தமிழகம், தமிழ்நாடு

259 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 21, 2023, 6:54:05 AM1/21/23
to Santhavasantham
தமிழ்நாடா? தமிழகமா? என்கின்ற விவாதங்களும் அதனைத் தொடர்ந்து ”தமிழ்நாடுதான் சரி… இல்லை… தமிழகம்தான் சரி” என்று அவரவர் கட்சிச் சார்பு/ கொள்கைச் சார்பு நிலையிலான  முடிவுகளும் சமூக வலைத்தளங்களில் தூள் பறக்கின்றன! 😁

நாமும் இந்த ஆராய்ச்சியில் ‘தொபுக்கடீர்’ என்று குதித்து உண்மையைக் கண்டறிவோம்…வாருங்கள்! 🙂

***
முதலில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாடு, தமிழகம் இவற்றில் எந்தச் சொல் இடம்பெற்றுள்ளது; எது அதிகம் இடம்பெற்றுள்ளது என்பதனை ஆராய்வோம்.

தொல்காப்பியம்: இந்நூலில், ”தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற சொல் அதன் சிறப்புப் பாயிரத்தில் ’பனம்பாரனாரால்’ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது தவிர்த்துத் தமிழ்நாடு, தமிழகம் போன்ற சொற்கள் நூற்பாக்களில் இல்லை.

***
சங்க இலக்கிய நூல்கள்:
**********
1. தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டு அகமெல்லாம் (பரிபாடல்: 31)
2. வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு - 168)

ஆக, தமிழ்நாடு, தமிழகம் இரண்டுமே சங்க நூல்களில் காணக் கிடைக்கின்றன.

***
ஐம்பெருங்காப்பியங்கள்
**********
சிலப்பதிகாரம்:
******
1. இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய (சிலப்: வஞ்சிக்காண்டம்:25/165)
2. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்: புகார்க்காண்டம்:3/38)

சிலம்பில் தமிழ்நாடு, தமிழகம் இரண்டும் உள்ளன.

மணிமேகலை:
*******
1. சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் - (மணி:17/62)

மேகலையில் தமிழகம் மட்டுமுள்ளது.

சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற நூல்களில் தமிழ்நாடு, தமிழகம் ஆகிய சொற்களில் எதுவும் காணப்படவில்லை.  

***
திருக்குறள்: இதில் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழகம் முதலிய எந்தச் சொல்லும் வள்ளுவரால் பயன்படுத்தப்படவில்லை என்பது நாமறிந்ததே. 🙂

***
கம்பராமாயணம்:
*******
1. பிறக்கம் உற்ற மலைநாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர்… (கிட்:13 30/4)
2. தென் தமிழ்நாட்டு அகன் பொதியில்  (கிட்:13 31/1)
3. இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார் (கிட்:15 50/4
4. என்ற தென் தமிழ்நாட்டினை எங்கணும் (கிட்:15 52/1)

தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு, தமிழ்நாடு, தமிழ்நாட்டினை ஆகியவை உள்ளன; தமிழகம் என்ற சொல் காணப்படவில்லை.

***
பெரியபுராணம்:
*******
1. பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில் சீர்ப்பதிகள் எல்லாம் - (வம்பறா:1 601/1)
2. நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லைப் பின்பட நெறியின் ஏகி - (வம்பறா:1 608/2)
3. புரசை வயக் கடக்களிற்றுப் பூழியர் வண்தமிழ்நாட்டு   (வம்பறா:1 653/1,2)
4. தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன் - (வம்பறா:1 751/2)
5. தெருள்பொழி வண் தமிழ்நாட்டுச் செங்காட்டங்குடி சேர்ந்தார் - (வார்கொண்ட:3 35/4)
6. செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத் திரு மா மதுரை முதலான - (வார்கொண்ட:4 81/3)

*
1. சந்தப் பொதியில் தமிழ்நாடுடை மன்னன் வீரம் - (மும்மை:1 12/2)
2. வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம்படுத்து - (மும்மை:1 13/1)
3. ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும்பெறல் தமிழ்நாடுற்ற - (வம்பறா:1 604/1)
4. பானல் வயல் தமிழ்நாடு பழி நாடும்படிப் பரந்த - (வம்பறா:1 652/1)
5. தென் தமிழ்நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார் - (வம்பறா:1 750/2)
6. எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளினாலே இரும் தமிழ்நாடுற்ற இடர்நீக்கி - (மன்னிய:2 1/3)

பெரியபுராணத்தில் ’தமிழ்நாட்டு’ என்ற சொற்கள் ஆறு இடங்களிலும், ’தமிழ்நாடு’ என்ற சொற்கள் ஆறு இடங்களிலும் பயின்று வந்திருக்கின்றன. ’தமிழகம்’ என்ற சொல் இல்லை.

***
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகள்
***************
மகாகவி பாரதி: இருபதாம் நூற்றாண்டின் மகாகவியான பாரதியின் பாடல்களை ஆராய்ந்தால் அதில் ’செந்தமிழ்நாடு’ என்ற தலைப்பில் அவரெழுதிய பாடலைக் காணமுடிகின்றது.

”செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே” எனத் தொடங்கும் அப்பாடலில் ”தமிழ்நாடு” என்ற சொல்  பன்முறைப் பயின்றுவந்துள்ளதைக் காணமுடிகின்றது. ”தமிழகம்” என்ற சொல்லை அவர் பாடல்களில் காணமுடியவில்லை.

**
பாவேந்தர் பாரதிதாசன்:
**********
தம்முடைய ஒரு கவிதைக்கு “வெல்க தமிழ்நாடு”  என்று தலைப்பிட்ட பாவேந்தர் மற்றோர் இடத்தில்  ”தமிழகம் மீளவேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்!” என்று தலைப்பிட்டிருக்கின்றார்.  இரண்டு சொற்களையும் தம் பாடல்களில் பயன்படுத்தியிருக்கின்றார்.

எனவே, அவருக்குத் தமிழ்நாடு, தமிழகம் இருசொற்களும் உடன்பாடே எனத் தெரிகின்றது. :-)

 ***

இவ்வாறு பண்டைய இலக்கியங்கள் தொடங்கி இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகள் வரை ஒரு பருந்துப் பார்வை பார்த்ததில் தமிழ்நாடு, தமிழகம் என்ற இருசொற்களும் தமிழ்நிலத்தைக் குறிக்கும் சொற்களாகத் தொடர்பயன்பாட்டில் உள்ளமை தெளிவாய்த் தெரிகின்றது.

எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது ”தமிழ்நாடு” என்ற சொல் ”தமிழகம்” என்பதைவிடவும் இலக்கியங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது புலனாகின்றது.

***
இனி, தமிழறிஞர்களின் நூல் தலைப்புக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது தமிழ்நாடா தமிழகமா எனப் பார்ப்போம்.

மா. இராசமாணிக்கனார்:
1. தமிழக ஆட்சி, தமிழகக் கலைகள், புதிய தமிழகம்
2. தமிழ்நாட்டு வட எல்லை

டாக்டர் கே.கே. பிள்ளை
1. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

புலவர் கா. கோவிந்தன்:
1. காலந்தோறும் தமிழகம்
2. தமிழகத்தில் கோசர்கள்
3. தமிழக வரலாறு

ந.சி. கந்தையா பிள்ளை
1. தமிழகம்

டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை
1. தமிழகம் – ஊரும் பேரும்

மகாவித்வான் ரா. ராகவையங்கார்
1. தமிழகக் குறுநில வேந்தர்கள்

மார்க்சிய அறிஞர் நா. வானமாமலை
1. தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்
2. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்

பெரியசாமித் தூரன்
1. பாரதியும் தமிழகமும்

அறிஞர் அண்ணா
1. ஏ, தாழ்ந்த தமிழகமே! (கட்டுரை)

பேரா. தொ. பரமசிவன்
1. அறியப்படாத தமிழகம்

அனைத்து அறிஞர்களின் நூல்களையும் ஆராய்வது சாத்தியப்படவில்லை; கிடைத்த அளவில் ஆராய்ந்ததில் தமிழ்நாட்டைக் காட்டிலும் தமிழகம் என்ற சொல் அறிஞர்களின் நூல் தலைப்புக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவருகின்றது.

***

இவையன்றி, நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுவது தமிழ்நாடா தமிழகமா என்று பார்த்தால்…

விகடன்: தமிழக அமைச்சரவை விரிவாக்கம்…

தினமணி: தமிழகத்தில் கோயில் சிலைகள் பாதுகாப்பாக இல்லை – முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல்.

இந்து தமிழ் திசை: ”தமிழக” ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு என்பதைவிடத் தமிழகம் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பேசியது சர்ச்சையான நிலையில் சமூக வலைதளங்களில் #TamilNadu #Thamizhagam என்று இரண்டு ஹேஷ்டேகுகள் மூலம் மக்கள் கருத்துகளைக் குவித்து வருகின்றனர்.

ஆகவே, பத்திரிகைப் பயன்பாட்டில் தமிழகமே முன்னிலை வகிக்கின்றது.

***
மேற்கண்ட அனைத்துத் தரவுகளையும் தொகுத்துப் பார்க்கையில் தமிழ்நாடு தமிழகம் இரண்டுமே இலக்கியங்களிலும் நூல்களிலும் இதழ்களிலும் தொடர்ந்து புழக்கத்திலுள்ள சொற்களே என்பது உறுதியாகின்றது. எனினும், தமிழ்நாடு என்ற பெயர் மாநிலத்தின் பெயராக அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில் முறையாக மாற்றம்பெற்று நடைமுறைக்கு வந்துவிட்டபடியால் அதனைத் தமிழகம் என்று இப்போது மாற்ற வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அதேநேரத்தில் தமிழகம் என்ற சொல்லையும் அதற்கு இணையான சொல்லாக நாம் தொடர்ந்து பயன்படுத்துவதில் தவறேதுமில்லை.

என்னினிய தமிழ்மக்களே... “தமிழ்நாடு” என்று சொல்பவர்தாம் தமிழுணர்வாளர்; ”தமிழகம்” என்று சொல்பவர் தமிழுணர்வு அற்றவர் என்ற வகையில் செய்யப்படும் பரப்புரைகளும், பகிரப்படும் மீம்களும் பொருளற்றவை; உண்மைக்கு மாறானவை என்பதையும் இங்கே அழுத்தமாகப் பதிவிட விரும்புகின்றேன். 👍

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (அறிவுடைமை: குறள்: 423)

- திருமதி மேகலா இராமமூர்த்தியின் முகநூல் பதிவு

S. Jayabarathan

unread,
Jan 21, 2023, 1:09:03 PM1/21/23
to N. Ganesan, tamilmantram, vallamai, mintamil, Santhavasantham, vanna...@gmail.com, வித்யாசாகர், Asan Buhari, rajam, C.R. Selvakumar, nandhitha kaapiyan

தங்கத் தமிழ்நாடு

valluvar-statue

தங்கத் தமிழ்நாடு

சி. ஜெயபாரதன் & இராம. மேகலா

 
பாடல் : சி. ஜெயபாரதன், கனடா
இசைப்பாடகி : வே.ரா. புவனா
காட்சி அமைப்பு : பவளசங்கரி
 
சி. ஜெயபாரதன், கனடா

******************************

தங்கத் தமிழ்நாடு எங்கள் தாய்நாடு 

சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!

சிங்கத் தமிழர் உதித்த செந்தமிழ் நாடு!

மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு  

எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட

முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!

வங்கக் கடலெழு செங்கதிர் ஒளியூட்ட 

தென்குமரி முனைதிகழ் வள்ளுவர் வழிகாட்ட

ஆத்திசூடி ஓளவைசூடிக்கொடுத்த ஆண்டாள் 

வான்புகழ் வள்ளுவர்தேன்கவி இளங்கோ,

கவிச்செல்வர் கம்பர்கவிக்கோ சேக்கிழார்

புதுமைக்கவி பாரதிபுரட்சிக்கவி பாரதிதாசன்,

யாவரும் உனது  மாதவ  மக்கள்!

யாதும் நாடே யாவரும் கேளிர்!

தீதிலா துனையாம் பாதுகாத் திடுவோம்!

காசினி மீதில் நேசமாய்த் திகழும்

மாசிலா நாடேமைந்தர்கள்  ஒன்றாய் 

வாழ்த்துவம் உனையேஉயர்த்துவம் உனையே! 

பாரதத் தாயின் தவத்திரு நாடே!

பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்

பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!

++++++++++++++++

S.Jayabarathan [jayaba...@gmail.com] October 24, 2016 [R-1]  

தங்கத் தமிழ்நாடு – 2

சி. ஜெயபாரதன் & இராம. மேகலா

தங்கத் தமிழ்நாடு! எங்கள் தாய்நாடு!
சங்கத் தமிழ் வளர்த்த பண்டைத் திருநாடு!
முத்தமிழ் வேந்தர் வளர்முத் தமிழ்மொழி
மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு!
எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட
முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!
வங்கக் கடலெழு செங்கதிர் ஒளிபட,
தென்னக முனையில் வையக வள்ளுவர் 
ஆத்திசூடி ஓளவை, திருப்பாவை ஆண்டாள்,
திருக்குறள் வள்ளுவர், சிலம்பு இளங்கோ,
புரட்சிக்கவி பாரதி, புதுமைக்கவி பாரதிதாசன்,
அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர்,
கவியரசு, கவிப்பேரரசு, கவிக்கோ, சேக்கிழார்
யாவரும் உனது மாதவ மக்கள்!
யாதும் நாடே யாவரும் கேளிர்!
மேதினியில் உனைப் பாதுகாத் திடுவோம்!
காசினி மீதில் நேசமாய்த் திகழும்
மாசிலா நாடே! மைந்தர்கள் ஒன்றாய்
வாழ்த்துவம் உனையே! உயர்த்துவம் உனையே!
பாரதத் தாயின் தவத்திரு நாடே!
பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்
பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!

++++++++++++++++


--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcqfy2%2BQEb7TspvuYJ8uK5u%2B9jWSYQYQbOb2xchQsBDsg%40mail.gmail.com.

Buhari A

unread,
Jan 21, 2023, 6:48:10 PM1/21/23
to இலக்குவனார் திருவள்ளுவன், tamil...@googlegroups.com, thiru thoazhamai, N. Ganesan, vallamai, mintamil, Santhavasantham, vanna...@gmail.com, வித்யாசாகர், rajam, C.R. Selvakumar, nandhitha kaapiyan
சரியாகச் சொன்னீர்கள்!

ஆம், தமிழகம் என்றால் இன்று அதன் பொருள் தமிழ் உலகம்

தமிழ் உலகம் > தமிழுலகம் > தமிழகம் என்று பொருள் உரைக்க வேண்டியதுதான் 

தமிழகத்துக்குள் இந்தியா அடக்கம்!



On Sat, Jan 21, 2023 at 4:16 PM இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com> wrote:
கவிதைக்குப் பாராட்டு.

தமிழ்நாடு என்பது நாட்டைக் குறிக்கும்.  எனவேதான், 
“நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” என்றார் இளம்பூரணர்.

தமிழகம் என்பது தமிழ் பேசும் எல்லா நிலப்பகுதிகளையும் குறிக்கும்.

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyCr0BqpxWYSwO39TUwKiZY09744FdKjSm40r6AN2t0N6Q%40mail.gmail.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

kanmani tamil

unread,
Jan 21, 2023, 7:08:49 PM1/21/23
to vallamai
பண்டை இலக்கியம் தமிழகம் என்று எதைச் சொல்கிறது? 

புதுடில்லியில் கூட லட்சக்கணக்கான தமிழர் வசிப்பர். 'தமிழக'த்திற்குள் அதுவும் அடக்கமா???!!!

😇😇😇

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UZqDBK9k6mPCbd%2BFEWt5ZtUzJD2CDn8tLh7VBpMft5V4w%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Jan 21, 2023, 7:32:47 PM1/21/23
to vallamai
தொழில் நிமித்தமாக சிவகாசியில் கணிசமான அளவு மார்வாடிகளும் மேத்தாக்களும் வாழ்கின்றனர். அவர்களது சங்கம் இருக்கிறது. ஊரைச் சுற்றி எவ்வளவோ நிலங்கள் கூட வாங்கிக் குவித்துள்ளனர். தனியாக அவர்கள் பிள்ளைகளுக்குப் பள்ளி நடத்துகின்றனர். அதற்காக... ???!!!

சிவகாசி ஹிந்தியகம் ஆகிவிடுமா?

🥱🥱🥱

 

Buhari A

unread,
Jan 21, 2023, 7:44:24 PM1/21/23
to vall...@googlegroups.com
பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளலாம் நாம்!

ஆங்கிலம் உலகின் பல நாடுகளிலும் வாழ்கின்றது. ஆனால் ஆங்கிலநாடு என்பது பிரிட்டிஷ் மட்டுமே!

தமிழ் உலகின் பல நாடுகளிலும் வாழ்கின்றது. ஆனால் தமிழ்நாடு என்பது வடவேங்கடம் தென்குமரி மட்டுமே

ஆகவே தமிழகம் என்பது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நிலப்பரப்புக்குச் சொந்தமானது.

அவரவர் மொழியின் வீச்சத்தை அவரவர் புகழ்ந்து பாடிக்கொள்ளத் தடையேதுமில்லை. தமிழன் அதற்குக் குறுக்கே நிற்கப் போவதுமில்லை

மத அரசியல் செய்வோர் மட்டுமே நல்லிணக்கம் அனைத்துக்கும் குறுக்கே நிற்கிறார்கள்




kanmani tamil

unread,
Jan 21, 2023, 10:05:57 PM1/21/23
to vallamai
நாட்டு வைத்தியம் 🙂🙂🙂
சக
(சக= சப்பைக்கட்டு)

On Sun, 22 Jan 2023, 7:23 am இலக்குவனார் திருவள்ளுவன், <thir...@gmail.com> wrote:
நன்றி ஐயா.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2Bz6PkYLG7LvWJt3jmWBmS6P6ZU%3DkaPW%2BiyNuzzSQksz0M89sg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jan 21, 2023, 11:43:13 PM1/21/23
to santhav...@googlegroups.com, Megala Ramamourty, thiruppug...@gmail.com
On Sat, Jan 21, 2023 at 10:06 PM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
> > நாடா? அகமா? நவிலெது நல்லதென்றால்,
> >நாடகம் இஃதென்பேன் நான்!
> >                       -- தில்லைவேந்தன்
😂
தமிழகம், தமிழ்நாடு இரண்டும் சங்கத் தமிழர் கண்டவை. இன்று நேற்றல்ல அதன் காலம். பாரதி, தமிழ்நாடு எனப் பன்முறை அடுக்கிப் பாடினார்.
https://www.youtube.com/watch?v=F4mS3zwhZ1Q டி. ஆர். மகாலிங்கம், 1948, வேதாள உலகம். திரையிசையாக, செந்தமிழ் நாடெனும் போதினிலே முதன்முதலாக.
https://www.youtube.com/watch?v=6IUNIsdcPTk பாடல்வரி
https://www.youtube.com/watch?v=rLp3fYfI8HA மகராஜபுரம்
https://www.youtube.com/watch?v=da7__R4u2HI சுதா ரகுநாதன்
https://www.youtube.com/watch?v=gFMrxt0lrVs சிக்கில் குருசரண்
https://www.youtube.com/watch?v=S5pDrLQGN_Q காயத்ரி கிரீஷ்
https://www.youtube.com/watch?v=yl3eM4kpQLg ஜேம்ஸ் வசந்தன் குழு

-----------------

மேகலை இராமமூர்த்தி:
> ”தமிழகம்” என்ற சொல்லை அவர் (பாரதி) பாடல்களில் காணமுடியவில்லை.

தமிழ்ப் பேரா. க. பலராமன், சென்னை எழுதினார்:

வேளாளன் சிறைபுகுந்தான்,  *தமிழகத்தார்*
    மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ
   வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
     நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
    வாழ்த்துதிநீ வாழ்தி வாழ்தி!”

> வ.உ.சி. குறித்துப் பாரதி பாடிய பாடல் இது. *தமிழகத்தார்* என்னும் சொல்லையும் நோக்குக.

மேலும், 2 இடங்களில் பாரதி தமிழகம் எனுஞ்சொல்லை ஆளுகிறார்:

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0542.html
(2) மாதர் - தமிழ்நாட்டின் விழிப்பு
“உலகத்திலுள்ள மதபேதங்களை யெல்லாம் வேருடன் களைந்து ஸர்வ ஸமய ஸமரஸக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ் நாடே சரியான களம். உலகமுழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு *தமிழகத்தே* தொடங்குமென்கிறோம்.”

(3) மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்
“மிகப் பழைய தமிழ் பாஷையும் மிகவும் புராதனமான மலையாள பாஷையும் ஒரே வஸ்துதான். பிற்காலத்திலும் சேரநாடு *தமிழகத்தில்* ஒரு பகுதியாகவே கணக்கிடப்பட்டு வந்தது. சேரரனைவரும் தமிழரசரே. தமிழ்நாடு வேந்தருள்ளே சேர்த்தெண்ணப்பட்டு வந்தனர். பாஷையையொப்பவே நாகரீக விஷயத்திலும் மிகப் பெரிய தமிழ் நாகரீகமும் மிகப் பழைய மலையாள நாகரீகமும் ஒரே வஸ்துதான்.”
----------------------------

காங்கிரஸ் கக்ஷி ஆட்சிக்காலத்திலேயே, சட்டமன்ற சபாநாயகர், அமைச்சர்கள் கலந்துகொண்ட விழாக் கல்வெட்டுகளில் தமிழ்நாடு என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெயர் வரலாற்றில் மூன்று நிகழ்ச்சிகள் முக்கியமானவை:
https://nganesan.blogspot.com/2023/01/tamilnadu-inscription-thottakurichi.html

தமிழ் வரலாறு பற்றிப் பலரும் அறியாத செய்திகள்.
(1) தமிழகம் (புறநானூறு), தமிழ்நாடு (பரிபாடல்) 20 நூற்றாண்டுகட்கு முன்னர் உள்ள சான்று கொடுத்துள்ளேன். தமிழ் கூறு நல்லுலகம் என்பார் தொல்காப்பியர். பின்னர் சிலம்பு, சேக்கிழார், கம்பன், ...  First Milestone

(2) இடைக்காலத்திலே இளம்பூரண அடிகளும், நேமிநாத உரையிலும், வினாவுக்கு வழுவாமல் விடை அளித்தல் என்பதற்கு
’நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்’ என எழுதியுள்ளனர். Second Milestone

(3) மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என 1938-ல் முழங்கினர். 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின. அவ்வமயம் தமிழ்நாடு எனப் பெயர் வைக்கக் கோரிக்கைகள் எழுந்தன. சங்கரலிங்கம் உண்ணாநோன்பு நோற்று உயிர்துறந்தார். பிரஜா சோசலிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ஆக இருந்த பி.எஸ். சின்னதுரை ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானத்தை தமிழ்நாடு பேரவையில் 30-ஜனவரி 1961-ல் கொணர்ந்தார். காங்கிரஸ் கட்சி ஆதரவு இல்லாமல் தோற்றது. ஆனாலும்,  24-பிப்ரவரி-1961ம் நாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம் (பொள்ளாச்சி) தமிழ்நாடு எனப் பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வமாக எம்.எல்.ஏ. அசெம்பிளியில் அறிவித்தார். இதுவே, தமிழ்நாடு என்ற பெயர் சுதந்திர இந்தியாவில் முதல் அரசாங்கத்தின் ஏற்பு ஆகும். சிஎஸ் அவர்கள் தமிழ்நாடு பட்ஜெட் (1961) எனத் தமிழ்நாடு என்ற பெயரைப் பயன்படுத்தவும் செய்தார். Third Milestone
(4) 1961 அரசாங்க அறிவிப்பின் பின்னர், மக்களில் சிலர் பயன்படுத்தத் தொடங்கினர். அவ்வகையில் இரு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. 1962-ம் ஆண்டில் ஏற்பட்ட கரூர் தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு, 1966-ல் ஏற்பட்ட திருநெல்வேலிக் கல்வெட்டு “தமிழ்நாடு” என்ற பெயர் நிலைகொண்டதைக் காட்டும் சான்றாதாரங்கள்.

நா. கணேசன்

Mekala Ramamurthy wrote:
>> அருமையான தகவல்களுக்கு நன்றி ஐயா.

N. Ganesan

unread,
Jan 22, 2023, 1:15:59 AM1/22/23
to santhav...@googlegroups.com, Megala Ramamourty, thiruppug...@gmail.com
Dr. Ashraf wrote:
> நாடும் அகமும் அடங்கிய நாடொன்று உண்டு.
> கரு+நாடு+அகம் 😃
> Karnataka

(1) Kannada derives from this name: karu+nADa > karnADa > kannaDa (Consonant assimilation).
Modern Linguistics classifies both Tamil (and its daughter, Malayalam) and Kannada as
South Dravidian languages. Hence, Ilango AdikaL considers Kannada, during its formative stages,
as a kind of Kodum-Tamizh. You can see this in:
கருநாடர் karu-nāṭar   n. prob. id. + நாடு Kanarese people; கன்னடநாட்டார். கொடுங் கருநாடரும் (சிலப். 25, 156).  

(2) பரிபாடலிலும் உண்டு: தமிழ் + நாடு + அகம் = தமிழ்நாட்டகம்
https://www.tamilvu.org/slet/l1251/l1251pag.jsp?pgno=410

பாண்டிய மன்னனின் பொதியில்மலை இருக்குமளவும் மதுரை
தமிழ்நாடெங்கும் தன் புகழ் பரவப் பொலிந்து நிற்பதன்றிக் குன்ற
மாட்டாது.

        தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
        நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
        குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
        குன்றமுண் டாகு மளவு.

> > நாடா? அகமா? நவிலெது நல்லதென்றால்,
> >நாடகம் இஃதென்பேன் நான்!
> >                       -- தில்லைவேந்தன்
😂

N. Ganesan

unread,
Feb 1, 2023, 2:04:00 PM2/1/23
to santhav...@googlegroups.com, Megala Ramamourty, thiruppug...@gmail.com
This weekend I was reading two Tamil books: (1) T. K. Shanmukam (1912 -1973), *enatu nATaka vAzkkai*, 1972, vAnati patippakam (2) C. Subramaniam, *tamizaal muTiyum*, 1962, vaLLuvar paNNai. Both authors record the beginning and the end of the phase respectively of how the name, Tamil Nadu came to replace Madras State officially in Govt. documents and communications and correspondence from the Govt. When the Govt. announced in the State Legislature that Tamil Nadu can be used, it is official announcement. In the mentioned book written in 1962, CS always uses the name Tamil Nadu, never Madras Rajyam, Chennai Arasangam etc.,

In February 1961, Finance Minister CS announced in TN assembly that Tamil Nadu name will be used. And, in that year itself, inscriptions started appearing in Official functions where Tamil Nadu ministers attended. For example, PWD minister, Sri. Kakkan's meeting in 1961 at Pukaziyuur. Sincere thanks to Sri. Aravindh, Chennai who has located the historic inscription of 1961 where Tamil Nadu gets inscribed for the first time in epigraphs.

அ. ச. ஞானசம்பந்தன் தமிழக அரசின் பதிப்புத்துறை, செய்தித்துறைகளில் உயர்பதவி வகித்தவர். பேரா. அ. ச. ஞா. 1960களில் காங்கிரஸ் ஆட்சி ஆவணங்களில் தமிழ்நாடு என்னும் பெயர் பயன்படுத்தத் துவங்கியதைப் பதிவு செய்துள்ளார்கள். https://tamil.wiki/wiki/அ.ச.ஞானசம்பந்தன்
"சென்னை அகில இந்திய வானொலியில் நாடகத் தயாரிப்பாளராக பணியேற்றார். 1959 முதல் தமிழ்நாடு அரசின் செய்தித்துறையின் மொழிபெயர்ப்புத்துறை இணை இயக்குநராக பணியாற்றினார். தமிழ் வெளியீட்டுத்துறை இணை இயக்குநராகவும் பணியாற்றினார். அ.ச. ஞானசம்பந்தன் 1967 முதல் 1970 வரை தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றினார். 1971-ல் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் மதுரை பல்கலை துணைவேந்தரானபோது அவரது அழைப்பின்பேரில் அ.ச. ஞானசம்பந்தன் மதுரை பல்கலை தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்தார். 1973-ல் ஓய்வுபெற்றார். "

சங்க காலம் தொடங்கி இலக்கியங்களில், பாரதியார் செந்தமிழ்நாடெனும் போதினிலே என்னும் பாடலில் பலமுறை *தமிழ்நாடு* என முன்னரே சொல்லியுள்ளார். நவம்பர் 1921-ல் இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்படத் தொடங்கிற்று. கன்மேலெழுத்தாய் *1961-ல் தமிழ்நாடு* முதன்முறையாக எழுதப்படலாயிற்று.  திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு (திசம்பர் 16, 1945 - சனவரி 26, 1957[1]) என்பது முந்தைய இந்திய மாநிலமான ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.
https://ta.wikipedia.org/wiki/திருவாங்கூர்_தமிழ்நாடு_காங்கிரசு

Let me first give how Ma. Po. Sivagnanam proposed the use of Tamil Nadu in 1948 and Sri. K. Kamaraj opposed it. This seems to be the reason why EVeRaa preferred the use of Tamilakam (1949) as Ma.Po.Si went for Tamil Nadu in 1948. In the 1948 Coimbatore Tamil MaakaaNa Congress, CS, C. P. Subbiah, Ubayathulla ... requested Kamaraj to allow MaPoSi to tell his views. When the time came (1961), it was CS who announced and implemented Tamil Nadu in the then Govt. documents and correspondence. Anna changed the name officially in English also after DMK came to power. For this Indian Constitution had to be changed to drop Madras State to Tamil Nadu. Nowadays, even the Indian Prime Minister often talks of Tamil's antiquity and special position in India and its history.  ~NG

------------------

தமிழ் மாகாண 43வது அரசியல் மாநாடு
( டி. கே. சண்முகம், எனது நாடக வாழ்க்கை, 1972, வானதி பதிப்பகம்)

1948 ஜனவரியில் தமிழ் மாகாண 43-வது அரசியல் மாநாடு கோவையில் நடைபெற்றது. அந்த மாநாட்டு நிதிக்காக 17-1-48இல் நாங்கள் உயிரோவியம் நாடகம் நடித்து அதன் வசூல் ரூ. 1448.00 முழுவதையும் மாநாட்டின் தலைவர் திரு காமராஜ் அவர்களிடம் கொடுத்தோம். முதல் அமைச்சராக இருந்த திரு ஒமந்துர் ராமசாமி ரெட்டியார் அன்று தலைமை தாங்கிப் பேசினார். தலைவர் காமராஜ் அவர்களும் பாராட்டினார். நாடக ஆசிரியர் திரு நாரண.துரைக்கண்ணன் அவர்களுக்கும் பொற் பதக்கமும் வழங்கினார்.

*இருபெரும் தலைவர்கள் போட்டி*

19.1-48இல் நடைபெற இருந்த அந்த மாநாட்டுத்தலைவர் தேர்தலிலே தான் திரு ம. பொ. சி. அவர்கட்கும் திரு காமராஜ் அவர்கட்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. திரு ம. பொ. சி. அவர்கள் பெறும் பதவிக்காகப் போட்டியிடவில்லை. அதை அவரே தமது ‘தமிழ் முரசு’ இதழில் விளக்கமாக எழுதியிருந்தார். வேங்கடமலை குமரி முனைக்குள் அடங்கிய தமிழ் மாகாணம அமைய வேண்டும் என்பதற்காகவே திரு ம. பொ. சி போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. மூன்றில் ஒரு பங்கு வாக்குகளே அவருக்குக் கிடைத்தன. கிடைத்த வாக்குகள் 111. காங்கிரஸ்காரராகிய திரு ம. பொ. சி. தோல்வியடைந்ததிைக், கேலி செய்யும் முறையில் அப்போது நடைபெற்று வந்த ஒரு. காங்கிரஸ் நாளிதழ் ‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’ கட்டம் கட்டிப் பிரசுரித்திருந்தது.

*‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’* என்ற தலைப்பைப் படித்ததும் என் மனம் வருந்தியது. ஒரு காங்கிரஸ் நாளிதழ் மற்றொரு காங்கிரஸ் ஊழியர் தோல்வி அடைந்ததை இவ்வாறு நையாண்டி செய்திருந்தது எனக்கு வியப்பாகவே இருந்தது.

*பக்தவத்சலனார் தீர்மானம்*

1948 ஜனவரி 18,19இல் தமிழ் மாகாண அரசியல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நானும் கலந்து கொண்டு துவக்கத்தில் பாடல்கள் பாடினேன். இரண்டாம் நாள் மேடையில் அன்றைய முதல் அமைச்சர் திரு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களும், அன்றையத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், மாநாட்டின் தலைவருமாகிய திரு காமராஜ் அவர்களும், திரு ஜி. டி. நாயுடு போன்ற உள்ளுர்ப் பிரமுகர்களும், ஏனைய அமைச்சர்கள் சிலரும், திரு ம. பொ. சி. அவர்களும் வீற்றிருந்தார்கள். நானும் மேடையில் அமர்ந்திருந்தேன். மாநாட்டிலே அமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

இந்தியாவில் மொழி வழிப்பட்ட மாகாணங்கள் அமையும் போது தமிழர் பெருவாரியாக வாழும் தொடர்ந்தாற்போலுள்ள பகுதிகளைக்கொண்ட தனி மாகாணம் அமைக்க வேண்டும் என்று அத்தீர்மானம் கூறியது. இது திரு ம. பொ. சி. அவர்களையும் அவரை ஆதரித்த காங்கிரஸ் காரர்களையும் திருப்திப் படுத்துவதற்காகவே கொண்டுவந்த தீர்மானம். ஆனால் தீர்மானம் மொழி வழி மாகாணங்கள் அமைக்க வேண்டுமென்று உறுதியாகச் சொல்லாமல் அமையும்போது என்று சொல்லப்பட்டது குறித்து திரு ம.பொ.சி. அதிருப்தியடைந்தார். அவர் எழுந்து தம்முடைய கருத்தை அறிவித்தார். அத்தோடு, *வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரி முனையும் உள்ள தமிழ்நாடு வேண்டும்* என்ற திருத்தத்தைப் பிரேரபித்தார். *ஆம்; பின்னல் நடைபெற்ற வட எல்லைப் போராட்டத்திற்கு அன்றே ம. பொ. சி. வித்திட்டா ரென்றே நினைக்கிறேன்.* மாநாட்டுத் தலைவர் *திரு காமராஜ், திரு. ம. பொ. சி. அவர்களின் திருத்தலத்தில் வேங்கடம், குமரிமுனை ஆகிய எல்லைகளைப்பற்றிய பகுதியை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தார். *

*கூச்சலும் குழப்பமும்*

இந்தியாவிலிருந்து பிரிந்துபோகக்கூடிய ‘தனித் தமிழ்நாடு’ ம. பொ. சி. கேட்பதாக, அவர் பொருள் கொண்டு விட்டார். *காரணமின்றி இவ்வாறு மாதாட்டுத் தலைவர் தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தது எனக்கு மட்டுமல்ல, மாநாட்டில் கூடி யிருந்த பிரதிநிதிகள் யாவருக்கும் வருத்தமாக இருந்தது.* தலைவர் காமராஜ் அவர்களின் தவறான கருத்தைப் போக்குவதற்காக நிராகரிக்கப்பட்ட பகுதிக்கு விளக்கம் தர ம.பொ.சி முனைந்தார். ஆனால், தலைவர் காமராஜ் அவரைப் பேசவிடவில்லை. மேடையில் உட்கார்ந்திருந்த எனக்கு மிகவும் ஆத்திரமாக இருந்தது. என்னைப்போல் பிரதிநிதிகள் பலரும் ஆத்திரமடைந்தனார். ‘கிராமணியார் பேசட்டும், கிராமணியார் பேசட்டும்’ என்று சபையில் ‘பெருங்கூச்சல் எழுந்தது. ஆம், திரு ம. பொ. சி. அவர்களைக் கிராமணியர்’ என்றுதான் காங்கிரஸ்காரர்கள் அழைப்பது வழக்கம். அப்போதும் காமராஜர் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. ம. பொ. சி ஒலிபெருக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இடத்தை விட்டு நகராமல் சிங்கம்போல் நின்றார். ஒன்றுபட்ட இந்தியாவைப் போற்றி வரும் ம. பொ. சி. தனி நாடு பிரித்துத் துண்டாட விரும்புகிறார் என்று காமராஜர் பொருள்கொண்டதை யாரால்தான் பொறுக்கமுடியும்? சபையில் கூச்சல் அடங்கவில்லை. பதினைந்து நிமிடங்கள் ஒரே குழப்பமாய் இருந்தது. மேடையில் இருந்தவர்கள் சிலரும், குறிப்பாகத் திரு. சி.சுப்பிரமணியம், திரு சி. பி. சுப்பையா, காலம் சென்ற ஜனாப் உபையத்துலலா முதலியோரும் கிராமணி யாரைப் பேச விடுங்கள் என்று தலைவர் காமராஜரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். முடிவில் ம. பொ. சி. பேச அனுமதிக்கப் பட்டார்.

*கட்டுப்பாட்டைக் காத்த கண்ணியர்!*

“நான் கேட்பது இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் தனி நாடல்ல” என்பதை விளக்கினார். அப்போதும் பிடிவாதமாகத் திருத்தத்தை ஏற்க மறுத்தார் காமராஜர். மீண்டும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் விபரீதம் ஏற்படாமலிருக்கப் போலிஸ் லாரிகள் வந்து பந்தலைச் சுற்றி அணிவகுத்து விட்டன. ஆத்திரப்பட்ட பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளும் நிலையில் இருந்தது. பலாத்காரத்தில் இறங்கிவிடும் அறிகுறிகள் தென்பட்டன. இது கண்ட ம. பொ. சி. மீண்டும் ஒலிபெருக்கி அருகில் வந்து நின்று “தமிழ்ப் பெரு மக்களே! நான் காங்கிரஸ்காரன். அதன் கட்டுப்பாட்டை விரும்புகின்ற ஒரு படைவீரன். நான் தலைவரின் நிராகரிப்பை ஏற்கவில்லையென்றாலும், அதனைத் தொடர்ந்து எதிர்ப்பதன் மூலம் இந்தமாநாடு குழப்பத்தில் கலைவதை விரும்பவில்லை. என்ன ஆதரிக்கும் அன்பர்கள் இப்போது என் வேண்டுகோளை ஏற்று, அமைதி காக்குமாறு வேண்டுகிறேன். தலைவர் விருப்பம்போல் நடத்திக்கொள்ளலாம்” என்று கெம்பீரமாகக் கூறிவிட்டுத் தம் இடத்தில் வந்தமர்ந்தார். மேடையிலிருந்த பலரும் அவரைப் பாராட்டினார். தலைவர் காமராஜ் அவர்களும் கட்டுப்பாடு காத்த ம.பொ. சி அவர்களைப் பாராட்டினார். அந்த நிலையில் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த அந்த ஒரு தீர்மானத்திற்கு மட்டும் மறுநாள் காலை ஷண்முகா தியேட்டரில் மாநாட்டைக் கூட்டி அதன் மீது ஒட்டெடுத்து முடிவு கூறப் போவதாகக் காமராஜ் அறிவித்தார். ஆனால் அப்படி ஒரு மாநாடு நடைபெறவே இல்லை.

அன்று ம. பொ.சி. அவர்கள்காட்டிய உறுதியும்,கொள்கைப் பற்றும், நாட்டுப் பற்றும் எனக்கு அவர்பால் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தின. மறுநாள் ஜி. டி. நாயுடு அவர்கள் இல்லத்திற்கு நாங்கள் சென்றிருந்தபோது, “நீங்கள் ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டு அஞ்சா நெஞ்சுடன் சிங்கம்போல் நின்ற நிலையைக் கண்டு நான் உங்களைக் காதலித்து விட்டேன்” என்று கூறினார் நாயுடு.

திரு ம.பொ.சி.க்கு நிதி திரட்ட வேண்டுமென்று 1948இல் திரு சின்ன அண்ணாமலை முயற்சி செய்தார். கோவை தேசபக்தர் திரு சுப்ரி மூலம் 500 ரூபாய்கள் நிதி திரட்டியதாக நினைவு.இதைக் குறித்து திரு ம. பொ. சி. எனக்குக் கடிதம் எழுதினார். “இது என் அனுமதியில்லாமல் நடைபெறுகின்றது. இந்த முயற்சியை நான் விரும்பவில்லை” என்று அறிவித்திருந்தார். இதன் பிறகு திதி திரட்டும் முயற்சி கைவிடப்பட்டது. அப்போது ம. பொ. சி. அவர்களின் ஐம்பதாண்டு நிறைவுநாளில் நானே வரவேற்புக் கழகத் தலைவராயிருந்து நிதி திரட்டிக் கொடுத்துக் கெளரவிக்க வாய்ப்பு ஏற்படுமென்று சிறிதும் எண்ணவே இல்லை. T. K. Shanmukam

Travancore_TN_Congress.jpg
MaPoSi with T. K. Bhagavathy, b/o T. K. Shanmukam.

page1-360px-எனது_நாடகவாழ்க்கை.pdf.jpg


kanmani tamil

unread,
Feb 2, 2023, 12:21:18 AM2/2/23
to vallamai
ம.பொ.சி. காலத்து நிகழ்வுகள்    தமிழகத்தில் மிக மிக நாகரிகமான அரசியல்  நிலவியதைக் காட்டுகின்றன. 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf85fEX_utuRviE2crGD2GuzqQpmusnOQhvza5RK9asMw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Feb 14, 2023, 8:25:19 AM2/14/23
to Santhavasantham

மா. பவானி, கல்வெட்டியற்றுறை, தமிழ்ப் பல்கலை:
“ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்”

ஆம். பேராசிரியர் பசுபதியார் போன்றாரால் தமிழ் பத்திரமாக இருக்கிறது; இருக்கும். சங்க காலச் சேரர் தலைநகர் கரூர்க்காரர் பசுபதி ஐயா. சிறந்த ஓவியர். அறிஞர் அண்ணா யேல் பல்கலை வந்தபோது அவர் பிஎச்டி மாணாக்கர். இந்திய மாணவர்கள், தமிழர்கள் சார்பாக வரவேற்று, எல்லா ஏற்பாடுகளுக்கும் உதவியவர். அவரது வலைப்பதிவு https://s-pasupathy.blogspot.com/ தமிழ்க் கலைகளுக்கும், கவிதைக்கும் ஓர் கருவூலம். சந்தவசந்தக் குழுமம் பாரதியார் பரம்பரையின் குடும்பம். தமிழ்க் கவிதை, கலைகள், நயங்கள் எல்லாவற்றையும் பேச, ஆய, துய்க்க ஓர் ஆலமரமாய் சந்திராதித்தர் உள்ளவரை திகழ கால்கோள் நாட்டிய மேதைகளில் முக்கியமானவர். என்போன்றவர் மீது பேரன்பு பூண்டவர் பேரா. பசுபதி. இன்னும் 10 ஆண்டு இருந்திருக்கலாம்.

--------------------

தமிழ்நாடு, தமிழ், தமிழர் பற்றிய ஆய்வினைத் தொடங்கி உள்ளீர்கள். வாழ்த்துகள். தமிழ்நாடு என்று தனிச்சொல்லாக ஏதாவது கல்வெட்டில் இருந்தால் அனுப்பவும். பிப்ரவரி 24, 1961-ல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு மசோதாவைத் சி. சுப்பிரமணியம் தாக்கல் செய்தார். அப்போது நிதியமைச்சர். நிறைவேறிய அத் தீர்மானத்தின் வாயிலாக, “தமிழ்நாடு” என்று சென்னை ராஜ்ஜியம் முதன்முதலாகக் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படலாயிற்று. தமிழ்மொழியில் வெளிவரும் அரசாங்க ஆவணங்களில், கடிதங்களில் தமிழ்நாடு எனப் பதிவாகத் தொடங்கியது. 1961-ல் புகழியூரில் முதல்முதலாகத் “தமிழ்நாடு” எனப் பதிவுசெய்யும் கல்வெட்டு கிடைக்கிறது. பின்னர், தோட்டக்குறிச்சியிலும், போடிநாயக்கனூரிலும், திருநெல்வேலியிலும் காண்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தபின், ஆங்கிலத்திலும் "Tamil Nadu" என்றே எழுத அண்ணா வகைசெய்தார். இராஜாஜி “Tamil Nad" என எழுத வேண்டும் என்ற யோசனை தந்தார். அண்ணா  கூட அதற்கு இசைந்துவந்தார். சிலம்புச்செல்வர் மபொசி "Tamil Nadu" என்றே எழுதவேண்டும் எனச் சாதித்தார். அதுவே, அதிகாரப்பூர்வமான பெயராக ஆங்கிலத்தில் நிலைத்தது. மபொசி அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரைப் பயன்படுத்த 1948-ல் கோயம்புத்தூரில் நடந்த தமிழ் மாகாணக் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்நாடு பெயரைக் காமராஜர் ஆதரிக்கவில்லை. மபொசி தொடங்கியதால், தமிழ்நாடு என்ற பெயரை விட்டுவிட்டு, திராவிடநாடு, தமிழகம் என்ற பெயர்களைப் பெரியார் ஈவேரா ஆதரித்தார். இதனை அண்ணாவும் சொல்லியுள்ளார். இதெல்லாம் பற்றி, ஔவை டி. கே. சண்முகம் தன் வாழ்க்கை வரலாற்று நூலில் விரிவாக எழுதியுள்ளார்: https://groups.google.com/g/vallamai/c/ky0Ouv1_vEw/m/mAftihZaAQAJ

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என 1921-ல் காந்தியடிகள் உத்தரவால் பெயர் வந்தது, மொழிவாரி மாநிலங்கள் அமைய அப் பெயர்களே கால்கோள் நாட்டின. பின்னர் சிலம்புச்செல்வர் மபொசி முயற்சிகள். சங்கரலிங்கனார் உயிர்த் தியாகம் (1956). பிப்ரவரி 24, 1961 தமிழக அரசின் தீர்மானம் - தமிழில் “தமிழ்நாடு” என அதிகாரப்பூர்வமாக எழுதலாம் என்ற அறிவிப்பு. அதனால், எழுந்த நான்கு “தமிழ்நாடு” கல்வெட்டுகள். இன்னும் இருக்கலாம். தேடுவோம். இளம்பூரண அடிகள் “நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்று வழிகாட்டியாய் அமைந்தார். அதை அதிகாரப்பூரவமாக, தமிழிலும், ஆங்கிலத்திலும் அமுல்படுத்தப் பலர் உழைத்தனர். 1967-க்கு முந்தைய தமிழ்நாடு எனப் பொறித்த நான்கு கல்வெட்டுகள் இந்த நீண்ட கால முன்னெடுப்புக்குச் சான்றாதாரங்கள், முக்கிய ஆவணங்கள்.  இதுபற்றி என் பதிவுகள் இரண்டு:

தமிழ்நாடு என்ற பெயர் - 2000 ஆண்டுகளில் தமிழில் முதன்முதலாய்க் கல்வெட்டுகளில்!
http://nganesan.blogspot.com/2023/01/tamilnadu-inscription-1962-thottakurichi.html

தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962), தோட்டக்குறிச்சி (கரூர்)
http://nganesan.blogspot.com/2023/01/tamilnadu-inscription-thottakurichi.html

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages