மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் சதா என்ற இடத்தில் தரைமேல் எழுதப்பட்ட ஆதி தமிழ் எழுத்து இது. இது சிந்துவெளி எழுத்தை விட தமிழின் பழமையை இன்னும் முன்னுக்கு தள்ளுகிறது. இந்த ஓவியம் மனிதன் போல இருப்பதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் எனக்கு இது பறக்கும் பறவை போல தோன்றுகிறது. உண்மையில் இந்த பறவையின் பின் வடிவத்தை கூர்ந்து நோக்கினால் மீன் போல தோற்றம் தரும். மீன் வடிவம் சிந்து எழுத்தில் பேரா இரா. மதிவாணனனால் சகரமாக படிக்கப்பட்டுள்ளது. நெஞ்சில் ஒரு வட்டம். தலைமேல் இரண்டு கவிழ்ந்த U. இருபுறம் இறக்கையாக மூன்று கோடுகள் தகரத்தை குறிக்கும்.மீன் - ச, நெஞ்சில் O - ன், கவிழ்ந்த இரண்டு U - க்க, ((( - த், ))) - த, _ ன்இதில் உள்ள எழுத்துகள் சன்க்கத்தன் என்பன. இதை சங்கத்தன் இதாவது, ன் + க் = ங் என புணர்த்தி படிக்க வேண்டும்.செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி தரும் பொருள் இதோ சங்கு - கூர்மையானது, spike, stake; நிழலால் நேரம் அறிவதற்காக நடப்படும் கோல்; அத்து - எல்லை. சங்கத்தன் என்ற புணர்ச்சி சொல்லுக்கு கூரிய கற்களின் எல்லை என்று பொருள் தரும். இந்த கல்வட்டம் நேரம் அறிவதற்காக ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த ஆதி தமிழ் எழுத்தை சுற்றி நடப்பட்டுள்ள கூரிய கற்கள் அதையே மெய்ப்பிக்கின்றன.
On Fri, 19 Sept 2025 at 13:42, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் சதா என்ற இடத்தில் தரைமேல் எழுதப்பட்ட ஆதி தமிழ் எழுத்து இது. இது சிந்துவெளி எழுத்தை விட தமிழின் பழமையை இன்னும் முன்னுக்கு தள்ளுகிறது. இந்த ஓவியம் மனிதன் போல இருப்பதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் எனக்கு இது பறக்கும் பறவை போல தோன்றுகிறது. உண்மையில் இந்த பறவையின் பின் வடிவத்தை கூர்ந்து நோக்கினால் மீன் போல தோற்றம் தரும். மீன் வடிவம் சிந்து எழுத்தில் பேரா இரா. மதிவாணனனால் சகரமாக படிக்கப்பட்டுள்ளது. நெஞ்சில் ஒரு வட்டம். தலைமேல் இரண்டு கவிழ்ந்த U. இருபுறம் இறக்கையாக மூன்று கோடுகள் தகரத்தை குறிக்கும்.
மீன் - ச, நெஞ்சில் O - ன், கவிழ்ந்த இரண்டு U - க்க, ((( - த், ))) - த, _ ன்இதில் உள்ள எழுத்துகள் சன்க்கத்தன் என்பன. இதை சங்கத்தன் இதாவது, ன் + க் = ங் என புணர்த்தி படிக்க வேண்டும்.செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி தரும் பொருள் இதோ சங்கு - கூர்மையானது, spike, stake; நிழலால் நேரம் அறிவதற்காக நடப்படும் கோல்; அத்து - எல்லை. சங்கத்தன் என்ற புணர்ச்சி சொல்லுக்கு கூரிய கற்களின் எல்லை என்று பொருள் தரும். இந்த கல்வட்டம் நேரம் அறிவதற்காக ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த ஆதி தமிழ் எழுத்தை சுற்றி நடப்பட்டுள்ள கூரிய கற்கள் அதையே மெய்ப்பிக்கின்றன.
தொடக்கத்தில் நான் இதை சத்தன் என்று தவறாக படித்தேன். பொருள் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த எழுத்துகளையும் நிறைவாக படிக்க முடியவில்லை. கிடக்கட்டும் பிற பார்த்துக் கொள்ளலாம் என்று 1 மாதம் கிடப்பில் போட்டுவிட்டேன். இப்போது படித்த போது சொற்பிறப்பியல் பேரகர முதலியில் சங்கு ÷ அத்து என்று பிரித்து படித்தேன் பொருள் கிடைத்தது. சுற்றியிருந்த கல் வேலியை அது குறிப்பது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு. சங்கத்தன் என்று புணர்த்தி எழுதி இருப்பதானது தமிழில் புணர்ச்சி இலக்கணம் எழுத்திலக்கணம் தோன்றிய காலத்திலேயே வந்துவிட்டது என்று உணர முடிகிறது. ஆக தமிழே உலகில் முதன்முதலாக இலக்கணம் பெற்ற மொழி என்பதை அறிய முடிகிறது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் பார்த்து தெளிய http://www.tamilvu.org/library/ldpam/ldpam00/html/ldpam00hom.htm