சிரஸ்தார், தாசில்தார், ஜமாபந்தி

168 views
Skip to first unread message

செல்வன்

unread,
Apr 8, 2020, 12:46:19 PM4/8/20
to செல்வன்

எழுத்தாளர் ஜெயமோகன் பதிவு :

நேற்று காலை பத்து மணி அளவில் சுகாதாரப் பணியாளர் இருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எங்கள் வீடு வெளியே பூட்டியிருந்தமையால் சென்றுவிட்டு மீண்டும் வந்தார்கள். இரண்டு பெண்கள். முகக்கவசமும் கைக்கவசமும் அணிந்தவர்கள். ஒரு கணிப்பொறிப் பட்டியலை வைத்துக்கொண்டு பெயர், வயது, உடல்நிலை ஆகியவற்றை சரிபார்த்தனர். கோவிட் வைரஸ் எப்படி வரும் என்பதை ஓரிரு வரிகளில் சொல்லி, வெளியே போகவேண்டாம், கேட் உட்பட எதைத்தொட்டாலும் கை கழுவவேண்டும் என்பது போன்ற செய்திகளையும் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

நண்பர் லக்ஷ்மி மணிவண்ணனிடம் அவரிடம் மாத்திரைகள் எல்லாம் இருக்கின்றனவா என்று கேட்டேன். அவை மருத்துவத் துறையால் இரண்டு மாதத்திற்கு தேவையான அளவு முன்னரே அளிக்கப்பட்டுள்ளன, எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னார்.

இன்று காலை மொட்டைமாடியில் நின்றிருக்கையில் அவர்கள் எங்கள் குடியிருப்புக்குப் பின்பக்கம் செல்வது தெரிந்தது.நாட்டிலுள்ள அத்தனை வீடுகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் நேரில் சென்று ஆராய்வது அவர்களின் பணி. காய்ச்சல், இருமல் பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிந்தால் அத்தகவலை அறிவிப்பார்கள். அடுத்தகட்ட மருத்துவக்குழு வருகிறது. கோவிட்டுக்கான வாய்ப்பு உண்டு என்று தெரிந்தால் சுவரில் அறிவிப்பை ஒட்டுகிறார்கள். அந்த இடத்தையே தனிமைப்படுத்துகிறார்கள்.

இந்தியா இன்று கோவிட் வைரஸை எதிர்கொள்வதில் எடுத்துக்கொள்ளும் பெருமுயற்சி மிகமிக அறிவியல்சாரந்தது. ஏற்கனவே சிக்கன்குனியா, சார்ஸ்: அதற்குமுன் காசநோய், மலேரியா,இளம்பிள்ளைவாதம்: அதற்கு முன் அம்மைநோய் காலரா ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவப் பின்புலம் கொண்டது. பகுதிகளாக பிரித்து நேரடி மானுடக் கண்காணிப்பில் வைத்தல், தனிமைப்படுத்துதல், இலவச சிகிழ்ச்சை என மூன்று பகுதிகள். அவை வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன

மிக எளிமையான அடித்தட்டு ஊழியர்கள் இவர்கள். ஊழியர் ஒருவருக்கு ஒருநாளுக்கு நாற்பது வீடுகள் கணக்கு. இருவர் இருவராகச் செல்கிறர்கள். இந்தியா என்ற இந்த மாபெரும் நிலப்பரப்பை, நூறுகோடி மக்களை அவ்வண்ணம் நேரில் சென்றடைவதற்கு மிகப்பெரிய உழைப்பும் அறிவியல்பூர்வமான திட்டமிடலும் தேவை. இந்த தகவல்களை பதிவுசெய்து ஒருங்கிணைத்து அறிக்கைகளாக ஆக்குவதற்கும் நவீன புள்ளியியல் சார்ந்த திட்டமிடலும் முன் அனுபவமும் தேவை. இந்தியா அதற்கென்றே உருவாக்கிக்கொண்ட பல அறிவியல்ரீதியான கொள்கைகள், சுருக்கும் முறைமைகள் உள்ளன.

இந்த ஊழியர்கள் முன்னரும் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். சிக்கன்குனியா வந்தபோது ஒவ்வொரு வீட்டு கொல்லைப்பக்கமும் சென்று நீர் தேங்குகிறதா என்று பார்தனர். மலேரியா பரிசோதனைக்காக வந்தனர். ஆண்டுக்கு இரண்டுமுறையாவது வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் மாபெரும் மக்கள்தொகை மிகப்பெரிய சவால். அதை சிறுகச்சிறுகக் கையாண்டு பழகியிருக்கிறார்கள். இந்த அமைப்பு இப்போது உருவாக்கப்பட்டது அல்ல, என்றும் இருந்துகொண்டிருப்பது


நானும் சில ஆண்டுகளுக்கு முன் இதைப்போன்ற வேலைகளைச் செய்தவன் என்றமுறையில் இதிலுள்ள சவால்களை அறிவேன். இதில் எட்டு அரசுத்துறைகள் ஈடுபட்டுள்ளன. அவற்றை ஒருங்கிணைக்கும் அரசதிகாரிகளின் அடுக்கு வரிசை உள்ளது. இந்த அமைப்பு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது என்ற தொன்மம் உண்டு, அது பொய். அது ஷெர்ஷா காலம் முதல் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் அத்தனை அதிகாரிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் ஷெர்ஷா காலத்து பெயர்கள்தான் – சிரஸ்தார், தாசில்தார், ஜமாபந்தி. பிரிட்ரிஷார் அதை மேலும் ஒருங்கமைத்தனர். ஷெர்ஷாவுக்கு முந்தைய வரலாற்றுக்காலகட்டத்தில் வேறுவகையில் இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

மாறுபட்ட நில அமைப்பும்,மையப்படுத்தபடாத சமூக அமைப்பும் கொண்ட இந்தியா என்னும் தேசத்தில் இந்தியா செய்யும் இந்தப்பணி, இதன் நடைமுறை அறிவியல், உலகநாடுகளேகூட கற்றுக்கொள்ளவேண்டியது. இன்றைய செய்திகளை வைத்துப் பார்த்தால் சர்வாதிகாரம் திகழும் சில நாடுகளைத் தவிர வேறெங்கும் இத்தகைய முழுமையான ஒருங்கிணைப்பு நிகழவில்லை என்றே தெரிகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் கிராமசேவக் என்ற பெயரில் தொடங்கி இன்று பல வகையான ஊழியர்களைக் கொண்டதாக விரிந்திருக்கும் மாபெரும் கிராமநிர்வாக அமைப்பு ஒன்று இங்கே உள்ளது. அந்த ஊழியர்களைப் பயிற்றுவிப்பதில் திண்டுக்கல் காந்திகிராமம் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு மிகப்பெரியது

இதில் முக்கியமான பங்கு வகிப்பவர்கள் இந்தக் கடைநிலை ஊழியர்கள். இந்த ஊழியர்கள் அரசை ஏமாற்றலாம், வேலைசெய்யாமலிருக்கலாம். அத்தனை எண்ணிக்கையில் இருக்கும் அவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆனால் அப்படிச் செய்வதில்லை. இந்தியாவின் கடைநிலை ஊழியர்களுக்கு அவர்களின் வேலைபற்றிய பெருமிதம் இருக்கிறது. அது மாபெரும் ஊக்கசக்தி.

அந்த பெருமிதம் தாங்கள் அரசூழியர் என்பதிலிருந்து வருகிறது. இந்தியாவின் வல்லமை அரசூழியர்களே. சுனாமி உட்பட நெருக்கடிகளில் அதை கண்கூடாகக் கண்டு பதிவுசெய்திருக்கிறேன். இந்த மாபெரும் அரசூழியர் அமைப்பு பொருளியல்சுமை என்றும் அதை இல்லாமலாக்கவேண்டும் என்றும் ‘நிபுணர்கள்’ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எப்போதும் அதற்கு எதிரானவனாக இருந்திருக்கிறேன். நூறு கட்டுரைகளாவது எழுதியிருப்பேன். அப்படி அரசூழியர் அமைப்பை அழித்த நாடுகள் எல்லாம் கதறிக்கொண்டிருக்கின்றன.

மாடியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். மெலிந்த கரிய பெண்கள். வீடுகள் முன் சென்று நின்று கேட்டை தொடாமலேயே கூவி அழைக்கிறார்கள். பலமுறை. உள்ளிருந்து ஒருவர் வருகிறார். அவர் எவ்வகையிலும் இனிய முகம் காட்டுவதில்லை. செய்திகளை கேட்டு பதிவுசெய்துவிட்டு திரும்பிச் செல்கிறார்கள். தோளில் பை போட்டிருக்கிறார்கள். அதில் குடிநீர். ஒருநாளில் இருபதுகிலோமீட்டர் நடக்கவேண்டும். இந்தியா என்பது இவர்களே.

மொத்த நகரமும் உறைந்திருக்கிறது. தெருநாய்கள் அன்றி எங்கும் உயிரசைவே இல்லை. மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன. அந்த இரு பெண்களும் தெருக்களில் தங்களுக்குள் பேசிக்கொண்டே செல்கிறார்கள். எஞ்சியிருக்கும் உயிரசைவு என.

இன்று காலை ஏனோ இவர்களைக் கண்டது நிறைவளிக்கிறது. ஒவ்வொரு நாளும் முற்றத்திற்குச் சென்று செம்பருத்தியும் பொற்கொன்றையும் பூத்திருப்பதைப் பார்க்கிறேன். மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது. இந்த மனிதர்களும்.

Image may contain: one or more people and people standing
--

செல்வன்

N. Ganesan

unread,
Apr 10, 2020, 9:35:14 PM4/10/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, செல்வன், podhuvan sengai, சுசீலா எம்.ஏ., Susila MA
அரிய கட்டுரை. தமிழ்நாட்டில் அரசு நிர்வாகம் கொரானா தொற்றுநச்சில் தாக்கு வரும்போது தீவிரமாகச் செயல்பட வேண்டும்.
செய்வார்கள் என்ற ஊக்கத்தை அளிக்கும் செய்தி. வாழ்க.

முன்பு, இண்பிட்டில் மின்மஞ்சரி என இ-இதழ் நடந்தது. டாக்டர் நா. கண்ணன் ஆசிரியர். அப்போது “இணையமும் நானும்” என்ற கட்டுரை தர ஜெமோவுக்கு 2009-ல் எழுதினேன். அப்போது அவர் எழுதிய கட்டுரை. தமிழ்நாட்டின் மரபுகள், பண்பாடுகள், இன்றைய சூழல், புதிய படைப்பாளிகள், ... எல்லாம் அறிய ஜெமோ போன்று இன்னும் பல நூறு எழுத்தாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள் முன்வரவேண்டும்.

நா. கணேசன்


---------- Forwarded message ---------
From: jeyamohan_ B <jeyamoha...@gmail.com>
Date: Mon, Sep 14, 2009 at 10:08 AM
Subject: Re: உத்தமம் கருத்தரங்க (கொலோன், ஜெர்மனி) சிறப்பிதழ் கட்டுரை

இணைய உலகமும் நானும்

இணையத்தின் உலகுக்கு நான் 1998 வாக்கில் என் நண்பர் பெங்களூர் மகாலிங்கம்
அவர்கள் மூலம் இழுத்து வரப்பட்டேன். அவர் அப்போது மைசூரில்
தொலைபேசித்துறையில் கணிப்பொறிப்பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
இணையத்தின் சாத்தியங்களை அவர் எனக்குச் சொன்னார், நான் நம்பவில்லை. ஆனால்
நான் அப்போது எழுத ஆரம்பித்திருந்த பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு
ருஷ்ய கம்யூனிச வரலாற்றைப்பற்றி நிறைய தகவல்கள் தேவைப்பட்டன. அவற்றை நான்
இணையம் மூலம் பெற்றுக்கோண்டேன்

சிலவருடங்கள் கழித்து 2000 த்தில் அமெரிக்க வாசகர் ஒருவரின் உதவியால்
நான் ஒரு கணிப்பொறி வாங்கினேன். அப்போது அது என் பணவசதிக்கு அப்பாற்பட்ட
ஆடம்பரம். நண்பர் நீலகண்டன் அரவிந்தன் வந்து என்னை தமிழ் தட்டச்சுக்குப்
படிப்பித்தார். அவர்தான் முரசு அஞ்சல் என்ற சேவையை எனக்கு அறிமுகம்
செய்தார். அன்று முதல் இன்றுவரை நான் எழுதுவது முரசு அஞ்சல்
எழுத்துருவில்தான்.

நான் பேசும் வேகத்தில் தட்டச்சுசெய்பவன். ஒருமணிநேரத்தில் இரண்டாயிரம்
சொற்கள் வரை. அது தட்டச்சில் ஒரு சாதனை என்கிறார்கள். கணிப்பொறியில்
தட்டச்சிட ஆரம்பித்தபின்னர் என் எழுதும் முறை மாறிவிட்டது. முதல்விஷயம்
எழுதும் அளவை மனம் கணக்கிட்டபடியே இருக்கிறது. சொற்கணக்கு வரிக்கணக்கு.
பத்தி அளவுகள் சீராக அமைகின்றன. ஒரு பத்தி என்பது ஒரு கருத்து என்பதனால்
கட்டுரைகளின் அமைப்பு சமவிகிதம் கொண்டதாக ஆகியது

மேலும் எழுதுவதை மாற்றுவது செம்பிரதி எடுப்பது ஆகியவற்றில் அதிக நேரம்
வீணாவது தடுக்கப்பட்டது.நான் எழுதும் பக்கங்கள் சீராக இருக்கவேண்டும் என
விரும்புகிறவன். பிழைகளை நான் வெட்டுவதில்லை. முன்பெல்லாம் நான் எழுதும்
காகிதப் பக்கங்களில் பிழைகள் மேல் காகிதத்தைவெட்டி ஒட்டுவேன். கணிப்பொறி
சீரான எழுத்துப்பக்கங்களை அளித்து என் படைப்பூக்கத்தை தக்கவைக்க
உதவுகிறது.

இப்போது பலவகையான எழுத்துருக்கள் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பலவற்றை
நானே சோதித்துப் பார்த்துவிட்டேன். முரசு தான் எனக்கு வசதியாக
இருக்கிறது. அத்துடன் முரசு எழுத்துருவை பிற இதழ்கள் பதிப்பகங்களின்
எழுத்துருக்களுக்கு எளிதில் மாற்றிக்கொள்ளலாம். முரசு எழுத்துருவை
உருவாக்கிய முத்து நெடுமாறன் குழுவினருக்கு நான் கடமைப்பட்டவன்.

இணையத்தில் எனக்கு முதலில் அறிமுகமான தளம் திண்ணை. அதில் நான் தொடர்ந்து
பலவருடங்கள் எழுதியிருக்கிறேன். எனக்கு இணையவெளியில் ஒரு வாசகர் வட்டம்
உருவாக திண்ணை ஒரு காரணம். அதன் ஆசிரியர்கள் கோ.ராஜராம், துக்காராம்
ஆகியோர் என் நன்றிக்குரியவர்கள்.

ஆனால் இணைய விவாதங்களில் நான் மனக்கசப்புகளையே அதிகம் சந்தித்தேன்.
இணையம் ஒரு சுதந்திர வெளி. நமக்கு சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவதென
தெரியாது. திண்ணை விவாதங்களிலும் ·பாரம் ஹப் என்ற தளத்தின்
விவாதங்களிலும் நான் நேர்மையாகக் கலந்துகொண்ட நாட்களில் பலர் புனைபெயரில்
வந்து என்னை வசைபாடினார்கள். என் கருத்துக்கள் திரிக்கப்பட்டன. மீண்டும்
மீண்டும் நான் சொல்லியவற்றையே விளக்கிச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு
ஆளானேன்

இணைய வெளியில் ஒருவகையான மனப்பிறழ்வு அளவுக்குச் சென்று பிறரை வசைபாடும்
மனிதர்கள் அதிகம் உலவுகிறார்கள். இவர்களுக்கு கருத்துக்கள் எவையும்
முக்கியமில்லை. எதையாவது ஒன்றை தங்கள் தரப்பாக வகுத்துக்கொண்டு வசையை
கொட்டவேண்டியதுதான் இலக்கு. இணையம் அவர்களுக்கு ஓர் இடத்தை அளிக்கிறது.
அவர்கள் ஒளிந்து கொள்ள வாய்ப்பும் அளிக்கிறது. தங்கள் ஆழ்மனதில் உள்ள
காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்டுகிறார்கள்.

பொதுவாக இணையவசைகளின் பாணியை கவனித்தால் ஒன்று புரியும். எந்தவகையிலும்
பொருட்படுத்தத்தக்க எதையுமே எழுதும் திராணி இல்லாதவர்கள்தான் அதிகமும்
தீவிரமான விமரிசனங்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பிடத்தக்க விஷயங்களை
எழுதிப் புகழ்பெற்றவர்கள்தான் இவர்களின் இலக்கு. இது ஒருவகை ஆற்றாமையின்,
தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே. ஆனால் இத்தகைய மனச்சிக்கல்கள்
இணையம் அளிக்கும் அற்புதமான விவாத வாய்ப்பை பயன்படுத்தமுடியாமல்
செய்கின்றன.

இணையத்தில் பிறரை கீழ்த்தரமாக வசைபாடுவது, அவர்களின் அந்தரங்கங்களை
தோண்டி எடுத்து திரித்து வெளியிடுவது, எழுதவரும் பெண்களை அவமதிப்பது
என்பது ஓர் இயக்கமாகவே நெடுநாள் நடைபெற்றது. இன்றும் பெண்கள் இணைய
வெளிக்கு வர அச்சப்படும் நிலை உருவாகியது. இவையெல்லாம் பெரியார்
பெயரால்,தமிழியத்தின் பெயரால் சிலரால் செய்யப்பட்டன. பெரியாரியம் பேசும்
கணிசமானவர்கள் இவற்றை ஆதரிக்கவும் செய்திருக்கிறார்கள். அவை தங்களை
திருப்பித்தாக்கியபின்னர்தான் அவர்கள் விபரீதத்தை உணர்ந்தார்கள்.

இணையத்தில் தமிழைக் கொண்டுவர உழைத்த முன்னோடிகளில் சிலரே
சாதிக்காழ்ப்புடன் இதைச் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.
தமிழ்மணம் போன்ற திரட்டிகளே அவதூறாளர்களின் கையில் ஆயுதமாகத்தான்
பயன்பட்டன என்று இணையத்தில் வாசித்தபோது மனக்கசப்படைந்தேன். ஒரு
திரட்டியில் என் இணையதளத்தை இணைப்பதற்கே நான் அச்சப்படும் சூழல் இன்று
நிலவுகிறது.

அவ்வகையில் இணையம் தமிழ்ச்சூழலில் கருத்துப்பரிமாற்றத்துக்கான
சாத்தியங்களை இல்லாமலாக்கி நம் பொதுவெளியை சீரழித்தது என்றே சொல்ல
வேண்டும். இன்றும் தமிழில் இணையத்தில் ஓர் பொது உரையாடல் சாத்தியம் என
நான் நம்பவில்லை.இணையத்தில்  தமிழில் வரும் எதையுமே நான் நம்புவதில்லை.
இந்நிலைக்கு முன்னோடி இணையப்பதிவாளர்கள்தான் பொறுப்பு.

இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு
குப்பையே. ஒன்று அவதூறுகளும் வசைகளும் கலந்த விஷமயமான குப்பைகள். அல்லது
எந்தவிதமான பொருளும் இல்லாமல் போகிறபோக்கில் எதையாவது எழுதித்தள்ளும்
சருகுக் குப்பைகள்.   எந்த ஒரு தலைப்பிலும் இணையத்தில் தமிழில் தேடினால்
ஒன்று அல்லது இரண்டு பதிவுகளே பொருட்படுத்தக்கூடியவையாக இருக்கும்.
பெரும்பாலானவை அரட்டையோ வசையோ ஆகவே இருக்கும். சந்தேகமிருந்தால்
தேடிப்பாருங்கள்.

தமிழ்ச்சமூகத்தின் குப்பைக்கூடையாக இணையத்தை ஆக்கியவர்கள் படித்த ,
பதவிகளில் இருக்கும் உயர்நடுத்தர வற்கத்தினரே என்பது நாம் வெட்கி
தலைகுனியவேண்டிய விஷயம். இன்று ஒருவர் தமிழ் இணையத்தை மட்டும்
பலவருடங்கள் வாசித்தார் என்றால் அவர் எந்தவகையான பொது அறிவும் இலக்கிய
அறிவும் இல்லாத பாமரராகவே இருப்பார். தமிழில் உள்ள பல மூத்த
வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை பார்த்தால் இது தெரியும், ஒரு
பொதுப்புத்தி கொண்ட வாசகன் மதிக்கும் ஒரே ஒரு பதிவுகூட இல்லாமல் பல
வருடங்களாக அவை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன! இத்தனை வருடங்கள் அவர்
குமுதம் போன்ற ஒரு வணிக அச்சிதழை வாசித்தால்கூட அடுத்தகட்டத்தை நோக்கி
நகர முடியும்.

தமிழ் இணைய உலகின் இந்த இழிநிலையை மாற்ற என்ன செய்யமுடியும் என்றுதான்
இப்போது கவனிக்க வேண்டும். நமக்குப்பிடிக்காதவர்களை தாக்குகிறார் என்ற
ஒரே காரணத்துக்காக அவதூறுகள் செய்பவரையும், வசைபாடுபவரையும் நாம்
அங்கீகரித்து ஆதரித்தோம் என்றால் தமிழுக்கு ஒரு பெரும் கெடுதலை
அளிக்கிறோம் என்று நாம் உணர்ந்தாக வேண்டும்.

இந்த எதிர்மறை அம்சங்களைத் தாண்டி நான் இணையத்தை என் கருத்துச்
செயல்பாடுகளுக்காகவும் இலக்கியச்செயல்பாடுகளுக்காகவும் சாதகமாகப்
பயன்படுத்த இயலும் என்றே எண்ணியிருக்கிறேன். 2003 ல் நான் நண்பர்கள்
உதவியுடன் மருதம் என்ற இணைய இதழை ஆரம்பித்தேன். நிதிப்பற்றாக்குறையால்
அது நின்றது. சென்ற இரண்டு வருடங்களாக என் இணையதளம்
வந்துகொண்டிருக்கிறது. [ww.jeyamohan.in]

என் இணையதளம் வெளிவர ஆரம்பித்தபின்னர் எனக்கு கிடைத்த வாசக கவனம்
இருமடங்காக ஆகியிருக்கிறது என்று சொல்லலாம். தினம் பல்லாயிரம்பேர் இதை
வாசிக்கிறார்கள். எதிர்வினையாற்றுகிறார்கள். அவர்களுடன் நான் தொடர்ந்து
உரையாடி என்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பர் சிறில்
அலெக்ஸ் இந்த இணையதளத்தை நடத்துகிறார்.

இணையத்தில் இன்று செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன என்று எனக்குப் படுகிறது.

1. அபிதான சிந்தாமணி போன்ற புராதனமான கலைக்களஞ்சியங்களை இணையத்தில்
ஏற்றவேண்டும். அவை அகர வரிசைப்படி முழுமையான உள் இணைப்புகளுடன்
அமைந்திருக்க வேண்டும்.

2. பெரியசாமி தூரன் உருவாக்கிய 'தமிழ் கலைக்களஞ்சியம்' இணையத்தில் ஏற்றப்படவேண்டும்

3. தமிழ் இலக்கிய, தத்துவக் கலைச்சொற்களுக்காக ஒரு இணையதளம் வேண்டும்.
அது விக்கிபீடியா போல ஒரு திறந்த அமைப்பாக இருக்கலாம். யாரும் சொற்களை
இணைக்கலாம். ஒரு பொதுவான மேற்பார்வை மட்டும் போதும்.  ஆனால் அதற்கு ஒரு
'டெம்ப்ளேட்' தேவை. அ. கலைச்சொல்.  ஆ. அதன் ஆங்கிலச் சொல். இ. அதன்
பொருள். ஈ. ஏதேனும் நூலில் இருந்து ஒரு மேற்கோள் ஆகியவை அளிக்கப்பட
வேண்டும். அதில் தேடும் வசதி தேவை. ஆங்கிலச்சொல்லை கொடுத்தால் அதற்கான
தமிழ்ச் சொற்களும் தமிழ்ச்சொல்லைக் கொடுத்தால் ஆங்கிலச் சொல்லும்
தெரியவேண்டும்.

4. தமிழகக் கல்வெட்டுகளை புகைப்படமாகவும் தமிழிலும் ஆங்கிலத்திலும்
உள்ளடக்க விவரங்களுடனும் இணையத்தில் ஏற்றவேண்டும்.

5. தமிழக சைவ வைணவ ஆலயங்களைப்பற்றிய ஒரு நல்ல இணையதளம் தேவை. இவற்றையும்
விக்கி போலவே திறந்த நிலையில் உருவாக்கலாம். தானாகவே அவை வளரும் வண்ணம்

இவை எதிர்காலத்தில் நிகழலாம். நிகழவேண்டும்

-------- ஜெயமோகன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2Bv%2B1TutU%2B8uVzsrU%2BCZBtcdBCL4kmu%3DqhJUv9LhMTRTmrN%2B8A%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Apr 13, 2020, 6:56:12 PM4/13/20
to மின்தமிழ், vallamai


On Sat, Apr 11, 2020 at 12:10 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
மனிதர்களைக் கூர்ந்து கவனிப்பவர்களின் எழுத்து சிறப்பாகவே இருக்கும், இருக்கிறது. 
நல்ல  கட்டுரை, பகிர்வுக்கு நன்றி முனைவர் கணேசன். 
கட்டுரை எழுதப்பட்டது 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. 
தொலைத்தொடர்பு காலத்தில் பத்தாண்டு என்பது மிக வளர்ச்சிக்குரிய காலம். 
மேலும் பல இளைய தலைமுறையினர் வந்துள்ளனர், புதிய எண்ணங்கள் உருவாகியுள்ளன. 
திரைப்படங்கள் பற்றியே எழுதிக் கொண்டிருப்பதும் குறைந்துள்ளது, உலக நோக்கும் பெருகியுள்ளது என்பது எனது கருத்து. 
இப்பொழுது ஜெயமோகன் கருத்து என்னவாக இருக்கும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. 
 

ஆமாம். 2011 இழை ஒன்று. அப்போது நீங்கள் இணையம் வரவில்லை என நினைக்கிறேன்.
முதலில் இ-சுவடி என மின்தமிழ் ஜிகுரூப் இருந்தது. மின்தமிழ் குழுவில் முன்பு எழுதினோர்
பலர் இப்போது எழுதுவதில்லை. புகாரியின் அன்புடன் குழுவில் இ-சுவடி யூனிகோடுக்கு
மாறலாம் என நா. கண்ணனுக்குப் பரிந்துரைத்தேன்.

போனடிக் கீபோர்டில் ஷிஃப்ட் கீ பற்றி: உதாரணமாக, H என்று அழுத்திப்பாருங்கள்.
ஆய்த எழுத்து கிடைக்கும்.

பொருத்தம் =   poruththam , பொறுத்து = poRuththu
இதற்காகத் தான் ஷிஃப்ட் கீ பற்றிக் குறிப்பிட்டேன்.

<<<
image.png

ஷிஃப்ட் கீ  ????

அதை  phonetic   முறையில் எழுதுவோர்  பயன்படுத்தத்  தேவையில்லை 
>>>

ஷிஃப்ட் கீ பயன்படுத்தினால் பிழைகள் தவிர்க்கலாம். அதற்காகக் குறிப்பிட்டேன்.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages