திருமூலரின் புராணவியல்

217 views
Skip to first unread message

K. Loganathan

unread,
Oct 10, 2013, 11:10:38 PM10/10/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

திருமூலரின் புராணவியல்

 

அறிமுகம்

 

நம் முன்னோர்கள் தொல்காப்பியக் காலத்திலிருந்தும் அதற்கு முன்பிருந்தும் பல அறிவியல் துறைகளைக் கண்டு ஞானத்தை வளர்த்துள்ளனர். அவர்கள் கண்ட பெரும்பாலான அறிவியல் துறைகள் நூலிய அறிவியல துறைகள் ஆகும். இதனையே தொல்காப்பியர் நூனெறி என்றார். மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்ற வள்ளுவர் வாக்கு இதனைப் போன்ற நூலியல் அறிவியல் சான்ற துறைகள் வழியாகத்தான் வந்திருக்க வேண்டும்

 

தொல்காப்பிய மொழியியலே ஓர் நூலிய அறிவியல் துறைதான்.  பனம்பாரனார் பகன்ரது போல வழக்கு செய்யுள் ஆயிரு முதல் எனக்கொண்டு பலவகையான  கூற்றுக்களை தொகுத்து அவற்றையே ஆய்வுப் பொருளாகக் கொண்டு இலக்கணம் கூறிய சிறப்பு தொல்காபியத்திற்கு உண்டு.

 

அதேப் போல இன்னும் பல நூலியல் அறிவியல் துறைகளை நம் முன்னோர்கள் கண்டுள்ளனர். திருமூலரின் திருமந்திரத்தில் இத்தகையய பல அறிவியல் துறைகள் அடங்கி கிடக்கின்றன.  அவற்றில் ஒன்றே புராணவியல் எனப்படும் இத்துறையாகும். இது திருமந்திரம் இரண்டாம தந்திரத்தில் விளங்கும் பல பாடல்களில் விளங்குகின்றது

 

புராணங்களைப் பற்றி இப்பொழுது பெரும் குழப்பமே நிலவுகின்றது.

 

பரவலாக அவை பழங்காலக் கதைகள் புராதனக் கதைகள்  என்று கொள்ளப்படுகின்றது. சிலர் இவை வரலாற்று நிகழ்ச்சிகளை சுட்டும் என்று அவற்றை ஓர் வகையான வரலாறுகளாகவும் கொள்கின்றனர்.

 

இவையெல்லாம் பிழை என்றே தெரிகின்றது. ஆங்கிலத்தில் புரணாங்களை  mythologies   என்பர். இவை இப்பொழுது மேலை நாடுகளில் ஆழ்வுளத் துறையின் ஓர் அங்கமாக மிக விரிவாக ஆராய்ப்பட்டு வருகின்றன.

 

இவை பேராசிரியர் யுங் போன்றோரால் ஓர் வகையான் ஆழமான கனவுகள் என்றே கொளப்பட்டு ஆராயப்படுகின்றன. இதேக் கருத்தைதான் திருமூலரும் கொண்டிருந்தார் என்பது கீழ் வரும் பாட்டால் தெளிவு

 

343

 

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கல் மூடர்கள்

முப்புர மாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யார் அறிவாரே

 

ஆம புராணங்களை வெறும் கதைகள் போல் எடுத்துகொள்பவர்கள் மூடர்கள். அப்படி இருக்க யார் அறிவாளிகள்? எனும் போது, இந்த புராணத்தில் விளங்கும் முப்புரங்கள் என்பவற்றை மும்மல காரியங்கள் ,அதனைத் தான் இறைவன் அழிக்கின்றான் என்று பொருள் அறிவதே ஞானிகள் செய்யக் கூடியது என்கின்றார்.

 

இப்படி புராணக்களின் பொருளை அறிதலைத்தான் இங்கு ‘உள்ளுறைப் பொருளியல்’ (  Hermeneutic Semiotics)  என்கின்றோம்

 

இந்த அறிவியல் துறையை எவ்வ்வாறு திருமூலர் வளர்த்துள்ளார் என்று அறியத் தருவதே இந்தத் தொடரின் நோக்கம். இதற்கு மூலமாக திருமூலரின் இரண்டாம் தந்திரத்தையும் அதற்கு உரை எழுதி போற்றியுள்ள ஜி. வரதராஜன் அவர்கள் உரையைத் தழுவி இந்த ஆய்வு செல்லும்

 

அன்பர்களின் கருத்துக்களை இடை இடையே தெரிவித்து உதவினால பெரிதும் மகிழ்வேன்

 

உலகன்

 

11-10-13

 

 

கி.காளைராசன்

unread,
Oct 11, 2013, 5:15:17 AM10/11/13
to mintamil, vallamai, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
வணக்கம் ஐயா,

அம்மையார் சுபாஷினி அவர்களது கருத்துக்களை அப்படியே நானும் வழிமொழிகிறேன்.
அன்பன்
கி.காளைராசன்

343

 

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்

K. Loganathan

unread,
Oct 11, 2013, 5:19:33 AM10/11/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா சுபா

 மிக்க நன்றி. புராணங்கள் நிறைய தம்ழில் உண்டு ஆனால் புராணவியல் அரிதாகிவிட்டது அதனை நினைதுத்தான் இந்தத் தொடரை தொடங்கியுள்ளேன்

தங்கள் கூற்று:

//உங்கள் விளகக்த்தினூடே உளவியல் கருத்துக்களையும் மேற்குலக சிந்தனை ஆய்வினையும் இணைத்துக் கொடுத்தால் இத்தொடர் மேலும் புதிய கோணத்தில் அமையும் என நினைக்கின்றேன்//

 நிச்சயமாக, எனது விளக்கங்கள் ஆகமவுளவியலைச் சார்ந்ததாக இருக்கும். பழமைகளோடு பல புதுமைகளும் இருக்கும்
 

 ஓர் குறிப்பு, நான் பயன்படுத்தும் திருமந்திர உரையை எழுதியவர் மு, வரதராசனார் அல்ல, ஜி. வரதராஜன் என்பார். பழ்நியப்பா பிரத்ர்ஸ் பதிப்பு

உலகன்


2013/10/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
வணக்கம் டாக்டர். லோகா,

பயனுள்ள ஒரு பதிவுத் தொடரை தொடங்கியிருக்கின்றீர்கள். திருமூலரின் பாடல்களை மீள்பார்வை செய்வதாக அமைவதோடு மு.வரதராசனார் உரையின் தெளிவோடு புதிய பார்வையைத் தருவதாக இத்தொடர் அமையும் என நினைக்கின்றேன். 

கிரேக்க புராணங்கள் எண்ணற்றவை. இப்புராணக் கதைகளை அவர்கள் சிலைகளாகவும் சிற்பங்களாகவும் செய்து வைத்தனர். இக்கதைகளை ஆராயும் பலர் அதன் உட்பொருளையும் மறைபொருளையும் இச்சிற்பங்களின் வழி வெளிப்படுத்த முயன்றமையை இச்சிலைகளை பார்க்கும் போதெல்லாம்  நினைத்துப் பார்ப்பேன். 

உங்கள் விளகக்த்தினூடே உளவியல் கருத்துக்களையும் மேற்குலக சிந்தனை ஆய்வினையும் இணைத்துக் கொடுத்தால் இத்தொடர் மேலும் புதிய கோணத்தில் அமையும் என நினைக்கின்றேன்.

அன்புடன்
சுபா


2013/10/11 K. Loganathan <k.ula...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

K. Loganathan

unread,
Oct 11, 2013, 10:01:45 PM10/11/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 1 : யார் இந்த அகத்தியன்?

 

இந்த இரண்டாம் தந்திரம், அகத்தியம் என்ற தலைப்பில் அகத்தியன் எனும் ஓர் புராணப் புருடரை மையமாகக் கொண்டு ஓர் புராணக் கதையை சுருக்கமாகக் கூறி பிறகு ‘அகத்தியன்’ என்றால் என்ன என்று உள்ளுறைப் பொருளையும் விளக்குகின்றார் நம் திருமூலர்.

 

முதல் இரண்டு பாடல்களும் தொடர்புடையதாகத் தெரிய இரண்டையும் இணைத்தே இங்கே அலசுவோம்

 

337

 

நடுவு நில்லாது இவ்வுலகஞ் சரிந்து

கெடுகின்றது என் பெருமான் என்ன ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீ போய்

முடுகிய வையத்து முன்னிர் என்றானே

 

338

 

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்

அங்கி உதயஞ் செய் மேல்பால் அவனொடு

மங்கி உதயஞ் செய் வடபால் தவமுனி

எங்கு வளங்கொள் இலங்கொளி தானே

 

இந்த இரண்டு பாடல்களையும் படித்த பின் நமக்கு உடன் புராணவுருவாகிய ‘அகத்தியன்’ என்றால் யார் என என்று உடன் விளங்குகின்றது.

 

பாடல் 338 மிகத் தெளிவாக அகத்தியன் என்பது குருமுனி வடிவில் புராணங்களில் வரும் உருவம் உண்மையில் ஓர் வகையான உருவகம், அனைவர் அகத்தும் அறிவு எனும் ஒளியை வளர்க்கும் ஓர் தெய்வ சத்தி யாகும். இதுவே எங்கும் பரந்து விரிந்து எல்லா உயிர்கள் அகத்தும் அஞ்ஞான இருளைக் கடிந்து ஞானவொளி எழுப்பும் சத்தியும் ஆகும்

 

இது உடன் நமக்கு சுமேருத் தமிழ் கெஸ்தின் அண்ணாவை நினைவிற்கு கொண்டு வருகின்றது, அங்கு கெஸ்தின் அண்ணா எனும் தெய்வம் கனவுகளின் பொருளை விளக்கும் தெய்வமாகக் கருதப்படுகின்றது. கெஸ்த்து என்றால் அறிவு ஞானம் என்றும் பொருள் படும். இந்த கெஸ்தின் அண்ணாவே இங்கு ‘அகத்தியன்’ என்று அழைக்கப்படுகின்றார் போலும்

 

இனி ‘அங்கி உதயம் செய் மேல் அவனொடு, மங்கி உதயஞ் செய் வடபால் தவமுனி’ என்பதும் அகத்தியன் யார் என்பதைப் பற்றிய விளக்கமே யாகும்

 

அங்கியை அக்நியை ஆணவத் துன்னிருளைக் கிழித்துக் கொண்டு உலகெல்லாம் ஓங்கி வளரும் வகையில் உதிக்க வைக்கும் மேல்பால் அவன் என்பது பராபரையோடு ஒன்றித்து நிற்கும் பரசிவன் தான். ஆனால் இந்த அகத்தியன் அவனோடு ஒப்ப தனக்கென்று எவ்வொளியும் இல்லாது மங்கி நின்று அவன் அருளாலேயே எல்லா உயிர்கள் அகத்தும் சிரசாகிய உச்சியில் வடக்குத் திசையில் உதயஞ் செய்யும் ஓர் சத்தியாகும்

 

மூலாதாரம் தொடங்கி முதுகந் தண்டு வழியாக ஊடுறுவிப் பாய்ந்து சிரசினை எட்டி அங்கு ஞானப் பிரகாசம் புணர்த்தும் சத்தியே இந்த அகத்தியன் ஆகும். இது ஓர் தனி ஞானவொளி அல்ல, இறைவனே அருளத்தான் இந்த உடம்பெங்கும் பரவும் ஞானவொளி மெய்யாகின்றது.

 

இந்த அக்கத்தியன் என்ற புராணவுருவின் உள்ளுறைப் பொருள் இவ்வாறு செவ்வே வெளிப்பட, இப்பொழுது புராணக் கதையின் பொருளுக்கு வருகின்றோம்

 

கதை இதுதான். உலகெல்லாம் பரவி இருக்கின்ற தேவர்கள் மாந்தர்களைக் காண அங்கு அவர்கள் சரிந்து பிழையான வழிகளில் சென்று கெட்டொழிகின்றார்கள்  என்ன செய்வது பெருமானே என்று இறைவனை இறைஞ்ச உடன் பரமன் அகத்தியனை அழைத்து ஓவ்வொருவர் அகத்தேயும் அவர்கள் நடுவில் தோன்றி முன் இருக்குமமறு தோன்றி அவர்களை சரிசெய்க என்று ஆணையிட, விரைந்து கெடும் உலக மாந்தர் அகத்தே அகத்தியனும் தோன்றி அவர்களை காத்தருளினான் என்பதுதான்

 

இந்தப் புராணக் கதையின் உள்ளுறைப் பொருள் தான் என்ன? என்பதே நம் கேள்வி

 

முதலில் நாம் கருத வேண்டியது ‘மாந்தர்கள் சரிந்து விழுதல்’ என்றால் என்ன? என்பதை அறிந்து பிறகு எவ்வாறு அகத்தியன் முன் வந்து இருத்தலால் அந்த சரிவு போக்கப்படுகின்றது என்பதுதான்

 

சரிதல் இங்கு விழுதல் என்று பொருள்படும், சாதாரண நிலையில் மக்கள் சரிந்து விழாது நந்நெறி ஊய்ந்து வாழ்கின்றனர் இதில் சரிவு  கெடுதலும் ஆகும்

 

இது உடன் நமக்கு ஆகமவுளவியலின் ‘வீழ்ச்சி வினைகள்’ என்பதை நினைவிற்குக் கொண்டு வருகின்றது.

 

ஆன்மா யாண்டும் பல ஈர்ப்புகட்கு ஆளாகியே பல முயற்சிகளோடு வாழ்கின்றது, நற்காரியங்களைச் செய்து ஊய்கின்றது. இவற்றை அகத்தே இரவிமதி எனும் நாத-விந்துவால் வரும் ஞானவொளி ஈர்ப்பு என்றும் மதியால்(விந்துவால்) வரும் இன்ப ஈர்ப்பு என்றும் இரவியால்(நாதத்தால்) வருகின்ற அதிகார ஈர்ப்பு என்றும் ஆகிய நாடிகள் வழியே இயக்குகின்றன. இவற்றை சுழிமுனை நாடி இடகலை நாடி பிங்கலை நாடி என்றும் சித்தர்கள் கூறுவர்.

 

இவற்றை  Freud  போன்றோர் கூறும்  instincts  என்பவற்றோடு நாம் ஒப்பிடலாம், தவறில்ல

 

அப்படி என்றால் சரிந்து விழுந்து கெடுதல் என்னவாக இருக்கும்?

 

இந்த நாடிகள் யாதும் இல்லாது போக்கிடும் ஆணவ மலம் அகதே மிக்கிட, பல்வேறு நன்நாட்டங்களை அகத்தே பதிவிக்கும் நாடிகளை எல்லாம் இந்த ஆணவ மலம் விழுங்கிட, ஆன்மா செயல்திறன் இழந்து மீளா மிடிமையில் விழுகின்றது என்பதொடு ஆணவத்தின் சிதைவிற்கும் காரணமாகி பொல்லாத வீழ்ச்சி வினைகளாகிய பாவ காரியங்களைச் செய்து கெடுகின்றது, தன்னையேத் தான் அழித்துக் கொள்கின்றது என்றுதான் பொருள் படும்

 

இந்தச் சரிவை போக்குதற்கு ஒரே வழி: அகத்தே அகத்தியனாகிய அந்த இரவிமதி மங்காது வீறுகொண்டு எழுந்து தன்னை முன் இருத்தி மீண்டும் இந்த இடகலை பின்கலை சுழுமுனை நாடிகள் செய்ல்படுமா செய்வதுதான்

 

மானிட யத்தனங்க்ஜள் எல்லாம் கடந்து இது இறையருளாலேயே முடியும் என்பதால் தேவர்கள் தாங்களே யாதும் செய்யாது இந்த நாத விந்துக்களாகிய சிவ தத்துவங்களை ஆட்சி செய்யும் அந்த சிவ பெருமானிடமே முறையிடுகின்றனர்!

 

இதுதான் இந்த பழம் பெரும் புராணத்தின் உள்ளுறைப் பொருள்!

 

திருமூலரே முன்மொழிந்த முப்பொருள் உண்மையின் அநாதிப் பொருளியலை உடன்பட்டே இந்த விளக்கம் அமைந்திருப்பதையும் ஓர்க

 

உலக அறிஞர்கள் பலர் வீழ்ச்சி வினைகள் ஏன்? மீளா மிடிமை ஏன்?  என்பதற்கு தக்க விளக்கம் தர தடுமாறும் போது, அன்றே நம் திருமூலர் ஓர் அழகிய விளக்கத்தை அருளி இருக்கும் சிறப்பினைக் கண்டு மகிழ்க

 

தொடரும்

 

உலகன்

 

 



2013/10/11 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 14, 2013, 4:44:55 AM10/14/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 2 அந்தகாசுரன் வீரட்டானம்

 

இந்து சமயப் புராணங்களிலும் சுமேருத் தமிழ் புராணங்களிலும் மற்றும் உலகப் புராணங்கள் பலவற்றிலும் பலவகையான அசுரர்களை அழிக்கும் சத்தியாக தெய்வங்கள் இருக்கும். தக்க ஆயுதங்களுடன் இந்த அசுரர்களோடு போரிட்டு தெய்வங்கள் அழிக்க அவையே வீரட்டானம் எனப் படுகின்றது, இப்படிட்ட வீரச் செயல்கள் ஓர் கோயிலில் நடைபெறுவதாகக் கொளப்படுபோது அந்த வீரட்டம் அந்த கோயிலின் தலபுராணத்திலும் இடம் பெறும்.  அவ்வகையில் தமிழகத்தில் எட்டு திருகோயில்கள் அட்ட வீரட்டானங்கள் என்று பெயர் பெறும் என்றும் அவை திருவதிகை, திருக்கடவூர் திருக்கொறுக்கை வழுவூர் திருகோவிலூர் திருப்பறியலூர் திருக்கண்டியூர் திருவிற்குடி என்று ஜி. வரதராஜன் அவர்கள் பட்டியலிடுகின்றார்.

 

ஆனால் இந்த அசுரர்கள் தான் யார், தெய்வங்கள் ஏன் அவர்களை அழிக்க வேண்டும்? என்றெல்லாம் கேள்விகள் எழ, வரும் 8 பாடல்களில் திருமூலர் இறைவனின் அளப்பருஞ் சத்தியை வெளிப்படுத்தும் வீரட்டம் எட்டினை நலமே விளக்கியருளுகின்றார்.

 

339

 

கருத்துரை அந்தகன் தன்போல் அசுரன்

வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்

வருத்தஞ் செய்தான் என்று வானவர் வேண்டக்

குருத்துயர் சூலங் கைகொண்டு  கொன்றானே

 

அந்தகன் என்றால் குருடன், கண் தெரியாதவன். இங்கு கருத்துரை அந்தகன் யாராக இருக்க முடியும்?

 

கருத்திலே அறிவிலே சிந்தையிலே அங்கு இருளினைக் கொண்டு வந்து உயிரை ஓர் ஞான குருடாக ஆக்கும் சத்தி. இதுவே சைவ சிதாந்தத்தின் அநாதிபொருள் மூன்றில் பாசங்களாகிய ஆணவம் கன்மம் மாயை என்பன. இங்கு குறிப்பாக மிகவும் வலுவான என்னற்ற வடிவங்களில் வரக்கூடிய ஆணவ மலம் ஆகும்.

 

மலம் என்றாலே இருள்தான். அறிவிலே இருளைத் தருவது இந்த ஆணவ மலம் தான்

 

ஓர் குருடனைப் போல உயிர்களை செயல்பட வைக்கும் ஓர் அசுரனாக இந்த ஆணவ மலம் எழுந்து, நல் வரத்தின் மிக உயர்ந்த மானிடப் பிறப்பையும் அடைந்து  இறைவன் உண்டென உணர்ந்து வீடுபேற்றிற்காக உழைக்கும் நல்ல ஆன்மாக்களை வருத்துகின்றது.

 

எப்படி?

 

உடலை உயிரை அழித்தல் என்றவாறு செயல்பட்டு உடல் நோய்களை உளநோய்களைத் தந்து ஆழச் சிந்திக்க முடியாது முடக்குவது இந்த ஆணவ மலமே யாகும்.

 

மேலும் சிந்தையிலேயே சிறுமையைப் புகுத்தி அறிவினை அணுத்துவமாக்கி அதனால வீணான செருக்காடச் செய்வதும் இந்த ஆணவ மலம் எனும் அசுரன் தான். மேலும் இதனாலேயே புதிய கருத்துக்கள் பிறரால் முன்மொழியப்படும் போது, ஓர் அகத் தடை வர, அதனை ஏற்காது உதாசீனம் செய்வதும் இந்த ஆணவ மலத்தால் வரும் செருக்குத் தான்

 

இதை எல்லாங் கண்டு தேவர்கள் இறைவனிடம் இந்த ஆணவ மல அசுரனைப் பற்றி முறையிட, இறைவனும் குருத்து அதாவது கனல் சுடரும் வகையில் எழுந்து உயர்ந்து நிற்கும் திரிசூலமே கருவியாகக் கொண்டு இந்த அசுரனைக் கொன்றான் என்பதே புராணக் கதை,

 

இங்கு ஏன் திரிசூலம்? ஏன் இது சாதரணத் தேவர்களால் முடியாத ஓர் காரியம் ஆகின்றது?

 

ஆணவ மலம் அநாதிப்பொருள் என்பதொடு அளவற்ற சத்தியும் உடையது. தோன்றி நின்று உள்ளதாய்ச் சுடரும் இந்த பேரண்டத்தையே விழுங்கி இல்லாதாக்கும் வல்லமையது. இதனை கண்டிக்கக் கூடிய ஒரே சத்தி இறைவன் ஒருவன் தான், ஆயினும் இறைவனும்  பராசத்தி யாகிய சூல வடிவில் தோன்றி யருளும் அவளைக் கொண்டு. அளப்பரிய ஒளித் திரளை உள்ளத்திலும் உடம்பிலும் பரப்பி அந்தகாரத்தைப் போக்குவான் இறைவன் என்பதே சூலங் கைக் கொண்டு அந்த அந்தகாசுரனைக் கொன்றான் என்றாகின்றது

 

வல்லசுரப் பிடியின் ஆணவ மலத்தின் தாக்கத்தை தேவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது போக, இறைவனே பராசத்தியைக் கருவியாகக் கொண்டு, திருசூலமாகக் கொண்டு அந்த அசுரனை உயிர்களின் உடம்பிலிருந்து உள்ளத்திலிருந்தும் கொன்று இல்லாதாக்கி சுத்தப்படுத்தி நலம் செய்தான் என்பதே இங்கு கருதப்படும் வீரட்டம் ஆகும்

 

இப்படிப்பட்ட உள்ளுறை பொருளியல் விளக்கங்களை திருமூலர் தானே வர்ணித்துள்ள முப்பொருள் உண்மையின் அநாதிபொருளியலை அகப்படுத்தியே கூற முடியும் என்பதைக் காண்க.

 

குறிப்பு: எனக்கு அடிக்கடி வரும் ஞானக் கனவுகளில் உடுக்கை துடிக்கும் ஓர் மாபெரும் திருசூலமாக இந்த சூலம் தோன்றும். மேலும் தருத் தேர்வில் மிக உயர்ந்த திரிசூலமாகவும், தனி திரிகோணமாக்வும் பல்லடுக்கு திரிகோணமாகவும் வரும் பொருள் ஒன்று தான்---- அகத்தே அஞ்ஞான இருள் கடியப்படல்

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 

 

 



2013/10/12 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 14, 2013, 8:58:56 AM10/14/13
to meyk...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com
டாகடர் கணேஷ்

மிக்க நன்றி, மூவிழை சூலத்தின் பொருள் தாங்கள் கூறியது போலவும் இருக்கலாம். இதன் உண்மையை எப்படி நிறுத்துவது என்ற கேள்வியும் எழுகின்றது.

இங்கு தருத் தேர்வு உதவலாம். சிலரின் தருக்களில் திரிசூலம் வருவதைக் கண்டுள்ளேன். இது வந்தால் பெரும்பாலும் தூரப்பயணம் மெய்யாகும் என்று பொருள் படும் இது கிரியா சத்தியைக் குறிக்கும் போலும்

கிரேக்க ரோமானிய கிருத்துவ  ஓவியங்களிலும் சிற்பங்களிலும் இதுபோன்ற  திரிசூலங்கள் இருக்கின்றன. அவர்களிடம் இதுபோன்ற  கருத்துக்கள் இருந்தன போலும்

உலகன்


2013/10/14 Dr.K.Ganesalingam <kganes...@yahoo.com>
 

சூலம் குறித்த ஒரு சிறு விளக்கம்.
உயிருக்கு  இச்சை ஞானம் செயல்  (கிரியை) ஆகிய ஆற்றல்கள் இயல்பாகவே உண்டு. இதனால் அதனை இச்சா ஞானக் கிரியா சொரூபி என்று சொல்வதும் உண்டு. ஆணவ மலச் சேர்க்கையால் இவை வெளிப்பட முடியாமல் இருக்கின்றன. அதனால் உயிர் எதனையும் அறியவோ  செய்யவோ முடியாமல்  இருக்கிறது.
இறைவனுக்கும் இவ்வாற்றல்கள் உண்டு. மலத் தொடர்பு இல்லாத காரணத்தால், இவை தாமாகவே வெளிப்படுகின்றன. இறைவனின் இந்த ஆற்றல்கள் உயிரில் சேர்ந்த மலக் கட்டை அறுக்க, அதன் ஆற்றல்கள் விளங்கி உயிர்  வளர்ச்சி பெறுகிறது.
இறைவன் ஏந்திய சூலம் இச்சை, ஞானம், செயல் ஆகிய ஆற்றல்களைக் குறிக்கும் மூன்று கிளைகள் கொண்ட 'மூவிலைச் சூலம்'.
அகத்தியர் என்பவர் அகத்தில் (ஞானத்) தீ வளர்ப்பவர் என்றும் கொள்ளலாம். ('அகத் தீ' யர்).


From: K. Loganathan <k.ula...@gmail.com>
To: mint...@googlegroups.com; vall...@googlegroups.com; meyk...@yahoogroups.com; tolkaa...@egroups.com
Sent: Monday, 14 October 2013 7:44 PM
Subject: [meykandar] Re: திருமூலரின் புராணவியல்

__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (7)
Recent Activity:
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.

__,_._,___

K. Loganathan

unread,
Oct 15, 2013, 11:23:45 PM10/15/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 3 பிரசாபதி வீரட்டானம்

 

இது இறைவனின் இரண்டாவது வீரட்டம் ஆகும். ஐந்து தலைகளோடு திகழ்ந்த பிரமன் எவ்வாறு அந்த ஐந்தில் ஒரு தலையை இழந்து நான்முகன் ஆனான் என்று விளக்குவது. இங்கு பிரசாபதி நான்முகன் உருவாக்கிய துணைக் கடவுள்களின் ஒன்று எனினும் பிரமனே இங்கு அவ்வாறு விளிக்கப்படுவதாகத் தெரிகின்றது.

 

340

 

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்

தலையைத் தடிந்திட்டுத் தான் அங்கி இட்டு

நிலை உலகிற்கு இவன் வேண்டும் என்று எண்ணித்

தலையை அரிந்திட்டுச் சந்தி செய்தானே

 

இங்கு கொலை என்பது சிவபெருமானின் பல சங்காரத் தாண்டவங்களில் தன்னுளிருந்து தானே உருவாக்கும்  தெய்வ வடிவங்களை அழித்து இல்லாதுப் போக்கி தன்னுள் இழுத்துக் கொள்வதாகும். ஆயினும் பிரமன் வேதியன் என்பதால் மறை நூற்களாக உலகுக்கு யாண்டும் பல தேவைப்படும் என்பதால் அவனை முற்றிலும் அழிக்காது தலையை தடிந்து போக்கி புதிய ஓர் தலையோடு திகழுமாறு இறைவன் செய்தான்.

 

மேலும் அங்கி இடுதலாவது, அக்நி வழிபாட்டின் வேதீய நெறியை வளர்க்கும் தெய்வமாகவும் அவனைத் திருத்தினான் என்பதாகும். இறைவன் முத்தொழில்களில் ஒன்றாகிய படைப்புத் தொழிலை செய்பவனாக இருந்தவன் மறை நூற்களின் அதிபதியாக வேதீயனாக உருவாகியது இதனால் இருக்கலாம்

 

இங்கு அங்கி வளர்த்தலாவது அகத்தே எல்லா கசடுகளையும் எரித்துச் சாம்பலாக்கி வெளியாக்கி சுத்தம் செய்யும்  செயலாகும்.  இதன் உள்ளுறைப் பொருள் கலவிக் கேள்விகளில் சறந்து ஞானம் வளர்ப்பதுமாகும். கலியாகிய அஞ்ஞான இருள் வராது தன்னையும் உலகையும் காப்பதே அக்நி வளர்த்தல் ஆகும்

 

சிவபெருமானே செந்தீ வண்ணனாகத் தோன்றுவதும் இதன் பொருட்டே யாகும்.  அனைவர் அகத்தும் அக்நி காரியம் நடைபெற்றுக் கொண்டே இருக்கச் செய்யும் தெய்வ சத்தி பிரமன் ஆகும்.

 

ஆறு ஆதார்ங்களில் கல்விக் கேள்விகளில் மேம்பட்டு நிற்கச் செய்யும் சுவாதிட்டான கற்றளியின் அதிபதி பிரமன் ஆகும்

 

இவ்வாறு இருக்கையில் ஏன் இன்னொரு சிரச்சேதம்?

 

தொடக்கத்தில் ஐந்து சிரசுகளோடு திகழ்ந்த பிரமன் தான் அதிபதியாக இருக்கும் அக்நி காரியத்திற்கு அதனோடு வரும் வேதங்கட்கும் அதிபதியாக இருக்க, வேதத்தையே முதன்மைப் படுத்தி வேத வாக்குகளே மெய் வாக்குகள் அவற்றைக் கற்றால் சிவஞானம் வந்துவிடும் வீடுபேறு அடையலாம் என்றவாறு ஓர் மயக்க வழியையும் காட்டத் தொடங்கினான்

 

வேதங்களே பிரமாணம் என்பது ஓர் மயக்கம். வேதங்கள் போன்ற எழுத்தினால் இயனற சொற்களால் எழும் மறை நூல்கள் சிவஞனம் மகிழ உதவும் என்றாலும், அவை மேலான மோன நிலைக்குக் கொண்டு சென்று சிவஞானம் மகிழும்படி ஆன்மாக்களைத் தூண்டாது. எப்போது வாய் கிழிய வேத சுலோகங்களை பாராயணம் செய்தவாறும் அவற்றின் பொருளை சிந்திக்குமாறும் வற்புருத்துமே ஒழிய, இவற்றையெல்லாங் கடந்து தட்சிணாமூர்த்தி அருளளால் மேலான மோனம் கைவர சின்முத்திரை வழியாக சிவஞானம் உணர்தல் நடத்த வியலாத தெய்வமே ஐந்தலையின் பிரமன் ஆகும்.

 

ஆயினும் இதனை அறியாது தன்னை, வீடுபேற்றிற்குக் கொண்டு செல்லும் வகையில் சிவஞானம் போதிக்க வல்ல ஐந்துமுக சதாசிவ மூர்த்தியொடு பிரமன் தன்னை சமன் எனக் கருதி, வேதம் போன்ற் மறை நூற்களை ஓதும் வழியில் வீடுபேறு அடைய முடியும் என்றோர் பிழையான வழியைக் காட்டிட, இறைவன், ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து, பிரமனை நான்முகன் ஆக்கி அதன்வழி சதாசிவ மூர்த்திக்குக் கீழான ஓர் தெய்வமாக அவனை குறைத்தான்

 

குறிப்பு:

 

இதே கதை ஓங்காரத் தலைவனாகிய திருமுருகன், அதனை அறியாத பிரமனாகிய வேதியனை தண்டிக்கும் வகையில் அவனது ஐந்து சிரசுகளில் ஒன்றைக் கொய்து அவனை நான்முகன் ஆக்கினான் என்றும் வரும். பொதுவாக இதன் கருத்டு என்னவென்றால், சிவஞானம் எவ்வகைஅ மொழியறிவினாலும் வாராது மந்திராயன பயின்றும் ஓங்காரம் உணர்ந்தால் முடியும் என்பதாம்

 

தொடரும்

 

உலகன்

 

 



2013/10/14 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 17, 2013, 10:50:47 PM10/17/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 4 அச்சுதன் வீரட்டானம்

 

 

இது இறைவானின் மூன்றாவது வீரட்டம் ஆகும். மேலே பிரசாபதி வடிவின் பிரம்மனின் வீரட்டானம் பகரப் பட, அடுத்து இந்த பிரமனை தமது உந்திக் கமலத்தில் வைத்து பாற்கடலில் ஐந்தலை நாகமாகிய ஆதிசேடம் மேல் சயனம் கொண்டவாறு அறிதுயில் மகிழும் அச்சுதனாகிய திருமாலின் வீரட்டம் கூறப்படுகின்றது

 

341

 

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்

தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள்

பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற

அங்(கு) அச்சுதனை உதிரங் கொண்டானே

 

பெருமாளாகிய திருமால் உலகெல்லாம் பரந்து விரிந்து அந்தர்கதமாக பூவினுள் மணம் போல் நிறைந்து அந்தரயாமியாக இருந்து  இந்த அகண்ட பேரண்டத்தையே ஆணவ இருளில் மீண்டும் விழுந்து இல்லாது போவதைத் தடுத்து காத்தருள்கின்றான. மேலும் வராக  மூர்த்தம் அல்லது அவதாரம்  போன்றவற்றை  எடுத்து இந்தப் பேரண்டம் நிரந்தரமாக உள்ளதாகத்  தங்கும் படியும் ஆகவே திதி கடவுளாகவும் இருக்கின்றான்

 

இதனால் எல்லா உயிர்கள் மாட்டும் இந்த பூவுலகே இந்தப் ஏரண்டமே நித்டியம் என்றவோர் மயக்க அறிவையும் தோன்றுவித்து அவர்கல் அனைத்தைஅயும் கழன்று கடந்து செல்லாதும் சிறை வைக்கின்றான்

 

இன்னொரு வகையில்  எல்லா உயிர்களையும் தான் காத்தருளும் இந்த பேரண்டத்திலேயே கட்டுண்டு கிடக்குமாறு  மோகினி போன்ற பல வடிவங்களை எடுத்து உயிர்களை இன்ப நாட்டம் செல்வ நாட்டம்  போன்ற உலகியல் நாட்டங்களிலேயே வீழ்ந்து அவர்கள் உலகபோதங்களையே வேட்பவர்களாக எழுந்து அனைத்தையும் விட்டு நீங்கி கழன்று சுத்தமாகி வேண்டப்படுவதெல்லாம் வீடுபேறே அதற்கு உதவும் சிவஞானமே என்பதை அறியாதவர்களாக மயங்கி கிடப்பதனைக் கண்டு தேவர்கள் திருமாலின் போக்குகளை இவ்வாறு அறிந்து வேதனைப் பட்டு சினந்து இறைவனிடம் முறையிடுகின்றனர்

 

இதனைக் கேட்டு இப்பேரண்டத்தை எல்லாம் தோற்றுவித்து நிலைப்பித்து அழிக்க வல்ல இறைவன், தான் எடுத்த படைப்புக் கடவுள் பிரமனின் தலையை தானே முன்னே அறுத்து பின் தான் எடுக்கின்ற காப்புக் கடவுள் திருமால் வடிவத்தையும்  அழித்து உயிர்களை உலக மயக்கிலிருந்து விடுவிக்கின்றான்.

 

இதுவே  அச்சுதன் வீரட்டானம் ஆகும்

 

இதனை இன்னொரு வகையிலும் புரிந்துகொள்ளலாம்

 

எல்லா உயிர்கட்கும் இயல்பாக அமைந்தது ஆறு ஆதார சக்கரங்கள் அல்லது கற்றளிகள் ஆகும். இதில் மூலாதார மூர்த்தியாக விநாயக பெருமானே அமர, அடுத்து வரும் சுவாதிட்டான மூர்த்தியாக் பிரமன் அமர, அடுத்து வரும் மணிபூரக மூர்த்டியாக பல அவதாரங்கள் எடுக்கும் திருமாலே அமர்கின்றான்.

 

இங்கு பிரமனின் கல்வி கேள்வி ஞானமாகிய சாத்த்ர ஞானம் கடந்து அறிதுயில் மகிழும் மணிப்பூரகம் வந்த பிறகு,  கனவுகள் நுதலியப் பார்வையின் பல காட்சிகள் வழியாக ஞானம் வளர்ப்பது நடைபெறும். இங்கு திருமால   தான் எடுக்கும் பல அவதாரங்கள் வழியாக பலவகையான சித்திகளை உயிர்கள் அனுபவித்து ஞானம் வளர்க்குமா அருள்பாலிப்பன் ஆனால் இவை எல்லாம் இந்த உலகையே விட்டுக் கழன்று நுதலியப் பார்வைக்கு மேலாகிய பரப்பார்வை சிவப்பார்வை அதீதப் பார்வை பேரருட் பார்வை காலாதீதப் பார்வை போன்றவற்றை மாகிழத் தரும் அநாகதம் விசுத்தி ஆக்ஞா கற்றளிகளைப் போன்ற இன்னும் மேலான கற்றளிகட்கும் ஆன்மா பெயரும் வகையில் உதவ, திருமாலின் பிடி கொல்லப்பட ஆன்மாக்கள் அறிதுயிலின் மணிபூரகக் கற்றளியிலிருந்து இதுவரை ஈட்டப்பட்ட கன்மங்களை எல்லாம் தீய்த்து இல்லாது போக்கத் தரும் உருத்திரன் உருத்திரி ஆளும் அநாகதம் செல்லுமா  ஊந்தப் படுகின்றார்கள் என்பதாம்

 

இதுவே பிரமனின் வீரட்டம் முடிந்த கையோடு திருமாலின் வீரட்டம் மெய்யாகுவதாக இங்கு கூறப்படுகின்றது.

 

எல்லா சக்கரங்களிலும் பல்வேறு மூர்த்திகளாக மேவி அவற்றை எல்லாம் கடந்து நிற்கின்றான் இறைவன் ஆன்மாக்கள் தன்னை வந்து அடைந்து வீடுபேறு மகிழ இவ்வாறான ஆதார சக்கரங்களில் இருத்தி பின் துமித்து நிவிர்த்தி செய்து அடுத்த கற்றளியில் பிரதிட்டை செய்து ஆன்மாக்கள் உயர்ந்து உயர்ந்து செல்லுமா அம்மையோடு இணைந்து அயராது ஆடிக்கொண்டே இருக்கின்றான் என்றும் அதில் விடாது பல வீரட்டங்களைப் புரிந்து அருள்பாலிக்கின்றான என்றும் இதனால் உணர்த்தப்படுகின்றது

 

தொடரும்

 

உலகன்

 

 



2013/10/16 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 19, 2013, 10:25:08 PM10/19/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 5 சலந்தரன் வீரட்டானம்

 

பொருள் அவ்வளவுத் தெளிவாக அறியமுடியாத ஓர் பாடல் இந்த சலந்தரன் விரட்டானம் ஆகும். உரைகளில் கொடுக்கப் படுள்ள பொருளும் அவ்வலவு சிறப்பாக இல்லை. அதனால் முயன்று எனக்குப்  படும் பொருளையே தந்துள்ளேன்

 

ஒன்று மட்டும் தெளிவு. இது இறைவன் எவ்வாறு உடல் நலம் கருதி பல செய்கின்றான் என்றும் அதில் ஐம்பூதங்களின் ஒன்றாகிய நீர் உடம்பில் அளவிற்கு மீறி பெய்யக் கூடிய சலந்தரன் என்னும் அசுரனை வீழ்த்தி உடல் நலம் பேணுகின்றான் என்பதை விளக்குவதாகும்

 

342

 

எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற

அங்க முதல்வன் அருமறை யோதிபாற்

பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீரமையின்

அங்கு விரற் குறித்து ஆழி செய்தானே

 

இங்கு ‘அங்க முதல்வன்’ என்பது உடம்பில் உள்ள அகக்கரணங்கள் புறக்கரணங்கள் என்றவாறு வரும் அங்கங்களாகிய உடல் உறுப்புக்களின் தலைவனாக, உலகெல்லாம் தானாகி எங்கும் கரந்தும் மறைந்தும் இருந்தவாறு அவற்றை எல்லாம் ஆட்சி செய்யும் இறைவன் ஒருவன் உண்டென அறியும் வகையில் அவன் ஆன்மாவிலும் தக்க நேரத்தில் மறைப்பு நீக்கி எழுந்தருளி தான் உயிரோடு உயிராக கலந்திருப்பதையும் உணர்த்தி அருளுவான். இதனாலேயே எல்லாம் வல்ல இறைவன் தன்னோடு யாண்டும் இருக்கின்றான் என்ற அறிவில், ஞானம் கைவந்த பலர் நிம்மதியாக வாழ்வர்.

 

இந்த இறைவன் அருமறை ஓதியுமாகும்.

 

அப்படி என்றால என்ன?

 

நமது அறிவிற்கும் காட்சிக்கும் எட்டாத எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. சாதாரண ஐம்புலங்கள் வழியாகவே நாம் கண்டுணர்வதற்கு மேலாக நூலியப் பார்வை நுதலியப் பார்வை போன்ற இன்னும் ஆழமான பார்வைகள் வழியாக அறியப்படும் இன்னும் பல உலகியல் சூக்குமங்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் திருமூலரே வேறொரு பாடலில் விளக்கியுள்ளவாறு களிம்பாகிய ஆணவமலத் திரை அறுத்து, ஆழமான பார்வைகளும் கைவந்து அறியுமாறு கண் விழிப்பித்து இதுவரை காணாதிருந்த பலவற்றை கண்டு அறியுமாறும் அதன்வழி நலமே வாழுமாறும் உதவுகின்றான

 

பல கலைத்துறைகள்-- மருத்துவம் இலக்கணம் வானசாத்திரம் வேளாண்மை போன்ற அறிவியல் துறைகள் தோன்றுவதற்குக் காரணமே இறைவனது இத்தகைய ஞானத் திருவிளையாடல்கள் தாம்

 

உலகில் விளங்கும் ஞானங்கள் அனைத்தும் இறைவனது அருட்கொடையே யாக அவன் அருமறை ஓதி ஆகின்றான

 

இனி இங்கு எவ்வாறு இறைவன் நல்ல மருத்துவனாகவும் எழுந்து அருள் புரிகின்றான் என்பதை திருமூலர் சலந்தரன் வீரட்டம் என்ற  புராணக் கருத்தில் விளக்குகின்றார்.

 

இங்கு உடம்பு என்பது சித்த மருத்துவத்தில் வாதம் பித்தம் கபம் என்னும் முப்பொருட்களால இயன்றது என்றும் இம்மூன்றும் அளவோடு சரி சமமாக இருந்தால்தான் உடம்பு நலமே இயங்கும் என்றும், ஒன்று ஏனையவற்றை அளவில் மீறினால ஓர் நோய் வந்து தாக்குமென்றும் கூறுவர்.

 

இங்கு வாதம் என்பது வளி எனும் நரம்பு வழி உடலெங்கும் பரவும் மின்சார சத்தி. பித்தம் என்பது பல்வேறு நீர் சுரப்பிகளினால் உடம்பில் ஓடித் திரியும் பல சுரப்புக்கள் ஆகும். காட்டாக கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் போன்றவை கபம் அல்லது அய்யம் என்றால் நீரினால் ஆகிய பல திராவகங்கள் ஆகும்

 

இவை அளவோடு இருந்தால்தான் உடம்பும் அங்குள்ள எல்லா அங்கங்களும் நலமே செயல்படும், இந்த அளவும் சமனும் நீங்கினால் பலவேறு நோய்கள் வந்து தாக்கும்

 

இங்கு சலந்தரன் என்பது உடம்பில் கபத்தின் அதாவது நீரின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஓர் அசுரன் ஆகும். இது பல வகையான நீர் தொடர்பான வியாதிகளை கொண்டு வரும் கிருமிகள் போன்றவையாகவும் இருக்கலாம்

 

இங்கு ஆழி செய்தலாவது சக்கரமாகிய ஆழி வீசி சிரச்சேதம் செய்வதாகும்

 

சிரச்சேதம் செய்தல் ஓர் திருவிளையாடல், ஒருவனை ஆழியாகிய சக்கரம் வீசியோ அல்லது வேறு வகையிலோ சிரச் சேதம் செய்தால் அவனது வீரம் இல்லாதுபோய் அவனும்  வலுவிழந்து வீழ்வான்

 

அதுதான் இங்கு நடக்கின்றது, உயிர்கள் அனைத்தும் பெரும்பாலும் நலமேதான்  வாழ்கின்றனர். ஆனால் சில சமயங்களில் உடலை பல வகையான நோய்கள் பற்றி அதனை வீழ்த்தி செயல் இழக்கச் செய்வதொடு மரணமடையவும் செய்யலாம். இறைவன் பல மருத்துவக் கலைகளை உணர்த்தி மருந்துகள் போன்ற பல உபாயங்கள் வழி உயிர்கள் நலம் பெற்று இனிதே நெடுங்காலம் வாழ உதவுகின்றான.

 

ஆனால் சில சமய்ங்களில் இந்த வாதம் பித்தம் கபம் என்பவற்றில் அளவு குறைவதும் கூடுவதுமாக இருந்தால்,  எல்லா அங்க உறுப்புகட்கும் தலைவனாக இருக்கும் இறைவன் அகத்திருந்து தக்கது செய்து ஆன்மாக்கள் இழந்த உடல் நலத்தை மீண்டும் பெற்று நலமே வாழ அருள்பாலிப்பான் என்பதே இப்பாடலின் கருத்து எனத் தெரிகின்றது

 

தொடரும்

 

உலகன்

 

 

 



2013/10/18 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 20, 2013, 4:23:44 AM10/20/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா சுபா

மிக்க நன்றி, மாணவர்கள் அறிய வந்தால் தமிழர்கள் வளர்த்த பல நூலிய அறிவியல் துறைகளையும் அறிய வருவர்.

இந்தத்  தொடர் திருமூலர் எவ்வாறு Hermeneutic Semiotics  எனப்படும் ஓர் நூலியல் அறிவியல் துறையை வளர்த்தார் என்பதை விளக்கும்.  ஞானக் கனவு அலசலோடும் தொடர்புடையது.

அங்குமிங்குமாக எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. அவற்றைத் த்ருத்தி எனது வலைப்பக்கத்திலும் சேர்க்க விருக்கின்றேன்

உலகன்




2013/10/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பயனுள்ள ஒரு தொடர். என் பணிகளால் உடன் வாசிக்க இயலவில்லை. ஸ்டார் போட்டு வைத்து இன்று தான் வாசிக்க ஆரம்பித்தேன். 

முதல் 2 செய்யுளுக்குமான விளக்கம் எளிமையாக நன்றாக உள்ளது. (ஏனையவை இன்னும் வாசிக்கவில்லை)மேலும் பிறரும் தங்கள் கருத்துக்களை வழங்கினால் இச்சிந்தனை சிறப்பாக அமையும். 
த.ம.அ வின் மாணவர் மரபு மையத்தில் பாடத்திட்டத்திற்கு இதனை நான் அறிமுகப்படுத்தி வைக்கின்றேன். எஸ்.எம்.எஸ் கல்லூரியில் இதனை மாணவர் தொடர்பாளருக்கு ஒரு மடல் போடுகின்றேன். 

சுபா


2013/10/12 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 21, 2013, 10:26:36 PM10/21/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 6  முப்புர வீரட்டம்

 

இதன் சிறப்பினையும் முக்கியத்துவத்தையும் கருதி யான் இதனை மீண்டும் கூறக் கடமைப் பட்டுள்ளேன். சைவ சித்தாந்தத்தின் தனிச் சிறப்பு அதன் அநாதிபொருளியல்தான். வேதாந்தச் சிந்தனைகள் மிகப் பிழையான ‘பிரமம் ஒன்றே பொருள்’ என்று ஏகாத்துவதம் பகர்ந்து, அதனால் பரப்பிரமனைத் தவிற உலகம் ஆன்மா என்பதெல்லாம் பொய்யே கற்பிதமே அதியாச ஆரோபிதங்களே என்று கூறி நூலிய அறிவியல் துறைகள் வளர்வதற்கு ஓர்  தடையே விதித்துவிட்டது. இதனால் இந்த ஏகாத்துவதை கடுமையாக கண்டித்து சித்தாந்த மரபே பல அறிவியல் கலைகளை வளர்த்து மக்கள் நலமே வாழ உதவியும் உள்ளது. இசை ஓவியம் பரத நாட்டியம் போன்ற கலைகளும் பலவகையான சிவயோகங்களும் மற்றும் சடங்குகள் வழி மனப்பிணி உடற்பிணி தீர்த்தல் போன்ற கலைகளும் அறிவியல் துறைகளாகவே வளர்ந்துள்ளன

 

அதற்கு வழிகாட்டியாக இருந்த முப்பொருள் உண்மையின் அநாதிப்பொருளியல் சார்ந்த புராணவியல் எவ்வாறு ஓர் நூலியல் அறிவியல் துறையாக அதுவும் குறிப்பாக உள்ளுறைப் பொருளியல் ( Hermeneutic Semiotics) அமைகின்ம்றது என்பதை விளக்குவதாக கீழ் வரும் அழகிய வரலாற்று சிறப்பு மிக்க பாடல் அமைகின்றது

 

 

 

343

 

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்

முப்புர மாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யார் அறிவாரே

 

இங்கு முதல் வரியில் வரும் ‘அப்பு அணி செஞ்சடை’ மிகவும் பொருள் உள்ளவை. உருவத் திருமேனியாக ஓர் மூர்த்தி வடிவில் மக்களுகுத் தனை காட்டியருளும் போது, தனைப் பறியும் ஓரளவு உணர்த்தும் வகையிலேயே மூர்த்தங்கள் ஆகின்றன

 

இங்கு அப்பு என்றால் நீர் எனினும் உணர்த்தப்படுவதோ ஆகாய கங்கை ஆகும். பிரபஞ்சமெல்லாம் உள்ளும் புறம்பும் நிறைந்து உயிர்கள் தோன்றுதற்கும் வாழ்வதற்கும் முக்கிய மூலப் பொருளாக இருப்பது நீர் தானே? அதனைத் தனது கருவிகளுள் ஒன்றாக இறைவன் வைத்திருப்பதை இம்மூர்த்தம் காட்டுகின்றது.

 

விரிந்த செஞ்சடை இறைவன் இல்லாத இடம் இல்லை என்பதை உணர்த்தி அவன் அனைத்தையும் ஊடுறுவி நிறைந்து நிற்கின்றான என்பதைக் காட்டுவதோடு, செந்தீ வண்ணம் அவன் எங்கு தீய சத்திகள் தோன்றினாலும் அவற்றை தயங்காது அழித்து உயிர்களை இரட்சிப்பான் என்றும் காட்டுகின்றது.

 

‘ஆதி புராதனன்’ எனும் கிளவி இறைவன் ஒருவன் தான் ‘முன்னை பழம்பொருட்கும் முன்னை பழம் பொருள்’ என்றவாறு ‘புராதனன்’ என்ற சொல் காட்ட, ‘ஆதி’  என்பது ‘ஆதிபிரான்’ எனும் சொல்லில்,வருவதுபோல, தான் அனைத்திற்கும் ஆதியாய் நிற்க, தனக்கு யாரும் ஆதியாய் இல்லாத தனிச் சிறப்பின், ‘அநாதி’ எனும் கருத்ததுவாகும்.

 

இனி ஆகாய கங்கையோடு உடன் வரும் சிரசில் சூடப்படும் இளம்பிறையையும் கழுத்தில் அணியப்படும் குண்டலினிப் பாம்பையும் நாம் உடன் கொள்ளவேண்டும்

 

இவை அனைத்தும் இறைவன் தான் இவ்வாறு எடுக்கின்ற மூர்தத்தின் வழி தன்னையேத் தான் மக்களுக்கு உணர்த்தும் ஓர் ஞானபோதனையாகும். இவற்றின் உள்ளுறைப் பொருளை புரிந்துகொண்டால், இறைவனை ஒருவாறு புரிந்துகொண்டதாகி விடும்

 

இனி இப்படிப்பட்ட இறைவன் செப்புக் கோட்டை இரும்புகோட்டை வெள்ளிக் கோட்டை எனும் மூன்று கோட்டைகளில் மக்கள் தம்மை அடைத்துக் கொண்டு சுகமாக இருக்க, அதனைக் கண்டு இறைவன் மேலே விளக்கப்பட்ட வடிவில், இந்த முன்று கோட்டைகளள அல்லது முப்புரங்களை எரித்து சாம்பலாக்கி அடைப்பட்டு கிடந்தோரை விடுவித்தான் என்றவாறு ஓர் அரசன் அந்நியர்களின் கோட்டைகளை படையெடுத்துக் தாக்கி அழித்தான் என்பதுபோல, ஓர் கதையாக பேசித் திரிவர்.

 

இப்படி மேற்கொண்டு ஆழஞ் செல்லாது உள்ளுறைப் பொருள் தான் யாதென்று விசாரிக்காது ஓர் பேதைபோல் மகிழும் மாந்தர்கள் மூடர்கள் ஆகும் என்று திருமூலர் கடுமையாகச் சாடுகின்றார்!

 

ஓர் அறிவியல் துறையின் நுட்பத்தையும் ஆழத்தையும் உணராது இதனை ஓர் கதைபோல் பேசி காலட்சேபம் செய்வோரைக் கண்டு திருமூலர் சினந்தெழுவதில் வியப்பில்லை,

 

ஆனால் யார் அநாதிப் பொருளியலை திறன்பட பிழையற அறிந்து அங்கு பதியினைப் போல் பசு பாசம் அநாதி என்பதையும் உணர்ந்து, அந்த பாசமும் ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களாக திகழும் என்பதை அறியாதவர்கள் இப்படிப்பட்ட மூடர்கள் என்றும் திருமுலர் சாடுவதாகவும் கொள்ளலாம்

 

ஆனால் இந்த முப்புரங்கள் தாம் என்ன?

 

முதலில் சுத்த மாயையால் வரும் கற்பணைகள் அசுத்த மாயையால் வரும் காம இன்பம் போன்ற உலகியல் இன்பங்கள். இவற்றை அளவோடு அனுபவிப்பதுப் போக்கி ஓர் போதைப் பித்தனைப்போல வெறிபிடித்து அதுவே இன்பம் பிறவெல்லாம் அல்ல என்று நினைக்குத் தூண்டுவதே இந்த மாயாபுரி எனும் கோட்டையாகும்

 

அடுத்ததாக வருவதே கன்மக் கோட்டையாகும். செய்யக் கூடிய வினைகளில் தத்துவக் கழற்சி தரும் வினைகளையும் பக்குவ முதிர்ச்சித் தரும் ஊழ்ச்சி வினைகள் போன்றவற்றையும் செய்யாது மீண்டும் மீண்டும் பிறந்து உழலச் செய்யும் உழற்சி வினைகளையே செய்ய வற்புறுத்துவது இந்த கன்மக் கோட்டை யாகும். தன்னால் ஒன்றும் முடியாது நடப்பதெல்லாம் முற்செய் வினையின் பலன்கள் என்றவாறு துணிந்து கழற்சி வினைகளைச் செய்யாது  முடங்குதலைத் தருவது இந்த கன்மக் கோட்டை யாகும்

 

இனி ஆணவக் கோட்டை யாவது, அணுத்துவப் பட்டு தன் அறிவு சிற்றறிவே என்பதை உடன்பட மறுத்து தான் எல்லாம் அறிந்தவன் போல இறுமாந்து புதியதாக கற்று மேம்பட மறுத்து, தான் பிறந்த சம்பிரதாயமே சமயமே சிறப்பானது குறையற்றது என்று செருக்காடித் திரிய வைப்பதே ஆணவக் கோட்டை யாகும்

 

இவற்றை எரித்து சாம்பலாக்குவதே முப்புரம் செற்றலாகும்.

 

உலக இன்பங்களில் மயங்கிக் கிடப்போனுக்கு அதனால் வரக்கூடிய கடுமையான நோய்களைத் தந்து அவதிப்பட வைப்பது போன்றவையே இந்த மாயாபுரியை வெறுக்கச் செய்து இல்லாது போக்குவதாகும்.

 

இதேப் போன்றுதான் கன்மக் கோட்டை, படைப்பாற்றல் திறன் இன்றி செய்ததையே மீண்டும் மீண்டும் செய்து புதுமை படைக்காது போக, வறுமை போன்றவையும் பிறருக்கு அடிமையாதலும் வர, இந்த கன்மக் கோட்டையும் தகர்க்கப்படுகின்றது,

 

ஆணவக் கோட்டை மிகவும் வலுவானது, மானிடர்கள் பலர் இந்த செருக்காடியே திரிவர், இப்படிப்பட்டோர் முடிவில் மக்களது எதிர்ப்பிற்கும் வெறுப்பிற்கும் ஆளாகி மன அமைதியெல்லாம் இழந்து தனிமை நோயில் வாடுவர். பல வகையான மனப் பிணிகளும் வர அவற்றைச் சார்ந்தெழு உடற்பிணிகளும் வர, வேதனைக்கு மேல் வேதனை உலப்பர். முடிவில் ஞானம் பிறக்க அந்த ஆணவக் கோட்டையிலிருந்து தன்னை விடுவித்து அடங்கி வாழ்வும் தொடங்குவர்.

 

இந்த முப்புரம் எரித்தல் ஓர் கோயிலிலோ அல்லது ஓர் திருதலத்திலோ நிகழ்வது அல்ல, என்றும்  யாண்டும் எல்லார் உள்ளத்திலும் நடந்து கொண்டே இருப்பது.

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 

 

 



2013/10/20 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 25, 2013, 4:22:55 AM10/25/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 7  தேவர்கள் வீரட்டம்

 

வேதீயத்திற்கு அடிப்படையாக இருக்கின்ற அக்நி வழிபாடு அல்லது எரி ஓம்பல், சுமேருத் தமிழர்களின் நன்கொடையாகும். மிக ஆழமான வான சாத்திர அறிவின் வழி அண்டத்தில் ஆணவ மலம் செறிந்து யாதும் தோன்றவொட்டாது தடுத்து நிற்க, அதனை கிழித்துக்கொண்டு ஒளி பாய்ச்சி பொருள் தோன்ற காரணமாக இருந்தது இந்த  ஆதுமூலஅக்நிதான். இது கீழே வரும்வரியில் தெளிவு:

 

சூருப்பக்கின் நெறியின் முதல் வரி:

 

1. [u]ri-a u sud-ra ri-a ( In those distant days, in those far remote days)

எரிய சூத்திர எரிய ( ஊவாகிய ஒளி பரப்பு எரி, ஒளியாகிய தொல் எரி)

 

இங்கு சூத்திர என்றால் மிகப் பழமையான அதாவது தொன்மையான என்று பொருள் படும் பரந்திருக்கின் துன்னிருளைக் கடியும் வகையைல் ஒளி பரப்பும் ஆதி நெருப்பு அல்லது அக்நி என்பதே இங்கு பகரப்படும் நுட்பம் ஆகும்.  இக்கருத்து கிறித்துவம் இசுலாம் போன்ற மதங்களுக்கும் பரவியதோடு வேதியத்திற்கு அடிப்படியாக அமைந்து விட்டது. சைவம் இதனை இன்னும் போற்றியும் வருகின்றது. அண்ணாமலை தீபம் போன்ற சடங்குகள் வழியாக மிகத் தொன்மையான இப்பிரபஞ்சவியல் இன்றும் மறவாது போற்றப்பட்டு வருகின்றது,

 

இதனால் தான் நடராச பெருமானின் ஓர் கரத்தில் அவன் அக்நி ஏந்தியவனாகவும் காட்டபப்டுகின்றான்.

 

ஆயினும் இந்த அக்நி வழிபாட்டிலும்  ஓர் வீரட்டதைக் காண்கின்றார் நம் திருமூலர். அது கீழ் வரும் பாட்டில் நலமே வெளிப்ப்டுகின்றது

 

344

 

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்

அத்தி உரியான் ஆவது அறிகிலர்

சத்தி கருதியதாம் பல தேவரும்

அத்தீயின் உள்ளெழுந்து அன்று கொலையே

 

முத்தீயாவன காருகபத்தியம் ஆசுவனீயம் தட்சிணாக்கநி எனும் மூன்று வகைத் தீயாக சுடரும் பிரபஞ்சத் தீ,  வேள்விக் குண்டத்தில் பலவேறு பொருள்களை எரித்து செய்யும் வேள்வியுள் வெளிப்படுமாறு வரும் சடங்காகும் இனி ‘அத்தி உரியான்’ என்பது ஓர் புராணக் கதை தழுவிய கருத்தாகும். ஆணவ மலமே பிரஞ்பத்தையெல்லாம் ஊடுறுவி அங்கு எப்பொருளும் விளங்காது துன்னிருளே விளங்குமாச் செய்யும் ஆணவ வல்லிருள் ஓர் கரிய யானை வடிவில் வந்து தாக்க பரசிவன் அதனோடு போர் புரிந்து அதனை வீழ்த்தி அதன் தோலை உரித்து தனது ஆடையாக இடுப்பில் அணிந்தான் என்பது கதை.

 

உண்மையைல் அந்த வல்லிய இருளைத் தவிர்த்து வேறொன்ற்யும் தராத ஆணவ மலத்தை தன் வீறிய எரி ஒளியால கிழித்து அழிப்பதே இங்கு யானையை உரிப்பதாக குறிக்கப்படுகின்றது.

 

ஆனால் இந்தத் தீ வண்ணாகிய அழல் வண்ணனாகிய செந்தீயே தானாக நிற்கும் சிவபெருமான், இன்னொரு வீரட்டமும் புரிகின்றான

 

இந்த பிரபஞ்சத்தை நிறைத்து பல தேவர்கள் நிறைந்திருக்கின்றார்கள்,  ஒவ்வொரு தேவரும் தானே பிற தேவர்களை விட அதிக சத்தியுள்ல தெய்வமாக விளங்க வேண்டும் என்ற ஆவாவில் திரிகின்றனர்.

 

இத்தேவர்கள் சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்கள் என்றவாறு கோடிக் கணக்கில் அண்டமெல்லாம் நிறைந்து இறைவனின் பல திருவிளையாடல்கட்கு கருவியாக விளங்குகின்றனர்.

 

உண்மையில் இத்தேவர்கள் எல்லாம் இறைவனே உருவாக்கி தனித் தனி தொழிகள செய்யம் அதிகாரமும் வழங்கியுள்ள மூர்த்தங்கள் ஆகும். இவை தனித்த ஆன்மக்கள் போல செயல்பட்டலும் உணமையில் அவை அநாதிப் பொருட்கள் அல்ல, இறைவனே எடுக்கின்ற பலவேறு வேடங்களே யாகும்

 

ஆன்மாக்களை படிப்படியாக சோபான முறையில் ஞானம் கொளுத்தி முடிவில் சிவஞானம் மகிழச் செய்வதே இறைவனது திருவுள்ளம்.

 

ஆனால் இடையே ஓவ்வொரு தெய்வ வடிவமும் ஆன்மாக்களை ஆட்கொண்டு அவர்களது சிந்தனையை வலித்து தன்னுள் இருக்கும் தெய்வத்தையே வணங்கச் செய்து பிற தெய்வங்களை இகழச் செய்யும்  மதவெறி சமய வெறி போன்ற பிழைகளும் நடக்கும்

 

அதுபொழுது இந்த அக்நி காரியத்தில் வெளிப்படு அக்நி வடிவ இறைவன், இந்த மூர்த்தங்கள அனைத்தையும் கொன்று இல்லாது போக்கி தானே தன்னை அருட்பிரகாச ஒளி வடிவில் காட்டி அருளி சமயப் பிணக்குகள் அனைத்தையும் போக்கி அருளுவான்

 

தெயவ வடிவங்கள் அனைத்தும் அழித்து போக்கப்படுவதால், இதுவும் வீரட்டம் ஆகின்றது.

 

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 



2013/10/22 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 27, 2013, 3:18:15 AM10/27/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 8: காலன் வீரட்டம் ( மரணத்தை வெல்வது)

 

 

சுமேரிய சொர்க்கபுரி பாடல்( Paradise Hymn)  தொடங்கி உடல் நோயின்றியும் அகால மரணம் தவிர்த்து வாழ்வதுப் பற்றிய சித்தரீயக் கருத்துக்கள் சைவ சமயத்தோடு இணைந்தே வந்துள்ளன. என்றும் பதினாறாய் வாழ்வது சைவத்தின் ஓர் அடிப்படைக் குறிகோள் ஆகும். மரணம் தவிர்க்க முடியாது என்ற போதிலும், அகால மரணம் தவிர்க்கப்படலாம் என்பதொடு இறையருளால் தவிர்க்கவும் முடியும் என்பதே கீழ் வரும் அழகியப் பாட்டின் பொருள் ஆகும். உலகில் வாழும் வரை நலமே நெடுங்காலம் வாழ்ந்து சிவஞானம் வளர்த்து விடுபேறு அடைய முயல வேண்டும் என்பதே வாழ்க்கை என்பதாக இங்கு திருமூலர் வாழ்க்கைக்கு நல்லவோர் விளக்கம் தருகின்றார்

 

345

 

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை

மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்

காலுற்றுக் காலனைக் காய்ந்து அங்கி யோகமாய்

ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே

 

இங்கு மிகவும் தொன்மையான ஆறு ஆதாரச் சக்கரங்கள் வழியாக கற்றளி பெயர்ச்சியும் அதன் வழி ஆயிரவிதழ் தாமரைத் தலம் அடைய அதனால் அகால மரணம் தவிர்த்தலும் மெய்யாகுவது விளக்கப்படுகின்றது.

 

கற்றளி என்றால் இங்கு பல வகையான ஞான ஊட்டங்கட்கு காரணமாக இருக்கும் ஆதாசத் தலங்கள் அல்லது சக்கரங்கள்

 

மூலத் துவாரம் ஆவது மூலாதாரம் ஆகும் இது காம உறுப்புகட்கு  சற்று கீழே இருப்பதாக சித்தர்கள் கூறுவர். இங்கு தான் இறைவன் உடம்பில் நுழைந்து காமக் குண்டலினியைப் பாய்ச்சி அறிவு நலமே செயல்ப்படத் தரும் ஞான சத்தியை ஊட்டுவான்.  ஊட்டப்படும் காமக் குண்டலினி இச்சா சத்தியாக வந்து மடைமாற்றம் பெற்று  கிரியா சத்தி ஞான சத்தி என்றாகி ஆன்மா பல காரியங்களைச் செய்ய உதவும்

 

இனி மேலது துவாரமாவது உச்சிக் கமலத் தலம் என்பர். ஓவ்வொரு தலத்திலும் ஓர் தாமரை விளங்கும்-- நான்கு இதழ் தொடங்கி பல்கிப் பல்கி முடிவில் ஆக்ஞா கற்றளியையும்யும் கடந்துச் செல்ல ஆயிரவிதழ் தாமரைத் தலம் வருகின்றது. ஆன்மாவின் ஞான உழைப்புக்கள் அனைத்தும் இந்த உச்சிக் கமலத்தலம் அடையும் நோக்கொடு இயங்க வேண்டும்  இது உண்மை எனும் உணர்வையே அளவையாக் கொண்டு சிவஞானம் வளர்த்து வளர்த்து  மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் என்றெல்லாம் உயர்ந்து கடந்து உச்சிக் கமலத்தலம் அடைவதே சைவ அல்லது உண்மையான சிவயோக வாழ்க்கை யாகும்

 

இனி ‘ஞாலக கடவூர்” என்பதும் இதுவெ யாகும். மூலாதாரம் தொடங்கி ஆக்ஞா சக்கரம் வரை உலகியல் வாழ்க்கையேத் தொடர,  உலகியல் ஊர்களிலேயே வாழ்க்கை அமைய, இதனைக் கடந்த ஆயிரவிதழ் தாமரைத் தலம் என்பது ஞாலக் கடவூர், ஞாலமாகிய இந்த உலகியல் வாழ்கையைக் கடந்து சேர் ஊர் ஆகின்றது

 

இப்படிப்பட்ட குண்டலினி யோகப் பயிற்சியில் ஆகக்கூடிய கற்றளிப் பெயர்ச்சியில் ‘முன் கால்’ என்பது ஆன்மாவை முன்னே முன்னே செல்லுமாக ஊக்கி ஊக்கி மேலைத் துவாரம் சென்றடைய உதவும் வாயு அல்லது மிக ஆழமான மின்காந்த சத்தி யாகும். சுழுமுனை நாடியைத் தாக்கி ஆழமான சிந்தனையை ஆன்மா மகிழ் உதவுவது இதுவே யாகும்

 

இந்த மின் காந்த சத்தி காற்று போல் இருப்பதால் வளி என்றும் வாயு என்றும் கூறப்படும்

 

இது உதவ ஆன்மா இந்த உச்சிக் கமலத் தலம் அடைந்ததும் ஆணவ மலமே இல்லாத ஒர் தலத்தை அடைய ஆணவமலத்தால் ஆககூடிய மரணத்தை ஆன்மா தவிர்க்கின்றது, மரணமில்லா பெருவாழ்வு அடைகின்றது.

 

இதனால் ஆன்மாவிற்கு மரணம் இல்லை என்று பொருள் படாது. ஆணவ மலத்டின் மிகையால் உடல் சீரழிந்து நோய் நொடியின் வரும் வேதனை மரணம் தவிர்க்கப்பட, இறையருளாலேயே மெய்யாகும் இதமான மரணம் அமையும் என்பதாம்

 

அதுவரை உச்சிக் கமலத் தலத்தில் நலமே மிக சுத்தமான ஆணவ மலமே இல்லாது தூய உடலொடு நோய்நொடிகளின்றி நலமே வாழ்ந்து அங்கி யோகமே செய்த வண்ணம் வாழும் என்பதாம்

 

அங்கி யோகம் என்பது பிரமரந்திரத்தில் இறைவன் இரவிமதியாய் அருட்பெருஞ்சோதியாய் தோன்றுவதை ஆழ சிந்தித்து சிந்தித்து ஆணவ மலம் அறவே மீண்டும் தாக்காது காத்து வாழ்வதாகும்

 

இங்கு ஆணவ மலத்டல் வரக்குடிய உடற்சீரழிவின் மரணம் வெல்லப்படுவதால் இது காலன் வீரட்டம் ஆகின்றது

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 



2013/10/25 K. Loganathan <k.ula...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Oct 27, 2013, 4:33:28 AM10/27/13
to vall...@googlegroups.com, mintamil, tolkaa...@egroups.com
திரு.உலகன்,

தடித்த எழுத்துக்களில் பதிவு செய்யாமல், சாதாரணமான எழுத்துக்களில் பதிவு செய்தால், அதுவும் கருப்பு நிறத்தில், படிப்பது எளிது.

அன்புடன்,
இன்னம்பூரான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Oct 27, 2013, 4:38:06 AM10/27/13
to vall...@googlegroups.com
இ. அவர்களே

சரி அப்படியே செய்கின்றேன். எனக்கு கண்பார்வை சிறிது தகராறு,. தடித்த எழுத்தில் வைத்துப் பார்த்தால்தான் நன்றாக இருக்கின்றது. அதனால்தான் இப்படி

உலகன்


2013/10/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Oct 27, 2013, 4:41:04 AM10/27/13
to vall...@googlegroups.com
நன்றி. இங்கும் அந்த பிரச்னை தான். தடித்த எழுத்து காலாவட்டத்தில் கண்ணில் வலி தரும். 'நார்மல்' எழுத்தில் எழுதி பெரிது செய்து படித்துப்பாருங்கள். அது உதவலாம்.

K. Loganathan

unread,
Oct 29, 2013, 3:39:56 AM10/29/13
to vall...@googlegroups.com

இடுகை 9: கழிகாம வீரட்டம்

 

எல்லா உயிர்கள் அகத்தும் இருக்கும் காமவேட்கை இருமுனைக் கூர்வாள் ஆகும். ஒருமுனை கீழே தள்ளும் இன்னொரு முனை மேலே மேலே கொண்டு செல்லும். காமத்தை மேலே உய்விக்கும் சத்தியாக மடைமாற்றம் செய்வதே இங்கு ஓர் விரட்டமாக திருமூலரால் பாடப்படுகின்றது. மிகப் பொல்லாத விஷப் பாம்பாகிய காமத்தை கண்டித்து அன்பின் வழி ஆகும் இன்பமாக உடலையும் உள்ளத்தையும் ஓம்பத்தரும் நல் அமுதமாக மாற்றுவதே இந்த வீரட்டம் ஆகும். ‘அடக்கு அடக்கு என்பர் அறிவிலார், அஞ்சும் அடக்கிய அமரரும் இல்லை” என்று பாடியவரும், பல வகையான யோகங்களில் காமக் கலவியின் பரியங்க யோகத்தையும் பாடியவர்தானே நம் திருமூலர்?

 

சாதாரண சந்நியாச வேட ஞானிகள் அஞ்சி தப்பி ஓட முயலும் இந்த பொல்லாத காமத்தை நல்வழிப் படுத்தும் இறைவனது வீரட்டானத்தை ஆழமான உளவியல் நுட்பத்தோடு திருமூலர் விளக்குகின்றார்.

 

346

இருந்த மனத்தை இசைய இருத்தி

பொருந்தி யிலிங்க வழியது போக்கி

திருந்திய காமன் செயல் அழித்து அங்கண்

அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே

 

இங்கு இலிங்க வழியது என்பது ஆணுறுப்பின் காமவேட்கைக்கு அடிமையாகி அன்பின் வழி உள்ளத்துப் புணர்ச்சி முன்னே வரும் உண்மையான காதலின் மங்கையரைப் புணர்ந்து பரியங்க யோகம் செய்து சுக்கில நீக்கம் மகிழ்வது போக்கி பிழையான பல்வேறு வழிகளில் சுக்கில நீக்கம் மகிழ்வதாகும். தொல்காப்பியத்தில் பகரப்படும் ஒருதலைக் காமத்து கைக்கிளை ஒவ்வாக் காமத்து பெருந்திணை போன்ற தகாத காமவேட்கைகள் இங்கு அடங்கும், எந்தக் காமத்தூய்ப்பு ஓர் ஆண் பெண்ணிடையே அன்பின் வழி பிறவாதுபோகின்றதோ அது பிழையான காம வழி ஆகும். இது ஆண்கள் மேல் ஏற்றிக் கூறப்பட்டாலும்  பெண்களுக்கும் உரியதே

 

இத்தகையக் காமங்கள் பல்வேறு உடற்பிணிகட்கும் உளப்பிணிகட்கும் காரணமாக அமைந்து அகால மரணத்திற்கே இட்டுச்செலும் பண்பினதும் ஆகும்

 

தகாத காமவுறவுகளும் எண்ணங்களும் அகத்தே பல குற்றமனப்பான்மைகளை வளர்த்துவிட, எழும் அகப்போராட்டத்தில் அத்தகையச் சிந்தனைகள் ஆழப் புதைக்கப்பட அவையே மனோவியாதிகளாக வெளிப்படுகின்றன என்று பொதுவாக Freud  அவர்கள் கூறியுள்ளார்.

 

தமிழர்களும் திருமூலர் காலத்தில் இதனை அறிந்திருக்க வேண்டும்

 

ஆனால் Freud  போன்றோரும் அவரைப் பின்பற்றும் மனொமருத்துவர்களும் பரிந்துரைக்கா ஓர் மருத்துவத்தை நம் திருமூலர் பரிந்துரைக்கின்றார் இங்கு.

 

இந்த காம விகாரங்களைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி இறைவனோடு இசைதலே யாகும் என்கின்றார். யாதாவதோர் தெய்வத்துடன் பொருந்தி ஒன்றித்து நிற்க அகத்தே நல்லெண்ணங்களே மலர பரத்தையை நாடல், வற்புற்த்தி கற்பழித்து காமம் மகிழ்தல் ஓரினச் சேர்கை போன்ற பிழையான வழிகள் அகதே தோன்றவொட்டாது தவிர்க்கப்படும்  தோன்றனாலும் அவை கண்டிக்கப்டும் ஓர் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படும் என்கின்றார்

 

எப்படி இது?

 

எங்கே ஆணவமலம் செறிந்து உள்ளத்தை அணுத்துவப் படுத்துகின்றதோ அதுபொழுது கீழான எண்ணங்களே உதிக்க, இப்படிப்பட அறத்திற்குப் புறம்பான, அன்பிற்கு புறம்பான நீதி நியாயம் போன்ற எண்ணங்கட்குப் புறம்பான வேட்கைகள் வெடிக்க அவற்றை எவ்வாற்றினும் அடைந்து மகிழ வேண்டும் என்ற வெறியில் கற்பழிப்பு போன்ற தீய கழிகாமச் செயல்கள் மெய்யாகின்றன

 

இதற்கு மருந்து யாதாவதோர் தெய்வ வடிவத்தை அகத்தே பிரதிட்டை செய்வதுதான். இறைவனை மனமாரத் தொழுதால் தக்க மூர்த்தத்தை அகத்தே பதிவித்து கழிகாமன் செயலை அழித்து உள்ளத்தை திருத்தி செம்மை செய்வான்

 

இதுவே அருந்தவ யோகம் என்றும் திருகொறுக்கை என்னும் தலத்து வீரட்டானமாக காட்டி நிற்கின்றான் என்கின்றார் திருமூலர். இங்கு கழிகாம வெறியை வழிசெய்யும் அருந்தவ யோகியாக தன்னைக் காட்டி அருளி அத்தல புராணத்தில் இடம் பெற்றான் என்பதாகவும்ம் இருக்கலாம்.

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 



2013/10/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 29, 2013, 3:40:47 AM10/29/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 9: கழிகாம வீரட்டம்

 

எல்லா உயிர்கள் அகத்தும் இருக்கும் காமவேட்கை இருமுனைக் கூர்வாள் ஆகும். ஒருமுனை கீழே தள்ளும் இன்னொரு முனை மேலே மேலே கொண்டு செல்லும். காமத்தை மேலே உய்விக்கும் சத்தியாக மடைமாற்றம் செய்வதே இங்கு ஓர் விரட்டமாக திருமூலரால் பாடப்படுகின்றது. மிகப் பொல்லாத விஷப் பாம்பாகிய காமத்தை கண்டித்து அன்பின் வழி ஆகும் இன்பமாக உடலையும் உள்ளத்தையும் ஓம்பத்தரும் நல் அமுதமாக மாற்றுவதே இந்த வீரட்டம் ஆகும். ‘அடக்கு அடக்கு என்பர் அறிவிலார், அஞ்சும் அடக்கிய அமரரும் இல்லை” என்று பாடியவரும், பல வகையான யோகங்களில் காமக் கலவியின் பரியங்க யோகத்தையும் பாடியவர்தானே நம் திருமூலர்?

 

சாதாரண சந்நியாச வேட ஞானிகள் அஞ்சி தப்பி ஓட முயலும் இந்த பொல்லாத காமத்தை நல்வழிப் படுத்தும் இறைவனது வீரட்டானத்தை ஆழமான உளவியல் நுட்பத்தோடு திருமூலர் விளக்குகின்றார்.

 

346

இருந்த மனத்தை இசைய இருத்தி

பொருந்தி யிலிங்க வழியது போக்கி

திருந்திய காமன் செயல் அழித்து அங்கண்

அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே

 

இங்கு இலிங்க வழியது என்பது ஆணுறுப்பின் காமவேட்கைக்கு அடிமையாகி அன்பின் வழி உள்ளத்துப் புணர்ச்சி முன்னே வரும் உண்மையான காதலின் மங்கையரைப் புணர்ந்து பரியங்க யோகம் செய்து சுக்கில நீக்கம் மகிழ்வது போக்கி பிழையான பல்வேறு வழிகளில் சுக்கில நீக்கம் மகிழ்வதாகும். தொல்காப்பியத்தில் பகரப்படும் ஒருதலைக் காமத்து கைக்கிளை ஒவ்வாக் காமத்து பெருந்திணை போன்ற தகாத காமவேட்கைகள் இங்கு அடங்கும், எந்தக் காமத்தூய்ப்பு ஓர் ஆண் பெண்ணிடையே அன்பின் வழி பிறவாதுபோகின்றதோ அது பிழையான காம வழி ஆகும். இது ஆண்கள் மேல் ஏற்றிக் கூறப்பட்டாலும்  பெண்களுக்கும் உரியதே

 

இத்தகையக் காமங்கள் பல்வேறு உடற்பிணிகட்கும் உளப்பிணிகட்கும் காரணமாக அமைந்து அகால மரணத்திற்கே இட்டுச்செலும் பண்பினதும் ஆகும்

 

தகாத காமவுறவுகளும் எண்ணங்களும் அகத்தே பல குற்றமனப்பான்மைகளை வளர்த்துவிட, எழும் அகப்போராட்டத்தில் அத்தகையச் சிந்தனைகள் ஆழப் புதைக்கப்பட அவையே மனோவியாதிகளாக வெளிப்படுகின்றன என்று பொதுவாக Freud  அவர்கள் கூறியுள்ளார்.

 

தமிழர்களும் திருமூலர் காலத்தில் இதனை அறிந்திருக்க வேண்டும்

 

ஆனால் Freud  போன்றோரும் அவரைப் பின்பற்றும் மனொமருத்துவர்களும் பரிந்துரைக்கா ஓர் மருத்துவத்தை நம் திருமூலர் பரிந்துரைக்கின்றார் இங்கு.

 

இந்த காம விகாரங்களைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி இறைவனோடு இசைதலே யாகும் என்கின்றார். யாதாவதோர் தெய்வத்துடன் பொருந்தி ஒன்றித்து நிற்க அகத்தே நல்லெண்ணங்களே மலர பரத்தையை நாடல், வற்புற்த்தி கற்பழித்து காமம் மகிழ்தல் ஓரினச் சேர்கை போன்ற பிழையான வழிகள் அகதே தோன்றவொட்டாது தவிர்க்கப்படும்  தோன்றனாலும் அவை கண்டிக்கப்டும் ஓர் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படும் என்கின்றார்

 

எப்படி இது?

 

எங்கே ஆணவமலம் செறிந்து உள்ளத்தை அணுத்துவப் படுத்துகின்றதோ அதுபொழுது கீழான எண்ணங்களே உதிக்க, இப்படிப்பட அறத்திற்குப் புறம்பான, அன்பிற்கு புறம்பான நீதி நியாயம் போன்ற எண்ணங்கட்குப் புறம்பான வேட்கைகள் வெடிக்க அவற்றை எவ்வாற்றினும் அடைந்து மகிழ வேண்டும் என்ற வெறியில் கற்பழிப்பு போன்ற தீய கழிகாமச் செயல்கள் மெய்யாகின்றன

 

இதற்கு மருந்து யாதாவதோர் தெய்வ வடிவத்தை அகத்தே பிரதிட்டை செய்வதுதான். இறைவனை மனமாரத் தொழுதால் தக்க மூர்த்தத்தை அகத்தே பதிவித்து கழிகாமன் செயலை அழித்து உள்ளத்தை திருத்தி செம்மை செய்வான்

 

இதுவே அருந்தவ யோகம் என்றும் திருகொறுக்கை என்னும் தலத்து வீரட்டானமாக காட்டி நிற்கின்றான் என்கின்றார் திருமூலர். இங்கு கழிகாம வெறியை வழிசெய்யும் அருந்தவ யோகியாக தன்னைக் காட்டி அருளி அத்தல புராணத்தில் இடம் பெற்றான் என்பதாகவும்ம் இருக்கலாம்.

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 



2013/10/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
...

[Message clipped]  

K. Loganathan

unread,
Nov 1, 2013, 4:36:22 AM11/1/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 10 பார்வதிதேவியின் பத்தி

 

அட்ட வீரட்டமாகிய இறைவனது பல்வகையான வீரச் செயல்களை முடித்த கையோடு இப்பொழுது இலிங்க புராணங்கள் பலவற்றை விளக்கப்புகுகின்றார் நம் திருமூலர். இலிங்க புராணமாவது இலிங்கங்களாகிய தெய்வ வடிவங்கள் (archetypes)  வழியாக இறைவன் உலகில் நடத்தும் பலவகையான திருவிளையாடல்களாகும்.

 

இங்கு முதலில் மலைமகனார் எனப்படும் இமாலய மன்னனின் மகளாக பிறந்த பார்வதிதேவியின் தவம் தொடர்பான புராணம் விளக்கப்படுகின்றது

 

347

 

அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி

முடிசேர் மலைமகனார் மகளாகித்

திடமார் தவஞ் செய்து தேவர் அறியப்

படியார் அர்ச்சித்துப் பத்தி செய்தாளே

 

இங்கு முடிசேர் மலைமகனார் மகள் என்பது பார்வதி அம்மையாரை. இது மகளிரகளில் சிவபத்தியும்  வைராக்கியமிக்க தவமும் உள்ள மகளிரைக் காட்டியது. தட்சாயனியாகப் பிறந்து அது பிடிக்காதுபோய் இமாலய மன்னன் திருமகளாகப் பிறந்து பார்வதி ஆகி இறைவனை தமது உறுதியான தவச் சிறப்பால் அடைந்த கதையைக் கூறுவது.

 

உலக மகளிர் யாரும் சிறப்பான ஆழமான சிவபத்தி போற்றினால் அவர்கள் பார்வதி தேவி யாகின்றனர்

 

மிகவும் உறுதியான தவம் செய்து, சிவனையே மீண்டும் அடைந்து அவனது அடிசேர்வன் என்ற அழியா மாறா விருப்பில் உறுதியாக இருந்து, அவளது தீவிற நோன்பும் தவமும் உலகே அறிய ஆகவே தேவர்களும் அறிய அர்ச்சனைபோன்ற சரியா கிரியைகளும் செய்து அதன் வழி மாறா அன்பின் பத்தி செய்து இறைவனை அடைந்த கதையைக் கூறுவது.

 

இங்கு தக்கனின் திருமகளாக தட்சாயனியாக பிறந்த பிறப்பை சிவனை அடைய உதவாது என்று மறந்து பார்வதியாக பிறந்து தமது பத்தியின் சிறப்பாலும் அர்ச்சனைப் போன்ற சரியா கிரியைகளாலும்  ஆகவே ஆகமநெறி வழி இறைவனை அடைந்த கதையாகும்

 

தக்கனின் வேள்வி செந்தீ ஓம்பி பல உயிர்களை பலிகொடுத்து செய்யப்பட்ட யாகம் ஆகும். அதுவும் அந்த யாகத்திற்கு அக்நியே தானாக நிற்கும் பரசிவனை அழைக்காது அவமதித்து தக்கனால ஆணவச் செருக்கின் செய்யப்பட்டதாகும்

 

இறைவனை அடைய இப்படிப்பட்ட செந்தீ வளர்க்கும் ஆணவச் செருக்கின் வேள்விகள், சிவனை ஒதுக்கும் விகாரமான பொய் வேள்விகள் உதவாது, அன்பின் வழியெழு பத்தியே இறைவனை அடையத் தரும் என்பதை விளக்கத் தருவதே பார்வதி தேவியின் தவமாகும்

 

ஏன் தக்கனை வெறுத்து  இப்பொழுது மலையரசனின் திருமக்ள்?

 

மலை என்பது உச்சி கமலத்தலமாகும்.  கயிலை என்றாலும் ஒன்றே. அந்த உச்சிகமலத் தலம் நோக்கி ஞான வாழ்க்கை நடத்தும் ஒருவனே, அல்லது இதே நினைவில் இருக்கும் ஓர் தீவிர சிவபத்தனே  இந்த மலையரசனாகும். நல்லவொரு சிவபத்தன் எனினும் பொருந்தும். இத்தகைய ஒருவனுக்கு திரும்களாக பிறந்த ஓர் மடமகள், சிவபரம்பொருளையே அடைந்து அவனது திருவடிகளையேச் சேர்ந்து திருநடம் கண்டவாரே இருக்க வேண்டும் என்பது இயற்கையாகும்

 

இங்கு இப்படிப்பட்ட மடமகள் ஓர் ஆன்மாவைக் குறுப்பதாக, அதன் உருவக்மாகவும் கொள்ளலாம்

 

இங்கு ஆர்ப்பாட்ட யாகங்கள் செய்யப்படாது, அன்பின் மெய்பக்தியின் அர்ச்சிப்பது திருவாரங்கள் பாடுவது மற்றும் கோயில் வழிபாட்டை மையமாகக் கொண்ட சரியாகிரியைகள் யோக ஞானங்கள் செய்வது போன்ற தவங்களையே செய்ய வேண்டும் என்றும் போதிக்கப்படுகின்றது

 

கோயில் வழிபாட்டில் ஓர் அங்கமாக இருக்கவேண்டியதுதான் யாகம் ஆனால் அது விகாரமாகி அசுவமேத யாகம் போன்ற உயிர்ப்பலி யாகங்களாக அது  திரியும்போது அது சிவனுக்கு உகந்தது அல்ல, அதன் வழி சிவனை அடைய முடியாது என்று உணர்த்துவதே இந்த புராணத்தின் பொருள்

 

தொடரும்

 

உலகன்

 

 

 



2013/10/29 K. Loganathan <k.ula...@gmail.com>
...

[Message clipped]  

K. Loganathan

unread,
Nov 4, 2013, 3:24:46 AM11/4/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 11 பரிவின் ஈசன்

 

இறைவன் தீக்கை செய்து ஆன்மாக்களை சுத்தம் செய்ய  உருத்திரன் உருத்திரி போன்ற பேரச்சங்களை எழுப்பும் வடிவங்களை எடுத்து வீரட்டம் செய்ய, அதனைக் கண்டு ஆன்மாக்கள் அஞ்சி இறைவனை நெருங்குதற்கு அரியன் அவனை நெருங்க பெருந் துயரங்களை வேதனைகளை அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணி கவல்வர். அது அப்படி இல்லை இறைவன் கருணையே வடிவானவன் என்கின்றார் நம் திருமூலர் கீழ் வரும் பாட்டில்

 

348

 

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை

அரியன் என்று எண்ணி அயர்வுற வேண்டா

புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்

பரிவொடு நின்று பரிசறி வானே

 

முப்புரமாவது மும்மல காரியம் என்றார் திருமுலர் வேறொரு பாட்டில். ஆக ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களால் பந்திக்கப்பட்ட ஆன்மாக்கள் அவற்றின் தாக்கத்தால் எழும் பொய் கோட்டைகளே இந்த முப்புரங்கள் ஆகும். இவற்றைத் தான் தனது கடுந்திறல் ஞானத் தீயின் அழித்து ஒழித்தான் என்றும் அவனது அட்டவீரட்டங்களில் ஒன்றாகப் புராணங்கள் பகரும்

 

இங்கு மீண்டும் அவை. ஆனால் ஏன் இங்கு ‘திர்கின்ற முப்புரம்” என்று சொல்ல வேண்டும்?

 

மாயாமலம் என்பது சுத்தமாயை அசுத்தமாயை என இருவகைப்படும். சுத்த மாயை மந்திர சொரூபங்களால் ஆகும் பொருட்கள் மேல் மயங்குதல் செருக்காடுதல் போன்றவை யாகும். பேச்சுத் திறன் கற்பனைத் திறன் கவித்திறன் போன்ற திறங்களால் ஆகின்ற செருக்குகளே மாயாபுரி கோட்டைகளில் ஒன்றாம்

 

இனி அசுத்தமாயையால் வருவது உடல் அழகு போன்றவற்றால் வரும் செருக்கு போன்றவை, இவை இரண்டுமே மாயாபுரிக் கோட்டை யாகும்

 

இனி கன்மக் கோட்டையாவது தான் கன்ம ஈட்டதினால் நல்ல குலங் கோத்திரம் போன்றவற்றில் பிறந்துள்ளதாக எண்ணி தனது குடிபிறப்பை வைத்து செருக்காடல் ஆகும்.

 

இனி ஆணவம் என்பது சகசமலமாகும். இது ஓர் ஆன்மாவைப் பந்தித்திருக்க ஆங்கு அறியாமையைத் தரும் அஞ்ஞான இருளும் இருக்கும். இதனால் அறிவு சிற்றறிவாகவே இருக்க அதனால் அகம்பாவம் தலைதூக்க தனது அறிவு சிற்றறிவுதான் என்றுணராது பேரறிவாக நினைத்து செருக்காடுவதே ஆணவ மலத்தால் எழும் கோட்டையாகும்.

 

இவை ஏன் ‘திரிகின்ற முப்புரம்’ என்றாக வேண்டும்?

 

ஆன்மாக்களின் இந்த அஞ்ஞானம் கோட்டைகள் வினோதமானவை, ஓர் பொருள் பற்றி அவற்றை எரித்து இல்லாதுபோக்க, இன்னொரு விசயதைப் பற்றி அவை தோன்றும் ஆக எளிதில் முற்றாக அழிக்க முடியாது போவதால் அவை அழிப்பதற்கு அவ்வளவு எளிதாக இல்லாத கோட்டைகள் என்பதின் அவை திரிகின்ற முப்புரங்கள் எனபடுகின்றன.

 

இனி இவ்வாறு முற்றிலும் அழிக்க அரிதாக விளங்கும் இந்த திரிகின்ற முப்புரங்களை தீய்த்து இல்லாது போக்க இறைவன் வினோதமான அரியப் பல வேடங்களை எடுத்து பல திருவிலையாடல்களை ஆட வேண்டி இருப்பதால் இறைவனது அருளிச் செயல்களை காண்போர் உள்ளத்தில் ஓர் மலைப்பு ஏற்பட்டு இறைவன் அரியன் எளிதில் நமக்கு அருள்பாலிக்க மாட்டான் என்று எண்ணி கவலதலும் நடக்கும்

 

உண்மையில் இப்படி அல்ல, இந்த கவலைக்குக் காரணமே இல்லை என்கின்றார் நம் திருமூலர்

 

எப்படி?

 

புரிவுடையாளருக்குப் பொய்யலன் ஈசன் என்கின்றார் திருமூலர்.

 

இங்கு புரிவுடையாளர் என்பார் கனவு ஆராய்ச்ச்சி புராண ஆய்வு போன்ற துறைகளில் அறிவினை வளர்த்து இறைவன் எவ்வாறு எண்ணற்ற வேடங்கள் தரித்து தனது வீரட்டங்களால் இந்த மாயக் கோட்டைகளை அழிக்கின்றான என்பதை நலமே புரிந்துகொண்டிருப்பவர்கள் ஆகும்.

 

அதிலும் குறிப்பாக இறைவன் கடுஞ்சினத்தால் அல்ல மாறாக பெருங்கருணையால் தான், உயிர்களை சுத்தமாக்கி உய்விக்கவே இவ்வாறெல்லாம் ஆடுகின்றான் என்பதை நலமே புரிந்துகொண்டோரே இங்கு புரிவுடையார் ஆகும்,

 

இப்பட்டவர்பால் இறைவன் அன்புடன் நின்று இதமாகப் பல போதங்கள் வழி ஞானங் கொளுத்தியே சுத்தமாக்குவன் என்பதாம்

 

இப்படிப்பட்ட  நல்லார்கட்கு வேதனைகள் மிக்க தீக்கைகள் தராது இதமான முறையில் பல ஞான போதனைகள் நடத்தி சிவஞானம் அகத்தே வளரச் செய்து சுத்தமாக்குவன என்பதாம்

 

தொடரும்

 

உலகன்

 

 

 



2013/11/1 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Nov 7, 2013, 2:31:46 AM11/7/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 12 திருமாலின் சக்கரப் பேறு

 

இறைவன் பரசிவனாக திருமாலிற்கு சுதர்சன் என்னும் சக்கரத்தை ஆழியை அருளினான் என்பது புராணம் அதன் உள்ளுறைப் பொருள் என்ன என்பதை விளக்கும் இப்பாடல் ஆறு ஆதாரச் சக்கரங்களின் ஆன்மாக்கள் வாழ்ந்து பின் ஊய்ந்து உயர்ந்து செல்வதை அடிப்படையாகக் கொண்டது.

 

இங்கு ஆன்மாக்களே பிரமனோடும் திருமாலோடும் ஒன்றித்து வேறற நிற்பதின் அவையே பிரமன் என்றும் திருமால் என்றும் பகரப்படுவதாகத் தெரிகின்றது

 

இவ்வாறு திருமந்திரத்தில் மிகப் பரவலாக பல இடங்களில் ஆகம உளவியலின் இந்த ஆறாதாரக் கருத்துகள் விரவி கிடப்பதைக் காணும் போது, அது மிகவும் தொன்மையானது மாத்திரம் அல்ல, மிகவும் பரவலாக பயின்ற ஒன்று என்றும் தெரிகின்றது

 

349

 

ஆழி வலங்கொண்டு அயன் மால் இருவரும்

ஊழி வலஞ்செய்ய ஒண்சுடர் ஆதியும்

ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி

வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே

 

இங்கு ‘ஆழி வலஞ் செய்ய அயன் மால் இருவரும்’ என்பதை பிரமதேவனும் அவனைத் தாங்கி தமது உந்தி கமலத்தில் இருத்தி வைக்கும் திருமாலும் ஆறாதாரச் சக்கரங்களில் முறையே சுவாதிட்டானம் என்றும் மணிபூரகம் என்றும் அடங்கி அதற்கு மேல் போகாது வலம் வருவர் என்பதாம். இதனால், இந்த சக்காங்கட்கு வரும் ஆன்மாக்களை வலைத்து கல்விக் கேள்விகளிலேயே ஆர்வம் காட்டுமா பிரமன் ஆட்சி செய்ய, திருமாலோ அறிதுயில் மகழத் தரும் மணிபூராக கற்றளிக்கு வருவோரை மயக்கி அங்கேயே வாழுமாறு செய்வன் என்பதே பொருளாகும்

 

அப்படி மயங்கி வாழ்வோரே இங்கு பிரமன் என்றும் திருமால் என்றும் பகரப்படுகின்றனர்

 

இதற்கு அடுத்து வரும் வரியின் ‘ஒண் சுடர் ஆதி”: என்பது உச்சிக் கமலத் தலம் தாண்டி வரும் பிரம ரந்திரத்தில் அருட்பெருஞ்சோதி வடிவ ஒண் சுடர் வடிவின் ஆதியாகிய பரசிவனைக் குறிப்பதாகும். ‘’ஊழி வலஞ் செய்ய’ என்பது: சுவாதிட்டான மணிபூரகக் கற்றளிகளில் கட்டுண்டு கிடக்கச் செய்யும் பிரமன் திருமால் ஆகியோரை ஊழ்ந்து உயர்ந்து இன்னும் மேலே மேலே உள்ள சக்கரங்களாகிய அநாகதம் விசுத்தி ஆக்ஞை போன்ற  சிவச் சக்கரங்கட்குச் சென்று அங்கு வலஞ் செய்யும் வகையில் அருள்பாலிப்பதாகும்.

 

இதன் பொருட்டு திருமாலிற்கு தெள்ளிய ஞானமே வேண்டப்படுவது எனும் சிந்தையைத் தரும் சுதரசன் என்னும் சக்கராயுதத்தை அருளினான் பரசிவன். திருமால் இதனைக் கொண்டு தனது அறிதுயில் மயக்கத்திலிருந்து விடுபட, வேண்டப்படுவது தெள்ளிய சிவஞானமே வேறல்ல எனபதைத் தானும் உணைர்ந்து பிறருக்கும் உணர்த்தும் வகையில் அருளப்பெற்றான்

 

அது பொழுது திருமால் உந்திக் கமலத்தில் வாழும் பிரமற்கும் தனது சாத்திர மயக்கத்தைப் போக்கி யோக வழியில் எல்லாம் தியானித்து சிவஞானம் மகிழத் தரும் வாளினையும் கொடுத்து அருளினான என்றவாறு

 

இதனால் பிரமனும் திருமாலும்  தமது ஆட்சிகளை இழந்து சிவ மூர்த்தங்களாகிய உருத்திரன் மகேஸ்வரன் சதாசிவன் போன்ற வடிவங்களின்யும் ஆட்சியையும் அடைந்து இன்னும் இன்னும் ஆழமான ஞானங்களைப் பெற்று முடிவில் சிவஞானம்  மகிழுமா அருளப்பெற்றான் என்க,

 

 மீண்டும் கூறுகின்றோம். இங்கு மானிடர்களே பிரமனாகவும் திருமாலாகவும் கொள்ளப்படுகின்றனர் என்று தெரிகின்றது. இவ்வாறு ஆறு ஆதார சக்கரங்களில் மாட்டிக்கொண்டு உயர்ந்து உயர்ந்து சென்று உச்சிக் கமலத் தலம் அடைவது ஆன்மாக்களே யாகும் என்பதின் இவ்வாறே கொள்வது பொருந்தும்

 

பிரமன் திருமால் போன்ற தெய்வங்கட்கு ஆறாதாரப் அபயனம் யாண்டும் இல்லை, இந்த மூர்ஹ்த்டங்கள் அனைத்டும் பரசசிவனே யாகும்

 

தொடரும்

 

உலகன்

 

 



2013/11/4 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Nov 7, 2013, 10:26:36 PM11/7/13
to meyk...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, akanda...@egroups.com
Dear Puru

Yes I am discovering the real essence of the PuraNas through this study of Thrumular, Tirumantiram is a real treasure house of many Hermeneutic Sciences developed by the Tamils. 

The most salient features of these verses on Lingka PuraNam is that the various gods like Brahma Vishnu and so forth are actually human beings but possessed by these archetypes.

This understanding unfolds why so the gods in so many PuraNas are so human like! These puranas are actually stories about human beings but archetypally possessed.  They tell us how BEING(God) in fact plays the various games to educate the human beings.''

Thus you are right in seeing divine pedagogy in all these.

Seen in this lights PuraNas turn out to be immensely interesting discolising the depth psychological aspects of the human mind.

Loga


On Fri, Nov 8, 2013 at 11:04 AM, <purushotha...@yahoo.com> wrote:
 

This poem and explanation given are very good, a must read for all religious people and philosophers of belief and reasons... Vishnu followers are materialistic, brahma followers are more logic and reasons, but these followers missout something due to their philosophical roots, which is shown through pedagogical instruments or tools like mirror and sword, so that they can also see others views and get enlightenment... Although i see above Dr Logas explanation as classic yet differently but similar views... In my approach i might take reflections for mirror and reasons for sword.. Another aspect is my line of thinking where the followers are treated as respective gods, an indian tradition is highlighted here in the poem

__._,_.___
Recent Activity:
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.

__,_._,___

K. Loganathan

unread,
Nov 12, 2013, 8:46:46 PM11/12/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 13 : இராவண வதை

 

இராவணன என்பான இராமாயணத்திலும் இன்னும் பல சிவ புராணங்களிலும் வரும் ஓர் புராண உரு. இங்கு சிவபுராணத்தில் வரும் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் உடைய் பெருந்திறல் இராவணனை எப்படி நெரித்து வதைத்து இறைவன் அவனது அகந்தையைக் கெடுத்து அஞ்ஞானம் போக்கினான் என்பதை விளக்கும் புராணத்தின் உள்ளுறைப் பொருளை மிக நன்றாவே விளக்குகின்றார் நம் திருமூலர்.

 

 

350

 

தாங்கி இருபது தோளுந் தடவரை

ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி

ஆங்கு நெரித்து அமராவென அழைத்தபின்

நீங்கா அருள் செய்தான் நின்மலந்தானே

 

இறைவன் நின்மலன்  --- தேவாரா திவ்விய பிரபந்தங்களில் இவ்வாறுதான் இறைவன் அறியப்படுகின்றான். இவனோடொப்ப  அநாதிப் பொருட்களாகிய ஆன்மாக்கள் சமலத்தன--  ஆணவ மலத்தால் பிறகு அதனால் எழும் கன்ம மாயா மலங்களால் பந்திக்கப்பட்டன.

 

இவ்வாறான மலத்தால் வரும் ஞான அந்தகார இருளின் ஆன்மாக்களுக்குப் பொல்லாத அகந்தை செருக்குப் போன்றவை வரும். அது பொழுது ‘அகம் பிரமம் அஸ்மி” என்றாற்போல ‘நானே இறைவன்” என்றெல்லாம் கூறி சிவசமவாதம் கூறி அனைவரையும் தமக்கே அடிமையாக்கி தன்னையே தொழவும் வைப்பர்.

 

இது இன்றும் நடக்கும் ஒன்று தான். இது அரசியல் வேட்கையாக மாறும் போது, தானே இறைவன் என்று மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும் என சிவப்பரம்பொருளையே அவமதிக்கும் போக்கும் வரும் அதனால் இறைவனை கேவலஞ்செய்யும் மடமையும் அரும்பும்.

 

இங்கு பத்துத் தலைகள் என்பது தன்னை அளவிற்கு மீறி நேசிக்கும்  Narcissm  எனப்படும் ஓர் உளநோய்.  இப்படிப்பட்டோர் தன்னையே முற்றிலும் நேசித்து தன்னையே அர்ச்சிக்கும் பண்பினர் என்பதொடு அனைவரும் தன்னையே அர்ச்சிக்கவும் வேண்டுமென்று அடங்கா வெறியும் உடையவர் ஆவர்

 

இருபது தோள்கள் என்பது பராக்கிரமத்தைக் குறிக்கும். தனது தோள்வலிமையால் யாரையும் போரில் வெல்லலாம் எனும் இறுமாப்போடுத் திரிவது.

 

இப்படிப்பட்ட ஓர் இராவணன் நம் அனைவர் உள்ளத்திலும் இருக்கின்றான. எவன் ஒருவன தன்னைத் தவிர வேறு யாரையும் நேசிக்காது, தானே தன்னுள்ளே எல்லா வலிமைகளையும் கொண்டிருக்கின்றோம் தன்னை மிஞ்சுவார் யாருமில்லை என்று எண்ணுகின்றானோ அவன் இந்த  இராவணன் ஆகின்றான்

 

இப்படிப்பட்டவன் தான் சிவபெருமான் உமை அம்மையோடு வீற்றிருந்த கையிலை வெற்பை அசைத்து இறைவனையே அச்சுறுத்தும் முயற்சியில் இறங்குபவன். அவ்வாறு அவன் செய்ய உமை அதனைக் கண்டு ஓர் சிறிது அஞ்ச, அது பொறுக்காது சிவபெருமான் தனது கால்விரலால ஓர் சிறிதே அழுத்த வலி பொறுக்காது இராவணன் அலறினான், அமரா! அமரா! என்று அழுதான் என்பது கதை.

 

இந்த அலறலைக் கேட்ட பின் தான் இறைவன் அழுத்துவதை நிறுத்த இராவணனுக்கு ஞானம் பிறந்தது என்பதும் கதைதான் இது ஓர் சில  அகந்தைப் பிடித்த ஆன்மாக்களுக்கு இறைவன் நடத்தும் ஞான போதகம் ஆகும்.

 

இது என்றோ யாரோ ஓர் அசுரனுக்கு நடந்த ஓர் வரலாற்று நிகழ்ச்சி அல்ல.  இது யாண்டும் நடந்துகொண்டே இருக்கும் ஓர் செறுக்கறுப்பு திருவிளையாடல் ஆகும். யார் ஆணவச் செருக்கின் ஓர் இராவணனாக எழுகின்றானோ அவனுக்கு வாழ்க்கையில் அவன் அழுது புலம்பி இறையருளை வேண்டி நிற்கும் அளவிற்க்கு துக்கங்கள் துயரங்கள் வேதனைகள் வந்தடையும் என்பதே இதன் உண்மை.

 

இப்படிப்பட்ட ஆழ் உணமைகள் ஞானத்தில் அடங்கும். இந்த ஞானத்தைத் தாங்கி வருவதே இந்த புராணம் என்று உணர்த்துகின்றார் நம் திருமூலர்

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 



2013/11/7 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Nov 14, 2013, 10:26:20 PM11/14/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 14 தண்டியின் தண்டனை

 

நாதவிந்து சங்கமாகிய சிவலிங்கத்தை பண்டைகாலந்தொட்டே காமவுறுப்புக்களின் சங்கமம் என்று நினைத்து அதனை இகழ்ந்தோர் பலர். அவர்களுள் ஒருவரே தண்டீசர் என்பாரின் தந்தையுமாகும்.  இவர் ஓர் வேதியர் என்றும் கூறுவர். சிவலிங்க அவமதிப்பால வரும் காலிழப்பு எனும் தண்டனையை அனுபவிப்பர் எனும் உணமையை உணர்த்துவதே அடுத்து வரும் அழகிய பாடலின் பொருளாகும்.  சைவ சாத்திரங்களில் பல கோணங்களில் ஆராயப்பட்ட  ஓர் புராணக் கதையாகும் இது. ஆழமான அர்த்தமுள்ள ஆழ்கனவுக் கதையுமாகும்

 

351

 

உறுவ(து) அறி தண்டி ஒண்மணற் கூட்டி

அறுவகை ஆன் ஐந்தும் ஆட்டத் தன் தாதை

செறு வகை செய்து சிதைப்ப முனிந்து

மறுமழுவால்  வெட்டி மாலை பெற்றானே

 

உலகில் நடப்பதெல்லாம் இறைவனது திருவிளையாடலே என்று உறுவது தெளிவாய் அறிந்து மகிழ்கின்ற தண்டீசன் எனும் சிவபக்தன், தன் பத்தி மேலீட்டால தந்தையாகிய ஓர் வேதியன் சிவலிங்க வழிபாட்டை தடை செய்தாலும் அந்தத் தடையை மீறி, ஆற்றங்கரையில் சுத்தமான மணற்கொண்டு ஓர் சிவலிங்கம் செய்து தான்  மீண்டும் மீண்டும் பிறத்தலாகிய பிறப்பு அறும்வகை அதனை அர்ச்சித்து மகிழ்ந்தான்

 

எப்படியோ வெனில் ஐந்து தூய வெண்பசுக்கள் தாமே முன்வந்து பால சொரிந்து சிவலிங்கத்திற்கு பாலாபிசேகம் செய்ய இவன் அர்சித்து வழிபட்டான் என்க.

 

அது கண்டு பொறுக்காத அவன் தந்தை அந்த சிவலிங்கத்தை காலால் உதைத்து சிதைக்க முற்பட, தண்டியோ சினந்து தன் தந்தை என்றும் பாராது, மழுவால் தன் தந்தையின் இருகால்களையும் துமித்து வீழ்த்தி சிவலிங்கத்தைக் காப்பாற்றி அருள் பெற்ரு மீண்டும் பிறவா வரம் பெற்றுய்ந்தான் என்பததே கதை.

 

இங்கு சிவலிங்க வழிபாடு, ஐந்து பசுக்கள் பால் சொரிதல், சிவலிங்க வழிபாட்டை எதிர்ப்போர் தமது இரண்டு கால்களையும் இழத்தல் எனும் புராணக் கூறுகளை நாம் ஆய்ந்து புதைந்து கிடக்கும் உள்ளுறைப் பொருளை வெளிப்படுத்தி தெளிஞானம் பெறவேண்டும்

 

இங்கு முதலாவதாக் சிவலிங்கம் என்றால சிவதத்துவங்களாகிய நாத விந்துக்களின் சேர்க்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்  இது ஆண் பெண் காமவுறுப்புக்களின் சேர்க்கை மாத்திரம் அல்ல, நாத விந்துக்கள் இல்லாத எப்பொருளும் இல்லை. இவை நம் உடம்பிலும் இருக்கின்றன அறிவின் செயல்பாட்டிலும் இருக்கின்றன.

 

இதனை உணராதோரே தண்டியின் தந்தை போன்ற வேதியர் சிவலிங்க வழிபாட்டை நிந்திப்பவர்கள் ஆகின்றனர்.

 

இங்கு ஐந்து பசுக்கள் பால் சொரிந்து அபிசேகம் செய்வது என்றால் என்ன?

 

இங்கு ஐந்து பசுக்கள் ஐந்து புலங்கள் ஆகும். ஐம்புலங்களை ஆகவே பொறிலியைப் பார்வைகள் ஐந்தை  இறைவனுக்கே சொரிந்து தன் அகத்திலிருந்து போக்கி இறைவனுக்கே அர்ப்பணிக்க, அதனால் கண்கள் இன்னும் திறக்க இதுவரை மூடியிருந்த ஞானப்பார்வைகள் அமையும் படி இறையருள் கூடி வருவதாகும்

 

இதுவே களிம்பாக கிடந்த  ஆணவ மல மறைப்பு நீங்க ஞான விழி திறப்பதுவாகும்

 

ஆக சிவலங்க வழிபாட்டின் பொருள் இதுவென்றால், அதனை நிந்திப்போர் இரண்டு கால்களையும் இழப்பது என்றால் என்ன?

 

கால்கள் இரண்டும் நாத விந்துக்கள் ஆகும். குத்தி நிற்கின்ற பாதம் நாதமாக வளைந்து நிற்கும் எடுத்த பாதம் விந்துவாகும். இவை இருக்கத்தான் பொல்லாத ஆணவ மலமாகிய முயலகன் வீழ்த்தப்பட்டு கீழே தள்ளப்படுகின்றான. ஆக சிவ நிந்தையால் ஒருவன் தன் அகத்தே நாத விந்துக்கள் நர்த்தனமாடுவதை தடை செய்ய, அவன் ஆணவ மலத்தை கீழே தள்ளி கண்டிக்கும் திறத்தை இழக்க, ஞானம் கைவராது உழற்சி வினைகளையேச் செய்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அஞ்ஞானியாகவே வாழ்வான் என்பதாகும்

 

வேதியனாயினும் வேறு யாராகிலும் சிவலிங்க வழிபாட்டை நிந்தை செய்தால், தன்னுள் உடம்பிலும் அறிவிலும் விளையாடும் நாதவிந்துக்களையே அவமதித்து தமக்குத் தாமே ஓர் அகத் தடையை உண்டாக்கி அஞ்ஞானிகளாகவே தொடர்வர் என்பதாம்

 

தொடரும்

 

உலகன்

 

 



2013/11/13 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Nov 19, 2013, 10:08:36 PM11/19/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 15: ஆணவ மலமே ஆலகால விஷம்

 

புராணங்களில் இந்த தேவன் இது செய்தான் அது செய்தான் என்றெல்லாம் வரும் போது, அங்கு ஓர் மனிதனே ஓர் தெய்வம் ஆவேசித்து அவனே தானாக நின்று பல செய்வதையே உணர்த்தும். தெய்வங்கள் என்பன மந்திர சொரூபங்கள். இறைவனால கற்பிக்கப்படுபவை. ஓர் ஆன்மாவோடு ஒன்றித்து அதுவே தானாக நிற்கும்போதே அது உயிர்பெற்று வாழும் ஓர் சித்துப்பொருளாகின்றது.

 

ஆக தேவ தேவியர்கள் மேல் ஏற்றி கூறப்படும் புராணங்கள் உள்ளபடியே மலத்தால் பந்திக்கப்பட்ட ஆன்மாக்களைப் பற்றிய கதைகளே யாம். இவர்கட்குத் தான் வருத்தங்களும் வேதனைகளும் உண்டு.

 

இப்படித்தான் கீழே வரும் தேவர்களைப் பற்றிய பாடலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்

 

352

 

ஓடி வந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள்

வாடி முகமும் வருத்தத்துத் தாஞ் சென்று

நாடி இறைவா நம என்று கும்பிட

ஈடில் புகழோன் எழுக என்றானே

 

 

இங்கு ஓடி வந்து தத்தம் தனிச் சிறப்புக்களை எல்லாம மறந்து ஒருமை நல்லுணர்வில் ஒருங்கிய தேவர்கள் உள்ளபடியே யாரெனில்,  அகந்தையால் செருக்காடிய ஆன்மாக்கள் தம் அகந்தை கெட ‘நாம் அனைவரும் ஒன்றே” என்ற ஒருமை நல்லுணர்வில் இறைவனை நாடுவதாகும்.

 

ஏன் இப்படி?

 

அமுதம் தேடி பாற்கடலைக் கடைய, ஆலகால விஷம் வெளிவர, பிரமன் திருமால் போன்ற இறைவடிவங்கள் அதனைக் கட்டுபடுத்தும் திறமை இல்லாத நிலையில், எஞ்சி இருப்பதாகிய சிவ வடிவத்து இறைவனையே தேவர்கள் வாடிய முகத்தோடு நாடி தமது வருத்தமெல்லாம் மேலோங்கி நிற்க, சிவன் வடிவத்து இறைவன்தான் காக்க வேண்டும் என்று அவனை அணுகி இறைஞ்சி நின்றார்கள் என்பது புராணம்

 

இனி இவ்வாறு தேவர்களாகத் திரியும் ஆன்மாக்களும் ஏனைய பெருந்தெய்வங்களை எல்லாம் தொழாது சிவ வடிவத்து இறைவனையேத் தொழ, அவனுக்கே அடி பணிய, இறைவனும் அந்த கடுஞ் நஞ்சை விழுங்கி தன் தொண்டையிலேயே இருத்தி நீலகண்டன் ஆகி அவர்களின் மரண பயம் போக்கி எழுந்து நலமே செயல்பட அருளினான் என்பது கதை.

 

இது பிரமம் திருமால் என்று இறைவனே எடுக்கும் வடிவங்கட்கும் சிவ வடிவத்திற்கும் உள்ள வேற்றுமையை விளக்கும் ஓர் கதையாகும். படைக்கும் பிரமனுக்கு அழிவினை உலகின் ஒடுக்கத்தை தடுத்து நிறுத்தும் வல்லமை இல்லை,  உலகமெல்லாம் அழியாது காத்தருளும் திருமால் வடிவத்திற்கு, வரக்கூடிய அழிப்பினை தடுத்து நிறுத்தும் வல்லமை இல்லை,

 

இத் திறன் சிவ வடிவத்திற்கே உண்டு. ‘சிவன்’ என்ற சொல் “சி’ என்ற வேரிலிருந்து பிறந்த ஓர் சொல்லாகும். இந்த சிகாரமே ஆணவ துன்னிருளை அழுத்தி  கீழே தள்ளி ஒடுக்கி தோன்ற முடியாது அந்தகாரத்தில் கிடந்த பொருட்கள் தோன்றி நின்று உலகில் நிலவுமா செய்யும் வடிவமாகும்

 

ஆலகால விஷம் என்பது இந்த வல்லிய ஆணவ மலமே யாகும். சிவ வடிவத்தின் சிவப் பிரகாசமே சிவ ஒளியே இந்த கடும் விஷத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமையது என்பதின், இந்த சிவ வடிவமே மரண பயம் நீக்குவதற்கு தொழப்பட வேண்டிய வடிவம் என்று இக்கதை உணர்த்துகின்றது போலும்

 

தொடரும்

 

உலகன்

 

 



2013/11/15 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Nov 26, 2013, 9:04:38 PM11/26/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 16 தக்கன் வேள்வி-1

 

தக்கன் வேள்வியை ஆண் பெண் சேர்க்கை தொடர்பானது என்பதாக உரையாசிரியர் பொருள் கொள்வர்.  ஆயினும் முழுமுதற் கடவுளும் அக்நியே தன் மூல வடிவாகக் கொண்டுள்ள சிவபெருமானை மறந்து அவனை அழைக்காது செய்யப்படும் வேள்வியே தக்கன் செய்யும் வேள்வி என்று கொள்வதே சரியெனப்படுகின்றது.

 

வேள்வி என்றாலும் யாகம் என்றாலும் எரி ஓம்பல் என்றாலும் ஒன்றே. ‘யாகம்’ என்ற தமிழ் சொல்லும் ‘யஜ்நம்’ எனும் வடசொல்லும் சுமேருத் தமிழ் எஜன் ( ejen)  என்ற வேரிலிருந்து பிறந்த ஒன்றாகும். இச்சொல் ‘எரி’ என்றே பொருள் படும்

 

உலகெல்லாம் படர்ந்து அந்தகாரத்தையே நிறுத்திய ஆணவ மலத்தை கிழித்துத் தள்ளி வீழ்த்தி ஒளி பரப்பிய மூலத்தீயே  இந்த ‘தொல் எரி” ஆகும். அதன் தலைவனாகிய சிவனை உதாசீனம் செய்து வேள்வி செய்தான் தக்கன் என்பான். இதனால் தக்கன் வேள்வி என்பது பொய் வேள்வி ஆகின்றது.

 

அடுத்து வரும் சில பாடல்கள் இந்த தக்கன் வேள்விப் பற்றியே யாகும்.

 

353

 

தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை

வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்

முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்

சிந்தினர் அண்ணல் சினஞ் செய்தபோதே

 

ஊழித் தீயாகத் தோன்றி ஆணவத் துன்னிருளை கிழித்துக் கீழேத் தள்ளி ஆகவே உலகில் எல்லா உயிர்களும் தோன்றி வாழுமா அருளிய இறைவன் இதனால் தந்தை பிரான் ஆகின்றான். இவனை அழைக்காதே தக்கன் நடத்திய வேள்வி ஓர் பொய்யான வேள்வி எனப்படுமாறு சிவன் கொழுந்துவிட்டெரிந்த வெந்தழல் ஊடே புறப்பட்டு வெளியாகி அனைவரும் காண நின்றார்.

 

இதனால் வேத மந்திரங்களை ஓதி வேள்வி செய்ய முறப்பட்ட தேவர்கள் தொடக்கி வைத்த வேள்விப் பூசையை தக்க முறையில் முடிக்க முடியாது முறைகெட்டு சிவ ஒளியின் தேசு பொறுக்க மாட்டாது அங்குமிங்கும் சிந்தி சிதறி வீழ்ந்தனர்.

 

 இந்தப் பொய் வேள்வியைக் கண்டு சிவபெருமானின் சினம் அப்படி இருந்தது.

 

வேள்வியின் தலைவன் சிவ ஒளியின் சிவனே என, அவனை அவமதித்துச் செய்யும் வேள்வி எல்லாம், ஆணவ மலத்தை ஒன்றும் செய்யாது விடும் என்பதின், தேவர்கள் கூட முறைக்கெட்டு அங்குமிங்கும் சிதறி ஓடுதலே நடக்கும் என்பதாம்

 

இதனால் உணர்த்தப்படுவது, சிவனே தலையாய இறைவன் என்றும் அதற்குக் காரணம் ஆணவத் துன்னிருளை கிழித்து அடக்க வல்ல சத்தி அவனே யாம் என்பதாகும்

 

மேலும் வேள்வி என்பது இவ்வாறு யாக குண்டத்தில் அக்நி வளர்க்கும் ஓர் சடங்கு மாத்திரம் அல்ல, அதற்கு உள்ளறைப் பொருள் ( semiotic meaning)  பல உண்டு

 

ஒன்று திருஞானசம்பந்தர் விளம்பியதுபோல. எரி ஓம்பல் கலி வராமல் காப்பதற்கே யாம். இங்கு கலி என்றால் ‘கரி’ அதாவது கரிய இருண்ட ஆகவே ஆணவ இருள் மிக்கிருக்கும் காலம் ஆகும். புறத்திலும் அகத்திலும் ஆணவ இருளே மிக்கிருக்க துன்பங்களும் துயரங்களுமே மிகும். இதனையே கலிகாலம் என்பர்.

 

 பிறிதொன்று வேள்வித் தீ வளர்த்தல் என்பது ஆழச் சிந்தித்து புத்தியாகிய அந்தகரணத்தில் ஞானத் தீ கொழுந்துவிட்டு  எரியச் செய்வதாகும். அகத்தே சுடர்ந்தெரியும் இத்தீயே சிவஞானம் சுடரவொட்டாது தடுத்து இருளையே வளர்க்கும் ஆணவமலத்தைப் போக்கி ஞான சுடர்விளக்கு ஏற்றி வைக்கும் செயலும் ஆகும்.

 

மேலும் இது வேண்டப்படுவதெல்லாம் உணமையே மெய்ஞானமே பொய்யான திரிபுகள் அல்ல என்றவாறு மெய்ப்பொருளையே தீவிரமாக வேட்டுவதாகும். உணமை எனும் மெய்யுணர்வே அகத்துச் செறிந்திருக்கும் ஆணவத் துன்னிருளைப் போக்கி அகத்தைச் சுத்தமாக்கும்.

 

அகத்தே செறிந்திருக்கும் ஞான அந்தகாரத்தைப் போக்கி சிவஞானம் சுடரச் செய்வதற்கே ஆழமான சிந்தனைகள் எல்லாம் என்று கருதாது, அகத்தே இருக்கின்ற அறியாமை இருளைக் கெடுக்க வேண்டும் என்ற நாட்டமின்றி செய்யப்படும் எந்த சிந்தனையும் பயனற்றதாய் விழும் என்றும் இப்புராணம் மூலம் ஓர் ஆழமான உண்மை உணர்த்தப்டுகின்றது

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 

 

 



2013/11/20 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Dec 3, 2013, 2:41:55 AM12/3/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 16 தக்கன் வேள்வி-2

 

இங்கு பரதெய்வங்களாக எழும் அயன் திருமால் ஈசன் சதாசிவன் என்றவாறு வரும் தெய்வங்கள் அனைத்தும் பரசிவனே, ஒரே இறைவனே என்று நாம் மறக்கக்கூடாது. அயன் மால் போன்ற வடிவங்கள் தம்முள் சில திறன்களைக் கொண்டிருக்கின்றன. அந்த திறங்களே மேலான பரசிவனுக்கு அல்லது இறைவனுக்கு ஒப்ப குறைகள் இருக்க, அந்த தெய்வங்கள் மேல் அந்தக் குறைகள் சொல்லப்படுகின்றன.

 

இங்கு திருமால் வடிவ இறைவன்பால் ஓர் குறை இருப்பதாக திருமுலர் பாடினாலும், அது இந்த உருவங்களை எல்லாம் கடந்து என்றும் ஒரே படித்தாய் இருக்கும் பரசிவனை இறைவனை குறை கூறுவதாக அமையாது.

 

சிலர் திருமாலையே உயர்த்தி பரசிவனாக இறைவனாகவேக் கொண்டு போற்றுவர். அதிலும் தவறில்லை, இந்தச் சூழ்நிலையில் புறவுருவை மறந்து புதையுருவாக நிற்கும் இறைவனையே அவர்கள் கருதுவதாகக் கொள்ளலாம்.

 

இந்தப் பின்னனியில் கீழ் வரும் பாட்டை நாம் அலச வேண்டும்

 

354

 

சந்தி செயக் கண்டு எழுகின்ற அரி தானும்

எந்தை இவன் அல்ல யாமே உலகினில்

பந்தஞ் செய் பாசத்து வீழ்ந்து தவஞ் செய்ய

அந்தமிலானும் அருள் புரிந்தானே

 

மேலே இறைவன் செந்தீ வடிவில் யாகத் தீயில் எழுந்து தன்னை அவமதித்த தக்கனை தண்டித்து உணமையை உணர்த்தி ஞானம் புகட்டி சந்தி செய்ய, இதைக் கண்டு முழு முதல்வன் அனைவருக்கும் தந்தையாக இருக்கக் கடவன் உலகெல்லாம் காத்து அனைத்தையும் ஆட்சி செய்யும் தானே என்ற செருக்கோடு திருமால் எழுந்தான்.  இனி இவ்வாறு செருக்கு எழ, அது ஆணவ மலத்தால் வருவது என்பதின் திருமால் வடிவம் ஆட்கொண்ட ஒருவன் உலக பந்தங்களில் வீழ்த்தும் பாசத் தளைகட்கு ஆளாகி விழ,  செல்வச் செழிப்பு மகளிர் வழி இன்பம் போன்றவற்றை இச்சித்து வாழ அதனால் பல வகையான துன்பங்களே வாழ்வாக அமைவதாயிற்று.

 

இங்கு நாம் கருத வேண்டியது திருமால் போன்ற தெய்வங்கட்கு இதுபோன்ற உலகியல் வேதனைகள் இல்லை. இவை எல்லாம் அற்ப மானிடர்கட்கே உண்டு. ஆக இப்புராணம் அற்ப மானிடர்கள் பற்றிய ஓர் ஆழுணமையை திருமால் மேல் ஏற்றிக் கூறுவதாகத் தெரிகின்றது.

 

ஆக இங்கு திருமால் ஆவேசித்து ஒருவனை ஆட்கொள்ள அவன் அதனால் அடையும் செருக்கும் பல வகையான பந்த பாசங்களில் வீழ்வதுமே கருதப்படுகின்றது.

 

திருமால் வடிவத்திற்கு சங்கரித்து எரித்து சாம்பலாக்கி இல்லாது போக்குகின்ற திறன் இல்லை. நாரணன் வடிவம் உலகியல் பந்தங்களில் இருத்தி உலக இன்பங்களையே அருள வல்ல ஓர் வடிவமாகும் திருமால் அருள்  இலக்குமி கடாட்சம் எல்லாம் உலகியல் செல்வச் செழிப்பும் இனபங்களுமே யாகும்

 

இப்படிப்பட்ட வாழ்கையில் பந்த பாசங்களிலிருந்து விடுதலைப் பெற்று சுத்தமாகி மேலான துறவின்  சிவானந்தம் மகிழ முடியாது. ஆக திருமால் ஆவேசித்து ஓர் மாந்தனை அதிட்டித்து அவனை உலகியல் பந்தங்களில் வீழ்த்த அவனுக்கு முடிவில் பல வகையான துன்பங்களே மிகும். இதனால் அவன் பெரிதும் வருந்தி  திருமாலை விட்டு எல்லா வேட்கைகளையும்  எரித்து சாம்பலாக்கி சங்கரிக்க வல்ல சிவபெருமனைத் தொழ,  அவனுக்கும் அந்தமில்லானாகிய பரசிவன் அருள் புரிந்தான் என்கின்றார் நம் திருமூலர்,

 

இங்கு அருள் புரிதலாவது எல்லா உலகியல் பந்த பாசங்களிலிருந்து விடுவித்து அவனை சுத்தமாக்குவதாகும். யார் உலக பந்தங்களில் மாட்டிக்கொண்டு தொடக்கத்தில் மகிழ்ந்தாலும் பிறகு அகத்தே எழும் ஓர் விரக்தியால் மனம் நொந்து அனைத்தையும் துறந்து சுத்தமாக வேண்டும் எனும் விருப்பில் திருமாலை விட்டு தீப்பிழம்பாக யாகத் தீயில் வெளிப்பட வல்ல சிவபெருமான், அவனுக்கும் தவறாது அருள் புரிவான் என்கின்றார் திருமூலர் இந்த அழகியப் பாட்டில்

 

இங்கு தக்கன் யாகம் என்பது உலகியல் பந்தங்களை எல்லாம், பாசங்களை எல்லாம் துறந்து செல்ல வேட்பதற்கு பதிலாக அவற்றையே வேட்டு வாழ்வதாகும். இதுவும் பிழையான வேள்வி என்பதால் தக்கன் வேள்வி ஆகின்றது

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 

 



2013/11/27 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Dec 8, 2013, 2:53:16 AM12/8/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 18 தக்கன் வேள்வி-3

 

தக்கன் வேள்வி என்றால் என்னவென்று புலனாகி வருகின்றது.  வேள்வி என்றால் எரி ஓம்பும் சடங்கும் ஆகும் என்பதொடு அதன் உள்ளுறைப் பொருளாக ஆழமான ஞான விசாரணையில் ஈடுப்பட்டு அகத்தே செறிந்திருக்கும் அஞ்ஞான இருளைத் தீய்த்து இல்லாது போக்குவதும் ஆகும்.  உபநிடதங்களில் யாகம் நடத்திய பின்னர் பரிஷத் எனும் பட்டி மன்றம் நடக்கும் என்றோர் குறிப்பு உண்டு.

 

இவ்வகையில் எந்த வேள்வி முப்பொருள் உண்மையை உணர்ந்து அகத்தே செறிந்திருக்கும் ஆணவ மலத்தால் வரும் ஞான அந்தகாரத்தை குருட்டினை போக்க முயலாது வேறொன்று வேட்டு வேள்வி செய்யப்படுகின்றதோ அதுவே தக்கன் வேள்வி யாகின்றது.

 

ஆக தக்கன் வேள்வி என்றால் பொய் வேள்வி என்றும் பொருள்படும். அவ்வகையில் அடுத்து வரும் பாட்டில் திருமூலர் இன்னொரு தக்கன் வேள்வி யாதென்று விளக்குகின்றார்.

 

355

அப்பரிசே அயனார் பதி வேள்வியுள்

அப்பரிசே அங்கி அதிசய மாகிலும்

அப்பரிசே  அது நீர்மையை யுள்கலந்து

அப்பரிசே சிவன் ஆலிக்கின்றானே

 

மேலே திருமால் வேள்வியுள் போலவே அப்பரிசே. வேதியனும் படைப்புக் கடவுளுமாகிய பிரமன் தன் பதியுள் செய்கின்ற வேள்வியுள், சாத்திர ஞானத்திற்கு மிக்கு யாதும் மில்லை, வேதங்கள மற்றும் அதனைப் போன்ற சாத்திரங்களை ஓதியே வீடுபேறு அளிக்கவல்ல சிவஞானத்தைப் பெற்று விடலாம், ஆணவ மலத்தை அழிக்க வல்ல சிவாக்நியை ஓம்பத் தேவையில்லை என்ற செருக்கில் யாகம் செய்ய, அதனால் பிரமனின் வேள்வியில் அக்னி ஓர் அதிசய பொருளாக அழைக்கப்படாத ஓர் பொருளாக ஆகிட, மேலே விரிக்கப்பட்ட வேள்விகளிற் போலவே, இங்கும் உண்மையான வேள்வி சிவாக்னியை வேண்டித் தொழுவதே என்ற உண்மையை பிரமதேவனும் அறியும் வகையில் அவனது வேளியிலும் உள்கலந்து தன் கருனையின் காரணமாக இங்கும் சிவன் தீப்பிழம்பாக எழுந்து ஆரிக்கின்றான் என்பதாம். ஆர்> ஆல் : இங்கு ஆரித்தல் தீப்பிழம்பாகச் சுடர்தல், எரித்தல்.  இதனாலேயே சிவன் ஆரியன் ஆகின்றான

 

படைப்புக் கடவுளாகத் திகழும் பிரமதேவன், ஐம்முகங்களில் வீடுபேற்றின் ஓர் முகத்தை இழந்த நான்முகனும், வேதங்கள் போன்ற மறைநூற்களின் தெய்வமுமாகிய வேதியனும் ஆகும். இறைவன் இந்த வடிவத்தை எடுத்து மக்கள் அகத்தே எழுந்து அவர்கள் உயிரில் சாத்திர வேட்கையை எழுப்பி மறைநூற்களை ஓதித்தான் ஞானம்ம் தேடவேண்டும் எனும் வேட்கையை மயக்கை பதிவித்து சாத்திரப் பித்தர்களாக பேய்களாக அவர்களை விரட்டுவன். இவர்கள் மற்ற ஞான விசாரணைகளை ஒதுக்கியும், ஆடுதல் பத்திப் பாடல்களைப் பாடுதல், மந்திரங்கள் ஓதி செபங்கள் செய்தல் மக்களோடு மக்களாக வாழ்ந்து நல்ல தொண்டுகள் பல செய்தல் போன்றவற்றையெல்லாம் ஒதுக்கி. பித்தம் பிடித்தவர்கள போல சாத்திரங்களை ஓதி அவற்றால வருகின்ற நூலறிவே மேலானது என்று தருக்கி கல்வியிற் சிறந்த வேறு ஞானயோகம் யாதுமில்லை என்று செருக்காடுவர்.

 

இங்கு எப்படி சிவன் அவர்களை ஆரிக்கின்றான் அதாவது எரிக்கின்றான்?

 

இறைவன் சிவனாக சிவாக்னியாக எழுந்து எரித்தல், பிரமனின் ஆட்சியில் சிக்குண்டு நூலறிவே திரட்டி அதனையே பேசி தருகிற்கும் சாத்திரப் பேய்களாகிய மானிடர்களை எப்படி எரித்து ஞானம் புகட்டுகின்றான்? அவர்கள் செய்வது மெய்யான வேள்வி அல்ல என்று அவர்களே உணருமாறு எப்படி செய்கின்றான்?

 

காரைக்கால பேயார் பாடியது நினைவிற்கு வருகின்றது: நூலறிவு பேசி நுழைவிலார் திரிக! என்று அவர் இந்த சாத்திரப் பேய்களை விரட்டவில்லையா?

 

வெறும் சாத்திர அறிவு நூலறிவு மாத்திரம்  அகத்தே வாழ்கையில் எழக்கூடிய வேதனைகளை மன விரக்திகளை துன்பங்களை துயரங்களை போக்க உதவும் ஆழ் நுழைவுகளைத் தராது.   இதனால் தன் விரக்திகளை போக்க முடியாத வறட்டு வேதாந்தம் பேசுவோர்களாகத் திர்ய அவர்கள் அறிவின் அற்பம் புரியத் தொடங்குகின்றது. அதுபொழுது இறைவன் தீப்பிழம்பாக எழுந்து  ஞான அந்தகாரத்தை உணர்த்டி அதனை ஞானக் கண்களை சிறிது விழிப்பித்துப் போக்கி  தீக்கை செய்வதின் வழி இந்த சாத்திர போதை போக்கபப்டுகின்றது. ஆழ் நுழையும் வர மனதில் அமைதியும் சாந்தியும் நிலவத் தொடங்குகின்றது

 

இங்கு தீக்கை என்பது பல துன்பங்கள் வழியாக ஆன்மாவைத் துன்புறுத்தி அதனால் நூலறிவு அற்பம என்று உணர்த்துவது ஆகும்..

 

கல்விக் கேள்விகளில் விழுந்து பரந்துபட்ட நூலறிவில் சிறந்திருப்பது, அகத்தே எழக்கூடிய விரக்தியால வருகின்ற துன்பங்களை ஓர் அகச் சூன்யத்தைப் போக்குமாறு இல்லை. இதனை உணரச் செய்து சாத்திரங்களை ஓரளவு ஓதி பின்  அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு இறைவனையே ஆழ விரும்பி அவன் அருளாலேயே அகத்தே செறிந்திருக்கும் ஆணவமலத்தைப் போக்கிச் சுத்தமாகி சிவானந்தம் புசிக்க வேண்டும்  இதுவே மெய்யான வேள்வி என்றவாறு இறைவன் ஆடுகின்றான்.

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 



2013/12/3 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Dec 13, 2013, 2:29:46 AM12/13/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

இடுகை 19 தக்கன் வேள்வி-4

 

இதுவரை சிவாக்னி எழுப்பி அகத்தே செறிந்திருக்கும் ஞான அந்தகாரத்தை அதற்கு மூலமாக இருக்கும் ஆணவ மலத்தை நீக்கா வகையில் செய்யப்படுm எவ்வகை வேள்வியும் பொய் வேள்வியாகிய தக்கன் வேள்வி ஆகிவிடும் என்று விளக்கிய திருமூலர் அடுத்thu இதன் தொடர்ச்சியாக ஏனைய தெய்வங்களின் ஆட்சியில் நடக்கும் ஏனைய வேள்விகளைப் பற்றியும் மேலும் பொதுவாக ஏன் இப்படி பல தெய்வங்களின் ஆட்சி என்பதைப் பற்றியும் பேசுகின்றார் அடுத்த பாட்டில். இங்கு இந்து சமயத்தில் இறைவன் ஒன்றே என்ர போதிலும் பல தெய்வ வழிபாடும் போற்றப்படுகின்றது என்பதற்கு ஓர் நல்ல விளக்கம் கிடைக்கின்றது.

 

356

 

அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள்

அப்பரிசே அவராகிய காரணம்

அப்பரிசு அங்கி யுள நாளும் உள்ளிட்டு

அப்பரி சாகி அலர்ந்திருந் தானே

 

மேலான சிவஞானம் வேட்டு உண்மையான வேள்வியாகிய அகத்தே சிவாக்னியை எழுப்பி ஆணவ மலத்தை எரித்து இல்லாது போக்குவது என்பது ஆன்மாக்கள் தொடகத்திலேயே செய்யும் ஓர் வேள்வி அல்ல. முடிவான இந்த சிவவேள்விக்கு வரும் முன்னர் பல பிழையான வழிகளில் சென்று அது பொழுது அவை ஞானம் தரா பிழையான வழிகள் என்று உணர்ந்து விட்டு நீங்கி இவ்வாறு ஏனைய பல பிழையான வேள்விகளையும் பிழையென அறிந்து ஒதுங்கிடவேத்தான் முடிவில் உண்மையான சிவவேள்வியை ஓர் ஆன்மா செய்து உய்யும்

 

மேலே தக்கன் திருமால் பிரமம் போன்றோர் செய்த வேள்வி போன்றே இன்னும் பல தேவர்கள் ஆதிக்கத்திலும் பல பிழையான வேள்விகள் உண்டு. இந்திரன் வருணன் போன்ற எத்தனையோ தேவர்கள் ஆட்சியில் எழும் வேட்கைகள் இவற்றின் பால் அடங்கும்

 

ஆனால் ஏன் பரசிவனே அவ்வவ் தேவர்கள் ஆகி பிழையான வேள்விகளில் மக்கள் விழுமாறும்  ஆடுகின்றான்?

 

மெய்யான சிவாக்னி வேட்கும் வேள்வி குன்றுச்சி அடைவது போன்ற ஒன்று. கீழான பல படிகளைக் கண்டு ஏறி ஏறி உயர்ந்து அதுபொழுது இன்னும் இன்னும் உயரவேண்டும் என்றும் உணர்ந்து விடாது ஏறவேத் தான் முடிவில் குன்றுச்சி அடைந்து இனியும் மேலே ஏறமுடியாது தேவையும் இல்லை என்ற முடிவிற்கு வந்து மெய்யான சிவ வேள்வியில் ஆன்மா விழும்

 

இந்த நிலமைக்கு அறிவின் ஆழமான புரிவிற்கு ஆன்மாக்களை கொண்டு வரவே தான் பரசிவன் இவ்வாறான தெய்வ வடிவங்களை எடுப்பினும் அவற்றின் ஆழத்து உள்ளீடாக சிவாக்னியாகவே இருந்து தங்கள் பிழைகளை உணர. அகத்தே சிவாக்னியாகவே அலர்ந்து மெய்யான வேள்வியுள் விழும்பபடியும் அதனால் ஞனாம் கைவர வீடுபேறு அடையும் படியும் இறைவன உதவுகின்றான்.

 

இது உடன் நமக்கு மாணிக்கவாசகரின் “ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க’ என்ற அழகிய அடியை நினைவிற்குக் கொண்டு வருகின்றது.

 

தமிழர்கள் போற்றுவது ஏகவிறைவன் எனும்  Monotheism  அல்ல, அநேக இறைவர்கள் எனும்  Polytheism  அல்ல. மாறாக ஒரே இறைவன் பல தெய்வங்களாக வெளிப்படுகின்றான் எனும்  Metatheism  ஆகும்.

 

இறைவனுக்கு வடிவமே இல்லை என்றோ இருந்தால் ஒரே வடிவம் தான் என்றோ ஓர் மதம் எழுந்தால் அது மதவெறியையே மக்களிடையயே உருவாக்கும். மாந்தர்களின் அறிவு பலதிறப்பட்டது. அவரவர் அறிவிற்கு ஏற்ப இறைவன் தெய்வ வடிவங்களை உருவாக்கி அவர்களை ஆட்கொள்ளுமாறு செய்து அவர்களை படிப்படியாக உயர் நிலைக்குக் கொண்டு வருகின்றான்

 

நம்மாழ்வர் அழகிய ஓர் பாடலில் இதனையே இன்னும் அற்புதமாகப் பாடுகின்றார்:

 

திருவாய்மொழி 1-5 

 

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை 

அவரவர் இறைவர் என அடி அடைவர்கள் 

அவரவர் இறையவர் குறைவு இலர்; இறையவர் 

அவரவர் விதிவழி அடைய நின்றனரே  

 

 

பக்குவத்தில் வேறுபடும் மக்கள் தத்தம் அறிவின் எல்லைக்கு ஏற்ப அவரவர் புரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படும் இறைவனை, அவ்வடிவத்து தெய்வமே இறைவர் எனத் தொழுது முடிவில் இணையடி அடைந்து மகிழ்வர்;  இவ்வாறு ஒவ்வொருவரின் அறிவுக்கேற்ற வகையில்  ஓர் வடிவில் வெளிப்படும் இறைவன் ஒருவனே என, அவரவர் கொள்ளும் தெய்வ வடிவங்கள் யாதாயினும் அதில் குறையாதுமில்லை: ஒவ்வொருவரும் இவ்வாறு அருள்பாலிக்கும் இறைவனை அவரவர் விதிவழி சென்று  நிச்சயமாக அடைய நிற்கின்றனர்.  

 

 

இந்த பரந்த திறந்த அணுகுமுறையே இங்கு நலமே விளக்கப்படுகின்றது. இதுவே தமிழர்களிடையே மத சகிப்புத் தன்மையையும் ஆழ பதித்துள்ளது

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 



2013/12/8 K. Loganathan <k.ula...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages