பள்ளி அளவிலான கேரம் போட்டி

6 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Jul 23, 2026, 5:27:17 AM (13 days ago) Jul 23
to

 பள்ளி அளவிலான கேரம் போட்டி

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான கேரம் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன.

போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆண்கள் தனிநபர் பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவர் சரண்குமார் முதல் இடத்தையும், ஏழாம் வகுப்பு மாணவர் முகித் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். பெண்கள் தனிநபர் பிரிவில் ஆறாம் வகுப்பு மாணவி ஏஞ்சல் ஜாய் முதல் இடத்தையும், எட்டாம் வகுப்பு மாணவி மோனிகா இரண்டாம் இடத்தையும் கைப்பற்றினர்.

போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் ஸ்ரீதர் சிறப்பாக செய்திருந்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இம்மாணவர்கள் வட்டார அளவில் நடைபெறவுள்ள கேரம் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

பட விளக்கம்:
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி அளவிலான கேரம் போட்டிகளை தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தார்.



IMG_6313.JPG
IMG_6312.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages