ஈ.வெ.ரா பெரியாரின் தமிழ்ப் பற்று

1,918 views
Skip to first unread message

சவடால் வைத்தி

unread,
Apr 5, 2014, 7:49:55 AM4/5/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

"தமிழ் மொழி நம்முடைய தாய்மொழி; அது மிகவும் உயர்ந்த மொழி அது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி; சமயத்தை வளர்க்கும் ஒழி; பழமையின் மொழி; உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லபடுகின்ற காரணத்தால் நான் ஹிந்தியை எதிர்த்துப் போராடவில்லை" என்றும், "எனது ஹிந்தி எதிர்ப்புத் தமிழுக்காக அல்ல" என்றும், "என்னைப் பொருத்தவரையிலும் ஹிந்தியைப் பற்றிக் கவலை இல்லை. தமிழைப் பற்றிய பிடிவாதமும் இல்லை" என்றும் அவர் பலமேடைகளில் பேசியும், கட்டுரைகளாக பல்வேறு ஏடுகளில் எழுதியும் வந்தார் என்று டாக்டர் ந.சுப்பு ரெட்டியார் 'தந்தை பெரியார் சிந்தனைகள்' என்ற தனது நூலில் வெளியிட்டு இருக்கிறார். 

தமிழ்ப் புலவர்களைப் பற்றியும், தமிழ்க் கவிஞர்களைப் பற்றியும், தமிழ் மொழியைப் பற்றியும் பெரியார் ஈ.வெ.ரா: 

(1) தமிழ் புலவர்கள் தமிழை ஒரு நியூசென்ஸ் ஆக ஆக்கிவிட்டார்கள். அதாவது தமிழினால் மக்களுக்கு வாழ்க்கையில் வளர்ச்சியில் ஒரு பயனும் ஏற்பட முடியாதபடி செய்து விட்டார்கள். 

(2) நம் நாட்டில் எனக்கு தெரிந்தவரையில் தமிழ் நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை. 

(3) மக்களுக்கு அறிவு வரும்படி எதையும் சொல்ல ஒரு வெங்காய புலவனும் இல்லை. 

(4) தமிழ் கவிஞர்கள் தமிழைப் புகழ்ந்தது போல் வேறு எந்த மொழியையும் அந்த மொழிக் கவிஞர்கள் புகழ்ந்ததில்லை. 

(5) தமிழ் மிகவும் காட்டுமிராண்டிகள் கையாள வேண்டிய மொழியாகும். நாகரீகத்திற்கேற்ற வண்ணம் அமைந்துள்ள மொழி என்று கூறுவதற்கில்லை. 

(6) தமிழ் படித்தால் சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதேயழிய, அறிவுவாதியாக ஆக முடிவதே இல்லை. அதுமாத்திரமே அல்லாமல் எவ்வளவுக் கெவ்வளவு தமிழ் படிப்பு ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனது கண்கள் முதுகுப்பக்கம் சென்று முதுகுப்பக்கம் கூர்ந்து பார்க்கவே முடிகின்றதே தவிர, முன்பக்கம் பார்க்க முடிவதே இல்லை. 

(7) தமிழ் படிக்காதவனுக்குத்தான் முன்பக்கப் பார்வை ஏற்படுகிறது. தமிழ் படித்துவிட்டால் பின்பார்வைதான் ஏற்பட முடிகிறது. எந்தத் தமிழ்ப் புலவனும், மேதையும் தமிழைப் படித்ததன் மூலம் முன்புறம் பார்க்கும் வாய்ப்பே இல்லாதவனாக ஆகிவிடுகின்றான். 

(8) "தமிழனைத் தலையெடுக்க முடியாமல் செய்வது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் - நூல்களே. அவை புதைகுழியின் மீது பாறாங்கல்லை வைத்து அழுத்தி இருப்பதுப் போன்று தலை தூக்க முடியாமல் செய்து வருகின்றன" என்கிறார். 

1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 3.3.1965-ல் "விடுதலை" இதழின் தலையங்கத்தில் "இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவு கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள், நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் "கொண்டிருக்கிறார்கள்" என்றும், "தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்துவிட்டார்கள் என்றும், காமராஜர் ஆட்சி அவசியமா? இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்" என்றும், 8.3.1965-ல் "விடுதலை" இதழின் தலையங்கத்தில் "தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை. தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும் இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ, வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி" என்றும் அவரது கையப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்

நன்றி: புதிய கோடாங்கி (மாத இதழ்) - ஏப்ரல் 2003 இதழ் - எண் 705, 101-ஆவது தெரு, 15-ஆவது செக்டர், கே.கே.நகர், சென்னை - 600 078 

சவடால் வைத்தி

N. Ganesan

unread,
Apr 5, 2014, 8:50:21 AM4/5/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
சவடால் வைத்தி,

இதை இணையத்தில் வெளியிட்டவர் 11 ஆண்டுமுன்னர் அமெரிக்கா பி. கே. சிவகுமார்.
இணையத்தில் தமிழ் நூல்களை விற்கும் சேவையை முதலில் தொடங்கியவர்களில் ஒரூவர்.
பெரியார், பேரா. நாகராஜ், .. போலவே அவர் மனைவியும் கொங்குநாடு தான்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 5, 2014, 9:02:46 AM4/5/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
On Saturday, April 5, 2014 5:50:21 AM UTC-7, N. Ganesan wrote:
சவடால் வைத்தி,

இதை இணையத்தில் வெளியிட்டவர் 11 ஆண்டுமுன்னர் அமெரிக்கா பி. கே. சிவகுமார்.
இணையத்தில் தமிழ் நூல்களை விற்கும் சேவையை முதலில் தொடங்கியவர்களில் ஒரூவர்.
பெரியார், பேரா. நாகராஜ், .. போலவே அவர் மனைவியும் கொங்குநாடு தான்.

நா. கணேசன்


ஸ்ரீமான் ஈவேரா நாயக்கர் இன்னும் பல கருத்துக்களும் தெரிவித்துள்ளார்.
திருப்பூவணம் முனைவர் காளைராஜன் புத்தர் காலம் மாணிக்கவாசரினது
என்று எழுதிய மடல் இப்பொழுது பார்த்தேன். தமிழ் ஆராய்ச்சிகள் எப்படி
இணையத்தில் என்பதற்கு புத்தர் காலம் மாணிக்கவாசகர் என்பதும்,
ஹிந்துத்வாவின் ஆதி சங்கரர் காலம் கி.மு 6-ஆம் நூற்றாண்டு என்று எழுதுவதுமாகச்
செல்கிறது. கருணாநிதி பெரியாரைக் கேட்டாராம்: திருக்குறள் ஒன்றையாவது
விட்டுவைக்கக் கூடாதா? என.

பெரியாரைப் பற்றி நிறைய 20-ஆண்டுக் காலமாக இணையத்தில் உள்ளது.
அப்பப்ப ஜில்ஜில் என ஒரு பத்தி அனுப்புங்க. ஆராய்ச்சி பேராசிரியரே.

அன்புடன்,
நா. கணேசன்


திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம் 


வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் பெரியார் 

முட்டாள்தனம் 
இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?- ‘விடுதலை’(14.11.1972)யில் பெரியார்

ஹிந்தி இருக்கட்டும்
இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை. அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம். சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.- ‘விடுதலை’(07.10.1948)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ஒரு புளுகு 
….அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? – விடுதலை(28.3.60)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி 
இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.- விடுதலை(28.7.51)யில் பெரியார்

முக்கொலை 
போதாக்குறைக்கு ‘பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்’ என்று சொல்கிறார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளையெல்லாம் கல்லூரியிலும்கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்குகிறோம் என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்ததாகத்தானே முடியும்? இதுதானா இந்தச் சிப்பாய்கள் வேலை? – விடுதலை (5.4.67)யில் பெரியார்

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது 
தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். – தந்தை பெரியார் விடுதலை(27.11.43)யில்..

தமிழின் பெயரால் பிழைப்பு 
நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.-தந்தை பெரியார் விடுதலை (16.3.67)
தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .
..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?
இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரியத்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.
இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்? 
சாதாரணமாகப் பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். – தந்தை பெரியார் ‘அறிவு விருந்து’ நூலில்

தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது? 
நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்.’ இதுதானா? அய்யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். – தந்தை பெரியார்

தொல்காப்பியன் மாபெரும் துரோகி 
தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன? 
தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால்பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.- தந்தை பெரியார்

பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம் 
அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.- தந்தை பெரியார்

தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் 
தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக.. தமிழ்ப் புலவராகவே வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள் வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள்வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.

தமிழால் என்ன நன்மை? 
தமிழ் தோன்றிய 3000-4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுப்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை 
இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர்கூட சிந்தித்துப் பேசுவதில்லை. ‘வாய் இருக்கிறது; எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிதுகூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், ‘தமிழ் மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனவாயா?

EVR ON RESERVATION:

எந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் சலுகை கூடாது
மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் – அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு, தாழ்வோ, அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.- தந்தை பெரியார்

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Apr 5, 2014, 7:42:46 PM4/5/14
to vall...@googlegroups.com
ஆகா! சூட்சுமம் இப்போது தான் புரிந்தது.

ராமாயணம் வால்மீகி சமஸ்கிருதத்தில் எழுதினால் அது அவருக்கு எப்படி "பகுத்தறிவு" ஆனது? ஆனால் தமிழில் கம்பர் எழுதினால் அது "எப்படி காட்டு மிராண்டி பாஷை" ஆனது? ராஜாஜி அவருக்கு ஆத்மார்த்த நண்பர் ஆனதன் ரகசியம் இப்போது அல்லவா புரிகிறது.எப்படியெல்லாம் திட்டினால் தமிழுக்கு சூடு சுரணை வரும் என்று வடிவேலு பாணியில் "ரூம் போட்டு" யோசித்து
திட்டியிருக்கிறார் போலும்.

இன வரலாற்றுக்குள் இருக்கும் இத்தகைய வினோத சாணக்கியத்தனத்தை யாராவது விளக்கினால் தான் இந்த அர்த்த சாஸ்திரத்தின் அர்த்தம் புரியும் போல் தெரிகிறது.அடிப்படையில் பெரியார் ஒரு மானிடவாதியாய் இருக்கலாம்.ஆனால் அந்த மானிடர்கள் பேசும் மொழி ஒரு "மிருக"பாஷை என்ற எண்ணம் இருக்குமானால் அவரது பகுத்தறிவு வாதம் தரைமட்டம் ஆகிவிடும்படி கேலிக்கூத்தாகி விடலாம்.பெர்னாட்ஷா ஆங்கில ஒலிப்பின் முரண்பாடுகளை எள்ளி நகையாடினார்.அப்போது தான் அந்த மொழி சீர்த்திருத்தம் பெரும் என்று.அவர் கூட ஆங்கிலத்தை காட்டுமிராண்டி பாஷை என்று சொல்லவில்லையே.எப்படி இருப்பினும் பெரியாஸத்தை நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை.ஆனால் தமிழ் விரோதம் தான் பெரியாரிஸமா? என்ற‌ கேள்வி இங்கு தீயாக எரிகிறது.பெரியார்வாதிகள் தான் விளக்கவேண்டும் இதை.

================================================ருத்ரா

Megala Ramamourty

unread,
Apr 5, 2014, 8:43:15 PM4/5/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
பெரியாரின் தமிழ் பற்றிய, தமிழிலக்கியங்கள் பற்றிய மதிப்பீடு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாய் இருக்கிறது. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், நாம் மிக உயர்ந்ததாக இன்றும் கொண்டாடி வருகின்ற, நம் பண்பாட்டு அடையாளங்களாக உலக அரங்கில் முன்வைக்கின்ற  தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்தெல்லாம் மிக மிகத் தரக்குறைவாக பெரியார் விமரிசித்திருப்பதை இப்போதுதான் அறிகிறேன் சவடால் ஐயா.

நம் தமிழ் நூல்கள் அனைத்தையுமே ஆரியத் தாக்கம் உள்ள நூல்கள் என்று அவர் கூறியிருப்பது ஏற்புடைய கருத்தாகத் தெரியவில்லையே!

நம் நூல்கள் குறித்த தவறான புரிதலை, அவற்றின்மீது தேவையில்லாத துவேஷத்தை (அவரோடு உடனிருந்தவர்களில் யாரோ) அவருக்குத் திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

பெரியாரின் ஆதரவாளர்களாக இருந்தவர்களில் பலர் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்களாகவும், தமிழறிஞர்களாகவும் அன்று இருந்ததை நாம் அறிவோம் (எ-கா: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா போன்றோர்). தமிழ் பற்றிய தங்கள் தலைவரின்  தரக்குறைவான  விமரிசனங்கள், பரப்புரைகள் குறித்து இவர்களது நிலைப்பாடு, எண்ணம் என்னவாக இருந்தது? இவர்கள் யாருமே பெரியாரைக் கண்டிக்கவில்லையா என அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். தெரிந்தவர்கள் தெளிவுபடுத்துங்கள்!

அன்புடன்,
மேகலா

ஜில்ஜில் ரமாமணி

unread,
Apr 5, 2014, 11:55:14 PM4/5/14
to mint...@googlegroups.com, vallamai


மகாகவி பாரதியாரைப் பார்ப்பனர் என்று கொச்சை மொழிகளில் அன்றைய திராவிடர் கழகத்தினர் ஏசிக் கொண்டிருந்ததை, அண்ணாதுரை விரும்பவில்லை. பாரதியார் சமுதாய சீர்திருத்தச் செம்மல் என்று அவர் புகழாரம் சூட்டினார். பாரதி ஒரு மக்கள் கவிஞர் என்று சென்னை வானொலியில் அவர் உரை நிகழ்த்தினார்.

அதுமட்டுமின்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கும் ஒரு விழா, அண்ணாதுரையின் பெருமுயற்சியால் 28.7.1946 அன்று நடந்தது. பாரதிக்குத் தாசன், அதாவது பாரதியாரின்அடிமை என்று தமது புனைப் பெயரை வைத்துக் கொண்ட, கனக சுப்புரத்தினத்திற்கு விழா எடுப்பதைத் திராவிடர் கழகத்தினரில் கணிசமானவர்கள் விரும்பவில்லை. அவர்கள் பாரதிதாசனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். அவருக்குப் பொற்கிழி அளிக்க முன்வந்த அண்ணாதுரை மீதும் அவர்களது கோபம் பாய்ந்தது.

ஆனால், அண்ணாதுரை அது குறித்துக் கவலைப்படாமல் விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். அவரது அன்றைய நெருங்கிய சகாக்களான சி.வி.எம்.அண்ணாமலை, சி.டி.டி.அரசு, க.அன்பழகன், ஈ.வெ.கி.சம்பத் முதலியவர்கள் விழாவுக்காகத் தீவிரமாகப் பணி ஆற்றினார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை, ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ.விஸ்வநாதம், டி.செங்கல்வராயன், ம.பொ.சிவஞானம், மு.வரதராசன் முதலியவர்கள் அந்த விழாவில் பேசினார்கள். அண்ணாதுரை பொற்கிழியைப் பாரதிதாசனிடம் அளித்தார்.

அதற்குக் கைமாறாகச் சோலைக்குள்ளே குயிலுக்குஞ்சு சும்மா கூவும் இங்கே குயில் கூவியதைப் படித்தால் தமிழனால் தமிழ்னை எந்நாளும் புரிந்துகொள்ள முடியாது என்பது புரியும்
டிஸ்கி : இதைப் படித்தபின் நீக்கிவிடவும்

புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்

குத்தறிவாளர்கள் சாதியை வைத்து இழிவு செய்யாதவர்கள் என்ற ஒரு பிம்பம் நம் எல்லோரிடமும் உண்டு. ஆனால் பகுத்தறிவாளர்களும் சாதியை வைத்து இழிவு செய்பவர்கள் என்ற உதாரணத்திற்கு ஒரு பகுத்தறிவாளரை சொல்லவேண்டுமென்றால் புகழ்பெற்ற கவிஞர் – திராவிடர் இயக்கக்காரர்களால் பொற்கிழி பெற்ற ஒரே தலைவரை சொல்லலாம்.

யார் அவர்?

புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்ட பாரதிதாசன் தான்.

திராவிட இயக்கத்தில் அழுத்தமாகத் தடம்பதித்த முதன்மைக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்தான்.

பாரதிதாசன் என்று சொன்னாலே அவர் ஒரு புரட்சிக்கவி; சாதி, மதம், இவற்றை எதிர்த்தவர்; பெண் விடுதலை, தமிழ்ப் பற்று இவற்றை ஆதரித்தவர் என்ற பிம்பம்தான் தோன்றுகிறது.

ஆனால் அவர் கடைபிடித்த கொள்கை அதற்கு எதிராகவே இருந்தது.

அவர் என்னென்ன தத்துவங்களை எழுதினாரோ பாடினாரோ அதைத் தம் வாழ்வில் கடைபிடிக்கவில்லை.

’….. கலப்பு மணம் ஒன்றே

நல்வழிக்குக் கைகாட்டி’

என்று பாடிய கவிஞர் தம் மக்களுக்குக் கலப்பு மணம் செய்விக்க முன்வரவில்லை.அதைக்கூட விட்டுவிடலாம்.

பாரதிதாசன் பகுத்தறிவுவாதி; சாதிக்குத் தீ என்றெல்லாம் சொல்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை. திராவிட இயக்க பகுத்தறிவுவாதிகளும் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசுபவர்கள்தான்.

anna_and_bharatidasan28-7-1946ல் புதுச்சேரி மாகாணத்தின் திராவிடர் கழகத்தலைவர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணாத்துரையால் பொற்கிழி வழங்கப்பட்டது. பொற்கிழியாக ரூ. 25,000 தரப்பட்டது. அந்தக்காலத்தில் இத்தொகை மிகப்பெரிய தொகை. எந்தக் கவிஞனுக்கும் அந்தக் காலகட்டத்தில் இந்த அளவு தொகை வழங்கப்படவில்லை.

பின்னாளில் அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் முரண்பாடு எழுந்தது. அந்த முரண்பாட்டின் காரணமாக பகுத்தறிவுவாதி பாரதிதாசன் அண்ணாத்துரையை எவ்வளவு கேவலமாக எழுதமுடியுமோ அவ்வளவு கேவலமாக எழுதினார், தான் நடத்திய ’குயில்’ வார இதழில். முரண்பாடு என்று வந்துவிட்டால் சாதி ஒழிப்பாவாது; கண்ணியமாவது – இவற்றை எல்லாம் பகுத்தறிவுவாதிகளிடம் எதிர்பார்க்கமுடியாது.

சரி அப்படி என்னதான் எழுதினார் பாரதிதாசன்?

1958ம் ஆண்டு தான் நடத்திய குயில் வார இதழில்தான் பாரதிதாசன் அண்ணாத்துரையை கேவலமாக விமர்சித்து எழுதினார்.

கட்டுரையின் தலைப்பு : அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?

இந்தத் தலைப்பில் 4 தொடர்கட்டுரைகளை எழுதினார் பாரதிதாசன். அந்தக் கட்டுரைகளை இப்போது பார்ப்போம்.

1. குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18

அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
…..
அறிவிப்பு உ. :-

இதற்குமுன் அதே முரசொலியில் அண்ணாத்துரை உங்கட்குக் கொடுத்த பொற்கிழிமேல் நீங்கள் நின்றுகொண்டு ஒலிபெருக்கியில் பேசுகின்றது போல் படம் வந்திருந்தது. அண்ணாத்துரை தான் உங்களைப் பொதுமேடையில் ஏற்றினாராம்.

இதற்கும் அடுத்துவரும் அறிவிப்புக்கும் சேர்த்துப் பதில் எழுதுவேன்.

அடுத்த அறிவிப்பு வருமாறு :-

முன் ஒருமுறை, உங்கட்குப் பொற்கிழி தந்து பொன்னாடை போர்த்தினார் அண்ணாத்துரை என்பதாகக் காட்டியிருந்தார் தம் திராவிடனில் என்.வி.நடராசன் அவர்கள். அதுவுமின்றி அண்ணாத்துரையே புதுவையில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது கவிஞர்க்குப் பொற்கிழி கொடுத்தேன், பொன்னாடை போர்த்தினேன்; அப்படியிருந்தும் என்னை கவிஞர் எதிர்க்கிறார் என்று கூறினார். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டாமா?

எனது பதில் :-

எனக்குப் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி கொடுப்பதற்கென்று அமைந்த குழுவினர் தம் செயலைத் தொடங்கிப் பணியாற்றி வருகையில் அண்ணாத்துரை நிலைமை எப்படி என்பது தெரிந்தால், அண்ணாத்துரை எனக்குப் பொற்கிழி பொன்னாடை தந்திருக்க முடியாது என்பது விளங்கும்.

அதைக் கேளுங்கள்.

அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!

அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.

பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.

இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?

பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.

இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.

இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று.ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.

தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது.

எனக்கு பொன்னாடைப் போர்த்தும் விழாக்குழுவானது மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அக்குழுவில் நாமக்கல் கருப்பண்ணர், செல்லப்பர் முதலியவர்கள் நாட்டில் செல்வாக்குள்ள புள்ளிகள்.

காலஞ்சென்ற குமாரசாமி இராசாவைத் தலைவராக கொண்ட இராசபாளையத்து மக்கள் என் விழாக்குழுவினர் வாயிலாக என்னைப் பாராட்ட எண்ணாமல் தனியாக என்னை இராசப்பாளையத்திற்கு அழைத்துப் பண முடிப்புக் கொடுக்க எண்ணி என்னை அழைத்தார்கள்.

நான் இராசபாளையம் போக இருப்பது அண்ணாத்துரைக்குத் தெரிந்து நானும் வருகின்றேன் என்று என்னிடம் கெஞ்சினார். அழைத்துப்போனேன். விழா நடந்தது அங்கும் பொற்கிழி அளித்தார்கள். அண்ணாத்துரை ஏதும் கேட்கவில்லை. அவர் எதிர்பார்த்தது சிறிதன்று.

இராசபாளையம் விட்டு வந்த அண்ணாத்துரை, என் விழாக்குழுவினரிடையெல்லாம் சென்று நான் கவிஞருடன் இராசபாளையம் சென்றேன் – சென்றேன்- என்று பறையடித்தார்.விழாக்குழுவில் புகுந்துகொள்ள வேண்டும் என்பது அண்ணாத்துரையின் ஆசை!

விழாக்குழுவினரில் ஒருவர் டி.என்.இராமன்! அவரை அண்ணாத்துரை நெருங்கினார்.தம் ஆசையை மலர்த்தினார். இராமன் ஒப்பினார். மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?

அண்ணாத்துரை விழாக்குழுவினரில் ஒருவராகிவிட்டார்.

(தொடரும்)

2. குயில் இதழ், குரல்– – 1, (7-10-58), இசை -19

விழா நாளைக்கு என்னும்போது நான் சென்னையில் தங்குவதெற்கென்றமைத்த வீட்டில் வந்து தங்கிவிட்டேன். அன்றைக்கே சிங்கப்பூர், திருச்சி, சேலம் முதலிய இடங்களினின்று பெருமக்கள் சென்னையில் வந்து நிறைந்துவிட்டார்கள்.

என்னைச் சிலர் நேரில் வந்து கண்டார்கள். அவர்களால் நான் பெற்ற முறையீடுகள் குறிப்பிடத்தக்கவை.

அண்ணாத்துரை வந்து சொன்னது : நான் விழாக்குழுவில் பொருட் காப்பாளனாக இருந்து வேலை செய்யாவிட்டால் இத்தனை சிறப்பாக இந்த விழா அமையாது.என் செலவில் இந்தப் பொன்னாடையை நெய்யச் செய்தேன்.

அண்ணாத்துரை போனபின் மற்றொரு செல்வந்தர் வருகின்றார் அவர் சொன்னது :என் செலவில் என் தறியில் என் ஆளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது, பொன்னாடை.

சேலத்தார் நால்வர் வருகின்றார்கள். அவர்கள் சொன்னது :சேலத்துப் பகுதியில் விழாவுக்கென்று தொகை பெற்றுக் கொண்டவர் இரசீது தருவதாய்ச் சொல்லியும் தரவேயில்லை.

சிங்கப்பூரார் ஒருவர் வருகின்றார் அவர் சொன்னது : பன்முறை பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கின்றோம் சிங்கப்பூரினின்று! தொகை பெற்றுக் கொண்டதற்கு இரசீது அனுப்புவதில் சுணக்கம் காட்டுகின்றார்கள் குழுவினர்.

டி.என்.இராமன் வருகின்றார். அவர் சொன்னது: குயில் செய்யுள் வார இதழ் வெளியிடுவதற்கான முற்செலவுக்காக இரண்டாயிரம் ரூபாய் தனியே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுபோக மீதியைத்தான் உங்களுக்குப் பொற்கிழியாக அளிக்கப்படும்.

விழா நடந்தது. பொன்னாடை போர்த்தப்பட்டேன், பொற்கிழியை அண்ணாத்துரை கையால் அளிக்கப் பெற்றேன். அதை மிக விழிப்பாக அண்ணாத்துரை முயற்சியால் நிழற்படம் எடுக்கப்பெற்றேன்.

பொற்கிழி பையில் ஐயாயிரம் குறையக் காணப் பெற்றேன். கணக்குப் பின்னால் தருவதாகக் கேட்கப் பெற்றேன். பல விடங்களிலிருந்தும் இருபத்தையாயிரந்தான் சேர்ந்ததென்று கூறப்பெற்றேன். என் வீட்டுக்கு அனுப்பப் பெற்றேன்.

விழா நடந்த பின் அடுத்தவாரத்தில் அண்ணாத்துரை வெளியிடும் திராவிட நாட்டில் ஒரு குறிப்புக் காணப்பட்டது. பாரதிதாசன் பொன்னாடை போர்த்து விழாக்குழுவினர், விழா வரவு செலவுக் கணக்கையெல்லாம் பாரதிதாசன் அவர்களிடம் அனுப்பிவிட்டார்கள். இனிப் பாக்கித் தொகையை அனுப்ப வேண்டியவர்கள் நேரே பாரதிதாசன் அவர்கட்கே அனுப்பிவிடுக என்ற கருத்தமைந்திருந்தது.

அவ்வாறு எனக்குக் கணக்கு அனுப்பப்பட்டதா? இன்றுவரைக்கும் அனுப்பப்படவில்லை. அடுத்தடுத்து அப்போதே கேட்டும் அனுப்பவில்லை. கணக்கைக் கேட்டு வாங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதால் கேட்டேன் கணக்குத்தரவில்லை. இன்றுவரைக்கும் (7-10-58) தரவில்லை. அண்ணாத்துரை தரவில்லை. கணக்குத் தரக்கூடாது என்பதற்காகத் தரவில்லை அண்ணாத்துரை!

அதன் தகவல் என்ன?

பாரதிதாசனை ஆசிரியராகக் கொண்டு குயில் கவிதை வார இதழ் வெளிவரும் என்ற மறைவான சுற்றறிக்கை பறந்தது, விற்பனையாளரை நோக்கி! ஆறாயிரம் ரூபாய் குயிலுக்கு முற்பணமாக அனுப்பியிருக்கிறார்கள் விற்பனையாளர்கள்.

என்னிடம் டி.என்.இராமன் வந்து குயிலில் வெளிவர வேண்டிய கவிதைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு, என் அச்சு நிலையத்தையும் சென்னையிலிருக்கட்டும் என்று தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்போது அவர் சொன்னது என்னவென்றால் குயில் பற்றி நீங்கள் சென்னைக்கு வர வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம் என்பது.

சில நாட்களின்பின், குயில் வெளிவருநாள் ஆயிற்றே, அது பிழையில்லாமல் வெளிவரவேண்டுமே என்று கருதிச் சென்னை சென்றேன்.

திருத்தம் பார்க்க முதற்குயில் எனக்கு அனுப்பப்படுகிறது. அதன் முதற்பக்கத்தில் குயிலுக்கு உடையவர்கள் டி.என்.இராமன் என்று காணப்படுகின்றது. அவர்களின் உள் எண்ணத்தை
அறிந்தேன். அவர்களே சொன்னார்கள்: குயில் உம்முடையது அன்று. அச்சகம் உம்முடையது அன்று. குயில் எழுதுவதற்குத் திங்கள் ஊதியமாக 200 ரூபாய் உமக்குக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதனோடு, நீர் எம்மை ஒன்றுமே செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது.

நான் என்ன செய்தேன்?

நான், அந்தக் குயிலுக்கும் எனக்கும் யாதொரு தொடர்புமில்லை,விற்பனையாளரிடம் வாங்கியுள்ள முற்பணத்திற்கு நான் பொறுப்பாளி அல்லேன். இனி நான் என்வாயிலாக வெளியிட இருக்கும் குயிலுக்கு ஆதரவு தருக என்று நாளிதழ் ஒன்றில் அறிக்கை வெளியிட்டு, என் குயிலையும் வெளியிட இருக்கையில் அதன் மேல் இஞ்செக்ஷன் உத்தரவுகோரி ஐகோர்ட்டில் என்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நானும் வழக்கறிஞரை வைத்து எதிர் வழக்கிட்டேன்.

(தொடரும்)

3. குயில் இதழ், குரல்– – 1, (14-10-58), இசை -20

தீர்ப்பாளர், இந்தக் குயில் எந்தப் பணத்தினின்று தோற்றுவிக்கப்பட்டது?என்று கேட்டார்.

அதற்கு டி.என்.ராமன் சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் சொன்னார் : இராமன் பணத்தினின்று என்று!

kuyil_bharatidasan_1என்சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் அதை மறுத்து, பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்ட தொகையினின்று இந்தக் குயில் தோற்றுவிக்கப்பட்டது என்று பதில் கூறினார்.

தீர்ப்பாளர் : அப்படியானால் நிதி தண்டிய – செலவு செய்த கணக்குக் கொண்டு வாருங்கள் என்றார்.

உடனே அதற்கு டி.என்.ராமனுடைய வழக்கறிஞர் ஆம்!ஆம்! காட்டச் சொல்லுங்கள் கணக்கை என்றார். என் வழக்கறிஞர் உறுதியாகச் சொல்கிறேன் கணக்குக் காட்டுவேன் என்றார்.

அடுத்த ஆய்வுமன்றில் நான் கணக்கைக் காட்ட வேண்டும். அண்ணாத்துரைக்கு ஆள் அனுப்பினேன். இதோ அதோ என்றார். அஞ்சல் எழுதினேன். இதோ அதோ! தஞ்சையில்
நாடகத்தின்போது நேரிற்கேட்டேன். இதோ அதோ!

என் குயிலைப் பறிக்கவும் என் அச்சகத்தைப் பறிக்கவும் முன் எண்ணத்தோடு செய்யப்படும் இந்த வேலைகள் அனைத்தும் அண்ணாத்துரையுடையதே என்று தெரிந்தும் நான் விடாப்பிடியாக அண்ணாத்துரையைக் கேட்டுப் பார்த்தேன். ஏன் எனில், விழாக்குழுவில் உள்ளவர்களுக்கு அஞ்சி அண்ணாத்துரை கணக்குகளை என்னிடம் கொடுக்கத்தானே வேண்டும்! ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?விழாக்குழுவினரை அழைத்து- கணக்கைப் பாரதிதாசனிடம் கொடுப்போமானால் நாம் எல்லோரும் சிறைக்குப் போக வேண்டும் என்றார்.

குழுவினர் நம்பினார்கள்! ஏன் அவர்களுக்குப் புரிகின்றது. வரவு வந்த பெருந்தொகை கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது.

கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள்.

இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை!

என் வழக்கு என்ன ஆயிற்று – கெடு தள்ளிக் கொண்டே போகிறது. டி.என்.ராமனின் நிலை கீழ்நோக்கிக் கொண்டே போகின்றது. வழக்கைக் கைவிட்டு விடுவதாக என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் வழக்கைக் கைவிட்டுவிட்டேன். அதன் பயனாகக் குயில் என்னிடமே வந்துவிட்டது. அது சென்னையிலேயே நடந்து கொண்டிருந்தது. அதன்பின் புதுவை வந்தது. அதன்பின் சென்னை அரசினர் அதற்குத் தடைபோட்டார்கள் நின்றது.

அந்தத் தடை நீங்கியது பின் இப்போது புதுவையில் தொடங்கப்பெற்று நடந்து வருகின்றது.

தோழர்கள் எனக்கு அனுப்பிய வினாக்களுக்கு ஒன்று தவிர – விடை சொல்லிவிட்டேன் என்று எண்ணுகின்றேன்.

இன்னும் ஒன்றுக்குத்தான் பதில் சொல்லியாக வேண்டும்.

அந்தக் கேள்வி என்ன?

கருணாநிதி முதலியவர்கள் – கூட்டத்தில் பேசும்போது பாரதிதாசன் பாட்டுக்களைப் பாடுகின்றார்கள். அவ்வாறு பாடியபின், இது மாஜி கவிஞர் பாரதிதாசன் பாட்டு என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன – என்பது.

இதற்கு அடுத்த குயிலில் பதில் தெரிவிக்கின்றேன்.

(தொடரும்)

kuyil_bharatidasan_24. குயில் இதழ், குரல்– – 1, (21-10-58), இசை -21

அண்ணாத்துரையா….. என்ற பகுதி கவிஞர் வெளியூர் செல்ல நேர்ந்ததன் காரணமாக இந்த இதழில் வரவில்லை. அடுத்த இதழில் வரும்.

5. குயில் இதழ், குரல்– – 1, (28-10-58), இசை -22

என் பாட்டைக் கூட்டத்தில் பாடி விடுவது! பாடிய பிறகு இது மாசிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது என்று கூறுவது இதற்கு நான் பதில் கூறுகிறேன். இந்தக் கற்பனை அவர்கட்கு எங்கிருந்து கிடைத்திருக்கும் என்பதை நாம் ஊன்றி நோக்க வேண்டும்.

பொது மகளின் இல்லத்தில் இதுபோன்ற கருத்துக்கள் செயல்கள் கிடைக்கும்.

ஒரு தந்தை பணம் கொடுக்காத காரணத்தால் வருவதை நிறுத்திக் கொள்ளுகிறான்.அல்லது மறுத்து ஒதுக்கப்படுகிறான். அவன் இறந்துவிட வேண்டும் என்பதில்லை.இன்னொரு தந்தை வந்துவிட்டபின் பையன் முன்னைய தந்தையை மாசித் தந்தை என்பான்.

என்னை மாசிக் கவிஞன் என்பவன் அத்தன்மையை மேற்கொண்டவனாயிருக்கலாம். அல்லது கலப்பில்லாத தே***ள் மகனாயிருக்கலாம். [#]

***********************

[#] – கண்ணியம் கருதி இந்த இணையதளத்தில்  *** பயன்படுத்தப் பட்டுள்ளது.  குயில் இதழில் அந்தச் சொல் அப்படியே அச்சில் வந்திருந்தது.

அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் அரசியல் ரீதியான முரண்பாடு எழுந்தபோது பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்.

அண்ணாத்துரை மீதும், பாரதிதாசனின் மீதும் மதிப்பும் மரியாதையையும் யாரேனும் கொண்டிருந்தால் அவர்கள் இதனைப் படித்து அதிர்ச்சியடையக் கூடும்.ஆனால் இவை தான் ‘பேரறிஞரின்’, ‘பாவேந்தரின்’ உண்மை முகங்கள்.

டி.என்.ராமன் இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். ஆகவே அண்ணாத்துரையும் டி.என்.ராமனையும் இணைத்து எழுதினார்.`மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?’என்று அண்ணாத்துரையின் சாதிப் பெயரை வைத்து இழிவு நோக்கில் எழுதியிருக்கும் பாரதிதாசன் சாதியை எதிர்த்தார் என்று சொல்வது நல்ல முரண்நகை.

திராவிட இயக்க கொள்கைகளையாகட்டும், தலைவர்களாகட்டும், தொண்டர்களாகட்டும். அவர்களைப் பற்றிக் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிரசார பிம்பங்களை உண்மைத் தகவல்களின் ஒளியில், மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

சாதி எதிர்ப்பு பற்றிக் கச்சைக் கட்டிப் பாடிய புரட்சி கவிஞரா இப்படி? என்று அதிர்ச்சியைக் காட்ட வேண்டாம். ஏன் என்றால் உள்ளம் முழுக்க அவர்களுக்கு பொய்மையும், போலித்தனமும், கபடமும், வக்கிரமும் தான் இருந்திருக்கிறது. அதோடு உள்ளம் முழுக்க அவர்களுக்கு சாதி இருக்கிறது, அதுதான் இப்படி வெளிவருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.


அந்த விழா கட்சி சார்பற்ற முறையில் நடந்தது. ஈ.வெ.ரா. அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரித்தார்.

On Sunday, 6 April 2014 08:38:49 UTC+5:30, இன்னம்பூரான் wrote:
வ.வே.சு. அய்யர் அவர்களின் கம்பராமாயண ஆய்வு நூல் த.ம.அ.வின் மின்னூலிலொன்று. அதில் ஈ.வே.ரா.வின் சீதையை பற்றிய 'தரக்குறைவான அறிவிலி' விமர்சனம் உளது.

Innamburan S.Soundararajan

unread,
Apr 6, 2014, 12:13:08 AM4/6/14
to vall...@googlegroups.com, mintamil
பாரதிதாசன் தமிழாய்வாளர் வையாபுரியையும் வைதார்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 6, 2014, 6:14:13 AM4/6/14
to vallamai, mintamil



2014-04-06 9:25 GMT+05:30 ஜில்ஜில் ரமாமணி <radius.co...@gmail.com>:

அதற்குக் கைமாறாகச் சோலைக்குள்ளே குயிலுக்குஞ்சு சும்மா கூவும் இங்கே குயில் கூவியதைப் படித்தால் தமிழனால் தமிழனை எந்நாளும் புரிந்துகொள்ள முடியாது என்பது புரியும்

டிஸ்கி : இதைப் படித்தபின் நீக்கிவிடவும்

படித்தபின் நீக்கிவிடவும் என்று குறிப்புடன் ஒன்றை வெளியிடும்போது அப்பதிவு குழுமத்தில் பதிவிடத்தக்கதில்லை என்று அறிந்தும் வெளியிட்டது போல தோன்றுகிறது. பதிவிட்டதின் நோக்கம் அறியத் தரவும்.

வீட்டில் வரவேற்பறையும் புத்தக அலமாரியும் பின்புறம் கழிவறையும் செப்டிக் டாங்க்கும் இருக்கும். புத்தக அலமாரியில் உள்ள அறிவுக் கருவூலங்களை வியந்து பேசலாம்.
வீட்டின் பின்னால் கழிவறை அருகில் மக்கிப்போன செப்டிக் டாங்க் கசடை வெட்டிப் பரிமளிக்கலாமா?
நன்றி
சொ.வினைதீர்த்தான்.

புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்

குத்தறிவாளர்கள் சாதியை வைத்து இழிவு செய்யாதவர்கள் என்ற ஒரு பிம்பம் நம் எல்லோரிடமும் உண்டு. ஆனால் பகுத்தறிவாளர்களும் சாதியை வைத்து இழிவு செய்பவர்கள் என்ற உதாரணத்திற்கு ஒரு பகுத்தறிவாளரை சொல்லவேண்டுமென்றால் புகழ்பெற்ற கவிஞர் – திராவிடர் இயக்கக்காரர்களால் பொற்கிழி பெற்ற ஒரே தலைவரை சொல்லலாம்.


N. Ganesan

unread,
Apr 6, 2014, 10:34:56 AM4/6/14
to mint...@googlegroups.com, vallamai
On Saturday, April 5, 2014 8:55:14 PM UTC-7, ஜில்ஜில் ரமாமணி wrote

மகாகவி பாரதியாரைப் பார்ப்பனர் என்று கொச்சை மொழிகளில் அன்றைய திராவிடர் கழகத்தினர் ஏசிக் கொண்டிருந்ததை, அண்ணாதுரை விரும்பவில்லை. பாரதியார் சமுதாய சீர்திருத்தச் செம்மல் என்று அவர் புகழாரம் சூட்டினார். பாரதி ஒரு மக்கள் கவிஞர் என்று சென்னை வானொலியில் அவர் உரை நிகழ்த்தினார்.


பேராசிரியரே,

பார்ப்பனர் என்றால் கொச்சை மொழியா? செந்தமிழ் இலக்கியங்களில் என்றைக்கும் உள்ள சொல்தானே.
ப்ராமின் என்றால் தான் உயர்வான மொழியா?

பரவுதல் என்றால் தொழுதல். கோயில்களில் தொழுகை இறைவணக்கம் செய்வோர் பார்ப்பனர்.
மணிவாசகர் தன் ஞானாசிரியன் பார்ப்பனராய் திருப்பந்துறைக்கு குருமூர்த்தியாய் எழுந்தருளினார்
என்று பாடுகிறார் திருவாசகத்தில்:
பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே


பூசகர்/பூசாரி என்பது கொச்சைமொழி, ப்ரீஸ்ட் என்றால் உயர்வுமொழி.
பார்ப்பனர் என்றால் கொச்சைமொழி, ப்ராமின் என்றால் உயர்வுமொழி
- என்று தமிழ் வரலாற்று ஆராய்ச்சி நிபுணர்கள் எழுதி அறியோம்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Apr 6, 2014, 11:03:21 AM4/6/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
அண்ணாதுரை தமிழறிஞர். பேரறிஞர் அண்ணா என்று தமிழ்நாட்டு மக்கள் இதயங் கவர்ந்தவர்.
திமுக தலைவர் கருணாநிதியின் தலைவர். பல முறை தமிழரை ஆள வழிவகுத்தவர் அறிஞர் அண்ணா.
ஜெயலலிதா ஆட்சியில் அண்ணாவுக்கு நாமம்தான். ‘அண்ணா நாமம் வாழ்க’ என்றவர் எம்ஜிஆர்,
அண்ணா நாமம் பேசி எம்ஜிஆர் ஆட்சியைப் பிடிக்க இந்திரா காந்தி உதவி இருந்தது. 
திமுக, அதிமுக இரண்டுமே அண்ணா நாமத்தை உயர்த்திக்கொண்டுள்ளது. இப்பொழுது
தமிழருவி மணியன் தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் எம்பி ஸீட் எத்தனை ஜெயிக்கும்?
எத்தனை பெர்செண்ட்டேஜ் பாஜக பெறும்? அந்த மும்முனை ஸ்பிலிட் ‘அண்ணா நாமம் வாழ்க’
அதிமுகவுக்கு வலிமை கூட்டுமா? என்று அடுத்த மாதம் தெரியும். மோதியா? ராகுலா? - தில்லி தர்பாரில்
என்பதற்கும் விடை,

பெரியார் அண்ணாதுரை அரசியல் பற்றி சொல்லியவை தொகுத்து பேரா. நாகராஜ் ஐயா தர வேண்டுகிறேன்.
பெரியாரிடம் விலகிவந்து அண்ணா தம்பி, தங்கைகளுக்கு அரசியல் வழிகாட்டினார். அவரது நாமம்
பேசி 1967-ல் இருந்து தமிழ்நாட்டு அரசியல் ஓடிக்கொண்டுளது. அண்ணா வாழ்க்கை, அவரது அரசியல்
பற்றி கதிரவன் எழுதிய கட்டுரை படித்து சிந்திக்கத் தகுந்தது:

அறிஞர் அண்ணா நாமம் வாழ்க!

நா. கணேசன்



Nagarajan Vadivel

unread,
Apr 6, 2014, 11:07:55 AM4/6/14
to vallamai

2014-04-06 20:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பார்ப்பனர் என்றால் கொச்சை மொழியா? செந்தமிழ் இலக்கியங்களில் என்றைக்கும் உள்ள சொல்தானே.
ப்ராமின் என்றால் தான் உயர்வான மொழியா?

​பார்ப்பானை ஐயர் என்ற  காலமும் போச்சே

இது ஒரு மிக உயர்பிரிவு ஐயர் சொன்னது

N. Ganesan

unread,
Apr 6, 2014, 12:56:46 PM4/6/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
On Saturday, April 5, 2014 5:43:15 PM UTC-7, Megala wrote:
பெரியாரின் தமிழ் பற்றிய, தமிழிலக்கியங்கள் பற்றிய மதிப்பீடு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாய் இருக்கிறது. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், நாம் மிக உயர்ந்ததாக இன்றும் கொண்டாடி வருகின்ற, நம் பண்பாட்டு அடையாளங்களாக உலக அரங்கில் முன்வைக்கின்ற  தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்தெல்லாம் மிக மிகத் தரக்குறைவாக பெரியார் விமரிசித்திருப்பதை இப்போதுதான் அறிகிறேன் சவடால் ஐயா.

நம் தமிழ் நூல்கள் அனைத்தையுமே ஆரியத் தாக்கம் உள்ள நூல்கள் என்று அவர் கூறியிருப்பது ஏற்புடைய கருத்தாகத் தெரியவில்லையே!

நம் நூல்கள் குறித்த தவறான புரிதலை, அவற்றின்மீது தேவையில்லாத துவேஷத்தை (அவரோடு உடனிருந்தவர்களில் யாரோ) அவருக்குத் திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.


அவ்வாறு தெரியவில்லை. தமிழ்ப் புலவர்களை விட யோசித்திருக்கிறார் என தெரிகிறது. இன்றும் இதனைப் பார்க்கலாம். பாரதி, பெரியார்
- இருவர் எழுத்துக்களை, இணையத்தில் சில புலவர் எழுதுவதையும் ஒப்பிட்டால் உணரலாம். பேரா. சி. இலக்குவனார் பெரியார்
மீது எழுதியன இருக்கின்றன. திருவள்ளுவன் இலக்குவனார் பதிவொன்றில் பாரதி, பெரியார் இருவரையும் போற்றும் சி. இலக்குவனார்
வெண்பாப் பார்த்த ஞாபகம். தேடினால் கிடைக்கலாம். திருவள்ளுவன் புலவர் புகழேந்தி அவர்களின் தற்கால தமிழ் தேசிய அரசியல்
(உ-ம்: சீமான்) பற்றிய கவிதையை வெளியிட்டுள்ளார். அதில் பெரியார், தமிழ்தேசியம் பற்றிச் தமிழ்ப்புலவர் சொல்லிய கருத்து
வருங்காலத்தில் என்னவாகும் என்று பார்க்கணும். 

சி. இலக்குவனார்

பாரதிதாசன் பெரியாருக்கு நம் நூல்கள் பற்றிய துவேஷம் ஏற்படுத்தினதாக தெரியலை. பெரியாரே பேசியதுதான் அவை. யாராவது
சொல்லிக்கொடுத்ததென்றால் அவரே பதிவு செய்திருப்பார். பாரதிதாசன் பாட்டும், அதைச் சீர்காழி கோவிந்தராஜன் பாடினதும்
ஒரு வலைப்பதிவில் பார்த்தேன்,
சீர்காழி கோவிந்தராசன் பாரதிதாசன் பாட்டைக் கணீர் எனப் பாடுகிறார்:

இன்னும் சில புரட்சிக்கவிஞர் பாட்டுகள்:

நா. கணேசன்

பெரியார்

அவர்தாம் பெரியார் -- பார் 
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத்தேரில்       
                           
   (அவர் தாம்)

மக்கள் நெஞ்சில் மலிவுப்பதிப்பு
  வஞ்சகர்க்கோ கொடியநெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு 
   விடுதலைப் பெரும் படையின் தொகுப்பு! (அவர் தாம்)

தில்லி எலிக்கு வான்பருந்து
   தெற்குத் தினவின் படைமருந்து
கல்லாருக்கும் கலைவிருந்து
   கற்றவர்க்கும் வண்ணச் சிந்து!        (அவர் தாம்)


சுரண்டுகின்ற வடக்கருக்குச்
    சூள் அறுக்கும் பனங்கருக்கு!
மருண்டுவாழும் தமிழருக்கு
   வாழவைக்கும் அருட்பெருக்கு!       
(அவர் தாம்)

தொண்டு செய்து பழுத்தபழம் 
    தூய தாடி மார் பில்விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
    மனக்குகையில் சிறுத்தை எழும்!  
    (அவர் தாம்)

தமிழர் தவம்கொடுத்த நன்கொடை
    தன்மானம் பாயும்தலை மேடை 
நமக்குத் தாண்டி வந்த வாட்படை
    நமைஅவரின் போருக்கு ஒப்படை!    
(அவர் தாம்)

செல்வன்

unread,
Apr 7, 2014, 4:06:37 PM4/7/14
to mintamil, vallamai

2014-04-06 11:11 GMT-05:00 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
.இதில் மிகவும் ஆவேசம் கொண்டு அமைக்கப்பட்ட கம்யூனிஸ சமுதாயங்கள் மக்களிடமிருந்து
விலகிப்போனதற்கும் அதே மாதிரியான "அதீத உணர்ச்சி வசப்படல்"தான் காரணம். மானிடநியாயத்தை மட்டும் சொல்லும் மதங்கள் மட்டுமே மதிக்கப்படவேண்டும். உயர்நிலைக்கு கொண்டு வர "அறனிலையில்" ஒரு கம்யூனிஸ அமைப்பை உருவாக்க வேண்டும்.இந்த சமுதாய வளங்கள் இந்த சமுதாயத்தின் கோடிக்கணக்கான கைகளுக்கு சொந்தம்.மேலும் எல்லா (கோடிக்கணக்கான கைகளும் இதை ஒன்றாய் நின்று வளப்படுத்த வேண்டும்)கைகளும் இந்த "அறப்பணி" ஆற்ற வேண்டும்.


அத்தகைய அமைப்பின் பெயர்தான் முதலாளித்துவம்.

அதைவிட சிறப்பான முறையில் மனிதர்களுக்கு நன்மை செய்யும் எந்த பொருளாதார அமைப்பையும் மனிதன் கண்டுபிடித்தது இல்லை.


--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



Reply all
Reply to author
Forward
0 new messages