Re: வாக்களித்தோர் விழுக்காடு

9 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 5, 2026, 3:11:18 AM (5 days ago) May 5
to santhav...@googlegroups.com


On Sat, Apr 25, 2026 at 5:49 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
விழுக்கா(டு) உயர்ந்தும் விதிமாறும் ஆமோ?
ஒழுக்கில்லார்  ஆட்சி ஒழிய - அழுக்கில்லார் 
வாக்கென்னும்  நீரால் மலரான  தாமரையும் 
பூக்குமோ ஈரிலைகள் பூண்டு!

அரசி. பழனியப்பன் 

தமிழ் வாழ்த்து
--------------

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

   வான மளந்த தனைத்தும் அளந்திடும்
   வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

    எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
    என்றென்றும் வாழிய வே!
    என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

    தொல்லை வினைதரு தொல்லை யகன்று
    சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!

    வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
    வளர்மொழி வாழிய வே!
    வளர்மொழி வாழிய வே!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

https://www.youtube.com/watch?v=vTOFcMgf1BU  சீர்காழி
https://www.youtube.com/watch?v=YfE8rzmoruI  ஓ. எஸ். அருண்
https://www.youtube.com/watch?v=bWIZqLOlTNo மதிராஜா, சிரவை ஆதீனம், கோவை.

தமிழுக்கும் அமுதென்று பேர்!
        - பாரதிதாசன்
https://www.youtube.com/watch?v=4RUBjDcAmE0 பி. சுசீலா

https://www.youtube.com/watch?v=aUAy4_D33yQ   மது ஐயர்

1967-க்குப் பின்னர், தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள் எல்லாம் திராவிட என்னும் ஸம்ஸ்கிருதச் சொல்லைப் பெயரில் வைத்தே ஆண்டுள்ளன. தமிழகம் என்ற சொல்லைப் பெயரில் கொண்ட கட்சி ஆட்சிக்கு வரும் நிலை பிறந்துள்ளது. தேசியக் கக்‌ஷிகள் இரண்டும் எவ்வாறு அணுகுமுறை, அழுத்தம் தருகின்றன என்பது வரும்காலத்தில் தெரியவரும்.

வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்
நா. கணேசன்

 






--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXaJb5kZPXeneCs-m5B0e5Ck29rA64W7qk%3DBGC2LH8mhAQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages