______________________________
பாசிலை தோய் தரூஉ படர் வெங்களியிடை
குருகு குளித்து கெண்டை இரை கொளீஇ
அண்ணிய ஞாழல் நெடுஞ்சினை மூசும்
பூஞ்சிறைத் தும்பி துள்ளிய கயலின்
துடி துடி உடுக்கை அன்ன காட்சியில்
அவனும் துடித்தான் அவள் விழி என்ன
உள்ளி உள்ளி உள்தொறும் ஒடுங்கி.
கல்லென வெள்ளென சுள்ளென் றோரொலி
தூண்டில் எறிய புறத்துப் பாலொரு
புரிவளை இறையள் கொடுவிழை காட்டி
புல்லிய முறுவலில் எனை அள்ளியது என்னே.
_____________________________________________