முடக்கு வாதத்தை சரி செய்யும்
ஒரு அதிசய மூலிகை இது
ரத்தம் சுத்தமாக
வாதநோய் வராமல் இருக்க
ஒரு எளிய வைத்தியம்
தழுதாழை இலையும் பீசங்கு இலையும் சம அளவாக எடுத்து நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து சலித்து பொடி செய்து இந்தப் பொடியில் மூன்று கிராம் எடுத்து
இருமடங்கு தேன் ஊற்றி குழைத்து காலை மாலை இருவேளையும் நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலிலுள்ள வாத நீர் முழுமையாக நீங்கி இதன்மூலம் உடல் வலிகள் முழுவதும் நீங்கிவிடும் வாதநோய் எப்பொழுதும் உடலில் வராதபடிக்கு இந்த வைத்திய முறை நம்மை காப்பாற்றும்
இந்த வைத்திய முறையை பயன்படுத்தும் பொழுது சிறிது உப்பு புளி காரத்தைக் குறைத்து இந்த வைத்தியத்தை கடைபிடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமடையும்
ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி உடலில் குளிர்ச்சி ஏற்படும் கபம் சார்ந்த நோய்கள் அனைத்தும் விலகி சுவாசம் சீராக நடை பெற இது உதவும்
வாத நோய் உடலில் வராமலிருக்க
வந்த வாத நோய்கள் விலக
நீராவியில் வேது பிடிக்கும்
வைத்தியமுறை
தேவையான மூலிகை பொருட்கள்
தழுதாழை ஒரு கைப்பிடி
நொச்சி இலை ஒரு கைப்பிடி
பழுத்த எருக்கிலை மூன்று
இவைகளை ஒரு பாத்திரத்திலிட்டு மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி இதை வேகவைத்து
இந்த மூலிகை சுடு நீரில் ஐந்து நிமிடம் உடல் முழுவதும் இந்த மூலிகையின் நீராவி உடலில் படுமாறு கண்களை மூடிக்கொண்டு வேது பிடிக்க வேண்டும்
உடலில் இருக்கின்ற வாதநீர் முழுவதும் வியர்வையின் மூலமாக வெளியேறி விடுகின்றது
மூலிகை நீராவியில் வேக பிடிப்பதின் மூலம் மூலிகையின் உயிர்சத்துக்கள் சுவாசத்தின் மூலமாக உடலுக்கு எளிதாக கிடைக்கின்றது
இதனால் நுரையீரலில் இருக்கின்ற சளிகள் முழுமையாக நீங்கிவிடுகின்றன
தொண்டைக்கட்டு கபம் நுரையீரலில் இருக்கின்ற சளி இவைகள் நீக்குவதன் மூலமாக காற்றோட்டமும் ரத்த ஓட்டமும் முறையாக நடைபெறுவதால் இதன் காரணமாக வாத நோய்கள் எதுவும் வாழ்நாள் முழுவதும் நமக்கு வருவதில்லை
மேலும்
இதனால் அனைத்து விதமான உடல் வலிகளும் வாத நோய்களும் எளிதாக நீங்கிவிடும்
குறிப்பாக முக்குணங்களில் வாத குணம் மிகுதியால் ஏற்படுகின்ற தோள் பட்டை வலி முதுகு வலி மூட்டு வலி இடுப்பு வலி தசைகளில் ஏற்படுகின்ற வலிகள் மேலும் உடல் முழுதும் ஏற்படுகின்ற அனைத்து வலிகளுக்கும் சரவாங்கி நோயால் பாதிக்கப்பட்ட மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலிகளுக்கும் நிவாரணம் தருகின்ற நல்ல வைத்திய முறை இதுவாகும்
காற்றின் பாதிப்பால் ஏற்படும் அனைத்து விதமான வாத நோய்களையும் முதலில் வராத வண்ணம் தடுத்து நிறுத்தும் ஒரு மாபெரும் சக்தி தழுதாழையில் இருக்கிறது
உள் உறுப்புகள் அனைத்தையும் ஊக்குவித்து, இரத்தத்திலுள்ள கொழுப்பை கரைத்து,
அடைப்பை நீக்கி சளியைக் கரைத்து, சுவாசத்தை சீராக்கி இரத்தத்தில் சர்க்கரை அளவை சமப்படுத்தி உடல் நல பாதிப்புகள்அனைத்தையும் குணமடைய செய்து நோயிலிருந்து காப்பாற்றி நாம் ஆரோக்கியமாக வாழ தழுதாழை பெரிதும் உதவுகிறது
தழுதாழை இலைகளை, விளக்கெண்ணைய் விட்டு வதக்கி, இளம் சூட்டில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் இந்த இலைகளை சிறிது நேரம் வைத்திருக்க சுளுக்கு நீங்கி விடும் மூட்டுவலிக்கும் இந்த வைத்திய முறையை செய்து வர இதனால் மூட்டு வலிகள் முழுமையாக நீங்கி விடும்
தழுதாழை இலையை இடித்து சாறு பிழிந்து இதன் எடைக்கு சமமாக இதனோடு நல்லெண்ணெய் சேர்த்து இதில் இரண்டு துளி வீதம் எடுத்து இரூ மூக்கிலும் நசியமிட மூக்கடைப்பு குணமாகும்
தழுதாழை இலையின் சாறும் விளக்கெண்ணெயும் சமமாக கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி வலியுள்ள மூட்டுகளின் மீது தடவி வர மூட்டு வலி நீங்கும்
சர்க்கரை நோய் விலக
சரவாங்கி நோய் நீங்க
தழுதாழை இலை சாரோடு சமமாக விளக்கெண்ணெய் சேர்த்து இதில் பதினைந்து மில்லி எடுத்து அதிகாலை வேளையில் பருகி வர சர்க்கரை நோயானது சமநிலைக்கு வந்துவிடும் சரவாங்கி நோய் படிப்படியாக குறைந்து முழுமையாக விலகி விடும்
இந்த வைத்திய முறையை பயன்படுத்தி வரும் காலங்களில் மூலிகைச் சாற்றினை பருகிய பின் குறைந்தது நான்கு மணி நேரம் உணவு உண்ணக்கூடாது இதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்
தழுதாழையின் இலைச்சாற்றை பத்து மில்லி எடுத்து காலை ங இருவேளையும் சாப்பிட்டு வர ஒரே நாளில் காய்ச்சல் விலகி விடும்
தழுதாழை இலைகளை, விளக்கெண்ணையில் இட்டு, வதக்கி, அதை வீக்கம் ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டி வைக்க, ஆண்களின் விரை வீக்கம் மற்றும் நெறி கட்டிய பாதிப்புகள் விலகிவிடும்
தழுதாழையின் வேரை நல்லெண்ணையுடன் சேர்த்து காய்ச்சி வலியுள்ள மூட்டுகளில் மீது இதை தடவி வர, மூட்டு வலி மற்றும் மூட்டுவீக்கங்கள் முழுமையாக குணமாகும்
தழுதாழை வேரை நீரிலிட்டு கொதிக்கவைத்து இதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, இருவேளையும் பருகி வர, இரண்டொரு நாட்களில் சிறுநீர்த்தாரை எரிச்சல் வெகு எளிதாக நீங்கிவிடும்
தழுதாழை இலைகளை சிறிது நீரிலிட்டு கொதிக்க வைத்து, இதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் உடல் நல குறைபாடுகள் அனைத்தும் முழுமையாக நீங்கும்
எப்பொழுதும் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ இந்த தேநீர் உதவும்
அடிப்பட்ட வீக்கம்
மூட்டுவலி
உடல் வலி இவைகள் முழுமையாக விலக ஒரு எளிய வைத்திய முறை
தழுதாழை இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு மண் சட்டியில் ஊற்றி இதை விறகு அடுப்பில் எரித்து சாறு சுண்டி மெழுகு பதத்திற்கு வரும் பொழுது இதை வலியுள்ள இடத்தில் பற்றாக போட்டு வர எப்பேர்ப்பட்ட வலிகளும் முழுமையாக நீங்கும்
அடிபட்ட வீக்கம் மூட்டு வலி சுளுக்கு இவைகளுக்கு இந்த வைத்திய முறையை பயன்படுத்தி வர நீண்ட நாளாக வலிக்கின்ற மூட்டு வலிகளும் வீக்கமும் வெகு விரைவாக நீங்கிவிடும்
சித்தர்களின் சீடன்
பிரம்மஸ்ரீ இராமலிங்கம்