அரிவாள் மனை பூண்டு

525 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 18, 2017, 10:25:28 PM10/18/17
to vall...@googlegroups.com
அரிவாள்மனை பூண்டு

காயங்களை ஆற்றும் அரிவாள் மனை பூண்டு முப்பது வகையான இனம் இருக்கிறது இதே...
~~~~~ 🌹 🌹 🌹 
பல்வேறு நன்மைகள் உடையது.
~~~~#தெரிந்து_கொள்ள_கூடியவை 
வெட்டுக்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டதும், மூட்டுவலியை போக்க கூடியதும், நரம்புகளை பலப்படுத்தும் தன்மை உடையதும், சிறுநீரக கற்களை கரைக்கவல்லதும், நெறிக்கட்டு, யானைக்கால் வீக்கத்தை போக்க கூடியதும், ஆண் மலட்டு தன்மையை சரிசெய்ய கூடியதுமான அரிவாள்மனை பூண்டுவின் நன்மைகள் குறித்து இன்று நாம் பார்ப்போம்.,.,.,

காலில் மூலிகையைக் கசக்கி சாறை வடியவிட்டு மூலிகையையும் உள்ளே வைத்து வெள்ளைத் துணியால் கட்டுப்பொட்டால். அவ்வப்பொழுது
அதன் பலன்களை காணலாம்.ஷ...ரு🌴🌷

#முப்பது_வகையான_மூலிகை_பெயர்கள்

1.கைமூக்குத்திப்பூ, 
2.காயப்பச்சிலை, 
3.கிணற்றடிப் பூண்டு, 
4.தலைவெட்டியான், 
5.கிணற்றுப்பாசான், 
6.தாத்தா செடி,
7.வெட்டுக்காய பூண்டு, 
8.கரும்பூடு, 
9.சாணிப்பூடு, 
10.மிருகம்பச்சிலை, 
11.முறியம் பச்சிலை, 
12.அரிவாள்மனைப்பூண்டு, 
13.ஒரம்புபூடு, 
14.வெட்டி முறித்தான், 
15.ஒடியன் பச்சிலை, 
16.ஆணா பெண்ணா செடி, 
17.வெட்டுக்காயப் பச்சிலை, 
18.கள்ளிப்பூட்டான், 
19.முருகன் பச்சிலை, 
20.பொடுதலைப் பூண்டு, 
21.பொற்றலை கையான், 
22.விரிய கடி பூண்டு, 
23.வெட்டுவாங்கண்ணி, 
24.இரண பூண்டு, 
25.கோணேசர் மூலி, 
26.உறம்பு பூடு, 
27.தஞ்சாவூரான் பூண்டு, 
28.வெட்டு கத்தாழை, 
29.ஒரங்க பூடு, 
30.தண்ணீர் பூண்டு

என பல பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை இது. காயங்களை ஆற்றுவதில் வல்லமை பெற்றது.! மழைக் காலங்களில் அனைத்து சமவெளிப் பகுதிகளிலும் கிடைக்கும் ஒரு அற்புத மூலிகை.

🌹சாலையோரங்களில் கிடைக்க கூடிய அரிவாள்மனை பூண்டுக்கு வட்ட திருப்பி, மலைதாங்கி என்ற பெயர்கள் உண்டு. மஞ்சள் நிற பூக்களை உடைய இதன் இலைகள் அரிவாளை போன்று இருக்கும். காயத்தை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. குறிப்பாக, அரிவாளால் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அரிவாள் மனை பூண்டு உள், வெளிப்பூச்சு மருந்தாக பயன்படுகிறது.

🌹வெட்டுக்காயம் ஏற்பட்டால், அரிவாள்மனை இலையை பசையாக அரைத்து காயத்தில் தடவினால் ரத்தபோக்கு நிற்கும். வடு தெரியாத வகையில், காயம் சீக்கிரம் ஆறும். அரிவாள்மனை பூண்டு இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவ குணம்மிகுந்தது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. அரிவாள்மனை பூண்டு காய்ச்சலை தணிக்க கூடிய தன்மை கொண்டது. மூட்டு வலி இல்லாமல் செய்யும். ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உடையது.

🌹இதன் வேரை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் தேனீர் தயாரிக்கலாம். அரிவாள்மனை பூண்டு வேரை எடுத்துக்கொண்டு அதை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். பின்னர் வடிக்கட்டி எடுத்து காய்ச்சிய பால் சேர்க்கவும். இந்த தேனீரை குடிப்பதன் மூலம் நரம்புகள் பலப்படும். அரிவாள்மனை பூண்டில் பல்வேறு நன்மைகள் உள்ளன. பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்களை கரைக்க கூடியது.ஷ...ரு🌴🌷

🌹சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. இதனால் தேவையற்ற நச்சுக்கள் வெளியாகிறது. சிறுநீரகத்துக்கு பலம் தரக்கூடியது. நரம்பு மண்டலங்களுக்கு பலத்தை கொடுக்கவல்லது. ஆண் மலட்டு தன்மையை போக்கும். அரிவாள்மனை பூண்டு இலையை பயன்படுத்தி சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம், நெறிக்கட்டு, யானைக்கால் வியாதிக்கு மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இதற்கு அரிவாள் மனை பூண்டு இலை, விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.

இலையை பசையாக அரைத்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து தைல பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை பயன்படுத்துவதன் மூலம் விதை வீக்கம், யானைக்கால் வீக்கம், நெறிக்கட்டு சரியாகும். இதை உள்ளுக்குள் எடுத்துக் கொண்டால் வயிற்று பூச்சிகள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். அரிவாள் மூக்கு பச்சிலை, அரிவாள்மனை என்ற பெயர்களை கொண்ட இந்த அரிவாள்மனை பூண்டை சாப்பிட்டால் காய்ச்சல் சரியாகும். வயிற்று பூச்சிகளை வெளியேற்றும். வெளிப்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் வெட்டுக்காயங்கள் குணமாகும். இதை தேனீராக்கி குடிப்பதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண் மலட்டுதன்மைக்கு அற்புத மருந்தாகும்.ஷ...ரு🌴🌷

seshadri sridharan

unread,
Jan 2, 2018, 6:44:17 AM1/2/18
to vall...@googlegroups.com

தெரிந்த மூலிகை தெரியாத விஷயங்கள்.

அரிவாள்மனைப் பூண்டு

ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலவீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.

இதன் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து பொடி செய்து சர்க்கரையுடன் சேர்த்துத் தினமும் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பற்றிட இரத்தப் பெருக்கு நிற்கும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் பூச அவை குணமாகும். ( உப்பு, புளி நீக்க வேண்டும்.)

அரிவாள்மனைப் பூண்டு இலைகைப்பிடி அளவு, குப்பைமேனி இலை கைப்பிடி அளவு, பூண்டு2 பல், மிளகு3, ஆகியவற்றை அரைத்து, புன்னைக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் வைத்துக் கட்ட பூச்சிக்கடியினால் ஏற்படும் நஞ்சு முறியும்.

அரிவாள்மனை இலை, கிணற்றுப் பாசான இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து, புழுவெட்டு உள்ள இடத்தில் தடவினால், விரைவில் மாறும்.

அரிவாள்மனைப் பூண்டு இலையோடு சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு மீது தடவி வர குணமாகும்.

அரிவாள்மனை இலை, சம அளவு குப்பைமேனி இலையையும் சேர்த்து அரைத்துப் பற்றிட , படர்தாமரை குணமாகும்.

அரிவாள்மனைப் பூண்டு இலை, கிணற்றுப் பாசான இலை, எலும்பு ஒட்டி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துப் காயத்தின் மீது பற்றிட உள்ள வீக்கம் குறையும்.

மேலும் தெரிந்துகொள்ள:
94420 60556,80988 17833

Reply all
Reply to author
Forward
0 new messages