ஒருவேளை ஒருங்குறியில் எழுத்துக்கள் மாறுபடுவதை சொல்வார்களோ பேராசிரியரே?
ஒருவேளை ஒருங்குறியில் எழுத்துக்கள் மாறுபடுவதை சொல்வார்களோ பேராசிரியரே?
இந்த இரண்டு வடிவங்களும் நெடுநாட்களாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. முரசு அஞ்சல் வெளியிட்ட திஸ்கி எழுத்துருக்களில் (தற்போது எப்படியோ தெரியாது) ர் என்ற எழுத்துக்குக் கீழ்க்கோடு இல்லாமல் ா மேல் புள்ளி வைத்ததைப் போல் வந்திருக்கிறது; மற்ற சில எழுத்துருக்களிலும் இப்படி உண்டு. லதாவைத் தவிர்த்த மற்ற எழுத்துருகளில் வேறு எதிலாவது இப்படிப்பட்ட மாற்று வடிவம் இருக்கும் வாய்ப்பு உண்டு.
ஒருவேளை ஒருங்குறியில் எழுத்துக்கள் மாறுபடுவதை சொல்வார்களோ பேராசிரியரே?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
அய்யாவுக்கு சமர்ப்பணம் !--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ எழுத்துருக்களும் ஒருங்குறியீடும் வேறு வேறல்லவா?
--
யூனிகோட் என்ற ஒருங்குறியீட்டு வரிவடிவம் தமிழர்களைக் கலந்துகொள்ளாமல் மைய அரசால் முடிவு செய்யப்பட்டது என்று கிளப்பிய புழுதி இன்றுவரை அடங்கவில்லை என்றும் நான் தமிழ்நாட்டில் கேள்விப்பட்டதெல்லாம் தவறா
தஸ்கியை வைத்துக் கொண்டு இயக்குவியல்எழுத்துருக்களை(dynamic fonts) இயக்க
முடியாதென்றும் ஆகவே தஸ்கி காலாவதியாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறதே?
தயவு செய்து கொஞ்சம் நீண்ட விளக்கம் தருவீர்களா?
ஐயா,
--
ஒருவேளை ஒருங்குறியில் எழுத்துக்கள் மாறுபடுவதை சொல்வார்களோ பேராசிரியரே?
எனக்கும் கணினி தெரியாதே பேராசிரியரே.
1993 இல் முதன் முதலில் ஒரு கேட்வே கணினி (விண்டோஸ் 3.1) என் கணவர் வாங்கினார். எனது கல்லூரி பாடங்களை அவரைத்தட்டச் சொன்னதால் இந்த முடிவு.
நல்லாவே படம் பார்த்துக் கதை சொல்லுகிறீர்கள்உருளையின் சில்லு உருளை சிப்ஸ்மின்னணுச் சில்லு மணலைக் கயிறாத் திரித்து எடுத்த சில்லுதானே
படிக்காப் புலவன்
இடத்தைப் பொறுத்து பார்வைகள் மாறும் :))
கணித் தமிழ் என்றொரு புதிய சொல்லாடல் இணையத்தில் அதிகமாக உலாவரும் நிலையில் இந்த அடிப்படை சந்தேகம் தெளிவுபெறவேண்டியது அவசியமாகிறது..கணினியில் ஆங்கிலக் கணினி பிரெஞ்சுக் கணினி என்றெல்லாம் யாரும் அழைப்பதில்லை. ஆனால் தமிழகத்தில்மட்டும் தமிழில் ஒரு புதிய பிரிவாகக்கணித்தமிழ் உருவாக்கப்படுள்ளது புதுமையாக உள்ளது
தமிழ் கம்ப்யூட்டிங் என்பதற்கு தமிழில் இடப்பட்ட இடுகுறிப்பெயர்.
2013/11/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
தமிழ் கம்ப்யூட்டிங் என்பதற்கு தமிழில் இடப்பட்ட இடுகுறிப்பெயர்.இதை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்
ஐயாஇயக்கவியல் எழுத்துருக்கள் ஒரு இடைக்கால நிவாரணியாகச் செயல் பட்டது எனலாம்.
ஐயா,
அருள்கூர்ந்து கலைச்சொற்கள் பயன்படுத்துவதிற் குழப்பம் வேண்டாம். எழுத்துரு (font) என்ற சொல்லிற்கு நீங்கள் சொல்லும் பொருள் கிடையாது; வேறு பொருளாகும்.
இப்பொழுது “லதா” என்பது தமிழுக்கான ஓர் எழுத்துரு. “Arial Unicode MS" என்பது இன்னோர் எழுத்துரு. இப்படிப் பல்வேறு எழுத்துருக்கள் உள்ளன. [எழுத்துரு என்ற சொல்லிற்கு 30 ஆண்டுகளுக்கு முன் ”வார்ப்பு” என்ற சொல்லிருந்தது. நானும் அதைப் பல்வேறு கட்டுரைகளிற் பயன்படுத்தி வந்தேன். ”வார்ப்படம்/ வார்ப்புத் தொழில் (foundary) என்பது இரும்புப் பட்டறையை யொட்டித் தமிழிற் பன்னூறு காலம் பழகி வந்த சொல். என்ன ஊழோ தெரியவில்லை, இற்றைத் தமிழில் அருவி போய், நீர்வீழ்ச்சியானது போல், எல்லாரும் இப்பொழுது வார்ப்பை விடுத்து எழுத்துரு என்பதையே font ற்கு நிகராகப் பயன்படுத்துகிறார்.
ஒவ்வோர் எழுத்துருவும் ஒவ்வொரு தோற்றங் காட்டும். நீங்கள் சொல்லும் எழுத்தின் (alphabet or character) நீளக்கணக்கில் வரும் கருத்து வேறொன்றாகும்..
எழுத்து என்பது தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற் சொன்னபடி வருவதாகும். நம்முடைய எழுத்துக்கள் அசையெழுத்துக்களாகும் (syllabic characters).
எழுத்துக்களின் பகுதிகளைக் கீற்றுக்கள் (glyphs) என்று சொல்கிறோம். தமிழில் அடிப்படைக் கீற்றுக்கள் போக, (மெய்யெழுத்திற்குப்) புள்ளி , (ஆகாரத்திற்குக்) கால், (இகரத்திற்குக்) கொக்கி, (ஈகாரத்திற்குச்)சுருட்கொக்கி, (உகரத்திற்குக்) கொண்டை, (ஊகாரத்திற்குச்) சுருட்கொண்டை, (எகரத்திற்கு) ஒற்றைக்கொம்பு, (ஏகாரத்திற்கு) இரட்டைக் கொம்பு, (ஐகாரத்திற்கு) ஐகாரக் கொம்பு, (ஔகாரத்திற்குச்) சிறகு என்று இந்தக் காலத்திற் துணைக் கீற்றுகளைச் சொல்கிறோம். [இதே கீற்றுக்களுக்கு மேல்விலங்கு, கீழ்விலங்கு என்ற சொற்களும் உரையாசிரியர் காலத்தில் இருந்தன.]
”கொ” என்பதில் 3 கீற்றுக்கள் இருக்கின்றன. இந்த கீற்றுக்கள் குறியேற்ற முறைக்குத் தக்க மாறும். ஒருங்குறிக் குறியேற்ற முறையில் (encoding) ”க” என்பது ஒரு கீற்று; ”க், கா, கி.கீ,கு,கூ,கெ, கே” என்பவை இரு கீற்றுக்கள் கொண்டவை. ”கொ,கோ,கௌ” ஆகியவை மூன்று கீற்றுக்கள் கொண்டவை.
கீற்றுக்களுக்கு வெவ்வேறு தோற்றங் கொடுக்கலாம். அவை எழுத்துருக்கள் (fonts) என்று சொல்லப்படுகின்றன.
சுருங்கச் சொன்னால், “கோ என்ற எழுத்திற்கு 3 கீற்றுக்கள் உண்டு. அதற்கு ஒருங்குறிக் குறியேற்றத்தில் காட்டாக, லதா என்ற எழுத்துருத் தோற்றங் கொடுத்துப் படிக்கலாம்.”
எழுத்துரு என்பதைக் குழப்பி எழுத்து என்ற சொல்லிற்கு மாறாக எழுத்தாளர் செயமோகன் அண்மையிற் பயன்படுத்தினார். நீங்கள் கீற்றுக்களுக்கு மாறாகப் பயன் படுத்துகிறீர்கள். தமிழர்கள் எழுத்துக்கள், கீற்றுக்கள், எழுத்துருக்கள் (அல்லது வார்ப்புக்கள்) ஆகிய மூன்றிற்கும் இடையே குழப்பமில்லாது பயனாக்குவதை என் போன்றோர் வேண்டுகிறோம்.
குறியேற்றங்களுக்காக தமிழ்க் கணிஞர் 16 ஆண்டுகளுக்கு முன் பாடுபட்டபோது இந்தக் கருத்தீடுகளில் தெளிவுவேண்டிய உரையாடல்களில் நானும் பங்களித்திருக்கிறேன்.
குறியேற்றங்களுக்காக தமிழ்க் கணிஞர் 16 ஆண்டுகளுக்கு முன் பாடுபட்டபோது இந்தக் கருத்தீடுகளில் தெளிவுவேண்டிய உரையாடல்களில் நானும் பங்களித்திருக்கிறேன்.