தமிழ்ப் பற்று

1,017 views
Skip to first unread message

DEV RAJ

unread,
Jul 24, 2013, 10:10:25 PM7/24/13
to vall...@googlegroups.com

நம்மிடையே இரு சாரார் உள்ளனர். அதிதீவிர தமிழ் வெறியர்கள். தமிழ் வாழ்க என்று கழுத்துப் புடைக்கக் கத்துவார்களே 
ஒழிய தமிழில் வரும் எந்த நூலையும் வாசிக்கமாட்டார்கள். தமிழ்ப்பற்று என்பது அவர்களுக்கு வெறுப்புகளை 
உருவாக்கிக்கொள்ளும் ஒரு முகாந்தரம் மட்டுமே. தமிழ்ப் பகைவர்களால் தமிழ் சூழப்பட்டிருப்பதாகவும் 
அவர்களிடம் தாங்கள் போர் புரிவதாகவும் எண்ணிக் கொள்வார்கள். தங்களுக்குப் பிடிக்காத அனைவரையும் 
தமிழ்ப் பகைவர்கள் என்று முத்திரை குத்திக்கொள்வார்கள்.


சென்ற காலங்களில் இந்த அதிதீவிரத் தமிழ்ப் பற்றாளர்கள் எவரையெல்லாம் வசைபாடியிருக்கிறார்கள் 
என்று பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். தமிழுக்கு உண்மையிலேயே பெரும்பணி ஆற்றிய, அதற்காக 
வாழ்க்கையை அர்ப்பணம் செய்த மேதைகள் அனைவருமே இவர்களின் வசைபாடலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். 
பாரதியார், எஸ்.வையாபுரிப்பிள்ளை, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன்….


சரி இவர்கள் யாரைக் கொண்டாடியிருக்கிறார்கள் என்று பார்த்தால் இன்னும் ஆச்சரியம். 
பெரும்பாலும் சாதாரணமான சினிமாக்காரர்களையும் வெற்று அரசியல்வாதிகளையும் 
மேலோட்டமான மேடைப் பேச்சாளர்களையும் மட்டும்தான். இன்றும் கூட அதுவே நிலை.





Innamburan S.Soundararajan

unread,
Jul 25, 2013, 12:30:24 AM7/25/13
to vall...@googlegroups.com
டமால் டுமீல்! என் மேலும்....! சரி. விட்றுவோம். மலர்களுக்கிடையே
நாருக்கு என்ன வேலை!

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


2013/7/25 DEV RAJ <rde...@gmail.com>:
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>

வேந்தன் அரசு

unread,
Jul 25, 2013, 7:58:14 AM7/25/13
to vall...@googlegroups.com


25 ஜூலை, 2013 12:30 AM அன்று, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> எழுதியது:

டமால் டுமீல்! என் மேலும்....! சரி. விட்றுவோம். மலர்களுக்கிடையே
நாருக்கு என்ன வேலை!

நார் இல்லேனா பூக்கள் சிதறிக்கிடக்கும். 
    நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Innamburan S.Soundararajan

unread,
Jul 25, 2013, 10:06:49 AM7/25/13
to vall...@googlegroups.com
நன்கு கூறினீர்கள் வேந்தன் அரசே. எனக்கு பெருமிதம் தருகிறது உமது யதார்த்த இடுகை.
2013/7/25 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Jul 25, 2013, 10:30:51 AM7/25/13
to vallamai
​ந்தக் கட்டுரை உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாக இல்லை

1930 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாய் அமைந்த காலகட்டம்

தனித்தமிழ் தேவை என்று மறைமலை அடிகளும் தமிழில் கலைச் சொற்கள் இல்லை எனவே சங்கதச் சொற்களே தமிழுக்குத் தேவை என்று ஸ்ரீனிவாச சாஸ்திரியும்  பச்சையப்பன் கல்லூரியில் கச்சை கட்டிய காலத்தில் எல்லாம் மூன்றாம் தர அரசியல் வாதிகளின் காற்​றுக் கூடப் பட்டதில்லை

​நடுநிலையில் நின்று ஏற்கனவே இருக்கும் தமிழ்க் கலைச் சொற்களை மாற்றவேண்டாம் என்று சொன்ன உ.வே..சா வை வசை பாடியவர்கள் யார் என்பதை மறைத்து எல்லாம் திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சி என்று முடிப்பது வரலாற்றைத் திசை திருப்புவதாகும்

சென்னைப் பல்கலையின் பேரதிகாரத் தொகுப்புப் பணியில் எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆயிரக் கணக்கான தமிழ்ச் சொற்களை விலக்கி அதிக வடமொழிச் சொற்களைக் கலக்கும் முயற்சிக்கு உறுதுணையாக நின்றார் என்ற பாவாணரின் குற்றச் சாட்டு இன்றுவரை சென்னைப் பல்கலைக் கழக ஆவணக் காப்பகத்தில் மறைந்து நிற்கிறது

மொழி வெறியர்கள் ஏதோ  தமிழுக்கும் தமிழகத்துக்கும் மட்டுமே சொந்தம் என்று நிலையில் கூறப்படுவது சரியல்ல

ஆராய்ச்சிக் குஞ்சு



2013/7/25 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Jul 25, 2013, 6:18:17 PM7/25/13
to vall...@googlegroups.com
உண்மைகள் ஏன் மறைந்து கிடக்க வேண்டும் ?


தேவ்

DEV RAJ

unread,
Jul 26, 2013, 12:14:58 AM7/26/13
to vall...@googlegroups.com

தமிழ் மொழி மற்றும் தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மை மறுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் 
வரலாற்றின் தேவையால் உருவானது தமிழியக்கம். தமிழ்நாடு ஏறத்தாழ 300 ஆண்டுகளாக 
தமிழரல்லாதவர்களால் ஆளப்பட்டது. தமிழகத்தை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சியும், 
மராட்டியர் ஆட்சியும் தமிழ்நாட்டின் பொருளியலுக்கும் மதத்திற்கும் பெரும் பங்களிப்புகளை 
ஆற்றியிருக்கின்றன. தமிழகத்தில் இன்றுள்ள சாலைகள், சந்தைகள், ஏரிகள் பெரும்பாலானவை 
இவர்களின் ஆட்சிக்காலத்தில் உருவானவை. இன்று நாம் காணும் தமிழக ஆலயங்கள் 
பெரும்பாலும் இவர்கள் காலகட்டத்தில் புதுப்பிக்கப்பட்டு எழுந்தவை.


தமிழியக்கத்தை மூன்று தளங்களில் நிகழ்ந்த செயல்பாடுகளாகப் பிரிக்கலாம். 
1) தமிழ் நூல்களை பதிப்பித்தல் 
2) தமிழிசை இயக்கம் 
3) தனித்தமிழ் இயக்கம்.

ஏட்டுச்சுவடிகளில் பேணப்படாது அழியும் நிலையில் இருந்த தமிழ் நூல்களை தேடிக் 
கண்டுபிடித்து பிழைதிருத்தம் செய்து பொருள் குறிப்பு உருவாக்கி சீராக நூலாக கொண்டு 
வந்ததே தமிழை மீண்டும் உருவாகிய பெரும்பணி என்று கூறலாம். 
உ. வே. சாமிநாதய்யரே இப்பணியின் முன்னோடியாவார். 
சி. வை. தாமோதரம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், வ. உ. சிதம்பரம் பிள்ளை,  
வெள்ளக்கால் சுப்ரமனிய முதலியார், கெ.என்.சிவராஜ பிள்ளை, மனோன்மணியம் 
சுந்தரம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை போன்றவர்களை இத்துறையில் 
பெரும்பணியாற்றிய முன்னோடிகள் என்று கூறலாம்.


தமிழியக்கத்தின் ஆரம்பகால அறிஞர்களில் பலர் பிராமணர்கள். ஆனால் 
விரைவிலேயே பிராமணரல்லாத உயர்சாதியினரின் இயக்கமாக அது மாறியது. 
குறிப்பாக வேளாளர், முதலியார். இவர்களின் பிராமண எதிர்ப்புப் போக்கு 
காரணமாக திராவிட இயக்கத்திற்கும் இவர்களில் சிலருக்கும் இடையே 
ஒரு புரிந்துணர்வு உருவாகியது. ஆனால் அக்காலகட்டத்தில் 
திராவிட இயக்கத்திற்கும் தமிழியக்கத்திற்கும் நடுவேதான் 
கடுமையான மோதல்கள் உருவாகி நீடித்தன.


தமிழியக்கம் என்பது திராவிட இயக்கத்துடன் எவ்வகையிலும் சம்பந்தம் 
உடையதாக இருக்கவில்லை என்பதே வரலாறு. தமிழியக்கம் பெரும்பாலும் 
சைவச் சார்பு உடையது. அதன் முன்னோடிகளில் பலர் காங்கிரஸ் அனுதாபிகளும் 
கூட. அரசியலில் ஜஸ்டிஸ் கட்சியின் குழந்தையாக உருவாகி வந்ததே திராவிட 
இயக்கம். ஜஸ்டிஸ் கட்சிக்கு தமிழியக்கத்தில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. 
காரணம் அதில் பெரும்பாலானவர்கள் தமிழர்களல்ல. சொல்லப் போனால் 
அதற்கு தமிழ் அடையாளமே இருக்கவில்லை. தமிழர், தெலுங்கர், மலையாளிகள் 
கூடி உருவாக்கிய இயக்கம் அது. அதன் தலைவர்கள் ஆங்கில மோகம் 
கொண்ட அன்றைய உயர்குடிகள். பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து 
தங்களுக்கான நலன்களைப் பேணிக்கொள்ள முயன்றவர்கள்.

தமிழியக்க முன்னோடிகளான உ. வே. சாமிநாதய்யர், ஆபிரகாம் பண்டிதர், 
மறைமலை அடிகள் போன்றவர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள்.


திராவிட இயக்கத்தின் சாதனை என்றால் நமது கல்விப் புலத்தை 
முழுமையாகக் கைப்பற்றி அங்கே தமிழாய்வே நிகழாமல் செய்ததுதான். 
இன்று எந்த ஒரு இந்திய மொழியிலாவது ஒரு வருடத்தில் குறிப்பிடத்தக்க 
ஒரு ஆய்வுகூட வராத தேக்க நிலை உள்ளது என்றால் அது தமிழில்தான்.


உண்மையில் திராவிட இயக்கம் தமிழுக்கு என்ன செய்தது? 
நிலையாக எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை. 


மேடைகளில் ஆர்ப்பாட்டமாகப் பேசுவதற்கு தனித்தமிழியக்கத்தின் 
சொல்லாட்சிகளை கடன்பெற்று பயன்படுத்தி வெற்றிக் கண்டது அது. 
சி. என். அண்ணாதுரை அவர்களின் மேடைமொழி ரா. பி. சேதுப்பிள்ளை, 
நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களின் அடுக்குமொழிப் பாணியில் 
இருந்து கடன்பெற்றது  என்பதை நாம் காணலாம்.  அவரை ஒட்டி தமிழை 
அலங்காரமாகப் பயன்படுத்தும் பேச்சாளர்களின் பெரும் படை ஒன்று கிளம்பியது. 
அவர்களின் வாரிசுகள் இன்றும் உள்ளனர். இவர்களை வைத்தே தமிழை 
திராவிட இயக்கம் வளர்த்தது என்ற பாமர நம்பிக்கை உருவாகி நீடிக்கிறது.


சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி போன்றவர்களின் மொழிநடையில் 
தனித்தமிழ் மிகக்குறைவே என்பதை பலர் கவனிப்பதில்லை.  குறிப்பாக 
சி.என்.அண்ணாத்துரை அவர்களின் ஆரம்பகால பேச்சுகளில் கடினமான 
சம்ஸ்கிருதச் சொற்கள் புழங்கும். துவஜாரோகணம் போன்ற சொற்களைக்கூட 
அவரது உரைகளின் அக்கால பதிப்புகளில் காணமுடியும். அன்றும் 
தனித்தமிழியக்கவாதிகளே நல்ல தமிழ் பேசினார்கள்.



Nagarajan Vadivel

unread,
Jul 26, 2013, 1:23:32 AM7/26/13
to vallamai
நீண்ட கட்டுரையாக இருப்பினும் சில கட்டுரைகள் கலந்து திராவிட இயக்கத்தை நிராகரிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது

மொழி சமயம் சமூகச் சீர்திருத்தம் அரசியல் என்று பலதளங்களைச் சார்ந்த தமிழ்ப் பற்று என்ற ஒரு கருத்தை அரசியலுக்கு  மட்டும் எடுத்தாள்வது முறையா?

அண்ணாத்துரை ரா.பி.சேதுப்பிள்ளையையும் வையாபுரிப் பிள்ளையையும் அடியொட்டி எழுதினார் பேசினார் என்பது எவ்வளவு பெரிய புளுகு

இந்த மூவருமே தமிழை உயர் கல்வியில் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் அல்ல.  
'
அண்ணா வரலாறு பொருளாதாரம் அரசியல் கலந்த முதுகலைப் பட்டம் பெற்றவர்.  மற்ற இருவரும் வழக்கறிஞர்கள்.  ஆர்வத்தால் தமிழைப் பயின்றவர்கள்.  ஒரு ஆங்கிலப் பெண்மணியின் கொடையால் தொடங்கப்பட்ட தமிழ்த் துறையில் சிரோமணிப் படிப்பு கூடா நடைமுறைப் படுத்தாத காலம்.  சிரோமணிப் பட்டம் பெற்சமல் சங்கதம் பயிற்றும் ஆசிரியர் பணி நியமன பெற முடியாது ஆனால் யாராவது புலவர் கவிஞர் ஒரு கடிதம் கொடுத்தாலே தமிழாசிரியர் பணி (பாரதியும் பாவாணரும் தமிழாசிரியகள் ஆனது இவ்வழியில்)

தமிழ் வளர்ச்சிக்காக அரும் பணியாற்றிய ஆங்கிலப் பாதிரியார்கள் (வீர மா முனிவர், ஜீகன் பால்) அரசு அலுவலர்கள் பங்கு பற்றி ஒரு வரி கூட இல்லை

தமிழகத்தின் மடாதிபதிகள் தமிழ்ப்பணி பற்றியும் குறிப்பிடப்படவில்லையே

தஞ்சை மன்னர் சரபோஜியின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடவில்லையே

ஸ்வராஜ்யக் கட்சி தியோசாபிகல் சொஸைட்டி அசல் திராவிட சங்கத்தை நிறுவித் தமிழ் வளர்த்த அயோத்தி தாச பண்டிதர் இரட்டை மலை சீனிவாசன் (ஒரு பைசாத் தமிழன்) 

ஆகியோர் தமிழ்ப்பணி பற்றியும் எதுவும் இல்லை

ஒட்டுமொத்தாமான தமிழ் வளர்ச்சி தமிழ்ப் பற்று திராவிடக் கட்ட்சியினரும் சங்கத அறிஞர்களும் மட்டுமே உருவாக்கியது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா

ஆராய்ச்சிக் குஞ்சு


2013/7/26 DEV RAJ <rde...@gmail.com>

--

K. Loganathan

unread,
Jul 26, 2013, 3:01:25 AM7/26/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

நல்ல அழகிய விளக்கம். தாங்கள் கூறுவது:

திராவிட இயக்கத்தின் சாதனை என்றால் நமது கல்விப் புலத்தை 
முழுமையாகக் கைப்பற்றி அங்கே தமிழாய்வே நிகழாமல் செய்ததுதான். 
இன்று எந்த ஒரு இந்திய மொழியிலாவது ஒரு வருடத்தில் குறிப்பிடத்தக்க 
ஒரு ஆய்வுகூட வராத தேக்க நிலை உள்ளது என்றால் அது தமிழில்தான்.

இது எனக்கு நன்றாகப் புரிகின்றது. வேதனையாகவும் இருக்கின்றது,

மேலு, ஞானத் தமிழ் ஆய்வும் வீழ்ந்து விட்டது, சோமசுந்தர நாயக்கர் போன்றும் மறைமலை அடிகள் போன்றும் திரு,வி.க போன்றும் இன்று யார் உண்டு? தமிழனாகய ஒருவன் புதியதாக ஓர் நல்ல ஆழமான மெய்யறிவுப் பனுவலை எழுதினால் அதனைப் படித்து கருத்து தெரிவிப்பார் யாரும் இல்லை

கதை சொல்லும் கூட்டமாக தமிழினம் வீழ்ந்துவிட்டது.

உலகன்


2013/7/26 DEV RAJ <rde...@gmail.com>

--

DEV RAJ

unread,
Jul 26, 2013, 3:35:11 AM7/26/13
to vall...@googlegroups.com
On Thursday, 25 July 2013 22:23:32 UTC-7, பூனைக் கவிராயர் wrote:
ஒட்டுமொத்தாமான தமிழ் வளர்ச்சி தமிழ்ப் பற்று திராவிடக் கட்ட்சியினரும் சங்கத அறிஞர்களும் மட்டுமே உருவாக்கியது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா


கட்டாயம் ஒப்புக்கொள்ள மாட்டேன்; 
ஜெ மோ அவர்கள் அவ்வாறு கூறவில்லை. 
மீண்டும் வாசித்துப் பாருங்கள்; அவர்
தமிழியத்தைச் சைவ மையத்திலிருந்தே
தொடங்குகிறார்.

அருந்தமிழ் வளர்த்தோரில் சவ்வாதுப் புலவரும்
[முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ்] உண்டு;
உமறுப்புலவரும் உண்டு. இப்பெயர்கள் உங்கள்
பட்டியலில் இல்லை.

உ வே சா என்றாலே பின்புலமாக விளங்கிய
ஒரு சைவ ஆதீனமும் சேர்ந்ததுதான்


On Thursday, 25 July 2013 07:30:51 UTC-7, பூனைக் கவிராயர் wrote:
1930 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாய் அமைந்த காலகட்டம்  <<<


இதுவும் ஒப்புக்கொள்ள முடியாதது.
தமிழ் வளர்ச்சியின் திருப்புமுனையாக
நான்காம் தமிழ்ச்சங்கம் தோன்றிய 1901ம் ஆண்டை
ஏன் ஏற்கக் கூடாது ?  தமிழில் சிறந்த ஆய்வுக் 
கட்டுரைகளின் தோற்றம் ‘செந்தமிழ்’ இதழ் அன்றோ ?

சிறந்த ஆராய்ச்சியாளரான நீங்கள் இதை
மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்
 


தேவ்

DEV RAJ

unread,
Jul 26, 2013, 3:41:20 AM7/26/13
to vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com
On Friday, 26 July 2013 00:01:25 UTC-7, K. Loganathan wrote:
இது எனக்கு நன்றாகப் புரிகின்றது. வேதனையாகவும் இருக்கின்றது,
மேலு, ஞானத் தமிழ் ஆய்வும் வீழ்ந்து விட்டது, சோமசுந்தர நாயக்கர் போன்றும் மறைமலை அடிகள் போன்றும் திரு,வி.க போன்றும் இன்று யார் உண்டு? தமிழனாகய ஒருவன் புதியதாக ஓர் நல்ல ஆழமான மெய்யறிவுப் பனுவலை எழுதினால் அதனைப் படித்து கருத்து தெரிவிப்பார் யாரும் இல்லை
கதை சொல்லும் கூட்டமாக தமிழினம் வீழ்ந்துவிட்டது.


ஆம் ஐயா.
தொன்மை வாய்ந்த இனிய மொழி ஒன்று
ஆய்வுத்தளத்திற்கு முறையாக நகர்த்தி
எடுத்துச் செல்லப்படவில்லை எனும்
ஆதங்கத்தின் விளைவே இந்த இழை.
கவன ஈர்ப்பு நோக்கமில்லை.

தொல் இயல் ஆய்வுத் தளங்களும்,
கல்வெட்டுப் படிகளும் கவனிப்பாரின்றிப்
பாழாகி வருகின்றன.


தேவ்

DEV RAJ

unread,
Jul 26, 2013, 2:27:38 PM7/26/13
to vall...@googlegroups.com
On Thursday, 25 July 2013 22:23:32 UTC-7, பூனைக் கவிராயர் wrote:
ஸ்வராஜ்யக் கட்சி தியோசாபிகல் சொஸைட்டி அசல் திராவிட சங்கத்தை நிறுவித் தமிழ் வளர்த்த அயோத்தி தாச பண்டிதர் இரட்டை மலை சீனிவாசன் (ஒரு பைசாத் தமிழன்) ...


அயோத்திதாசரை நான் முழுமையாகக் கண்டடைந்தது அடுத்த வருடம் 1999 ல் 
ஞான அலாய்சியஸ் அவர்களால் ஆய்வுப்பதிப்பாக பாளையங்கோட்டை 
தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையால் வெளியிடப்பட்ட 
'அயோத்திதாசர் சிந்தனைகள்' என்ற இரு தொகுதி நூல்கள் வழியாக.
.ஃபாதர் ஜெயபதி அவர்களிடமிருந்து அந்நூல்களை ஆரம்பத்திலேயே 
வாங்கிய சிலரில் நானும் ஒருவன். அந்தப் பெருந்தொகை தமிழில் 
ஆழமான பாதிப்புகளை, விவாதங்களை உருவாக்கும் என நான் நினைத்தேன். 
ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. அவரைப் பற்றிப் பாராட்டாகச் சில 
சொற்களைச் சொல்லிவிட்டுத் தமிழ்ச்சூழல் அமைதியடைந்துவிட்டது.


அயோத்திதாசரைத் தமிழில் ஒரு உண்மையான தத்துவ விவாத மரபை 
உருவாக்க முயன்ற முன்னோடி என்ற கோணத்திலும் ஆராயவேண்டும் 
என்பது என்னுடைய எண்ணம். அந்தக் கோணத்தில் அவரை எதிர்த்தோ 
ஆதரித்தோ எப்படிவேண்டுமானாலும் விவாதம் எழலாம். ஆனால் இன்றுள்ள 
புறக்கணிப்பு இனிமேலாவது முடிவடைய வேண்டும். நான் சொன்னதுபோல 
அவரை ’வெறும்’ ஒரு தலித் சிந்தனையாளர் என்று முத்திரை 
குத்துவதே முக்கியமான புறக்கணிப்பாகும்.




சொல்லப்போனால் தமிழகத்தில் நிகழ்ந்த முதல் வெகுஜன அரசியல் 
இயக்கம் என்றே தலித் எழுச்சியைச் சொல்லிவிடமுடியும். சென்னையைச் 
சுற்றி வாழ்ந்த தலித் மக்களிடையே ஆயிரத்து எண்ணூறுகளின் 
கடைசியில் உருவானது இந்த விழிப்புணர்ச்சி.  அதன் நாயகர்கள் 
பண்டித அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா 
போன்றவர்கள். அந்த எழுச்சி உருவாவதற்கான சமூகக்காரணங்கள், 
வரலாற்று வாய்ப்புகள் பற்றி எல்லாம் நமக்கு இன்று எதுவுமே தெரியாது. 
காரணம் கிட்டத்தட்ட நூறு வருடம் இந்த வரலாற்றுநிகழ்வு முழுக்கவே 
நம் பார்வையில் படாமல் இருந்தது, நமக்கு மறைக்கப்பட்டிருந்தது.


ஆல்காட் 1907ல் இறப்பது வரை சென்னை அடையாறு பிரம்மஞானசபையின் 
தலைமைப்பொறுப்பில் இருந்தார். அவருக்குப்பின்னர் அவரது இடத்துக்கு 
அன்னிபெசண்ட் வந்தார். ஆல்காட் சென்னையில் இருந்த காலகட்டத்தில் 
சென்னையின் அறிஞர்களுடன் நேரடித் தொடர்புடையவராக இருந்தார். 
அவருடன் தொடர்புகொண்டசிந்தனையாளர்களே சென்னையில் ஒரு பௌத்த 
மறுமலர்ச்சி இயக்கத்தை அமைத்தார்கள். அவர்களில் அயோத்திதாச பண்டிதர், 
சிங்காரவேலர், லட்சுமிநரசு ஆகியோர் முக்கியமானவர்கள்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித் எழுச்சிக்கு இருவகையில் 
ஆல்காட் காரணமாக இருந்தார். ஒன்று அயோத்திதாசர் போன்றவர்களுடன் 
அவருக்கிருந்த நேரடி உறவுமூலம் நவீன அரசியலெண்ணங்களை 
அவர்களுக்கு அளித்தார். தலித் மாணவர்களுக்கு நவீனக்கல்வியை 
அளித்ததன் மூலம் ஒரு புதிய தலைமுறை உருவாகக் காரணமாக அமைந்தார்.

 

DEV RAJ

unread,
Jul 26, 2013, 2:45:37 PM7/26/13
to vall...@googlegroups.com
சரீரத்தால் அடிமைப்பட்டிருப்பதைப் பார்க்கிலும்
அறிவினால் அடிமைப்பட்டிருப்பது மிகவும் கொடுமையாகும்
                               - பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை


பேராசியர், அடிப்படையில் மொழியியல், அகராதியியல், வரலாற்றியல், ஒப்பீட்டியல் என்னும் 
சம கால ஆய்வு முறைமைகளையும், புலமை மரபையும் உட்செறித்து காரண காரியத்துடன் 
ஆய்வினை அணுகும் போக்கினைக் கொண்டிருந்தார். அதனால் அவருடைய பதிப்பும் மற்ற 
பதிப்புகளில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. 1922-இல் மனோன்மணியம் பதிப்பைத் தொடங்கிய 
பேராசிரியர் 1956 வரை கிட்டத்தட்ட அறுபது நூல்களைப் பதிப்பித்துள்ளார். பேராசியர் ச. வையாபுரிப்பிள்ளையின் 
பதிப்புப் பணி என்னும் தலைப்பில் ஆய்வு செய்த பு. ஜார்ஜ் பலவகை நூல்களைப் பதிப்பித்துள்ள 
வையாபுரிப்பிள்ளையின் பதிப்பு அறிவியல் முறையிலானது என்றும், தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் 
தனிச்சிறப்பு வாய்தவை. ஆனால் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் உரிய மதிப்பீடு  செய்யப்படவில்லை 
என்று குறிப்பிடுகிறார். மேலும் தமிழ்ப் பதிப்பு வரலாறு சரியாக எழுதப்பட் வேண்டுமெனில், 
பதிப்பாசிரியர் என்ற நிலையில், வையாபுரி பிள்ளையை மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியது 
அவசியமாகிறது (பு. ஜார்ஜ்: 2002) 




முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களின் இந்த மே மாதப் பதிவுக்கு
இன்றுவரை யாதொரு பின்னூட்டமும் இல்லை ; வரலாற்று ஆவணங்களில்
நாம் காட்டும் கரிசனம் அவ்வளவுதான்



தேவ்

Nagarajan Vadivel

unread,
Jul 27, 2013, 11:30:19 AM7/27/13
to vallamai
20-ஆம் நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சியைக் கணித்தவர்கள் கணிப்பவர்கள் திராவிட இயக்கத்தினர் அவரைச் சங்கத வளங்களைத் தமிழுக்குப் புகுத்திய ஆரிய அடிவருடி என்றும்  சங்கதப் பற்றாளர்கள் வேத வைதீகக் கருத்துக்களை அதிகம் தமிழ் தெரியாத ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு சென்றதால் ஒரு தமிழ் வெறியர் என்றும் அறிவு ஜீவிகள் அவர் குடி வெறியில் கவி எழுதிய ஒரு கவிஞர் என்றும் அவர் உலக மகா கவி என்றெல்லாம் அழைக்கத் தகுதியில்லாதவர் என்றும் கர்நாடக இசை உலகம் அவரி இசைஞானத்துடன்  பண் பாட வல்ல  இசைக் கலைஞர் என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவரை வசதியாகக் கைகழுவிவிட்டு அவர் பெயர் தமிழ் பற்று பற்றிப் பேசுபவர்கள் சிந்தையில் இடம் பிடிக்காமல் இருப்பது ஏன்? 

யார் அவர்?  பாரதியார் திராவிட  இயக்கம் சங்கத அறிஞர்கள் இசை உலகம் காந்தியார் தலைமையில் வளர்ந்த தேசிய இயக்கம் என்று எல்லாராலும் ஓரங்கட்டப்பட்ட தமிழ்ப் பற்றாளர் அவர்

ஆராய்ச்சிக் குஞ்சு


2013/7/26 DEV RAJ <rde...@gmail.com>
On Thursday, 25 July 2013 22:23:32 UTC-7, பூனைக் கவிராயர் wrote:
 

--

DEV RAJ

unread,
Jul 30, 2013, 11:14:24 PM7/30/13
to vall...@googlegroups.com
இந்து மதத்தைப் பற்றிய தீவிர வலச்சாரித் தன்மை படைத்த 
இயக்கங்களை இந்துத்துவா என்று அழைக்கிறார்கள். 
இந்தியர்களிடையே தீவிர வலச்சாரித் தன்மையும் இருக்கிறது. 
அதை Indian Jingoism, Chauvinism என்று வர்ணிக்கலாம். 
இது படைத்த ஆட்கள் "இந்தியர்கள்தாம் முதன்முதலில் அதைச் செய்தார்கள், 
இதைச்செய்தார்கள் என்று பீற்றிக்கொள்வார்கள். அவற்றில் முக்காலே மூணு 
வீசம் பொய், இதற்கும்கூட பெயர் கொடுக்கலாம். 'பாரதத்துவா' என்பது பொருந்தும். 
'பாரதீயம்' என்ற பெயர் கொஞ்சம் புனிதமானது. அதைக் கொச்சைப் படுத்தக்கூடாது.


இதேபோன்ற தன்மைகளைத் தமிழர்களிடையே நிறைய காணலாம். 
இவையெல்லாம் லெமூரியாவிலிருந்து ஆரம்பிக்கும். 
இதற்கு நான் ஏற்கனவே பெயர் கொடுத்துவிட்டேன்.
தமிழ்த்துவா. 


இதன் தன்மைகளைக் கொஞ்சம் ஆராய்வோம். ஏற்கனவே 
பலகாலமாகத் தெரிந்ததுதான். இதன் Off-shootsகூட 
இருக்கின்றன. பாவாணரிஸம், பாதாயிஸம், கலைஞரிஸம் 
என்பவை கிளைகள். பாரதிதாசனிஸம்தான் பாதாயிஸம் 
என்று சுருங்குகிறது.


பெரியாரிஸம் என்பதை தமிழ்த்துவாவில் சேர்க்கவில்லை. 
"தமிழனுஹ முட்டாப்பசங்க. எதச் சொன்னாலும் நம்பீருவானுஹ. 
அடிமையாவே இருந்து இருந்து பழகிப் போனவனுஹ" என்றெல்லாம் 
பெரியார் சொல்லிக்கொண்டிருந்தவர். ஆகையால்தான் பெரியாரிஸத்தைத் 
தமிழ்த்துவாவுக்குள் கொண்டுவரவில்லை.


அன்புடன்
ஜெயபாரதி

வேந்தன் அரசு

unread,
Jul 31, 2013, 7:55:15 AM7/31/13
to vall...@googlegroups.com


30 ஜூலை, 2013 11:14 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

-- 

ஜெயபாரதியும் தேவும் ஒருவர்தாமா?

 

DEV RAJ

unread,
Jul 31, 2013, 2:42:57 PM7/31/13
to vall...@googlegroups.com
இல்லை  ஐயா;
அவரது கருத்து முன்வைக்கப் படுகிறது


தேவ்

DEV RAJ

unread,
Aug 2, 2013, 3:05:34 PM8/2/13
to vall...@googlegroups.com
தமிழும் தனித்தமிழும்! : ஜெயகாந்தன்

 
தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.

இந்தத் தெளிவு எனக்கிருப்பதால் தனித்தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை. இந்தத் தெளிவு இல்லாததினால் 
தனித்தமிழ்ப் பிரியர்கள் தம்மை அறியாமலேயே தமிழை வெறுத்து வருகிறார்கள்.


தமிழனது சமுதாய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கலப்புகள் நிகழ்ந்திருக்கிறதோ அப்பொழுதெல்லாம் 
தமிழ் மொழியில் கலப்பு நிகழ்ந்திருக்கிறது. இவ்விதக் கலப்பினாலேயே அவனது வாழ்க்கை வளமுற்றது போல - 
அவனது மொழியும் வளம் பெற்றிருக்கிறது.


தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் இத்தகைய கலப்புக்களையெல்லாம் தவிர்க்க முடியாமல் 
ஏற்றுக் கொண்டுவிட்ட சிலர், மொழி மட்டும் தனித்திருக்க வேண்டுமென்று ஆசையுற்று அவ்வித 
முயற்சியில் இறங்குவது ரசனைக்குரியதே. ஒரு முயற்சி என்ற முறையில் அதிலிருக்கும் பலவீனமான 
அழகைக் கூட என்னால் ரசிக்க முடிகிறது. எனினும் அதுவே தமிழ் என்பதைத்தான் என்னால் 
ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


அந்தத் தனித்தமிழ் முயற்சியில் சில வியாசங்கள் வரையலாம். நண்பர்களுக்குக் கடிதங்கள் 
எழுதிக் கொள்ளலாம். மேடையில் மிகுந்த ஜாக்கிரதையோடு கூடிய ஒரு சமத்காரத்தோடு 
கூற வந்த விஷயத்தைக் கூற முடியாமலேயே - தமிழின் தனித்துவத்தைக் காப்பாற்றக் 
கூடிய முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ பெற்று ஒருவாறு பேசி முடிக்கலாம்.


என்னதான் செய்தாலும் இந்தத் தனித்தமிழில் ஒன்றை மட்டும் செய்ய முடியாது. 
இலக்கியம் சிருஷ்டிப்பது என்ற மகத்தான காரியத்தைக் கம்பியில் நடப்பது போன்ற 
இந்தத் தனித்தமிழ் என்கிற 'பாலன்ஸ்' கூத்தின் மூலம் நிறைவேற்றவே முடியாது.


ஒரு மொழியெனின் அதில் இலக்கியம் உருவாக வேண்டும். வாழ்க்கையைப் 
புறக்கணித்து இலக்கியங்கள் உருவாவதில்லை. இன்றைய தமிழ் இலக்கியம் 
என்பது - உலக அளவிற்கு உட்பட்ட துறைகளில் உருவாவது, உரைநடையில் 
நிறைவேறுதல் வேண்டும். உரை நடையென்று செய்யுளுக்கு வந்த உரைபோல 
அமைதல் கூடாது. எந்த அளவுக்கு நடைமுறை வாழ்க்கையோடு - அதன் 
பிரத்தியேக அழகுகளோடு வசனம் இசைந்து உருப்பெறுகிறதோ 
அந்த இசையையே வசனத்தின் வளர்ச்சியெனக் கொள்ளூதல் வேண்டும். 
அதற்குமேல் நவீன இலக்கியங்கள் நாம் சந்திக்கின்ற மனிதர்களைப் 
பாத்திரங்களாகக் கொண்டிருத்தல் வேண்டும்.


பாத்திரப் படைப்பு என்பது ஒவ்வொன்றும் தனித்தன்மையோடு 
விளங்க - இது இந்தக் காலத்தை - இந்தச் சூழ்நிலையை - 
இந்தப் பிரதேசத்தை - இந்த வர்க்கத்தை என்றெல்லாம் 
சம்பாஷணைகளின் மூலமும் சிந்தனைகளின் மூலமும் 
ஆசிரியனின் விவரிப்பின் மூலமும் நிலை பெறுதல் வேண்டும்.


இந்தச் சாதனையைத் தனித்தமிழ் என்ற ஒரு சாதாரண 
முயற்சி சாதிப்பது துர்லபம். ஏனெனில் தனித்தமிழ் 
என்பது ஒரு வாழ்க்கை உண்மையில்லை; அது ஒரு மனமயக்கம்! 
அல்லது ஒரு குழுவின் விருப்பம். இதற்கும் வாழ்க்கைக்கும் 
சம்பந்தம் இல்லாதிருப்பதே இதன் சிறப்பு.

(எனவேதான் இதனை ஒரு முயற்சி என்று குறிப்பிட்டேன்.)

வேந்தன் அரசு

unread,
Aug 2, 2013, 7:37:45 PM8/2/13
to vall...@googlegroups.com


2 ஆகஸ்ட், 2013 3:05 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் மிஸ்டர் காந்தன். 



--

seshadri sridharan

unread,
Aug 3, 2013, 5:34:35 AM8/3/13
to vall...@googlegroups.com
தனித் தமிழ் என்பது தமிழ்ச் சொற்களாகவே அமைவது என்பதைத் தவிர ஒன்று இல்லை. செயகாந்தன் அளவிறந்த வழக்கொழிந்த சமற்கிருத சொற்களை பயன் படுத்துவதைப் பார்த்தல் அவர் சொம்பு தூக்கியாகிவிட்டார் என்பதையே காட்டுகிறது.  முடிந்தால் 10 ஆம் நூற்றாண்டு வரையான நடுகற்களை படிக்கச் சொல்லுங்கள் அவரை.  


சேசாத்திரி 

2013/8/3 DEV RAJ <rde...@gmail.com>

-- 

வேந்தன் அரசு

unread,
Aug 3, 2013, 9:22:52 AM8/3/13
to vall...@googlegroups.com
சமஸ்கிருதம் தேய்ந்து இந்தி ஆச்சு. காரணம் ஆயணும். அதுபோல் தமிழ் ஆகணுமா?

அண்மையில் வடநாட்டில் ஒருவன் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்தான் .  தொலைக்காட்சியில் அதை சொல்லியவன் கழுத்தை கலே என்றான்.

உழுந்தை உரத்,
தொண்டைக்காயை டிண்டோரா
மிர்யலை  மிர்ச்சி
மகளிரை = மஹிளா
 
கள்ள நாயகனை கள்நாய்க்

இன்னும் எத்தனை சிதைந்தனவோ
--

Nagarajan Vadivel

unread,
Aug 3, 2013, 9:30:34 AM8/3/13
to vallamai

2013/8/3 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

சமஸ்கிருதம் தேய்ந்து இந்தி ஆச்சு. காரணம் ஆயணும்.

​சமஸ்கிரிதம் தேய்ந்து இ9ந்தி ஆகவில்லை.  சமஸ்கிரிதத்தின் எழுத்துவடைவான தேவநகரியில் வழங்கும் பல மொழிகளில் ஒன்றான இந்தி காசியில் வாழ்ந்த இந்திமொழிப்பற்றாளர்களின் 140 ஆண்டுகாலப் போராடத்தால் வெற்ரி பெற்றது

ஆங்கிலம் உருது ஆகிய இரண்டு மொழிகளைன் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த இந்தி கையளவு எண்ணிக்கையுள்ளா இந்தி மொழி அறிஞர்களின் தொடர் முயற்சியால் சுதந்துர இந்தியாவில் வெற்றி பெற்ரது

மொழிவளமே இல்லாத இந்திமொழி ​நடுவண் அரசின் அளப்பரிய ஆதரவால் வளர்ச்சியடைந்தது

தமிழுக்கு இந்த மொழிப்பற்றாளர்களும் அரசின் ஆதரவும் இல்லை என்பதே உண்மை

வவ

seshadri sridharan

unread,
Aug 3, 2013, 10:50:28 AM8/3/13
to vall...@googlegroups.com
2013/8/3 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
உழுந்தை உரத்,
தொண்டைக்காயை டிண்டோரா
மிர்யலை  மிர்ச்சி
மகளிரை = மஹிளா
 
கள்ள நாயகனை கள்நாய்க்

இன்னும் எத்தனை சிதைந்தனவோ

 
பய் என்பது உயர்வுக் கருத்து தெலுங்கில். பய்யன் என்றால் அண்ணன் என்ற சொல் பண்டு தமிழில் வழங்கி உள்ளது. இருச பய்யனார், பய்யசாத்தன் போன்ற பெயர்கள் நடுகற்களில் பதிவாகியுள்ளன. இந்த பய்ய என்ற சொல்லே அண்ணன் என்ற பொருளில் bhayya என்று இன்று இந்தியில் வழங்குகிறது.     

வேந்தன் அரசு

unread,
Aug 3, 2013, 11:17:18 AM8/3/13
to vall...@googlegroups.com


3 ஆகஸ்ட், 2013 9:30 AM அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:


2013/8/3 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
சமஸ்கிருதம் தேய்ந்து இந்தி ஆச்சு. காரணம் ஆயணும்.

​சமஸ்கிரிதம் தேய்ந்து இ9ந்தி ஆகவில்லை.  

வேறு எது தேய்ந்து?

கிரஹம் = கர்
துக்தம் = தூத்
 துவம் = தும்
ஏகம் = ஏக்
தசம் = தஸ்

 

Nagarajan Vadivel

unread,
Aug 3, 2013, 1:24:51 PM8/3/13
to vallamai
2013/8/3 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
வேறு எது தேய்ந்து?

​தொடக்ககால இந்தி வளர்ச்சியைப் படித்தால் அந்தமொழி கூச்சப்படாமல் ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளிலும் இருந்து கடன் வாங்கித் தான் வளர்ந்தது.

இந்தி சமஸ்கிரிதத்துக்கு ஒரு வரிவடிவம் தந்தது.  சமஸ்கிரிதம் தன்னுடைய வளமையும் செம்மையும் மாற்றுக் குறையாமல் பார்த்துக் கொண்டது.  அன்மைக் காலத்தில் சதீஸ்கார் மாநிலம் தவிர சமஸ்கிரிதம் அலுவல் மொழியாகவோ கற்பிக்கும் மொழியாகவோ இருந்ததில்லை.  

வவ


DEV RAJ

unread,
Aug 3, 2013, 7:46:42 PM8/3/13
to vall...@googlegroups.com
On Saturday, 3 August 2013 06:30:34 UTC-7, பூனைக் கவிராயர் wrote:
​சமஸ்கிரிதம் தேய்ந்து இ9ந்தி ஆகவில்லை.  
 

கவிராயர் காசியில் வாழ்ந்தவர்; 
அவர் இவ்வாறு ஏன் சொல்கிறார் தெரியவில்லை.
சங்கத - இந்தி திரிபுகள் முன்பு ஒரு பட்டியல் கொடுத்திருந்தேன்

மாதா - மையா,மா [அன்னை]
ப்ராதா - பை[bh]யா [உடன்பிறந்தவன்]
பகிநி - பெஹன் [உடன் பிறந்தாள்]
புத்ர - பூத் [மகன்]
மித்ர - மீத், மித்வா [தோழன்]
பத்ர  - பத்தா [இலை]
க்ஷேத்ர - கேத் [வயல்]
ச்வசுர - ஸஸுர் [மாமனார்]
ச்யால - ஸாலா [மைத்துனர்]
வைத்ய - பைத் [மருத்துவர்]


விவாஹ - ப்யாஹ் [திருமணம்]
லக்ந - லகன் [லக்னம்]
சந்த்ர - சந்த், சாந்த் [நிலவு]
ஸூர்ய - ஸூரஜ் [ஸூர் - பழைய ஹிந்தி]
பூர்ணிமா - பூனம்
வர்ஷா - பரஸ், பர்ஸாத் [மழை]
ரிது - ருத் [பருவம்]
மூர்த்தி - மூரத்
சக்தி - ஸகத்
தேச  - தேஸ்
ஸ்வர - ஸுர்


ஸ்மரண - ஸுமிரன்
போஷண - போஸ்னா [பேணுதல்]
பேஷண - பீஸ்னா [அரைத்தல்]
விநா - கே பினா [இல்லாமல்]
பஹி, பாஹ்ய - பாஹர் [வெளியே]
உபரி - ஊபர் [மேலே]

க்ருஷ்ண - கிஷன்
லக்ஷ்மண - லகன்
கர்ணபுரி - கான்புர்
அக்ஷ - ஆங்க் [கண்]
கர்ண - கான் [காது]
தந்த - தாந்த் [பல்]
ஒஷ்ட - ஓட் [உதடு]
ராத்ரி - ராத்
ஸ்வர்ண - ஸோனா
தாம்ர - தாம்பா
மாணிக்ய - மனேக்
வ்ரஜ - ப்ரஜ், ப்ரிஜ்

துக்த - தூத் [பால்]
க்ஷீர - கீர்
பத்ர - பத்தா [இலை]
ஆம்ர - ஆம் [மாமரம்]
நிம்ப - நீம் [வேம்பு]
நாரிகேல - நாரியல் [தேங்காய்]

மயூர - மோர் [மயில்]
கோகில - கோயல் [குயில்]
ஹரிண - ஹிரன் [மான்]
க்ருத்ர - கீத் [கழுகு]
குடீர - குடியா [குடில்]
ச்ருங்க - ஸீங்க் [கொம்பு]



தேவ் 

வேந்தன் அரசு

unread,
Aug 3, 2013, 7:54:07 PM8/3/13
to vall...@googlegroups.com


3 ஆகஸ்ட், 2013 7:46 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

தேவ்காரு என் வாதத்துக்கு வலு சேர்க்கிறார்.

தமிழ் தன் இளமையை காக்கணும் என்றால் சொல் திரிபுகளை தவிர்க்கணும். பழம் சொற்களை புழக்கத்தில் தக்க வைக்கணும்,

 இல்லெனில் பாரதி பாட்டுக்கும், கண்ணதாசன் பாட்டுக்கும் பொழிப்புரை எழுத வேண்டிய நாளும் வரும்.

DEV RAJ

unread,
Aug 3, 2013, 8:07:41 PM8/3/13
to vall...@googlegroups.com
தமிழும் தனித்தமிழும்! : ஜெயகாந்தன் 

ஒரு பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகளிருப்பது ஒரு மொழியின் செழுமை. 
அவ்விதம் இருக்கின்ற வார்த்தைகளை மொழி ஆராய்ச்சியாளர்கள் எந்தெந்த 
வார்த்தைகள், எந்தெந்தக் காலத்தில், எதனெதன் விளைவாய் எந்தெந்த 
மொழிகளில் இருந்து வந்திருக்கக் கூடுமென்பதை ஆராய்ந்து குறிக்கலாம். 
இதற்கு உதவுபவை அம்மொழியின் இலக்கியங்களேயாகும்.

அதாவது இத்தகைய கலப்புக்களை அவ்விலக்கியங்கள் பிரதிபலித்திருக்கக் 
கூடும் என்று கொள்ளுதல் வேண்டும்.

நாவாய் என்ற வார்த்தை தமிழர் நாகரிகம் கடல் கடந்து சென்ற காலத்திற்கு 
முன்பு தமிழக மண்ணில் யவனர்கள் வாணிகஞ் செய்யும் பொருட்டு 
வருவதற்கு முன்பு இருந்திருக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும்.

நாவாய் என்ற சொல் கப்பலைக் குறிக்கின்ற தனித் தமிழ் சொல்லெனக் 
கருதுதல் வேண்டா. அஃது கிரேக்க மொழியின் 'நோவே' என்ற கப்பலைக் 
குறிக்கின்ற சொல்லின் திரிபேயாகும். இவ்விதம் திரிந்து பல்வேறு ஐரோப்பிய 
மொழிகளிலும் இவ்வார்த்தை இருத்தல் கூடும். 
ஆங்கிலத்தில் 'நேவி' என்றிருப்பது போல.

தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் ஒவ்வொரு காலத்து இலக்கியமும் 
அந்தந்தக் காலத்தைப் பிரதிபலிப்பனவையாயிருக்கின்றன. 
அவை யாவும் ஒரே செய்யுள் வடிவில் இருப்பினும் ஒரே மாதிரியாக இல்லை.

தமிழுக்கு சிரஞ்சீவித் தன்மை தந்த தமது முற்காலத்துக் கவிஞர்கள் எல்லாம் 
வாழ்க்கையில் வந்து கலந்த பிறமொழிச் சொற்களைக் கைவிட முடியாமல் 
கையாண்டு நமது இலக்கியங்களூக்குச் செழுமை தந்திருக்கின்றனர். அதற்கு 
இடங்கொடுக்காத இலக்கணத்தை அவர்கள் இழுத்து வளைத்திருக்கிறார்கள். 
அவர்கள் இழுப்பிற்கு இலக்கணம் வளைந்து கொடுத்தும் இருக்கிறது. அதன் 
மூலம் அவர்கள் புதிய இலக்கணத்தை உருவாக்கியுமிருக்கிறார்கள்.

அன்று அவர்கள் இலக்கியம் சமைத்திருப்பது செய்யுள் உருவத்தில். 
அவர்களே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் - அவர்கள் காலத்தைவிட 
எத்தனையோ மடங்கு வேகமானதும் விரைவானதுமான, அதிகக் கலப்பு நிகழ்ந்து 
கொண்டிருக்கும் இந்தக் கால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நவீன இலக்கியத்தை 
உரைநடையின் மூலம் உருவாக்குகின்ற ஒருவன் தனித் தமிழைக் 
காப்பாற்றுவது எங்ஙனம்?

'அந்தோணி சைக்கிளில் போனான். டயர் பஞ்சராயிற்று' என்ற வாக்கியங்கள் 
தமிழ் இல்லையென்று யார் சொல்லுவது? இதனை எவ்விதம் தமிழாக்குவது? 
தனித் தமிழ்வாதிகளூக்கு இந்தச் சொற்றொடரில் இரண்டே வார்த்தைகள் தான் 
இருக்கின்றன. ஆயிற்று, போனான் என்பதே அவை. ஆவதும், போவதும் தமிழனின் 
எல்லாக் காலத்திலும் இருந்த ஒரு வினை. 

ஆனால் அந்தோணியும், சைக்கிளும், டயரும், பஞ்ச்சரும் ஒரு 
நவீன காலத்தைப் பிரதிபலிக்கின்ற உண்மைகள் அல்லவா?

இதனை மொழிபெயர்ப்பதன் மூலம் காலமும் இடமும் அற்ற 
ஒரு கனவு மயக்கத்திற்கு அல்லவா நாம் போய் விடுகிறோம்.
சைக்கிள் என்ற பொருள் நமக்கு வேண்டும். சைக்கிள் என்ற 
பெயர் நமக்கு வேண்டாம் என்று சிலர் விரும்புவதை வாழ்க்கை 
எவ்விதம் அனுமதிக்கும்?

வேந்தன் அரசு

unread,
Aug 3, 2013, 8:23:37 PM8/3/13
to vall...@googlegroups.com


3 ஆகஸ்ட், 2013 8:07 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

தமிழும் தனித்தமிழும்! : ஜெயகாந்தன் 

ஒன்றிரண்டு கதை எழுதி புகழ் பெற்று விட்டால் அவர்கள்  பல்துறை வல்லுநர் ஆகிவிட்டார் எனும் மமதை கொள்கிறார்கள்.

அருந்ததி ராயும் அரசியலில் தலை இடுவது இதனாலே.

>அந்தோணி சைக்கிளில் போனான். டயர் பஞ்சராயிற்று' என்ற வாக்கியங்கள் 
தமிழ் இல்லையென்று யார் சொல்லுவது? இதனை எவ்விதம் தமிழாக்குவது? 

இவரால் இயலாது எனில் எவராலும் இயலாது??

வண்டி சக்கரத்துக்கு அந்த காலத்தில் பூண் போட்டார்கள். டயரும் பூண் தான். அது தொளை ஆயிடுச்சு

மிதிவண்டி,ஈர் உருளி,  துவிசக்கர வண்டி, 


DEV RAJ

unread,
Aug 3, 2013, 11:16:48 PM8/3/13
to vall...@googlegroups.com
On Saturday, 3 August 2013 16:54:07 UTC-7, வேந்தன் அரசு wrote:
தேவ்காரு என் வாதத்துக்கு வலு சேர்க்கிறார்.
 

நன்றி 


On Saturday, 3 August 2013 17:23:37 UTC-7, வேந்தன் அரசு wrote:
இவரால் இயலாது எனில் எவராலும் இயலாது?? <<<
வண்டி சக்கரத்துக்கு அந்த காலத்தில் பூண் போட்டார்கள். டயரும் பூண் தான். அது தொளை ஆயிடுச்சு<<<<
மிதிவண்டி,ஈர் உருளி,  துவிசக்கர வண்டி,  <<<<<


வேந்தர் ஐயா ‘தேவ்காரு’ என அழகாக விளித்து ஜெ . கா அவர்களின்
சொற்களுக்கு மாற்றாகத் தமிழ்ச்சொற்களையும் தருகிறார்.
நல்லது.

தேவ்காரு - தமிழா ?
இல்லைதான்; ஆனால் அதில் ஒரு தோழமை உணர்வைக்
காண முடிகிறதே ! மொழி என்பதன் நோக்கமே உணர்வின்
வெளிப்பாடுதானே ? 

மற்றோர் இழையில்  திவாகர் காருவும், ராஜுகாருவும்
ஆந்திர மாநிலத்தின் அண்மைக்காலத்திய சிக்கல் ஒன்றை
தெலுங்கிடையிட்ட தீந்தமிழில் அலசிக்கொண்டனர்.
ஒருவர் அந்த வட்டாரத்தின் தொடர்பில் உள்ளவர்;
மற்றவர் அம்மொழியுடன் தொடர்பு கொண்டவர்.
அந்த உரையாடலை மேலும் உன்னிப்பாகக் 
கவனிக்க  ஆர்வம் மிகுந்தது; அதுதானே
உரையாடலின் வெற்றி.

இனிய தொல்தமிழ்ச் சொற்களின்பால்
எனக்கு மிகுந்த ஈர்ப்பு உண்டெனினும்
இன்றைய பன்முகச் சூழலில் பிறமொழிக்
கலப்பு தவிர்க்க  முடியாதது என்றே
தோன்றுகிறது



தேவ்


வேந்தன் அரசு

unread,
Aug 4, 2013, 6:43:26 AM8/4/13
to vall...@googlegroups.com


3 ஆகஸ்ட், 2013 11:16 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Saturday, 3 August 2013 16:54:07 UTC-7, வேந்தன் அரசு wrote:
தேவ்காரு என் வாதத்துக்கு வலு சேர்க்கிறார்.
 

நன்றி 


On Saturday, 3 August 2013 17:23:37 UTC-7, வேந்தன் அரசு wrote:
இவரால் இயலாது எனில் எவராலும் இயலாது?? <<<
வண்டி சக்கரத்துக்கு அந்த காலத்தில் பூண் போட்டார்கள். டயரும் பூண் தான். அது தொளை ஆயிடுச்சு<<<<
மிதிவண்டி,ஈர் உருளி,  துவிசக்கர வண்டி,  <<<<<


வேந்தர் ஐயா ‘தேவ்காரு’ என அழகாக விளித்து ஜெ . கா அவர்களின்
சொற்களுக்கு மாற்றாகத் தமிழ்ச்சொற்களையும் தருகிறார்.
நல்லது.

தேவகாரு, தேவ் அவர்களே என்பதன் சுருக்கம்.

ஐயங்கார் எனும் சொல்லாட்சியை கருதவும். 


--

DEV RAJ

unread,
Aug 4, 2013, 12:50:54 PM8/4/13
to vall...@googlegroups.com
On Sunday, 4 August 2013 03:43:26 UTC-7, வேந்தன் அரசு wrote:
ஐயங்கார் எனும் சொல்லாட்சியை கருதவும். 
 

அச்சொல்லாட்சியும் தனித்தமிழன்று.
’ஐயகாரு’  என்பதன் திரிபு. வடுகர் ஆட்சி
காலத்தின் உருவாக்கம்.

ஒருபுறம் சங்கத நீக்கம் நடைபெற்றாலும்
நிதர்சனம், அவதானிப்பு போன்ற புதிய பயன்பாடுகள்
பரவலாக இருக்கத்தான் செய்கின்றன.



தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 4, 2013, 2:24:30 PM8/4/13
to vall...@googlegroups.com


4 ஆகஸ்ட், 2013 12:50 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Sunday, 4 August 2013 03:43:26 UTC-7, வேந்தன் அரசு wrote:
ஐயங்கார் எனும் சொல்லாட்சியை கருதவும். 
 

அச்சொல்லாட்சியும் தனித்தமிழன்று.
’ஐயகாரு’  என்பதன் திரிபு. வடுகர் ஆட்சி
காலத்தின் உருவாக்கம்.


ஐயங்கார் ஐயகாரு ஆகலை என நிறுவனுமே?

உரைகாரர் என காரர் சொல்லாட்சி ஏற்கனவே தமிழில் உண்டே
 
ஒருபுறம் சங்கத நீக்கம் நடைபெற்றாலும்
நிதர்சனம், அவதானிப்பு போன்ற புதிய பயன்பாடுகள்
பரவலாக இருக்கத்தான் செய்கின்றன.

ஆமாம். 
நிதர்சனம் = கண்கூடு
அவதானிப்பு = ஓர்ப்பு

ஆர மார்பினை, அண்ணலை, அளியை
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின்,
'கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப்
புலி' என்று ஓர்க்கும், இக் கலி கேழ் ஊரே;
என ஆங்கு,
விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள், இவள் அன்றிப்
புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்;

Hari Krishnan

unread,
Aug 4, 2013, 9:52:57 PM8/4/13
to vallamai

2013/8/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

ஐயங்கார் ஐயகாரு ஆகலை என நிறுவனுமே?

உரைகாரர் என காரர் சொல்லாட்சி ஏற்கனவே தமிழில் உண்டே

உரையைச் செய்தவர் உரைகாரர்; நெறியைக் காட்டுபவர் நெறிகாரர்; சமையலைச் செய்பவர் சமையல்காரர்.....


அப்படியானால், தேவ்காரு என்பது, தேவைச் செய்தவறான அவருடைய தந்தையைக் குறிக்குமோ? :)


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

வேந்தன் அரசு

unread,
Aug 4, 2013, 9:59:51 PM8/4/13
to vall...@googlegroups.com


4 ஆகஸ்ட், 2013 9:52 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/8/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஐயங்கார் ஐயகாரு ஆகலை என நிறுவனுமே?

உரைகாரர் என காரர் சொல்லாட்சி ஏற்கனவே தமிழில் உண்டே

உரையைச் செய்தவர் உரைகாரர்; நெறியைக் காட்டுபவர் நெறிகாரர்; சமையலைச் செய்பவர் சமையல்காரர்.....


அப்படியானால், தேவ்காரு என்பது, தேவைச் செய்தவறான அவருடைய தந்தையைக் குறிக்குமோ? :)


ஐயா

பண்டு இருந்த பொருள் இன்று மாறிய பல சொற்கள் தாங்கள் அறியாதனவா?
 

DEV RAJ

unread,
Aug 4, 2013, 11:45:17 PM8/4/13
to vall...@googlegroups.com
On Sunday, 4 August 2013 11:24:30 UTC-7, வேந்தன் அரசு wrote:
ஐயங்கார் ஐயகாரு ஆகலை என நிறுவனுமே?
உரைகாரர் என காரர் சொல்லாட்சி ஏற்கனவே தமிழில் உண்டே


ராஜுகாரு எலானோ நிர்வஹிஸ்துன்னாரு,
இதி தப்பு.

’காரு’ சாதிப்பெயருடனோ, தனிப்பெயருடனோ
மரியாதைக்காகச் சேர்த்துச் சொல்வது;
வேந்தர் நன்கறிவார், ஆனால் சமாளிக்கிறார்.

பழைய வைணவ உரைகளில் ஐயங்கார் இல்லை. 
பெயரோடு ’ஆசார்ய’ [அ]‘ஆர்ய’ சேர்க்கும் 
வழக்கமே இருந்துள்ளது.

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பெயரிலிருந்துதான்
பயன்பாட்டில் மாற்றம் பதிவாகியுள்ளது. அது
வடுகர் ஆட்சிக்காலத்தை ஒட்டியது. 

அவதானிப்பு :

அன்பர்கள் மீள்பார்வை எனும் பொருளில் சொல்லி வருகிறார்கள் எனவும்
தோன்றுகிறது. ஈழப்பயன்பாடு; தமிழரும் ஏற்றுக்கொண்டனர்

நிதர்சனம் : கண்கூடு , 
சரியான சொல்




தேவ் 


சி. ஜெயபாரதன்

unread,
Aug 5, 2013, 8:08:41 AM8/5/13
to vall...@googlegroups.com, mintamil

விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி


கலப்பற்ற தூயமொழிகள் உலகில் எங்கே உள்ளன ?

கலப்பற்ற ‘தூயமொழி ‘ என்று பலர் பேசும் ஒரு வழக்கியல் மொழி, எங்காவது உலகில் தற்போது இருக்கிறதா என்னும் கேள்விக்குப் பதில் கிடைப்பது சிரமம்! வடதுருவத்துக்கு அருகில் எங்காவது நாகரீகக் காற்றுப் படாமல் வாழும் எஸ்கிமோ இனத்தவர், அல்லது நீலகிரி மலை உச்சியில் தனித்து வாழும் காட்டினத்தவர் பேசும் எழுத்தற்ற சில மொழிகள் கலப்பற்றுச் சுத்தமாக இருக்கலாம்! அவர்களில் பலரது மொழிகளுக்கு எழுத்துக்கள் கூட இல்லாமல் இருப்பதால், கலப்பதற்கு மூல வடிவங்களே இல்லாத அந்த வாய் மொழிகளைப் பற்றி இங்கே நான் குறிப்பிட வில்லை! எழுத்து வடிவங்கள் கொண்டு பல்லாண்டு காலம் பெரும்பான்மை இனத்தவர் பயன்படுத்தும், மொழிகளின் கலப்பற்ற தூய்மையைப் பற்றியே என் வினா எழுகிறது.

மனித இனங்கள் உலகெங்கும் தோன்றிய போதே அவற்றின் பேச்சு மொழிகளும் வளர்ச்சி யடைந்து, சிறுகச் சிறுக எழுத்து வடிவங்கள் பெற்றிருக்க வேண்டும். சமூகங்கள் நல்லாட்சி நிழலில் வளர்ந்து, நாகரீகம் அடைந்து, தொழில் வாணிபங்களால் செல்வம் பெருகிய பொற்காலத்தில், மொழிகள் ‘இலக்கணக் கட்டுப்பாடுகள்’ விதிக்கப்பட்டு இலக்கியங்களும், காவியங்களும் பிறந்திருக்க வேண்டும். தனித்தனி இனங்களின் இடப்பெயர்ச்சியாலும், அன்னிய இனத்தவர் படையெடுப்பாலும், வேறின மக்கள் கலந்து பிணைந்த போது, நாட்டு மொழிகளிலும் கலப்புச் சொற்கள் நாளடைவில் சேர்ந்தன! இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வேதியர்கள் கையாண்ட சமஸ்கிருதத்தின் பிணைப்புத் தமிழ்மொழியில் சேர்ந்துள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு, அச்சொற்களையும் தமிழில் பயன்படுத்திக் கொள்வதுதான் அறிவுடமையாகும்.

கலப்பற்ற தனித்தமிழ் நடையில் இலக்கியச் சொற்போர் நடத்தலாம். இலக்கியப் பாக்கள், நூல்கள், காவியங்கள் படைக்கலாம். ஆனால் நாளுக்கு நாள் வேகமாய் முன்னேறிச் செல்லும் விஞ்ஞான முற்போக்கு அறிவுக் களஞ்சியங்களைத் தனித்தமிழில் ஆக்க முடியுமா என்பதில்  ஐயப்பாடு உள்ளது! ஆங்கிலம் உள்பட ஐரோப்பிய மொழிகள் எல்லாம் புது விஞ்ஞானச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, படைப்புகளைப் புத்தக வடிவில் ஆக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் தமிழ் உள்பட பாரத மொழிகள் பல, அவ்விதம் விஞ்ஞான வளர்ச்சிகளைப் பின்பற்றி, அவ்வப்போது நூல் வடிவில் எழுதிக் கொண்டு வருகின்றனவா என்பது தெரியவில்லை! அதே சமயம், விஞ்ஞானச் சொற்களை எல்லாம் தனித்தமிழில் வடித்து விடலாம் என்று கனவு காண்போர் கனவை நான் கலைக்க விரும்ப வில்லை!

ஆங்கிலம் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டும் அகிலத்தின் பலகணி

ஏறக்குறைய 500 ஆண்டுகள் தமிழ்மொழி உள்பட எல்லா இந்திய மொழிகளும், ஆங்கிலம் போல் பூரண வளர்ச்சி யின்றி அடிமை மொழிகளாகப் புறக்கணிக்கப் பட்டுக் கீழ் நிலையில் கிடந்தன. 1947 இல் பாரதம் சுதந்திரம் அடைந்ததும், இந்திய மொழிகளும் விடுதலை பெற்றன. பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்து, மாநில அரசுகள் அரசாளத் துவங்கிய பிறகுதான், பிராந்திய மொழிகளுக்கு நல்ல காலம் பிறந்தது. கண்ணொளி பெற்ற பாரத மொழிகள், ஆங்கிலத்தின் உதவியால் வளர்ச்சி யடைந்தன! ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் சரித்திரம், பூகோளம், சமூகவியல், விஞ்ஞானம், கணக்கு ஆகிய போதிப்பு நூல்கள் முதன் முதல் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டன. ஆங்கில நூல்கள் பாரத மொழிகளுக்கு வழிகாட்டியாய் பாதை காட்டின! அவற்றில் பல பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன! இந்திய மொழிகள் அனைத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டும் உலகப் பலகணியாய் விளங்குவது, ஐயமின்றி ஆங்கில மொழியே!

கல்லூரிப் போதனை நூல்கள் யாவும் ஆங்கிலத்திலே அமைந்து, தொடர்ந்து ஆங்கிலத்திலே பயிற்பிக்கப் பட்டன. விஞ்ஞானம், கணிதம், மருத்துவம், சட்டப் படிப்பு போன்றவற்றைத் தெளிவாகக் கற்றுக் கொள்ள ஆங்கில மொழிக்குள்ள தகுதிபோல் பிராந்திய மொழிகளுக்குத் திறமை வர குறைந்தது 50 முதல் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆயினும் முழுக்க முழுக்க தமிழ் மொழியிலோ அல்லது மற்ற பிராந்திய மொழிகளிலோ கல்லூரியின் தரத்திற்குப் பட்டக் கல்வி புகட்ட முடியுமா என்பதில் ஐயப்பாடுள்ளது! தமிழ் மொழியிலும், மற்ற பிராந்திய மொழிகளிலும் பட்டப் படிப்புக்குத் தகுதியுள்ள நூல்கள், தற்போது அறிஞர்களால் எழுதப்படாமையே அதற்குக் காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம்!

பன்மொழிகள் கலந்த கூட்டு மொழியே தற்கால ஆங்கிலம்

ஆங்கில மொழி பல நூற்றாண்டுகளாக புதுச் சொற்களை ஏற்று மாறிக் கொண்டே வந்துள்ளது. அதில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் எண்ணற்றவை. ஆங்கிலம், பிரென்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தலி போன்ற ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும், சமஸ்கிருதம் போல் பூர்வீக மொழியான கிரேக்க, லத்தீன் மொழிச் சொற்கள் அநேகம் கலந்துள்ளன. இந்திய மொழிகளிலிருந்து குரு, யோகா, பறையா, நிர்வனா, கர்மா, மந்திரம், மாயா கட்டுமரான் [கட்டுமரம்], பண்டிட், பஜார், கர்ரி [Curry-Spice] போன்ற சொற்கள் இணைந்து, ஆங்கில அகராதியிலும் இடம் பெற்றுள்ளன! உலக நாடுகளில் பல இடங்களில் சைனாவின் கராத்தே பள்ளிகள் அமைக்கப் பட்டுள்ளது போல், யோகா பயிற்சிக் கூடங்கள் தோன்றி, மேலை நாட்டவருக்கு யோகாவைச் சொல்லிக் கொடுக்கின்றன! நமது நகரங்களில் ராக் சங்கீதம் இறக்குமதி ஆனதுபோல், யோகா பயிற்சி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி யுள்ளது!

இவற்றை இங்கே நான் குறிப்பிடுவதின் நோக்கம், வேதாந்தம் விஞ்ஞானம் இடப்பெயர்ச்சி யாவது போல், கலாச்சாரமும் நாகரீகமும் இடம் பெயர்கின்றன! அப்போது அந்நாட்டு மொழிகளிலும் அவை இடம்பெற்று புதுச் சொற்கள் கடன்வாங்கப் படுகின்றன! இருபதாம் நூற்றாண்டின் நடுவில் அணுயுகம், அண்டவெளி யுகம் உதயமாகி விஞ்ஞானம் விரைவாக முன்னேறிப் புதுச் சொற்கள் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் நுழைந்த போது, தமிழ்மொழியில் சொற்கள் அப்படி எழுதபட்டுச் சேர்க்கப் படவில்லை! பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக அரசாங்கத்தில் யாரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு முதன்மை இடம் அளிக்கவில்லை!

விஞ்ஞானப் படைப்புக் களஞ்சியத்தை நூலாக்கும் புதுத்தமிழ்

‘விஞ்ஞானப் புதுத்தமிழ் ‘ என்று நான் குறிப்பிடுவது, விரிந்து பெருகும் விஞ்ஞானப் புதுமைகளை, அவ்வப்போது எழுதும் ஆற்றலுள்ள கலப்புத்தமிழ்! அந்த கலப்புத்தமிழில் ஐயமின்றி கூடியவரைப் பெரும்பானமைத் தமிழ்ச் சொற்களே [60%-80%] கையாளப்பட வேண்டும். அடுத்து வேண்டிய விஞ்ஞானக் கலைச் சொற்களில் சிலவற்றை முடிந்தால் தமிழ்ப்படுத்தலாம்; அல்லது சமமான வடமொழிச் சொற்கள் இருந்தால் எடுத்தாளலாம்; அல்லது வடமொழியில் உண்டாக்க முயலலாம்; அல்லது ஆங்கிலச் சொற்களையோ, பிறமொழிச் சொற்களையோ அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக அணுவியல் துறைகளில் அணு, பரமாணு, அணுக்கரு போன்ற பண்டைச் சொற்களை Atom, Sub-atomic Particles, Nucleus ஆகிய ஆங்கிலச் சொற்களுக்குச் சமமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

கதிரியக்கம் [Radioactivity], தொடரியக்கம் [Chain Reaction], பூரணநிலை [Criticality], ஆறும் தொடரியக்கம் [Sub-critical Chain Reaction], மீறும் தொடரியக்கம் [Super-critical Chain Reaction], கதிர் ஏகமூலங்கள் [Radio-Isotopes], துகள் விரைவாக்கி யந்திரங்கள் [Particle Accelerators] போன்ற தமிழாக்கச் சொற்கள் போல், நாமே படைத்துக் கொள்ளலாம். கருத்துக்களைத் தமிழ்ப்படுத்த முடியாமல் போனால், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதிக் கொள்ளலாம். உதாரணமாக சில பரமாணுக்களின் பெயரைத் தமிழில் நியூட்ரான் [Neutron], புரோட்டான் [Proton], எலக்டிரான் [Electron], பாஸிடிரான் [Positron], நியூட்ரினோ [Neutrino] என்று எழுதலாம். டெலிவிஷன் காட்சிப் பெட்டியைத் தொலைக்காட்சி என்று பலர் குறிப்பிடுவதும் சரியே. Rocket என்பதை ராக்கெட் என்று எழுதினால் எல்லாருக்கும் புரிகிறது. எடுத்தாளும் சொற்கள் எளிதாகவும், புரியும் படியும், புரியா விட்டால் விளக்கக் கூடியதாகவும் எழுதப்பட வேண்டும்.

ஆங்கில எழுத்துக்களுக்குச் சமமான தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று வருந்த வேண்டிய தில்லை. உதாரணம்: (B, D, G) போன்றவை. டாக்டர் ஹோமி ஜெ. பாபா [Dr. Homi J. Bhabha] என்னும் பெயரைத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதிக் காட்டலாம். டாக்டர் ஷிவாகோ [Dr. Zhivago] என்று தமிழில் எழுதி ஆங்கிலத்தில் சமப் பெயரையும் அடைப்பில் குறிப்பிடலாம். அதுபோல் சில தமிழ் எழுத்துகளுக்குச் சமமான ஆங்கில எழுத்துக்களும் இல்லை! உதாரணம்: (ழகரம், ளகரம், றகரம், ணகரம், ஞகரம்). ‘தமிழ் ‘ என்பதை ஆங்கிலத்தில் Tamil, அல்லது Thamil என்றுதானே எழுத முடியும்! TamiZ என்று யார் குறிப்பிட்டு எழுதுகிறார் ? பார்க்கப் போனால் ஒவ்வொரு மொழியிலும் சில குறைகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. அதற்காக விஞ்ஞானச் சொற்களைத் தமிழில் எழுதிக் காட்ட முடியாது என்று முயலாமல் இருப்பதும், தேவைப்படும் போது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் ஒதுக்குவதும் மடமையோடு, விஞ்ஞானத் தமிழை வளர விடாமல் தடுக்கும் பிற்போக்குப் பண்பாகும்!

விஞ்ஞானப் புதுத்தமிழ் (கலப்புத்தமிழ்) = தமிழ்ச்சொற்கள் (80%-90%) +வடமொழிச் சொற்கள் அல்லது +ஆங்கிலச் சொற்கள் அல்லது +திசைச்சொற்கள் (10%-20%)

திசைச்சொற்கள் என்று இங்கு நான் குறிப்பிடுபவை: வடமொழி (சமஸ்கிருதம்), ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிச் சொற்கள் [தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, வங்காளம், உருது, போர்ச்சிகீஸ் போன்றவை].




வேந்தன் அரசு

unread,
Aug 5, 2013, 8:20:55 AM8/5/13
to vall...@googlegroups.com


4 ஆகஸ்ட், 2013 11:45 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Sunday, 4 August 2013 11:24:30 UTC-7, வேந்தன் அரசு wrote:
ஐயங்கார் ஐயகாரு ஆகலை என நிறுவனுமே?
உரைகாரர் என காரர் சொல்லாட்சி ஏற்கனவே தமிழில் உண்டே


ராஜுகாரு எலானோ நிர்வஹிஸ்துன்னாரு,
இதி தப்பு.

’காரு’ சாதிப்பெயருடனோ, தனிப்பெயருடனோ
மரியாதைக்காகச் சேர்த்துச் சொல்வது;
வேந்தர் நன்கறிவார், ஆனால் சமாளிக்கிறார்.

தேவ் ஐயா

தெலுகில் இருந்துதான் காரு தமிழுக்கு வந்தது. அதில் மறுப்பு இல்லை.
ஆயின் தெலுகுக்கு தமிழில் இருந்து அவர்கள் என்பது மருவி இருக்கும். அல்லது காரர் மருவி இருக்கும்.

பழம் தமிழில் ஆர் இறுதி உண்டு. நக்கீரனார், அவ்வையார்

 

சி. ஜெயபாரதன்

unread,
Aug 5, 2013, 8:36:20 AM8/5/13
to vall...@googlegroups.com, mintamil
தமிழ்ப் பாத்திரத்தைத் தினம் கழுவிச் சுத்தம் செய்வதிலேயே, நமது தனித்தமிழ்ப் பண்டிதர் காலம் பூராவும் நழுவி விடுகிறது.  அதில் என்ன நிரப்பப் படுகிறது என்பதுதான் என் கேள்வி.  

மேலும் படைத்தவை எல்லாம் சுத்தத் தமிழா, கலப்புத் தமிழா என்பதில் ஆய்வு செய்து தனித்தமிழர் முனைவர் பட்டம் வாங்குவார்.  

நமக்கு வேண்டியது நடைத்தமிழ் , நல்ல தமிழ். தனித்தமிழ் இல்லை.  

சைக்கிள் என்பதை வேந்தனார் இரு சக்கிர வண்டி என்று எப்போதாவது பயன்படுத்தி உள்ளாரா ?

சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++ 

2013/8/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

DEV RAJ

unread,
Aug 5, 2013, 2:40:55 PM8/5/13
to vall...@googlegroups.com, mintamil
On Monday, 5 August 2013 05:08:41 UTC-7, ஜெயபாரதன் wrote:

கலப்பற்ற தனித்தமிழ் நடையில் இலக்கியச் சொற்போர் நடத்தலாம். இலக்கியப் பாக்கள், நூல்கள், காவியங்கள் படைக்கலாம்.

 
காவியங்கள் படைப்பதுகூடச் சாத்தியமா ? மக்களைச் சென்றடையுமா ?
 

ஆனால் நாளுக்கு நாள் வேகமாய் முன்னேறிச் செல்லும் விஞ்ஞான முற்போக்கு அறிவுக் களஞ்சியங்களைத் தனித்தமிழில் ஆக்க முடியுமா என்பதில்  ஐயப்பாடு உள்ளது! ஆங்கிலம் உள்பட ஐரோப்பிய மொழிகள் எல்லாம் புது விஞ்ஞானச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, படைப்புகளைப் புத்தக வடிவில் ஆக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் தமிழ் உள்பட பாரத மொழிகள் பல, அவ்விதம் விஞ்ஞான வளர்ச்சிகளைப் பின்பற்றி, அவ்வப்போது நூல் வடிவில் எழுதிக் கொண்டு வருகின்றனவா என்பது தெரியவில்லை! அதே சமயம், விஞ்ஞானச் சொற்களை எல்லாம் தனித்தமிழில் வடித்து விடலாம் என்று கனவு காண்போர் கனவை நான் கலைக்க விரும்ப வில்லை!


நேர்மையான எழுத்து.  

 

ஏறக்குறைய 500 ஆண்டுகள் தமிழ்மொழி உள்பட எல்லா இந்திய மொழிகளும், ஆங்கிலம் போல் பூரண வளர்ச்சி யின்றி அடிமை மொழிகளாகப் புறக்கணிக்கப் பட்டுக் கீழ் நிலையில் கிடந்தன. 1947 இல் பாரதம் சுதந்திரம் அடைந்ததும், இந்திய மொழிகளும் விடுதலை பெற்றன. பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்து, மாநில அரசுகள் அரசாளத் துவங்கிய பிறகுதான், பிராந்திய மொழிகளுக்கு நல்ல காலம் பிறந்தது. கண்ணொளி பெற்ற பாரத மொழிகள், ஆங்கிலத்தின் உதவியால் வளர்ச்சி யடைந்தன! ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் சரித்திரம், பூகோளம், சமூகவியல், விஞ்ஞானம், கணக்கு ஆகிய போதிப்பு நூல்கள் முதன் முதல் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டன. ஆங்கில நூல்கள் பாரத மொழிகளுக்கு வழிகாட்டியாய் பாதை காட்டின! அவற்றில் பல பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன! இந்திய மொழிகள் அனைத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டும் உலகப் பலகணியாய் விளங்குவது, ஐயமின்றி ஆங்கில மொழியே!

இவற்றை இங்கே நான் குறிப்பிடுவதின் நோக்கம், வேதாந்தம் விஞ்ஞானம் இடப்பெயர்ச்சி யாவது போல், கலாச்சாரமும் நாகரீகமும் இடம் பெயர்கின்றன! அப்போது அந்நாட்டு மொழிகளிலும் அவை இடம்பெற்று புதுச் சொற்கள் கடன்வாங்கப் படுகின்றன! இருபதாம் நூற்றாண்டின் நடுவில் அணுயுகம், அண்டவெளி யுகம் உதயமாகி விஞ்ஞானம் விரைவாக முன்னேறிப் புதுச் சொற்கள் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் நுழைந்த போது, தமிழ்மொழியில் சொற்கள் அப்படி எழுதபட்டுச் சேர்க்கப் படவில்லை! பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக அரசாங்கத்தில் யாரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு முதன்மை இடம் அளிக்கவில்லை!

‘விஞ்ஞானப் புதுத்தமிழ் ‘ என்று நான் குறிப்பிடுவது, விரிந்து பெருகும் விஞ்ஞானப் புதுமைகளை, அவ்வப்போது எழுதும் ஆற்றலுள்ள கலப்புத்தமிழ்! அந்த கலப்புத்தமிழில் ஐயமின்றி கூடியவரைப் பெரும்பானமைத் தமிழ்ச் சொற்களே [60%-80%] கையாளப்பட வேண்டும். அடுத்து வேண்டிய விஞ்ஞானக் கலைச் சொற்களில் சிலவற்றை முடிந்தால் தமிழ்ப்படுத்தலாம்; அல்லது சமமான வடமொழிச் சொற்கள் இருந்தால் எடுத்தாளலாம்; அல்லது வடமொழியில் உண்டாக்க முயலலாம்; அல்லது ஆங்கிலச் சொற்களையோ, பிறமொழிச் சொற்களையோ அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக அணுவியல் துறைகளில் அணு, பரமாணு, அணுக்கரு போன்ற பண்டைச் சொற்களை Atom, Sub-atomic Particles, Nucleus ஆகிய ஆங்கிலச் சொற்களுக்குச் சமமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

கதிரியக்கம் [Radioactivity], தொடரியக்கம் [Chain Reaction], பூரணநிலை [Criticality], ஆறும் தொடரியக்கம் [Sub-critical Chain Reaction], மீறும் தொடரியக்கம் [Super-critical Chain Reaction], கதிர் ஏகமூலங்கள் [Radio-Isotopes], துகள் விரைவாக்கி யந்திரங்கள் [Particle Accelerators] போன்ற தமிழாக்கச் சொற்கள் போல், நாமே படைத்துக் கொள்ளலாம். கருத்துக்களைத் தமிழ்ப்படுத்த முடியாமல் போனால், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதிக் கொள்ளலாம். உதாரணமாக சில பரமாணுக்களின் பெயரைத் தமிழில் நியூட்ரான் [Neutron], புரோட்டான் [Proton], எலக்டிரான் [Electron], பாஸிடிரான் [Positron], நியூட்ரினோ [Neutrino] என்று எழுதலாம். டெலிவிஷன் காட்சிப் பெட்டியைத் தொலைக்காட்சி என்று பலர் குறிப்பிடுவதும் சரியே. Rocket என்பதை ராக்கெட் என்று எழுதினால் எல்லாருக்கும் புரிகிறது. எடுத்தாளும் சொற்கள் எளிதாகவும், புரியும்படியும், புரியாவிட்டால் விளக்கக் கூடியதாகவும் எழுதப்பட வேண்டும்.


ஜெயபாரதன் அவர்களின் கருத்துகளும் சிந்தனைக்குரியன. 
நடைமுறைப்படுத்த எளிதானவை.

science - அறிவியல் என மொழிபெயர்த்தால்,
epistemologyக்குச் சரியான மொழிபெயர்ப்பு
என்ன ?

முதுபெரும் அறிஞர் திரு மணவை முஸ்தஃபா அவர்களின் 
தூயதமிழ் விஞ்ஞானக் கலைச்சொல்லாக்கப்
பெருந்தொகுதி என்ன ஆயிற்று ? 

இன்று அவர்தம் திருமகனார் திரு செம்மல் அவர்கள்
நேரம் செலவழித்துப் பாடுபட்டு வருவது நிறைவளிக்கிறது.
விஞ்ஞானத்துக்குத் தனிக் குழுமம் ஒன்றையும் அமைத்துள்ளார்.  

தமிழ் இன்றைய விஞ்ஞானத் தளத்திற்குப் புதுப்பித்துக்கொள்ள
வேண்டிய தேவை காலத்தின் கட்டாயம். இல்லையெனில்
மீளா இலக்கியச் சிறைக்குள் அடைபட்டுப் போகும்.

 

ஆங்கில எழுத்துக்களுக்குச் சமமான தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று வருந்த வேண்டிய தில்லை. உதாரணம்: (B, D, G) போன்றவை. டாக்டர் ஹோமி ஜெ. பாபா [Dr. Homi J. Bhabha] என்னும் பெயரைத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதிக் காட்டலாம். டாக்டர் ஷிவாகோ [Dr. Zhivago] என்று தமிழில் எழுதி ஆங்கிலத்தில் சமப் பெயரையும் அடைப்பில் குறிப்பிடலாம். அதுபோல் சில தமிழ் எழுத்துகளுக்குச் சமமான ஆங்கில எழுத்துக்களும் இல்லை! உதாரணம்: (ழகரம், ளகரம், றகரம், ணகரம், ஞகரம்). ‘தமிழ் ‘ என்பதை ஆங்கிலத்தில் Tamil, அல்லது Thamil என்றுதானே எழுத முடியும்! TamiZ என்று யார் குறிப்பிட்டு எழுதுகிறார் ? 


கிரந்த லிபி மறுப்பு வீண் பிடிவாதம்; அதில் மேலும் பேச விருப்பமில்லை.


டாக்டர் ஜெயபாரதன் அவர்களின் நெடிய பதிவுக்கு நன்றி



அன்புடன்
தேவ்



 

தேமொழி

unread,
Aug 5, 2013, 4:25:17 PM8/5/13
to vall...@googlegroups.com
///முதுபெரும் அறிஞர் திரு மணவை முஸ்தஃபா அவர்களின் 
தூயதமிழ் விஞ்ஞானக் கலைச்சொல்லாக்கப்
பெருந்தொகுதி என்ன ஆயிற்று ? ///


மணவை
அவர்களின் நூல்கள் அனைத்தும் அனைவரும் எளிதில் அடையும் வண்ணம் இணையத்தில் பதிவிடப் பட்டு விட்டது.
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-67.htm <<< பார்க்க

மணவை அவர்கள் நூல் மட்டும் அல்ல பேரா.அ.கி.மூர்த்தி அவர்களது அகராதிகளும் பல கலைச்சொற்களைத் தருகின்றன.
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-66.htm <<< பார்க்க

நான் சில நூல்களை என் கணனியிலேயே சேமித்தும்  வைத்துள்ளேன்.  சில கட்டுரைகள் எழுதிய பொழுது அவற்றில் தேடி பயன் படுத்தியும் உள்ளேன்.

உண்மையில் தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் வெளியிட்டுள்ள பள்ளி நூல்கள் அனைத்தும் இணையத்தில் உள்ளது.
நான் எனக்குத் தேவையான பொழுது உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் அறிவியல் நூல்களில் உள்ள பாடங்களைப் படித்து அதில் என்ன பதம் கொடுக்கப் பட்டுள்ளது என்று தேடிப் பயன் படுத்தியதும் உண்டு.
http://www.textbooksonline.tn.nic.in/ <<< பார்க்க

மேலும்  மறைமலை அடிகளின் மகள்திருவரங்க நீலாம்பிகை அம்மையார் (1903-1945) வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்ற நூலையும் எழுதி உள்ளார். இதுவும் இணையத்தில் உள்ளது. சமஸ்கிரத வார்த்தைகளைத் தவிர்க்க அதுவும் உதவும் .
http://www.comsys.com.sg/media/pdf/Sanskrit_Tamil_Dictionary.pdf <<< பார்க்க

எல்லாவற்றிற்கும் மேலாக கூகிளின் உதவியும் உண்டு.
http://translate.google.com/ <<< இங்கு சென்று ஆங்கிலத்தில் தட்டச்சினால் சிறந்த தமிழ் பதம் பெற உதவி கிடைக்கும், இத்தளத்தை நான் தினமும் பயன்படுத்துகிறேன்.

தமிழில் எழுதுபவர்கள் கட்டுரைகள் எழுதும் பொழுது தமிழ்ப் பதங்களையே பெரிதும் பயன்படுத்துவர்.
கதை என வரும் பொழுது இயல்பாக சித்தரிக்க வட்டார மொழியிலோ, பேச்சுத் தமிழிலோ எழுதி ஒரு இயல்பு நிலையை ஏற்படுத்தி வாசகர்களை ஒன்றச் செய்ய முயற்சிப்பார்கள். அது அக்கால நிலையைப் பிரதிபலிக்க.

இதனால் அவர்கள் தமிழில் எழுத விரும்பவில்லை என்று தவறாகக் கணிக்கப் படுகிறது.

உதவிகள் இருப்பது கைக்கெட்டும் தொலைவில்.  கிடைக்காவிட்டால் நாமே உருவாக்கி  அந்தப் பொருள் புரியும்படி எழுதுவதில் தமிழறிஞர்களோ, தமிழ் வாசகர்களோ குறுக்கே  நிற்பதில்லை.


ஜெயபாரதன் ஐயாவின் அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கிறேன். அவர் தமிழ் சொல்லாக்கங்கள் எனக்குப் புரிகிறது. அவரது முயற்சி பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

தமிழ்ப் பதங்களைத் தேடி தக்கவாறு பயன்படுத்தத் தேவையானது ஒன்றே ஒன்றுதான் அது >>> ஆர்வம்

..... தேமொழி



சி. ஜெயபாரதன்

unread,
Aug 5, 2013, 7:40:47 PM8/5/13
to vall...@googlegroups.com
நண்பர் தேவ் ராஜ்,

நான் டாக்டர் பட்டம் பெற்றவன் அல்லன்.  கட்டுரையைப் படித்து பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி.

அன்புடன்
சி. ஜெயபாரதன்

+++++++++++++++  

2013/8/5 DEV RAJ <rde...@gmail.com>
தேவ்



 

--

வேந்தன் அரசு

unread,
Aug 5, 2013, 8:28:48 PM8/5/13
to vall...@googlegroups.com, mintamil


5 ஆகஸ்ட், 2013 8:36 AM அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

தமிழ்ப் பாத்திரத்தைத் தினம் கழுவிச் சுத்தம் செய்வதிலேயே, நமது தனித்தமிழ்ப் பண்டிதர் காலம் பூராவும் நழுவி விடுகிறது.  அதில் என்ன நிரப்பப் படுகிறது என்பதுதான் என் கேள்வி.  

மேலும் படைத்தவை எல்லாம் சுத்தத் தமிழா, கலப்புத் தமிழா என்பதில் ஆய்வு செய்து தனித்தமிழர் முனைவர் பட்டம் வாங்குவார்.  

நமக்கு வேண்டியது நடைத்தமிழ் , நல்ல தமிழ். தனித்தமிழ் இல்லை.  

சைக்கிள் என்பதை வேந்தனார் இரு சக்கிர வண்டி என்று எப்போதாவது பயன்படுத்தி உள்ளாரா ?

இல்லை ஜெயபாரதன் ஐயா
நான் மிதிவண்டி என்றுதான் எழுதுவேன்.

நீங்க ஆற்றும், அறிவியல் தமிழ் பணிக்கு நீங்க என்னை உதைத்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன்
 

வேந்தன் அரசு

unread,
Aug 5, 2013, 8:33:34 PM8/5/13
to vall...@googlegroups.com


5 ஆகஸ்ட், 2013 4:25 PM அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:



ஜெயபாரதன் ஐயாவின் அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கிறேன். அவர் தமிழ் சொல்லாக்கங்கள் எனக்குப் புரிகிறது. அவரது முயற்சி பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

தேமொழி

ஜெயபாரதன் ஐயா தமிழாக்கம் செய்தனவற்றை நாம் பின்னாளில் தூய தமிழில் ஆக்கிடலாம். 
 
360.gif

DEV RAJ

unread,
Aug 5, 2013, 9:46:55 PM8/5/13
to vall...@googlegroups.com
பேராசிரியர் இராம.சுந்தரம் :

............நான் மருத்துவர் நரேந்திரனிடம் மருத்துவப் பாடத்திட்டத்தை வாங்கினேன். திருச்சி மண்டலப் பொறியியல் 
கல்லூரியில் பணியாற்றிய சம்பத்திடம் பொறியியல் பாடத்திட்டம் வாங்கினேன். அதன் பின்னர் 
அண்ணா பல்கலைக்கழகம் சென்றேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் தமிழ்நாடு முழுக்கச் சுற்றினேன். 
பாண்டிச்சேரியும் சென்றேன். நான் தேர்ந் தெடுத்தவர்களிடம் பாடத்திட்டத்தைக் கொடுத்தேன். 
இதேநேரத்தில் துணைவேந்தர் அவர்கள் என்னிடம் கருத்தரங்கம் ஒன்றை கூட்டக் கூறினார். 
அவர் கேட்டுக் கொண்டதால் முதல் கருத்தரங்கம் மொழியியலுக்கும் அடுத்த கருத்தரங்கம் 
மருத்துவத்திற்கும் என்பதாக ஒழுங்கு செய்தோம். இவை முடிந்த பின் முதல் இரண்டு 
ஆண்டுகளுக்கான பாடத்திட்டத்தைக் கொடுத்தோம். இவை நடந்தது 1982ல். 
மருத்துவம் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தை தமிழில் எழுத முன்வந்தவர்களில் 
சிலர் ஏற்கனவே ஆங்கிலத்தில் பாடநூல்கள் எழுதியவர்கள்தான். அவர்கள் தமிழ், 
ஆங்கிலம் எனும் இருமொழிகளில் பாடம் நடத்துபவர்கள். எனவே அவர்கள் தமிழில் 
எழுதுவதற்கு ஒத்துக் கொண்டார்கள்.

அவர்கள் கலைச் சொல்லாக்கத்தில்தான் சிரமப்பட்டனர். 
'தமிழில் எழுதிவிடுவோம். சில கலைச் சொல்லிற்கு நாங்கள் என்ன செய்வோம்?'
என என்னிடம் வினவினர். 'அதைப் பற்றியான கவலை உங்களுக்கு வேண்டாம். 
இதுவரை தமிழில் வெளி வந்துள்ள பொறியியல் மற்றும் மருத்துவக் கலைச் 
சொல்லை உங்களுக்கு தொகுத்துத் தருகிறோம். நீங்கள் அவற்றிலிருந்து 
தகுதி உள்ளதை எடுத்துக்கொள்ளுங்கள் தகுதி இல்லாததை நீக்கிவிடுங்கள். 
ஒன்றும் தேறாவிட்டால் ஆங்கிலச் சொற்களையே போட்டு விடுங்கள். 
பிறகு பார்த்துக்கொள்ளலாம் ‘ எனக் கூறினேன். இப்படித்தான் நீங்கள் 
பொறியியலுக்கு பதின்மூன்றாயிரம் சொற்கள், 
மருத்துவத்திற்கு பன்னிரண்டாயிரம் சொற்கள் எடுத்தோம். இவற்றில் 
சில சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்தன. 

Anatomy எனும் சொல்லிற்கு ஒருவர் ‘மனுச அங்காதி பாதம்’ என்றார். 
இன்னொருவர் ‘சரீர இயல்’ எனப் போட்டிருந்தார். இன்னொருவர் ’உடலியல்’ 
என போட்டிருந்தார். இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் புத்தகம் 
எழுதியவர்கள் வேறு வேறு பதங்களை பயன்படுத்தினர்.

‘மனுஷ அங்காதி பாதம்’ எனும் கலைச்சொல்லை 1850களில் அமெரிக்காவைச் 
சார்ந்த சாமுவேல் ஃபிஷ்கிறின் என்பவர் பயன்படுத்தினார். அவர் எழுதிய புத்தகத்தில் 
Human Anatomy என்பதற்கு ‘மனுஷ அங்காதி பாதம்’ எனப் பெயரிட்டார். 
மனிதனுடைய எல்லா அங்கத்தையும் குறிப்பதால் இவ்வாறு பெயரிட்டார். 
அதன் பின்னர் ஜெகநாத நாயுடு என்பவர் மைசூர் மன்னரிடம் இருந்தார். அவர் 
‘சரீர இயல்: வினா விடை’ என்பதான நூல் ஒன்றை வெளியிட்டார். 
பிறகு உடலியல் எனும் கலைச்சொல் புழக்கத்திற்கு வந்தது. அதன் பின்னர்தான் 
உடல் அமைப்பியல் ’உடற்கூறு’ என அழைக்கப்பட்டது. இதைக் கண்டவுடன் 
புதுப்புது கலைச்சொல்லை உருவாக்கிக் கொண்டு வந்தனர். தமிழில் எழுதவேண்டும் 
என நினைத்தால் முடியும் என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. 
அதன் பின்னர் பல சொற்கள் வெளிவந்தன.




ஒரு மொழியாக்கம் செந்தரப்படுவதற்குப் பல நிலைகளைக்
கடக்க வேண்டியுள்ளது என்பதை இப்பதிவு தெரிவிக்கிறது.
நம் மொழிப் பரிசோதனைகளுக்கும், அறிஞர் தரும் ஒப்புதலுக்கும்
விஞ்ஞான வளர்ச்சி காத்திருக்குமா ? இது அடுத்த கேள்வி



தேவ்

தேமொழி

unread,
Aug 5, 2013, 11:28:45 PM8/5/13
to vall...@googlegroups.com

On Monday, August 5, 2013 6:46:55 PM UTC-7, DEV RAJ wrote:

நம் மொழிப் பரிசோதனைகளுக்கும், அறிஞர் தரும் ஒப்புதலுக்கும்
விஞ்ஞான வளர்ச்சி காத்திருக்குமா ? இது அடுத்த கேள்வி
தேவ்



நம்மைச் சுற்றிப் பார்த்து, மற்ற மொழிகளுடன் நம்மை ஒப்பிட்டு,  மொழியாக்கத்திற்கு அறிவியல் காத்திருக்குமா எனப் புரிந்து கொள்ளலாம்.

ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் நமக்கில்லை என்பதுதான் வருந்த வேண்டிய ஒன்று.

அவர்கள் வேகத்திற்கு நம்மால் ஒரு காலத்திலும் ஈடு கொடுக்க முடியாது.

ஆதாரம் வேண்டுமா?
http://www.ted.com/OpenTranslationProject <<< பார்க்க



இந்தப் படத்தைப் பாருங்கள்.



எளிதில் ஒப்பிட தரவரிசைப் படுத்தியுள்ளேன்





ஆங்கிலம்  என்பதை அடிப்படையாக எடுத்துக் கொள்ளுங்கள் ...அவர்கள் வைத்திருக்கும் ஏறத்தாழ 2250 போன்ற காணொளிகளுக்கு தன்னார்வத் தொண்டர்கள் பேச்சை வரிக்கு வரி தட்டச்சி தலைப்பு (caption) கொடுத்திருக்கிறார்கள்.  இது காது கேளாதவர்களுக்கு பயனளிக்க உதவும் முயற்சி.  இதுவே நமக்கு அடிப்படை அளவு.

100 மொழிகளுக்கு மேல் மிகவும் பயனளிக்கும் இக்காணொளிகளை  மொழி பெயர்க்க தன்னார்வத் தொண்டர்கள் முயற்சி செய்கிறார்கள்.
ஒவ்வொரு மொழியிலும் எவ்வளவு பேர் பங்கேற்கிறார்கள் தமிழுக்கு எத்தனை பேர் இருகிறார்கள் என ஒப்பிடுங்கள் ....
ஒவ்வொரு மொழியிலும் எத்தனை காணொளிகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன என்று பாருங்கள்....அத்துடன் தமிழின் நிலையை ஒப்பிடுங்கள்.

எந்தெந்த மொழிகளில் ஆயிரத்திற்கு மேல் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது?
அவற்றில் கீழை நாட்டு மொழிகள், ஆங்கிலத்திற்கு சிறிதும் ஒட்டுறவு இல்லாத மொழிகள் எத்தனை?


இதிலிருந்து தமிழர்களின் ஆர்வம் புரியும்.  தங்கள் மொழியின் செம்மையின்  மேல் அவர்கள் வைத்திருக்கும் மதிப்பும் புரியும்.

இது போன்ற காணொளிகள் நம் நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் உதவும்.
ஆனால் நமக்கோ இதில் பங்கேற்க ஆர்வமில்லை.

எனக்கும் இதெல்லாம் செய்து என்ன பலன், இன்னும் சிறிது  நாட்களில் பள்ளிகளிலே  பயிற்றுவிக்கும் மொழியாக ஆங்கிலம்  இருக்கப் போகிறது, தமிழில் மொழி பெயர்த்து என்ன ஆகப் போகிறது என்ற எண்ணமும் தோன்றிவிட்டது.

மற்ற மொழி பேசுபவர்கள் அடிமுட்டாள்கள்.... என்ன ஒரு வேலையற்ற வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
என்ன இருந்தாலும் தமிழர்களைப்போல தொலைநோக்குப் பார்வை அவர்களிடம் இருக்கிறதா என்ன?

..... தேமொழி


 

DEV RAJ

unread,
Aug 5, 2013, 11:30:01 PM8/5/13
to vall...@googlegroups.com
On Monday, 5 August 2013 05:20:55 UTC-7, வேந்தன் அரசு wrote:
தெலுகில் இருந்துதான் காரு தமிழுக்கு வந்தது. அதில் மறுப்பு இல்லை.
ஆயின் தெலுகுக்கு தமிழில் இருந்து அவர்கள் என்பது மருவி இருக்கும். அல்லது காரர் மருவி இருக்கும்.
பழம் தமிழில் ஆர் இறுதி உண்டு. நக்கீரனார், அவ்வையார்


வேந்தர் ஐயா, 

தமிழில் ‘அர்’ ’ஆர்’ - நக்கீரர், நக்கீரனார்; வேந்தர், வேந்தனார்

”நமர்களோ! சொல்லக் கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்
 குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே “


தெலுகில் ஸ்வாமி வாரு, ஸ்வாமி காரு.
கன்னடத்தில் ’அவரு’ -
பங்காரப்பா அவரு, CM அவரு.

வடுகர் ஆட்சியில் வைணவம்
முதன்மை; அவர்கள் வழக்கப்படி
‘காரு’ சேர்ந்துகொண்டது.

காரர் - செய்கையின் தொடர்பு கொண்டது;
தனி நபர் பெயரோடு இணையாது.

காரன், காரர் - தமிழில் பிற்கால
வழக்கு; உங்களுக்குத் தெரியாத
இலக்கியமில்லை; தொல் இலக்கியத்தில்
இசைகாரர், உரைகாரர் இருந்தால்
தெரிந்து கொள்வேன்



தேவ் 

DEV RAJ

unread,
Aug 6, 2013, 12:06:30 AM8/6/13
to vall...@googlegroups.com
On Monday, 5 August 2013 20:28:45 UTC-7, தேமொழி wrote:
ஆங்கிலம்  என்பதை அடிப்படையாக எடுத்துக் கொள்ளுங்கள் ...அவர்கள் வைத்திருக்கும் ஏறத்தாழ 2250 போன்ற காணொளிகளுக்கு தன்னார்வத் தொண்டர்கள் பேச்சை வரிக்கு வரி தட்டச்சி தலைப்பு (caption) கொடுத்திருக்கிறார்கள்.  இது காது கேளாதவர்களுக்கு பயனளிக்க உதவும் முயற்சி.  இதுவே நமக்கு அடிப்படை அளவு.



தேமொழி அவர்களின் ஆர்வமும், பங்களிப்பும்
பாராட்டுக்குரியன; அவர் அளித்துள்ள குறிப்புகள் 
மிகவும் பயனுள்ளவை.

பல அரிய செய்திகள் தமிழை / தமிழரை அடைய வேண்டும்
என்பதில் மாற்றுக் கருத்தில்லை.இங்கு திறந்த மனத்துடன்
காழ்ப்பின்றி நடைமுறைச் சிக்கல்களை ஆராய்வோம்.

தமிழ் உயர்கல்வித் துறையில் பயிற்றுமொழி
ஆக்கப்படுவது பற்றியும்,  மருத்துவ மொழியாக்கம்
பற்றியும் மருத்துவர் புருனோ அவர்களின் தளத்தில்
காணப்பட்ட  கருத்துகள் இங்கே -

Dr.Rudhran :

in fact I was a member of the committee 
that was formed in 1992 to bring about medical education 
in Tamil..seeing all the idiotic discussions held in the 
meetings i quit that in 1993.. medical education or for that 
matter any education needs text books..and since we do not 
have them in Tamil it will not be possible. if you get used 
to talking thamani and sirai [தமனி, சிறை], you will not be able to reach out 
and interact internationally.


                  ************************


SURESH (பழனியிலிருந்து) :

தமிழில் மருத்துவ கல்வி என்பது சாத்தியமே.., ஆனால் அதற்கு முன் 
நாம் தாண்டிச் செல்லவேண்டிய முக்கிய மைல்கல்கள் நிறைய இருக்கின்றன. 
மொழிபெயர்ப்பதில் செலுத்தும் கவனத்தை வல்லுனர்களை உருவாக்குவதில் 
செலுத்தவேண்டும். அவ்ர்களின் ஆரய்ச்சி தாகத்திற்கு தேவையான 
உட்கட்டமைப்புகளை இங்கேயே உருவாக்கவேண்டும். அவர்களின் திறமைகளை 
இங்கேயே பயன்படுத்திக் கொள்ளும் வழிவகைகளை உருவாக்கவேண்டும்.

ஒருசிலர் மட்டும் கற்பது என்ற நிலைமாறி பலரும் மேற்படிப்பு கற்கும் 
நிலை உருவாக்கவேண்டும். உலக அளவில் அப்படிக் கற்றுக் கொடுப்பதில் 
நாம் முன்னிலை பெற வேண்டும். உலகம் மதிக்கும் தரத்தில் அந்தக் கல்வி 
அமைய வேண்டும். அந்தக் கட்டத்தில் நாம் தமிழ் வழியில் பாடங்களைப் 
புகுத்தும் போது அதற்கு நல்ல மரியாதை கிடைக்கும்.

அதை விடுத்து இப்போதே தமிழ்ப்படுத்துவேன் என்பது தமிழ் வளர்க்கிறேன் 
என்று சொல்லிக் கொண்டிருப்பது அமெரிக்க அதிபருக்கு மின்னஞ்சல் அனுப்பவது போல 
அமையும். தமிழில் கற்பது என்பது இங்கு வேலை செய்வதுடன் நமது தரத்தினை 
உலகிற்கு உணர்த்த வேண்டிய கட்டாயமும் இருக்கிற சூழலையும் 
மனதில் கொள்ள வேண்டும்.

சிக்குன்குன்யா நோயால் எவ்வளவு கஷ்டப் பட்டோம். ஆனால் 
உலகத்தில் அது போன்ற எபிடெமிக் காலகட்டத்தில் இருந்து
மிக வேகமாக மீண்டது நாம்தான். தவிர 2007,08 கால கட்டங்களில் 
அவை வராமல் தடுப்பதிலும் வெற்றிக் கண்டோம். இதற்கு
நமக்கு தெளிவான மருத்துவ மொழி அறிவு அவசியம்.

எனவே தமிழ் மருத்துவக் கல்வி வர நாம் செல்லவேண்டிய 
பயணங்கள் நெடுந்தூரம் இருக்கிறது.

             ***********************************

மொழிபெயர்ப்பதில் செலுத்தும் கவனத்தை வல்லுனர்களை உருவாக்குவதில் 
செலுத்தவேண்டும்” எனும் இந்த அன்பரின் கருத்து ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகத்
தோன்றுகிறது




தேவ் 


தேமொழி

unread,
Aug 6, 2013, 12:24:33 AM8/6/13
to vall...@googlegroups.com


On Monday, August 5, 2013 9:06:30 PM UTC-7, DEV RAJ wrote:

மொழிபெயர்ப்பதில் செலுத்தும் கவனத்தை வல்லுனர்களை உருவாக்குவதில் 
செலுத்தவேண்டும்” எனும் இந்த அன்பரின் கருத்து ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகத்
தோன்றுகிறது
தேவ் 


ஆமாம், இப்பொழுது தமிழர்களின் தொலை நோக்கு பற்றி நான் குறிப்பிட்டதன் பொருள் மிகத் தெளிவாகப் புரிந்திருக்குமே :D

பாவம் இந்த உண்மையை அறிந்திராத பிற மொழியினருக்கும் இதனை நாம் முன்னின்று  அறிவுறுத்த வேண்டும். 

..... தேமொழி 

DEV RAJ

unread,
Aug 6, 2013, 3:47:43 AM8/6/13
to vall...@googlegroups.com
On Monday, 5 August 2013 20:28:45 UTC-7, தேமொழி wrote:
இது போன்ற காணொளிகள் நம் நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் உதவும். 
ஆனால் நமக்கோ இதில் பங்கேற்க ஆர்வமில்லை.
 

உண்மை


எனக்கும் இதெல்லாம் செய்து என்ன பலன், இன்னும் சிறிது  நாட்களில் பள்ளிகளிலே  பயிற்றுவிக்கும் மொழியாக ஆங்கிலம்  இருக்கப் போகிறது, தமிழில் மொழி பெயர்த்து என்ன ஆகப் போகிறது என்ற எண்ணமும் தோன்றிவிட்டது.



இன்றைய பேச்சுத் தமிழ் படுகிறபாடு இனிமேல் தாய்மொழியே
தமிழாக நீடிக்குமா எனும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.

பிரிதோர் இழையில் கண்டது.
துரைக்கு Tamil பேசினா tongue roll ஆவுதாம் -

வெளிமாநிலப் பெண்மணி அறிவுறுத்த
வேண்டிய அளவு பாசாங்கு :((



தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 6, 2013, 8:07:34 AM8/6/13
to vall...@googlegroups.com


5 ஆகஸ்ட், 2013 11:30 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
தேவ்  ஆர்.

நான் சங்க இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டவன். எல்லாமும் அல்ல.
என் உடன் பணியாற்றும் ஜபபானியர்களை நாங்கள் சான் என்று இணைத்து அழைப்போம். ”யுராசாகி சான்”
. வடநாடுகளில் ஜி. 

இன்று தமிழர்கள் சார் போடுகிரார்கள். ”ரஜின்காந்த சார்”

தேவ் ஆர் என்பது தமிழின் பழம் மரபு. ஆனால் இது படர்க்கையில்தான் புழங்குகிறது. முன்னிலையில் எப்படி அழைத்தார்கள் என தெரியவில்லை. காரு என்பது தெலுகு என்றாலும் அது தமிழின் மரபு. அன்றியும் புணர்ச்சி விதிகளை புறந்தள்ளி விட்டு எல்லா பெயர்களுடனும் சேர்க்கலாம் என அதை தேர்ந்தேன்.

காரன் என்பது பிந்திய வழக்கு என்றே தோன்றுகிறது. அறிவியலார் என்பதே சரி. அறிவியல்காரர் என்பதனினும்.  தெலுகில் பால்காரனை பாலாண்டு என்பார்கள். பாலான், சமையலார். நூலோர் என முந்திய தமிழில் இருந்திருக்கும்.

வேந்தன் அரசு

unread,
Aug 6, 2013, 8:15:10 AM8/6/13
to vall...@googlegroups.com
சில பிற மொழி சொற்களுக்கு தமிழ் வேர் காட்ட முடியுமானால் அதை தமிழ்சொல்லாகவே பாவிக்கலாம்

கார் என்பதை மகிழுந்து என்கிறார்கள். கார் என்பது தமிழ்மொழியின் விதியை மீறலை. தொடக்க காலத்தில் கார்கள் கருப்பு நிறம்தான். பின்னாளில் பல்வேறு நிறங்களில் வந்தன. எனவே கார் கருப்பு எனும் அடிப்படையில் நாம் உருவாக்கிய சொல்லாக கருதி சமாளிக்கலாம்.

 கார்  கண்டுபிடிச்ச அன்றைக்கே தேர் என வச்சிருக்கலாம். சாமி ஊர்ந்தால் என்ன? ஆசாமி ஊர்ந்தால் என்ன??

கருப்புதான் எனக்கு பிடிச்ச கேழ்.

தேமொழி

unread,
Aug 6, 2013, 10:48:05 AM8/6/13
to vall...@googlegroups.com


On Tuesday, August 6, 2013 5:15:10 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
கார்  கண்டுபிடிச்ச அன்றைக்கே தேர் என வச்சிருக்கலாம். சாமி ஊர்ந்தால் என்ன? ஆசாமி ஊர்ந்தால் என்ன??

கருப்புதான் எனக்கு பிடிச்ச கேழ்.
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்


கார் என்பதற்கு பதில் என்ன வார்த்தை தமிழர்களின் வழக்கத்தில் இருக்கிறது என்று கவனித்தால் ஆச்சர்யமாக இருக்கும் வேந்தே.
ஆங்கிலத்தில் போடு போடு என்று போடுபவர்கள்கூட "வண்டி" என்றுதான் கூறுகிறார்கள்....அதாவது தமிழ்த் திரைப்படங்களில். 
கும்பல் கும்பலாக ஓடி, பறந்து பறந்து அடிக்கும் நோஞ்சான் கதாநாயகனிடம் உதை வாங்கி மண்ணைக்  கவ்வுவதற்கு முன்னர்  "ஏய் வண்டியை எடு" என்ற வசனம் அடிக்கடி உச்சகட்ட கட்சிகளில் இடம் பெறுகிறது.

..... தேமொழி 

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 6, 2013, 1:05:33 PM8/6/13
to vallamai
எங்கள் பக்கங்களில் பெரியவர்கள் ‘காரடி’ என்று பேருந்து நிலையத்தைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். தேர் நிற்கும் இடம் ‘தேரடி’ என்றாற் போல. 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

DEV RAJ

unread,
Aug 6, 2013, 1:54:29 PM8/6/13
to vall...@googlegroups.com
மரு.ஜா மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ் :


மருத்துவத்துறையை பொருத்தவரை முதல் மூன்று ஆண்டுகளில் உபயோகிக்கும் 95 %
வார்த்தைகள் ஆங்கிலம் அல்ல. அவை கிரெக்கம் அல்லது லத்தீன் !! ஏன் கிட்டத்தட்ட 
அனைத்து மொழிகளில் இருந்தும் (சில ஆப்பிரிக்க மொழிகள் உட்பட) சொற்கள் உள்ளன

எனவே
தமிழ் வழிக்கல்வியில் வந்தவரும் அவைகளை புதிதாக படிக்க வேண்டும்
ஆங்கில வழிக்கல்வியில் வந்தவரும் அவைகளை புதிதாக படிக்க வேண்டும்

உதாரணமாக
தமிழ் – தோளின் முன்புறம் ஒரு கட்டி
ஆங்கிலம் – Swelling in front of Shoulder
Medical – Swelling at anterior aspect of deltoid

இதில் தமிழ் மாணவரும் புதிதாக இரண்டு வார்த்தை கற்க வேண்டும்
ஆங்கில வழி படித்தவரும் புதிதாக இரண்டு வார்த்தை கற்க வேண்டும்

இதை தமிழ் படுத்தினால் டெல்டாயிடுக்கு அண்டிரியராக 
ஒரு கட்டி என்று எழுத வேண்டியிருக்கும்.

தடை என்று பார்த்தால் டெல்டாயிடுக்கு அண்டிரியர் என்று எழுதுவதற்கும் Anterior to Deltoid 
என்று எழுதுவதற்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
உதாரணமாக Diabetes Mellitus வேறு. Diabetes Insipidus வேறு.

ஐரோப்பிய நாடுகளில் தாய் மொழியில்தான் கற்கிறார்கள். அவர்களுக்கு 
அவர்களின் தாய் மொழியின் Script அதே ரோமன் ஸ்கிரிப்ட் தான். அவர்களும் 
fever, stomach, leg, brain, heart போன்ற சொற்களைத்தான் 
தங்களின் தாய் மொழியில் பயன்படுத்துவார்கள். 98 விழுக்காடு சொற்கள் 
கலைச்சொற்கள் தான். அதே போல் பிரஞ்சு மொழியில் படித்த ஒருவர் 
மேற்கொண்டு ஆங்கில மொழி புத்தகத்தை (மருத்துவத்துறையை 
பொருத்தவரை) ஒரு சிறு அகராதியை வைத்துக்கொண்டே கற்கலாம்.

தமிழ் வழியில் படித்த மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் 
கண்டிப்பாக தடுமாறுவதில்லை.

இது குறித்து நான் பல ஆங்கில பதிவுகளில் பின்னூட்டங்களில் 
எழுதியிருந்தேன். ஆங்கிலம் தெரியாததால் தற்கொலை செய்து கொள்ளுதல் 
அல்லது படிப்பை விட்டு விலகி விடுதல் போன்றவை மருத்துவத்துறையில் 
அறவே நடப்பது இல்லை.

மருத்துவம் என்பது பல அடுக்கு படிக்க வேண்டிய ஒரு துறை.

உதாரணமாக இந்த வருடம் MS Anatomyக்கு தமிழகத்திலேயே 
ஒரு மாணவர் மட்டும் தான் சேர்ந்துள்ளார். இப்படி ஒரு மாநிலத்திலேயே 
ஐந்திற்கும் குறைவானவர்களே படிக்கும் பொழுது ஆங்கிலத்திலேயே 
படிப்பது தான் மேற்படிப்பு, குறிப்பு எடுப்பது, சர்வதேச சஞ்சிகைகளுக்கு 
எழுதுவது ஆகியவற்றுக்கு நல்லது. ஐந்து நபர்கள் மட்டும் படிப்பதற்காக 
20000 பக்கங்களை தமிழ் படுத்துவது என்பது நேரவிரையம்

ஆனால் நோயாளியுடன் பேசும்பொழுது கட்டாயம் 
தாய் மொழியில் தான் பேச வேண்டும்.

மருத்துவ கவுன்சில் ஆதரவு என்பது பெரிய விடயம் கிடையாது. 
முக்கிய விஷயம் என்னவென்றால் இவ்வளவு முயற்சி செய்தால் 
விளையும் பயன் என்ன என்பது.

நோயாளிக்கு தமிழில் விளக்க வேண்டும் என்பதற்காக 
மருத்துவ படிப்பை தமிழ் படுத்த வேண்டும் என்பது இல்லை.

பொதுமக்களிடம் கலைச்சொற்களை பயன்படுத்த தேவையில்லை. 
அப்படி பயன்படு்ததுவது தவறும் கூட. அவர்களிடம் சாதாரண மொழியில் 
தான் உரையாட வேண்டும்.

You have got thrombosis of Artery of Charcot என்றாலோ
உங்களின் சார்கோட் ஆர்டரி த்ராம்போஸ் ஆகி விட்டது
என்றாலோ கண்டிப்பாக புரியாது – இரண்டாவது தமிழில் இருந்தாலும் கூட. 
ஏன் ஆங்கிலத்தில் எம்.பில் படித்தவருக்கு கூட முதலில் சொன்னது புரியாது.

You have got Stroke and Hemiplegia என்றாலோ,
உங்களுக்கு பக்க வாதம் என்றாலோ கட்டாயம் புரியும்



DEV RAJ

unread,
Aug 6, 2013, 2:37:13 PM8/6/13
to vall...@googlegroups.com
On Tuesday, 6 August 2013 10:05:33 UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
எங்கள் பக்கங்களில் பெரியவர்கள் ‘காரடி’ என்று பேருந்து நிலையத்தைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.


சொற்கள் :

நாடன் என்கோ ! ஊரன் என்கோ !
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ !

காரில் செல்பவனைக் காரன் என்கோ !
 
’வண்டிய நிப்பாட்டு’ [park the car] 
வழக்கில் நிலைத்து விட்டது;
காரடி, ரயிலடி, ரோட்டடி இவையும்.

நிதர்சனம் - தற்போது கண்கூடு எனும்
பொருளில் இருப்பதுபோல் 19ம்
நூற்றாண்டின் உரைநடையில்
‘சான்று’ எனும் பொருளில்
கையாளப்பட்டது.

’வினியோகம்’ பெருவழக்கு;
பகிர்மானம் இன்னும் பரவலாகப்
பகிர்மானமாகவில்லை.
’யதார்த்தம்’ செல்வாக்கு இழக்கவில்லை



தேவ் 

DEV RAJ

unread,
Aug 6, 2013, 10:59:00 PM8/6/13
to vall...@googlegroups.com
பத்ரி சேஷாத்ரி :

தமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா ?

இன்று தி ஹிந்துவில் வந்த செய்தி: 
It’s Tamil medium, yet learning proves a challenge

இது முழுத் தவறான வாதம்.

ஆங்கிலத்தில் ஒரு இழவும் புரிந்துகொள்ளாமல்தான் மாணவர்கள் படிக்கிறார்கள். 
தமிழில் பேச்சு வழக்கில் “புவி ஈர்ப்பு சக்தி” என்பதை நாம் பயன்படுத்துவதில்லை என்கிறார் 
ஒரு மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர். எதைச் சொல்லி அழ? (“புவி ஈர்ப்பு விசை”) இதில் எது கஷ்டம்? 
புவியா, ஈர்ப்பா, சக்தி அல்லது விசையா? அனைத்தும் தினசரிப்புழக்கத்தில் உள்ளவைதானே? 
புவியியல் என்பதுதானே பள்ளிக்கூடப் பாடத்தின் பெயர். “பூமி புட்ச்சு இழுக்கும் ஃபோர்ஸ்” 
என்று அதற்குப் பெயர் வைக்கவேண்டும் என்றா இந்த ஆசிரியர் விரும்புகிறார்? சரி, Gravity 
என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படிப் புரிந்துகொள்வது? அப்படியே தெள்ளத் தெளிவாகவா 
இது புரிகிறது? இதன் வேர் வார்த்தை என்ன என்று ஆங்கிலத்தில் பேசும் எத்தனை பேருக்குத் 
தெரியும்? இதில் ஈர்ப்பு என்ற பொருள் எங்கிருந்து வருகிறது? பூமி என்பது (அல்லது பிற கோள் 
அல்லது பெரும் பொருள்) எங்கே உள்ளது? இழுவிசை அல்லது சக்தி எங்கே உள்ளது?

மற்றுமொரு ஆசிரியர் சொல்கிறார்: 

“Children find it hard not only while 
learning subjects such as science. Even in Tamil itself, 
they have to constantly learn very complex terms. Without 
any choice, they resort to memorising without any understanding.”

ஆசிரியர்கள் விளக்கிச் சொல்லும்போதுதானே கடினமான சொற்களின் பொருள் புரியும். 
பொருள் விளங்குமாறு சொல்லத் தெரியாது, மொழியையே குற்றம் சொல்கிறாரே இந்த ஆசிரியர்?

அடிப்படைப் பிரச்னை அதுவல்ல. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்கள் 
படிக்கச் சகிக்காமல் கேவலமாக உள்ளன. மகா மோசமான மொழியில் படிக்கும் 
எந்த மாணவனுக்கும் ஒரு இழவும் மண்டையில் ஏறுவதில்லை. அத்துடன், நம் 
ஆசிரியர்கள் கற்பிக்கும் திறன் பிரமாதமாக வேறு உள்ளதா? அதில் நமது பரீட்சை 
முறையையும் சேர்ப்போம். இவையனைத்தும் சேர்ந்த கலவையில் சிறு குழந்தைகள் 
திக்குமுக்காடிப் போகின்றன.

மாற்றம், புத்தகங்களிலிருந்தும் கற்பிக்கும் முறையிலிருந்தும் 
ஆரம்பிக்கப்படவேண்டும்.

அதற்கு இணைய வஸ்தாதுகள் தங்கள் பொன்னான நேரத்தை 
ஒதுக்கி, நல்ல, எளிமையான தமிழில், அறிவியலையும் கணிதத்தையும் 
எழுதவேண்டும். வரலாற்றையும் பிற பாடங்களையும்கூடத்தான்.

வெகுஜன இதழ் மொழியில் (ஆனால் தேவையில்லாத ஆங்கிலச் 
சொற்களை விலக்கி), மாணவர்கள் விரும்பிப் படிக்கும் மொழியில் 
புத்தகங்கள் கிடைத்தால் அதுவே நல்ல மாற்றமாக அமையும்.



krish.psg :


தாய்மொழிவழி கல்வியே சிறந்தது. நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்றேன். 
அப்பொழுது என்னுடைய புரிதல் மிக நன்றாக இருந்தது. நிறைய யோசிக்க முடிந்தது. பொறியியல்
கல்லுரிக்கு சென்றவுடன், எல்லாம் ஆங்கிலத்தில் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது. நாளடைவில் 
பழகிவிட்டது என்றாலும், இன்று வரை எனது 'புரிதல்' சற்று கடினமாகவே உள்ளது.
ஆனாலும் இரண்டாண்டுகள் கணிபொறி துறையில் எவ்வித மொழி பிரச்சனையும் இல்லாமல் வேலை 
செய்துவிட்டு, இப்பொழுது மேல் படிப்புக்காக அமெரிக்காவில் இருக்கிறேன். இப்பொழுதுகூட, 
சுஜாதாவின் தமிழ் அறிவியல் கட்டுரைகள் ஆங்கில புத்த்தகங்களை விட மிக தெளிவாக புரிய வைக்கிறது.
ஜப்பான், சீனா போன்ற நாடுகள் இன்று வரை தாய் மொழி வாயிலாகவே பயில்கிறார்கள். அவர்கள் எல்லாம் 
அனைத்து துறைகளிலும் சிறந்து தான் விளங்குகிறார்கள். நம் நாட்டில் மட்டும் தான் ஆங்கில மோகம் 
தலை விரித்து ஆடுகிறது.

வேந்தன் அரசு

unread,
Aug 7, 2013, 6:42:45 AM8/7/13
to vall...@googlegroups.com
ஆங்கிலத்தை தமிழ்ப்படுத்துகிறேன் என்று நம் முன்னோர்கள் இப்படி செய்தனர்

“புவி ஈர்ப்பு விசை” = ஆகர்ஷ்சண சக்தி
பயிற்சி = அப்பியாசம்
நில நடுக்கோடு = பூமத்ய ரேகை

தேமொழி

unread,
Aug 7, 2013, 1:09:36 PM8/7/13
to vall...@googlegroups.com
விவிலியத்தை மொழிபெயர்ப்பதிலும் இந்த முறை கடைபிடிக்கப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.  
வியாகூலம் தமிழா? தெலுகா?

..... தேமொழி 

DEV RAJ

unread,
Aug 7, 2013, 1:26:28 PM8/7/13
to vall...@googlegroups.com
On Wednesday, 7 August 2013 03:42:45 UTC-7, வேந்தன் அரசு wrote:
ஆங்கிலத்தை தமிழ்ப்படுத்துகிறேன் என்று நம் முன்னோர்கள் இப்படி செய்தனர்

“புவி ஈர்ப்பு விசை” = ஆகர்ஷ்சண சக்தி
பயிற்சி = அப்பியாசம்
நில நடுக்கோடு = பூமத்ய ரேகை


கோவப்படாதீங்க ஐயா,
அதை முதற்கட்ட முயற்சியாக
எடுத்துக்கோங்க.
’புவி’கூடத் தமிழ் இல்லை.
சங்க இலக்கியத்தில் இருந்தா
சொல்லுங்க.

”காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண்ணார் 
 பூ மகள் பொலிந்த மார்பன் *புவிமிசைத் திலம் ஒத்தான்...”
 
சீவகசிந்தாமணியில் உள்ளது.


முந்து தமிழில் முருகனைப்பாடிய
அருணகிரியார் சங்கதம் கலந்துதான்
பாடினார். அதை அவர்கள் வேற்று
மொழியாக எண்ணினால்தானே ?

ஜெயபாரதன் ஐயாவின் ஆங்கிலம்
கலந்த மொழியாக்கத்துக்கு
ஐயா பெர்மிஷன்  குடுத்துட்டீங்க
இல்லியா ? அத மாதிரி :))



தேவ்

DEV RAJ

unread,
Aug 7, 2013, 1:35:55 PM8/7/13
to vall...@googlegroups.com
On Wednesday, 7 August 2013 10:09:36 UTC-7, தேமொழி wrote:
வியாகூலம் தமிழா? தெலுகா?


வ்யாகுல - சங்கதம்

வ்யாகுல -
vyAkula

bewildered , confounded , perplexed , troubled 
confused , disordered 
quivering (as lightning) Uttarar.



தேவ்

தேமொழி

unread,
Aug 7, 2013, 1:50:37 PM8/7/13
to vall...@googlegroups.com
///முந்து தமிழில் முருகனைப்பாடிய
அருணகிரியார் சங்கதம் கலந்துதான்
பாடினார். அதை அவர்கள் வேற்று
மொழியாக எண்ணினால்தானே ?///


அப்படியானால் இப்பொழுது "கொலைவெறி கொலைவெறிடி" என்ற பாடலைத் தாக்கு என்று தாக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

சமஸ்கிரதம் கலந்தால் கவலையில்லை, ஆனால் ஆங்கிலம் கலக்கக்கூடாதா?  
பிற்காலத்தில் இந்தக் கொலைவெறிப்  பாடலும் சிறந்த இலக்கியமாகக் கருதப்படக்கூடும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

..... தேமொழி 

DEV RAJ

unread,
Aug 7, 2013, 5:48:32 PM8/7/13
to vall...@googlegroups.com
மொழிவல்ல நூலார் இலக்கணம் வகுத்துச்
செந்தரப்படுத்தினால் ஏற்றாக வேண்டியதுதான்.
ரயிலடி, காரடி -  கவனப்படுத்தப் பட்டது.
’அசல்’ ’நகல்’ வழக்கில் நிலைத்து விட்ட சொற்கள்.
 
Idealism இழையின் நோக்கமன்று;
நாம் எங்கு நிற்கிறோம், என்ன செய்ய
வேண்டும் -  அதை ஒட்டிப் பேசினால்
பயனுள்ளதாக இருக்கும்



தேவ்

தேமொழி

unread,
Aug 7, 2013, 6:21:25 PM8/7/13
to vall...@googlegroups.com
அப்படியானால் சரி, நான் ஏதோ தமிழ்ப் பற்று பற்றிய இழை என்று தவறாக நுழைந்துவிட்டேன் போலிருக்கிறது. 

இழையின் குறிக்கோளிற்கு  ஏற்ப தமிழ் மொழியில் எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் சிற்சில தவகல்களையும், மொழிப்பற்று இருந்தால் அவர்கள் எந்த வகையில் மொழியின் வளர்ச்சியில்  பங்கேற்கலாம், தற்காலத் தேவை என்ன என்று குறிப்பிட்டவரை மகிழ்ச்சி கொள்கிறேன்.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

..... தேமொழி 

வேந்தன் அரசு

unread,
Aug 7, 2013, 7:59:52 PM8/7/13
to vall...@googlegroups.com


7 ஆகஸ்ட், 2013 1:26 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Wednesday, 7 August 2013 03:42:45 UTC-7, வேந்தன் அரசு wrote:
ஆங்கிலத்தை தமிழ்ப்படுத்துகிறேன் என்று நம் முன்னோர்கள் இப்படி செய்தனர்

“புவி ஈர்ப்பு விசை” = ஆகர்ஷ்சண சக்தி
பயிற்சி = அப்பியாசம்
நில நடுக்கோடு = பூமத்ய ரேகை


கோவப்படாதீங்க ஐயா,
அதை முதற்கட்ட முயற்சியாக

அஃஅஃஆ
நான் முதல் கோணலா எடுத்துக்கிட்டேன். சாரி
 
எடுத்துக்கோங்க.
’புவி’கூடத் தமிழ் இல்லை.
சங்க இலக்கியத்தில் இருந்தா
சொல்லுங்க.

சங்கத்தில் இல்லை
புலம் பூமி புவி, பூழி எல்லாம் ஒரே போல இருக்கு


--

DEV RAJ

unread,
Aug 7, 2013, 8:38:33 PM8/7/13
to vall...@googlegroups.com
On Wednesday, 7 August 2013 16:59:52 UTC-7, வேந்தன் அரசு wrote:
நில நடுக்கோடு = பூமத்ய ரேகை
புலம் பூமி புவி, பூழி எல்லாம் ஒரே போல இருக்கு


சரி,
நாம புவி நடுக்கோடுன்னு  பாவிப்போம்



தேவ்

DEV RAJ

unread,
Aug 7, 2013, 11:32:04 PM8/7/13
to vall...@googlegroups.com
திரு த.கண்ணன் :

தமிழ் வாசகர் வட்டம் ஆங்கில உலகமளவிற்கு விரிவானதல்ல. 
ஆனால் இங்குள்ள இலக்கியப் பாகுபாடுகள் ஆங்கிலத்தை 
விடவும் அதிகம் என்றே தோன்றுகிறது. 


முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், வட்டார இலக்கியம், 
தனித்தமிழ் இலக்கியம், திராவிட இலக்கியம், இடதுசாரி இலக்கியம், 
பெண்கள் இலக்கியம்  என்று எண்ணற்ற பிரிவுகள். இத்தனை வகைகள் 
இருப்பதில் தவறில்லை, ஆனால் ஒவ்வொரு வகையினரும் அவரவர்க்கென 
ஒரு வட்டமைத்து, அந்த வட்டத்திற்குள்ளேயே சிறைபட்டு, 
வெளியிலிருப்பவர்களை மட்டமாய் நினைப்பது ஒட்டுமொத்த 
இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே தெரிகிறது.


பல சமயங்களில் வர்த்தக வெற்றியை, இலக்கியத் தோல்வியாகவே 
கருதுகிறார்கள். வர்த்தக வெற்றி மட்டுமே இலக்கியத் தரத்திற்கு 
அளவுகோலாக முடியாது. அதேசமயம், எதிர்மறையாய், 
பெரும் வர்த்தக வெற்றி பெறுகிறவர்களை அந்த ஒரே காரணத்திற்காகத் 
தாழ்த்தி எடைபோடவும் கூடாது.


தனிமனித விருப்புவெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, பலவகைப்பட்ட படைப்புகளையும் 
சுவைத்துப் பாராட்டுகிற பக்குவம் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் 
Naipaul, Rushdie போன்ற தனிமனிதர்கள் மீதும், அவர்கள் கருத்துகளுடனும் 
உடன்பாடில்லாதவர்கள்கூட அவர்களின் படைப்புகளுக்குத் தரவேண்டிய 
மதிப்பைத் தருவதைப் பார்க்கிறோம். 


எனக்கு Tolkien, Walter Scottம் பிடிக்கும், Franz Kafka, Albert Camusம் 
பிடிக்கும். அதேபோல கல்கியின் பொன்னியின் செல்வனும் பிடிக்கும், சுந்தர ராமசாமியின் 
ஜே.ஜே சில குறிப்புகளும் பிடிக்கும். ஜெயமோகனின் விஷ்ணுபுரமும் பிடிக்கும், வைரமுத்துவின் 
சிகரங்களை நோக்கியும், ஏன், பல நயமான திரைப்பாடல்களும் பிடிக்கும். இவற்றில் முரண்பாடுகள் 
இருப்பதாய்த் தோன்றவில்லை.


இலக்கியம் மக்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் மென்மேலும் வளரும். 
அதற்காக நவீன வியாபர உத்திகள் தேவைப்பட்டால், அவற்றையும் பயன்படுத்தித்தான் 
பார்ப்போமே.  நாம் வறுமையால் இறந்த பாரதிகளையும் புதுமைப் பித்தன்களையும் 
பார்த்தது போதும்.  இலக்கியத்தால் செழிப்படைந்து, இன்னும் உற்சாகமாய் 
இலக்கியத்தைச் செழிப்படையச் செய்கிற நிலை உலகெங்கிலும் போல் 
இங்கும் உதயமாகட்டும்.



DEV RAJ

unread,
Aug 8, 2013, 12:21:49 AM8/8/13
to vall...@googlegroups.com
முனைவர் மு.இளங்கோவன் :


தமிழர்களின் ஆழமான அறிவாராய்ச்சிகள் உலகப் போக்குக்கு 
ஈடுகொடுக்கும்படி இல்லாததால் தமிழின் - தமிழர்களின் சிறப்பு 
இன்னும் உலக அரங்கில் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. 


தமிழார்வம் இல்லாத தலைமைகளும், தமிழின் சிறப்புணராத 
மக்கள் திரளும் இந்த மொழி பேசுபவர்களாக அமைந்தமை 
தமிழின் சிறப்பு அறிய முடியாமல் போனமைக்குக் காரணங்களாகும்.
குமரிக்கண்ட அகழ்வாய்விலும், பூம்புகார், அரிக்கமேடு கடலாய்விலும் 
நாம் முழுமையாக ஈடுபடாமல் மாநாடுகள் கூட்டுவதிலும், 
சிலைகள் எடுப்பதிலும், தோரண வாயில்கள் அமைப்பதிலும், 
கோட்டங்கள் கட்டுவதிலும், வாணவேடிக்கைகள் நடத்துவதிலும் 
நம் அறிவாராய்ச்சியை இழந்தோம். 


தமிழறிவற்றவர்களைத் தமக்கு அணுக்கமாக அந்த அந்தக் 
காலங்களில் ஆட்சியாளர்கள் அமர்த்திக்கொள்வதும் நம் 
ஆராய்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றது. மொழியியல் 
அறிஞர்களின் கூற்றுகள் புறக்கணிக்கப்பட்டு, வெற்று ஆரவாரப் 
பேர்வழிகள் அரசுக்கு அறிவுரைஞர்களாக அமைந்தமையும் 
நம் பின்னடைவுக்குக் காரணங்களாகச் சுட்டலாம்.


DEV RAJ

unread,
Aug 8, 2013, 1:15:49 AM8/8/13
to vall...@googlegroups.com
இழையில் பதிவாகி வரும் கருத்துகளில் ஒரு தொடர்ச்சி இல்லையெனவும்,
நோக்கத் தெளிவு இல்லையெனவும் சில அன்பர்கள் தனி மடலில் 
தெரிவிக்கிறனர்;  ஏனோ நேரடியாகப் பங்குகொள்வதில்
அவர்களுக்குத் தயக்கம். ஒரு சிலர் ஆழமாக கவனித்துப் 
படித்து வருவதாகவும் தெரிகிறது. அனைவருக்கும்
நன்றி. 

பல மொழிகள் கலந்துவிட்டால் ஒரு மொழியின்
தனித்தன்மை என்ன ஆவது ? 
நியாயமான வினா.

தொடக்கக் கல்வியிலிருந்து உயர்மட்ட ஆராய்ச்சிவரை,
பேச்சுத் தமிழ் தொடக்கமாக இலக்கியத் திறனாய்வுவரை,
மொழி பெயர்ப்பு, மருத்துவம், விஞ்ஞானம், தொழில் நுட்பம்,
பொழுதுபோக்கு என்று பல தளங்களில் மொழிக்கான
தேவை உள்ளது.

தூய தனித்தமிழ் இத்தனைக்கும் ஈடு கொடுக்க
முடியுமா ? 

பல துறைகளிலும் கோலோச்சவல்ல 
சொல்வளம் அதில் தடையின்றி உள்ளதா ?

புரிதல் குறைபாடற்ற தனித்தமிழ்ச் சொற்பயன்பாடு 
நடைமுறையில் சாத்தியப்படுமா ?

இலக்கியம் பற்றிய நம் புரிதல் என்ன ?
 
இவற்றைப் பல அறிஞர் / ஆர்வலர்களின்
வாய்மொழியாகத் தொகுத்து வழங்கும் சிறு
முயற்சியே இந்த இழை.

தூய ஆடகப்பொன் மிக விலையுயர்ந்தது
எனினும், அதை அணிகள் செய்யப்
பயன்படுத்துவதில்லை என்பதையும் நாம்
நினைவில் கொள்ள வேண்டும்



தேவ்



Nagarajan Vadivel

unread,
Aug 8, 2013, 1:52:52 AM8/8/13
to vallamai
​மிழர்களுக்கு ஏனோ இன்றுவரை ஆங்கிலத் தளையிலிருந்து முற்றும் விடுபட முடியவில்லை

​ஆங்கிலம் எவ்வாறு ஒரு மொழி இன்னொரு மொழிமீது ஆதிக்கம் செலுத்தி அந்த மொழியின் பயன்பாட்டை முற்றிலும் மாற்றி ஒரு ஆங்கில்த்தன்மையை வலிந்து ஏற்றுக்கொள்ளுமாறு செய்ததற்கு ஒரு எடுத்துக்காட்டு

ஆங்கிலத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆங்கில எதிர்ப்புடன் முனைந்து ஒரு மொழி உலக மொழியாக வளர்ந்ததென்றால் அது பிரெஞ்சு மொழி

அதனுடைய காலனி நாடுகளில் தாய்மொழியைப் புறம் தள்ளி பிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கவில்லை

தனக்கென ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி அது உலக மொழியானதுக்கு அடிப்படை ஆங்கிலப் புறக்கனிப்பும் தன் மொழியை வளர்க்க வேண்டும் என்ற தாய்மொழிப் பற்றும்தான்

இது என் காத்துட்டுக் கருத்து

வவ​




2013/8/8 DEV RAJ <rde...@gmail.com>



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

DEV RAJ

unread,
Aug 8, 2013, 2:15:02 AM8/8/13
to vall...@googlegroups.com
On Wednesday, 7 August 2013 22:52:52 UTC-7, பூனைக் கவிராயர் wrote:
​மிழர்களுக்கு ஏனோ இன்றுவரை ஆங்கிலத் தளையிலிருந்து முற்றும் விடுபட முடியவில்லை
​ஆங்கிலம் எவ்வாறு ஒரு மொழி இன்னொரு மொழிமீது ஆதிக்கம் செலுத்தி அந்த மொழியின் பயன்பாட்டை முற்றிலும் மாற்றி ஒரு ஆங்கில்த்தன்மையை வலிந்து ஏற்றுக்கொள்ளுமாறு செய்ததற்கு ஒரு எடுத்துக்காட்டு
ஆங்கிலத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆங்கில எதிர்ப்புடன் முனைந்து ஒரு மொழி உலக மொழியாக வளர்ந்ததென்றால் அது பிரெஞ்சு மொழி
அதனுடைய காலனி நாடுகளில் தாய்மொழியைப் புறம் தள்ளி பிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கவில்லை
தனக்கென ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி அது உலக மொழியானதுக்கு அடிப்படை ஆங்கிலப் புறக்கனிப்பும் தன் மொழியை வளர்க்க வேண்டும் என்ற தாய்மொழிப் பற்றும்தான்



மிக்க நன்றி ஐயா.

ஒவ்வொரு துறையிலும் செயல் திட்டமும், ஒருங்கிணைந்த முனைப்பான
முயற்சியும் தேவை என்பதை உங்கள் கருத்தாகப் பதிவு
செய்யலாம் என நினைக்கிறேன்


தேவ்

DEV RAJ

unread,
Aug 8, 2013, 4:15:29 AM8/8/13
to vall...@googlegroups.com
பேராசிரியர் இ.அண்ணாமலை


ஐரோப்பாவில் கிறிஸ்துவ மதச் சீர்திருத்தம் (Reformation) நடந்த காலம், பதினாறாம் நூற்றாண்டு. 
அந்தக் காலத்தில் ஐரோப்பாவின் வீட்டு மொழிகள் மத போதனையிலும் கல்வியிலும் கலையிலும் லத்தீன் 
பெற்றிருந்த இடத்தைப் பிடித்தன. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து அங்கு வளர்ந்த அச்சுக் கலை, 
குறைந்த விலையில் நூல் வெளியிட்டு,  இந்த மொழி மாற்றத்திற்கு உறுதுணை செய்தது.


கத்தோலிக்க மதத்தின் இறுக்கமும் லத்தீன் மொழியின் பிடியும் தளர்ந்த இந்தக் காலக்கட்டம் 
கல்வியிலும் கலையிலும் நடந்துகொண்டிருந்த ஐரோப்பிய மறுமலர்ச்சியை (Renaissance) 
உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றது. பதினாறாம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் பள்ளிக் 
கல்வியில் லத்தீன் இடத்தில் ஆங்கிலம் வரத் தொடங்கியது. இது அறிவு தேடலைச் சமூகத்தில் 
பரவலாக்கியது; பல்கலைக்கழகங்களுக்கு வெளியே புதிய சாதனங்களின் கண்டுபிடிப்புகள் 
வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய 
தொழில் புரட்சிக்கு உந்து சக்தியாக இந்த மாற்றங்கள் அமைந்தன.


தமிழ்நாட்டில் காலனிய காலம் வரை கல்வி, தமிழ் வழியே நடந்து இலக்கியமும் கலையும் 
செழித்தன. கணிதம், வானவியல் போன்ற பரம்பரை அறிவியல் கல்வி, சமஸ்கிருதம் மூலம் 
சிலரையே சென்றடைந்திருக்கலாம். தமிழுக்கு இந்த அறிவு வந்து சேரவில்லை. காலனிய 
காலத்தில் ஐரோப்பாவில் வளர்ந்த புதிய அறிவியல், ஆங்கிலம் மூலமே தமிழ்நாட்டில் 
கற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த நிலையே இன்று வரை தொடர்கிறது. 
உயர்நிலைக் கல்வியில் இதை மாற்ற முடியாது என்ற எண்ணம் 
வேரூன்றியிருக்கிறது. ஐரோப்பாவில் போல் தமிழ்நாட்டில் அறிவுத் துறை 
வளர்ச்சி பெருக வேண்டுமென்றால் இந்த மனநிலை மாற வேண்டும்.


ஆங்கிலத்தின் அறிவியல் ஆதிக்கம் உலகளாவி நிற்கும் இன்றைய 
நிலையில் ஐரோப்பிய நாடுகளிலும் உயர் கல்வியில் ஆங்கிலத்தின் 
செல்வாக்கு கூடி வரும்போது தமிழ்நாட்டு நிலையை மாற்ற நினைப்பது 
பின்னோக்கிச் செல்வதாகும் என்னும் வாதம் புறக்கணிக்கக் கூடியது அல்ல. 
ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதைக் கவனிக்க வேண்டும். 
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து முதலிய ஐரோப்பிய நாட்டுப் 
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் மொழிகளுக்கு மேலாக ஆங்கிலத்திலும் 
அறிவியல் பயில்கிறார்கள்; ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறார்கள். தங்கள் 
மொழிகளில் அறிவுத் துறைகளில் படிக்க, எழுத முடியாது என்று 
நினைப்பதில்லை. ஆங்கிலமும் தெரியாமல் அறிவியல் பயில முடியாது, 
ஆய்வு செய்ய முடியாது என்றுதான் நினைப்பார்கள். தேவைப்படும் 
நேரங்களில், இடங்களில், அவர்களால் தங்கள் மொழிகளில் 
அறிவியல் செய்ய முடியும்.


தமிழ்நாட்டிலும் இது சாத்தியம். பயிற்று மொழியாக இல்லாமல் 
ஆங்கிலத்தைக் கற்றுத் தேர்ச்சி பெற முடியும். தமிழை விடாமல், 
ஆங்கிலத்திலும் அறிவியல் செய்யலாம். தமிழ் மொழியிலும் இது சாத்தியம். 
இதற்குத் தமிழ் தன் சொல்லில் காக்கும் தூய்மையை விட்டுக் கொடுக்க 
வேண்டும். தமிழ்ப் பண்டிதர் எழுதும் தமிழே நல்ல தமிழ், அறிவியலாளர் 
ஆங்கிலத்திலிருந்து சொற்களைப் பெற்று எழுதும் தமிழ் பாழும் தமிழ் 
என்னும் பாகுபாடு மறைய வேண்டும். இரண்டும் தமிழே. லத்தீன் 
இடத்தை ஆங்கிலம் பிடித்த பிறகும் லத்தீன் சொற்களின் இடம் 
ஆங்கிலத்திலிருந்து போகவில்லை. ஆங்கிலத்தின் அறிவு 
வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். 


தமிழைக் காக்கின்ற பேரில் தமிழில் அறிவைத் தடுப்பது, 
தமிழுக்கு அறிவைக் கொண்டு வருபவர்களைத் 
தடுப்பது அறிவுடைமை ஆகாது.



வேந்தன் அரசு

unread,
Aug 8, 2013, 6:58:35 AM8/8/13
to vall...@googlegroups.com


8 ஆகஸ்ட், 2013 4:15 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
பேராசிரியர் இ.அண்ணாமலை


இதற்குத் தமிழ் தன் சொல்லில் காக்கும் தூய்மையை விட்டுக் கொடுக்க 
வேண்டும். தமிழ்ப் பண்டிதர் எழுதும் தமிழே நல்ல தமிழ், அறிவியலாளர் 
ஆங்கிலத்திலிருந்து சொற்களைப் பெற்று எழுதும் தமிழ் பாழும் தமிழ் 
என்னும் பாகுபாடு மறைய வேண்டும். இரண்டும் தமிழே

ஏன் ஆங்கிலத்தையே தமிழ் என்று சொல்லிகிடலாமே
 
. லத்தீன் 
இடத்தை ஆங்கிலம் பிடித்த பிறகும் லத்தீன் சொற்களின் இடம் 
ஆங்கிலத்திலிருந்து போகவில்லை. ஆங்கிலத்தின் அறிவு 
வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். 



400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டா செகப்பிரியரின் மொழி யாருக்கு புரியும்?
 உயிருள்ள மொழி என்றால் அதன் தொன்மை இலக்கியங்கள் இன்றும் புரிந்து கொள்ளப்படவேண்டும்

நாம் குரங்கில் இருந்து பிறந்தோம். ஆனால் நாமும் குரங்கும் ஒன்றும் அல்ல ஒன்றினவும் அல்ல. ஒப்பன மட்டுமே.

தமிழில் பிற மொழி சொறகளை விரவு தமி என மகிழ்தல் இந்திமொழிக்கு சமஸ்கிருதம் என பேர் சூட்டி மகிழ்தல் ஒக்கும்.
பாக், வங்க மக்களை இன்று இந்துக்கள் என்பார் உளரா? இந்துக்களாக பண்டு இருந்தவர் தாமே?

வேந்தன் அரசு

unread,
Aug 8, 2013, 6:59:52 AM8/8/13
to vall...@googlegroups.com
>ஒன்றினவும் அல்ல. ஒப்பன மட்டுமே.

அப்படின்னா என்னங்க ஐயா?

வேந்தன் அரசு

unread,
Aug 8, 2013, 7:00:34 AM8/8/13
to vall...@googlegroups.com


8 ஆகஸ்ட், 2013 6:59 AM அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

>ஒன்றினவும் அல்ல. ஒப்பன மட்டுமே.

அப்படின்னா என்னங்க ஐயா?


Not identical  though similar. 

Hari Krishnan

unread,
Aug 8, 2013, 7:52:42 AM8/8/13
to vallamai

2013/8/8 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டா செகப்பிரியரின் மொழி யாருக்கு புரியும்?
 உயிருள்ள மொழி என்றால் அதன் தொன்மை இலக்கியங்கள் இன்றும் புரிந்து கொள்ளப்படவேண்டும்

உயிருள்ள மொழி என்றென்றும் உருமாறிக் கொண்டேதான் இருக்கும்.  உருமாற்றம் அடையும் வரையில்தான் உயிரிருக்கிறது என்று பொருள்.  வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் வேற்றுமை தெரிந்துகொண்டால் போதும்.  நூறு வருடங்களுக்கு முன்னால் எழுதிய பாரதியைப் புரிந்து கொள்ளவே எவ்வளவு சிரமமாக இருக்கிறது!  பாஞ்சாலி சபத உரையில் எத்தனை எடுத்துக் காட்டுகள் அகப்படுகின்றன. :)


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

வேந்தன் அரசு

unread,
Aug 8, 2013, 7:59:23 AM8/8/13
to vall...@googlegroups.com


8 ஆகஸ்ட், 2013 7:52 AM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/8/8 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டா செகப்பிரியரின் மொழி யாருக்கு புரியும்?
 உயிருள்ள மொழி என்றால் அதன் தொன்மை இலக்கியங்கள் இன்றும் புரிந்து கொள்ளப்படவேண்டும்

உயிருள்ள மொழி என்றென்றும் உருமாறிக் கொண்டேதான் இருக்கும்.  உருமாற்றம் அடையும் வரையில்தான் உயிரிருக்கிறது என்று பொருள்.

மாறாமல் வளர்தல் இயலாது என்கிறிரா ஐயா?
என் சின்ன வயசு நிழல்படத்தில் இன்றைய ஒளிப்படத்தில் உள்ளது போலவே இருக்கிறேன்.

 
 வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் வேற்றுமை தெரிந்துகொண்டால் போதும்.  நூறு வருடங்களுக்கு முன்னால் எழுதிய பாரதியைப் புரிந்து கொள்ளவே எவ்வளவு சிரமமாக இருக்கிறது!  பாஞ்சாலி சபத உரையில் எத்தனை எடுத்துக் காட்டுகள் அகப்படுகின்றன. :)

இதுக்கு நீங்களே முந்து வரிகளில் மாற்றம் சொல்லியுள்ளீர்கள்.




--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Nagarajan Vadivel

unread,
Aug 8, 2013, 8:10:32 AM8/8/13
to vallamai
தமிழ்ப் பற்று தமிழர்களிடம் மட்டுமே இருந்தவரை தனித்தமிழ் வளர்ந்தது.  அம்மொழியின்மீது அயலவர் ஆர்வம்கொணடபோது தமிழில் கலப்பு தடுக்கமுடியததாக ஆகிவிட்டது.

பிறமொழியினர் (அரபி மொழி) தமிழகத்தில் பல தலைமுறைகள் தங்கிய பின்னர் அவர்கள் மொழியைத் தமிழ் வழியே கற்கவேண்டிய சூழல் தோன்றியது.  அரபித் தமிழ் ஒரு எடுத்துக்காட்டு

பிரெஞ்ச் பாதிரியார் (மதுரை மிஷன்) போர்த்துக்கீசியர் லுதெரன் மிஷனரி எனப் பலர் தமிழ் கலப்புக்குக் காரணமாக இருந்துள்ளனர்

தமிழ்ப் பற்றும் தமிழ்க் கலப்பும் இரண்டறப் பிணைந்தது

ஆராய்ச்சி குஞ்சு

DEV RAJ

unread,
Aug 8, 2013, 1:56:49 PM8/8/13
to vall...@googlegroups.com

ஐரோப்பாவில் வீட்டு மொழி பயிற்றுமொழியாக,
ஆட்சி மொழியாக மாறியது மறுமலர்ச்சிக்கு
வித்திட்டது என்கிறார் பேரா. இ. அண்ணாமலை
அவர்கள்.

தமிழ் முதன்மை பெற்றது முதல் உலகத்
தமிழ் மாநாடுகள் , செம்மொழி மாநாடு
போன்றவை நடந்தேறின. 

மறுமலர்ச்சி நடந்ததா ?

உலகத் தரத்திற்கு நிகராக முறையான ஆய்வுகள்
நடந்தனவா ?

தமிழ்வழிக் கல்வி வயிற்றுப்பாட்டுக்கு உதவியதா ?

முனைவர் பட்டத்தின் தரம் யாது ?

போன்ற வினாக்களும் விடையை எதிர்பார்த்து நிற்கின்றன 



தேவ்

DEV RAJ

unread,
Aug 8, 2013, 5:30:58 PM8/8/13
to vall...@googlegroups.com
முனைவர் நா.கண்ணன் அவர்களின் பார்வையில் :

1. தமிழனுக்கு தமிழ் மொழி மேல் காதல் இல்லை.

2. தமிழில் பேசக் கூச்சப்படுகிறான்.

3. ஆங்கிலம் உயர்ந்த மொழி என்று நம்புகிறான்.

4. ஆங்கிலம் கலந்து பேசுவது சமூக அஸ்தஸ்தைக் கூட்டுகிறது என்று
எண்ணுகிறான்.

5. தமிழ்ப் பற்றாளர்களோ, ‘மொழித்தூய்மைக்கு’ முதலிடம் கொடுத்து ‘இயல்பான
வளர்ச்சியை’ப்பின்னுக்குத் தள்ளுகின்றனர்.

6. மொழி என்பதும், மக்களும் வேறு, வேறு அல்ல. மக்களின் மனது மாறாமல் மொழி
மாறாது.

7. மொழிச் செந்தரமாக்குதலில் சரியான அதிகாரப்பகிர்வில்லை. ஆள், ஆளுக்கு
புதிய சொல்லாட்சியை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளனர்.


8. ‘தமிழ்’ என்றால் ‘உணர்ச்சி” என்று வகுக்கப்பட்டு விட்டது. அறிவு
பூர்வமாக சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில்
உணர்ச்சியைத் தூண்டவே தமிழ் பயன்பட்டிருக்கிறது.

9. தமிழகத்தின் பல்லின, பல்மொழிக் கலாசாரம் தமிழ் மொழி
வளர்ச்சிக்கும், பின்னடைவிற்கும் காரணமாக அமைகிறது.

10. ‘உன்னால் முடியும் தம்பி !’ என்பது தமிழுக்கும் பொருந்தும். ‘தமிழால்
முடியும்’. இதை மனப்பூர்வமாக முதலில் நம்ப வேண்டும்.


தமிழ் மொழியைத் தன்னிலிருந்து புறவயப்படுத்தி, அது ஏதோ தானியங்கி போல் பார்ப்பது,
தொழுவது, அழுவது, ஆவேசப்படுவது, ஆற்றாமை கொள்வது என்பது நடந்து
கொண்டிருக்கிறது.  தமிழன் தன் போக்கில் மாற்றம் கொண்டுவராமல் தமிழ் மாற
வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். வேட்டி கட்டும் தமிழர்களைப் பார்ப்பதே
அரிதாகிவிட்டது! ஆங்கில நடை, உடை பாவனையை ஏற்றுக்கொண்ட பின் தன் மொழி
மட்டும் கற்போடு இருக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்கமுடியும்? நாம்
தமிழ் மரபைப் பேணி தமிழ் வாழ்வு வாழ்ந்தால் தமிழும் அன்றுள தமிழ் போல்
இன்றும் இருக்கும். மனித மாற்றங்கள் போல் மொழியும் மாறுவதை உணர்தல்
வேண்டும். “இனியொரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்” எனும்
வைராக்கியம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். தன்னில்
மாற்றமில்லாமல் மொழி வளர்ச்சி பற்றிப் பேசுவது பாசாங்காகவே முடியும்.

தமிழ் என்பது மொழி எனும் அடையாளம் தாண்டி பார்க்கப்படுகிறது, அதற்கே
பயன்படுத்தவும் படுகிறது.

இந்திய மொழியியல் துறை என்று தமிழகத்தில் ஏதுமில்லை.

வெளிநாட்டில் இருந்து கொண்டு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு வடமொழியின் பங்கு
என்பது போல் பேசும் அறிஞர்கள் நம்மவர்களால் வசை பாடப்படுகின்றனர். ஆரிய
அடிவருடிகள் என்று!

ஒருவகையான உளவியல் பிரச்சனை இது. சுயமரியாதை, தன்மானம் பெறும் வழியில்
உள்ள நிலைகள் என்று இதை நான் காண்கிறேன். ஒரு முதிர்ந்த ஆய்வுப் போக்கு
இருந்த காலக்கட்டம் போய், அடிமை பட்டு, மீண்டும் தன்மான உணர்வு பெறும்
நிலையில் தமிழர்கள் உள்ளார்கள். ஒரு முதிர்ச்சி பெறும் நிலையில், இந்திய
மொழிகளில் தமிழ் என்று காணும் நோக்கு வரும்.

இந்திய மொழியியல் என்பது ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதில்
தமிழின் பங்கு கணிசமாக இருக்க வேண்டும்.


We need visionaries, not myopic dramatists!



[மின் தமிழ்க் குழுமத்திலிருந்து]

DEV RAJ

unread,
Aug 8, 2013, 6:31:07 PM8/8/13
to vall...@googlegroups.com
On Monday, 5 August 2013 20:30:01 UTC-7, DEV RAJ wrote:
காரன், காரர் - தமிழில் பிற்கால வழக்கு


கஞ்சகாரரும், செம்பு செய்குநரும்,
மரம்கொல் தச்சரும், கருங் கைக் கொல்லரும்....
                                                      [சிலம்பு] 

கஞ்சகாரர்  - காம்ஸ்யகார  என்பதன் திரிபு



தேவ்

DEV RAJ

unread,
Aug 8, 2013, 10:36:42 PM8/8/13
to vall...@googlegroups.com
The law of diminishing returns - குன்றிடும் ஈனல் விதி 

[வேந்தன் அரசு]

DEV RAJ

unread,
Aug 9, 2013, 10:09:53 PM8/9/13
to vall...@googlegroups.com
மின்னியல் மொழிபெயர்ப்புத் திட்டத்தில் தமிழ் 

ஒன்பது ஆசிய மொழிகளுக்கு இணையாகத் தமிழ்;
இதன் முன்னோடிகள் பாராட்டுக்குரியவர்.





தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 10, 2013, 10:16:23 AM8/10/13
to vall...@googlegroups.com

அன்மையில் மொசில்லா பயர்பாக்ஸ் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு அதிகாரபூர்வ
பதிப்பாக வெளிவந்துள்ளது. இதை கொண்டாடும் பொருட்டு கட்டற்ற மென்பொருள்
அறக்கட்டளை, தமிழ் நாடு (FSFTN) மற்றும் மொசில்லா தமிழ் குழு ஆகியன இணைந்து
வெளியிட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழா சென்னை மைலாபூரில்
உள்ள சிவகாமி பெட்டாச்சி அரங்கத்தில் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 6 மணி
அளவில் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல் மற்றும் விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

இந்த விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பெருந்திரளாய் கலந்துகொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

--
நன்றி,
அருண் பிரகாஷ்
ஒருங்கிணைப்பாளர் / மொசில்லா தமிழ்

DEV RAJ

unread,
Aug 10, 2013, 3:06:49 PM8/10/13
to vall...@googlegroups.com
தமிழில் இணைய நுட்பம் இலவசமாக  [தமிழ் லினக்ஸ்] -

சி. ஜெயபாரதன்

unread,
Aug 10, 2013, 3:39:31 PM8/10/13
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram

"தமிழ்க் கணினி"
என்று திருத்தப் பட வேண்டும்.

உலகத் தமிழர்களுக்கான தமிழ்த் தொழில்நுட்ப இணையதளம் என்றும் திருத்தப் பட வேண்டும்.

சி. ஜெயபாரதன்

++++++++++++++++++

On Sat, Aug 10, 2013 at 3:06 PM, DEV RAJ <rde...@gmail.com> wrote:
தமிழில் இணைய நுட்பம் இலவசமாக  [தமிழ் லினக்ஸ்] -

--

DEV RAJ

unread,
Aug 10, 2013, 4:13:11 PM8/10/13
to vall...@googlegroups.com, mintamil
பேராசிரியர் இ.அண்ணாமலை  :
                   [வேரியல்]

தமிழ்ச் சொற்களின் வேர்களின் தொகுப்பு என்று தனியாக ஒரு நூல் 
என் பார்வைக்கு வரவில்லை. இதைப் போன்றே தற்சம, தற்பவச் 
சொற்களின் தொகுப்பும். வின்ஸ்லோ தன் தமிழ் – ஆங்கில அகராதியில் 
சமஸ்கிருதச் சொற்களை உடுக்குறியிட்டுக் காட்டியிருக்கிறார். தூய தமிழில் 
எழுத விரும்புவோருக்குத் துணையாக, தமிழில் வழக்கில் உள்ள சமஸ்கிருதச் 
சொற்களுக்குப் பதிலான தமிழ்ச் சொற்களைத் தரும் பட்டியல்களும் உண்டு. 


தேவநேயப் பாவாணரை ஆசிரியராகக் கொண்டு தொடங்கிய வேர்ச்சொல் 
அகராதித் தொகுதி, தமிழ்ச் சொற்களுக்கு வேர் கண்டுபிடித்துத் தருகிறது. 
அகராதியின் எல்லாத் தொகுதிகளும் வெளிவந்த பின் அவற்றில் உள்ள 
வேர்களைத் தனியாகத் தொகுத்தால் அது ஒரு தமிழ் வேர் அகராதி ஆகும். 
இன்னொரு ஆசிரியர் காணும் வேர்கள், இதிலிருந்து வேறுபடலாம். 
ஒரு ஆசிரியர் தமிழ் வேர் என்று இனங்காண்பது மற்றொரு ஆசிரியருக்கு 
சமஸ்கிருத வேராக இருக்கலாம். ஆய்வாளர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் 
வேர் காணக் கையாளும் அலசல் முறைகளால் இருக்கலாம்; 
ஆசிரியர்களின் மொழிக் கொள்கை (language ideology) 
அடிப்படையில் பிறந்தவையாகவும் இருக்கலாம்.

சமஸ்கிருத வேராக இருந்தாலும், பல சொற்கள் பிராகிருதம், 
பாலி வழியாகத் தமிழுக்கு வந்தவை. சமஸ்கிருதத்திலிருந்து 
நேரடியாகச் சொற்கள் தமிழுக்கு வருவதற்கு முன்னரே பிராகிருதம், 
பாலியின் சொல் வடிவங்கள் சமணம், பௌத்தம் மூலம் தமிழுக்கு வந்தன. 
தொல்காப்பியர் வடசொல் என்று கூறுவது மேலே உள்ள மூன்று மொழிச் 
சொற்களையும் குறிக்கும் என்பது என் கருத்து. 

வேர்ச்சொல் ஆராய்ச்சி ஒரு வேரிலிருந்து உருவாகும் பல சொற்களைப் 
பற்றிய சொல்லாக்க ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஒரு சொல் 
இன்னொரு மொழியிலிருந்து வந்த சொல்லா என்ற சொல் வரலாற்று ஆராய்ச்சியின் 
ஒரு பகுதியாக இருக்கலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை ஒப்பிட்டு 
அவை ஒரு மூல மொழியிலிருந்து பிரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவையா 
என்று அறியும் மொழி ஒப்பீட்டு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.


இவற்றில், தமிழைப் பொறுத்தவரை, இரண்டாவதிலும் மூன்றாவதிலும் ஓரளவு 
ஆய்வு நடந்திருக்கிறது. இங்கும் வரலாற்றுத் தொடர்புடைய சொற்களை 
அடையாளம் காணபதில் உள்ள ஆர்வம் அந்தச் சொற்களின் வேர்களைக் 
காண்பதில் இல்லை. முதலாவதில் ஆய்வு இனி தொடங்க வேண்டும். 
சொல் பிறப்பில் தமிழறிஞர்களுக்கு உள்ள ஆர்வம் (தொகை நீக்கிய) சொல்லாக்கத்தில் 
(word formation) இல்லாதது, இந்த நிலைக்குக் காரணமாக இருக்கலாம்
(புதிய சொல்லாக்கத்தில் (word creation) இருக்கும் மிகுந்த ஈடுபாடு வேறு). 
சொல் பிறப்பில் உள்ள ஆர்வம் தமிழில் வழங்கும் ஒரு சொல் பிற மொழியில் 
பிறந்ததா என்று அறிவதில் இருக்குமளவு ஒரு சொல்லின் மூலமான அதன் 
வேரை அறிவதில் இல்லை. சொல்லின் வேர் பற்றிய உணர்வு, தொல்காப்பியர் 
காலத்திலிருந்தே இருக்கிறது. தமிழில் வட சொற்கள் இருந்ததும் அவற்றை 
வேறுபடுத்திக் காட்ட வேண்டிய தேவையும் இதற்குக் காரணம்.


தமிழ் இலக்கண மரபில் சொல்லமைப்பு விளக்கம், சமஸ்கிருத இலக்கண மரபில் போல, 
சொல்லின் வேரை அடிப்படையாகக் கொள்ளாதது, வேர்ச்சொல் ஆய்வையோ, 
வேர்ச்சொல் அகராதியையோ இலக்கணத்தின் ஒரு பகுதியாக அல்லது 
இலக்கணத்தின் துணைக் கருவியாக எடுப்பதைத் தேவையில்லாததாக 
ஆக்கிவிட்டது என்று நினைக்கிறேன். 


காலனிய காலத்தில் முக்கியத்துவம் பெற்ற திராவிட மொழிக் குடும்ப ஆய்வு, 
வேர்ச்சொல் ஆராய்ச்சியில் ஆர்வத்தை உண்டு பண்ணியது.


DEV RAJ

unread,
Aug 10, 2013, 6:07:55 PM8/10/13
to vall...@googlegroups.com
தினமணி : 02.08.2011


இணையம் சார்ந்த பல கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டு 
வழக்கத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக மின்னஞ்சல், மின்வருடி, 
மென்பொருள், வன்பொருள், படிமக்கோப்பு, பதிவர், வலைப்பதிவு, 
வலைப்பூ, சமூக வலைத்தளம், இணையக்குழு, விசைப்பலகை, திரை, 
மடிக்கணினி, மேசைக்கணினி, சுட்டி முதலான சொற்கள் பயன்பாடு 
நோக்கித் தமிழில் உருவாக்கம் பெற்றுள்ளன. இச்சொற்களின் வருகையால் 
தமிழ்மொழியில் கலைச்சொல்வளம் மிகுந்து வருகிறது.

இணையத்தின் வரவால் அச்சு வடிவ அகரமுதலிகள் போல் மின் 
அகரமுதலிகள் உருவாயின. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி, 
க்ரியா அகராதி, கதிரைவேற்பிள்ளை அகராதி, வின்சுலோ அகராதி, 
பெப்ரிசியசு அகராதி உள்ளிட்ட அகராதிகள் இணையத்தில் இலவசமாகக் 
கிடைக்கின்றன. தமிழ் இணையத்தில் தமிழ்சார்ந்த செய்திகள் பல 
இடப்பட்டிருந்தாலும் இன்னும் உள்ளிட வேண்டிய செய்திகள் பல உள்ளன. 
உள்ளிடப்பட்டவற்றையும் பயன்படுத்துவோர் எண்ணிக்கையளவில் 
குறைவாகவே உள்ளனர். தமிழைப் பயன்படுத்தி மின்னஞ்சல் செய்ய 
இயலும், உரையாட இயலும் என்று தெரியாமல் கணினித்துறையில் 
பலர் இருப்பதையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்கப் பல மாநாடுகள், கருத்தரங்குகள், 
பயிலரங்குகள், வலைப்பதிவர் சந்திப்புகள் நடத்தப்பட்டன. தமிழ் இணையத்துக்கு 
எனப் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உத்தமம் என்ற அமைப்பு 
தமிழ்க்கணினி, இணையத் தொழில்நுட்பத்துக்கு என்று உலகெங்கும் 
பரவி வாழும் தொழில்நுட்பம் தெரிந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 
கணினித் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பும் தமிழ் கணினித்துறை வளர்ச்சிக்கு 
உதவுகிறது.

மதுரைத் திட்டம் என்னும் தளம் தமிழின் அரிய நூல்கள் 353-ஐ தம் பக்கத்தில் யாரும்
இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வைத்துள்ளது. தமிழ் மரபுச்
செல்வங்களை வெவ்வேறு வடிவங்களில் தரும் வண்ணம் பல இணைய தளங்கள் 
தமிழ்ச் செய்திகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன.

அவற்றுள் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற தளம் குறிப்பிடத்தக்க 
ஒன்றாகும். அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள் 
எனத் தமிழரின் மரபுச்செல்வங்களைத் தாங்கி அத்தளம் உள்ளது.

ஈழத்தமிழர்களின் நூல்களையும் இதழ்களையும் பாதுகாக்கும் நூலகம் 
என்ற தளம் அரிய நூல்களையும் இதழ்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 
சிங்களப் பேரினவாதிகள் யாழ்ப்பாண நூலகத்தை அழித்த பிறகு இனித் 
தமிழர் அறிவுச்செல்வங்களை யாரும் அழிக்க இயலாதபடி நூலகம் 
தளத்தில் பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

உலகெங்கும் எழுதும் வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் திரட்டிகள் 
தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி 
என்னும் பெயர்கொண்ட திரட்டிகள் தமிழ் எழுதும் பதிவர்களின் படைப்புகளை 
உலக அளவில் திரட்டித் தந்து தமிழ்ப்படைப்புகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ்ச்சொற்களை அகரவரிசையில் தரும் வண்ணம் மென்பொருள்கள் 
இணையத்தில் உள்ளன. தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் மென்பொருள்கள் 
வெளிவந்துள்ளன. விரும்பியவண்ணம் எழுத்துகளை மாற்றித் தரும் எழுத்து
மாற்றிகளும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன.

இணைய வளர்ச்சியால் தமிழ் மொழி பெயர்ப்பு புதிய வீச்சும் வேகமும் பெற்றுள்ளது. 
தமிழ்க்கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் உள்ளன.
இன்றைய அனைத்து அதிர்வுகளையும் உலக அளவில் உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் 
இணையத்திற்கு ஈடுகொடுத்துள்ள தமிழ் வளர்ச்சி வருங்காலத்தில் இன்னும் விரைவாக இருக்கும்.



வேந்தன் அரசு

unread,
Aug 10, 2013, 10:33:51 PM8/10/13
to vall...@googlegroups.com


10 ஆகஸ்ட், 2013 6:07 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

--

திரு மு. இளங்கோவன் ஆர் பள்ளிகள் தோறும் சென்று கணினியில் தமிழ் பயன்பாட்டை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கும் தொண்டினை செய்து வருகிறார். அன்னாரை பாராட்டுகிறேன்

DEV RAJ

unread,
Aug 11, 2013, 2:38:23 AM8/11/13
to vall...@googlegroups.com
தமிழில் உரைநடை :

உரைநடைக்குக் கருக்கட்டினவர்கள் நமது பண்டை
உரையாசிரியர்களே. அக்கருவைச் சீர்செய்து இக்கால
நிலைக்கு உருப்படுத்திய பெருமை ஐரோப்பிய
பாதிரிமார்களையே சார்ந்தது. கி.பி.17-ஆம் நூற்றாண்டில்
கிறிஸ்தவ சமய ஊழியராய்த் தமிழ்நாட்டில் தொண்டாற்றிய
ராபர்ட் நொபிலி என்ற தத்துவ போதக சுவாமிகள் முழு
உரைநடை நூலை இயற்றி வழிகாட்டினார்கள். கி.பி.18-ஆம்
நூற்றாண்டில் தமிழ் நாட்டில் உரோமன் கத்தோலிக்கச் சமய
ஊழியம் செய்தவரும், தம் தாய் மொழியாகிய இத்தாலி
மொழியுடன் கிரேக்கம், இலத்தீன், போர்ச்சுக்கீசியம், பிரெஞ்சு,
வடமொழி, தெலுங்கு, இந்துஸ்தானி, பாரசீகம், தமிழ் ஆகிய
மொழிகளைப் பயின்றவரும், தொன்னூல் என்னும் தமிழ்
இலக்கணம் இயற்றியவரும், தேம்பாவணிக் காப்பியத்தையும்
பிற சிறு செய்யுள் நூல்களையும் இயற்றியவருமாகிய கான்சன்டைன்
பெஸ்கி என்ற வீரமா முனிவர் ‘பரமார்த்த குரு கதை’ என்ற முழு
உரைநடை நூலை அழகுற இயற்றித் தமிழ் உரைநடைக்கு வழி
காட்டினார். 18-ஆம் நூற்றாண்டினரான சிவஞான சுவாமிகள்
உயர்ந்த உரைநடை நூலை இயற்றினார்கள்.


பிற்காலத்தில்

கி.பி.19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தமிழ்
உரைநடை வளர்ச்சியுற்றது. தாண்டவராய முதலியார் இயற்றிய
பஞ்சதந்திரமும், ஆறுமுகநாவலர் எழுதிய பால பாடங்களும்
புராண உரைநடை நூல்களும், சபாபதி நாவலர் இயற்றிய
திராவிடப் பிரகாசிகையும் உரைநடை வளர்ச்சிக்கு உறுதுணை
செய்தன. பின்னர் வேதநாயகம் பிள்ளை, வி.கோ.
சூரியநாராயண சாஸ்தியார், செல்வ கேசவராய முதலியார்,
மாதவய்யர், கா.ரா. நமச்சிவாய முதலியார், மறைமலை
அடிகள், திரு.வி.கலியாண சுந்தரனார், டாக்டர் உ.வே.சாமிநாத
அய்யர் முதலியவர்களும் உரைநடையை வளர்த்தார்கள்.


‘ஜனவினோதினி’ என்ற திங்கள் இதழ் 1874 முதல் 1889
வரையில் பல அறிவியல் கட்டுரைகளைத் தாங்கி நடைபெற்றது.
இஃது அறிவியல் கட்டுரைகளை அக்காலத்துக்கு ஏற்ற முறையில்
எழுத வழி காட்டியது.


20-ஆம் நூற்றாண்டில் பல நாளிதழ்களும் வார, மாத
வெளியீடுகளும் உரைநடையை வளர்த்தன. இன்று தமிழ்
உரைநடை வளர்ந்து கொண்டு வருகிறது; இனியும் வளர
வேண்டும்.

                                      - அ கி பரந்தாமனார்  



மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் - வள்ளலார் பெருமான்
எழுதிய உரைநடை நூல்கள் [19ம் நூற்றாண்டு]. இவர் அன்பர்களுக்கு
எழுதிய கடிதங்களும் பழகு தமிழில் அமைந்தவை.




தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 11, 2013, 6:41:13 AM8/11/13
to vall...@googlegroups.com


11 ஆகஸ்ட், 2013 2:38 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

தமிழில் உரைநடை :

உரைநடைக்குக் கருக்கட்டினவர்கள் நமது பண்டை
உரையாசிரியர்களே. 

கல்வெட்டுகளில் செதுக்கியவர்களின் நடை  உரை  இல்லையா?

N D Logasundaram

unread,
Aug 11, 2013, 11:50:01 AM8/11/13
to vall...@googlegroups.com
பொதுவாகச் சொன்னால் எல்லா கல்வெட்டுகளும் உரைநடைதானே 

முற்பகுதியில் வருவது மெய்கீர்த்தி இது மட்டும் பாடல் வடிவில் இருக்கும் 

ஆனால் பாடல்களான   முழு நூலும் பொ ளிக்கப்பட்டு  கண்டுள்ளதும் உ ண்டு 
எடுத்துக்காட்டு திரிசிராப்பள்ளி அந்தாதி / இணை ப்பினில் காண் க 

கல்வெட்டுகளில் பாடலாக உள்ளவைகளை தனியாக வும் வெளியிட்டார்கள் (சீநிவேங்கசாமி) 

கல்வெட்டு வழியாகவே அறிந்த புதிய தேவாரத் தலப் பதிகமும் உண்டு 
திருவிடைவாய் 
 
மன்னர்கள் தலைவர்கள்  அளித்த கொடை கள் பாடலாகவே ஆவண ப்படுதப்பட்டுள்ள தும் பல வுண்டு 
நான் அவற்றில் சிலவற்றைத் தொகுத்து மதுரைத் திட்டத்தில் வைத்துள்ளேன் 
ஒன்று  இணைப்பில் காண்க 

எல்லா மன்னர்களின் மெய் கீர்த்திப்பாடல்களும் கூட தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது 
இவற்றையும் காண்க 

2013/8/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
pmuni0337.html
pmunimeykeerthi134.htm

DEV RAJ

unread,
Aug 11, 2013, 2:35:11 PM8/11/13
to vall...@googlegroups.com
On Sunday, 11 August 2013 03:41:13 UTC-7, வேந்தன் அரசு wrote:
கல்வெட்டுகளில் செதுக்கியவர்களின் நடை  உரை  இல்லையா?


உரைநடை தமிழுக்குப் புதிதன்று.
உரைநடை என நாம் தற்போது சொல்வதை
பாவின்றி எழுந்த கிளவி’ 
எனக் கூறும் வழக்கம் இருந்திருக்க வேண்டும்.
 
பரந்தாமனார் முதலில் தெளிவுபடுத்தியுள்ளமை
காண்க :

தொல்காப்பியர் "உரைநடைப்பகுதி வழக்கானது, 
பாட்டிடை வைத்த குறிப்பும், 
பாவின்றி எழுந்த கிளவியும், 
பொருள் மரபு இல்லாப் பொய்ம்மொழியும்,
பொருளோடு புணர்ந்த நகை மொழியும் 
என நான்கு" என்று குறிப்பிட்டுள்ளார்.* ஒரு பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்கும்
இடையிடையே எழுதப்படும் உரைநடையே பாட்டிடை வைத்து
குறிப்பு என்பது. இப்படித் தகடூர் யாத்திரை என்ற நூல் இருந்ததாய்ச்
சொல்லப்படும். பிற்காலத்தில் இவ்வாறு உள்ளதைப் பெருந்தேவனார்
பாரதத்தில் காணலாம். பாவின்றி எழுந்த கிளவி என்பது பாட்டின்றிச்
சூத்திரத்துக்குப் பொருள் எழுதுவது. பாவின்றி எழுந்த கிளவி என்பதற்கு
இளம்பூரணர் என்ற முதல் உரையாசிரியர். ‘பாக்களை ஒழியத்
தோன்றிய சொல்வகையானும்’ என்று பொருள் கூறினார். இப்பொருளை
நோக்கும்போது முற்காலத்தில் முழு உரைநடை நூல்கள் இருந்திருக்க
வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால் அம்முழு உரைநடை
நூல்கள் அழிந்துபட்டன போலும். 

சிலப்பதிகாரத்தில் உரைநடை

முதல் முதலாக, கி.பி.2-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக்
கருதப்படும் சிலப்பதிகாரத்தில் உரைநடையை அருகிக் காண்கிறோம்.
அதில் உள்ள உரைநடையும் ஏறக்குறைய செய்யுள் போலவே
இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் பதிகத்துக்கு அடுத்துள்ள
உரைபெறு கட்டுரைப் பகுதியில், "அது கேட்டுக்
கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு
சாந்தி செய்ய மழைத்தொழில் என்றும் மாறாதாயிற்று" என்று
இன்று நாம் எழுதுவது போன்ற உரைநடை வாக்கியம் உள்ளது.
இது போன்ற வேறு உரைநடை அங்கு மிகுதியாக இல்லை.

[சிலப்பதிகாரம் - உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்] 

கி,பி.8-ஆம் நூற்றாண்டின் இறையனார் அகப்பொருளில் -

"இனிப் புகழ், பொருள், நட்பு, அறன் என்னும்
நான்கினையும் பயக்கும். இது வல்லானாக; என்னை? கற்று
வல்லன் என்பதனின் மிக்க புகழ் இல்லை. உலகத்தாரானும்
சமயத்தாரானும் ஒருங்கு புகழப்படுமாகலான் என்பது. இனிப்
பொருளும் பயக்கும், என்னை? பொருளுடையாரும் பொருள்
கொடுத்துக் கற்பவராகலின் என்பது. இனி நட்பும் பயக்கும்;
என்னை? கற்றாரைச் சார்ந்து ஒழுகவே நமக்கும் அறிவு
பெருகுமென்று பலருஞ் சார்ந்து ஒழுகலின் என்பது. இனி
அறனும் பயக்கும்; என்னை? ஞானத்தின் மிக்க கொடை
இன்மையான் என்பது. இது பயன்."




தேவ்

DEV RAJ

unread,
Aug 11, 2013, 3:14:07 PM8/11/13
to vall...@googlegroups.com
வேளாண் செய்திகளுக்கென ஒரு முயற்சி -


தொடர்புக்கு -
valarumsakthiAtgmailDOTcom
வேளாண்மைத் தகவல் ஊடகம் <mailATagriinfomediaDoTcom>



தேவ்

DEV RAJ

unread,
Aug 11, 2013, 3:23:30 PM8/11/13
to vall...@googlegroups.com
தமிழ் மென்பொருள் தொகுப்பு - Tamil Software Collection

DEV RAJ

unread,
Aug 11, 2013, 4:03:33 PM8/11/13
to vall...@googlegroups.com
On Sunday, 11 August 2013 08:50:01 UTC-7, N D Logasundaram wrote:
பொதுவாகச் சொன்னால் எல்லா கல்வெட்டுகளும் உரைநடைதானே 
முற்பகுதியில் வருவது மெய்கீர்த்தி இது மட்டும் பாடல் வடிவில் இருக்கும்
ஆனால் பாடல்களான   முழுநூலும் பொளிக்கப்பட்டு  கண்டுள்ளதும் உண்டு 
எடுத்துக்காட்டு திரிசிராப்பள்ளி அந்தாதி .
கல்வெட்டுகளில் பாடலாக உள்ளவைகளை தனியாகவும் வெளியிட்டார்கள் (சீநிவேங்கசாமி) 

கல்வெட்டு வழியாகவே அறிந்த புதிய தேவாரத்தலப் பதிகமும் உண்டு 
திருவிடைவாய் 
 
மன்னர்கள் தலைவர்கள்  அளித்த கொடைகள் பாடலாகவே ஆவணப்படுதப்பட்டுள்ளதும் பலவுண்டு 



மிக்க நன்றி ஐயா.
தமிழ் இணையத்தில் தங்களது பணியையும்,
ஆய்வு முயற்சிகளையும் நன்கறிவேன்.


தமிழகக் கல்வெட்டுக்கெனவே தனியான
ஒரு வலைத்தளம் அமைதல் வேண்டும்,
அதில் அறிஞர்கள் அனைவரது பங்களிப்பும்
இருத்தல் வேண்டும் என்பது என் நெடுநாளைய
விருப்பம்; புதிய செய்திகளை அவ்வப்போது
இணைத்துக் கொள்ளலாம். 

சமணம், மெய்க்கீர்த்தி, நடுகல்  - போன்ற
பகுப்புகளோ, காலவாரியான பிரிவுகளோ
இருக்கலாம்; தொகுப்பதற்கும், தேடலுக்கும்
வசதியாக. 


தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 11, 2013, 5:36:08 PM8/11/13
to vall...@googlegroups.com
தமிழில் பண்டு உரைநடை அதிகம் இல்லாமைக்கு காரணம் ஏடுகளில். இடமின்மை.

ஐயர் யாத்த கரணங்கள் உரைநடையில்தானே இருக்கணும்?

DEV RAJ

unread,
Aug 11, 2013, 6:44:11 PM8/11/13
to vall...@googlegroups.com
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் நடத்திய பயிலரங்க
நிகழ்ச்சிகள் -

DEV RAJ

unread,
Aug 11, 2013, 7:26:26 PM8/11/13
to vall...@googlegroups.com
நூல்களைக் கேட்டு மகிழ - ஒரு முயற்சி :


 
 
for iphone users - 
 

DEV RAJ

unread,
Aug 11, 2013, 7:33:26 PM8/11/13
to vall...@googlegroups.com
On Sunday, 11 August 2013 14:36:08 UTC-7, வேந்தன் அரசு wrote:
தமிழில் பண்டு உரைநடை அதிகம் இல்லாமைக்கு காரணம் ஏடுகளில். இடமின்மை.

இருக்கலாம்

 
ஐயர் யாத்த கரணங்கள் உரைநடையில்தானே இருக்கணும்?

உரைநடை [அ] செய்யுள் வடிவிலதான்   இருக்கோணும்னு
கட்டாயமில்லீங்கோ ; நூற்பா வடிவிலும் இருக்கலாம்



தேவ்

It is loading more messages.
0 new messages