--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--SHYLAJA--
காளமேகத்தைப் பற்றிய மிகச் சரியான கணிப்பு..
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எண்களின் பின்னங்களை வைத்து எழுதியது
முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒருமாலின் கீழரைஇன்று ஓது.
(காஞ்சி ஏகாம்பரநாதரைக் கனவில் கண்டு அசதி ஆடிய ஒரு
பெண்ணின் கூற்றாகப் பாடிய சிலேடை வெண்பா)
ஒன்றுஇரண்டு, மூன்றுநான்கு, ஐந்துஆறு, ஏழ்எட்டு
ஒன்பதுபத் துப்பதி னொன்று - பன்னிரண்டு பதின்
மூன்றுபதி னான்குபதி னைந்து
பதி னாறுபதி னேழ்பதி னெட்டு.
(ஒரு வெண்பாவில் ஐந்து டு வரப்பாடியது) - நன்றி - பிராஜக்ட் மதுரை
சற்று நிதானித்திருந்தால், காளமேகத்தால் வெகு எளிதாக காளிதாசன் போல
காவியங்கள் எத்தனையோ எழுதியிருக்கலாம் என்றுதான் அவ்வப்போது தோன்றும்..
தமிழன்னைக்கு கொடுப்பினை அவ்வளவுதான்..
திவாகர்
2013/1/5 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
>
> கமபனுக்கு நிகராகப் பாடல் இயற்றும் திறமை படைத்தவன் காளமேகம்.
> ஆனால் இந்தச் சொல் விளையாட்டில் இறங்கிப் / கிறங்கிப் போய்
> காவியப் படைப்பு ஏதும் படைக்காமலே காலமாகிப் போன கவிஞன் அவன்.
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
--
தேவ்! கீழே குறிப்பிட்டுள்ளேன், பிராஜக்ட் மதுரை என்று.. ஸ்பெல்லிங் செக்
செய்யவில்லை போலும்..
ஒரு மாலின் என்பது தவறுதான்.. ஒரு மாவின் என்றே வந்தாக வேண்டும்.
இருந்தாலும் ஒரு ’மால்’ திருமால் அங்கேயே உள்ளான் அல்லவா.. ஒருக்கால்
அந்த ஒரு’மால்’ தன் இருப்பையும் அங்கே நினைக்க வைத்தானோ என்னவோ..
திவாகர்
2013/1/5 DEV RAJ <rde...@gmail.com>:
> *ஒருமாலின் கீழரைஇன்று ஓது. <<<
>
>
> *ஒருமாவின் கீழரை இன்றோது
>
> ஒரு மா - ஏகாம்ரம்
> ஒருமாவின் கீழர் - ஏகாம்ர நாதர்
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
திருவாஞ்சியம் - சம்பந்தர் தேவாரம்:
மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru02_007.htm
--------------
வீழிமிழலை - சம்பந்தர்
ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை யேழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே.
------------------------
மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை
*ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்*
குடற்புலபு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பின்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலம்இனி இருநிலத் திடையே.
- அதிராவடிகள்
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=119&pno=557
தெரிவு:
நா. கணேசன்
On Jan 5, 12:49 am, Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com> wrote:
> அனைவருக்கும் வணக்கம்
>
> சகோதரி குறிப்பிட்டது போன்ற
> எண்ணலங்காரம் மட்டும் இல்லை
> ககர வருக்கம் தகர வருக்கம், உதடு ஒட்டா, உதடு ஓட்டும் ...பாடல்கள், சிலேடைகள்
> எனப் பலப்பல நிறைந்த மொழி தமிழ் மொழி.
> தமிழ் மொழி மட்டுமே!
>
> நால் வகைக் கவிகளுள் சித்திரக் கவியும் ஒன்று :
> இதில் கவிதைகள் சித்திர வடிவில் எழுதப்படும்.
> இவை நாக பந்தம், இரட்டை நாக பந்தம், தேர் பந்தம்...என்று
> சித்திர வடிவுக்கு ஏற்பப் பெயர் பெரும்.
>
> ஒன்று முதல் பதினெட்டு வரை வரிசையாகப புணர்த்து எழுதிச்
> சீர் பிரித்து அலகிட்டுபாருங்கள் தளை தட்டாத,
> இலக்கணம் பிறழாத வெண்பா கிடைக்கும்.
>
> இப்படித்தான் சொல் விளையாட்டுகளில் ஈடுபட்டு
> இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புகளைப் படைக்காமல் கோட்டை விட்டார்கள்
> 18 ஆம் நூற்றாண்டுப் புலவர்கள்.
> காளமேகம் தொடங்கி வைத்த இந்தச் சொல் விளையாட்டுகளைப்
> பிற்காலப் புலவர்கள் பின் பற்றத தொடங்கிவிட்டனர்.
> கமபனுக்கு நிகராகப் பாடல் இயற்றும் திறமை படைத்தவன் காளமேகம்.
> ஆனால் இந்தச் சொல் விளையாட்டில் இறங்கிப் / கிறங்கிப் போய்
> காவியப் படைப்பு ஏதும் படைக்காமலே காலமாகிப் போன கவிஞன் அவன்.
>
கவிச்சக்கரவர்த்திகள் செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், கம்பர் போன்றோர்
காலத்தில் தமிழகத்தைத் தமிழ்ச்சக்கரவர்த்திகள் ஆண்டனர். காளமேகம்
காலத்தில் தமிழ் மாமன்னர்கள் ஆளவில்லை. ஆதரவு இல்லாமல்
பெருங்காவியங்கள் எழுவதில்லை. இதனை அழகாக முதலில்
சொன்னவர் படிக்காசுப்புலவர் (17-ஆம் நூற்றாண்டில்).
நா. கணேசன்
> 'The perverted genius' என அவனைக் குறிப்பிடுவார்
> எங்கள் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்
> திருமிகு அ ..மு. பரசிவானந்தம் ஐயா அவர்கள்.
>
> அன்புடன் பெஞ்சமின்
>
பாரிப்பாக்கம் சித்தாந்த பேராசிரியரின் தமிழ்த் திருமணம்
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து தருகிறார்.
எண்ணலங்காரம் அது.
நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே. - ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து.
நா. கணேசன்
On Jan 5, 7:10 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:
> வாசி வாசி என்று வாசித்த தமிழ் இன்று
> சிவா சிவா என சிந்தை தனில் நின்று
> அவாவினால் இந்த ஒளவைத் தமிழ் கொண்டு
> கவிபாடினான் உன்னைக் கண் குளிரக் கண்டு!
>
கொடுமுடி கோகிலத்தின் குரலில் எம்பி3 அல்லது யுட்யூப் உண்டோ?
கீதா சாம்பசிவம் வலைப்பதிவில் காணொளி தெரிவதில்லை.
நா. கணேசன்
> *ஒன்றானவன்,* உருவில் *இரண்டானவன்*,
> உருவான செந்தமிழில் *மூன்றானவன்*,
> நன்றான வேதத்தில்* நான்கானவன்*,
> நமச்சிவாய என *ஐந்தானவன்,*
>
> இன்பச் சுவைகளுக்குள் *ஆறானவன்,*
> இன்னிசை ஸ்வரங்களில் *ஏழானவன்,*
> சித்திக்கும் பொருள்களில் *எட்டானவன்,*
> தித்திக்கும் *நவரச வித்தானவன்!*
>
> *பத்தானவன்,* நெஞ்சில் பற்றானவன்!
> *பன்னிருகை *வேலவனைப் பெற்றானவன்!
--
On Jan 20, 8:59 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> //கொடுமுடி கோகிலத்தின் குரலில் எம்பி3 அல்லது யுட்யூப் உண்டோ?//
>
> http://www.youtube.com/watch?v=34-388nUN60
>
> Nagarajan
>
பலமுறை உங்கள் பழனியில் பார்த்துள்ளேன். ராக்காலப் பூஜைக்கு
வரும்போது அர்த்தமண்டபத்தில் பாடுவார்.
என்னவோ நித்யஸ்ரீ நினைவுக்கு வருகிறார்.
அவரும் தனிப்பட்ட துயரிலிருந்து மீள முருகன் துணை.
http://www.youtube.com/watch?v=GdpDAhT95tU
நா. கணேசன்
ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தர்மம் முதல்நான்கும் சாலும் - அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்
இது ஓர் எண்ணலங்காரம்.
--------------------------------------------
சமணர் தந்த குறளை சைவமாக்க எழுந்த முயற்சி திருவள்ளுவமாலையில்.
இந்நூல் எழுந்த காலகட்டத்தில் துருக்கர்கள் தில்லியில் இருந்து
தாக்கினர். இந்து மதத்தைக் காக்க வேண்டிய கட்டாயம்
அப்போது எழுந்த நிலை. ஏராளமான தமிழ்ச் சைவக் கதைகள்
சமஸ்கிருதமயமாகின. தமிழ்க் கதைகள் பலவும்
சங்கரவிஜயம் என்ற பெயரில் சங்கராச்சாரியார் வரலாறு
என மொழிபெயர்க்கப்பட்டது. இதேபோல் இன்னொன்று
பின்னால் நிகழ்ந்தது. பல தமிழ்க் கதைகள், பாடல்கள்
வீரமாமுனி எழுதினார் என்று சொல்லப்பட்டது. காளமேகத்தின்
பாடல்கள் கூட பெஸ்கி எழுதினார் என்று கதைகள், புராணங்கள்
எழுதப்பெற்றன.
நா. கணேசன்
On Jan 20, 7:49 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> இப்பாடல் இழையில் வந்ததா? என தெரியலை.
>
> பாரிப்பாக்கம் சித்தாந்த பேராசிரியரின் தமிழ்த் திருமணம்
> ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து தருகிறார்.எண்ணலங்காரம்அது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பரிபாடல்
வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,
இரூ கை மாஅல் ! 35
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
இன்னம்பூரான்
>>>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஸ்வாமிமலையில் ஸ்வாமிநாதஸ்வாமி தர்சனம் செய்ய சென்றிருந்த போது ஆங்கே அந்த திருவேரக ஆலய சுவற்றிலே இந்த திருவெழுகூற்றிருக்கையை அழகான ரதபந்த சித்ரமாக எழுதியிருந்தனர்.
அதேபோல் சார்ங்கபாணிப்பெருமாளை தர்சனம் செய்ய சென்றிருந்த போது ஆங்கே அந்த ஆராவமுதனது திருவிண்ணகரத்து சுவற்றிலே இதே போல ரதபந்தமான திருவெழுகூற்றிருக்கையையும் அருகிலே திருநாகேஸ்வரமா அல்லது வேறு சிவாலயமா என்று நினைவிலில்லை இதே போன்று சிவாலயத்திலும் திருவெழுகூற்றிருக்கை பார்த்ததாய் நினைவு உள்ளது.
முனைவர் ஸ்ரீ.முத்துக்குமாரஸ்வாமி மற்றும் ஸ்ரீ.கந்தர்வன் போன்ற சைவ வைஷ்ணவ மரபில் ஆழ்ந்த சான்றோர் இந்த அரிதான பாடல்களை நினைவு கூர்ந்து இத்தளத்தில் பதிக்க வேண்டும் என விக்ஞாபித்துக் கொள்கிறேன்.
இம்மூன்று பாடல்களும் ஒருங்கே பதிக்கப்பெறின் நிஸ்ஸம்சயமாக அவை ரத்னத்ரயமாக ஒளிரும்.
ஓருரு வாகிய தாரகப் பிரமத்
தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை
இருபிறப் பாளரி னொருவ னாயினை
ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
ஒருசிறை விடுத்தனை
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக் கிளையோ னாயினை
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
கொருகுரு வாயினை
ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
ஏரகத் திறைவ னென இருந்தனையே.
[குறிப்பு:
இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு.
1
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
இடையில் தேர் தட்டு . . . . . . . . . . . . . . . . . . .
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 2 1
1 2 1
1
Nagarajan
போன வருடம் என் சம்பந்தியின் (வங்காளி) மகளுக்கும் மும்பையில் வாழும் ஒரு (ஐயங்கார்) பையனுக்கும் (காதல்) திருமணம் ஒப்பிலியப்பன் கோவிலில் என்னுடன் என் மனைவி ஐவரி (மாமியும்) மகள் எலிசபெத் (மாமியும்) (அப்படித்தான் அங்கே கூப்பிட்டாய்ங்க) கலந்துகொண்டாங்கநாங்களும் அந்தப்பக்கம் நிறையத்தடவை போயிருக்கோமில்லநீங்க இப்படி எண்ணலங்காரம் எழுதுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா அதெல்லம் பாத்திருப்போம்
>>யப்பா...பாரதவிலாஸ் குடும்பமா இருக்கே! தமிழ் உங்களுக்கு மட்டும்தான் தெரியும் போல?
நிறைய அடைப்பு இருப்பதைக் கவனிக்கவும் மூக்கடைப்பு காரணமல்ல>>>>>
புலவர் அப்துல் கபூர் சாஹிப் எழுதிய சித்திரகவிமாலையை படிக்கவும், ஷைலஜா. த.ம.அ.வின் மின்னாக்கம் செய்யப்பட்ட 218 வது நூல். புலவரை ஆதரித்தவர்கள் பட்டியல் ~ மு.ராகவையங்கார், உ.வே.சா. முதல் ~ படிக்கவே ஆனந்தம். தமிழ் மறுமலர்ச்சி காலமது.
இன்னம்பூரான்
ஒன்றாக இருக்கின்ற தாயானவள்
இரண்டாக இணைகின்ற உறவானவள்
மூன்றாக சுழல்கின்ற நிகழ்வானவள்
நாலாக நவில்கின்ற மறையானவள்
ஐந்தாக அருள்கின்ற வடிவானவள்
ஆறாக சுவைக்கின்ற ருசியானவள்
ஏழாக ரசிக்கின்ற நிறமானவள்
எட்டாக படைக்கின்ற சித்தானவள்
ஒன்பதாய் உண்டாக்கும் சுமையானவள்
பத்தாகி வெற்றிக்கு பிறப்பானவள்
இரவிலே ஒளிகாட்டும் விளக்கானவள்
எல்லா மிடம்நிறைந்தப் பெண்தானிவள்.
-சத்திய மணி
எண்ணலங்காரம்!இலக்கியத்தில் எண்ணலங்காரம் பற்றி அண்மையில் வாசித்தேன் சுவாரஸ்யமாக இருந்தது.எண்களை வரிசைப்படுத்தி எழுதுவதை எண்ணலங்காரம் என்கிறார்கள். திருவிளையாடல் படத்தில் வரும் ஒன்றானவன் உருவில் இரண்டானவன் ஓர் எடுத்துக்காட்டு.அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்முருகாஎன்றோதுவார் முன்..என்ற நேரிசை வெண்பா எண்ணலங்காரப்பாடல்.நான் உன்னைசேர்ந்த செல்வம் என்ற திரைப்பாடலில் ‘உன் அச்சம் நாணம் என்ற நான்கும் என் அருகில் நெருங்கிவர அஞ்சும்’ என வருவதும் எண்ணலங்காரமே!
இன்னொரு பாடல் கண்ணதாசன் எழுதியதென நினைக்கிறேன் அதில்’ வவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை’ என்று வரும் சரவணப்பொய்கையில் நீராடி என்ற பாடலும் எண்ணலங்காரம் தான்..
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.