நினைவு வேர் பொருள் என்ன?
மனம் பழையவற்றை அவ்வப்போது நினைவுபடுத்துவது புதியவற்றை சிந்திப்பது என இரண்டு வேலைகளை ஓயாமல் செய்கிறது.
நினைவு அசையாத, பெயராத மாறாத என்ற பொருளில் நில் > நின் > நினை இதாவது, எப்போது அந்த நினைவுப் பதிவை தொட்டாலும் அது மாறாததாக நிலையானதாக இருப்பதால் தான் நினைவு என்று சொல்லப்படுகிறது. நேற்று அதை கவனத்தில் கொண்டாலும் சரி நாளை அதை கவனத்தில் கொண்டாலும் சரி அது மாறுபடாது இருக்கும். நினைவு தப்பினால் அது மறதி ஆகும். மீண்டும் மீண்டும் நினைக்க நினைக்க அது மாறாததாக இருக்க வேண்டும் என்பதே நினைவின் அடையாளம். ஆனால் புதிதாக எண்ணுவதற்கும் நினை என்ற சொல்லை பயன்படுத்துவது அதன் வேர் பொருளுக்கு சற்றும் பொருந்துவதாக இல்லை.
ஞா என்றால் பெயராது பொருந்தியிருத்தல் (fixed) ஞாத்தல் என்று பொருள். இதில் இருந்து ஞா + அகம் > ஞாவகம் > ஞாபகம் என்று இன்னொரு சொல் நினைவை குறிக்க ஆளப்படுகிறது. இதாவது மனதில் நிலையாக பொருந்தியிருப்பது என்று. ஆனால் சொற்பிறப்பியல் பேரகர முதலி இதை தமிழ்ச் சொல்லாகவே கருதவில்லை போலும்.
குறி என்றால் மாறாமல் கவனம் பிசகாமல் ஒன்றிலேயே குறிகொள் என்று பொருள். இதை வைத்து தெலுங்கில் குர்து என்ற சொல் நினைவிற்கு பயங்கொள்ளப்படுகிறது.