தமிழ் மொழியில் ஒரு கணினி நிரலாக்க மொழி (புரோகிராமிங் லாங்வேஜ்)

118 views
Skip to first unread message

தாமரைச்செல்வன்

unread,
Jan 16, 2016, 6:36:42 AM1/16/16
to வல்லமை
"தமிழ் மொழியில் ஒரு கணினி நிரலாக்க மொழி (புரோகிராமிங் லாங்வேஜ்)"

கணினி தமிழர்களுக்கு அறிமுகமான காலத்திலிருந்தே, தமிழிலும் ஒரு கணினி நிரலாக்க மொழி உருவாக்கிட முயற்சித்துப் பார்க்கப்பட்ட ஒன்று தான்.   பற்பல காரணங்களுகாகவும் இது முழுவதுமாக நிறைவேராத ஒன்றாகவே இருக்கிறது.  "முழுவதுமாக நிறைவேராத ஒன்று" என நான் குறிப்பிட்டுள்ளதற்கு காரணம், பலரும் இதை செயற்படுத்த முனைந்துள்ளனர்.  கணினிசார் மாணவர்கள்,  பேராசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களாலும் சில தொழிற்நுட்ப கல்விக்கூடங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களிலும் இது முயற்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.  ஆனால் அவைகள் பலநேரம் ஒரு ஆய்வறிக்கையோடே நின்றுவிட்டது அல்லது இவ்வாய்வாளர்கள் எதிர்கொள்ளும் எதிர்வினையான அறிவுரைகளாலும் சரியான உக்குவிப்பு கிடைக்காததாலும் ஒரு சலிப்பு ஏற்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.   பல நேரங்களில் இவ்வகையான முயற்சி காரசாரமான விவாதத்திற்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.  அனேகமாக எல்லா முயற்சிகளும், ஆங்கில மொழியில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட நிரலாக்க மொழிகளான பேசிக்(BASIC), டீபேஸ்-ஸ்க்ரிப்ட்(dBase Script), சி (C), பேள் (Perl), ரூபி (Ruby), பைத்தான்(Python), லுவா  (Lua), ஜாவா (Java) போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு அவைகளில் உள்ள ஆங்கிலக்கட்டளைகளை அப்படியே தமிழில் சொல் பெயற்கப்பட்ட தமிழ் நிரலாக்க மொழிகளை உருவாக்கவே செய்தன.  எடுத்துக்காட்டாக:

           REM PROGRAM TO ADD TWO NUMBERS
           INPUT A,B
           C = A + B
           PRINT "THE RESULT = "; C
           END

என்பது பேசிக் மொழியில் இரு எண்களை கூட்டிச்சொல்லும் நிரல்

           குறிப்பு இரு எண்களை கூட்டப்பயன்படும் நிரல்
           உள்ளீடு க,ச
           ட = க + ச
           வெளியீடு "முடிவு = "; ட
           முற்றும்

இது, எடுத்துக்காட்டுக்காக தமிழில் அப்படிய சொற்பெயற்கப்பட்ட தமிழ் நிரல்.  ஏற்கனவே ஆங்கில பேசிக் நிரலை புரிந்துகொண்டு இயக்கிடும் மென்பொருளில், அப்படியே "REM" => "குறிப்பு", "INPUT" => "உள்ளீடு", "PRINT" => "வெளியீடு", "END" => "முற்றும்" என மாற்றிவிட்டால், அந்த மென்பொருளானது மேலே உள்ள தமிழ் நிரலையும் புரிந்துகொண்டு இயக்கிவிடும்.  

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், மேலே உள்ள தமிழ் நிரல், தமிழின் இலக்கண வரையரைக்குள் வருவதில்லை, காரணம் அது ஆங்கில இலக்கணத்தை பின்பற்றுபிறது.  காரணம் எல்லாருக்கும் தெரிந்தது தான்.  தமிழ் ஓர் எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை மொழி, ஆனால் ஆங்கிலமோ ஒரு எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் மொழியாகும்.  காட்டாக, நீங்கள் "அனைவருக்கும் வணக்கம்" என்பதை திரையில் காண்பித்திட கணினியை ஆங்கிலத்தில் கட்டளை இடுகிறிர்கள் என்றால் அது

           (Hey Computer,) PRINT "அனைவருக்கும் வணக்கம்"

என்பதாக இருக்கும்.  இதையே தமிழில் கட்டளை இடுகிறீர்கள் என்றால்,

           (கணினியே,) "அனைவருக்கும் வணக்கம்" என்பதை திரையில் காண்பி

என்பதாகவே இருத்திடல் வேண்டும்.  ஆனால் மேலே உள்ள தமிழ் நிரலைப் பாருங்கள், சொற்களின் வரிசை மாறியுள்ளது.  

இத்தகைய வரிகள் உள்ள தமிழ் நிரல், அதனை படித்திடும் தமிழர்களின் கண்களை உறுத்திடும்.  ஆகவே, அந்த இரு எண்களை கூட்டப்பயன்படும் நிரலானது கீழ்க்கண்டவாறு இருந்தால் படிப்பதற்கு உறுத்தலாக இருக்காது.  எளிதாக மக்கள் மனதிலும் பதியும்.

           இரு எண்களை கூட்டப்பயன்படும் நிரல் என்பது குறிப்பு 
           க, ச ஆகியவற்றை உள்ளீடு செய்
           ட = க + ச
           "முடிவு = "; ட ஆகியவற்றை திரையில் காண்பி
           முற்றும்

தற்போது இணையத்தில் கிடைத்திடும் ஒரே தமிழ் நிரலாக்க மொழி, "எழில்" ( http://ezhillang.org ) ஆகும்.  அது ஒரு நல்ல முயற்சி என்றாகும், ஆனால் அது எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் எனும் ஆங்கில சொல் வரிசையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது, கீழ்க்காணும் கேள்விகளுக்கு நானும் நீங்களும் விடையளிக்க முயற்சிப்போம்.
1. தமிழில் ஒரு கணினி நிரலாக்க மொழி கட்டாயம் தேவையா?
2. மேற்கூறிய எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை எனும் தமிழ்ச்சொல் வரிசையில் எழுதப்பட்ட கணினி கட்டளைகளை புரிந்துகொள்ளும்படியான மென்பொடுட்களை உருவாக்கிடமுடியுமா?
3. தமிழ் இலக்கணத்திற்கேற்ற அமையும் ஒரு நிரலாக்க மொழியை வகுத்து அம்மொழியில் எழுத்தப்படும் நிரல்களை புரிந்து இயக்கிடும் மென்பொருட்களை உருவாக்கிவிட்டாலும், யார் அதனை பயன்படுத்தப்போகின்றனர்?  வீண் முயற்சியாகிவிடாதா?
4. அப்படி உருவாக்கப்பட்ட நிரல்களினால், பிற கணினி மொழிகளில் உருவாக்கப்பட்ட நிரல்களைப்போல் அல்லது அதைவிட வேகமாக இயங்கிடமுடியுமா?  அல்லது, குறைந்தபட்ச வேகத்தையாவது எட்டுமா?
5. நிரலாக்கத்தத்துவத்தில் (https://en.wikipedia.org/wiki/Programming_paradigm ) பற்பல வகைகள் இருக்க எவ்வகையான நிரலாக்கத்தத்துவங்களை தமிழில் உருவாக்கப்பட்டுவிடும் நிரல் மொழியில் சேர்த்துவிடமுடியும்?
6. தமிழுக்காக கணினியில் செய்யவேண்டியுள்ளது எவ்வளவோ இருக்க, இப்படி ஒரு முயற்சி தேவையா?  தமிழுக்காக கணினியில் செய்யவேண்டிய பல பணிகளில், இது எத்தகைய முதன்மையைப் பெறுகிறது?
7. ஒரு தமிழ் நிரலாக்க மொழியானது, எத்தகைய சிக்கல்களுக்கு தீர்வாக அமையும்?
9. வேறு என்னென்ன காரணங்களால், ஏற்கனவே எடுக்கப்பட்ட முயற்சிகள் கணிசமான வெற்றிகளை அடையவில்லை?
10. தமிழில் ஒரு நிரலாக்க மொழியை உருவாக்குவதில் ஏற்படக்கூடும் சிக்கல்கள் என்னென்ன?
11. தமிழ் நிரலாக்க மொழிய பயன்படுத்துவதில் ஏற்படக்கூடும் சிக்கல்கள் என்னென்ன?
12. தமிழுக்கென்று ஓர் நிரலாக்க மொழி இருந்துவிட்டால், அதனால் தமிழுக்கு ஏற்படப்போகும் பயன் என்னென்னெ?
13. தமிழுக்கென்று ஓர் நிரலாக்க மொழி இருந்துவிட்டால், அதற்கு எவ்வகையான எதிர்பார்புகள் ஏற்படக்கூடும்? அப்படி ஒரு நிரலாக்க மொழியில் என்னென்ன இருக்கவேண்டும், அது என்னென்ன செய்யவல்லதாக இருத்தல்வேண்டும் என நீங்கள் எதை எதை நினைப்பீர்கள்?
14. தமிழுக்கென்று ஓர் நிரலாக்க மொழியை படைத்துவிட்டால், அதை எவ்வாறு மக்களிடம் கொண்டுசேர்ப்பது?
15. நீங்கள் ஒரு தமிழ் நிரலாக்க மொழிய உருவாக்கினால், அதற்கு என்ன பெயர் வைப்பீர்கள், என்னென்ன பெயர்கள் வைக்கமாட்டீர்கள்?

நன்றி.
தாசெ

இது தொடர்பான மேலும் சில சுட்டிகள்:
https://groups.yahoo.com/neo/groups/tamilinix/conversations/topics/2313
https://groups.yahoo.com/neo/groups/tamilinix/conversations/topics/2346
http://www.ponnavaikko.com/vcpub.htm
http://www.infitt.org/ti2003/papers/15_ganesh.pdf
http://ezhillang.org


வேந்தன் அரசு

unread,
Jan 17, 2016, 8:59:21 AM1/17/16
to vallamai
?1. தமிழில் ஒரு கணினி நிரலாக்க மொழி கட்டாயம் தேவையா?

தேவை இல்லை. 
மாறாக, பொதுமக்கள்.  பயன்பாட்டுக்கு தமிழுக்கு தேவையான கருவிகளை செய்யலாம். மிகச்சிலர் பயன்படுத்தும் நிரலாக்க மொழிகள்  அல்கலும் வளர்ந்துகொண்டே இருக்கு. அவற்றுடன் போட்டியிட்டு வளர்ப்பது அரும்செயல்.

எண்ணித்துணிக கருமம்




16 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:36 அன்று, தாமரைச்செல்வன் <thaamara...@gmail.com> எழுதியது:


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

thaamarai chelvan

unread,
Jan 17, 2016, 3:32:29 PM1/17/16
to vall...@googlegroups.com
மிக்க நன்றி.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/kQ3kkWtJqF4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 17, 2016, 3:42:30 PM1/17/16
to வல்லமை, vallamai


On Sunday, January 17, 2016 at 12:32:29 PM UTC-8, தாமரைச்செல்வன் wrote:
மிக்க நன்றி.


My thoughts are also same as Venthan Arasu's. I know Prof. V. C. Kulandaiswamy,
Founder-Chairman of Tamil Virtual Academy quite well. He was a student of PaavaaNanar
in Salem college. Then Ramasamy Kavunder was the Principal, PaavaaNar has written.

Prof. VCK tells that PaavaaNar never any essay or paragraph that Colleges should
teach Science and Technology, Medicine in Tamil medium. Being an educationist life-long,
putting the poor villagers always in Tamil medium will spoil their financial and job opportunities
in the global economy. Instead, media should provide good translations of technology,
medicine,in Tamil first. Now may not be the time to switch to Tamil fully.We need to
retain English for economy and precision.

There is lot of good production of Bhakti, Cinema, Fiction, Astrology in Tamil nowadays.
Science and Technology?

N. Ganesan

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/kQ3kkWtJqF4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

thaamarai chelvan

unread,
Jan 18, 2016, 10:43:33 AM1/18/16
to vall...@googlegroups.com
உங்கள் பார்வைக்கும் மிக்க நன்றி திரு என்.கணேசன்.

அன்புடன் 
தாசெ
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/kQ3kkWtJqF4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/kQ3kkWtJqF4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

Anna Kannan

unread,
Jan 18, 2016, 1:50:37 PM1/18/16
to Vallamai

தமிழ் மொழியில் ஒரு கணினி நிரலாக்க மொழியை உருவாக்க, எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை மொழி என்ற வரிசை தான் சிக்கல் எனில், அது எளிதில் தீர்க்கக்கூடியதே.

கணினியியல் கற்கும் தமிழ் மாணவர்கள், எப்படியும் ஆண்டுதோறும் செயல் திட்டங்களை உருவாக்கத்தான் போகிறார்கள். அவர்களுள் திறம் வாய்ந்த சிலரை இதில் ஈடுபடுத்தினால் போதும். வீண் முயற்சி ஆகாது. கல்விப் பயிற்சி கிட்டும்.

ஏற்கனவே நிறைய நிரலாக்க மொழிகள் இருப்பதால், புதியவை வராமல் இல்லை. அதில் என்ன புதுமை, தனித்துவம் சேர்க்கலாம் என ஆராய்வது நல்லது. மேலும், சீன, ஜப்பானிய, கொரிய, ஸ்பானிஷ்... மொழிகளில் இத்தகைய முயற்சிகள் நடைபெற்றுள்ளனவா என்றும் காண வேண்டும்.

மகத்தான ஒரு படைப்பு / மென்பொருள் தமிழில் உருவாகும் பட்சத்தில், அதன் வணிக நோக்கங்களுக்காகவே தமிழைத் தமிழரும் அயலவரும் கற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தாமரைச்செல்வன் எழுதியதைக் கொண்டு பார்த்தால், அவர் ஏற்கனவே இவ்வாறு ஒன்றை உருவாக்கியது போல் தெரிகிறது. அவ்விதமாயின், அதற்குப் பெயர் சூட்டும் வாய்ப்பை அவரே பெறலாம். அவரது முயற்சியைப் பாராட்டுகிறேன்.

தமிழில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிரலாக்க மொழிகள் சாத்தியம் என்பதையும் நினைவூட்டுகிறேன். மேலும் நிரலாக்க மொழி மாற்றிகளும் எதிர்காலத்தில் உருவாகலாம்.

thaamarai chelvan

unread,
Jan 18, 2016, 7:34:04 PM1/18/16
to vall...@googlegroups.com
திரு அண்ணாகண்ணனுக்கு,  உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.  

நீங்கள் கூறியதைப்போல ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளிலும் நிரலாக்கமொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.


தமிழில் ஒரு நிரலாக்கமொழி உருவாக்குவதென்பது என் தலையாய குறிக்கோளாகும்.  அவ்வாறான ஒன்றுக்கு மனதளவில் ஒருசில திட்டங்களை வகுத்துவைத்துள்ளேன்.  இதுவரை அவற்றை செயல்படுத்திவிடவில்லை.  அப்படி செயற்படுத்தும் முன் சான்றோரின் அறிவுரைகளும் கருத்துக்களும் எனக்கு தேவைப்படுகிறது என்பதால் தான், இது தொடர்பான ஒரு பதிவை ஒருசில.தமிழ் குழுக்களில் இட்டுள்ளேன்.  

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.   மேலும் பல அறிஞர்களிடமிருந்து கருத்துக்களையும் வழிகாட்டுதலையும் எதிர்பார்த்து காதாதிருக்கிறேன்.

அன்புடன் 
தாசெ

--
Reply all
Reply to author
Forward
0 new messages