/// #கீழே கிடக்கும் மாம்பழத்தை எடுத்தா 5,000 வெள்ளி Fine".. சிங்கை சட்டத்தை கண்டு ஆடிப்போன இந்திய பெண்..!
சிங்கப்பூரில் வசிக்கும் பிரியங்கா சின்கா என்ற இந்தியப் பெண் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிங்கையில் பொது இடங்களில் உள்ள மரங்களிலிருந்து விழும் மாம்பழங்களை அனுமதியின்றி நாம் எடுத்தால் 5,000 சிங்கப்பூர் டாலர் (சுமார் 3.74 லட்சம் ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படும் என்று அவர் விளக்கியுள்ளார். நமது சிங்கப்பூர் சட்டப்படி, அரசு நிலத்தில் உள்ள மரங்கள் மற்றும் பழங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம். இவற்றை பறிப்பதோ அல்லது தரையில் விழுந்ததை எடுப்பதோ சட்டப்படி குற்றமாகும். இதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும், மீறினால் பெரும் அபராதத்துடன் 6 மாத சிறைத்தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் வெளியிட்ட இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.///
தனது தோட்டத்து மாமரத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்த மாம்(கனியோ/ காயோ) பழத்தை ஒரு கோசர் குலப்பெண் எடுத்துத் தின்றதற்காக அவளுக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன்.
அவளது உற்றாரும் உறவினருமாகிய சுற்றத்தார் 'அவளது எடைக்கு எடை பொன்னும் 81யானைகளும் தண்டமாகத் தருகிறோம்; அவளை உயிரோடு விட்டு விடுக' என்று எவ்வளவு கெஞ்சியும் நன்னன் மறுத்து விட்டான்.
கோசர் வணிகர் ஆதலால்; அவர்கட்கு இந்த தண்டத் தொகை ஒரு பொருட்டு இல்லை. ஆனாலும் நன்னன் தன் பிடிவாதத்தை நிலைநாட்டிக் கொலைத் தண்டனையை நிறைவேற்றினான்.
விளைவு:
பெண்கொலை புரிந்த நன்னன் என்ற பட்டம். இவனைப் பாட மாட்டேன்; பாட மாட்டேன் என்று சொல்லியே பாடி வைத்தார்கள். இந்தச் சம்பவம் அக்காலத்தில் வேளாண்மையின் காவல் எவ்வளவு பெரிய சவாலாக இருந்தது என்ற உண்மையைக் காட்டுகிறது.
இப்போது சிங்கப்பூர் அரசின் சட்டதிட்டமும் வேளாண்மையில் காவல் எவ்வளவு முக்கியம் என்பதைத் தான் உணர்த்துகிறது.
சக