வீழ் > விழு. வீணை - மேலிருந்து விழும் மின்னல். வீண் என்றால் மேலிருந்து விழுந்ததால் நொறுங்கி பயனற்று போதல் ஆகும். இதாவது, பயனற்று போவதற்கு இச்சொல் ஆளப்படுகிறது. வீவு என்றால் அழிவு, கெடுகை. வீற்றாதல் என்றால் பிளவுபடுதல். வீறல் என்றால் வெடிப்பு. இதன் மூலம் விழுந்து நொறுங்கி பாழாதல் வீண் என்ற சொல்லுக்கு வேர் கருத்து ஆனது.
மலையாளத்தில் வீழ்ந்தான் என்பதை വീണു (வீணு) என்பர்.