Dr. Muthulakshmi Reddy

202 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 24, 2021, 10:43:52 PM7/24/21
to vallamai
I read a lot of news items on Dr. Muthulakshmi Reddy. For example, the living relatives
like Madhuvanti Arunkumar and their relationship to actor Gemini Ganesan, Dr. Muthulakshmi, ...

Muthulatchumi - Sathyamurthy debates on whether the ancient Devadasi system has to continue:

[Begin Quote]

தேவதாசி முறை ஒழிப்பு

1930 ஆம் ஆண்டு, முத்துலட்சுமி ரெட்டி இந்தச் சட்ட முன்வரைவை சென்னை சட்டமன்ற மேலவையில் முன்மொழிந்தார். இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், “இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்” என்று வாதிட்டார்.

“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள்ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?” என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.
[End Quote]


N. Ganesan

seshadri sridharan

unread,
Jul 25, 2021, 12:17:50 AM7/25/21
to வல்லமை
 முத்துலெட்சுமி எழுதிய
சுயசரிதையில்
சொல்லப்படாத இருவர்...
1.சத்திய மூர்த்தி
2.ஈ.வெ.ரா. பெரியார்
தேவதாசிமுறை ஒழிப்புக்காக பாடுபட்டவர் முத்துலெட்சுமி அம்மையார். இவர் 1927இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமாவர். இவர் தேவதாசி ஒழிப்புக்காக சட்ட முன்வரைவை கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தவர் சத்திய மூர்த்தி ஐயர். இவர் இறைவனுக்கு ஆற்றும் பணியை தடுக்கக்கூடாது என்று சொன்ன போது, உங்கள் ஆத்துப் பெண்களை இறைப்பணி செய்ய அனுப்புங்களேன் என்று கூறி, சத்தியமூர்த்தியின் வாயடைத்தவர் முத்துலெட்சுமி அம்மையார் என்று தான் பலரும் சொல்லி வருகிறோம். குறிப்பாக, ஈ.வெ.ரா. பெரியார்தான் முத்துலெட்சுமியை தூண்டிவிட்டு கேட்கச் சொன்னதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
முத்துலெட்சுமி அம்மையார் 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் சுயசரிதை நூல் எழுதியுள்ளார். அந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது. அந்நூலை தற்போது தான் படிக்க நேர்ந்தது. அந்நூலிலே, முத்துலெட்சுமி அம்மையார் சத்திய மூர்த்தி ஐயரிடம் இப்படியொரு விவாதம் நடத்தப்பட்டதை எங்கும் குறிப்பிடவே இல்லை, (ஓரிடத்தில் தன்னுடைய வகுப்புத் தோழர் அரசியல்வாதியான சத்திய மூர்த்தி என்கிறார் ) அதுபோல் முத்துலெட்சுமிக்கு ஆதரவாக "குடியரசு" ஏட்டில் குரல் கொடுத்த ஈ.வெ.ரா. பெரியார் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.
அந்நூலில், லேடி சதாசிவ ஐயரின் தலைமையில் அகில இந்திய மாதர் சங்கத்தை துவக்கியதாகவும், பெண்களுக்கு இல்லம் அமைப்பதற்கு ஶ்ரீனிவாச சாஸ்திரியார் முன்னெடுத்ததை அறிந்த பிறகே தாம் வேலை செய்யத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.
மேலும், அவர் சட்டமன்றத்தில், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக தீர்மானங்கள் கொண்டுவர முயன்ற போது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும், அச்சமயத்தில் காந்தியிடமிருந்தே ஆதரவைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். பெண்ணுரிமைக்குப் போராடும் வலுவான போராளி என்று புகழாரம் அனைத்தையும் காந்தியாருக்கே சூட்டி மகிழ்கிறார். 'யங் இந்தியா' ஏட்டில் தமக்கு ஆதரவாக காந்தியார் எழுதியதையும் விரிவாகக் கூறுகிறார்.
1946இல் சென்னையில் இந்தி பிரச்சார சபை வெள்ளி விழா கூட்டத்திற்கு காந்தியார் வருகை தந்த கூட்டத்தில், முத்து லெட்சுமி அம்மையார் பெண்விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களாக இராஜராம் மோகன்ராய், பண்டிட் வித்யாசாகர், சுவாமி தயானந்த சரசுவதி ஆகியோரை குறிப்பிட்டு பேசுகிறார்.
பிறகு நீதிக்கட்சி தலைவர் பனகல் அரசர் தமக்கு ஆதரவாக செயல்பட்டதை நினைவு கூறும் முத்துலெட்சுமி அம்மையார் தமது மசோதாவை தாமதப்படுத்த நீதிக்கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் நாயர் முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார். காங்கிரசு கட்சி சட்டமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தமக்கு ஆதரவளித்த வெங்கையா, ஏ.பி.ஷெட்டி,.ஆர். நாகன் கெளடா, நடேச முதலியார், ஏ.ரங்கநாத முதலியார், கே.உப்பி சாஹிப் ஆகியோரை நன்றியோடு நினைவு கூறுகிறார்.
இந்தியாவிற்கு முன்மாதிரியாக நீதிக்கட்சிதான் தேவதாசிமுறையை ஒழித்ததாக திராவிட இயக்கத்தவர் கூறி வருகின்றனர். ஆனால் முத்துலெட்சுமி அம்மையாரோ தேவதாசிமுறையை முதன்முதலாக ஒழித்தது 1909இல் மைசூர் சமஸ்தானமே என்று பாராட்டு தெரிவிக்கிறார். 1930களில் கொச்சி சமசுதானத்தில் அடியோடு தேவதாசிமுறை ஒழிக்கப்படும் போது, அதுபோல ஆங்கிலேயரால் ஏன் சாதிக்க முடியவில்லையே? என கேள்வி எழுப்புகிறார்.
அவர் குற்றம் சாட்டும் ஒரே நபர் இராசாசி மட்டுமே. 1937இல் முதல்வராக இராசாசி பதவி வகித்த போது தேவதாசி ஒழிப்புமுறை சட்டத்தை தடுத்ததாகவும், பெண்கள் சீர்திருத்தத்திற்கு எதிரானவர் இராசாசி என்றும் கடுமையாகச் சாடுகிறார்.
பின்னர், 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதல்வராக இருந்த போதுதான் தேவதாசி சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு பெண்கள் தேவதாசி முறையிலிருந்து விடுபட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.
அதுசரி, தமக்கு வழி காட்டியான காந்தியாரைத் தெரிகிறது, ஶ்ரீனிவாச ஐயங்காரைத் தெரிகிறது, லேடி சதாசிவ ஐயரைத் தெரிகிறது, தேவதாசி முறையை எதிர்த்த பனகல் அரசரைத் தெரிகிறது, அதே கால கட்டத்தில் எதிர்த்த ஈ.வெ.ரா. பெரியாரைத் தெரியவில்லையா?
தேவதாசி முறையை ஆதரித்த இராசாசியைத் தெரிகிறது, அதை ஆதரித்த மற்றொருவரான சத்திய மூர்த்தி ஐயரைத் தெரிய வில்லையா?
இது போன்ற கேள்விகள் முத்துலெட்சுமி அம்மையார் எழுதிய சுயசரிதை நூலைப் படிக்கும் போது எழுகின்றன.
சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேட்டதாக சொல்லப்படும் செய்தியை பலரும் கூறிவருவதை நானும் இதுகாறும் நம்பி வருகிறேன். முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர் "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எனக்குள் எழுகிறது.
இந்தத் தகவலை பிராமண எதிர்ப்புக்காக தீவிரமாகப் பரப்பி வரும் திராவிட இயக்கத்தினர் மூலச் சான்றுகளோடு விளக்கம் அளித்தால் நல்லது!
(டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சுயசரிதை, எஸ். இராஜலெட்சுமி (தமிழில்), அவ்வை இல்லம், ராஜ லெட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை)

N. Ganesan

unread,
Jul 25, 2021, 7:58:17 AM7/25/21
to vallamai
> சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேட்டதாக சொல்லப்படும் செய்தியை பலரும் கூறிவருவதை நானும் இதுகாறும் நம்பி வருகிறேன்.
> முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர்
> "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எனக்குள் எழுகிறது.

சரியானதே. ஆங்கில நூல்கள், தமிழ் நூல்கள் எல்லாவற்றிலும் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் சட்டமன்றப் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? சமகாலப் பத்த்ரிகைகள்
இந்த தேவதாசி ஒழிப்பு பற்றி விவாதங்கள் பற்றி என்ன தருகின்றன எனப் பார்க்கவேண்டும். த்ராவிட கக்ஷியினர் இவற்றைப் பதிவு செய்தல் வேண்டும்.

---------------

தேவதாசி முறை இன்று ஏறத்தாழ இல்லாமல் போனது போல - தேவதாசி ஸிஸ்டம் பற்றி அருமையான பிஎச்டி ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன, 15-20 பேர் நூல்கள் எழுதியுள்ளனர் -,
அதற்கு முதலிலேயே, அசுவமேத யாகம், அதனில் கந்தருவர்களாக இசைவாணர்களைப் பலி கொடுப்பது எல்லாம் ஒழிந்திருக்கிறது. ஆனால், இலக்கியங்களிலும், சிற்பங்களிலும்
தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPS1K6%3DWMhv-L3WHm%2BNjYu3148VcOCekxhsxrehwFTA-2g%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jul 25, 2021, 8:14:16 AM7/25/21
to vallamai
> சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேட்டதாக சொல்லப்படும் செய்தியை பலரும் கூறிவருவதை நானும் இதுகாறும் நம்பி வருகிறேன்.
> முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர்
> "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எனக்குள் எழுகிறது.

சரியானதே. ஆங்கில நூல்கள், தமிழ் நூல்கள் எல்லாவற்றிலும் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் சட்டமன்றப் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? சமகாலப் பத்த்ரிகைகள்
இந்த தேவதாசி ஒழிப்பு பற்றி விவாதங்கள் பற்றி என்ன தருகின்றன எனப் பார்க்கவேண்டும். த்ராவிட கக்ஷியினர் இவற்றைப் பதிவு செய்தல் வேண்டும்.

---------------

தேவதாசி முறை இன்று ஏறத்தாழ இல்லாமல் போனது போல - தேவதாசி ஸிஸ்டம் பற்றி அருமையான பிஎச்டி ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன, 15-20 பேர் நூல்கள் எழுதியுள்ளனர் -,
அதற்கு முதலிலேயே, அசுவமேத யாகம், அதனில் கந்தருவர்களாக இசைவாணர்களைப் பலி கொடுப்பது எல்லாம் ஒழிந்திருக்கிறது. ஆனால், இலக்கியங்களிலும், சிற்பங்களிலும்
தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகாபலிபுரம் போன்ற இடங்களில் பலி கொடுக்கப்பட்ட இசையாளர்கள் யாழ் (கின்னரம்) வாசிக்கும் கந்தர்வர்களாக நிற்பர். யாழோர், கந்தர்வர், கின்னரர் என்றெல்லாம் பெயர்.
வானில் திரியும் கின்னரர் தலை மனித வடிவிலும், உடல், பாதம் ஆந்தையாகவும் இருக்கும். ஆந்தையின் அலறல் சாவுக்கு அறிகுறி என்பதால் இவ்வாறு அமைத்தனர் போலும்.
Reply all
Reply to author
Forward
0 new messages