காமத்தியற்கை: ஓர் சைவப் பார்வை

488 views
Skip to first unread message

K. Loganathan

unread,
Oct 24, 2014, 10:43:01 PM10/24/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

காமத்தியற்கை: ஓர் சைவப் பார்வை

 

முனைவர் கி. லோகநாதன், 25-10-14

 

இடுகை 1

அறிமுகம்

 

என்று சிவலிங்க வழிபாடு தோன்றிற்றோ அன்றே மக்கள் சைவ சமயத்தின் அடிப்படை தத்துவஞானத்திற்கு இடம் தந்துவிட்டனர் என்று பொருள்படும். அற்ப மனிதர்கள் காமம் என்றாலே முகம் சுழித்து அதனை அருவருப்பாக பார்ர்கும் அதே பொழுது அந்த உடலின்பத்திற்கு அடிமையாகி இருப்பதையும் அது பல காரணங்களால் விகாரமடைய பல வகையான தீராத அல்லது தீர்த்தற்கு அரிதான பல மனநோய்கட்கு காரணமாக அமைவதும் உண்டு.

 

சிவலிங்க வழிபாடும் அதனோடு வரும் அம்மையப்பர் வழிபாடும் மிகத் தொன்மையானது என்பதொடு சைவ சமயத்தின் முக்கிய அடையாளமாகவும் இருக்கின்றது. அரப்பா நாகரீகத்திலும் மற்றும் உலகின் இன்னும் பல இடங்களிலும் சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகமவுளவியல் வளர்க்கும்  தருத்தேர்விலும் சமய பேதங்கள் இன பேதங்கள் எலாங் கடந்த நிலையில் சிவலிங்கம் பலர் உள்ளத்தின் ஆழத்தில் இருப்பதையும் களவாய்வின் வழி நலமேக் காணலாம்

 

சைவத்தின் சிவலிங்கம், சிவதத்துவங்களாகிய நாதம் விந்து எனும் இரண்டின் சேர்க்கையாகும். காமத்தின் தோற்றத்தை இந்த சிவத்தத்துவங்கள் வழியாகவே சைவசமயம் உண்ர்ந்துகொண்டும் புரிந்துகொண்டும் அதற்கேற்ப வாழ்கையை அமைத்துக்கொள்கின்றது.

 

இனி இத்தொடரில் எழுப்பப்படும் கேள்விகள் பல. அவை கீழே  Freud   அவர்கள் தரும் விளக்கத்தை ஒட்டியும் விரித்தும் அவர் காணாத ஆழமும் சென்று சொல்லாத சொல்ல முடியாத நுட்பங்களையும் சொல்லி இத்தொடர் வளரும்

 

Freud அவர்கள் ஐரோப்பிய உலகில் ஓர் பெரும் புரட்சியை செய்தவர்.  இயல்பான காமவேட்கையைப் புதைக்க, அது  hysteria  போன்ற பல மனநோய்கட்கு இட்டுச்செல்லும் என்று கூறி ஐரோப்பிய உலகில் கிரித்துவ யூத சமயங்களால் விதிக்கப்பட்ட   அளவிற்கு மீறிய காமக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெரிய உதவினார். அவரது மையக் கருத்துக்கள் கீழே:

 

 

http://en.wikipedia.org/wiki/Human_sexuality

 

Sigmund Freud[

Freud's theory assumed that behavior was rooted in biology. He proposed that instincts are the principal motivating forces in the mental realm, and held that there are a large number of instincts but that they are reduced into two broad groups; Eros (the life instinct), which covers all the self-preserving and erotic instincts, and Thanatos (the death instinct), which covers instincts toward aggression, self-destruction, and cruelty.[20] Freud gave sexual drives a centrality in human life, actions, and behaviors that had not been accepted before his proposal. His instinct theory suggested that humans are driven from birth by the desire to acquire and enhance bodily pleasures, thus supporting the nature debate. Freud successfully redefined the term "sexuality" to make it cover any form of pleasure that can be derived from the human body,[20] raised the notion that the pre-genital zones are primitive areas of preliminary enjoyment precedingsexual intercourse and orgasm.[21] He reasoned that pleasure lowers tension, while displeasure raises it, influencing the sexual drive in humans. His developmentalist perspective was governed by inner forces, especially biological drives and maturation, and his view that humans are biologically inclined to seek sexual gratification demonstrates the nature side of the debate.[12]

 

இங்கு பிரய்டு கூறும் instincts  என்பன இயல்பூக்கங்கள் ஆகும்.  Eros  எனறும்  Thanatos  என்றும் அவர் கண்டாலும் பல சிக்கல்கள் இல்லாமல் இல்லை, பல கேள்விகள் எழுகின்றன

1.

இவற்றை இயல்பூக்கங்கள் என்று சொல்லிவிட்டால போதுமா? அப்படி என்றால ஏன் பலர் அதனை வெறுத்தும் வேண்டாவென ஒதுக்கியும் துறவு பூண்டு சந்நியாச வாழ்க்கை வாழ விரும்ப வேண்டும்?  இயல்பூக்கங்கள் என்றால் அழியாது யாண்டும் இருக்க வேண்டுமே? துறவுச் சிந்தனை வரக் கூடாதே?

 

2.

இந்த இயல்பூக்கங்களாகிய  Eros Thanatos  என்பவை ஆண்மை பெண்மை பிறப்பிற்கும் இயலபாக ஆண்கள் பெண்களை காமுறுவதும் பெண்கள் ஆண்களைக் காமுறுவதும் எப்படி தோன்றுகின்றன? இங்கு ஆண் ஆணை விரும்புவதும் பெண் பெண்ணைக் காமுறும் காமவிகாரங்கள் தோன்றுவதும் எப்படி?

 

3

 Thanatos  எனும் இயல்பூக்கம் தன்னையே அழித்துக்கொள்ளவும் கொடூரம் பல செய்யவும்  பலாத்காரம் போன்ற வன்முறை செயல்கட்கும் இட்டுச் செல்லும் என்றால் அது எப்படி அமைகின்றது? இயல்பென்றால் அது மாறாது. ஆனால வாழ்க்கையில் காமக் கொடூரம் பல செய்தவர்கள் திருந்தி அனபு நிறைந்த தொண்டர்கள் ஆவதும் உண்டே. அது எப்படி?

 

இவற்றையெல்லாம் காண, ப்ராய்டு அவர்கள் விளக்கம் ஓர் முதற் படியேத் தவிர வேண்டிய அளவிற்கு கருத்தாழங்கள்  இல்லை என்றேப் படுகின்றது.(எனக்கு!)

 

அவ்வகையில் சைவ சமயங்கள் சிவ தத்துவங்களாகிய நாத விந்துக்களின் நர்த்தனமே காமத் தோற்றம் என்றும் அதனை மும்மலங்கள் தாக்கி விகாரபடுத்த பல வகையான காம விகாரங்கள் தோன்றும் என்றும் ஆனால் ஆன்மா இந்த மும்மலங்களைப் போக்கி சுத்தமாகிவிட்டால் அன்பின் ஐந்திணைக் காமம் கூடிவரும் என்றும் விளக்கபடும்

 மேலும் காமவேட்கைகள் இயல்பூக்கங்கள் என்றாலும் அவை நாதப்பசி என்றும் விந்துப்பசி என்றும் ஆகும். எப்பொழுது இந்த பசிக்கள் இல்லாதுபோகின்றனவோ அதுபொழுது காமவேட்கையும் இல்லாது போகுமென்றும் விளக்கப்ப்டும்

 

இவையெல்லாம்  சிவலிங்கம் சார்ந்த விளக்கங்கள் என்பதால் இது ஓர் சைவ பார்வை எனபடுகின்றது.  இதுவரை சிவலிங்க வழிபாடு சைவர்கட்கே உரித்தாக இருப்பதால் இவ்வாறு என்பதாம்

 

தொடரும்

 

உலகன்

 

K. Loganathan

unread,
Oct 25, 2014, 11:10:47 PM10/25/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

காமத்தியற்கை: ஓர் சைவப் பார்வை

 

முனைவர் கி. லோகநாதன், 25-10-14

 

இடுகை 2

 

Freud  அவர்கள்  Eros  என்றவாறு ஓர் இயல்பூக்கம் (instinct) எல்லா உயிர்கட்கும் உண்டு என்று கூறுவதைக் கண்டோம் இயல்பூக்கம் என்பது யாராலும் தோற்றுவிக்கப்படாது, செயற்கையாகத் தோன்றாது தோற்ருவிக்கப்படாது இயல்பாகவே இருப்பது என்றும் பொருள்படும். இதனை ‘காமவேட்க’, ‘காமநாட்டம்’ என்றெல்லாம் நாம் கூறலாம. ஆகவே சித்தர்கள் மொழியைத் தழுவி இதனை ‘காமநாடி’ என்றவாறு அடிப்படை உயிர் நாட்டங்களை நிறுத்தும் நாடிகளில் ஒன்றாக இதனைக் கருதலாம்

 

ஆயினும் இந்த அளவிற்கு விளக்கி இன்னும் ஆழ நுழைந்து அலசாது விட்டால், நமக்கு வேண்டியத் தெளிவுகள் இல்லாது போகும்.

 

காமநாடியின் தோற்றம்

 

ஆண்மை என்றும் பெண்மை என்றும் பிறப்புக்கள் இல்லாவிட்டால் காமநாட்டமும் ஆகவே காமநாடியும் இல்லாது போகும். ஆக காமநாடியை விளக்க நாம் முதலில் ஆண்மையின் பெண்மையின் தோற்றத்தை விளக்கியாக வேண்டும்.

 

இதிலும் ஓர் சிக்கல் இருக்கின்றது. உலக உயிரினங்களை அதிலும் குறிப்பாக மாந்தர்கலைக் காணும் போது உயிர் என்றும் உடல் என்று பிரித்தே காண வேண்டி இருக்கின்றது. ஆண்மையும் பெண்மையும் ஆன்மாவையும் உடம்பையும் தனித்தனியாகத் தாக்கும் என்று தெரிகின்றது. ஆன்மா ஆண்மை பெற்றிருக்க பெரும பாலும் உடம்பும் ஆண்மை நலத்தோடு விளங்கும். ஆனால் சில சமயங்களில் ஆண்மை உடம்பில் பெண்மை மிக்கிருக்கும் ஆன்மா வாழ்வதுண்டு. அதேபோல பெண்மை உடம்பில் ஆண்மை மிக்கிருக்கும் ஆன்மா  அல்லது அல்லி அரசாணியாக தடாதகைப் பிராட்டியாக வாழ்வதும் உண்டு.

 

ஆக ஆன்மாவில் ஆண்மை பெண்மை பண்புகளை நிறுத்துவதாக மற்றும் உடம்பில் ஆண்மை பெண்மையை நிறுத்துவதாக இயற்கையில் அநாதியே இந்த உயிர்கள் உடம்பெடுத்து வாழ்வதற்கு முன்பே இரண்டு வெவ்வேறு தத்துவங்கள் இருக்க வேண்டும் என்றாகின்றது.. சைவர்கள் சிந்தனையில் இவையே சிவதத்துவங்களாகிய நாத விந்துக்கள் ஆகும்.

 

ஆன்மாண்மையையும் உடம்பாண்மையையும் நிறுத்துவது நாத தத்துவமாக,  ஆன்மப்பெண்மையையும் உடற்பெண்மையைம் நிறுத்துவதாக விந்துவும் இருக்கின்றன என்றாகின்றது,

 

உடம்பாண்மையை நிறுத்துவது பிண்டலிங்கம் என்றும் ஆகவே உடற்பெண்மையை நிறுத்துவது பிணடயோனி என்றும் திருமூலர் வழி நாம் கொள்ளலாம

 

சுமேருத் தமிழ் தோற்றம்

 

இங்கு சுமேருத் தமிழில் நீதா (nitah)  என்றால் “ஆண்’ என்றும் பொருள் படும் ‘தமு நீதா” என்றால ஆண்மகன் என்றும் பொருள் படும். ஆக பிறகாலத்தில் ஆண்மையைத் தரும் சிவ தத்துவம் “நாதம்’   என்று அழைக்கப்பட, ‘வித்து, விதை” என்று சொல்லிருந்து உயிர்கள் தோன்றுதற்கே வித்தாகிய கருவினை அருளும் தத்துவம் ‘விந்து” என்று அழைக்கப்பட்டது போலும்

 

நாதவிந்துவும் சிவலிங்கமும்

 

இங்கு உடன் ஓர் தெளிவினை வற்புறுத்த வேண்டும்  சிவலிங்கம் என்பது ஆண்பெண் புணர்ச்சியின் வடிவம் என்றும் பீடம் பெண்னுறுப்பின் வடிவாக தூண் எனும் இலிங்கம் ஆண் உறுப்பின் வடிவம் என்றும் சிலர் எண்ணுகின்றார்கள்.  சில சிவலிங்க வடிவங்கள் அவ்வாறு நினைக்கவும் தூண்டுகின்றன. ஆயினும் உணமையில் இந்த சிவலிங்கம் என்பது நாத விந்து சேர்க்கையே யாகும். நாதம் தூணாக நிற்க விந்து பீடமாக நிற்கின்றது. ஆண்மையின் ஆணுறுப்பு இந்த நாதத்தின் தாக்கத்தால் எழ, அது இலிங்கமாகவும், பெண்மையின் கருக்குழி இவ்வாறே விந்துவின் தாக்கத்தல் எழ, அது குழியுடன் கூடிய பீடமாகவும் வடிவுகளை உடைத்தாகின்றன..

 

ஆண் பெண் எனும் பால் பாகுபாட்டுடன் பிறப்பு எடுப்பதை கீழ்கண்டவாறு அழிவிலுண்மை சூத்திரம் 13 விளக்கும்:

 

13.1.2

 

குண்ட வடிவத்து பிண்டயோனியொன்று ஆன்மாவின் சூக்குமவுடம்பில் பதிய, இறையருட் பதிவின் சலனமுற்று அது உடலெடுக்கும்போது, சுத்தாசுத்த மாயையைத் திரித்து பெண்ணுடம்பொன்றை  தனதாகக் கொண்டு பெண்ணாக வாழத் தொடங்கும். இதைப் போன்று இலிங்க வடிவத்து பிண்டலிங்கம் ஆன்மாவிற் பதிய, அவ்வான்மா ஆணாக உடலெடுத்து வாழத் தொடங்கும். பருவம் வர, விந்துவே மிக்கிருக்கும் யோனி வடிவத்து பெண் நாதப் பசியின் வாட, நாதமே மிக்கிருக்கும் இலிங்க வடிவத்து ஆண் விந்துப்பசியின் வாட, இப்பசிகள் காமவேட்கையாக எழுந்து இருபாலரையும் அலைக்கழிக்கும். அதுபொழுதே இப்பசிக்களின் வேதனை பொறுக்காது, ஒருவரை ஒருவர் நாடிச் சென்று காதலுற்று கரம்பற்று திருமணம் செய்துகொண்டு கலவி செய்து தத்தம் பசிக்களைப் போக்குவர் என்பது. அதனால் ஓர் நிறைவும் அடைந்து அமைதியாகுவர் என்பதாம்.

 

 இது ஆண்பெண் பிறப்புக்களோடு காமவேட்கை எவ்வாறு வருகின்றது என்பதையும் சிறிது விளக்குகின்றது.

 

இவ்வாறு நாதமும் விந்துவும் இணைந்திருப்பதின் பொருளே ஓர் ஆணும் பெண்ணும் காதால கட்டுண்டு அன்பே ஈர்க்க புணர்ந்து காமவின்பம் தூய்த்து மகிழும் வாழ்க்கை என்பதாம்

 

திருநீலகண்ட குயவனார் வாழ்க்கை வழியாக பெரிய புராணம் உணர்த்தும் உண்மையும் இதுதான். வாழுகின்ற சிவலிங்கமாவது அன்பினால ஈர்க்கப்பட்டு ஓர் கண்வனும் மனைவியும் கலந்து காமவின்பம் தூய்த்து இல்லறம நடத்துவதாகும்.

 

இதுவே சிவலிங்கம் எனும் ( Imago Dei )  தெய்வத் திருமூர்த்தம் உணர்த்தும் பொருளாகு/ அதனால் இது தொழுதற்குரிய ஓர்தெய்வீக மூர்த்தம் ஆகின்றது.

 

காமத் தோற்றம் எவ்வாறு ?

 

இதுவரை எப்படி உயிர்கள் ஆன்மாண்மை  ஆன்மப்பெண்மை என்றும் உடலாண்மை உடற்பெண்மை என்றும் பிறக்கின்றன என்றும் கண்டோம். எவ்வாறு இதுவே காமப்புணர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றது என்றும் கண்டோம். ஆனால் ஏன் இந்த காமவேட்கைத் ஹோன்றுகின்றது? என்ற கேள்விக்கு நல் விளக்கம் இன்னும் இருக்கின்றது. ஆணாய் பெண்ணாய் பிறந்து விட்டால காமவேட்கை தானே வந்துவிடும் என்பதல்ல. பிறப்பிலேயே துறவுச் சிந்தனையோடு பிறப்போர்களும் உண்டு,

 

ஆக காமவேடகை எப்படித்தான் தோன்றுகின்றது? என்ற கேள்விக்கும் நாம் இன்னும் விரிவான விளக்கம் தராதே இருக்கின்றோம்

 

இனி அடுத்து இந்த கேள்விக்கு வருவோம்

 

தொடரும்

 

உலகன்

 

 

K. Loganathan

unread,
Oct 26, 2014, 11:58:59 PM10/26/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

இடுகை 3

 

காமத்தியற்கைப் பற்றி சைவ சமயம் தனது சிவலிங்க ஆய்வின் வழி பண்டே கொண்டுள்ள சிந்தனைத் தெளிவுகளை எவ்வாறு அது இல்லறம் துறவறம் எனும் இருவகை உலகியல் வாழ்க்கைகளை விளக்கும் என்பதைக் காண விருக்கின்றோம். இவற்றை ஐரோப்பியச் சிந்தனையோடு ஒப்பிட்டுக் காணும்போதே ஒர் உலகியல் உண்மைக்கு தரப்படும் விளக்கங்கள் ஏன் வேறுபடுகின்றன ஒன்றுபடுகின்றன என்பதும் தெரிய வர, இன்னும் பல புதிய ஆழங்களும் தெரிய வரும். அவ்வகையில் இந்த ஒப்புமை பயிற்சித் தொடகின்றது

 

மேலே நாம் உடற்பெண்மையாண்மை என்றும் ஆன்மப்பெண்மையாண்மை என்றும் வேறு படுத்தி இவற்றிற்கு மூல காரணமாக இருப்பன நாதம் விந்து எனும் சிவதத்துவங்களே என்றும் கூறினோம்

 

இப்பொழுது இப்படிப்பட்ட பேதங்களை ஐரோப்பியர்கள் கண்டுள்ள்ள்னரா? அப்படியென்றால் சைவர்கள் அன்றே  கூறிய விளக்கங்களை ஐரோப்பியர்கள் பல அறிவியல் சான்றுகளோடு விரிவான ஆய்வுகளோடு இன்று கூறுகின்றார்களா?

 

ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒற்றுமைகளோடு பல முக்கிய வேற்றுமைகளும் உண்டெனத் தெரிகின்றது. கீழே இது தொடர்பாக ஓர் கருத்து. இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

 

http://www.focusintl.com/GD060-%20Gender%20-%20biological%20theory.pdf

Gender: biological theory

 

How do biopsychologists explain gender development?

Biological psychology regards gender identity and role as arising from biological processes. Gender

differences are seen as resulting from sex differences. In other words, women and men act, think

and feel differently because of differences in how their brains work. These brain differences may

result from chromosomal differences and may also be the result of hormonal differences.

Women and men are chromosomally different. Women have two X chromosomes (XX), whereas

men have an X and a Y chromosome (XY). In the period following conception, female and male

embryos are indistinguishable apart from their chromosomes. However, the Y chromosome in

males starts to promote the production of testosterone and other androgens (male sex hormones).

These androgens cause the male to develop testes and a penis instead of ovaries and a uterus. The androgens also cause the male brain to develop differently from the female. A biopsychologist

would argue that it is these differences in brain development, and the differences in brain activity

caused by the secretion of androgens in adulthood, that cause men to behave differently from

women (e.g. acting more aggressively).

 

இங்கு உடலாண்மைபெண்மையை  sex differences  என்றும் ஆன்மப்பெண்மையாண்மையை  gender differences என்றும் கூறுவதாகத் தெரிகின்றது. திருமூலர் வாக்கில் இவையே பிண்டலிங்கம்-யோனி ( sex differences)  என்றும் ஆதமலிங்கம்-யோனி ( gender differences)  என்றும் கூறப்படும் என்று தெரிகின்றது.

 

இவ்வகையில் இருவேறு மரபுகளும் ஒற்றுமைப் பட்டு இருந்தபோதும் தத்துவ விளக்கம் என்று வரும் போது மிகத் தெளிவான பேதங்கள் தோன்றுகின்றன.

 

உடலாண்மைபெண்மைக்கும் அதாவது உடற்பால்மைக்கு காரணமாக ஐரோப்பியர்கள் கூறுவது  chromosomes  என்படும் வேதியல் கூறுகள் என்று தெரிகின்றது. இவற்றை  X Y  என்று வகுத்து  XX என்று  கருவில் வந்தால் உடற்பெணமை என்றும்  XY  என்று வந்தால் உடலாண்மை என்றும் ஆகவே சிசுக்கள் பெண் குழந்தையாக ஆண் குழந்தனியாக பிறக்கும் என்றும் கூறப்படுகின்றது.

 

இவ்வாறு ஆண்-பெண் பிறப்புக்கள் அமைய ஆண்மை பெண்மை குணங்கள் அதாவது ஆன்மப்பால்மை எப்படி அமைகின்றது எனும் போது, இதற்கு காரணமாக இருப்பது பல சுரப்பிகள் என்கின்றனர்.  Testosterone  என்பன போன்ற சுரப்பிகள் சுரக்க ஆண்குறி வளர்வது அதற்கேற்ப மூளையின் வளர்ச்சி அமைவது போன்றவை, இவையே கருப்பை கருக்குழி போன்ற பெணமையின் கூறுகள் அமைவதை தடுப்பதோடு வேறு சுரப்பிகள் வழியாக மூளையின் வளர்ச்சியும் வேறு வகையில் அமைவதாக கூறப்படுகின்றது

 

நாதவிந்துக்களும் மூளை வளர்ச்சியும்

 

இங்கும் ஒற்றுமைகளோடு வேற்றுமைகளையும் காண்கின்றோம்

 

 Chromosomes  என்ற வேத்தியல் கருத்து சைவத்தில் இல்லை என்றாலும் அதுவே நாதம் விந்து எனும் சிவதத்துவங்களால் விளக்கப்டுகின்றது. நாதம் மிக்கிருக்க ஆண் பிறப்பும் அதற்கேற்ப உடலுறுப்புக்கள் அமைவதும் விந்து மிக்கிருக்க பெண் பிறப்பும் அதற்கேற்ப் உடம்பும் அமைகின்றது என்பர்.

 

இன்னொரு ஒற்றுமை என்ன வென்றால் மூளையின் வலது பாதியில் விந்துவின் ஆட்சி மிக்கிருக்க இதுவே பெண்களின் இயல்பாகின்றது. மூளையின் இடது பாதியில் நாதம் ஆட்சி செய்ய இதுவே ஆண்களின் இயல்பாகின்றது. இவ்வாறு மூளையில் விளங்கும் நாதமும் விந்துவும் உடம்பு என்று வரும்போது கத்தரிகோல் போல் இடம் மாறி வலது மூளையின் விந்து இடதுபக்க உடம்பிற்குச் செல்ல, இடது மூளையின் நாதம் வலது பக்க உடம்பிற்குச் செல்ல, இரண்டும் கலந்து உடம்பு அர்த்நாரீ உடம்பாக விளங்குகின்றது.

 

இதுவே இடப்பால் அம்மை சரிபாதியாக அம்மையைக் கொண்டு இரைவன் விளங்கும் அம்மாஇயப்பர் வடிவமாகும்

 

இறைவனை அர்த்தநாரியாக காண்பதின் பொருளே இதுதான்

 

சில பிறப்புகக்கள் ஆண்-பெண் என்றவாறு இரண்டையும் உடம்பில் கொண்ட பிறப்பாக அமைய, பெரும்பாலும் ஒன்று புதைக்கப்பட ஒன்று ஆட்சி செய்ய சுத்த ஆண பெண் பிறப்புகள் மெய்யாகின்றன என்று சைவம் விளக்கும்

 

இங்கு சைவம் இன்னும் ஆழச் சென்று அங்கே தூரத்தில் ஆழத்தில் புதைந்து கிடக்கும் நாதவிந்துக்களை உண்டெனக் கண்டு இந்த  chromosomes androgens   போன்ற வேத்தியக் கூறுகளும் சுரப்புக்களும் ஆவதற்கு உள்ள மூல காரணத்தையே விளக்கி ஓர் ஆழமான தெளிவினைத் தருகின்றது என்று நினைக்கின்றேன்

 

சைவ சிந்தனை ஐரோப்பியச் சிந்தனையோடு முரண்பட வில்லை, மாறாக அதனை அகப்படுத்தி இன்னும் ஆழஞ் சென்று இத் தத்துவங்களை அடையாளங் கண்டு இன்னும் ஆழஞ் செல்லமுடியாத அளவிற்கு ஆழஞ் சென்று ஓர் விளக்கத்தைத் தருவதாக நாம் கொள்ளலாம்

 

இன்னும் ஆழ விசாரிக்க வேண்டிய ஓர் வேற்றுமையும் உண்டு. ஐரோப்பியர்கள் ஆன்மா வேறு உடம்பு வேறு என்று சைவர்கள் போல அநாதிப் பொருளியல் கொள்ளாது ஆன்மாவும் உடம்பும் வேறல்ல ஒன்றே என்று கொள்ளும் தேகான்மவாதிகளாக இருக்கின்றனர் என்றும் தெரிகின்றது.

 

இதுவும் தொடர்ந்து இன்னும் ஆழ விசாரிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

 

தொடரும்

 

உலகன்  

 

வேந்தன் அரசு

unread,
Oct 27, 2014, 9:20:34 AM10/27/14
to vallamai, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com
எல்லாம் சரி.

ஆனால் சைவத்தில் ஆண் முதன்மை படுத்துவது பொருந்தவில்லை

XX = பெண் XY= ஆண் எனும் போதே பெண்தான் முதலில் தோன்றி இருக்கிறாள் என்றாகிறது.

26 அக்டோபர், 2014 11:58 பிற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Oct 27, 2014, 5:59:40 PM10/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
உண்மை ... பரிணாம வளர்ச்சிப்படி இனப்பெருக்கதில் Asexual reproduction தான் முதலில் இருந்தது.

..... தேமொழி



<span style="font-size:1

...

K. Loganathan

unread,
Oct 27, 2014, 8:48:45 PM10/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 வேந்தன் தேமொழி

கருத்துக்ட்கு மிக்க நன்றி, இவற்றையும் பிறகு அலச இருக்கின்றேன். ஐரொப்பியச் சிந்தனையில் பாலியல் தொடர்பாக இல்லாத பல சிந்தனை ஆழங்களை தமிழர்களின் குறிப்பாக சைவர்களின் சிந்தனையில் இருப்பதாக எனக்குப் படுகின்றது. வரிசையாக வரும்போது அவற்றையும் விளக்க இருக்கின்றேன்

உலகன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 27, 2014, 9:36:31 PM10/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
மிக்க நன்றி, தொடருங்கள் ஐயா.

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit <a href="https://groups.google.com/d/optout
...

K. Loganathan

unread,
Oct 28, 2014, 8:07:08 AM10/28/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

இடுகை 4

 

 

  இனி மேலே உடற்பால்மை ஆன்மப்பால்மை என்று பிரித்து சிவதத்துவங்களாகிய நாதம் விந்து என்பதை உடம்பிலும் ஆன்மாவிலும் பதிவதால் இந்த இருவேறு பால்மைகள் தோன்றுகின்றன என்பதொடு குழப்பப் பிறப்புக்களும் உண்டெனக் கண்டோம். ஆண்மை உடம்பில் பெண்மைக் குண உயிர் வாழ்வதும் பெண்மை உடமபில் ஆண்மைக் குண உயிர் வாழ்வதுமாக பல குழப்ப பிறப்புகள் உண்டென்பதும் கண்டோம். இவற்றை ஐரோப்பியர்கள் இந்த X Y chromosomes  எனும் வேதியல் கூறுகள் வழியாகவே வி:ளக்குவர். மேலே சுட்டபப்ட்ட அதே சுட்டியில் இக்கருத்தும் வருகின்றது.

 

 

Some people are conceived with an atypical chromosomal pattern. People with Klinefelter’s

syndrome (XXY) are biologically male but have an extra X chromosome. This causes physical

effects including underdeveloped genitals and a lack of body hair, and psychological effects

including poor language skills and a passive temperament. People with Turner’s syndrome (XO)

are biologically female but have one X chromosome missing. Physically the effects of this are a

short body and distinctive webbing at the neck. Psychologically, people with Turner’s syndrome

often have poor spatial and mathematical skills.

 

 இங்கு இப்படிப்பட்ட  X Y கூறுகள் மிகுதல் குறைதல் வழியாக அலி பேடி போன்ற பிறப்புக்களை விளக்க முடியுமா என்று தெரியவில்லை,  She-Male  எனப்படும் பிறப்புக்கள் பெண்மை உடம்பொடு சீரான கொங்கைகள் இருந்தும் பெண்மைக்குரிய கருக்குழியும் கருப்பையும் இல்லாது அங்கு ஆண்குறி இருப்பதே பிறப்பாகின்றது. இவர்கள் திருமன பந்தத்தில் ஈடுபட்டு பெண்ணாகவோ ஆணாகவோ வாழ முடியாது. கருக்குழியும் அதனோடு வரும் கருப்பையும் இல்லாததால் கருத்தரிக்க முடியாது. வேண்டிய அளவிற்கு சுக்கில உறப்த்தி இல்லாதுபோக ஓர் குழந்தைக்குத் தந்தையாகவும் முடியாது. ஆயினும் காமவேட்கை இல்லாமல் இல்லை. ஓரினச் சேர்கைப் போன்ற உறவுகளில் ஈடுபட்டு ஒருவாறு வாழ்ந்து வாழ்ககையை முடிக்கின்றனர். சிவபெருமானையே மணவாளனாகக் கொண்டு தாலி கட்டி பின் அறுத்துவிடுவதுமாக இவர்கள் தம் திருமண ஆசையைப் போக்கிக் கொள்கின்றனர்,

 

இது தமிழ் நாட்டில்- அர்த்தநாரீ வடிவில் இறைவன் விளங்க இது அனுமதிக்கப்படும் ஒன்றாகின்றது. இனி இவற்றை இந்த X Y chromosomes  விகாரங்கள் என்று வேத்டியல் விளக்கம் தருவதற்குப் பதிலாக சைவர்கள் மாற்று சிவலிங்கங்கள் பதிவதால் வரும் பிறழ்ச்சிகள் என்று தெரிகின்றது.

 

தொகைலிங்கங்கள்

 

இயலபான சிவலிங்கமாவது ஏகபீடம்-ஏகலிங்கம் என்று அமைவது, ஆயினும் இவற்றிற்கு வேறாக பலபீடம்-ஏகலிங்கம் என்றும் ஏகபீடம்-பலலிங்கம் என்றும் தொகை சிவலிங்கங்கள் தோன்றுவதும் உண்டு, இதன்வழியா பலதார திருமணம் (polygamy) பற்கணவ  திருமணம் (polyandry)  போன்றவை அமைகின்றன. தோடர்கள் நேப்பாள பழங்குடிகள் சமீபகாலம் வரை கேரளாவின் மருமக்கட்தாய முறை போன்றவை பற்கணவ திருமணங்கள். இது மெதுவாக வழக்கிழந்து அடுத்தடுத்து ஒரே ஆனால் வெவ்வேறு கணவர்கள் என்று தொடர் ஏககணவன் (  serial monogamy)  ஏக தாரம் என்றவாறு மாறி வருவதைக் காண்கின்றோம்

 

பலதார திருமணம் என்பது சட்டப்படி சில சூழ்நிலைகளிலேயே அனுமதிக்கப்பட்டாலும், இது தொன்றுதொட்டு இருக்கின்ற ஓர் குடும்ப வாழ்கை முறையே யாகும். இசுலாத்தில் இது சட்டப்படி அங்கீகரிகப்பட்ட ஒன்றாவதாகவும்  திகழ்கின்றது.

 

ஆனால் இங்கு நாம் இந்த அதீத சிவலிங்கங்களை வேறு வகையிலும் பொருள் கண்டு பாகுழப்பப் பிறப்புகளின் தோற்றத்தை விளக்க முடியும் என்று நினைக்கின்றேன்

 

சைவர்கள் இறைவனது எடுத்த பாதம் குத்தியப்பதம் எனும் நடராச மூர்த்தத்தின் வழியேதான் நாத விந்துக்கள் வழியாக ஆண் பெண் பறப்புக்களை விளக்குவர்,

 

எடுத்த பாதம் விந்துவை ஆட்சி செய்ய குத்திய பாதம் நாதத்தை ஆட்சி செய்வதாகக்கொள்வர்.

 

நாதமும் விந்துவும் சரிபாதியாக சம அளவில் இருந்தால் ஆண் பெண் பேதங்கள் தோன்றாது. ஆனால் நாத்தை இடதுபாதத்தால் அழுத்தி குறைத்து விந்து மிக்கிருக்கும்படி செய்தால் பெண்மை பிறப்பு மெய்யாக, அதன் எதிர் நிலையில் ஆண பிறப்பு மெய்யாகும்.

 

இங்கு நாதம் குறைந்த விந்துவின் சிவலிங்கம் பெண்மை பிறப்பைத் தர, விந்துகுறைந்த நாத சிவலிங்கம் ஆண்மை பிறப்பைத் தருகின்றது.

 

ஆயினும் இவ்வகையான சிவலிங்கங்கள் ஒன்றிற்குமேல் ஆன்மாவில் பதிந்துவிட்டால என்ன வாகும்?

 

நாத-விந்துகுறை சிவலிங்கம் என்றும் விந்து-நாதக்குறை சிவலிங்கம் என்றும் இவை தனித்தனியாக சுத்தமாக ஆன்மாவில் பதிந்தால் சுத்த ஆண்பிறப்பும் பெண் பிறப்பும் அமையும். ஆனால் இரண்டுமே கலந்து ஆன்மாவில் பதிந்தால் என்ன வாகும்? உடமபு மேலே குறிப்பிட்டவாறு பெண்மையும் ஆண்மையும் கலந்த உடம்புகளாக இருக்கலாமே, இந்த she-male (அலி பேடி? ) என்பது போல?(தடாதை பிராட்டியாருக்கு மூன்று கொங்கைகள் என்பர். ஆயினும் மூன்றாவது கொங்கை உள்ளபடியே ஆண்குறியாக இருக்கலாம், சிவபெருமானைக் காண இது மறைந்துவிட, கருகுழி வந்துவிட  தடாதகைப் பிராட்டியார் சுத்தப் பெண்மையின் மீனாட்சி அம்மை யாகின்றாள்!)

 

ஆக இப்படிப்பட்ட குழப்பமான பிறப்புகளை நாம் பல்வேறு சிவலிங்கங்கள் அடிப்படையிலும் விளக்க முடியும் என்று தெரிகின்றது.

 

ஆயினும் இவ்வாறு உடம்புகள் ஆகிவிட்டாலும், ஏனையோர் போல இவர்கட்கும் காம வேட்கை உண்டு. அது எப்படி என்று வரும் போது. ஐரோப்பிய அறிவியல் இவ்வாறு விளக்கும்.

 

மேலே சுட்டப்பட்ட அதே கட்டுரையிலிருந்து  கீழே வருவது.

Women and men produce different sex hormones in varying quantities. Besides affecting the

functioning of various bodily organs (e.g. causing the menstrual cycle in women) these sex

hormones appear to have an effect on behaviour. Testosterone, which is produced in greater

quantities by men, affects several types of behaviour, some of which are regarded as ‘typically

male’. For example, Dabbs et al (1995) found that violent offenders had higher testosterone levels

than non-violent offenders and Coates et al (2008) found that financial traders with higher

testosterone levels took greater risks. Women have higher levels of oxytocin than men. Some

researchers have linked this to increased sociability. Oxytocin seems to affect the formation of

bonds and attachments between people and Klaver et al (2009) found that higher levels of oxytocin

are linked to improved memory for faces.

 

காமவேட்கை காதல் பாசநேசம் ஆண்கள் பால் பெண்கள் காமநோக்கின் ஈர்க்கப்படுவது, பெண்கள் பால் ஆண்கள் காமவேட்கையின் மயங்குவது போன்றவை எல்லாம்  testosterone Oxytocin  போன்ற சுரப்புகளால் ஆவது என்று இங்கு கூறப்படுகின்றது.  Freud  அவர்கள் வற்புத்திய  Eros  எனும் இயல்பூக்கம் இத்தகைய சுரப்புகளால் வருவது என்றும் கூறுகையில் நம் சித்தர்ளில் சிலர் கூறியது போல ஔஷதவாதம் கூறுகின்றனர் என்பது தெளிவு.

 

இது உண்மை என்றால்  காமவெறியைத் தணிக்கவும் அது இல்லாது போக்கி அமைதி அடையச் செய்வதும் துறவினைக் கொண்டு வருவதும் மருந்துகளால முடியக் கூடிய ஒன்றாகுமே? ஆனால் இதுவரை அப்படிப்பட்ட மருந்து இருப்பதாகத் தெரியவில்லையே?

 

ஏன் இந்தச் சிக்கல்? இதனை அடுத்து விசாரிப்போம்

 

தொடரும்

 

உலகன்

வேந்தன் அரசு

unread,
Oct 28, 2014, 10:51:25 AM10/28/14
to vallamai, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com
காமவெறியைத் தணித்து காமவெறு ஆக்க மருந்துகள் கண்டுபிடிக்கலாம், ஆனால் சந்தை இல்லை

28 அக்டோபர், 2014 8:07 முற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

K. Loganathan

unread,
Oct 28, 2014, 8:21:26 PM10/28/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
திரு வேந்தன்

 காமத்தை வெறுக்க வைக்கும் அதனை இல்லாது போக்க உதவும் மருந்து மாத்திரைகட்கு யார் சொன்னது சந்தை இல்லை என்று? ஏறக்குறைய எல்லா சமயங்களிலும் அரும்பாடுபட்டு துறவு வாழ்க்கையை பலர்  வாழ்கின்றார்களே? உணவுகட்டுப்பாடு போன்றவற்றால் காமவேட்கை எழாது தடுக்கப் பார்க்கின்றார்களே?

மேலும் காம வன்முறைகள் பலகி  வரும் இந்நாட்களில்,இப்படிப்பட்ட ஓர் மருந்து இருந்தால் அவற்றை இத்தகையோருக்குக் கொடுத்து அவரகளை நல் வழிபடுத்தலாமே?

இததகைய மருந்திற்கு சந்தை இல்லை என்பதில்லை, இத்தகைய மருந்தே இல்லை. இருந்தால் என்றோ கண்டுபிடித்டிருப்பார்கள்.

உலகன்

தேமொழி

unread,
Oct 28, 2014, 8:37:45 PM10/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com


On Tuesday, October 28, 2014 5:21:27 PM UTC-7, K.Loganathan wrote:
திரு வேந்தன்

 காமத்தை வெறுக்க வைக்கும் அதனை இல்லாது போக்க உதவும் மருந்து மாத்திரைகட்கு யார் சொன்னது சந்தை இல்லை என்று? ஏறக்குறைய எல்லா சமயங்களிலும் அரும்பாடுபட்டு துறவு வாழ்க்கையை பலர்  வாழ்கின்றார்களே? உணவுகட்டுப்பாடு போன்றவற்றால் காமவேட்கை எழாது தடுக்கப் பார்க்கின்றார்களே?

மேலும் காம வன்முறைகள் பலகி  வரும் இந்நாட்களில்,இப்படிப்பட்ட ஓர் மருந்து இருந்தால் அவற்றை இத்தகையோருக்குக் கொடுத்து அவரகளை நல் வழிபடுத்தலாமே?

இததகைய மருந்திற்கு சந்தை இல்லை என்பதில்லை, இத்தகைய மருந்தே இல்லை. இருந்தால் என்றோ கண்டுபிடித்டிருப்பார்கள்.

1960 களில் இருந்து இருக்கிறது லோகா ஐயா... "Chemical castration" எனவும் "Antiandrogen" எனத் தேடிப்பார்க்கவும்.  

வேந்தர் சொல்வது போல சந்தைதான் இருக்காது.  இதை வாங்கச் சொல்லி யாரும் தினம் தினம் பத்து குப்பை மின்னஞ்சல்கள் அனுப்புவார்கள் என்று தோன்றவில்லை. 

இப்பொழுதும் மருத்துவ நோக்கில்தான் பெரிதும் பயன்பாட்டில் உள்ளது.  

K. Loganathan

unread,
Oct 28, 2014, 9:06:40 PM10/28/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
நின்னா தேமொழி

மிக்க நன்றி.  ஆனால் இந்த மருந்து ' castration' செய்வது போன்றது எனும் போது, இது மிகவும் பழைய ஓர் உத்தி தானே? பண்டைய சீனாவில் மன்னர்களின் அரண்மனைகளில் மனைவிமார்கள் உள்ல அந்தப்பிரங்களில் பணிசெய்ய  'eunuchs'  என்ப்பார்கள் இப்படித்தானே ஆனால் அறுவை சிகிசைப் போன்ற ஒன்றை செய்து உருவாக்கினார்கள்?

இன்றும் அது சில மிருகங்கட்கு செய்யப்படுகின்றது.  மருந்துகளாலும் இது உண்டு

ஆனால் காமத்தை வென்று அந்த பிணியிலிருந்து விடுபடுவது அல்ல இவை.  மருந்து மாத்திரைகள் இன்றி காமவேட்கையை மடைமாற்றி தூய அன்பு வேட்கையாக ஆக்குவது அதன் வழி தொண்டே வாழ்க்கையாக அமைவது போன்றவை அறுவை சிகிச்சையாலும் மருந்து மாத்திரைகளாலும் அமைவது அல்ல என்றே நினைக்கின்றேன்

இப்பொழுது நான் மின்பதிப்பாக்கி வரும் அழிவிலுண்மை சூத்திரம் 13-இல் இவற்றின் தத்துவ விளக்கங்கள் ஓர் புதிய அணுகுமுறையில் விளக்கப்படுகின்றது.

காமவேட்கையை கடப்பதற்கு உதவும் மருந்து பார்வையே யாகும்.  நூலிய நுதலியப் பார்வைகள் போன்ற மேலான பார்வைகள் அமைய காமமே அன்பாக மடைமாற்றம் காண்கின்றது.

காமத்தை தூய அன்பாக மாற்றுதற்கு மருந்துகள் யாதும் இல்லை என்றே நினைக்கின்றேன். அறுவை சிகிச்சையாலும் முடியாது

இவற்றை எல்லாம் இததொடரில் ஐரோப்பியச் சிந்தனையோடு ஒப்பிட்டு விளக்க விருக்கின்றேன்

உலகன்

--

Tthamizth Tthenee

unread,
Oct 28, 2014, 11:22:18 PM10/28/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
​​காமத்தை  தூய அன்பாக  ஏன் மாற்றவேண்டும்?

மனிதரின் உணர்வுகளில்   பலவகையான உணர்வுகள் உள்ளன,   
நாருசி    நுகரின்பம்,   நோக்கி மகிழ்தல், கேட்டு மகிழ்தல் போன்றவை உள்ளன

ஒவ்வொரு உறுப்புக்கு  ஒவ்வொரு வகை    ஒரு ருசியை  அல்லது  மகிழ்ச்சியை  மற்றொன்றாக மாற்ற முடியாது.

காமம் என்பது இயல்பான ஒன்று  அதைக் கட்டுப் படுத்தலோ  அல்லது புறக்கணித்தலோ, அல்லது தூய  அன்பாக மாற்றுவதோ  இயலாது. அப்படி மாற்றினால் அதன் விளைவுகளும் சரியாக இராது  என்பது என் எண்ணம்

மனக் கட்டுப் பாட்டினால் காமத்தை மட்டுப் படுத்தலாம்,  மருந்துகளால் கட்டுப் படுத்தினால்  அது இன்னொரு விதமாக சீறிக் கிளம்பி  வியாதிகளை ஏற்ப்டுத்தும்.
காட்டாற்று வெள்ளத்தை முறையான அணைகள் மூலமாக கட்டுப் படுத்தலாம் ,அதைவிடுத்து  காகிதத்தினால் அணைகட்டி  நிறுத்த முடியாது

ஆகவே காமம் என்பது ஒரு குறிப்பிட்ட பருவத்தை அடைந்த பின் வருவது , அதுதான் இயற்கை .     

ஆனால்  இப்போது  சூழ்நிலைகளின் தாக்கத்தால்

ஊடகங்கள் பொருள் சேர்க்கும் பேராசையால்

சிறார்களுக்கு  மனதில் முறையற்ற  ஆசைகளை வளர்க்கிறது.

சிலவற்றை குறித்த காலம் வரையில் மறை பொருளாக வைக்க வேண்டும் 

அல்லது   முறையாகப் பாடம் போதித்து  அதிலுள்ள நன்மை தீமைகளை விளக்க வேண்டும்  

அதைவிடுத்து  செக்ஸ் கல்வி எல்லோருக்கும் அளிக்கப் படல் வேண்டும்  என்று ஆரம்பித்து     அதை முறையாக அமல் படுத்தாமல்

தூங்கும் புலிகளை  எழுப்பி விடுகிறார்கள்

அதன் விளைவுகள் நல்லதாக இல்லை

காமம்  என்பது இல்லையென்றால்  ப்ரப்ஞ்ச  வளர்ச்சியே இல்லை
ஆனால் பருவத்தே  பயிர் செய்ய  மறந்து போனோம் நாம்


அன்பு வேறு  காமம் வேறு . காதல் வேறு  காமம் வேறு  என்பதை உணர்த்த தவறிவிட்டோம்    நாம்

இப்போது  இளைஞர்கள்    பருவ ஈர்ப்பை  , காமத்தை  காதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதனால்தான்  காமத்துக்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடு திசைமாறி எங்கோ இட்டுச் செல்கிறது

ஆனா; மனிதர்  காமம் என்னும் இறுதி நிலைக்கு  அன்பு பாசம்  நேசம்  போன்றவைகளை  உபயோகித்துக் கொள்கிறார்

காமமில்லாத  அன்பு உபயோகப் படாது

அன்பில்லாத காமமும் உபயோகப் படாது

காமத்தைப் பற்றிய   ஒரு கவிதை  என்  நோக்கில் கீழே



காமம்-      

      

காமம் களவியல் அல்ல

அது ஜீவராஸிகளின்

உளவியல் -உடலியல்

காமம் அது தவறல்ல

தேடலின் முதல்படி

காதலின் வட்டி

அன்பின் தேடல்

ஆசையின் கூடல்

பள்ளியறைப் பாடல்

ஏக்கம்  கறுவறையில்

ருந்து வெளியேற்றப்

பட்டதனால் வந்த ஏக்கம்

மீண்டும் கருவறையைப்

பார்க்கத்  தூண்டும் ஏக்கம்

குடியிருந்த கோயிலைப்

பார்க்க வேண்டுமெனும் நோக்கம்

கருவறையின் தேடல்

மறுபடி குடிபுக  நாம்

என்ன கங்காருவா?

காமம் ஆத்மாவின் ங்கமம்

ஜீவாத்மா பரமாத்மாவின்

இருக்கைப்  பரிமாற்றம்

இது  காமம் அல்ல

காதல் !!!!!!!!!!!

  

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

 

 






அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



தேமொழி

unread,
Oct 28, 2014, 11:32:11 PM10/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, October 28, 2014 8:22:20 PM UTC-7, தமிழ்த்தேனீ wrote:
​​காமத்தை  தூய அன்பாக  ஏன் மாற்றவேண்டும்?

உளவியல்படி காதல்...காமம்...அன்பு என்பது ஒருவரிடம் ஏற்படும் ஈர்ப்பில் உறவில் காலப்போக்கில் இயல்பாக இயற்கையில் நிகழும் மாறுதல்கள்...  

காமம் காதலாக மாறுவதற்கும் உளவியல் பின்னணி கூறப்படுகிறது.  

இதைக் குறித்த என் கட்டுரை ஒன்றை லோகா ஐயாவின் இழையில் இடையூறு செய்யாமல் தனியே பகிர்கிறேன்.


..... தேமொழி
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Oct 29, 2014, 12:34:40 AM10/29/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி

நானும் திரு  லோகநாதன் அவர்களின்  இழையை இடையூறு செய்ய வேண்டாம் என எண்ணுகிறேன்

ஆனால் அவர் எழுதியதற்கு என் மனதில் தோன்றிய கருத்துக்களைப் பதிவிட்டேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Oct 29, 2014, 2:30:14 AM10/29/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 தமிழ் தேனி  அவர்களே

 நான் இடையூறாக நினைக்கவில்லை, தாங்கள் தாரளமாக மாற்றுக் கருத்துக்களை கூறலாம். இத்துறையில் இன்னும் எனக்கு வேண்டியத் தெளிவுகள் வரவில்லை, ஒவ்வொரு கட்டுரையும் ஓர் பெரும் முயற்சியாக எனக்கும் ஓர் பாடமாகவே அமைகின்றது. அடிப்படை கருத்துக்களை அழிவிலுண்மை சூத்திரம் 13-இல் கூறியுள்ளேன். அவற்றை இன்னும் விரிவாக்கம் செய்து ஐரோப்பியச் சிந்தனையோடு மோதவிட்டு புதிய கருத்துக்கள் பிறக்குமா முயன்று வருகின்றேன்

காமம் அன்பாக மடை மாற்றம் சிலருக்கு  நடக்கின்றது, இது ஓர் உலகியல் உண்மை. ஏன் இப்படி ஓர் மடைமாற்றம் காண்கின்றது என்பதே நாம் விளக்க வேண்டிய ஒன்றாகின்றது.  இதனை அழிவிலுண்மை சூத்திரம் 13இல் ஒருவாறு விளக்கியுள்ளேன். இங்கும் வேறொரு வகையில் விளக்க இருக்கின்றேன்

உலகன்

Tthamizth Tthenee

unread,
Oct 29, 2014, 2:42:32 AM10/29/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
உண்மைதான்  ஒவ்வொரு எழுத்தும் நம்மைப் பண்படுத்திகின்றன


ஒவ்வொரு முயற்சியும் நமக்கு பாடமாகவே  அமைகிறது

முயல்வோம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




K. Loganathan

unread,
Oct 30, 2014, 4:14:36 AM10/30/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

இடுகை 5

 

காமவேட்கை எப்படி தோன்றுகின்றது என்பதைப் பற்றி ஐரோப்பியச் சிந்தனையில் இரண்டு வகை கருத்துக்கள் இருப்பதைக் கண்டோம். ஒன்று பிராய்டு அவர்கள் வற்புறுத்திய  Eros  எனும் இயல்பூக்கம்( instinct). மற்றது உயிரியல் அறிவியலாளர்கள் வற்புறுத்தும்  testosterone, oxytocin  என்ற வேத்தியல் சுரப்புக்களே முறையே ஆண்களுக்கும் பெண்களுக்குமாக காமவேட்கையை தோற்றுகின்றன என்பதாகும்.

 

இரண்டும் பொருந்துவதாக இல்லை. காரணம் காமம் வளர பக்குவம் அடைய தூய அன்பாக மாறி ஆண் பெண் உறவினையே மாற்றி தெய்வீகமா ஒன்றாக ஆக்கிவிடுவதுதான்.  தொடக்கத்தில் காமவேட்கை முன்னிற்க அன்பு பின் நிற்கின்றது. பிறகு அன்பே முன்னிற்க காமவேட்கை பின்னிற்கின்றது. அன்பொடு மெய்யாகும் காம இன்பமே அமுதம் ஆகின்றது. பிறகு உடல் புணர்ச்சியின் காமவின்பம் குறைந்து இல்லாது போக, தூய அன்பே உள்ளத்தில் நிலவி அழகிய ஓர் இல்வாழ்க்கையை அமைத்துத் தருகிறது.

 

பிராய்டு கூறுவதுபோல் இதுவோர் இயல்பூக்கம் என்றால ஏன் அனபோடு அதுவரவேண்டும் அன்பாகவே அது பரிணமிக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் இல்லாது போய்விடுகின்றது.  சுருப்புக்களின் விளைவு என்றாலும் ஏன் காமவேட்கையை எழுப்பும் வேத்தியல் பொருள் அன்பு எனும் அழகிய ஆண்.பெண் உறவு நிலை உருவாக்க வேண்டும் என்பது விளக்க முடியாது போய் விடுகின்றது.  அன்பினை சுரக்கும் ஓர் சுரப்பி இருப்பதாகஹ்ட் தெரியவில்லை.

 

இங்கு தான் சைவத்தின் சிவலிங்கமாகிய நாதவிந்து தத்துவங்கள் உண்டெனும் உண்மை பெரிதும் உதவுகின்றது

 

விந்துப் பசியும் நாதப் பசியும்

 

காமவேட்கை ஓர் வகையான பசி. ஆனால் இப்பசி பால் வேற்றுமைத் தொடபானது. மேலும் உடம்பு ஆணுமாய பெண்ணுமாய் இருந்து மற்ரும் அலியாய் இருக்க, இவர்கள் மாட்டு காம்வேட்கை இருக்க, ஆன்மலிங்கம் வேறு பிண்டலிங்கம் வேறு என்றாகி, ஆன்மலிங்கமே காமவேட்கை எழுவதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று தெரிகின்றது.

 

அது எப்படி?

 

பசி என்றாலே ஓர் குறைவு என்றே பொருள் படும். உடம்பில் நீரின் அளவு வற்றினால் தாகம் எடுக்க, வேண்டிய அளவிற்கு நீர் பருகினால் தாகம் போய்விடுகின்றது. இதேப் பொன்று உணவுப் பசியும். காம வேட்கையும் இத்தகையப் பசிகள் போலத்தான். தக்க துணைகள் கிடைத்து தக்க உடலுறவுகள் மெய்யாகினால் பசி அடங்கி விடுகின்றது.

 

மற்றும் தாகம் போன்றும் உணவுப் பசி போன்றும் பருக உண்ண அவை மறைந்து ஆனால் பிறகு மீண்டும் தோன்றுவதுபோல், காமப் பசியும் அவ்வாறே.

 

ஆனால் ஓர் வேற்றுமை இல்லாமல் இல்லை, சில சமயங்களின் சிலர் வாழ்க்கையில் காமவேட்கை முற்றிலும் மடைமாற்றம் பெற்று தூய அன்பாகவே மாறிவிடுகின்றது. இது வயிற்றுப் பசிக்கும் நீர் தாகத்திற்கும் இல்லை

 

இங்கு ஓர் கருத்து உருவாகி அது அழிவிலுண்மையில் பலவாறு விளக்கப்படுகின்றது.

 

ஆதமலிங்கம் அதாவது ஆன்மாவில் பதியும் சிவலிங்கம், நாதத்தில் குறைந்து விந்து அதிகமாக இருக்க, நாதப் பசி தோன்றும். பெண்களது ஆன்மப் பண்பு இப்படிப்பட்டது. இந்த நாதப்பசியே காமப்பசியாக பெண்கள் பால் விளங்குகின்றது.

 

இதேப் போல ஆன்மாவில் பதியும் சிவலிங்கம் நாதம் மிக்கிருக்க விந்து குறைந்திருக்க, விந்துப் பசி உண்டாகின்றது. ஆண்கள் பெண்களைத் தழுவ வேட்கும் காம்வேட்கை இத்தகையது, அதாவது விந்துப்பசியால் எழுவது

 

ஆலிங்கணமும் குண்டலினிப் பாய்வும்

 

கொக்கோகம் (சுமேருத் தமிழ் கொக்கு (ku-ku): உறங்குதல்) எனும் காம சையோகத்தில் பெண்களுக்கு நாதப் பசியும் ஆண்களுக்கு விந்துப்பசியும் அடங்குவதற்கு முக்கியக் காரணமே ஆலிங்கணம் தான். இதையே திருமூலர் பரியங்க யோகம் என்பார். அதாவது ஆணும் பெண்ணும் காமவுறுப்புகளையும் ஏனைய உறுப்புக்களையும் ஆரத்தழுவிப் பருகும் யோகம் இந்த யோகம் ஆகும். இதனை குண்டலினி யோகம் என்றும் கூறுவர்.

 

இதற்குக் காரணமே ஆண்களிடமிருந்து புணர்ச்சி உச்சத்தில் சுக்கில நீக்கம் நடைபெற பெண்களின் உச்சத்தில் கருப்பை வாயில்கள் விரிந்து சுருங்கி சுக்கிலத்தை உள்வாங்க, அதேபொழுது உடலெங்கும் ஓர் பூரிப்பு உண்டாகின்றது. வறண்ட வயலில் நீர் பாய்ச்சுவதுபோல ஓர் உணர்வு எழுகின்றது. இதற்குக் காரணமே குண்டலினிப் பாய்வு என்று தெரிகின்றது.

 

இந்தக் குண்டலினிப் பாய்வே ஞானக் கனவுகளிலும் புராணங்களிலும் பல்வேறு வகைப் பாம்புகளாக காட்டபடுகின்றது.

 

சிவபெருமான் கழுத்திலும் கரத்திலும் இத்தகைய குண்டலினிப் பாம்புகள். திருமால ஆனந்த சயனம் கொள்வதும் மாபெரும் ஐந்தலை நாகமாகிய ஆதிசேடன் மேல்.

 

இந்தக் குண்டலினிப் பாய்வே காமப்பசியாகிய நாதப் பசியை பெண்களுக்கும் விந்துப் பசியை ஆண்களுக்கும் போக்கி ஓர் உடல் அமைதியையும் மன அமைதியையும் தருகின்றது. காய்ச்சல் கண்டு பின் அது தீர்வதுபோன்று.

 

ஆயினும் சிக்கல் தீர்ந்த பாடில்லை,

 

பெண்கள் தம் உடம்பிலும் உள்ளத்திலும் இருக்கும் விந்துவின் ஆட்சியை ஆண்களை வசீகரித்து மயக்கி பொருட்பரிக்க ஓர் கருவியாக அறத்திற்குப் புறம்பாக செயல்படுவதும் உண்டு.  மேலும் நாதத்து ஆட்சியில் விளங்கும் ஆண்கள் பெண்களை அடக்குவது ஒடுக்குவது  காம சுகத்திற்கு அடிமையாக்குவது மற்றும் வன்முறை புணர்சிக்கு ஆளாக்குவது போன்றவையும் அறநெறிக்குப் புறம்பானவையாக நிகழ்வதுண்டு.

 

காமம் அறத்தொடும் வரும், அதற்குப் புறம்பாயும் வரும். இதனை சித்தர்கள் பிங்கல நாடி இடகலை நாடிச் செலவுகள் என்பர். இவை பிராய்ட் அவர்களின்  Eros  என்பதொடும் வன்முறை அழிவு ஆகியவற்றின்  Thanatos  என்பதொடும் ஒத்து வருகின்றது.

 

ஆனால் இங்கு பல கேள்விகள் எழுகின்றன. காமத்திற்கும் அறவுணர்விற்கும் ஓர் நெருங்கியத் தொடர்பு இருக்கின்றதே? காமத்தக் கருவியாக் பயன்படுத்தி மயக்குதல் போன்றவை உடல் பலத்தை பயன்படுத்தி வன்முறை பிணர்ச்சி மகிழ்வதும் நடக்கின்றதே?

 

ஏன் காமம் யாண்டும் அன்பின் ஐந்திணை ஒழுக்கமாக அமைவதில்லை?

 

இதற்கு சைவம் தரும் விளக்கங்களை அடுத்தக் கட்டுரையில் காண்பம்

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 

வேந்தன் அரசு

unread,
Oct 30, 2014, 12:38:27 PM10/30/14
to vallamai, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com
ஐந்திணை ஒழுக்கம் ஒழுக்கம் அல்ல. அது தமிழர் வாழ்வும் முறை

மருதம் தவிர்த்த நால் ஒழுக்கமே நல் ஒழுக்கம்.

30 அக்டோபர், 2014 4:14 முற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

தேமொழி

unread,
Oct 30, 2014, 1:20:20 PM10/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஐயா, நீங்கள் மனிதர்களின் உணர்வுகள் என்ற கோணத்தில் எழுதி வருகிறீர்கள்.

தாயன்பு, துணையிடம் ஏற்படும் அன்பு ஆகியவை மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும், விலங்கு, பறவை என யாவற்றுக்கும் பொதுதானே. 

துணையைப் பிரிய விரும்பாத அன்றில் பறவையைப்  பற்றி சமீபத்தில்  குறிப்பிடப்பட்டது.  

மனிதரைத் தவிர்த்து பிற உயிரினங்களுக்கு கீழ் வரும் கூற்றை...

///
காமம் அறத்தொடும் வரும், அதற்குப் புறம்பாயும் வரும். இதனை சித்தர்கள் பிங்கல நாடி இடகலை நாடிச் செலவுகள் என்பர். 
///

என்னால் ஒப்பிட இயலவில்லை.  இயற்கையாகத் தோன்றும் உணர்வுகளுக்கு நாமே பல காரணம் கற்பிப்பது போல உணர்கிறேன்.


..... தேமொழி




...

K. Loganathan

unread,
Oct 30, 2014, 8:10:14 PM10/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
நின்னா தேமொழி 

 தங்கள் கூற்று:

//இயற்கையாகத் தோன்றும் உணர்வுகளுக்கு நாமே பல காரணம் கற்பிப்பது போல உணர்கிறேன்.//

இப்படி இயற்கையானது என்ற கோணத்தில் தான் பிராய்ட்  அவர்கள் இயல்பூக்கம்" ( instinct)  என்று கூறிச் சென்றார். ஆனால் அது  இயற்கை என்றால் துறவும் ஏன் வரவேண்டும்?

இந்தத் துறவு பறவைகள் மிருகங்கள் மற்றும் ஏனைய சீவராசிகளிடம் இல்லை என்றாலும்  மனிதர்களிடையே இருக்கின்றதே ! அது எப்படி?

மொழித் திறன் மாந்தர்க்கே உரித்தாகின்றது.  பறவைகள் மிருகங்கள் போன்றவற்றிற்கு இல்லை, ஆனால் ஓர்வகைய தொடர்பு மொழி இருக்கின்றது.

இவையும் விளக்கபட  வேண்டியவையே

இதைத்தான் சைவச் சிந்தனை செய்திருக்கின்றது. அதனை ஒட்டி இன்னும் சிறிது ஆழஞ் செல்கின்றேன். இதுதானே அறிவியல் வாழ்க்கை?

இப்படிப்பட்ட விளக்கங்கள் தருவதின் வழி நான் அறிவியல் வாழ்க்கை வாழ்கின்றேன் சைவனாகவும்  வாழ்கின்றேன்

உலகன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Nov 2, 2014, 12:20:09 AM11/2/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

காமத்தியற்கை: ஓர் சைவப் பார்வை

 

முனைவர் கி. லோகநாதன், 25-10-14

 

இடுகை 6

மெதுவாக ஓர் தெளிவு பிறந்து வருகின்றது.  காமவேட்கை உள்ளபடியே ஓர் காமநாடி. ஓர்வகையில் இது பிராய்ட் சொல்வதுபோல ஓர் இயல்பூக்கம் எனினும் சைவத்தின் நாத விந்துக்கள் வழியாக இன்னும் ஆழஞ் சென்று அவற்றை நாதப்பசி என்றும் விந்துப்பசி என்றும் நம்மால் உணரமுடிகின்றது. பெண்களுக்குரிய காமவேட்கை நாதப் பசியாகும். ஆண்களுக்குரிய காமவேட்கை விந்துப் பசியாகும். ஆக ஆண்களுக்கும் பெண்களுக்கும் காமவேட்கை பொதுவென்றாலும் அதன் பண்பு வேறுபட்டது, காமத்தின் வழி  ஆண்கள் பெண்கள் எதிர்ப்பார்ப்பது வேறு என்பதொடு அதன் வழி அமையும் குண்டலினிப் பாய்வும் வேறு பண்பினது. காம இன்பம் வேறு பண்பினது என்றும் தற்கால அறிவியல் ஆய்வுகள் விளக்குகின்றன.

 

ஆயினும் நம் கேள்வி: ஏன் அன்பின் ஐந்திணை ஒழுக்கமாக காமவொழுக்கங்கள் அமையாது கீழான அறத்திற்குப் புறம்பான பண்புகளை உடைய கைக்கிளை பெருந்திணை ஒழுக்கங்களாக அவை திரிபடைகின்றன ? என்பதே. காமத்தோடு வரக்கூடிய  அன்பினையும் அறவுணர்வினையும் போக்கி அந்த உணர்வுகளை சிதைத்து இல்லாதாக்கி ஏன் காம்வேட்கை பொல்லாத வன்புணர்ச்சி என்றும் பணம்பரிக்கும் சாகச ஒழுக்கம் என்றும் இன்னும் பலவாறும் கீழிறங்கி பிரகு பாலியல் தொடர்பான பல உடற்சிதைவு நோய்களைக் கொண்டு வருகின்றன?

 

ஆணவத்தின் தாக்கம்

 

இவ்வாறு இந்தக் கேள்வியை எழுப்பிய உடன் சைவத்தின் அற்புத அநாதிப் பொருளியலை அறிந்தவர்கள் உடன் மும்மலங்கள் அதுவும் குறிப்பாக அந்தப் பொல்லாத ஆணவ மலத்தை நினைப்பர்.  அழிப்பிற்கு மரணத்திற்கு ஏன் உலக ஒடுக்கத்திற்கே காரண்மாக இருக்கின்ற இந்த ஆணவ மலத்தின் தாக்கத்தாலேயே காமவேட்கையுள் கசடு புகுந்து விட, அறத்திற்கு புறம்பான ஒன்றாகுவதோடு கொல்லுகின்ற திறத்தின் நஞ்சாகவும் ஆய்விடுகின்றது. புணர்ச்சியின் போது பாய்கின்ற குண்டலினி அமிர்தமாக இருப்பது போய் நஞ்சாக மாறி பாலியல் நோய்களையும் பல கொடூரமான மனநோய்களையும் கொண்டு வருகின்றது.

 

ஆணவ மலத்தோடு வரும் விந்துப்ப்சி நாதம் மிக்கிருக்கும் ஆடவர்கள் பால் எழுந்து அதனை கொலைவெறியாக வன்புணர்ச்சி வழி அடையவும் முயற்சிக்க காரணமாக அமைகின்றது.  ஆணவ மலத்தோடு வரும் நாதப்பசி பெண்கள் பால் பரத்தமைப் பண்புகளையும் காமவசீகரத்தைக் காட்டி ஆடவர்களை வஞ்சிக்கவும் அதுபோன்ற சிந்தனைகளை வளர்க்கவும் செய்கின்றது.

 

இங்கு பிராய்ட் கண்டுபிடித்த தகாத , கைக்கிளை பெருந்திணை காம ஒழுக்கங்களே புதைக்கப்பட்டு பின் எளிதில் தீர்க்க முடியாத  hysteria  போன்ற பொல்லாத மனநோய்களாக வெளிப்படுகின்றன எனும் நுட்பம் நினைவு கூரத்தக்கது, Oedipus Complex  எனும் தாய்-மகன் இடையே வரும் தகாத காமங்கள்  incest  என்பட்டும் உடன்பிறப்புக்களிடையே வரும் காமங்கள் என்பன அன்பினையும் அறவுணர்வினையும் ஆணவமலத்தின்  அதிகரிப்பு சிதைத்துவிட ஆகும் திரிபு காமங்களே யாகும். இத்தகைய நிலையில் மெய்யாகும் ஆலிங்கனத்தில் ஆகும் குண்டலினிப் பாய்வு ஆணவ மலத்தையும் உடலிற் பாய்ச்சி பாலியல் தொடர்பான உடல்நோய்களும் உளநோய்களும் வருமாறு செய்கின்றன போலும்

 

இதன் தீர்வுதான்  என்ன? அகத்தே காமத் திரிபுகள் தோன்றாவகை எவ்வாறு உள்ளத்தை பாதுகாக்க முடியும்?

 

தெய்வங்களின் ஆட்சியும் அன்பின் காமமும்

 

இங்கு தொல்காப்பியர் கண்ட ஓர் நுட்பத்தை நாம் மீண்டும் கண்டு அதனை இன்னும் விருத்தி செய்யும் கடப்பாட்டில் இருக்கின்றோம்

 

மானிட ஒழுக்கங்களை ஏழுதிணைகளாக வகுத்து அவற்றில் மூலமானதாக அகத்திணை என்றும் அவற்றின் புற வெளிப்பாடுகளே புறத்திணை என்றும் வழ்க்கியல் செய்யுளியல் எனும் மாந்தர்களின் மொழி பயிற்சிகளை வைத்தே அவற்றின் ஆழஞ் சென்று அறிவியல் முறையில் மூலங்களை கண்டுபிடித்தனர். அவற்றில் அன்பின் ஐந்திணை என்பன முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை  என்று கொண்டு அவற்றிற்கு மாயோன் சேயோன் வருணன் வேந்தன் என்ற தெய்வங்களோடு பாலைக்கு கொற்றவை என்றும் ‘பால்’ என்று ஓர் தெய்வத்தையும் உள்ளதாக கண்டனர். மேலும் மூலமாவது பாலைத் திணையே என்றும் அதன் திரிபுகளே ஏனையத் தினைகள் என்றும் கண்டனர். ஆக களவியல் சூத்திரத்தில் வரும் ‘பால்’ எனும் பிரமம் அல்லது சிவன் எனும் தெய்வத்தின் ( பாலது ஆணை: களவியல் சூத்திரம்) திரிபுகளே மாயோன் சேயோன் போன்ற தெய்வங்கள் என்றும் குறிப்பாய் உணர்த்தப்படுவதாகவும்  தெரிகின்ரது

 

ஆனால் நாம் இங்கு சிறப்பாக கவனிக்க வேண்டியது அன்பின் ஐந்திணகட்கு தெய்வங்கள் ஆட்சி உண்டென, தகாத ஒருதலைக் காமம் ஒவ்வாக் காமம் எனும் கைக்கிளை பெருந்திணைகட்கு தெய்வங்களின் ஆட்சி இல்லை என்பதுதான்

 

ஆக தொல்காப்பியர் உணர்த்துவதுதான் என்ன?

 

எங்கு தெய்வங்களின் ஆட்சியோ அங்கு அறவுணர்வும் அன்புணர்வும் உடன் வரும் நற்காமம் தோன்ற இந்த தெய்வங்களின் ஆட்சி இல்லாத காமவேட்கைகள் கழிகாம வெறிகளாகவேத் தோன்றும் என்றும் அவையே உடல்நோய் மனநோய் ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லும் என்றும் தெரிகின்றது. இங்கு மும்மலங்கள் என்றும் அதிலும் குறிப்பாக ஆணவ மலம் என்றும் தெளிவாக தொல்காப்பியர் கூறவில்லை\ என்றாலும் அது குறிப்பாய் உணர்த்தப்படுகின்றது என்றும் எங்கே தெய்வங்களின் ஆட்சி இல்லாது போகின்றதோ அங்கே ஆணவ மலத்தின் ஆதிக்கம் தோன்றி இவ்வாறான கழிகாம வெறிகளை மெய்யாக்கும் என்று தெரிகின்றது. ‘கைக்கிளை” என்றா; அணுத்துவ அல்லது கருத்த ஒழுக்கங்கள் என்று பொருள் படும்

 

தெய்வங்களின் ஆட்சியும் திருமண வாழ்க்கையும்

 

நடைமுறையில் பல வகையான குடும்பவாழ்க்கைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவே திருமூலர் போன்ற சித்தர்கள் விரிக்கும் காம்ப்பால் கானற்பாலாக மடைமாற்றம் அடையும் அமைவது பற்ரியும் ஓர் நல்ல விளக்கம் தேவைப்படுகின்றது.  அன்பும் அறனும் உடைத்தாகிய இல்வாழ்க்கையில் ஈட்டப்படும் காமப்பாலாக வரும் குண்டலினி சத்தி எவ்வாறு கானற்பாலாக அதாவது ஞானசத்தியாக மடைமாற்றம் காண்கின்றது என்ற கேள்வியும் எழுகின்றது,

 

 

இப்படிப்பட்ட கேள்விகட்கு பிராய்டு போன்றாரும் மற்றும் ஏனைய ஐரோப்பிய உளவியலாளர் உயிரியலாளர்கள் தக்க விளக்கங்களை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை, அங்கு சைவசித்தாந்தத்தின் அநாதிப் பொருளியல் இல்லை என்பதொடு தெய்வங்களின் ஆட்சி காமத்திலும் உண்டு என்பதையும் அவர்கள் ஏற்பதாக இல்லை,

 

இனி நாம் தொடர்ந்து சைவத்தின் காமத்தியற்கையைப் பற்றி எவ்வாறு பல்வகையான குடும்பங்கள் அமைகின்றன என்பதொடு எவ்வாறு முடிவில் இது மெய்யான துறவறத்திற்கும் இட்டுச் செல்கின்றது என்பதையும் காண்போம்.

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 

 

வேந்தன் அரசு

unread,
Nov 2, 2014, 10:31:09 AM11/2/14
to vallamai, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com
”Oedipus Complex  எனும் தாய்-மகன் இடையே வரும் தகாத காமங்கள்  ”

தவறான பொருள்.

தாய்க்கு மகன் மேல் பாசமும் தந்தைக்கு மகள் மேல் பாசமும் இருப்பதற்கு அவர் சொல்லிய விளக்கம் மறுபாலார் என்பதே. அதற்கு அவர் அந்த பேர் சூட்டி உள்ளனர். அது தகாத காமம் அல்ல.



2 நவம்பர், 2014 12:20 முற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

K. Loganathan

unread,
Nov 2, 2014, 7:42:00 PM11/2/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 திரு வேந்தன் அரசு அவர்களே

 நான் அப்படி அறிந்திருக்க வில்லை, இந்த கம்பெலெக்ஸ் 'மறுபாலர் நேசம்' என்றால் அது மனநோய்க்கு இட்டுச் செல்ல வேண்டியதில்லை,

அறத்திற்குப் புறம்பானது என்று அஞ்சி அதனைப் புதைக்கத்தொடங்கி அதன்வழி மன்நோய்க்கு ஆளாக வேண்டியதில்லை,

எனினும் மேற்கொண்டு விசார்த்து தக்கத் தகவல்களைத் தரு கின்றேன்.

உலகன்


 

K. Loganathan

unread,
Nov 2, 2014, 8:54:57 PM11/2/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
தொரு வேந்தன் அரசு அவர்களே

கீழே இந்த கம்ப்லெக்ஸ் பற்றி ஓர் விளக்கம்

மூலம்:


The term Oedipus complex (or, less commonly, Oedipal complex) denotes the emotions and ideas that the mind keeps in the unconscious, via dynamic repression, that concentrates upon a child's desire to have sexual relations with the parent of the opposite sex (i.e. males attracted to their mothers, and females attracted to their fathers).[1][2] Sigmund Freud, who coined the term "Oedipus complex" believed that the Oedipus complex is a desire for the parent in both males and females; Freud deprecated the term "Electra complex", which was introduced by Carl Gustav Jung in regard to the Oedipus complex manifested in young girls. The Oedipus complex occurs in the third — phallic stage (ages 3–6) — of the five psychosexual development stages: (i) the oral, (ii) the anal, (iii) the phallic, (iv) the latent, and (v) the genital — in which the source of libidinal pleasure is in a different erogenous zone of the infant's body.

In classical Freudian psychoanalytic theory, a child's identification with the same-sex parent is the successful resolution of the Oedipus complex and of the Electra complex. This is a key psychological experience that is necessary for the development of a mature sexual role and identity. Sigmund Freud further proposed that boys and girls experience the complexes differently: boys in a form of castration anxiety, girls in a form of penis envy; and that unsuccessful resolution of the complexes might lead to neurosis, pedophilia, and homosexuality. Men and women who are fixated in the Oedipal and Electra stages of their psychosexual development might be considered "mother-fixated" and "father-fixated". In adult life this can lead to a choice of a sexual partner who resembles one's parent.


K. Loganathan

unread,
Nov 3, 2014, 9:12:21 PM11/3/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

காமத்தியற்கை: ஓர் சைவப் பார்வை

 

முனைவர் கி. லோகநாதன், 25-10-14

 

இடுகை 7

 

 காமம் என்பது ஓர் உலகப் பொது, மாந்தரகட்கும் மற்றும் ஏனைய உயிரினங்கட்கும் பொது. ஆக அதனைப் பற்றி பலவாறு சிந்திக்காத மாந்தர்களே இல்லை எனலாம். தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. பண்டே இதனைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியதால்தான் போலும் அவர்களிடையே சிவலிங்க வழிபாடு தோன்றி சைவ சமய்த்தின் அடிப்படியும் ஆகியுயுள்ளது. அது இன்றளவு தொடகின்றது என்பதொடு தென்கிழக்காசிய  நாடுகளாகிய இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இந்த சிந்தனையின் தாக்கம் உண்டு. அங்கும் பல ஆகமங்கள் பண்டைய் சாவக மொழியில் எழுதப்பட்டுள்ளன என்பதொடு சிவலிங்கத்தை பற்றி மிக ஆழமான தத்துவ நூற்களும் தோன்றியுள்ளன.. ‘ஞான சித்தாந்தம்’ என்றோர் நூல் சாவகத்தில் தோன்றிய சாவ மொழியில் எழுதப்பட்ட ஓர் சைவாகமம் ஆகும்.

 

இனி நாம் இங்கு கருத விருப்பது திருவள்ளுர் கூறிச் சென்றுள்ள ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வவழ்க்கை, பண்பும் பயனும் அது” என்னும் கருத்தின் சைவ வளர்ச்சியே யாகும்

 

அன்பும் அறனும் நாதவிந்துக்களும்

 

இங்கு உடன் நாம் மேலான  பக்குவத்தில் நன்முறையில் அமைந்த இல்லறவாழ்க்கையில் அன்பும் அறனும் இருக்கும் எனும் கருத்து அன்பினை நிறுத்தும் சிவதத்துவங்களில் ஒன்றாகிய விந்துவையும் அறத்தை நிறுத்தும் நாதத்தையும் சிந்திக்க வைக்கின்றது. நல்லவோர் இல்லறம நாதமும் விந்துவும் இணைந்து விளையாடும் ஓர் நாடகவரங்கம் என்று கொள்ளலாம்

 

உடன் இது ப்ராய்டு அவர்கள் கூறிய  instincts  எனும்  Eros  Thanotos  ஆகியவற்றை நினைக்கத் தருகின்றது. ஆயினும் இதனைவிட இன்னும் ஆழஞ் சென்றுள்ள தமிழர்களின் சைவ சிந்தனையின்  பிங்கலநாடி இடகலைநாடி சுழிமுனைநாடி மேரு அல்லது குருநாடி எனும் நாடிகளோடு  இதனை ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகின்றது.

 

நாட்டங்களை இருத்துவன நாடிகள், இவை இயல்பூக்கங்கள் எனினும் ஆழத்தின் ஆழத்தில் இவை ஆன்மாவை அம்மையப்பாராகத் தோன்றும் இறைவன் தன்பால் காந்தம் இரும்பை வலிப்பதுபோன்று வலிக்க ஏற்படுகின்ற வலுவான ஈர்ப்புக்கள் ஆகும்.

 

ஆன்மாக்கள் இறைவன் உண்டென அறிகின்றனவோ அல்லையோ தன்னுள் இயல்பாகவே தன் ஆண் பெண் பிறப்பிற்கு ஏற்ப காமவேட்கை வந்துவிடுகின்றது என்பதை உணர்ந்திருக்கும். அதன் தோற்ற மூலத்தை சிந்தித்து தெள்ளத் தெளிவாக காணாதே ஆனால் அதற்கு வசப்பட்டு உலக வாழ்ககையில் விழும், திருமணம் செய்து கொண்டு காமம் துய்த்து மகட்பேறும் மகிழும்.

 

இப்படிப்ப்ட்ட ஓர் திருவிளையாடல் நடந்துகொண்டே இருக்கின்றது. இதனை ஆய்ந்து தெளிவார் ஓர் சிலரேயாக, அவர்கள் சிந்தனையைத் தழுவியே நாமும் இங்கு சிறிது சிந்திக்கின்றோம்

 

துறவின் தோற்றம்

 

காமநாட்டங்களை எழுப்பும் நாடிகள், அம்மையப்ப இறைவன ஆன்மாக்களை காந்தம் இரும்பை வலிப்பதுபோன்று வலிப்பதால் எழுவன எனும் போது, அவை என்று எவ்வாறு கழரும், இல்லாது போகும் என்றத் தெளிவும் வந்துவிடுகின்றது.

 

ஈர்க்கப்படும் ஆன்மாக்கள் இறைவனை அடைய சுத்தமாகி இறைவனிடமிருந்து அந்நியம் போக்கி ஏகனாகி ஒன்றித்து நிற்க, இந்த ஈர்ப்பும் தானே இல்லாது போக, காமவேடகையும் இல்லாது போகும்

 

இங்கு சைவச் சிந்தனையின் ஆழம் வெளிப்படுகின்றது என்பதொடு இல்லறமும் துறவறமும் எவ்வாறு மெய்யாகின்றன என்பதைப் பற்றிய ஓர் ஆழமான விளக்கமும் கிடைக்கின்றது..

 

உண்மையான சமய வாழ்க்கையில் மெய்யான துறவறம் தோன்றும், அதுவும் இல்லறத்தின் வழியாகவே!

 

இது தமிழர்கட்கு மிகப் பழமையான ஓர் தெளிவாகும். தொல்காப்பியர் அன்றே “ காமஞ் சான்ற கடைகோள் காலை, ஏமஞ் சான்ற சுற்றமொடு துவன்றி, சிறந்தது பயிற்றல் இறந்ததின் பயனே” என்று கூறிச் சென்றுள்ளார்.  காமம் வேட்கைகள் கழற அன்பின் தொண்டு வாழ்க்கையே வாழ்க்கையாக அமைகின்றது.

 

மெய்யான இறையாண்மை வாழ்க்கையில்தான் மெய்யான துறவறம் பிறக்கும், அதுவும் அன்பேத் தானாக நிற்கும் இறைவனைப் போல தாமும் அன்பே வடிவாகி அவனோடு அதனின் ஏகனாக இருப்பதின் வழியாகத் தான், இந்த பொல்லாத காமத்தை கழற்றிட  ஓர் உபாயம் தெரிய வருகின்றது

 

இது எப்படி என்ற கேள்வியும் எழுகின்றது. இது உண்மை என்றால இறைவனை அடைய இல்லறம் ஓர் சாதனம் ஆகின்றதே? அப்படி என்றால் ஏன் புத்தம் சமணம் வேதாந்தம் போன்ற சமயங்கள் இல்ல்றத்தின் வழியேத் தான் துறவறம் என்று கூறவில்லை ? ஏன் சைவர்களில் ஒரு சாரார் வற்புறுத்தும் இல்லறத் துறவறம் அவர்களால் வற்புறுத்தப்படவில்லை?

 

சித்தர்களின் காமப்பாலும் கானற்பாலும்

 

இங்கு தான் திருமூலர் போன்ற சித்தர்களின் ஆழங்கள் நமக்கு உதவுகின்றன. ‘காமப்பால, கானற்பால்’ எனும் கலைச் சொற்கள் சித்தர்கள் மரபில் வருவன. இவற்றை அமிர்த விந்து என்றும் அமிர்த நாதம் என்றும் குண்டலினிப் பாய்வுகளாகவும் அழைக்கலாம். இங்கு காமப்பால் காமக் கலவியில் உடலில் ஓடும் குண்டல்னி சத்தி என, அது மடைமாற்றம் பெற்று ஞானசத்தியாக உருவெடுக்கும் போது அது கானற்பாலாகி மிக ஆழமாக் சிந்திக்க உதவும் ஓர் சத்தியாக வடிவெடுகின்றது

 

 எனது அழிவிலுண்மை எனும் பெருநூலின் இல்லற சாதனம் தொடர்பான 13ஆம் சூத்திரம் இதனையே வளர்க்கின்றது.

 

>>>>> 

 

சூத்திரம் 13:

 

கானற்பால் காமப்பால் கலங்கா வுண்டிடும்

ஞானத்து வான்மா நலமே வளர்ந்து

மோனத்துப் பெருவெளி முயலா நுழைந்து

காலத்துப் படாஅக் கழற்கதி உற்றிடும்

 

பொழிப்புரை:

 

இச் சூத்திரம் என் நுதலிறறோவெனின், அறவழி பிழையாது இல்லறம் நடத்தி அதன்வழி காமவின்பந் தூய்த்து குண்டலினி ஈட்டி மனநலம் உடல் நலமென்று மகிழ்ந்து நலமே வளர்ந்து, அதனோடு அமையாது இக்குண்டலினியை மடைமாற்றம் செய்து ஞானம் வேண்டி உழைத்து சிவஞானம் அகத்தே சுடர்ந்தெரியச் செய்யும் ஆன்மா, இதனின் பொறிலியப் பார்வை உள்ளே சூக்குமமாக கிடக்கும் பிறப்பிற மேலான பார்வைகளும் பெற்று அதற்கேற்ப பக்குவ முதிர்ச்சிகளை உற்று சிவக் கற்றளிகளும் புகுந்து முடிவில் சுட்டுக்காலம் குறிப்புக்காலம் என்றவாறு வரும் இருவகைக் காலவுணர்வுகளையுங் கடந்து, அதனோடு மூலமாக நிற்கின்ற இருவகைக் காலவுணர்வுகளையுங் கடந்து, அதற்கு முலமாக நிற்கின்ற உடல்வழி சுட்டு பரச்சுட்டு போன்ற சுட்டுகளும் கழன்று சுட்டுணர்வு இறந்து நிற்கும். ஆகவே காலக் கழற்சியின் வரும் சிவஞானம் எய்தி இறைவனது இணையடி நிழலை அடையும் என்றது. காலவுணர்வு எழுவதற்குக் காரணமாக இருக்கின்ற அந்நியப்பார்வையின் சுட்டுநிலையைப் போக்கினாலே ஒழிய இறைவனது திருப்பாதங்களையுற்று வீடுபேறு அடைய முடியாதென்றதும், இதுவும் சாதாரண அன்பினை சிவவன்பாக மாற்றினாலேயொழிய அமையாதென்பதுவுமாம்

 

>>> 

இங்கு தமிழக மற்றும் உலக வரலாற்றில் பார்வைகள் வழியே காமநாட்டங்களை அலசுவதும் இல்லற வாழ்க்கையின் இயல்புகளை வகுப்பதும் அதன்வழியாக இல்லற வகைகள் பல அமைவதும் விளக்கப்படுவதைக் காண்க.

 

காமங் கழறுவதற்கு மேலான பார்வைகளைப் பெறுவதே வழி என்றும் விளக்கப்படும். இவை எல்லாம் இனி அடுத்து வரும் கட்டுரைகளில் தெளிவாக்கப்படும்.

 

தொடரும்

 

உலகன்

 

வேந்தன் அரசு

unread,
Nov 4, 2014, 8:25:49 PM11/4/14
to vallamai, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com


2 நவம்பர், 2014 7:41 பிற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

 திரு வேந்தன் அரசு அவர்களே

 நான் அப்படி அறிந்திருக்க வில்லை, இந்த கம்பெலெக்ஸ் 'மறுபாலர் நேசம்' என்றால் அது மனநோய்க்கு இட்டுச் செல்ல வேண்டியதில்லை,

அறத்திற்குப் புறம்பானது என்று அஞ்சி அதனைப் புதைக்கத்தொடங்கி அதன்வழி மன்நோய்க்கு ஆளாக வேண்டியதில்லை,

எனினும் மேற்கொண்டு விசார்த்து தக்கத் தகவல்களைத் தரு கின்றேன்.

ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன்

என் மகளின் பிறந்த நாளுக்கு நாய்குட்டி வேண்டும். தன் கல்லூரி தோழியின் நாய் குட்டிகள் போட்டிருக்காம் என்று தன் அண்ணனை கூட்டிக்கொண்டு போனார். குட்டிகள் அழகாக தோன்ற என் மகனும் தனக்கு என்று ஒரு குட்டியை எடுத்துகொண்டான். 

என் மகன் எடுத்து வந்தது பெண் குட்டி. மகள் எடுத்து வந்தது ஆண் குட்டி. அவை பெரியதாக இருந்த போது பெண் நாய் அழகாக இருப்பதாக நானும் ஆண் நாய் அழகாக இருப்பதாக என் அமமாவும் வாதிட்டோம். 

அதன் பின்னார், இன்னும் சிலர் இடம் எந்த நாய் அழகானது என கேட்டேன். எங்களைபோலத்தான் அவர்களும் சொன்னார்கள்.

அதுதான் ஓடிபஸ் காம்ப்ளெக்ஸ். பால் மாற்றம் காரணமாகவே ஒரு ஈர்ப்பு வரும். அதில் காமம் கலக்க தேவை இல்லை.

 

K. Loganathan

unread,
Nov 4, 2014, 8:39:57 PM11/4/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
   திரு வேந்தன் அரசு அவர்களே

 இது தங்களது கருத்டாக இருக்கலாம். ஆனால் பிராய்டு அப்படி அதனை விளக்கவில்லலை. மேலே நான் காட்டியுள்ல சிட்டியிலிருந்து 

//The term Oedipus complex (or, less commonly, Oedipal complex) denotes the emotions and ideas that the mind keeps in the unconscious, via dynamicrepression, that concentrates upon a child's desire to have sexual relations with the parent of the opposite sex (i.e. males attracted to their mothers, and females attracted to their fathers).[?

இங்கு இதுவோர்  'புதையுணர்வு அல்லது புதைக்கப்ப்ட்ட உணர்வு" என்றும் காமஞ் சார்ந்த உணர்வு என்றும். ஓர் பருவத்தில் உருவாக  அதுவே வளாரது மாறாது பெண் சிசு தாயையும் ஆண் சிசு தந்தையையும் அடையாளப்புருடர்களாக் கொள்ளாது அப்படியே இறுகிவிட்டால் ( fixated)  இந்த மன்நோய் பிறக்கும் என்கின்றார். இங்கு காமவுணர்வு இருக்கின்றது அத்னால் தான் அது மனநோய் ஆகின்றது என்பதே பிராய்ட் கூறும் விளக்கம்.

உலகன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Nov 4, 2014, 11:51:07 PM11/4/14
to vallamai
தனியாகப் பிறக்கும் மனிதன் தன் வளர்ச்சிப்பாதயில் இருவர் இருவராக இணைகிறான்.  அவ்வாறு சேரும் பல இணைகளில் இயற்கையாக அமைந்த இணை என்பது தாயும் குழந்தையும் மட்டுமே.  மற்ற இணைகள் இயற்கையாய் அமைந்தவை அல்ல

தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உணர்வு பாச அடிப்படையில் அமைந்தது என்பதற்கான நியதிக்கு உளவியல் அடிப்படையில் ஒரு மாற்வு நியதியை ஃப்ராய்டு முன் மொழிந்தார்

தாயுக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவு பாலியல் அடிப்படையில் இயற்கையில் அமைந்த ஈர்ப்பு என்றும் குமுகம் அதை ஏற்றுக்கோளாததால் அந்தப்பாலியல் ஈர்ப்பைக் குழந்தை தன் மழலைக் காலத்திலேயே வெளிக்காட்டாமல் ஆழ்மனத்தில் புதைத்துவைப்பது வளரும் காலத்தில் அடிமனச் சிக்கலில் வெளிப்பாடாக சில உளவியல் அடிப்படையிலான பிறழ்நடத்தை சிந்தனைகளுக்கு வழிவகுப்பதாக்கூறி இந்த உளவியல் சிக்கலைத் தெளிவுபடுத்தி கிரேக்க தெய்வங்களின் உறவுபற்றிய புனைவை எடுத்துக் கூறினார்

மனித உளவியல் செயல்பாடுகளை மிக எளிதாக மூன்றுபிரிவுகளில் அடக்கிய பெருமைக்குறிவர் ஃப்ராய்ட் என்றலும் அவருடைய தாய்க்கும் மகனுக்கும் இடையே பாலியல் உணர்வு கிளைத்ததாகச் சொன்ன கருத்துப் பிற்காலத்திய உளவியலார்களால் ஏற்புடைத்து என்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை

இந்திய இறைச் சிந்தனையிலும் பிள்ளையார் தாயைப்பொன்ற ஒரு பெண்ணை விரும்பி அவளைத் தேடியே குளக்கரையிலும் மரத்தடியிலும் வீற்றிருப்பதாக ஒரு புனைவும் தமிழ் ஆண் பிள்ளைக்கும் தாய்க்கும் உள்ள பாசப்பிணைப்பு வலிமையுடையதாக இருப்பதாலேயே மாமியார் மருமகள் மோதல் உருவாவதாகவும் கருத்துகள் நிலவுவதை நாம் காணலாம்

பாசி

K. Loganathan

unread,
Nov 5, 2014, 1:41:38 AM11/5/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
பேராசிரியர் அவர்களே

மிக்க நன்றி. சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள், எனக்கும்  C.G.Jung  அவர்கட்கும் பிராய்ட் அவர்களோடு முற்றிலும் உடன்பாடு இல்லை என்ற  போதிலும், அவர் காமத்தைப் பற்றி பல புதிய கருத்துக்களைச் சொல்லி ஓர் புரட்சி செய்தவர் என்பது உண்மையே.

 தமிழர்கள் பிள்ளைத் தமிழ் பாடினார்களே ஒழிய குழந்தை பருவத்திலும் காமம் (ஒர் வகையில்) இருக்கு என்று கூறவில்லை. ஆக நாம் அதனைப் ப்ற்றியும் மேலும் சங்கத் தமிழர்கள் உணர்த்திய கைக்கிளை பெருந்திணை காமங்களைப் பற்றியும் ஓர் விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்

இதுவரை என் அனுபவத்தில் ஒரினக் காதல் போன்றவற்றையும்  incest  எனபடும் தகாத உடன்பிறப்புக்களிடையே உள்ள காம உறவுகளைப் பற்றியும் அறிந்துள்ளேன். மேலும் செய்தித் தாள்கள் வழி  தந்தையே மகளை கற்பழிப்பது போன்றவற்றையும்  கேள்விபட்டுள்ளேன். ஆனால்  Oedipus Complex  பற்றி அதிகம் கேள்விப்பட்டதில்லை,  ஆயினும் சில சமயங்களில் சில பண்பாடுகளில் இருந்திருக்கலாம், அதுவே கிரேக்க புராணங்களில் வந்திருக்கலாம்.

எனக்குத் தெரிந்து ஓர் முதியவர், தமிழ் நாட்டு நாட்டுப்புற கதைகளை நன்றாக தெரிந்தவர் , இவ்வாறான கதைகள கூறியுள்ளதைக் கேட்டுள்ளேன் மகளே சில சூழ்நிலைகளில் தாரமாகும் கதைகளையும் கேட்டுள்ளேன்

எனினும் நான் கூற வந்து கருத்து கீழே வருவது (மீண்டும்)

//இங்கு பிராய்ட் கண்டுபிடித்த தகாத , கைக்கிளை பெருந்திணை காம ஒழுக்கங்களே புதைக்கப்பட்டு பின் எளிதில் தீர்க்க முடியாத  hysteria  போன்ற பொல்லாத மனநோய்களாக வெளிப்படுகின்றன எனும் நுட்பம் நினைவு கூரத்தக்கது, Oedipus Complex  எனும் தாய்-மகன் இடையே வரும் தகாத காமங்கள்  incest  என்பட்டும் உடன்பிறப்புக்களிடையே வரும் காமங்கள் என்பன அன்பினையும் அறவுணர்வினையும் ஆணவமலத்தின்  அதிகரிப்பு சிதைத்துவிட ஆகும் திரிபு காமங்களே யாகும்.//

பிராய்ட் அவர்கள் ஆணவமலம் ஓர் அநாதிப்பொருளாக உண்டு என்று கொண்டவ்ர் இல்லை, சைவர்கள் கொண்டிருக்கின்றார்கள் என்பதொடு அதுவோர் உண்மையுங் கூட. அதன் அடிப்படியிலேயே என் விளக்கங்கள் செல்கின்றன.

உலகன் 

வேந்தன் அரசு

unread,
Nov 5, 2014, 6:45:54 AM11/5/14
to vallamai, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com


4 நவம்பர், 2014 8:39 பிற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:
   திரு வேந்தன் அரசு அவர்களே

 இது தங்களது கருத்டாக இருக்கலாம். ஆனால் பிராய்டு அப்படி அதனை விளக்கவில்லலை. மேலே நான் காட்டியுள்ல சிட்டியிலிருந்து 

//The term Oedipus complex (or, less commonly, Oedipal complex) denotes the emotions and ideas that the mind keeps in the unconscious, via dynamicrepression, that concentrates upon a child's desire to have sexual relations with the parent of the opposite sex (i.e. males attracted to their mothers, and females attracted to their fathers).[?

இங்கு இதுவோர்  'புதையுணர்வு அல்லது புதைக்கப்ப்ட்ட உணர்வு" என்றும் காமஞ் சார்ந்த உணர்வு என்றும். ஓர் பருவத்தில் உருவாக  அதுவே வளாரது மாறாது பெண் சிசு தாயையும் ஆண் சிசு தந்தையையும் அடையாளப்புருடர்களாக் கொள்ளாது அப்படியே இறுகிவிட்டால் ( fixated)  இந்த மன்நோய் பிறக்கும் என்கின்றார். இங்கு காமவுணர்வு இருக்கின்றது அத்னால் தான் அது மனநோய் ஆகின்றது என்பதே பிராய்ட் கூறும் விளக்கம்.


மனித இனத்தை சேர்ந்த குரங்கினத்தில் இந்த புதை உணர்வு இருக்கா? இல்லையே.

  males attracted to their mothers, and females attracted to their fathers என்பத் மட்டும் சரி. அதுக்கு மேல் ஃபராய்டின் கற்பனை.


உலகன்

2014-11-05 9:25 GMT+08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


2 நவம்பர், 2014 7:41 பிற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:
 திரு வேந்தன் அரசு அவர்களே

 நான் அப்படி அறிந்திருக்க வில்லை, இந்த கம்பெலெக்ஸ் 'மறுபாலர் நேசம்' என்றால் அது மனநோய்க்கு இட்டுச் செல்ல வேண்டியதில்லை,

அறத்திற்குப் புறம்பானது என்று அஞ்சி அதனைப் புதைக்கத்தொடங்கி அதன்வழி மன்நோய்க்கு ஆளாக வேண்டியதில்லை,

எனினும் மேற்கொண்டு விசார்த்து தக்கத் தகவல்களைத் தரு கின்றேன்.

ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன்

என் மகளின் பிறந்த நாளுக்கு நாய்குட்டி வேண்டும். தன் கல்லூரி தோழியின் நாய் குட்டிகள் போட்டிருக்காம் என்று தன் அண்ணனை கூட்டிக்கொண்டு போனார். குட்டிகள் அழகாக தோன்ற என் மகனும் தனக்கு என்று ஒரு குட்டியை எடுத்துகொண்டான். 

என் மகன் எடுத்து வந்தது பெண் குட்டி. மகள் எடுத்து வந்தது ஆண் குட்டி. அவை பெரியதாக இருந்த போது பெண் நாய் அழகாக இருப்பதாக நானும் ஆண் நாய் அழகாக இருப்பதாக என் அமமாவும் வாதிட்டோம். 

அதன் பின்னார், இன்னும் சிலர் இடம் எந்த நாய் அழகானது என கேட்டேன். எங்களைபோலத்தான் அவர்களும் சொன்னார்கள்.

அதுதான் ஓடிபஸ் காம்ப்ளெக்ஸ். பால் மாற்றம் காரணமாகவே ஒரு ஈர்ப்பு வரும். அதில் காமம் கலக்க தேவை இல்லை.

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

K. Loganathan

unread,
Nov 5, 2014, 7:52:14 AM11/5/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
  த்ரிஉ வேந்தன் அரசு அவரகளே 

 தங்கள் கூற்று:

//மனித இனத்தை சேர்ந்த குரங்கினத்தில் இந்த புதை உணர்வு இருக்கா? இல்லையே.

  males attracted to their mothers, and females attracted to their fathers என்பத் மட்டும் சரி. அதுக்கு மேல் ஃபராய்டின் கற்பனை//

குரங்குகளை அதிலும் வாலில்லாக் குரங்களை வைத்து எத்தனையோ ஆய்வுகள் நடந்து வருகின்றன.  தாங்கள் இந்த குரங்குகளை வைத்து அவர்களைப் போல நிறைய ஆய்வுகள் செய்துள்ளது போல் தெரிகின்றது. அதனால் தான் குரங்கட்கு புதையுணர்வு இல்லை என்று இவ்வளவு உறுதியாக்க் கூறுகின்றீர்கள் போலும்

தங்களது குரங்காய்வுகளை பற்றி விளக்கங்கள் தந்தால் மகிழ்வேன். அல்லது எந்த ஆய்வினை வைத்து இப்படி சொல்கின்றீர்கள் என்று சுட்டினால் மகிழ்வேன்.

மற்றும் பிராய்ட் கருத்து  கற்பனை என்று எப்படி உறுதி செய்ய முடியும்?

சில பண்பாடுகளில் இருக்கலாம். தாயே தாரமாகுவதாக பல கதைகள் நடமாடுகின்றன. தமிழிலும் இவை உண்டு என்றே நினைக்கின்றேன்.

எனது கள ஆய்வில் சந்தித்ததில்லை, ஆனால் பிராய்ட் மனப்பிராந்தி மாந்தர்களை ஆய்ந்து இதனைக் கூறுகின்றார். அவர்  காலத்தில் பண்பாட்டில்   இருந்திருக்கலாம் போலும்.

தமிழ் நாட்டில் தந்தையே மகளை கற்பழிப்பது இன்றும் செய்தித் தாள்களில் வந்துகொண்டுதான் இருக்கின்றது. 

என்னால் எல்லாங் கற்பனை என்று உறுதியாக கூற  முடியவில்லை,

உலகன்.

K. Loganathan

unread,
Nov 5, 2014, 8:20:57 AM11/5/14
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
Dear Puru

Thank you. Whether Oedipus Complex is true or not it is true that throughout the world there is devinat sexualaity and I am trying to explain the matter by using the basic Tatvas and Fundamental Ontology of Pati Pasu paasam as Anati,

I feel that Tamilian philosophical and psychological thinking has not used this Fundamental Ontology adequately to explain social behaviour.

This is what I am trying to accomplish.

What is the use philosophies if they do not help us to explain the dynamics of human behaviour?

Loga

On 5 November 2014 21:04, purushotha...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com> wrote:
 

Freud views are bit challenging but would be ok if taken either as extremes or positioning sexual attractions and the complex... note the chimps elderly having sex and the child chimp asking such an act with it ( in some national geography collections) and the elderly showing a mock, but the child chimp not happy! The way I roll my palm on my body while taking bath, one day I realized that I could be the same way my mother would have given bath when I was baby, someway get imprinted. And, when we consider manmatha kalai cholli varavadu illai, which implies some natural way of expression or expressing itself, some movie depicts when two young male and female were left ashore a beach try to have sex when their age is appropriate try initially and shown not successful. Then, the social or society as a factor plays vital role as in morale policing or even through other cultural issues. Freud views could reflect experimental conditions or of un-inhibited behaviours and deduced further. Even before I saw my would be wife, my brother saw her and said I would say ok as she is very familiar to one of our grand mother. Sometimes people opt for similar and sometimes for dis-similar in looks and behaviour, as I would say in match making god would have the final say, one way we behave how our genes would behave, our thoughts, as a I postulate behave in similar way thus survival the fittest strategy are made before hand under current prevailing conditions pointing to future progress...social norms in general are collections of all such choices in general... one of a reason for our people to go for early marriages was to channelize sexual desires and put the children almost under controlled conditions or watch, for countries like India with such population size more research is required with modern time pressures... in villages sex is spoken bit openly, at appropriate age children learn, although they might have conceived wrong notions and fear and so on...

__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (12)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

K. Loganathan

unread,
Nov 6, 2014, 11:23:32 PM11/6/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

காமத்தியற்கை: ஓர் சைவப் பார்வை

 

முனைவர் கி. லோகநாதன், 25-10-14

 

இடுகை 8

 

சுமேருத் தமிழ் எனும் முதற் சங்கத் தமிழ் காலத்திலேயே நந்நெறி யாதாக இருக்கவேண்டும் என்று ஆய்ந்த சூருப்பாக்கின் ‘நெறி” (கி, மு 3000) எனும் நூலில் பெரிதும் விசார்க்கப்படும் விசயமாக இருப்பது இந்த அகத்திணையும் அதனை ஒட்டி எழும் புறத்திணையுமாகும். மேலான தத்துவச் சிந்தனை என்னும் உகஹ்திணையும் இல்லாமல் இல்லை. உகலத்தில் நடப்பனவற்றைக் கற்று மெய்யறிவு வளர்த்தால் அகத்தே ஞானத்தெளிவு தோன்ற கண்கள் சுடரும் என்று கூறி ஒருவனுக்கு தேசித் திரு எவ்வாறு அமைகின்றது என்றும் கூறுகின்றார்.

 

இதுவே தொய்வுறாது வளர்ந்து கடைச்சங்கத் தமிழாகச் சிறந்து நமக்கு திருவள்ளுவரின் திருக்குறளையும் தந்துள்ளது. அங்கு வருவதே மிக நுட்பமான பல நுழைவுகளைக் கொண்ட  இல்லறம் துறவறம் பற்றிய பல குறட்பாக்கள். இவற்றின் விரிவே அழிவிலுண்மை கூறும் இல்லறச் சாதனம் எனும் சாதனவியல். அங்கு இல்லறவாழ்க்கை அன்பினை வளர்த்து முடிவில் அன்பேத் தானாகி முடிவில் இறைவனோடு ஒன்றித்து ஏகனாகி இறைபணி நின்று வீடுபேறு உறுதல் அமைகின்றது என்று விளக்கப்படுகின்றது. ஓர் ஆணும் பெண்னும் திருமணம் செய்துகொண்டு காமம் மகிழ்ந்து குழந்தைகளைப் பெற்று பெற்றோரியம் வளர்த்து தன் குழந்தைகட்கு மாத்திரம் அம்மையப்பர் ஆகுவதல்லாது உலகில் அனைவருக்கும் அம்மையப்பர் ஆகி இறைவனை அணுகுதல் அமைகின்றது என்ற விளக்கமும் உண்டு,

 

சிறப்பான இல்லறம் எது என்று வரும்போது திருவள்ளுவரேக் கூறிவிடுகின்றார் : அன்பும் அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்று.

 

இதனை நாம் சைவச் சிந்தனையோடு ஒப்பிட்டுப் பார்க்க, சிவதத்துவங்களாகிய நாதமும் விந்துவும் ஓர் குடும்ப வாழ்க்கையில் வெளிப்பட்டு நர்த்தனம் ஆட, அங்கு விந்துவின் வழி அன்பும் நாதத்தின் வழி அறனும் உடைத்தாகும் என்று கூறலாம்.

 

ஆனால் இவ்வாறு நாதமும் விந்துவும் சம அளவில் வெளிப்பட்டு விளையாடும் இல்லறம் சுழிமுனை நாடிச் செலவின் இல்லறம் என்பர் திருமூலர் போன்ற சித்தர்கள், இங்கு தான் காமத்தின் வழி ஈட்டப்படும் காமக் குண்டல்னியாகிய காமப்பால் ஞானக் குண்டலினியாகிய கானற்பால் என  மடைமாற்றம் அடைகின்றது என்று குறிப்பாக உணர்த்துவர்.

 

இது பொருந்துவதே, நல்லவோர் இல்லறமும் இதுவே. ஆனால் எல்லா இல்லங்களும் இப்படி இல்லையே. மேலும் இந்த நாடிகள் பிங்கலநாடி இடகலைநாடி சுழிமுனை நாடி என்றும் கடைசியாக மேரு அல்லது குருநாடி எனப்படும் முடிவான நாடியும் இருக்கின்றதே?

 

சுழிமுனை நாடியில் இல்லறம் அனபும் அறனும் உடைத்து என்றால் பிற நாடிகளின் அமையும் இல்லறங்கள் எவ்வாறு அமையும்?

 

இந்தக் கேள்வியொடு இதுவரை திருவள்ளுவருக்கு மேலே செல்லாததை மாற்றி நாம் இங்கு ‘இல்லற வகையியல்’ என்பதைப் பற்றி விரிவாக விசாரிக்க இருக்கின்றோம். ஏற்கனவே மிக நுட்பமாக ஏரணவியல் சான்ற முறையில் விளக்கியுள்ளதையே இங்கு இன்னும் தெளிவாகவும் எளிமையயகவும் விளக்க முற்படுவோம்

 

ஆதிக்க அடக்கக் குடும்பங்கள்

 

 

சுழிமுனை நாடிச்செலவில் அமையும் இல்லறம் அன்பும் அறனும் உடைத்தாக இதில் பெண்ணின் வழி அன்பு மேம்பட்டு நிற்க ஆணின் வழி அறம் மேம்பட்டு நிற்க, இங்கு இவ்வகையில் விந்துவும் நாதமும் இணைந்து விளையாடும் இடமாக குடும்பம் அமைகின்றது.

 

ஆனால் இவ்வாறு இல்லாது இடகலை பிங்கலை போன்ற நாடிகள் மேம்பட்டு இருந்தால் எப்படிப்பட்ட குடும்பங்கள் அமையும் என்ற கேள்வியை எழுப்ப இங்குதான் ஆதிக்கக் குடும்பங்களும் அதற்கு எதிரான அடக்கக் குடும்பங்களும் தோன்றுகின்றன என்று தெளிவாகின்றது.

 

பொதுவாக நாத தத்துவம் மிக்கிருக்க ஆதிக்க குடும்பமும் விந்து தத்துவம் மிக்கிருக்க அடக்கக் குடும்பங்களும் அமையும் என்று கூறலாம்.

 

இங்கு நாதத் தத்துவம் பெண்ணின் பால் மிக்கிருந்தால் பெண்ணாதிக்கமும், ஆண்பால் மிக்கிருந்தால் ஆண் ஆதிக்கக் குடும்பங்கள் அமையும். இதே போல, மென்மையின் விந்து பெண்ணின் பால் மிக்கிருந்தால் இயலபான அடக்கப் பெண் அமைய ஆணின்பால் அப்படி இருந்தால் அவனும் அடக்கமாகி தலமைத்துவம் இன்றி இருக்கபோய் அடக்கக் குடும்பம் உருவாக காரணமாகின்றது..

 

இவை எவ்வாறு அமைகின்றன?

 

இவை பிறப்பின் வினோதங்கள் எனலாம். நாதம் மிக்கிருக்க விந்து குறைந்திருக்க உருவாகும் கரு ஆணாக பிறப்பெடுக்கும். இங்கு இயல்பாகவே விந்துப்பசியெனும் காமவேட்கையோடு ஆதிக்கம் எனும் நாதப்பண்பும் இருக்கும். மனவுறுதி காவல் தரும் தன்மை பொருளீட்டும் திறன் போன்றவை இதனோடு வர, விந்து மிக்கிருக்கும் பெண்ணிற்கு உகந்த துணையாகின்றது. இங்கு உடம்பில் இவ்வாறு இருப்பதொடு ஆன்மாவில் பதியும் நாதவிந்துக்களில் நாதமே மிக்கிருக்கிருந்தால், இயல்பாக இருக்கும் தலமைத்துவம் கெட்டு ஆதிக்கவெறியாக மாறி மனைவியையும் குழந்தைகளையும் அடக்கி ஒடுக்கி ஆள்வதே இயல்பாகி விடுகின்றது. இத்தகைய இல்லங்களே ஆணாத்திக்க இல்லங்கள் ஆகும்.

 

இனி விந்து மிக்கிருந்து நாதம் குறைந்திருக்க உருவாகும் கரு பெண்ணாக வளர, இயல்பாகவே நாதப் பசியின் காமவேட்கையுடன் அந்த உயிர் பிறக்கும் வளரும். ஆனால் ஆன்மாவில் அளவிற்கு மீறி நாதமே அதிகமாகி ஆட்சி செய்தால் இந்த உயிர் பெண் உடம்பில் ஆதிக்க வெறியின் நாதக் கூறுடன் விளங்குவாள். இங்கு ஒன்று மனைவியின் ஆதிக்கம் பொறுக்காது குடுமபம் உடையும் அல்லது ஆண் விட்டுத்தர பெண்ணாதிக்க குடும்பம் அமையும்.

 

இனி ஆணாகப் பிறக்கும் உயிரின் அகத்தே ஏதோ ஓர் காரணம் பற்றி விந்துவின் ஆட்சி அதிகரித்தால் ஆண்மைக்குரிய தலமைத்துவ உறுதியில்லாத அடக்கத்து ஆண் ஒருவன குடும்பத் தலைவனாக அமைய, ஓர் அடக்கக் குடும்பம் உருவாகின்றது.

 

இது பல சிக்கலகளை எழுப்ப சில சமயங்களின் மனைவி என்பாள் தனது சுயமாகிய அடக்கத்தை உதறித் தள்ளிவிட்டு தனது நாதத்துவத்தை வளர்த்து குடும்பத்தில் இல்லாதுபோய்விட்ட ஆதிக்க நிலையை சரிசெய்ய முனைவதும் உண்டு.

 

இப்படி இன்னும் பல வகையான குடும்பப் பிரச்சினைகள் உண்டு. இவையெல்லாம் ஆன்மாவில் இடகலை பிங்கலை நாடிகளின் தாக்கத்தால் வருவன.

 

இத்தகைய திரிபுகள் இல்லாதவையே சுழிமுனை நாடிச் செலவின் குடும்பங்கள். இவை அன்பும் அறனும் செவ்வே இயங்கும் குடும்பங்கள் ஆகும். ஆனால் இங்கும் பலவகையான குடும்பங்கள் உண்டே?

 

அவை எவ்வாறு அமைகின்றன என்பதை பார்வைகள் வழியாக அடுத்து நாம் காணவிருக்கின்றோம்

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

K. Loganathan

unread,
Nov 8, 2014, 11:15:07 PM11/8/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

காமத்தியற்கை: ஓர் சைவப் பார்வை

 

முனைவர் கி. லோகநாதன், 25-10-14

 

இடுகை 9

 

காமவேட்கை ஈர்க்க ஓர் ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் விழுந்து சுழிமுனை நாடிச் செலவின் நாதமம் விந்துவும் ஆட்சி செய்யும் வாழ்க்கை வாழ்ந்தால் அன்பும் அறனும் ஒருங்கே ஆட்சி செய்யும் வள்ளுவக் குடும்பம் அமையும் என்று கண்டோம். ஆயினும் இவ்வாறு இல்லாது இடகலை பிங்கலை நாட்டங்கள் மேம்பட்டிருக்கும் ஆணும் பெண்ணும் இனைந்து வாழும் வாழ்க்கை ஆணாதிக்க அல்லது பெண்ணாதிக்கக் குடும்பங்களாக மற்றும் ஆணடக்க பெண்ணடக்க குடும்பங்களாகத் திகழும் என்றும் கண்டோம்.

 

இனி இல்லற வகையியல் எனும் ஓர் புதிய ஓர் முறையியல் வழி குடும்பங்க்ளை அலச முற்படும் நாம். இவற்றை ‘ஆதிக்கப் பார்வை” எனும் கோட்பாட்டின் வழியே வகைப்படுத்த விருக்கின்றோம்

 

அழிவிலுண்மை எனும் பெருநூலின் தனிச் சிறப்பே பார்வைகளை வகைப்படுத்தி  அவை புதைவடுக்காக இருப்பதையும் விளக்கி வாழ்க்கையை ஆய்வதேயாக,  பார்வைகள் பொறிலியப் பார்வை நூலியப் பார்வை நுதலியப் பார்வை என்றும் இன்னும் மேலான பல பார்வைகளாகப் பல உண்டெனக் கூறி இவை பொறிலியப் பார்வையையே முதற் பார்வையாகக் கொண்டு ஏனைய பார்வைகள் இதனுள் ஒன்றுக்குள் ஒன்றாகப் புதைந்து இருப்பதை நிறுவி  வாழ்வியல் ஆய்வு செல்கின்றது.

 

இப்பார்வைகளில் யாது மேம்பட்டு நின்று கணவனின் மனைவியின் ஆளுமையை நிறுத்துகின்றதோ அதுவே ‘ஆதிக்கப் பார்வை” என்கின்றோம்

 

இங்கு அனபும் அறனும் ஒருங்கே இலங்கத் தரும் நாதமும் விந்துவும் ஆகவே வாழும் சிவலிங்கமே இல்லத்தைச் செலுத்தும் வகையில் தெய்வங்களின் அருள் இருந்தாலும். எந்தப் பார்வை ஆதிக்கப் பார்வையாக விளங்குகின்றதோ அதற்குத் தகவே அமைகின்ற குடும்பத்தின் பண்புகள் விளங்கும் என்பதாம். அவ்வகையில் முதற்பார்வையும் ஐம்புலங்களின் நுகர்ச்சியே நுகர்ச்சி என்றவாறு வாழும் தம்பதியர் உருவாக்கும் இல்லறம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை முதலிற் காண்போம்

 

 

பொறிலியக் குடும்பம்.

 

இவை எல்லாம் அழிவிலுன்மை இல்லறச் சாதனம் விளக்கும் சூத்திரம் 13-இல் மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் விளக்கப்பட்டுள்ளது. அதில் கீழ் வரும் எடுத்துக்காட்டு பொறிலியக் குடும்பத்தின் இலக்கணங்களை விளக்கும் ஒன்றாகும்

 

 

13.3.1

 

பொறிலியப் பார்வைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் சகலர்களாகிய ஆன்மாக்கள், உள்ளுணர்வாகப் பிற மேலான பார்வைகளையும் பெற்றிருப்பதின், இறைநம்பிக்கை வழிகாட்ட, கணவன் மனைவி என்றாகி அதன்வழி நாதவிந்துப் பசிக்கள் நீங்கி அர்த்தநாரீ வடிவத்தொடு சாலோகப் பதவியேப் பெற்று இனிதே வாழ்வர் என்பதாம். வாழ்க்கையை நிறுத்துகின்ற பார்வை பொறிலியப் பார்வையே யாக, அதனின் ஐம்புலன் நுகர்ச்சிக்கு ஆளாகும் விடயங்களே பொருளாக இவர்கட்குப் பட, அசுத்தமாயா காரிய உலகிலேயே மயங்கி வாழ்வர் என்பதாம். இதனின் நாதத்து ஆண்மகன் வீரம் தீரம் அதிகாரம் பொருள்வளம் என்பவற்றைக் காட்டி விந்துவின் பெண்டிர்களத் தன்பால் ஈர்த்து அணைத்து புணர்ந்து மகிழ முயற்சிப்பவர்களாக விளங்க, விந்துவின் பெண்டிர்கள் வனப்பு நளினம் அடக்கம் அணிநலம் ஆடை நலம் நறுமணம் மென்மை நாணம் இயல்பான அச்சம் என்பவற்றால் நாதத்து ஆண்மகனை மயக்கி வசித்து அணைத்து புணர்ந்து தம் நாதப் பசி போக்குவர் என்பது. சுட்டுக்காலவுணர்வு கழன்றிடா வகையில் வாழ்வதின், வீடுபேற்றின் உணர்வு திரிபெய்தி சந்தான விருத்தியின் வழி அழியாது வாழ்தல் என்பதாக இவர்கட்கு மகட்பேறு மிகவும் வேண்டியவொன்றாகின்றது. கற்புநெறி பிழையாது இவற்றை எல்லாங் குறைவற அடையவேதான் இறுதியில் இறைவனைப் பற்றிய எண்ணங்கள் எழுந்து சமய ஈடுபாட்டை மிகுக்கும் என்றவாறு. அறநெறி என்பது இவர்கட்கு கற்புநெறியாகவே இருக்கும்

 

இங்கு சில விளக்கங்கள் தேவைப்படலாம். சைவ சித்தாந்தத்தின் கலைச் சொற்கள் பலருக்கு சற்றுப் புதுமையாக இருக்கலாம்.

 

இங்கு முதலில் சகலர் என்பார் யார் என்று விளக்க வேண்டும். இது சைவ சித்தாந்தம் பகரும் அநாதிப்பொருட்களாகிய பதி பசு பாசம் என்பவற்றில் பாசங்களாக வரும் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்களையும் உடையவர்களே ‘சகலர்’ எனப்படுவர். இந்த ஆளுமை வகையியல் ( personality types)  திருமூலர் காலத்திலிருந்தே இருக்கும் ஒன்றாகும்

 

இனி இவர்களில் பலர் பொறிலியப் பார்வையேப் பார்வை என்றவாறு பூதவாதி எனும் உலகாயதர் மற்றும் தேகான்மவாதியாக வெல்லாம் இருப்பார்கள் என்றபோதிலும் பலர் நூலியப் பார்வை கனவுகள் காணத்தரும் நுதலியப் பார்வை போன்ற பார்வைகளையும் ஒரளவு உடையவர்களாக ஆனால் ஆதிக்கப்பார்வையாக பொறிலியப் பார்வையையே கொண்டிருப்பவர்கள் ஆகும்.

 

இவர்களின் கற்றளி மாயாகாரியப் பொருளுலகேயாக, இவர்கள் காண்பது எண்ணுவது வேட்பது விரும்புவது எல்லாம் பௌதிகப் பொருள் உலகேயாகும். தெய்வவுலகு போன்ற அதிருட்ட (பொறிலியப் பார்வைக்கு வாராத) உலகு போன்றவை உண்டெனப் பட்டாலும் அவர்கள் கருத்தில் மேலோங்கி நிற்காது போம்.  அவை இல்லையென இவர்கள் மறுக்காது போனாலும் அவர்கள் அவற்றை பின் தள்ளியே வைப்பர் என்பதாம். வாழ்க்கையில் பெரும் துக்கங்கள் துயரங்கள் வரும்போதே அவற்றின் நினைப்பும் வரும்

 

ஆயினும் இங்கு மிக முக்கியமாக காணவேண்டியது இவர்கட்கு உடலின்பமாகிய காம இன்பமும் அதன்வழி வரக்கூடிய சந்தான விருத்தியுமே வாழ்க்கையில் பொருணமையாக ( existential meaning)  விளங்கும். அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றில் வீடுபேறு என்பது இவர்கட்கு தோன்றாவொன்றாக விளங்கும். அப்படியேத் தோன்றினாலும் அது முக்கியமான ஒன்றாகப் படாது.

 

காலவுணர்விலிருந்து இவர்களால் விடுபட முடியாது போக, முக்தி கருத்தே திரிபுற்று  ‘மீண்டும் பிறவாமை’ அடைய வேண்டும் என்பதில்லாது ‘என்றும் வாழ்தல்” எனும்  immortality  ஆகிவிடும். தான் என்றும் வாழ்வேண்டும் எனும் இந்த விருப்பம், மரணம் உண்டு அது நிச்சயம் என்ற கருத்தோடு வந்து சந்தானவிருத்தியின் வழி தான் என்றும் வாழ்தலை அடைய விரும்புவர் என்பதாம்.

 

ஆக இத்தகையோருக்கு மகட்பேறு மிகவும் தேவைப்படும் ஒன்றாகிட, அது அமையாத போது பெரும் கலகத்திற்கு ஆளாகி தன் துணையையே மாற்றவும் முனைவர். மணமுறிவுகள் மறுமணம் போன்றவையும் மெய்யாகலாம்.

 

இன்னும் இதுபோன்ற பல இலக்கணங்கள் மேலே விரிக்கப்படுள்ளன. அவற்றை இன்னும் விரிவாக புரிந்துகொண்டால் பொறிலியக் குடும்பத்தின் இலக்கணங்கள் நலமே புரியவரும் என்பதாம்

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 

 

 

K. Loganathan

unread,
Nov 11, 2014, 7:48:13 AM11/11/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

காமத்தியற்கை: ஓர் சைவப் பார்வை

 

முனைவர் கி. லோகநாதன், 25-10-14

 

இடுகை 10

 

 மேலே பொறிலியப் பார்வையே ஆதிக்கப்பார்வையாக உள்ள சகலர் தம் குடும்ப வாழ்க்கை பொறிலியக்  குடும்ப வாழ்க்கையாக அமையும் என்று கூறி அதில் முக்கியமான கூறாக இத்தகையோருக்கு  அசுத்தமாயாக் காரியவுலகே (the physical world)  உலகாக விளங்க, சித்துப் பொருளுலகு அவர்கள் அறியாக ஓர் மறையுலகாகவே விளங்க, காலக் கழற்சியின் பிறப்பறுத்தல் எனும் வீடுபேறு கருத்து மனதில் பதியாது போக, அது ‘சாக்காட்டை வெல்லல்’ அல்லது ‘என்றும் வாழ்தல்’ (immortality)  என்பததத் திரிபுற்று விளங்கும் என்று கண்டோம். இதுவே காமத்தின் பயன் சந்தானவிருத்தி பெறுதல் என்றும் தொடர்ந்து மரபுத் தொடர் விட்டுவிடாத வகையில் சந்ததிகள் அடுத்தடுத்து வருவதே மனநிறைவுத் தருவதாக அதுவே திருமண வாழ்க்கையின் பொருண்மையாகவும் விளங்கும். இதனால் மலடி மலடன் போன்றார் குமுகாய கண்ணிற்கு குறையுடை மாந்தர்களாக அவமதிக்கப்படுவர் என்பதாம். இத்தகைய மலடுகள் மணமுறிவிற்குங் காரணமாதல் உண்டு. பொதுவாக தமிழச் சமுதாயத்தில் இரண்டாவது மனைவி என்று ஒருத்தியை மணந்துகொள்ளும் வகையில் குமுகாய அனுமதியும் உண்டு. மலடியானவள் அதனை பொருத்துக்கொண்டு போதலும் உண்டு, சில சமயங்களில் அதனை வெறுத்து பிரிந்து போய் இன்னொர்ய்வ வழி மகட்பேறு மகைழ்தலும் உண்டு. கணவன் மலடன் என்றால் மண்முறிவு பெறுதலும் வேறொரு கணவனை மணத்தலும் சற்று அரிதே யாயினும் நடக்காமல் இல்லை. ஆனால் இன்றைய நவீன மருத்துவ உலகில் செய்ற்கை முறையுல் கரு தரித்தல் போன்றவை நடைமுறையில் இருக்க, இந்த காரணத்தினால் மணமுறிவு தேடுதல் குறைந்து வருகின்றது.

 

தனக்கென வரித்தல்

 

இனி முறையாக தெய்வங்களை முன்னிருத்தி பலர் முன்னிலையில் அனைவரும் அறிய சடங்கு பூர்வமாகிய திருமணத்தில் , தன்னை அணைப்பானை அந்த அணைப்பிற்கு உடன்படும் பெண் அதன் காரணமாக அவனை தனக்கே உரியவன், பிற பெண்டிற்கு அல்ல என்று வரித்து வளைத்து விடுகின்றாள். கணவன் என்பானும் அவ்வாறே தான் முறைப்படி மணக்கும் பெண்ணை தனக்கே உரிமையுடையவள் ஆக்கிவிடுகின்றான்.

 

இது காமத்தோடும் சந்தான விருத்தியோடும் வரும் உறவு நிலைகள் வாழ்க்கை நியதிகள் அறத்தாறுகள் என்றும் கூறலாம். இவ்வாறு ஒருவரை ஒருவர் தனக்கே உடமை என வரிக்க, அதுபொழுது குடும்பத்தில் சிவலிங்கம் பிரதிட்டை ஆகி ஓர் வலுவான பந்தத்தை உறுதியான குடும்பத்தை உருவாக்குகின்றது.

 

இனி இதன் காரணமாகவே கற்புநெறியும் வற்புறுத்தப்படும் என்பதாம்.  தனக்கென பிறக்கும் மகன் தன் மகனாக இருக்கவேண்டும் என்று கண்வன் நினைக்க, பிற ஆடவர்களோடு உடலுறவு கொள்ள அவன் அனுமதிக்காது அவள் கற்போடு இருக்கவேண்டும் என்று வறுத்துவான். கற்புநெறி தவறினால் மணமுறிவு நடக்கலாம் என்பதொடு கொடூரத் தாக்குதல்களும் கொலையும் நடக்கலாம். பரத்தை அல்லது பிறர் பெண்டிரை நாடும் கணவனை கடுமையாகக் கண்டிக்கவும் மனைவி என்பாளுக்கு உரிமையைத் தருவதும் இதுவே யாகும். தான் சுமக்கும் குழந்தைக்குத் தந்தையாக இருப்பவன் தனது சொத்துக்கள் பாதுகாப்பு அன்பு அக்கறை போன்றவற்றை எல்லாம் தான் பரசவிக்கும் குழந்தைகட்கே உரித்தாக வேண்டும் இன்னொரு பெண்ணிற்கு அவன் வழி பிறக்கும் குழந்தகட்கு அல்ல என்றவாறு அவள் நீதி பகர்வாள்

 

ஆழத்தின் ஆழத்தில் இத்தகைய கற்புநெறி பிறப்பறுத்தல் எனும் தத்துவக் கருத்து எட்ட முடியாது ‘என்றும் வாழ்தல்’ என்றவாறு பிறழ்ச்சி முத்தி கருத்தினால் வருவது என்பதைக் காண்க.

 

சாந்தான விருத்தியே வேண்டாம் என்றால் இந்த வரித்து சிறைபடுத்தும் போக்கும் கற்பு நெறியை மிகவும் வற்புறுத்தும் போக்கும் சிறிது தளர்வு காண்டலும் உண்டு. இனி வீடுபேறு என்பது பிறப்பறுத்தல் என்று தெளிவாக அறிந்த்துள்ள ஞான நிலையில், சந்தான விருத்தி அற்பமாகப் பட, அவர்கள் காமத்தியற்கும் ஆண் பெண் உறவும் அமையும் இல்லறத்தின் பண்புகளும் மாறு படும். அதனை நோக்கிச் செல்லும் வகையில் அடுத்து நூலியப் பாரவையே ஆதிக்கப் பார்வையாக அமையம் , அமையக் கூடிய இல்லறம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சிறிது காண்பம்

 

நூலியக் குடும்பம்.

 

இதுவும் அழிவிலுண்மை சூத்திரம் 13-இல் இவ்வாறு விளக்கப்படுகின்றது.

 

 

13.3.2

 

இனி பொறிலியப் பார்வையுடன் நூலியப் பார்வையுங் கைவல்ல பிரளயாகலர்களாகிய ஆன்மாக்கள், அசுத்தமாயா மயக்குக் கெடுத்து சுத்தமாயா வுலகின் நுழைவு பெறுவதின், அவ்வுலகில் சஞ்சரித்து மகிழ்வதிலேயே பெரிதும் ஈடுபாடு உடையவர்களாகத் திகழ்வர் என்பது,  இதனின் கலைஞர்களாக, அறிஞர்களாக ஆய்வாளர்களாக கலைஞானப் பெருக்கத்திலேயே இன்பங் காண்பவர்களாகத் திகழ்வதின், இவ்வாறாக எழும் நாதவிந்துப் பசிக்களை போக்கும் திறத்தினர்களையேத் தனக்கு உகந்தத் துணைகளாகத் தேடி இல்லறம் அமைப்பர் என்பது. பல்வகை கலைத் திறன்களை விந்துவின் வெளிப்பாடாக மகளிர் காட்டி நாதத்து ஆண்களை மயக்க, சிந்தனைத் திறன் எனும் நாதத்திறனைக் காட்டி ஆடவர்கள் பெண்டிர்களை மயக்கி மணம் புரிவர் என்பதாம். சுட்டுக்காலவுணர்வொடு, நூலியப் பார்வையின் குறிப்புக்கால வுணர்வும் காலவுணர்வுகளாய் நிற்பதின், அதனின் காலக் கழற்சி கூடுமொன்று எனும் அறிவு திகழவுங் கூடும் என்பதின், வீடுபேற்றினை அடைவது என்பது சந்தான விருத்தியின் அழியாது நிற்பது என்ற எண்ணங் கழன்று அழியாவுண்மைகளைப் பெறுவது என்ற நிலையில் தெளிவுறுவர் என்பதாம். இதனின் திருமண வாழ்ககையில் பட்டாலும், சந்தான விருத்தியில் அதிகம் பற்றிராது என்பது. இதனின் அர்த்தநாரீ வடிவம் இவர்கட்கு சாமீப்பியமான தொன்று என்பதுமாம. இதனின் மகட்பேறு வேண்டா மனைவாழ்கை இவர்கட்கு அமையக் கூடும் என்றது.

 

இங்கு பிரளயாகலர் என்பார் சைவ சித்தாந்த ஆளுமைக் கோட்பாட்டின் படி மும்மலங்களில் மாயாமலம் கழன்று கன்மம் ஆணவம் ஆகிய மலங்களோடு வாழ்பவர்கள் ஆகும். மாயாமலம் என்பது இங்கு சித்தமாயை ஆகும்- பல மருள் காட்சிகட்கு ஆளாகி பொய்யினையும் மெய்யெனைக் கொண்டு திணரும் பண்பாகும். இதனை விட்டு நீங்குவது என்பதும் ‘மெய்ப்பொருள் காண்பதே அறிவு” என்று மெய்ம்மையை பெரிதும் மதித்து அதனையேத் தேடி வாழ்வதாகும்.

 

இனி இவர்களின் ஆதீக்கப் பார்வை நூலியப் பார்வையாக இருக்க காலவுணர்வில் மூலக் காலவுணர்வாகிய குறிப்புக்கால வுணர்வும் இருக்க (temporalty, psychological time)  காலக் கழற்சி எனூம் கருத்து புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகத் திகழ, வீடுபேற்தறை காலக் கழற்சி செய்து  பிறப்பறுத்தல் 

என்று புரிவு இருக்க, இதனின் பிறழ்ச்சி வடிவாகிய ‘என்றும் வாழ்தல்’ ( immortality) இல்லாது போம் என்Raவாறு. இதனால் சந்தான விருத்thiயை வற்புறுத்துவதும் அவ்வளvu வல்லிதாக அமையாது. மகட் பேறு இlலையென்றாluம் அது பெருங் குறையாகp படாதுபோக, அதனால் மணமுறிவு போன்றவை மெய்யாகாது போம் என்றவாறு.

 

இவர்கட்கு நூலியப் பார்வை கைவர, அதுவே ஆதிக்கப்பார்வையாக அமைய சித்தும் அசித்துமாகிய உலகே இவர்கள் தம் புவனமாக விளங்கும் . இந்த புவனமே நான்முகன் நான்முகி ஆதிட்டித்து நிற்கும் சுவாதிட்டான கற்றளியாகும்

 

நான்முகி என்பது பிறகால வழக்கு. முதற் சங்கக் காலத்தில் இவள் நிடபை என்றும் சரஸ்வதி என்றும் அழைக்கப்பட நான்முகன் ஏண்லீல் என்று அழைக்கப்பட்டான். அன்றும் சர்ஸ்வதி கலைவாணியாகவே போற்றப்பட்டாள,

 

இந்த தெய்வங்கள் ஆட்சி செய்யும் இல்லம் ஓர் கலைக்கூடமாகவே விளங்கும் இயல்பிற்று. மகட்பேறு அமையாவிட்டாலும் கலைஞானக் குழவிகளாக தத்தம் கற்பனைக் கருவறையில் உருவாக்கி ஈன்றெடுத்து கதைகளாக கவிதைகளாக ஞானக் கட்டுரைகளாக நூற்களாக வெல்லாம் உலவவிட்டு என்றும் வாழுமா படைத்து மகிழ்வர்.

 

நூலியக் குடும்பம் ஓர் கலைக் கோயிலாகவே  கல்லூரியாக விளங்கும் என்பதாம். காமவின்பம் அதிகம் போற்றப்படாது போனாலும் மதிக்கு மதி நடக்கும் கருத்துப் புணர்ச்சிகளும் பேருவகைத் தரும் குமுகாய கலவிகலாம். இவற்றின் பல வகையான மனநிறைவு மனநிறைவு அடைவர் என்பதாம் இந்த மனநிறைவே அடிப்படை ஊக்கமாகவும் அமையும்

 

தொடரும்

 

உலகன்

 

 

 

K. Loganathan

unread,
Nov 12, 2014, 6:27:20 AM11/12/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

காமத்தியற்கை: ஓர் சைவப் பார்வை

 

முனைவர் கி. லோகநாதன், 25-10-14

 

இடுகை 11

 

 இதுவரை நாம் பொறிலியக் குடும்பத்தையும் நூலியக் குடும்பத்தையும் கண்டுள்ளோம். இவற்றின் அடிப்படை வேற்றுமைகளையும் சிறிது தெளிந்த பிறகு ஓர் உண்மை மெய்யாகுவதையும் காண்கின்றோம். கட்டுப்படுத்துவதற்கும் அறத்தின் பால் ஊய்விப்பதற்கும் மிகவும் கடினமான காமவேட்கை ஆதிக்கப்பார்வை ஆழமாக, பௌதிகவுலகோடு(physical world) சித்துலகும்( the world of intelligent entities)  அறிவிற்பட. இன்பம் என்பது உடலுறவின் காமவின்பமாக இருப்பதோடு கலையுணர்வின் சித்தின்பமாகவும் ( aesthetic bliss) ஆய்விடுகின்றது. இதனால் காமவேட்கையின் வன்மையும் ஒருவாறு குறைகின்றது. ஆக ஆதிக்கப் பார்வை ஆழமான ஒன்றாக அமைந்துவிட்டால உடலுறவின் காமவின்பம் வேட்பது குறைந்து வர, உயிரோடு உயிர் கலந்து மகிழ்வதின் சித்தின்பம் கூடி வரும் என்பதையும் காண்கின்றோம்

 

காமவேட்கையக் கட்டுபடுத்தி நல்வழிப் படுத்தும் மருந்தாக ஆழப் பார்வைகளே அமைகின்றன.

 

இது கணவன் மனைவி உறவிலும் அமையும் ஒன்றாம். நூலியப் பார்வை கைவந்தார்கட்கு பௌதிக உலகோடு அறிவுடை உணர்வுடை சித்துப்பொருள் உலகும் உலகென அறிவிற்பட்டு நிற்க, உடல் ஆலிங்கனத்தின் காமக் குண்டலினி ஈட்டி மகிழ்வது குறைந்து வர, சித்தோடு சித்துப் புணர்வின், உயிரோடு உயிர் கலப்பதின் வரும் குண்டலினி ஈட்டமும் மகிழ்ச்சியை உடல் நலத்தை மன நலத்தைத் தருவதாக அமையும்

 

வாத்சாயனரின் காமசூத்திரம் பொறிலியப் பார்வையின் பல்வேறு ஆலிங்கனத்தை விளக்கி நிற்க, திருவள்ளுவரின் காமத்துபால் சித்துப்பொருள் உலகின் சித்தோடு சித்து புணர்ந்து குண்டலினி ஈட்டுவதை  விளக்கும்.

 

மேலும் இங்கு ‘கற்பு” என்பதின் பொருளும் தனக்கென வரித்து ஒருவனுக்கு ஒருத்தி எனும் நெறியும் ஓர் மாற்றம் காண்கின்றது. உடல்வழி புணர்ச்சி இல்லாதுபோக, உள்ளத்துப் புணர்ச்சிகள் மெய்யாகும் போது ஒருத்தி பல கலைஞர்களுடனும் ஒருவன் பல கலைவாணிகளுடனும் மெய்தொட்டுப் பயிலாது சித்தோடு சித்து கலந்து புணர்ந்து குண்டலினி ஈட்டி மகிழ்வதும் மனநிறைவு அடைவதும் நடக்க கற்பிற்குப் புறம்பாக அறத்திற்குப் புறம்பாக ஒழுக்கம் நடந்துவிட்டது என்பதிற்கில்லை. மெய்தொட்டுப் பயிலாது உள்ளத்துப் புணர்ச்சியின் குண்டலினி ஈட்டி மகிழ்வது கணவன்.மனைவி என்பதொடு அதற்கு அப்பார்ப்பட்டாருடனும் கலந்து மகிழ்வது கற்பிற்குப் புறம்பானது ஆகாது போய்விடுகின்றது.

 

இதன் வளர்ச்சியே ஓர் ஆன்மா பரவான்மாவாகிய இறைவனோடு இணங்கி குண்டலினி ஈட்டி மகிழ்வதும் ஆகும். ஓர் ஆன்மா இப்படிச் செய்ய அது கணவன் இருக்க இறைவனோடு புணர்ந்துவிட்டாள் கற்பு நெறி பிறழ்ந்து விட்டாள் என்று கூறமுடியாது போகின்றது. அதேபோல ஒருத்தி இவ்வாறு இறைவனோடு ஒன்ற, இன்னொருத்தி அவ்வாறு அதே இறைவனோடு ஒன்ற முடியாது என்பதில்லை. இறைவனை தனக்கென வரித்தல் இல்லை, அவ்வாறு செய்வதும் முறையாகாது.

 

இனி மேலே உயர்ந்த பக்குவத்தின் நிலை இவ்வாறு இருக்க, அதற்கு நெருங்கும் ஓர் படியாக அமைவதே நூலியப் பார்வைக்கு அடுத்து வரும் நுதலியப் பார்வையின்  அமையும் குடும்பங்கள் ஆகும்

 

நுதலியக் குடும்பம் 

 

அழிவிலுண்மை சூத்திரம் 13ன் மூன்றாம் படிமெய் இவ்வாறு இதனை விளக்கும்

 

 

13.3.3

 

இனி இவ்விருப் பார்வைகளோடு கடப்புரு காண்திறத்தின் நுதலியப் பார்வை கைவல்ல, ஆன்மாக்கள், சுத்தமாயா வுலகினை செலுத்தும் மந்திரவுலகு நுழைவு பெற்றவர்களாக விளங்குவதின், தெய்வங்களாகியப் பல்வேறு புராணவுருக்களையும் அவற்றின் திருவிளையாடல்களையும் மறையாக உணர்வதன்றி நிதர்சனமாகக் காணும் திறத்தினர் என்பதினும், இறை நம்பிக்கையே வாழ்ககையின் உறுதி நம்பிக்கையாகக் கொண்டு வாழ்வர் என்பதாம். இதனின் தெய்வங்களைப் பற்றி எவ்வித ஐயப்பாட்டுடனும் அவநம்பிக்கையுடனும் திழாதவர்களையே தனக்குகந்த துணையெனக் கொண்டு இல்லறம் அமைப்பர் என்பது. உலகத்து நிகழ்ச்சிகளை எல்லாம் தெய்வங்களே தத்தம் திருவிளையாடல்கள் வழி நிறுத்துகின்றன என்பதை நன்றாக அறிந்தவர்களாக, தெய்வ உபாசனையே வேண்டியது என்பதாக  அதனை மையமாகக் கொண்டே வாழ்க்கை அமையும் என்பது. தெய்வங்களை நிதர்சனமாகக் கண்டு மகிழும் பேற்றின் இவர்கள் அத்தெய்வங்களோடு  சாரூப்பியமாக நிற்கும் பண்போடு திகழ்ந்து அதனின் தெய்வகுணங்களை வெளிப்படுத்தி ஞானக் குரவர்களாக வாழ்ந்து மக்களை நல்வழி படுத்துவர் என்பதாம். நல்ல சித்தர் பெருமக்களாக உயரும் இவர்கள் மக்களது உடற்பிணி மனப்பிணி என்பவற்றைப் போக்கி அவர்களை நல்வழிப் படுத்துவதிலேயே இயல்பான ஆர்வங் காட்டுவர் என்பதின், அர்த்தநாரீ வடிவத்தை சாரூப்பியமாக மகிழ்வர் என்பது. தெய்வ உபாசனையும் மக்கட் தொண்டுமே இவர்கட்கு வாழ்க்கையாக அமைய, இவற்றின் வேறாகிய பிறப்பிற வேட்கைகள் எழாதொடுங்கும் என்றவாறு.

 

நுதலியப் பார்வை எனினும் நெற்றிகண் பார்வை எனினும் ‘கடப்புரு காண் திறன்’  ( distance visions, transductive perceptions)  எனினும் ஒக்கும். இதுவும் அனைவருக்கும் ஏற்கனவே இருக்கும் ஓரளவு வெளிப்பட்டும் இருக்கும்  ஒன்று தான். இரவில் நலமே உறங்கும்போது கனவுக் கண்டு மகிழ்வது இந்தப் பார்வையின் ஓர் கூறே, இதுவே வளர்க்கப்பட்டு விழிப்பு நிலையிலும் கனவு காண்பது சாக்கிரத்தில் சொப்பனாவத்தைப் பட்டால் அதுவே நுதலியப் பார்வை ஆதிக்கப்பார்வையாக இருக்கும் நிலையாகும்

 

இங்கு பொறிலியப் பார்வை மறுப்பது அல்லது சிலைகள் வடிவிலேயே காண்பதாகிய தெய்வங்களை, நூலியப் பார்வையினர் மறுக்காது உண்டென அங்கீகரிக்கும் ஆனால் நித்ர்சனமாகக் காணாது கலைஞானமாகவே கண்டு மகிழ்வது கடந்து நிதர்சனமாக தெய்வங்களை பல வடிவங்களில் கண்டு இந்த நூதலியப் பார்வையினர் மகிழ்வது நடக்கும். இதனால் இவர்கள் சித்தர்கள் போன்றவர்கள் ஆகின்றனர்., இதனால் சாதாரண மக்களிடமிருந்து சிறிது வேறுபடுகின்றனர்.

 

இவர்கட்கு தெய்வங்கள் உண்டா இல்லையா என்ற கேள்வியே இல்லை. நிதர்சனமாக தனக்கும் மற்றும் ஏனையோருக்கும் நடக்கும் அனைத்தும் தெய்வங்களின் திருவிளையாடல்களாகவே காணும் இவர்கட்கு தெய்வங்கள் இல்லையெனப் படவே படாது, நிதர்சனமாக் காணும் போது உண்டா இல்லையா என்ற கேள்வி எப்படி எழும்? காணவரும் மரம் செடி கொடிகள் மலை ஆறுகள் ஆடு மாடுகள் போல் தெய்வங்களும் மந்திரசொரூபிகளாக இருப்பதை அவர்கள் அறிவர்.

 

இவர்கட்கு இதனால் காமம் இல்லாதுபோய்விடாது. திருமணம் செய்து கொண்டு காமம் மகிழ்ந்து குழநதைகளையும் பெற்று குடும்பிகளாக இருப்பதும் உண்டு. சிலர் இந்த சித்தி கைவர இயல்பாகவே குடும்ப வாழ்க்கையைத் துறந்து  ஊரின் ஒதுக்குப் புறம் சென்று துறவு வாழ்க்கை வாழ்வதும் உண்டு.

 

எப்படி இருப்பினும் தெய்வங்களின் சந்நிதானத்தில் யாண்டும் இருப்பதால் காமவிகாரங்கள் தோன்றாதும் காமவெறிகள் தோன்றாதும் போய்விடுவது உண்டு. தனக்கு நடப்பதிலும் பிறருக்கு நடப்பதிலும் உலகின் நிகழ்ச்சிகளிலும் தெய்வங்களின் திருவிளையாடல்களின் அவற்றில் இறையருளையும் கண்டு கண்டு உவக்கும் இவர்கட்கு காம வெழுச்சிகள் தானேயாய் அடங்கி விடுவதும் உண்டு.

 

பொறிலியப் பார்வையின் காமஅன்பு நூலியப் பார்வையின் காதலன்பு இங்கு நுதலியப் பார்வையின் கருணையன்பாகவே  உயர்ந்துவிடும் என்பதாம். இது காமத் தகனத்தோடு வரும் என்பதை அடுத்து சற்று விரிவாகக் காண்போம். நுதலியப் பார்வை  காம தகனப் பார்வைதானே? எப்படி என்பதை அடுத்துக் காண்பம்

 

தொடரும்

 

உலகன்

K. Loganathan

unread,
Nov 12, 2014, 9:26:12 PM11/12/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

காமத்தியற்கை: ஓர் சைவப் பார்வை

 

முனைவர் கி. லோகநாதன், 25-10-14

 

இடுகை 12 (கடைசி)

 

Divine Eros and Thanatos

 

நுதலியப் பார்வையின் நுதலியக் குடும்பம் கருணையன்பின் ஓர் தெய்வீகமான குடும்பமாகவே உயரும் என்று கண்டோம்  மேலும் நுதலியப் பார்வை நெற்றிகண் பார்வையும் ஆக காமதகனம் நடக்கலாம் என்றும் கண்டோம் ஆயினும் காமவேட்கை என்பது சாதாரண முறையில் அழிக்க முடியாத ஒன்று. ஆன்மா இறைவனை அடைந்து வீடுபேறு அடையும் வரை காமவேட்கை விட்டு நீங்காத ஒன்றாகவே விளங்கும் என்று சைவம் கூறுகின்றது. கந்த புராணம் உற்பத்தி காண்டத்தில் மகாயோகியாக பார்வதியைப் பிரிந்து காமமின்றி தனித்திருக்கும் சிவன். மலர்கணை தொடுத்து காமம் எழுப்ப வரும் மன்மதனை நெற்றி கண்ணைத் திறந்து சுட்டு எரித்தபொதிலும் அவனை அழிக்கவில்லை, அவன் துணை இரதிக்கு அவன் அழியாதே இருக்கின்றவாறு வரமும் அருளப்படுகின்றது

 

ஓர் உயிர்  உடம்பெடுத்து வாழும் வாழ்க்கையில் காமவேட்கையை சாதாரண்மாக  விரதங்கள் தவங்கள் போன்றவற்றால்அழிக்க முடியாது. அது இயல்பாகவே கழன்று விழும் காலம் வரை அது ஆன்மாக்கலை அலைகழிக்கும். ஆனால் இடையே அது மடைமாற்றம் உறும். எப்படி?

 

  நீலிய வாழ்க்கையில் இறையுண்மை வலுப்பெற. மானிடக் காமம் இறைக் காமமாக மடைமாற்றம் உற வாழ்க்கையும்  பத்தி வாழ்க்கையாகி விடுகின்றது. ஆணோ பெண்ணோ பத்தி தீவிரமாக அந்த ஆன்மா இறைவனையே மணக்க விரும்பும் ஆழ்வார் அல்லது நாயன்மார் ஆகின்றது. பொதுவாக ஓர் அடியார் ஆகின்றது.

 

இந்நிலையிலேயே நுதல்விழிப் பார்வை போன்ற மேலானப் பார்வைகள் இறைவனால் அருளப்பட, விழி திறப்பு நடக்க ஆன்மா தெய்வங்களை நேராகத் தரிசித்து பத்தி பரவ்சத்தில் வீழ்கின்றது.

 

இப்படிப்பட்ட மடைமாற்றங்களை எப்படி புரிந்துகொள்வது? குறிப்பாக இங்கு ப்ராய்டின் இயல்பூக்கங்கள் என்னவாகும்?

 

அன்னாரின்  Eros  என்பதையும்  Thanatos  எனும் இயல்பூக்கங்களை மீண்டும் காண்போம்   

 

 Freud's theory assumed that behavior was rooted in biology. He proposed that instincts are the principal motivating forces in the mental realm, and held that there are a large number of instincts but that they are reduced into two broad groups; Eros (the life instinct), which covers all the self-preserving and erotic instincts, and Thanatos (the death instinct), which covers instincts toward aggression, self-destruction, and cruelty.[20]

 

பிராய்ட்  அவர்கள் இறைவன் உண்டு ஆன்மாக்களுக்கு இறைவன் பால் காமம் வரும் காதல் வரும் என்றெல்லாம் கண்டவர் அல்ல. இறைவனையேக் கண்டவர் அல்ல ஆக இங்கு நாம் அவர் அறிமுகம் செய்த கருத்துக்களை சிறிது மாற்றி  Divine Eros  என்றும்  Divine Thanatos  என்றும் அழைப்போம்.

 

இவை சைவ சமயத்தில் தெய்வகாமப்பால் என்றும் தெய்வகானற்பால் ஆகியவற்ரோடு தொடர்புடயவை என்றும் ஆகும். இவற்றிற்கு மூலமாக இருக்கும் சிவதத்துவங்கள் பரநாதம் பரவிந்துக்கள் ஆகும். ஆன்மாக்களின் தெய்வக்காமமும் பரநாதப்பசி என்று பெண்களுக்கும் பரவிந்துப்பசி என்று ஆண்களுக்கும் ஆகும்.

 

இதனால் பெண்கள் காரைக்கால் அம்மையார் ஆண்டாள் நாச்சியார் போன்று இறைவனை சிவனாக அல்லது கண்ணனாகக் கண்டு அவனுடனேயே காதலாகி திருமணக் கனாக் கண்டு வீடுபேறு அடையும் வரை அவ்வாறே வாழ்வர். ஆண்கள் அபிராமி பட்டர் போல, பல சித்தர்கள் போல அம்மையை அபிராமி என்றும் வாலைப் பெண் என்றும் கண்டு போற்றித் தொழுது அவள் நினைவிலேயே வாழ்வர். மேலும் நம்மாழ்வார் மாணிக்கவாசகர் போன்று தாமே ஓர் பெண்ணாகி இறைவனை காமுற்ரு காதலிது அவனௌஇயே மணப்பதாகௌம் காண்பர்.

 

இங்கு நடப்பது உள்ளத்துப் புணர்ச்சியேத் தவிர, மானிடர்களிடையே நடக்கும் உடற்புணர்ச்சி அல்ல.

 

ஆயினும் ஓர் கேள்வி எழுகின்றது. இந்த இறைக்காமும் இல்லாது போகாது என்றுமே ஆன்மாவுடன் இருக்குமோ? என, இல்லை இந்த இறைக்காமம் ஓர் முடிவிற்கு வரக்கூடிய ஒன்றே என்று தெரிகின்றது. யாண்டு ஆன்மா இறைவணை அடைந்து அவனேத் தானாக ஒன்றித்து பின்னி நிற்கின்றதோ அதுபொழுது ஆன்மா தானே தன் நிலையில் பரவிந்து பரநாதக் குறைகள் இல்லாது ஓர் பூரண சிவலிங்கம் ஆகின்றது.  அதுபொழுது நாதக் குறை விந்துகுறை என்று யாதுமில்லாது போக காமப்பசி யாதுமில்லாது ஓர் பூரணம் ஆகின்றது. ஆன்மா தன்னுள் தானே இறையருளால் ஓர் அர்த்தநாரியாக, நாதவிந்துப் பசிக்கள் இல்லாது போக காமும் முற்றிலும் இல்லாது போகின்றது.

 

 

இறைக்காமக் கழற்சி

 

 மிகவும் அருதான இந்த காமக் கழற்சியை அழிவிலுன்மை  கீழ்வருமாறு விளக்கும்

 

 

13.3.6

 

இனி இவ்வாறு பல்வேறு பரதெய்வங்களோடு சாயுச்சியமாக நிற்பதின், பல்வேறு சமயாச்சாரியார்களாக விளங்கி அல்லற்பட்டிருக்கையில் அனைத்தும் ஐங்கலைகளால் ஆவது, அவ்வைங்கலைகட்கும் மூலமாக நிற்பது பஞ்சகிருத்தியங்களே என்ற அறிவுத் தலைப்பட, ஆன்மாக்கள் அகத்து பரவிந்து பரநாதம் ஆகியவை முற்றிலும் கலந்து நிற்கின்ற சிவலிங்கம் கோதண்டமாக வெளிப்பட, ஆன்மாவும் அதனை அதிட்டித்து நின்று தொழிற்படுத்தும் அம்மையப்பர் வடிவத்தொடு சாயுச்சியமாக நிற்கும் என்பதாம். பரநாத பரவிந்துக்கள் சம அளவில் நிறைந்து நிற்பதின், விந்துப்பசி நாதப்பசி எனும் காமவேட்கைகள் எழா நிலை இதுவென்றது. ஆன்மா ஆணுமல்லாது பெண்னுமல்லாது அர்த்தநாரீயாக இருக்கும் என்றது. இனி உலகத்தில் நிற்பன அனைத்தும் நாதவிந்துக்களின் வெளிப்பாடாகவே உருப்பெற்று நிற்க, நாதவிந்துப் பசிக்களை- காமவேட்கையை- கழன்றிடும் ஆன்மாக்கள் உலகப் பற்றும் போக்கும் என்றது. விழித்திருக்கும்போது கைகள் பற்றியிருக்கின்ற பொருட்கள் உறங்கும்போது தானே கழன்று விழுதல் போல, தன் ஆண்மை பெண்மை பால்மைகளையும் அதனால் வரும் நாத விந்துப்  பசிக்களையும் போக்கும் ஆன்மாவின் மாட்டு, உலகப் பற்றுக்கள் அனைத்தும் தானே இயல்பாக கழன்று விழும் என்றது. இதனின் பற்றற்றப் பற்றே பற்றேயாய் அமையும் என்றது.

 

இங்கு  Divine Eros  பரநாத பரவிந்துப் பசிக்களாக ஆன்மா இறைவனையே புணர்ந்து மணந்து மகிழும் விருப்பொடுத் திகழ, Divine Thanatos  என்பது உலகப்பற்றுகளையும் அதற்கு மூலமாக இருக்கும் மும்ம்லனக்களையும் அழித்டு அகத்தே இல்லாது போக்கி சுத்தமாகுவதாகும்

 

மெய்கண்டார் கூறியவாறு ஊசல் கயிறு எனும் உலகப் பற்றுகள் அறுந்துவிட்டால் ஆன்மா தாய் தரையே துணையென ஆய்விடுவதுபோல்,  உலகப் பற்றுக்கள் எல்லாம் விழ இறைவனையேப் பற்றிகொண்டு அவனோடு ஒன்றி உடங்கியைந்து வீடுபேறு மாகிழ்ந்தவாறு ஆன்மா நித்திய பரமானந்த சுகத்தில் கிடக்கும்.

 

முடிவுரை

 

இவை இங்கு மிகச் சுருக்கமாகவே கூறப்பட்டுள்ளன, எளிமை கருதி காலக் கழற்சி எல்லாம் விடப்பட்டுள்ளது. ஆயினும் அழிவிலுண்மையில் இவை மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன என்பதின் ஆர்வமுடையோர் அந்நூலைக் கண்டு படித்து மகிழுமாறு கேட்டுக்கொண்டு இத்தொடரை ஓர் முடிவிற்குக் கொண்டு வருகின்றேன்

 

முற்றும்

 

உலகன்

 

 

 

 

 

 

 

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages