போ.வேல்சாமி
இந்திய வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு போன்ற வரலாற்று நூல்களை முதல்முதலாக உண்டாக்கிக் கொடுத்தவர்கள் வெள்ளையர்களான அயல்நாட்டுக்காரர்கள்தான். அதே போன்று இந்தியாவின் தத்துவ சிந்தனைகளைப் பற்றிய நூல்களையும் தத்துவ சிந்தனை வளர்ந்து வந்த வரலாற்றைக் கூறும் நூல்களையும் உருவாக்கித் தந்தவர்களும் வெள்ளையர்கள்தான். சுருக்கமாகக் கூறினால் இந்தியத் தத்துவ சிந்தனைகளைப் பேசுகின்றதாகக் கூறப்படும் வேதங்கள், உபநிடதங்கள், காவியங்கள், பௌத்தமதம் சார்ந்த தத்துவ நூல்கள் போன்றவற்றை முதல்முதலாக அச்சு நூல்களாக்கி அதற்கான விளக்கங்களையும் கொடுத்தவர்கள் அயல்நாட்டுக்காரர்கள்தான். இவர்களைப் போன்றவர்கள் தத்துவ நூல்களை எழுதி சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர்தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்திய தத்துவம் பற்றிய நூல்களை எழுதத் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இவர்கள் தத்துவம் பற்றி எழுதுவதற்கான ஆதார நூல்களாக எடுத்துக்கொண்ட நூல்களும் அயல்நாட்டுக்காரர்கள் எழுதியதுதான் என்பதை ராதாகிருஷ்ணனே குறிப்பிடுகின்றார்.
இப்படியாக இந்தியாவில் நிலவிய சிந்தனை மரபுகளை நமக்கு அடையாளம் காட்டியவர்கள் மேல்நாட்டவர்கள் தான். இந்திய மரபிற்குள் ஆன்மிகமும் அதாவது கடவுளை ஏற்றுக் கொண்டு போற்றிய மரபும் இருந்தது. அதனை அவர்கள் ‘வைதீக மரபு’ என்று குறிப்பிட்டனர். கடவுளை ஒத்துக்கொள்ள மறுத்து பகுத்தறிவின் அடிப்படையில் தர்க்கரீதியான விவாதங்களை நடத்தி, அதன் அடிப்படையில் தங்கள் கொள்கைகளை அதாவது தத்துவங்களை அமைத்துக் கொண்டவர்களும் இருந்தனர். அவர்கள் ‘அவைதீகமரபினர்’ என்று அழைக்கப்பட்டனர். ஆனால் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்தியச் சிந்தனை மரபு என்பது வைதீகத்தின் அடிப்படையிலான ஆன்மீக மரபாகத்தான் இருந்தது என்று வலியுறுத்தி, அதனையே உண்மையான இந்தியத் தத்துவ சிந்தனை மரபு என்று கூறி வந்தனர். இப்படியாக இவர்கள் எல்லாம் குறிப்பிட்டுக் கூறுவது எவ்வளவு பொருத்தமற்றது அல்லது அபத்தமானது என்பதை, இந்தியத் தத்துவ சிந்தனை வரலாற்றில் புகழ்பெற்ற அறிஞர்கள் பலரும், கடவுள் மறுப்பைத் தங்கள் கொள்கையாகக் கொண்டு மிகச்சிறப்பான தத்துவ விவாதங்களைப் பேசிய சிந்தனையாளர்களின் கருத்துகளை தேவிபிரசாத் சட்டோபாத்யாய தன்னுடைய எல்லா நூல்களிலும் ஆராய்ச்சி செய்து ஆதாரத்துடன் விளக்குகின்றார். சட்டோபாத்யாயவின் இந்த நூல்கள் உலக அறிஞர்களால் பெரியளவில் ஒத்துக்கொள்ளப்பட்டு வரவேற்கவும் பட்டன. அந்த வரிசையில் ‘இந்திய நாத்திகம்’ என்ற இந்த அருமையான நூல் தமிழ்மொழியில் முதல்முதலாக மொழிபெயர்க்கப்பட்டு பாரதி புத்தகாலயத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய கருத்தோட்டம் உள்ள நூல்களை, தான் எழுதுவதற்கான காரணத்தையும் சட்டோபாத்யாய கூறுகின்றார். இருபதாம் நூற்றாண்டு நவீன இந்தியாவின் அரசியலைப் பேசிய பலரும் ஆன்மீகம் மட்டுமே வளர்ந்து வந்த இந்தியாவில் நாத்திகக் கருத்தை தனது அடியோட்டமாகக் கொண்ட மார்க்சியம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மறுத்து உரைத்து வந்தனர். இத்தகையவர்களின் மறுப்புகள் பொருத்தமற்றவை அல்லது பொய்யானவை என்பதை இந்தியத் தத்துவ சிந்தனைகளின் வரலாற்றில் இருந்தே சட்டோபாத்யாய நிறுவுகின்றார். அதன் வழியாக இந்திய தத்துவ சிந்தனை வரலாற்றில் கடவுளை ஏற்றுக்கொண்டவர்களின் சிந்தனைகளை விட, அதனை மறுத்து விவாதித்தவர்களின் தத்துவ நூல்கள் தான் உலக அறிஞர்களிடையே இந்தியத் தத்துவத்திற்கான ஒரு நன்மதிப்பையும் பெற்றுத் தந்தவை என்பதை வெளிபடுத்துகின்றார்.
இந்திய தத்துவ சிந்தனைகள் மேல்நாட்டுத் தத்துவச் சிந்தனைகளோடு ஒப்ப வைத்து பேசப்படுவதற்கு அடிப்படையாக அமைந்த நூல்கள் பௌத்தம், நியாய வைசேசிகம் போன்ற கடவுள் மறுப்பைத் தங்கள் கொள்கைகளாகக் கொண்டவைதான் என்பதை சட்டோபாத்யாய தன்னுடைய ஆய்வுகளின் வழியே விளக்குகின்றார். சாங்கியம், புத்தரின் நாத்திகம், பௌத்த மதத்தின் பிரிவுகளான வைபாசிகம், மஹாயானபௌத்தம், சமணம், மீமாம்சம், நியாய வைசேசிகம் போன்ற பிரிவினரை இதற்கு எடுத்துக்காட்டாக சட்டோபாத்யாய கூறுகின்றார். பின்பு கடவுள் மறுப்பு பற்றிய அவர்களுடைய விவாதங்களை தனித்தனியாக விளக்கி உரைக்கின்றார். இந்திய தத்துவத்தை இத்தகைய பார்வையில் விளக்கக் கூடிய அறிஞராக சட்டோபாத்யாயவை மட்டுமே காண்கின்றோம். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சைவ சிந்தாந்தத்தை விளக்கிப் பேசுகின்ற நூல்களும் அத்தகைய நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய சிவஞான முனிவர்(18ம் நூற்.) போன்றவர்களும் இத்தகைய சமயத்தார்களை ‘புறப்புறச் சமயத்தைச்’ சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடுவார்கள். அவர்கள் உலகாயதர், நான்கு வகை பௌத்தர்கள், சமணர்கள் என்று கூறுகின்றனர். இவர்கள் அனைவரும் ‘நாத்திகர்கள்’ என்று சிவஞான முனிவர் கூறுகின்றார். சட்டோபாத்யாய கூறுவதைப் போன்று வேதத்தை ஒத்துக்கொண்டு கடவுள் உண்மையை மட்டும் மறுக்கும் மீமாம்சகர்களை ‘புறச்சமயத்தைச்’ சேர்ந்த நாத்திகர்கள் என்று சிவஞான முனிவர் குறிப்பிடுகின்றார். சுருக்கமாகச் சொன்னால் வேதத்தை மறுத்து தங்களுக்கென்று ஒரு ‘சமயத்தை’ உண்டுபண்ணிக் கொண்டவர்களையும் வேதத்தை ஏற்றுக்கொண்டு கடவுள் என்பதை ஒத்துக்கொள்ளாத மீமாம்சகர்களையும் நாத்திகர்கள் என்று சிவஞான முனிவர் குறிப்பிடுகின்ற அதே முறையில் சட்டோபாத்யாயவும் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இத்தகைய தமிழ் நூல்களை சட்டோபாத்யாய படிக்கும் வாய்ப்பு பெற்றிருந்தால் ‘இந்திய நாத்திகம்’ நூலினுள் அவர் விவாதிக்கின்ற பல இடங்கள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய விவாதங்கள் எல்லாம் கடவுளின் இருப்பை மறுக்க வேண்டும் என்பதற்காக மட்டும் எழுந்தவைகள் அல்ல. மனிதர்கள் வாழுகின்ற உலகத்தைப் பற்றியும் இயற்கையின் நிகழ்வுகள் பற்றியும் மனித வாழ்வின் பிரச்சனைகளையும் துயரங்களையும் குறித்தும் இந்த பிரச்சனைகளிலிருந்தும் துயரங்களிலிருந்தும் உலக மக்களை எப்படி விடுவிப்பது என்றும் சிந்தித்த மனிதர்கள் பலர். அவர்கள் எல்லோருக்கும் பொதுவாக ஒரு கேள்வி எழுந்தது. உலகையும் மனிதரையும் படைத்தவர் கடவுள் என்றால் உயிரினங்களுக்கிடையே, மனிதர்களுக்கிடையே மிகப் பயங்கரமான ஏற்றத்தாழ்வுகளும் அதனைச் சார்ந்து வருகின்ற பெரும் துயரங்களையும் மனிதர்கள் சந்திக்க வேண்டிய அவசியம் ஏன் நிகழ்ந்தது? சிலர் குறிப்பிடுகின்றனர்; உலக வரலாற்றில் மாபெரும் சமுத்திரங்களில் உள்ள தண்ணீரை விட மனிதர்கள் வடித்த கண்ணீர் தான் அதிகம். பிறந்ததிலிருந்து இறக்கும் வரை இவ்வாறு சொல்ல முடியாத துயரங்களில் வீழ்ந்து துடிக்கும் உயிர்களைப் படைப்பதற்கு ஒரு கடவுள் வேண்டுமா?
பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்கும் போதும் கடவுளின் இருப்பைப் பற்றிய செய்திகள் கேள்விக்குள்ளாகின்றன. இந்த உலகத்தை உருவாக்குவதற்கு முன் கடவுள் தோன்றியிருந்தால் அவர் எங்கே இருந்தார்? நினைத்த நேரத்தில் எதனையும் உண்டு பண்ணக் கூடிய ஆற்றல் கடவுளுக்கு இருந்தால் மனிதனோ மரங்களோ உருவாகி வளர்வதற்கு காலமும் இடமும் தேவைப்படுவது ஏன்? கடவுள் ஒருவர் தான் என்றால் பல்லாயிரம் மதங்களும் அதற்காக பல்லாயிரம் கடவுள்களும் உலகில் வணங்கப்படுவதில் என்ன நியாயம் இருக்கின்றது. இத்தகைய கேள்விகளுடன் கடவுளின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு பல மதங்களிலும், மடாலயங்களையும் ஆதீனங்களையும் உருவாக்கி மக்களை கடவுளின் பெயரால் தங்களை நம்ப வைத்த மதத் தலைவர்கள், மதத்தின் ஊடாக (அரசு) அதிகாரத்தைக் கைக்கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி துடிதுடிக்க வைத்து துயரத்தில் ஆழ்த்திய வரலாற்று நிகழ்வுகளுக்கு என்ன பதில் சொல்வது? அத்துடன் கடவுளுக்கு எதிரானவை என்று அவர்கள் சொல்லி வந்ததையே தங்களுடைய நடைமுறை வாழ்வாகக் கொண்டிருந்தனர் என்பதை உலக வரலாற்றுச் செய்திகள் ஏராளமாகப் பேசுகின்றன. எனவே பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்தவர்கள் அனைவரும் கடவுள் உண்டு என்பதற்கு மாற்றான விவாதங்களை முன்வைத்தனர். கடவுளின் பெயரால் செய்யப்படும் கயவாளித்தனங்களை கடவுள் மறுப்பால் தானே எதிர்கொள்ள முடியும் என்பது அவர்களுடைய கூற்று.
பல்வேறு வகைப்பட்ட பழமையான நூல்களின் பல பகுதிகளில் காணப்படுகின்ற நுட்பமான செய்திகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டி, நவீன கால சிந்தனைகளின் அடிப்படையில் அவற்றை ஒப்பாய்வும் பகுப்பாய்வும் செய்து அதன் விளைவாகத் தான் கண்ட முடிவுகளை தன் நூல்களில் பதிவுகளாகவும் விவாதங்களாகவும் படைத்தளிக்கின்றார் சட்டோபாத்யாய. அவர் எழுதியுள்ள பல நூல்களையும் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் இந்த நூலையும் எளிமையாகப் புரிந்து கொள்வார்கள். ஆனால் இத்தகைய அற்புதமான கருத்துகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் இந்நூலை வாசிக்கத் தொடங்குபவர்கள் ஒரு சில விசயங்களை நினைவில் கொள்ள வேண்டும். தமிழிசை, கர்நாடக இசை, சைவ சிந்தாந்த நூல்கள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள் அதற்கு முன்நிபந்தனையாக சிலவற்றை முயற்சி செய்து பயில வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோன்று இந்த அற்புதமான நூலையும் புரிந்துகொள்வதற்கு சில முன்நிபந்தனைகள் உள்ளன. இந்திய தத்துவ பாரம்பரியத்தில் பல்வேறு வகையான குறியீட்டுச் சொற்கள் புழக்கத்தில் உள்ளன. சில வகையான குறியீட்டுச் சொற்கள் குறிப்பிட்ட தத்துவத்தின் மொத்த சாராம்சத்தையே தனக்குள் கொண்டிருக்கும். ஏகாந்த வாதம், அனேகாந்த வாதம், சமவாய சம்பந்தம், சத்காரிய வாதம், அசத்காரிய வாதம் இப்படி பல குறியீட்டுச் சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இவைகளை எளிய முறையில் புரிந்துகொள்வதற்கு தமிழில் சில நூல்கள் உள்ளன. கி.லட்சுமணன் எழுதிய ‘இந்திய தத்துவ ஞானம்’, ‘இந்திய தத்துவத்திற்கு ஓர் அறிமுகம்’ என்ற ஹிரியண்ணாவின் நூல் போன்றவற்றை வாசிப்பதுடன் சட்டோபாத்யாயவின் உலகாயுதம், இந்திய தத்துவத்தில் மறைந்தனவும் இருப்பனவும் போன்ற நூல்களைத் தொடர்ந்து வாசித்து வந்தவர்களுக்கு இந்திய நாத்திகம் என்ற இந்த நூல் பெருவிருந்து போன்ற சுவையைக் கொடுக்கும். மற்றவர்கள் சிறிது முயற்சியும் அக்கறையும் எடுத்தால், இவ்வகையான அறிவுக்கு ஒளியேற்றும் நூல்களை எளிமையாகவே புரிந்துகொள்ளலாம். இத்தகைய புரிதல் பெருவாரியான மக்களை ‘அறிஞர்கள்’ என்ற போர்வையில் முட்டாள்களாக்கி வரும், வந்த பல ‘பேரறிஞர்களின்’ உள் நோக்கத்தைப் புரிய வைக்கும். இன்னொரு வகையில் சொன்னால் நம் எல்லோருடைய மனதையும் பீடித்து திசை திருப்புகின்ற ஆதிக்க கருத்தியல்களில் இருந்து நம்மை விடுவித்து நம் அறிவை சுதந்திர சிந்தனையில் ஈடுபடுத்தி விடுதலையைக் கொடுக்கும் என்பது திண்ணம்.
இத்தகைய அற்புதமான நூலை அழகாகத் தமிழில் மொழிபெயர்த்த ‘சாமி’ அவர்களையும் தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் வழியே நல்விருந்தளிக்கும் பாரதி புத்தகாலயத்தாரையும் நாம் வாழ்த்துவோம்.
அன்பின் பானுகுமார்:தமிழ்ப் பாரம்பரியத்தை ‘உள்ளது உள்ளபடி’ புரிந்துகொள்ளும் அறிஞர்கள் மேடையாக மின்தமிழ் திகழ்கிறது*. அவ்வகையில் நம் முன்னோர்களின் சிந்தனைகள் அவை வைதீகச் சிந்தனையாக இருந்தாலும், எதிர்ச்சிந்தனைகளாக இருந்தாலும் இங்கு இடப்பட்டு அலசப்படுகிறது. இம்மாதிரியான மரபுக் கட்டுடைத்தல் இதற்கு முன் தமிழகத்தில் நடந்ததில்லை. அவ்வகையில் உங்கள் சிந்தனைகள் முக்கியமானவை.
2014-07-18 17:16 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
நீலகேசியை வாசிக்கும்போது என்னுள் எழுந்த கேள்விகள் ஏராளம். அவற்றிற்கு விடைத்தேடி அலைந்த அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. அவ்வாறான கேள்விகளில் ஒன்று, வேத வாத சருக்கத்தில் நீலகேசி வேதவாதியை நோக்கி கேட்ட ஒரு கேள்வி. என்னை வெகுநாட்களாக அரித்துக் கொண்டியிருந்தது. அதற்கு விடை முகமாக சமீபத்திய திருவாளர். கோதண்டராமரின் “என்னதான் இருக்கிறது வேதத்தில்” என்ற இழை என்னுடைய பல கேள்விகளுக்கு விடையாக அமைந்தது எனலாம். இருந்தாலும் அதற்கு முன்னமே திரு. தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் “இந்திய நாத்திகம்” என்ற நூலின் கருத்துக்கள் மூலம் தெளிவடைந்த யான், இருவர் கருத்துக்களும் ஒரே மாதிரி அமைந்திருப்பது, அந்த நூலின் நம்பகத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தியது எனலாம்.
நீலகேசி உங்களுள் எழுப்பிய கேள்விகள் என்ன? பகிர்ந்து கொள்ள முடியுமா?
இந்திய வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு போன்ற வரலாற்று நூல்களை முதல்முதலாக உண்டாக்கிக் கொடுத்தவர்கள் வெள்ளையர்களான அயல்நாட்டுக்காரர்கள்தான். அதே போன்று இந்தியாவின் தத்துவ சிந்தனைகளைப் பற்றிய நூல்களையும் தத்துவ சிந்தனை வளர்ந்து வந்த வரலாற்றைக் கூறும் நூல்களையும் உருவாக்கித் தந்தவர்களும் வெள்ளையர்கள்தான்.
உண்மையில் இந்த மண்ணின் வளத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டு, மொழிமாற்றம் செய்த கருத்துக்களை நம்பி பெரிய இயக்கங்களெல்லாம் தமிழகத்தில் தோன்றி பாரிய அளவு சேதத்தை உண்டுபண்னிவிட்டன. ரங்கன் அடிக்கடி சொல்வது போல் மூலத்தை அணுகும் போக்கு தமிழகத்தில் இல்லை. எளிதாகக் கிடைக்கும் இரண்டாம்தர திறனாய்வுகளை நம்பி மோசம் போய்விடுகிறோம். ஆங்கிலேயரைக் குறைவாகச் சொல்லவில்லை.
இருபதாம் நூற்றாண்டு நவீன இந்தியாவின் அரசியலைப் பேசிய பலரும் ஆன்மீகம் மட்டுமே வளர்ந்து வந்த இந்தியாவில் நாத்திகக் கருத்தை தனது அடியோட்டமாகக் கொண்ட மார்க்சியம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மறுத்து உரைத்து வந்தனர். இத்தகையவர்களின் மறுப்புகள் பொருத்தமற்றவை அல்லது பொய்யானவை என்பதை இந்தியத் தத்துவ சிந்தனைகளின் வரலாற்றில் இருந்தே சட்டோபாத்யாய நிறுவுகின்றார்.
ஆனால் இக்குரல் வலுவாக ஒலிக்கவில்லை என்றே கூறவேண்டும். கம்யூனிசம் எடுபடாமல் போனதற்கு நமது அவைதீக மரபு தெரியாமல் போனது ஒரு முக்கியகாரணம் என்று சொல்லலாம்.
>>அதன் வழியாக இந்திய தத்துவ சிந்தனை வரலாற்றில் கடவுளை ஏற்றுக்கொண்டவர்களின் சிந்தனைகளை விட, அதனை மறுத்து விவாதித்தவர்களின் தத்துவ நூல்கள் தான் உலக அறிஞர்களிடையே இந்தியத் தத்துவத்திற்கான ஒரு நன்மதிப்பையும் பெற்றுத் தந்தவை என்பதை வெளிபடுத்துகின்றார்.>>
ஜப்பான் இந்தியாவின் சாளரம் என்பேன். ஜென் பௌத்தத்தில் ஈர்க்கப்பட்டுவரும் மேலையோருக்கு ஜப்பான் இந்தியாவைக் காட்டிக்கொடுக்கிறது. இவ்வகையில் ஜென் நெறியைத் தந்தவர் யார் என்பதை ஆய்வுபூர்வமாக நிருவ வேண்டிய கடப்பாடு தமிழனுக்கு உண்டு.
‘புறச்சமயத்தைச்’ சேர்ந்த நாத்திகர்கள் என்று சிவஞான முனிவர் குறிப்பிடுகின்றார். சுருக்கமாகச் சொன்னால் வேதத்தை மறுத்து தங்களுக்கென்று ஒரு ‘சமயத்தை’ உண்டுபண்ணிக் கொண்டவர்களையும் வேதத்தை ஏற்றுக்கொண்டு கடவுள் என்பதை ஒத்துக்கொள்ளாத மீமாம்சகர்களையும் நாத்திகர்கள் என்று சிவஞான முனிவர் குறிப்பிடுகின்ற அதே முறையில் சட்டோபாத்யாயவும் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இத்தகைய தமிழ் நூல்களை சட்டோபாத்யாய படிக்கும் வாய்ப்பு பெற்றிருந்தால் ‘இந்திய நாத்திகம்’ நூலினுள் அவர் விவாதிக்கின்ற பல இடங்கள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி இங்கு உண்மையாகப் பேசியவர் ரங்கன் ஒருவர்தான். சிவஞான போதம் பற்றிய உண்மையான விழிப்பை மின்தமிழுக்கு அவர் தந்தார். சிவஞான போதமும் வைதீக மார்க்கமே! என்று காட்டியவர் அவர். அது அப்படி இல்லை எனும் குரல்தான் உரத்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது!
உலகையும் மனிதரையும் படைத்தவர் கடவுள் என்றால் உயிரினங்களுக்கிடையே, மனிதர்களுக்கிடையே மிகப் பயங்கரமான ஏற்றத்தாழ்வுகளும் அதனைச் சார்ந்து வருகின்ற பெரும் துயரங்களையும் மனிதர்கள் சந்திக்க வேண்டிய அவசியம் ஏன் நிகழ்ந்தது? சிலர் குறிப்பிடுகின்றனர்; உலக வரலாற்றில் மாபெரும் சமுத்திரங்களில் உள்ள தண்ணீரை விட மனிதர்கள் வடித்த கண்ணீர் தான் அதிகம். பிறந்ததிலிருந்து இறக்கும் வரை இவ்வாறு சொல்ல முடியாத துயரங்களில் வீழ்ந்து துடிக்கும் உயிர்களைப் படைப்பதற்கு ஒரு கடவுள் வேண்டுமா?
இதற்கு கன்மக்கோட்பாடு பதில் அளிக்கிறது. உலகம் ஒரு நாடகமேடை என்று சொல்லப்படுகிறது. இறைவனின் அவதாரமே, ‘விடம்பனம்’ என்றுதான் பார்க்கப்படுகிறது. மறுஜென்மத்தை ஏற்றுக்கொள்ளும் பௌத்தம் இதை எப்படி மறுக்கவியலும்? நேற்று பாவம் செய்தால் இன்று அனுபவிப்பான் என்று சொல்லித்தான் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறோம்!
பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்கும் போதும் கடவுளின் இருப்பைப் பற்றிய செய்திகள் கேள்விக்குள்ளாகின்றன. இந்த உலகத்தை உருவாக்குவதற்கு முன் கடவுள் தோன்றியிருந்தால் அவர் எங்கே இருந்தார்? நினைத்த நேரத்தில் எதனையும் உண்டு பண்ணக் கூடிய ஆற்றல் கடவுளுக்கு இருந்தால் மனிதனோ மரங்களோ உருவாகி வளர்வதற்கு காலமும் இடமும் தேவைப்படுவது ஏன்? கடவுள் ஒருவர் தான் என்றால் பல்லாயிரம் மதங்களும் அதற்காக பல்லாயிரம் கடவுள்களும் உலகில் வணங்கப்படுவதில் என்ன நியாயம் இருக்கின்றது.
இதற்கு ஏரணமுறையில் பதில் சொல்லப்பட்டுவிட்டது. இதில் எனக்கு சந்தேகம் வருவதில்லை.
இத்தகைய கேள்விகளுடன் கடவுளின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு பல மதங்களிலும், மடாலயங்களையும் ஆதீனங்களையும் உருவாக்கி மக்களை கடவுளின் பெயரால் தங்களை நம்ப வைத்த மதத் தலைவர்கள், மதத்தின் ஊடாக (அரசு) அதிகாரத்தைக் கைக்கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி துடிதுடிக்க வைத்து துயரத்தில் ஆழ்த்திய வரலாற்று நிகழ்வுகளுக்கு என்ன பதில் சொல்வது?
----இதௌ தற்சமயம் ஆழமாக சிந்திக்கக்கூடியது. நேற்று என் மாணவி பாலஸ்தீனில் நடக்கும் வன்முறைகள் பற்றிய எனது சிந்தனைகளைக் கேட்டாள். அவளொரு முஸ்லிம் பெண். மலேசியர்களுக்கும் மத்திய கிழக்கிற்கும் ஸ்னானப் பிராப்தி இல்லையென்றாலும் இஸ்லாம் எனும் குடையில் அகப்பட்டு இப்போது அவதிப்படுகின்றனர். உலக யுத்தத்தை உருவாக்கக்கூடிய அளவில் பண்டைய சமயங்களான யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதிகெட்டுப் போயுள்ளன. சமயம் என்பதை எந்தளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும், எங்கு நிறுத்த வேண்டுமென்ற தெளிவு மனிதர்களுக்கு வேண்டும். அங்குதான் இத்தகைய விவாதங்கள் கூர்மையுற வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன். நோன்பு இருக்கும் சமயம் பார்த்தே யூதர்கள் தாக்குகின்றனர். நோன்பு என்பதை இவர்கள் சமயத்தோடு ஒட்டிப்பார்க்காமல், மனித வைராக்கியம் வலுப்பெற உருவான ஒன்று எனக்கொண்டால் இம்சையிலிருந்து விடுபடலாம். பகுத்தறிவுச் சிந்தனைகள் வலுப்பெற்றாலன்றி உலக நிம்மதிக்கு வேறு வழியில்லை. மதத்தின் பெயரால் கொலையுண்ட மக்கல் இரண்டு உலகப்போர்களில் சாவுற்ற மக்களையும் விட அதிகம் என்று வாசித்துள்ளேன்.>>நா.கண்ணன்* மிகவும் கஷ்டப்பட்டு சிலர் மின்தமிழ் வைஷ்ணவ சார்புடைய குழு என நிறுவமுயன்று தோற்றனர். எனது வேர்களைப் பற்றிய எனது தேடல் என் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சார்ந்தது. அது எவ்வகையிலும் மின்தமிழின் நோக்கோடு குறுக்கிடாது என்பதை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
There may be an issue of denial of shocking revelation of truth against their general understanding and belif, or like or wish, the accomodating issues of memory than to assimilation in line with own belief system. I used to wonder this as a faculty, a protective mechanism that we do not easily get fooled and robbed or eaten alive. This is more strong in the case of religious faiths! So we could expect: அவர் வழி வந்தவர்கள் கூட அவர் செய்த புரட்சியை உணராதே இன்னும் இருக்கின்றனர் என்றே நினைக்கின்றேன்
__._,_.___
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (2)
Yahoo GroupsImproved Group Homepage!The About page of your Group now gives you a heads up display of recent activity, including the latest photos and files
Yahoo GroupsControl your view and sort preferences per Yahoo GroupYou can now control your default Sort & View Preferences for Conversations, Photos and Files in the membership settings page.
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
டாக்டர்.லோகநாதன்,இந்த இழையின் நோக்கம் நீலகேசி, இந்திய நாத்திகம் என்ற வகையிலும் அது சார்த்த விஷயங்களாக அமைவதே இந்த இழைக்குப் பொருத்தமாக இருக்கும். உங்கள் ஒத்துழைப்பிற்கு எமது நன்றி.சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
நீலகேசியை வாசிக்கும்போது என்னுள் எழுந்த கேள்விகள் ஏராளம். அவற்றிற்கு விடைத்தேடி அலைந்த அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. அவ்வாறான கேள்விகளில் ஒன்று, வேத வாத சருக்கத்தில் நீலகேசி வேதவாதியை நோக்கி கேட்ட ஒரு கேள்வி. என்னை வெகுநாட்களாக அரித்துக் கொண்டியிருந்தது. அதற்கு விடை முகமாக சமீபத்திய திருவாளர். கோதண்டராமரின் “என்னதான் இருக்கிறது வேதத்தில்” என்ற இழை என்னுடைய பல கேள்விகளுக்கு விடையாக அமைந்தது எனலாம். இருந்தாலும் அதற்கு முன்னமே திரு.
தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் “இந்திய நாத்திகம்” என்ற நூலின் கருத்துக்கள் மூலம் தெளிவடைந்த யான், இருவர் கருத்துக்களும் ஒரே மாதிரி அமைந்திருப்பது, அந்த நூலின் நம்பகத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தியது எனலாம்.
பொ.வேல்சாமி அந்நூலுக்கு எழுதிய விமர்சனக் கட்டுரையைத் தங்கள் பார்வைக்கு இங்கு வைக்கிறேன்...