திமிர்ந்த ஞானச் செருக்கு என்றால் என்ன - எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் சாமி

10,076 views
Skip to first unread message

vnagarajan

unread,
Nov 22, 2012, 10:34:18 PM11/22/12
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள்
புதுமைப் பெண் என்பவள் வரும் புது யுகத்தில் எப்படி இருக்க வேண்டும்?

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்:


அமிழ்ந்து பேரிரு ளாமறியா மையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!


திமிர் என்பதும் செருக்கு என்பதும் குமுகம் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் நடத்தை அல்லவை என்று தெரிந்திருந்தும் ஒரு புது மொழியை உருவாக்கியதன் உள் அர்த்தம் என்ன?

பெண்ணோ ஆணோ திமிர்ந்த ஞானச் செருக்குடன் யாருக்கும் அஞ்சாமல் நடந்துகொள்வதை மெய் உலகும் மெய் நிகர் உலகும் தகவென்று ஏற்றுக் கொள்ளுமா?

இந்த உண்மை எனக்க்குத் தெரிஞ்சாகனும் சாமி

நாகராசன்








coral shree

unread,
Nov 23, 2012, 1:36:37 AM11/23/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
அன்பின் பேரா ஐயா,

வணக்கம். எனக்குத் தெரிந்த , ஏதோ நான் புரிந்து கொண்ட வகையில் சொல்ல அனுமதிக்க வேண்டுகிறேன்.

’திமிர்ந்த ஞானச் செருக்கு’ என்ற இந்த பதம் என்னை ஏனோ அப்படி கவருக்கிறது! ’செருக்கு’ என்பதற்கு அகந்தை, மகிழ்ச்சி, ஆண்மை, மயக்கம், செல்வம் என்று பல பொருள் உள்ளது.

‘திமிர்’ என்பதன் பொருள் பிறரை மதிக்காமை, அகம்பாவம்,  insilence, haughtiness....

ஆனால் ஐயன் பாரதி குறிப்பிடுவது அந்த ‘திமிர்’ அல்ல.

‘திமிர்தம் அல்லது திமிர்தல்’ என்ற பொருளில் வரும் என்று நினைக்கிறேன். திமிர்தம் என்பதற்கு பேரொலி, அதாவது loud noise என்று பொருள்.

’திமிர்தல்’ என்பதற்கு பூசுதல், ஒலித்தல், வளர்தல், அதாவது to smear, to sound, to grow, என்று பொருள் வருகிறது.

‘செருக்கு’ என்பது இங்கு ஞானத்தினால் தானே வரும் பெருமை என்ற பொருளில் ‘ஞானச் செருக்கு’ என்கிறார்.

அப்படிப் பார்த்தால் ஒரு பெண் எல்லா நேரத்திலும் மெல்லிய குரலுடையவளாக இராமல், தேவையான நேரத்தில் ஆண்களைப் போன்று பேரொலி எழுப்பியும், தம் வளர்ச்சியின் இடையூறுகளைக் களைந்து, அதனை ஊக்குவித்துக் கொள்ளவும், தீமையைக் கண்டு அஞ்சி ஒடுங்காமல் எதிர்த்து போராடும் வல்லமை வேண்டும்  என்றும்  புதுமைப் பெண்ணின் இலக்கணமாக கூறியிருக்கலாம்.

அன்புடன்
பவளா

2012/11/23 vnagarajan <radius.co...@gmail.com>

--
 
 



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

தேமொழி

unread,
Nov 23, 2012, 4:08:23 AM11/23/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
பெண்ணோ ஆணோ திமிர்ந்த ஞானச் செருக்குடன் யாருக்கும் அஞ்சாமல் நடந்துகொள்வதை மெய் உலகும் மெய் நிகர் உலகும் தகவென்று ஏற்றுக் கொள்ளுமா?"
கொள்ளாது....

பாரதியை நான் Authoritative leader (Authoritative leaders were first described by Daniel Goleman ; the trademark of this type of leader is their ability to mobilize people towards a vision) எனக் கருதுவேன்.
இவர் தன்னைப்போல மற்றவர்களையும் எண்ணி அது போல இருக்க அறிவுரை கூறுகிறார்.
ஆனால் அவர் காலத்தில் அவருக்கு இருந்த இந்தப் பண்பினால் அவர் மீது கோபம் கொண்டவர்களே அதிகம்.

எவ்வளவு முயன்றும் தனது திறமையினால் ஞானச் செருக்கு உள்ள ஆளை நடைமுறை வாழ்க்கையில் அடையாளம் கூற என்னால் முடியவில்லை. 
நினைவிற்கு வருவது சிக்கல் ஷண்முக சுந்தரம் கதாபாத்திரமே.
இது போன்றவர்களை சராசரி மக்களால் புரிந்து கொள்ள முடியாது, புரிந்து கொள்ளும் பொழுது காலம் கடந்துவிடும்.
அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு கிடைக்கும் பெயர் அகம்பாவிகள், (என்ன ஒரு திமிர், என்ன ஒரு தெனாவெட்டு என்ற வசை).
இதற்கு காரணம் ஞானச் செருக்குக்கும் அகம்பாவதிற்கும் உள்ள நூலிழை வேறுபாடு.
அன்புடன்
தேமொழி 


செல்வன்

unread,
Nov 23, 2012, 5:03:27 PM11/23/12
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள்

ஞானச்செருக்கு என்பதுக்கு "அறிவுத்திமிர்" "கர்வம்" என பொருள் கொடுத்துள்ளது தமிழ் விக்சனரி

ஹரிகி மாதிரி தமிழ் புலமையுடன் இருப்பவர்கள் இதை எழுதி இருக்கபோவதில்லை என்பது திண்ணம். ஆனால் ஞானச்செருக்கு என்பதற்கு விக்கியில் ஒரு பக்கமே உருவாகி அதற்கு இத்தகைய தவறான பொருள் கொடுக்கபட்டிருப்பது பாஞ்சாலி சபதத்துக்கு விளக்கவுரை ஏன் தேவை என வேந்தர் கேட்டதுக்கு நல்ல மறுமொழியாக அமைகிறது அல்லவா?
 
 

ஞானச் செருக்கு, பெயர்ச்சொல்.

  1. அறிவுத்திமிர்; கர்வம்
மொழிபெயர்ப்புகள்
  1. The smugness and confidence that comes with learningஆங்கிலம்
விளக்கம்
  • செருக்கு என்னும் சொல் பொதுவாக இழிசொல்லாகப் பயன்பட்டாலும், ஞானச் செருக்கு என்னும் சொல் உயர்வுச்சொல்லாகவே பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
 

--
செல்வன்


Rishi Raveendran

unread,
Nov 23, 2012, 5:06:49 PM11/23/12
to vall...@googlegroups.com
’செருக்கு’  என்ற சொல் எப்படி இழி சொல்லாகும் ? அடக்கடவுளே !

2012/11/23 செல்வன் <hol...@gmail.com>
--
 
 



--
அன்புடன்
சக பயணி
இரவீந்திரன்


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."



N. Ganesan

unread,
Nov 24, 2012, 12:20:00 AM11/24/12
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Nov 23, 8:17 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> திமிரிக்கொண்டு எழுந்தான் என்ற சொல்லாட்சியை ஊன்றி கவனித்தால் எல்லா
> ஆற்றலையும் திரட்டி எனப் பொருள்படுவதை உணரலாம். ஆதலால் திமிர்ந்த என்பது இங்கு
> ஒருவருக்குள்ள அறிவாற்றலின் திரட்சி என பொருள்படுவதாகக் கொள்கிறேன். காளை
> மாட்டின் முதுகில் உள்ள திமில் திரண்ட சதைப் பகுதியைக் குறிப்பதை ஈண்டு
> நோக்கலாம். வீட்டில் 'திம்ம உலக்கை' என்று திட்டுவார்கள். இங்கே திம்ம
> என்பதும் திரட்சிப் பொருள் கொண்டதே. திம்மன் திம்மள் என்ற சொற்கள் உருண்டு
> திரண்டவன், உருண்டு திரண்டவள் என்ற பருமன் கருத்தைக் கொண்டது. ஆகவே தமிர்ந்த
> என்பது திரட்சிக் கருத்தே.
>
> சேசாத்திரி
>

திமிர்/திமில் திமு,திமு என வளர்ந்த பொலிகாளையின் மூரி.
இதன் நிறம் கருமை,
http://en.wikipedia.org/wiki/File:Bos_taurus_indicus.jpg
காங்கயம் காளை - இன்று தமிழ்நாட்டில் ஸ்போர்ட்ஸ் விலங்கு ஆகிவிட்டது.

இருட்டாக இருப்பதற்கு சிந்து சமவெளி வேளாண் நாகரீகத்தில் திராவிடச் சொல்
வடசொல் ஆகியிருக்கும். திமிர என்ற வடசொல்லுக்கு ஈரானிய பாஷையில்
உறவில்லை. கண்ணில் படலம் வரும்போது இருட்டுவதை
தைமிர (< திமிர்) என்பதும் இத் திமிர்/திமில் என்னும் தமிழ்ச் சொல் என


நினைக்கிறேன்.

இமில், சிமிழ் - இவையும் திமில்/திமிர் என்பதிலிருந்து பிறப்பவை.

கவர்/கவல், செக்கர்/செக்கல், மம்மர்/மம்மல், விதிர்/விதில்(விதலை -
பரிபாடல்)
போல் திமிர்/திமில்.

நா. கணேசன்


> //புதுமைப் பெண் என்பவள் வரும் புது யுகத்தில் எப்படி இருக்க வேண்டும்?
> *
> *
> *நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் *
> *
> *
> *நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் *
> *
> *
> *திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்*
>
>
>
>
>
>
>
> > *
> >> *
> >> *செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்:*
> >> *
> >> *
> >> * *
> >> *
> >> *
> >> *அமிழ்ந்து பேரிரு ளாமறியா மையில்*
> >> *
> >> *
> >> *அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை*
> >> *
> >> *
> >> *உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்*
> >> *
> >> *
> >> *உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!


>
> >> திமிர் என்பதும் செருக்கு என்பதும் குமுகம் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும்
> >> நடத்தை அல்லவை என்று தெரிந்திருந்தும் ஒரு புது மொழியை உருவாக்கியதன் உள்
> >> அர்த்தம் என்ன?
>
> >> பெண்ணோ ஆணோ திமிர்ந்த ஞானச் செருக்குடன் யாருக்கும் அஞ்சாமல் நடந்துகொள்வதை
> >> மெய் உலகும் மெய் நிகர் உலகும் தகவென்று ஏற்றுக் கொள்ளுமா?

> >> *


> >> இந்த உண்மை எனக்க்குத் தெரிஞ்சாகனும் சாமி
>

> >> நாகராசன்*

DEV RAJ

unread,
Nov 24, 2012, 4:21:21 AM11/24/12
to வல்லமை
On 24 Nov, 10:20, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> திமிர்/திமில் திமு,திமு என வளர்ந்த பொலிகாளையின் மூரி.
இதன் நிறம் கருமை, ... <<<


இங்கிட்டு கருப்பா இல்லீங்களே , ஐயா

http://www.4shared.com/photo/ZB6z5NdT/Tharparkar_bull_100_3327.html

http://www.google.com/imgres?q=white+indian+bulls&start=240&um=1&hl=en&sa=N&tbo=d&biw=1870&bih=978&tbm=isch&tbnid=NOgZsJBZLq6SrM:&imgrefurl=http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2089684/Diva-Jayalalithaa-eyes-lead-role-Delhi-Even-BJP-turns-charm.html&docid=pJ79Zuf0ijA1PM&imgurl=http://i.dailymail.co.uk/i/pix/2012/01/20/article-2089684-1162AB06000005DC-347_468x314.jpg&w=468&h=314&ei=oYqwULejFcbrrQe97YHICw&zoom=1&iact=hc&vpx=77&vpy=431&dur=67&hovh=184&hovw=274&tx=162&ty=76&sig=106042123992440005359&page=5&tbnh=130&tbnw=197&ndsp=71&ved=1t:429,r:23,s:280,i:73

http://www.google.com/imgres?q=tharparkar+bulls&start=115&um=1&hl=en&sa=N&tbo=d&biw=1870&bih=978&tbm=isch&tbnid=0_JZndcbuODklM:&imgrefurl=http://khuranadairy.tradeindia.com/sahiwal-young-bull-1052693.html&docid=nQ4tDhShEEy17M&imgurl=http://pimg.tradeindia.com/01052693/b/1/SAHIWAL-YOUNG-BULL.jpg&w=400&h=300&ei=8YuwUNKjE4bXrQfU3oHYCQ&zoom=1&iact=hc&vpx=4&vpy=631&dur=195&hovh=194&hovw=259&tx=123&ty=94&sig=106042123992440005359&page=3&tbnh=138&tbnw=180&ndsp=70&ved=1t:429,r:34,s:100,i:106

William Dwight Whitney 'திம்’ என்று வேர் காட்டுகிறார்


தேவ்

On 24 Nov, 10:20, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 23, 8:17 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>
> > திமிரிக்கொண்டு எழுந்தான் என்ற சொல்லாட்சியை ஊன்றி கவனித்தால் எல்லா
> > ஆற்றலையும் திரட்டி எனப் பொருள்படுவதை உணரலாம். ஆதலால் திமிர்ந்த என்பது இங்கு
> > ஒருவருக்குள்ள அறிவாற்றலின் திரட்சி என பொருள்படுவதாகக் கொள்கிறேன். காளை
> > மாட்டின் முதுகில் உள்ள திமில் திரண்ட சதைப் பகுதியைக் குறிப்பதை ஈண்டு
> > நோக்கலாம். வீட்டில் 'திம்ம உலக்கை' என்று திட்டுவார்கள். இங்கே திம்ம
> > என்பதும் திரட்சிப் பொருள் கொண்டதே. திம்மன் திம்மள் என்ற சொற்கள் உருண்டு
> > திரண்டவன், உருண்டு திரண்டவள் என்ற பருமன் கருத்தைக் கொண்டது. ஆகவே தமிர்ந்த
> > என்பது திரட்சிக் கருத்தே.
>
> > சேசாத்திரி
>
> திமிர்/திமில் திமு,திமு என வளர்ந்த பொலிகாளையின் மூரி.

> இதன் நிறம் கருமை,http://en.wikipedia.org/wiki/File:Bos_taurus_indicus.jpg

N. Ganesan

unread,
Nov 24, 2012, 8:16:52 AM11/24/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham


On Saturday, November 24, 2012 1:03:33 AM UTC-8, seshadri sridharan wrote:


2012/11/24 N. Ganesan <naa.g...@gmail.com

//திமிர்/திமில் திமு,திமு என வளர்ந்த பொலிகாளையின் மூரி. இதன் நிறம் கருமை, 

காங்கயம் காளை - இன்று தமிழ்நாட்டில் ஸ்போர்ட்ஸ் விலங்கு ஆகிவிட்டது.//

திமு திமு என்பதும் திரட்சிக் கருத்து தான். வீடு கட்டித் தரை வேயும் போது உடைந்த செங்கற்களை நிறப்பி அதை சமனாக தட்டி திடப்படுத்துவதற்கு இரும்பால் ஆன மிகக்கனமான செவ்வகப் பலகையில் கொம்பை முடுக்கி அதைத் தரையில் தொம் தொம் என்று தட்டுவார்கள். இதனால் செங்கல் உடைந்து பொடிப்பொடியாகிச் சமன்பட்டு உறுதியாகும்.  இந்தச் செவ்வக இரும்புப் பலகையைக் கொத்தனார்கள் திமிசு என்பார்கள். ஏனென்றால் அது கனத்தால் திரண்டது என்ற பொருளில்.  

சரி தலைப்பிற்கு வருவோம் திமிர்ந்த ஞானச்செருக்கு என்றால் பல ஏடுகளைக் கற்றுத் திரண்ட அறிவினால் உண்டாகிய பெருமிதஉணர்வு என்றே பொருள். எனவே பாரதி நன்றாகத் தமிழறிந்து தான் இப்பாவியற்றி உள்ளான் 

ஆதலால் //திமிர் என்பதும் செருக்கு என்பதும் குமுகம் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் நடத்தை அல்லவை என்று தெரிந்திருந்தும் ஒரு புது மொழியை உருவாக்கியதன் உள் அர்த்தம் என்ன?// என்ற பொருள்பாடு தவறானது. ஏனென்றால் திமிர் என்பதும் செருக்கு என்பது இங்கு குமுகத்தால் 
தூற்றப்படும் பொருளில் ஆளப்படுவில்லை. ஆகவே இது புதுமையான சொல்லாட்சியும் அல்ல.

சேசாத்திரி


ஆம்.

திரு. ஹரிகி ‘திருமி’ என்ற பாரதியின் பாட்டில் வரும் சொல்லைக் குறிப்பிட்டிருந்தார்.
http://www.keetru.com/rebel/bharathi/76.php
இதுவும் நாட்டார் வழக்கம்தான்.

மதுரை மதுரை எனவும், குதிரை குருதை என்பது போலவும்,
திமிரி, திருமி என்பது நாட்டுப்புற வழக்கு. இளமையில்
நெல்லைப் பகுதியில் பாரதி கேட்டிருக்கலாம். 2000 வருடமாக
இலக்கியத்தில் உள்ள எழுத்துமாற்றம் குயவன் சக்கரத்துக்கு
உள்ளது: திரிகை:திகிரி.

திமிருதல், திருமுதல் என்ற பேச்சுவழக்கு - பாரதி காலத்தில் இருந்தது -
இன்றும் இருக்கிறதா? எனக் கேட்டுப்பார்ப்போம்.

நா. கணேசன்

 

Hari Krishnan

unread,
Nov 24, 2012, 8:29:46 AM11/24/12
to vallamai, mintamil, Santhavasantham


2012/11/24 N. Ganesan <naa.g...@gmail.com>

திமிருதல், திருமுதல் என்ற பேச்சுவழக்கு - பாரதி காலத்தில் இருந்தது -
இன்றும் இருக்கிறதா? எனக் கேட்டுப்பார்ப்போம்.

பாரதி காலத்தில் அந்த வழக்கு இருந்ததாக எப்போது சொன்னேன்?  அது ஒரு புதிய படைப்பு; கவிதா உத்தி என்றுதான் சொன்னேன்.

திமிரித் தழுவியதில் நின்முகம் கண்டேன்’ என்பதை ‘திருமித் தழுவியதில் நின்முகம் கண்டேன்’ என்றானே, அது, புதிய சொல்லாக்கம்.  Tongue of the slip என்று சொல்வார்களே, அப்படி an example in itself. 

தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.  பாரதிக்கு முற்பட்ட இலக்கியத்தில் இப்படி ஒரு ஆட்சி இருக்கிறதா?  இது ஒரு புதிய on the spot poetification.  ஒரு திடீர் ஸ்பார்க்.  திமிரி, திருமி என்று மாறும்போது, அதுவே திமிரிக் கொண்டு போகிறது.  எனவே, அதுவே அதற்கு உதாரணம் என்றும் சொல்லியிருக்கிறேன்.

பாரதி காலத்தில் அந்த வழக்கு இருந்ததாகப் பேசுவதற்குப் பெயர், திரிப்பு.  நான் சொன்னது மிகத் தெளிவாக இருக்கிறது.  Now the burden of proof lies on your shoulders.  Not on mine.



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Nov 24, 2012, 8:33:35 AM11/24/12
to வல்லமை, மின்தமிழ்
On Nov 24, 1:21 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On 24 Nov, 10:20, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:>>> திமிர்/திமில் திமு,திமு என வளர்ந்த பொலிகாளையின் மூரி.
>
> இதன் நிறம் கருமை, ... <<<
>
> இங்கிட்டு கருப்பா இல்லீங்களே , ஐயா
>
> http://www.4shared.com/photo/ZB6z5NdT/Tharparkar_bull_100_3327.html
>
> http://www.google.com/imgres?q=white+indian+bulls&start=240&um=1&hl=e...
>
> http://www.google.com/imgres?q=tharparkar+bulls&start=115&um=1&hl=en&...
>

;-)
ஈரோடு கதிர், பழமைபேசி, ... கேட்டுப்பாருங்க.

திமிராக இல்லாத பருவத்தில் கன்று (calf), காயடித்த பின்னர் எருது
(castration - ox)
திமிர் இராது. திமிர்ந்த செருக்கு உள்ள பருவம் காளைக்கே உண்டு,
திமு, திமு என மூரி வளர்ந்து பொலியும் பருவம் பொலிகாளைக்குத் தான் உண்டு.

> William Dwight Whitney  'திம்’ என்று வேர் காட்டுகிறார்
>

அது சரியே. திம் என்பதுதான் தமிழ் திமிர்/திமில் என்பதன் வேர்.

செக்கர்/செக்கல்


திமிர்/திமில் போல் படர்:படலை. திகிர்/திகில் பொலிகிடாவைப்
பொலிபோடும்போது பண்டாரம் திகில்கொடுப்பது என்றால்
கயிறை அசைத்து பலியாணை தருதல்.

வெவ் வாய எயிற்றால் மிடல்
வீரர் கடிப்ப, மீச் சென்று,
அவ் வாய் எழு சோரிஅது,
ஆசைகள்தோறும் வீச,
எவ் வாயும் எழுந்த கொழுஞ்
சுடர் மீன்கள் யாவும்,
செவ்வாயை நிகர்த்தன; செக்கரை
ஒத்த, மேகம். - கம்பன்

இதனுரையில் உள்ள செய்தி:
” மேகம் செக்கரை ஒத்த - மேகங்கள்
செவ்வானத்தை ஒத்து விளங்கின.

கடித்த இடங்களிலிருந்து பெருகிய குருதியின் மிகுதி கூறப்பெற்றது.
செவ்வாய் - நவக்கிரங்களில் ஒன்று. சிவந்த நிறமுடையது. சோரி அது
என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. செக்கர் - செவ்வானம். இது செக்கல்
என்ற சொல்லின் ஈற்றுப் போலி; பின் பண்பாகு பெயராய்ச் செவ்வானத்தைக்
குறித்தது. “

செக்கர் பண்பாகுபெயராய் வானத்தைக் குறித்தற்போல,
திமிர என்னும் சிந்துசமவெளி வேளாண்சொல் கருமையை, இருளைக்
குறித்தது. இதனை சுஸ்ருத சங்கிதை என்னும் மருத்துவ நூலிலும்
“தைமிர” என்று உள்ளதைப் பார்க்கலாம்.

N. Ganesan

unread,
Nov 24, 2012, 8:41:28 AM11/24/12
to வல்லமை, Santhavasantham, mintamil
குதிரையைக் குருதை என்பதும், மதுரையை மருதை என்பதும்
திமிருதலை, திருமுதல் என்பதும் நாட்டார் வழக்கு.
திருமி என்பது பாரதியின் கண்டுபிடிப்பல்ல எனக் கருதுகிறேன்.
மக்கள் வழக்கில் இருந்து பயன்படுத்துகிறார்.
கலியாணம் என்ற பழந்தமிழ்ச் சொல்லை (சம்ஸ்கிருதத்தின்
கல்யாணம் என்பதன் மூலம்) கண்ணாலம் என்கிறாள் ஆண்டாள்,
ஆத்தாள் என்னும் நாட்டார் வழக்கை ’ஆத்தாளை’ என்கிறார்
அபிராமி பட்டர் என்னும் சிவாச்சார்ய குருக்கள். முக்கியமான
இடத்தில், வலுச் சேர்த்த நாட்டார் வழக்கைப் பயன்படுத்துகிறார்கள்
மூவரும்.

இதற்கு இலக்கிய ஆட்சி இருக்கிறதா? என ஆராய்வோம்.

ஒரு சொல் இலக்கியத்தில் இருக்கிறது:
குயவனின் திரிகை:திகிரி என்றாகி 2000 வருஷமாய்.

அன்புடன்
நா. கணேசன்

On Nov 24, 5:29 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/11/24 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > திமிருதல், திருமுதல் என்ற பேச்சுவழக்கு - பாரதி காலத்தில் இருந்தது -
> > இன்றும் இருக்கிறதா? எனக் கேட்டுப்பார்ப்போம்.
>
> பாரதி காலத்தில் அந்த வழக்கு இருந்ததாக எப்போது சொன்னேன்?  அது ஒரு புதிய
> படைப்பு; கவிதா உத்தி என்றுதான் சொன்னேன்.
>
> திமிரித் தழுவியதில் நின்முகம் கண்டேன்’ என்பதை ‘திருமித் தழுவியதில்
>

> > நின்முகம் கண்டேன்’ என்றானே, *அது, புதிய சொல்லாக்கம்*.  Tongue of the slip

Hari Krishnan

unread,
Nov 24, 2012, 8:44:52 AM11/24/12
to vallamai, Santhavasantham, mintamil


2012/11/24 N. Ganesan <naa.g...@gmail.com>

இதற்கு இலக்கிய ஆட்சி இருக்கிறதா? என ஆராய்வோம்.

ஆராஞ்சி கண்டுபுடிச்சி டாக்டர் பட்டம் வாங்கிக்கங்க. வேணாம்னா சொன்னேன்?  அதுக்குள்ள, பாரதி காலத்துல அந்த வழக்கு இருந்தது என்று நான் சொன்னதாக ஒரு கும்மாங்குத்து குத்தறீங்களே... இருந்தா இருக்கற எடத்தக் காட்டுங்கன்னுதான் சொல்றேன்.  பிடிங்க பிடிங்க நல்லா கண்‘டும் பிடிங்க... மூக்‘டும் பிடிங்க... அதுக்குள்ள என் தலயப் போட்டு உருட்டாதீங்க.  அவ்ளதான்.

N. Ganesan

unread,
Nov 24, 2012, 8:53:32 AM11/24/12
to வல்லமை, Santhavasantham, mintamil

On Nov 24, 5:44 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/11/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > இதற்கு இலக்கிய ஆட்சி இருக்கிறதா? என ஆராய்வோம்.
>
> ஆராஞ்சி கண்டுபுடிச்சி டாக்டர் பட்டம் வாங்கிக்கங்க. வேணாம்னா சொன்னேன்?
>  அதுக்குள்ள, பாரதி காலத்துல அந்த வழக்கு இருந்தது என்று நான் சொன்னதாக ஒரு
> கும்மாங்குத்து குத்தறீங்களே... இருந்தா இருக்கற எடத்தக் காட்டுங்கன்னுதான்
> சொல்றேன்.  பிடிங்க பிடிங்க நல்லா கண்‘டும் பிடிங்க... மூக்‘டும் பிடிங்க...
> அதுக்குள்ள என் தலயப் போட்டு உருட்டாதீங்க.  அவ்ளதான்.
>


பாரதி காலத்துல அந்த வழக்கு இருந்தது என்று நீங்கள் சொன்னதாக
எங்கே குறிப்பிட்டுள்ளேன்? என் மடலை மீண்டும் ஒருமுறை
படித்துப் பார்க்க வேண்டுகிறேன்:
https://groups.google.com/group/mintamil/msg/f4d4d928d527cfd2

"திரு. ஹரிகி ‘திருமி’ என்ற பாரதியின் பாட்டில் வரும் சொல்லைக்


குறிப்பிட்டிருந்தார்."
http://www.keetru.com/rebel/bharathi/76.php

மதுரை > மருதை, குதிரை > குருதை, திரிகை > திகிரி, திமிரி- > திருமி-
என்பது நாட்டார் வழக்கு என விளக்கியுள்ளேன்.

நா. கணேசன்

Innamburan Innamburan

unread,
Nov 24, 2012, 9:02:35 AM11/24/12
to vall...@googlegroups.com

'அதுக்குள்ள என் தலயப் போட்டு உருட்டாதீங்க.  அவ்ளதான்.'

~ஏன் மற்றவர்கள் தலையை உருட்டுவது உமது ஏகபோக உரிமையா, திரு. ஹரிகி அவர்களே.
இன்னம்பூரான்

--



N. Ganesan

unread,
Nov 24, 2012, 9:27:37 AM11/24/12
to வல்லமை
On Nov 24, 6:02 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:

> 'அதுக்குள்ள என் தலயப் போட்டு உருட்டாதீங்க.  அவ்ளதான்.'
>
> ~ஏன் மற்றவர்கள் தலையை உருட்டுவது உமது ஏகபோக உரிமையா, திரு. ஹரிகி அவர்களே.
> இன்னம்பூரான்
>

தமிழ் முனைவர்கள் ஆராய வேண்டும்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Nov 24, 2012, 9:28:52 AM11/24/12
to vallamai


2012/11/24 N. Ganesan <naa.g...@gmail.com>

> ~ஏன் மற்றவர்கள் தலையை உருட்டுவது உமது ஏகபோக உரிமையா, திரு. ஹரிகி அவர்களே.
> இன்னம்பூரான்
>

தமிழ் முனைவர்கள் ஆராய வேண்டும்.

கவலப் படவேண்டிய ஒண்ணுதான்.

N. Ganesan

unread,
Nov 24, 2012, 10:45:18 AM11/24/12
to மின்தமிழ், vall...@googlegroups.com
> > On 24 Nov, 09:17, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>
> > >>> திமிரிக்கொண்டு எழுந்தான் என்ற சொல்லாட்சியை ஊன்றி கவனித்தால் <<<
>

திம்மி, திம்மக்கா, திம்மணா, திமிசு, திமு-திமு, திமிர்/திமில் (Cf.
திமிர வடசொல்),
... போன்ற சொற்களின் வினைச்சொல் திமிரியது என வரும்.

(1) அறிஞர் அண்ணாவின் அச்சான புத்தகச் சொல்:
http://www.annavinpadaippugal.info/sorpozhivugal/valimai_mikka_ethiriyai.htm
“இந்த நேரத்தில் சீனத்துச் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது. ஒரு
மலைப்பாம்பு ஒரு பெரிய மரத்தைச் சுற்றிக் கொண்டதாம். நான் ஆட்டைச் சுற்றி
எலும்பை முறித்தேன். மாட்டைச் சுற்றிக் கொன்றேன். இந்த மரம்
எம்மாத்திரம்? என்று அது கருதியதாம். ஆடு மலைப்பாம்பிடமிருந்து தப்ப
முழுப் பலத்துடன் திமிரியது. பாம்பும் முழுப் பலத்துடன் சுற்றி அழுத்த
இரு பலமும் சேர்ந்ததால் ஆடு இறக்க நேரிட்டது. மாடும் அப்படித்தான். ஆனால்
மரம் அப்படியல்ல, எத்தனையோ பாம்புகள் ஏறி இறங்கியிருக்கின்றன"

(2) http://moonramkonam.com/thirukayilaya-manasarovar-mukthinath-yathirai-13-baba-nalini/
திருக்கைலாய யாத்ரை வர்ணனை,
”எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட பள்ளத்தாக்கின் ஓரமாக ஜீப்
ஒதுங்கும்போது—கடவுளைத்தவிர வேறு எதைப்பற்றியும் மனம்
சிந்திக்காது . வெளிநாட்டைச்சேர்ந்த ஒருவர் ,குதிரையின் மீது வந்து
கொண்டிருந்தார் . ஜீப் எழுப்பிய ஒலியக்கேட்டு குதிரை அரண்டு
போய் , முன்னங்கால்களைத்தூக்கி திமிரியது .அடுத்தக்கணமே குதிரை
ஓட்டி அதை அடக்கிவிட்டார் .சிறிது
தாமதித்திருந்தாலும் ,பள்ளத்தாக்கில்தான் .”

(3) நாவலில்,
http://puthu.thinnai.com/?p=13587
”விவேகானந்தனுக்கு ஆத்திரம் அடி வயிற்றில் உஷ்ணமாய்த் திமிரியது.
“அடிப்பாவி.. எத்தன லுக் விட்டுறுப்ப… சைக்கிள்ள உன் ஃப்ரண்ட்ஸை
விட்டுட்டு எத்தனை நாள் எங்கூடப் பேசிக்கிட்டே சைக்கிள் ஓட்டியிருக்கே.”

பழைய திராவிட பாஷைகளின் வினைச்சொல் திமிருதல்.

நா. கணேசன்

>
> சேசாத்திரி ஐயா விளக்கியிருப்பதுபோல்,
> திமிருதல் என்றால் திமிருறச் செய்தல் என்ற பொருளும் உண்டு.
> கலித்தொகை உரைகாரர் சொல்லியுள்ளார். திமிருதல் - திமிறுதல்
> என்றாதல் பிற்காலம். பல சொற்கள் ர- ற்-கரம் எனப் பிற்காலத்தில்
> ஆகியுள்ளன.
>

N. Ganesan

unread,
Nov 24, 2012, 12:22:50 PM11/24/12
to சந்தவசந்தம், yavaru...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com

On Nov 24, 8:55 am, Vis Gop <vis...@gmail.com> wrote:
> கல்யாணம் என்பது நம் வேதத்தில் உள்ள சொல்லாயிற்றே! அதற்குத்திருமணம் என்ற
> தனிப் பொருள் இல்லை. நல்லவை யாவும் கல்யாணமே. நல்ல நிகழ்ச்சி, நல்ல குணம் கூட!
> கோபால்.
>

Our Vedas do contain many Dravidian words. 200 years of work in
Universities
have established the fact. A reason will be found in the followin
paper

Here is a paper I wrote and published at International School of
Dravidian Linguistics,
Kerala:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/b6747e262b8bfff9

will appreciate your learned input after reading my paper, available
for download as a PDF,
N. Ganesan

N. Ganesan

unread,
Nov 24, 2012, 1:16:13 PM11/24/12
to வல்லமை, mintamil, Santhavasantham

இங்கிட்டு பாருங்க ஐயா,

http://www.outlookindia.com/article.aspx?271375

கொங்குமண்டிலம் மாத்திரம் இல்லை.
க்லாஸிக் ஃசீபு (zebu bulls) திமிர்/திமில்
எப்படி இருக்கு ஓங்கோல் கொங்கிலும் இல்லை.

வேளிர் துவரையை விட்டு வெளியேறி தென்னகம் புகுந்து
வேளாண்மை பெருக்கியபோது கொணர்ந்த
காளையினங்கள்.

நீங்க படம் காட்டும் சிவப்புக் காளையும் நானறிவேன்.
அவை விழுக்காட்டில் மிகக் குறைவானவை.
காங்கயம், ஓங்கோல் போன்ற சிந்து வமிசாவளி
மாடுகளில்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Nov 24, 2012, 2:08:53 PM11/24/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள்


23 நவம்பர், 2012 3:08 am அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:


எவ்வளவு முயன்றும் தனது திறமையினால் ஞானச் செருக்கு உள்ள ஆளை நடைமுறை வாழ்க்கையில் அடையாளம் கூற என்னால் முடியவில்லை. 

குழுமங்களுக்கு வந்து ஒரு வாரம்தானே ஆச்சு . அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படிங்க?



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Nov 24, 2012, 2:34:24 PM11/24/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
... ஹா... ஹா... என்னமா பொடி  வச்சு எழுதிட்டீங்க.

வேந்தன் அரசு

unread,
Nov 24, 2012, 6:41:34 PM11/24/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
செருக்கு என்பதும் பீடு என்பதும் ஒன்றாகுமோ?

ஏறு  போல் பீடு  நடை

ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்

Nagarajan Vadivel

unread,
Nov 24, 2012, 8:52:37 PM11/24/12
to vallamai
அடேங்கப்பா
அப்பனே சாமியோவ் கலக்கிப் புட்டீக போங்க
எவ்வளவு கருத்துக் குவியல்கள்
குட்டையைக் கல்லக்கி மீன் பிடிப்பது மதுரைப் பக்கம் வழக்கம்
இங்க மீனையே பிடிச்சு குலுக்கு குலுக்குன்னு குலுக்கீட்டீங்க

முடிவென்னவோ குழப்பம்தான் ஒன்னுமே புரியல

பாரதிக்கு உரை எழுதுவது ஒரு நல்ல பொழுது போக்கு.  அதைப் படிப்பது அதைவிட அருமையான பொழுது போக்கு

பாரதியிப் பற்றித் தனக்கு எவ்வளவு தெரியும் என்று அவனை முற்றும் கற்றுணர்ந்த அறிஞர்கள் சொல்லிக் கொள்ள உதவும்

அதே நேரம் பாரதி அரும்பாடுபட்டு எழுதியது அரைகுறைக் கல்வி அதிலும் ஆங்கிலக் கல்வி இல்லாதவர்களுக்கு அவர்கள் மொழியில் எழுதி அவர்கள் உயர் சிந்தனைகளைத் தங்கள் கல்விநிலையில் அறிந்துகொள்ள உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்

ஒரு கவிதையின் ஓரடியை அதுவும் முழுமையில்லாமல் எடுத்து வைத்துக் கொண்டு விளக்கம் சொல்வதைவிட அந்த முழுக் கவிதையையும் எடுத்து வைத்துக் கொண்டு அலசுவது சிறந்தது.

முழுப் பாடலின் உள்ளுறைக் கருத்துக்களே பாரதி கண்ட காட்சியைப் படிப்பவன் மனதில் ஒரு காட்சிப்பொருளாகத் தோன்றச் செய்து விடும்.

பாரதியின் படைப்புச் செயலின் தலையாய நோக்கம் மேல் நாட்டு வளங்களை நிகழ்வுகளைத் தமிழகத்தின் கடைக்கோடியில் வாழும் கொஞ்சம் படித்தவன் நிறைய்த் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;


என்பதே மையக் கருத்து

திமிர்ந்த = Empowered
ஞான =Intellect
செருக்கு =Ego
இருப்பதால்

நிறையக் கவிஞர்கள் அதிலும் "வாலி"பம் தாண்டிய கவிஞர்கள் :வைர" வரிகளில் பெண்களின் இளமையான உடலை திமிறிக்கொண்டு நிற்பதாக எழுதி தமிழ் நாட்டு வாலிப வயோதிக அன்பர்களை நீராவி எஞ்சின் ஓட்டச் செய்கிறார்கள்.  ஆனால் அதே பெண்ணிடம் இயல்பாக அமைந்துள்ள பொன்மனம் இரும்புத் திடமுள்ள மன உறுதி பற்றி அதிகம் எழுதுவதில்லை

திமிர்ந்த என்பது
நான் சரிநிகர் சமானம்
எனக்கென்ன குறை
நான் என்னை வளர்த்துக்கொள்ளாமல் யார் வளர்ப்பில் நான் இருக்கவேண்டும்
என் வாழ்வின் பாதை நான் தீர்மானிப்பது
என்று இயங்கும் மனப்பாங்கு
ஒரு பெண்ணுக்கு இயல்பானது
அவர்களே செம்மை மாந்தர்
அவர்களின் வாழ்க்கை பயனற்றுப் பயணிப்பதில்லை
என்று பாரதி கூறுவதாகத்தான் என் போன்ற பாமரனுக்குத் தெரிகிறது சாமி

நேற்று பகல் முழுதும் வசந்த நகரில் மின் சாரம் இல்லை.  முருகன் இட்லிக் கடையில் அமர்ந்துகொண்டு நண்கர்களுக்கு ஜிகிர்தண்டா வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன என்று கேட்டார்கள்.  மின் தமிழ் மட்டுறுத்துனரை ஒரு மின் தமிழ்ப் பெண் ஒதைப்பேன் என்று சொன்னார் என்று வெளிப்படையகச் சொல்ல முடியுமா.  எனக்கு மகிழ்ச்சிக்குக் காரணம் என்னை இன்னொரு மட்டுறுத்தாயினி கல்லால் அடிப்பேன் என்று சொன்னார்.  நம்மைவிட மோசமான நிலையில் இன்னொருவரைப் பார்க்கும்போது எம்புட்டு மகிழ்ச்சி

மின் தமிழில் மெய்நிகர் வடிவில் வலம் வரும் பெண்கள் எல்லாரும் அதிரடி நாயகிகளாக இருக்கிறார்கள்.  அவர்களின் பார்வையில் ஆனாதிக்கச் சொற்கள் ஆலைவாய்க் கரும்பாக நசுங்கிப் போகிறதே இதுதான் திமிர்ந்த ஞானச் செருக்கோ
எனக்கு இந்த உண்மை தெர்ஞ்சாகனும் சாமி
முழுப்பாடலும் கீழே


http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-III04.asp

போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்

வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே!

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!

நாகராசன்


2012/11/25 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
 
 

Anna Kannan

unread,
Nov 26, 2012, 2:48:50 AM11/26/12
to vall...@googlegroups.com
இது தொடர்பான ஒரு கவிதை, இந்தப் பக்கங்களில் உள்ளது:

http://www.vallamai.com/literature/poems/2163/


Nagarajan Vadivel

unread,
Nov 26, 2012, 6:59:40 AM11/26/12
to vallamai
படைப்பாற்றல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில் படைப்பாற்றலை விளக்குவது எப்படி என்று கார சாரமான விவதம் நடத்தி படைப்பாற்றலை விளக்குவது அரிது ஆனால் அதை அடையாளம் கண்டுகொள்வது எளிது என்று முடிவெடுக்கும்போது ஒரு உளவியலார் நான் என் மனைவியை விளக்க முடியாது ஆனால் எப்போதும் தவறாமல் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்

எனவே திமிர்ந்த ஞானச் செருக்கு என்பதை விளக்குவதைவிட அப்பண்பு நிறைந்த பெண்டிரை அடையாலம் காண முடியும்

பாரதியின் பார்வையில்
1. அக்கச்சி நிவேதிதா
2. அன்னை வசந்தை

திமிந்த ஞானச் செருக்குள்ளவர்கள் என்று ஏற்றுக்கொளத் தக்கவர்கள்

என் பர்வையில்
1. எனக்கு முதல் முதலாக நேர்முகத் தேர்வு நடத்தி என்னுடைய முதல் ஆராய்ச்சிப்பணிக்கு மூலகாரணமாக இருந்த துர்க்காபாய் தேஷ்முக்
2. என்னுடைய ஆசிரியப்பணிய்ன் தொடக்கத்தில் நக்சலைட்டுகள் என்ற பெயரில்  தமிழக அரசு பத்திரிக்கையாளர்களையும் மாற்றுச் சிந்தனை உள்ளவர்களையும் வேட்டையடிக்கொன்டிருந்தபோது அஞ்சாமல் நலிவுற்றவர்களுக்க்குக் குரல் கொடுத்த நடன மங்கை சந்திரலேகா
3. என்னுடைய சமுகப்பணியில் ஆளுநர் அமைத்த குழுவில் உடனமர்ந்து பணியாற்றும் அரிய வாய்ப்பை அளித்த ருக்மணிதேவி அருண்டேல்
மற்றவர்களும் தங்கள் பார்வையும் திமிர்ந்த ஞானச் செருக்கு மிக்க பெண்டிரைப் பட்டியலிடலாமே

நாகரசன்


2012/11/26 Anna Kannan <annak...@gmail.com>
இது தொடர்பான ஒரு கவிதை, இந்தப் பக்கங்களில் உள்ளது:

http://www.vallamai.com/literature/poems/2163/


--
 
 

பிரசாத் வேணுகோபால்

unread,
Nov 26, 2012, 7:04:32 AM11/26/12
to vallamai
ஐயா...
 
திமிர்ந்த ஞானச் செருக்கு அப்படின்னு என்னான்னு தெரிஞ்சா தானே அது மாதிரி எங்களுக்கு தெரிஞ்சவங்களை அடையாளம் கண்டு சொல்ல முடியும்....
 
இப்போ உங்க பார்வையில் திமிர்ந்த ஞானச் செருக்கு உடையவர்கள் பெயரைச் சொன்னீர்கள் இல்லையா... அவர்களை எந்தெந்த காரணிகளை வைத்து அவ்வாறு சொன்னீர்கள் என்று விளக்கமாகச் சொன்னால் நாங்களும் பட்டியலிட வசதியாய் இருக்குமே....


2012/11/26 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 26, 2012, 8:18:23 AM11/26/12
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்


2012/11/24 செல்வன் <hol...@gmail.com>

ஞானச்செருக்கு என்பதுக்கு "அறிவுத்திமிர்" "கர்வம்" என பொருள் கொடுத்துள்ளது தமிழ் விக்சனரி

அண்மைக் காலமாக விக்சனரியில் பங்களித்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் இதை நான் செய்யவில்லை.  திருத்த வேண்டும்.

திமிர்ந்த என்ற சொல்லுக்கு சுருக்கமான விளக்கம் வேண்டுமானால், ஆங்கிலத்தில் brimming with என்பதை இணையாகக் காட்டலாம்.  விளிம்புவரையில் ‘நிறைந்த’, நிறைகுடம் போன்ற, முழுமையான....

செருக்கு என்றால் கர்வம் என்றுதான் பொருள்.  ஆனால் கர்வப்படுவதில் இரண்டு வகை உண்டு.  ஒன்று பெருமிதம்; மற்றது ஆணவம்.  ஆங்கிலத்திலும் இந்த வேறுபாடு உண்டு.  முன்னரேயே சொன்னேன், I am proud about my country என்பதில் உள்ள proudம், Pride goes before a fall என்பதில் உள்ள prideம் diagonally opposite.  

தான் முழுமையான ஞானத்தைப் பெற்றவளாக இருக்கவும் வேண்டும்; ‘பாதகம் செய்பவரைக் கண்டால், நீ பயங்கொள்ளலாகாது பாப்பா’ என்பதைப் போல, திமிர்ந்த ஞானச் செருக்கு என்பதில் a complete and total awareness of one's own potential என்ற பொருள்தான் தொனிக்கிறது.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்....
திமிர்ந்த ஞானச் செருக்கு... இவற்றைக் கொண்ட செம்மையான மாதர்கள், நெறிகெட்டுப் போவதில்லை.  திறம்புவதில்லை.

இந்த அடிகளுக்குப் பாஞ்சாலி சபதத்தில், 

நல்லதுநீ சென்று நடந்தகதை கேட்டுவா.
வல்லசகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம் 

என்னைமுன் னேகூறி இழந்தாரா? தம்மையே
முன்னம் வைத்து முடித்தென்னைத் தோற்றாரா? 

சென்று சபையில் இச்செய்தி தெரிந்துவா

என்று சூதாட்ட விதிமுறைகளின் படியே கூட, தான் ஆடி இழக்கப்பட்ட விதம் செல்லுபடியாகாது என்று பாஞ்சாலி பேசும்போதும்,  தடுமாறும் பீஷ்மரைப் பார்த்து,

சாலநன்கு கூறினீர் ஐயா, தருமநெறி 

பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால்
கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின் கூட்டமுற 

மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே
செந்திருவைப் பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால் 

தக்கதுநீர் செய்தீர் தருமத்துக் கிச்செய்கை
ஒக்கும் எனக்கூறி உகந்தனராம் சாத்திரிமார் 

பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்
மாய முணராத மன்னவனைச் சூதாட

வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ?
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ? (168)

மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?

என்று டெக்னிகல் பாயின்ட்டுக் மேல் டெக்னிகல் பாயின்ட்டாக அள்ளி வீசும்போது பொருத்திக் காட்டுகிறேன். அதுவரை பொறுத்திருக்கவும்.  

பாரதியின் ‘திமிர்ந்த ஞானச் செருக்கும்’ என்ற பிரயோகத்துக்கு ஓர் முழுமையான எடுத்துக்காட்டு வேண்டுமானால், அவன் படைப்புக்குள்ளேயே உள்ள பாஞ்சாலி இருக்கிறாள்.

Nagarajan Vadivel

unread,
Nov 26, 2012, 9:12:13 AM11/26/12
to vallamai
ஐயா
அதைத் தெரிஞ்சுக்க இது ஒரு மாற்று வழி அவ்வளவுதான்
தலைமைப் பண்பு என்றால் என்ன என்று அறிந்துகொள்ள விழைந்தவர்கள் வரலாறு பல்வேறு காலகட்டத்திலும் தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களை முதலில் பட்டியலிட்டது
பின்னர் அவர்களின் தலைமைப் பண்புகளைப் பட்டியலிட்டு அலசி ஒரு பட்டியலைத் தொகுத்து அதுவே தலைமைப் பண்பு என்று நிறுவப்பட்டது
இங்கும் அதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொண்டு திமிர்ந்த ஞானச் செஉக்குள்ள பெண்களை அடையாளம்கண்டு பின்னர் அவர்கலின் பண்பு நலன்களைத் தொகுத்து அலசலாமே

வரலாறு அடையாளம் காட்டும் சிலர்
1.ராணி மங்கம்மா
2.ராணி மீனாட்சி
3.ராணி வேலு நாச்சியார்

நாகராசன்


2012/11/26 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
--
 
 

Nagarajan Vadivel

unread,
Nov 26, 2012, 9:12:27 AM11/26/12
to vallamai
ஐயா
அதைத் தெரிஞ்சுக்க இது ஒரு மாற்று வழி அவ்வளவுதான்
தலைமைப் பண்பு என்றால் என்ன என்று அறிந்துகொள்ள விழைந்தவர்கள் வரலாறு பல்வேறு காலகட்டத்திலும் தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களை முதலில் பட்டியலிட்டது
பின்னர் அவர்களின் தலைமைப் பண்புகளைப் பட்டியலிட்டு அலசி ஒரு பட்டியலைத் தொகுத்து அதுவே தலைமைப் பண்பு என்று நிறுவப்பட்டது
இங்கும் அதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொண்டு திமிர்ந்த ஞானச் செஉக்குள்ள பெண்களை அடையாளம்கண்டு பின்னர் அவர்கலின் பண்பு நலன்களைத் தொகுத்து அலசலாமே

வரலாறு அடையாளம் காட்டும் சிலர்
1.ராணி மங்கம்மா
2.ராணி மீனாட்சி
3.ராணி வேலு நாச்சியார்

நாகராசன்
2012/11/26 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
ஐயா...
--
 
 

N. Ganesan

unread,
Nov 26, 2012, 9:13:20 AM11/26/12
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Nov 24, 9:32 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> 2012/11/24 DEV RAJ <rde...@gmail.com>
>
> > >>> திமிரிக்கொண்டு எழுந்தான் என்ற சொல்லாட்சியை ஊன்றி கவனித்தால் <<<
>
> > ஊன்றிக் கவனித்திருந்தால் அது வல்லின றகரம் என்று தெரிந்திருக்கும்; காண்க
> > - ”திண்மை யாகப் பிடிக்கத் திமிறினான்”
>
>  தேவு ஐயா!
>
> திமிர் அல்ல திமிறு தான் சரி என்று பிழை திருத்தினீர்கள் மிக்க நன்றி.
>
> நான் இப்போது தான் லிப்கோ தமிழ் அகராதியை புரட்டினேன். அதில் திமிறு என்பதற்கு
> பிடியிலிருந்து விடுபடு என்று பொருள் கூறியிருக்கிறார் அதை தொகுத்த  திரு
> நரசிம்மாச்சாரி. நான்கு பேர் சேர்ந்து அமுக்கும்போது தன் முழு ஆற்றலையும்
> திரட்டினால்தான் பிடியிலிருந்து  விடுபடமுடியும்.
>
> அடுத்து திமிர் என்பதற்கு தடிப்பாகு - to become stout என்றொரு பொருளையும்
> அவர் கொடுத்துள்ளார். தடித்தலும் திரட்சிதான். ஆக திமிர் என்பதும் திமிறு
> என்பதும் திரட்சிப் பொருள் வேருடையன என்பதை மறுக்க முடியாது.
>
> 'காலையில் சாப்பிட்டதே வயிறு திம் என்று இருக்கிறது' என்ற தொடரில் திம் என்பது
> திரட்சியைக் குறிப்பதை நோக்குக.
>

தேவு ஐயா காட்டியிருப்பது கொங்குநாட்டில் வாழ்ந்து கம்பனுக்கு
எதிர்காவியம்
பாடிய நாத்திகப் புலவர் குழந்தை அவர்கள். 20-ஆம் நூற்றாண்டு.
பழைய வழக்கம் திமிரியது என்பது. சிதல்/சிதர் (குடல்/குடர், சுடர்/சுடலை,
சுவர்/சுவல்
... போல, திமில்/திமிர்- வல்லினமாதல் தற்போதுதான். முரிந்தது, முறிந்தது
என்று
தற்காலத்தில் எழுதுகிறோமே அதுபோல. சிதரியது என்னும் பழைய வழக்கு
சிதறியது என இன்று எழுதுகிறோம். அதேபோல திமிரியது என்னும் இன்றுமுள்ள
பழைய வழக்கத்தை திமிறியது எனக் புலவர் குழந்தை எழுதிச் செல்கிறார்.

கண்ணாலம், ஆத்தாள் என்பது போல நாட்டார் வழக்காகிய திமிரு- > திருமு-
என்னும்
வினைச்சொல்லை பொருத்தமாக பாரதி கையாள்கிறார் என்ற பொருளும்
சொல்லலாம்.

Hari Krishnan

unread,
Nov 26, 2012, 9:18:54 AM11/26/12
to vallamai, மின்தமிழ்


2012/11/26 N. Ganesan <naa.g...@gmail.com>

கண்ணாலம், ஆத்தாள் என்பது போல நாட்டார் வழக்காகிய திமிரு- > திருமு-
என்னும்


பாரதியின் எழுத்தில் நாட்டார் வழக்குகள் எவ்வளவு உள்ளன?  எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்து முடித்த பின்னால்தான் இது சொல்லப்படுகிறதா?

தேமொழி

unread,
Nov 26, 2012, 10:23:05 AM11/26/12
to vall...@googlegroups.com
 
திமிர்ந்த ஞானச் செருக்கு உள்ள பெண்கள் = liberal unconstrained women with bold and outspoken character
Aung San Suu Kyi
Arundhati Roy
Kamala Das
Jeyalaithaa Jeyaram

Karuannam Annam

unread,
Nov 26, 2012, 10:37:43 AM11/26/12
to vall...@googlegroups.com


2012/11/26 தேமொழி <them...@yahoo.com>
 
திமிர்ந்த ஞானச் செருக்கு உள்ள பெண்கள் = liberal unconstrained women with bold and outspoken character
Aung San Suu Kyi, Arundhati Roy
Kamala Das
Jeyalaithaa Jeyaram
 
கூகுள் தேடலில் சொற்கள் கொடுத்துத் தேடும்போது ஒரு சொல்லுக்கு மட்டுமே உரிய தகவலையும் பட்டியலில் இணைத்துத் தருகிறது. அதுபோல உங்கள் பதில் இருக்கிறது திருமிகு தேமொழி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
 

செல்வன்

unread,
Nov 26, 2012, 12:42:31 PM11/26/12
to vall...@googlegroups.com
2012/11/26 தேமொழி <them...@yahoo.com>
திமிர்ந்த ஞானச் செருக்கு உள்ள பெண்கள் = liberal unconstrained women with bold and outspoken character


They could be conservative too.

அதிகமான ஞானத்தை அடைந்ததால் நியாயமாக பெருமிதம் அடையும் பெண் என வைத்துகொண்டால் நிறைய படித்த பெண்கள் பலரையும் சொல்லமுடியும். தேமொழியே நல்ல உதாரணம். பவளசங்கரி, ஸ்வாதி, தலைவி கீதா சாம்பசிவம் போன்று இங்கு எழுதும் பெண்கள் அனைவரும் நல்ல ஞானமும், துணிவும் உள்ளவர்கள். பாரதி காண ஆசைப்பட்ட புதுமைப்பெண்கள்.

--
செல்வன்


பிரசாத் வேணுகோபால்

unread,
Nov 26, 2012, 1:17:32 PM11/26/12
to vallamai
ஐயா,

பிழையாக நினைக்க வேண்டாம்...

அது என்னமோ தெரியலை... என்னோட பதிலுக்கு எல்லோருமே சீரியஸாவே பதில் சொல்றீங்க... நான் சும்மா தெருக்கூத்து நாடகத்தின் இடையில் வரும் கோமாளி மாதிரி எதுவும் செய்யலாமேனு வந்தா அதுக்கும் சீரியஸாவே எல்லோரும் பதில் சொல்றீங்க...

நான் காமெடியே பண்ணலை இனி...

(யாருப்பா அது, கோவப்படுற மாதிரி காமெடி பண்ணாதன்னு எத்தனை முறை உனக்கு சொல்றதுடான்னு முனகறது... அழுதுடுவேன்... ம்க்கும்...) 


2012/11/26 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Nov 26, 2012, 9:28:32 PM11/26/12
to vall...@googlegroups.com


26 நவம்பர், 2012 12:42 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:



2012/11/26 தேமொழி <them...@yahoo.com>
திமிர்ந்த ஞானச் செருக்கு உள்ள பெண்கள் = liberal unconstrained women with bold and outspoken character


They could be conservative too.

அதிகமான ஞானத்தை அடைந்ததால் நியாயமாக பெருமிதம் அடையும் பெண் என வைத்துகொண்டால் நிறைய படித்த பெண்கள் பலரையும் சொல்லமுடியும். தேமொழியே நல்ல உதாரணம். பவளசங்கரி, ஸ்வாதி, தலைவி கீதா சாம்பசிவம் போன்று இங்கு எழுதும் பெண்கள் அனைவரும் நல்ல ஞானமும், துணிவும் உள்ளவர்கள். பாரதி காண ஆசைப்பட்ட புதுமைப்பெண்கள்.


டூய் என்றால் பயந்து ஓடிவிடமாட்டார்களே
 

பெண்களுக்கு ஞானம் இருந்தாலும் செருக்கு இல்லை.
”என்பது என் கருத்து” என்று நழுவதுபோல் பேசுவார்கள்

அடிச்சு சொல்லணும். அப்பதான் செருக்கு இருக்கும். தன்நம்பிக்கையின் உச்ச கட்டம் செருக்கு.

செல்வன்

unread,
Nov 26, 2012, 9:36:37 PM11/26/12
to vall...@googlegroups.com


2012/11/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

டூய் என்றால் பயந்து ஓடிவிடமாட்டார்களே

தலைவி என்னை பலவருடங்களாக பலகுழுமங்களில் புரட்டி எடுத்து வருகிறார். பயந்து ஓடுவது நான் தான்:-). கடைசியில் வைகோ அம்மாவுடன் கூட்டணி வைத்த கதையாய் நான் தலைவியுடன் கூட்டணி வைக்கும் நிலைக்கு தள்ளபட்டுவிட்டேன்:-)



அடிச்சு சொல்லணும். அப்பதான் செருக்கு இருக்கும். தன்நம்பிக்கையின் உச்ச கட்டம் செருக்கு.


எந்த வகை செருக்கு என்பது முக்கியம். அது ஆண், பெண், அரவாணி என யாராக இருந்தாலும் நியாயமான பெருமிதம் வரவேற்க கூடியது.ஆரோக்கியமானது.

Tthamizth Tthenee

unread,
Nov 27, 2012, 12:14:19 AM11/27/12
to vall...@googlegroups.com
திமிர்ந்த ஞானச் செறிவு க்கும்  திமிர்ந்த ஞானச் செருக்குக் கும் வித்யாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன்

 

அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/11/27 தேமொழி <them...@yahoo.com>
 
'அடிச்சு' சொன்னா சொர்ணாக்கான்னு கூப்பிடுறாங்க  

--
 
 

Nagarajan Vadivel

unread,
Nov 27, 2012, 12:26:34 AM11/27/12
to vallamai
திமிர்ந்த ஞானச் செருக்கு என்றால் என்ன என்று சிவகாமிப்பாட்டி சொன்னது

ஞானச் செருக்கு என்பது ஞானம் + செருக்கு என்ற எண் கணிதத்தில் அடங்கும் கூட்டு அல்ல
ஞானம் செருக்கு இரண்டும் இரன்டறக் கலந்த வேதியல் கலவை ஞானச் செருக்கு

நம்ம சனங்களுக்கு  பெண்கள்தான் சாமியா இருக்கு
நம்ம ராசா ராணி இல்லாம அரசாள முடியாது

நம்ம பெண்கள் பொறக்கும்போதே எல்லா சக்தியையும் பெற்றுத்தான் பூமியில் சென்மம் எடுக்குறாக

பிறந்த சென்மத்தில் நல்லா வாழ்ந்து ஒரு பூரணமான  வாழ்க்கை வாழ எல்லாச் சக்தியையும் இயற்கை பெண்களுக்குக் கொடுத்திருக்கு

நல்ல ஊணுண்டு உடலைப் பேணி தற்காத்து தன்னைக் கொண்டவனையும் நல்லா கவனித்து (ரொம்ப முக்கியம்) குடும்பத்தை வளர்த்து குமுகத்தில் அவர்கள் வளமுடன் வாழ எல்லாத் திறமைகளையும் (ஆய கலைகள் 64ஐயும்) கற்று மற்றவர்கள் கற்றுக்கோள்ள உதவி வாழவேண்டும் என்ற நியதியை முறையாகக் கடைப்பிடித்து பெற வேண்டிய எல்லாம் பெற்றுவிட்டோம் என்ற அறிநிலைதான் ஞானப் செருக்குடா பேராண்டி

நிலக்கோட்டைப் பக்கம் கோவிலுக்கென்று ஒரு காளைமாட்டை கோபாலகிருஷ்ணசாமி என்ற பட்டப்பெயருடன் தேர்தல்மூலம் தேர்ந்தெடுப்பவை அங்கு வாழும் மாடுகளும்தான்.  அதில் பசுமாடுகளும் அடக்கம்.  பசுமாடெல்லாம் ஓட்டு மட்டுந்தான் போடும் ஆனால் அது கோபாலகிருஷ்ணசாமி ஆக முடியாது.  அதுபோல பெண்கள் ஓட்டுப் போடலாம் ஆட்சிக்கு வரமுடியாது என்பது ஆணாதிக்கத் தளை.  அந்தத் தளையை உடைத்துக்கொண்டு எழுந்து நல்வழ்வு தன்னம்பிக்கை ஆளுமைப் பண்பு அனைத்தும்பெற்றுத் தானும் உயர்ந்து மற்றவரையும் உயர்த்தும் திறமை எனக்குன்டு என்று சொல்லாமல் சொல்லுவதே திமிர்ந்த ஞானச் செருக்குடா பேராண்டி என்று சொல்லிப் பொக்கைவாய்ச் சிரிப்புச் சிரிக்குது சிவகாமிப்பாட்டி

நாகராசன்


2012/11/27 செல்வன் <hol...@gmail.com>
--
 
 

Nagarajan Vadivel

unread,
Nov 27, 2012, 3:16:21 AM11/27/12
to vallamai
சர்வம் சக்தி மயம் பாரு

https://www.youtube.com/watch?v=wvyh9Jrad54

நாகராசன்


2012/11/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
--
 
 

வேந்தன் அரசு

unread,
Nov 27, 2012, 7:59:13 AM11/27/12
to vall...@googlegroups.com


26 நவம்பர், 2012 11:48 pm அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:

 
'அடிச்சு' சொன்னா சொர்ணாக்கான்னு கூப்பிடுறாங்க  
 


உண்மைதானுங்க.

மடம் என்பது பெண்ணின் நால்வகை குணங்களில் ஒன்று. அது இருக்கிற பெண்களைத்தான் ஆண் விழைவான்.

 பெண்டிரே, நீங்க அவைகளில் ஞான செருக்குகொண்டு இருங்க.
ஆனால் உங்க ஆம்படையான் கிட்டே மட்டும் மடம் போற்றுங்கள். ஏன்னா ஆண்களுக்கு ஞானம் இல்லாட்டியும் இருக்கு என தருக்கும் செருக்கு இருக்கு.

இல்லறம் நல்லறமாக்குக.

--
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages