki/Vaishno_Devi_Temple - புத்திஸம் என்ற வார்த்தையே காணோம். பௌத்த தொடர்புக்கான ஜர்னல் கட்டுரை ஏதும் உள்ளதா? இருந்தால் படிக்கலாம்.
சில நூற்றாண்டாய், இக்கோயிலில் விற்கப்படும் காசுகளில் துர்க்கை புலிமீது அமர்ந்துள்ளாள். “ஆளி ஏறித் தானவன் மாள” அழிந்து போன சங்க நூல் பாடல். (துக்காச்சி = மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு ஊர்ப்பேர்கள். துர்க்கா + ஆய்/ஆச்சி) காணலாம். இக் காசுகளின் வரலாற்றை மரியாதை செய்யுமுகமாக, இந்திய அரசாங்கம் 2012-ல் ரூ 5, 10, 25 காசுகளை அரசாங்க அக்கசாலை வெளியிட்டுள்ளது:
https://exclusivecoins.blogspot.com/2013/05/100-shri-mata-vaishno-devi-shrine-board.htmlNG
https://www.indianholiday.com/blog/3-pindis-in-vaishno-devi/