குறளில் குரை

8 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 5, 2024, 11:44:29 AM9/5/24
to Santhavasantham
தமிழ் இலக்கணத் தேன்துளி
********
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்//

 துன்பங்கள்
சென்று படும்.

குறள் : 1045

கேள்வி :

அதென்ன பல்குரைத் துன்பங்கள்?.

'பல் துன்பங்கள்'
என்பதனையே யாப்பு நோக்கி சீர்தனில் குறைவு போக்கக் குரை தனை இட்டார் அங்கு.

 குரை - இசைநிறை என்று பரிமேலழகரும்,
அசை என்று பரிப்பெருமாளும் குறித்தனர்.

எது சரி?.

தொல்காப்பியரிடம் போவோம், வாருங்கள்.

தொல்.சொல்.272 சேனா:

"ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை

ஆயிரண் டாகும் இயற்கைய என்ப."

இந்நூற்பாவுக்கு உரை வரைந்த சேனாவரையர்,
"பல்குரைத் துன்பங்கள் சென்று படும்" என்பது அசைநிலை என்று இக்குறளை மேற்கோளாய்க் காட்டினார்.

இளம்பூரணர் அவர்தம் உரையில்,
ஏ-இசைநிறை
குரை-அசைநிலை
என்று நிரனிறையாகக் கூறினார் என்கிறார்.

சேனாவரையர் அதனை மறுத்து,
ஏ, குரை என்ற இரண்டு சொற்களும், தனித்தனியே இசைநிறையாகவும், அசைநிலையாகவும் வரும் என்கிறார்.

தொல்காப்பியரே வந்தால் ஒழிய இளம்பூரணருக்கும், சேனாவரையருக்கும் இடையே உள்ள பிணக்கைத் தீர்க்க முடியாது போலும்.

- கோதைமோகன்
Reply all
Reply to author
Forward
0 new messages