தீண்டாமை இழிவு தமிழ் வேந்தர் ஆட்சியில் தமிழக கோவில்களில், தமிழகத்தில் வழக்கில் இல்லை

96 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Sep 29, 2018, 9:05:46 PM9/29/18
to seshadri sridharan

திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன் 


மனிதரை மனிதர் விலக்கி வைக்கும் தீண்டாமை இழிவு தமிழ் வேந்தர் ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழக கோவில்களில், தமிழகத்தில் வழக்கில் இல்லை என்று காட்ட ஒரு கல்வெட்டைத் தன்னகத்தே வைத்து வா என்று விளக்கின்றது கூவமான திருவிற்கோலம்.

திருவிற்கோலம் தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் திருவிற்கோலம் என்ற பெயரில் தான் இருந்தது. பின்னாளில் அங்கே கூவம் ஏரி கட்டப்பட்டதும் திருவிற்கோலம் என்ற பெயர் அருகிய வழக்காகி கூவம் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. திருவிற்கோலம் பேரம்பாக்கம் பூந்தன்மல்லி வழியில் பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருஇலம்பையன்கோட்டூர், சிவபுரம், நரசிங்கபுரம் ஆகிய கூவ ஆற்று சைவ, வைணவ தளங்கள்  3 – 4 கி.மீ. இடைவெளியில் உள்ளன. இக்கோவில் நல்ல முறையில் பேணப்படுகின்றது. இக்கோவிலில் சற்றொப்ப முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு SII XXVI / தென்னிந்திய கல்வெட்டுகள் 26 இல் அச்சாகி வெளிவந்துள்ளன.

திருவிற்கோலம் 064 a.jpg                                                       திருவிற்கோலம் 063 a.jpg

கல்வெட்டு எண் 364 கிழக்கு சுவர் 

1.   ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ரா

2.   ஜாதிராஜ தேவற்க்கு யாண்டு ஏழாவது(1169-1170)

3.   ஜயங்கொண்ட சோழமண்டலத்து மணவி

4.   ற் கோட்டத்து கூவமான தியாகசமுத்திர நல்லூ

5.   ர் ஆளுடையார் திருவிற்கோலமுடையாற்கு இவ்வூர்

6.   தும்பூரன் திருவரங்கமுடையார் அகமுடையான்

7.   சங்கம்பை வைத்த திருநுந்தா விளக்கு க ஒன்றுக்கும் இக்கோ

8.   யிலில் சிவப்ராமணவாரணர் கௌஸிகன் செந்நெற்பெற்றானும், கௌத

9.   மன் உடையபிள்ளையும், கௌதமன் திருவலமுடையா

10. (னும்), காஸ்யபன் தேவப்பிள்ளையும், - - -  -கணபதி ப

11. ட்டனும் இவ்வாண்டு அப்பசி மாஸத்து இவ்வனையோமும் கை

12. க்கொண்ட அன்றாடு நற்பழங்காசு 15. இக்காசு பதினைந்து

13. ம் (பொலியூட்டாக) கைக்கொண்டு இத்திருநந்தா விளக்கு ஒன்

14. றும் சந்திராதித்தவரை செலுத்தக் கடவோமானோம் இவ்

15. வனைவோம். இப்படிக்கு கௌஸிகன் செந்நெல்

16. (ந)ற் பெற்றாந் எழுத்து இப்படிக்கு இவை கௌதமன் 

விளக்கம் கல்வெட்டு சோழ வேந்தன் ராஜாதிராஜனின் 7 ஆம் ஆட்சி ஆண்டில் (1169-1170) இல்  வெட்டப்பட்டுள்ளது. மணவில் இன்று மணவூர் ஆகிவிட்டது. இக்கோவில் ஈசனுக்கு இவ்வூருடைய தும்பூரன் திருவரங்கமுடையான் அகமுடையான் சங்கம்பை என்பான் நுந்தா விளக்கு எரிக்க அன்றாடம் புழங்கும் 15 பழங்காசுகளை வட்டிக்கு விட தந்து அதன் மூலம் வரும் வட்டிப் பணத்தில் நந்தா விளக்கு எரிக்க கௌஸிகன் செந்நெற்பெற்றான், கௌதமன் உடையபிள்ளை, கௌதமன் திருவலமுடையான், காஸ்யபன் தேவப்பிள்ளை, - - -  -கணபதி பட்டன் ஆகியோரிடம் கொடுத்துள்ளான். இவர்களும் அவ்வாறே செய்வதாக உறுதிமொழி செய்கின்றனர். வைணவரில் பெரிய வாச்சம் பிள்ளை போல அன்று சில சிவ பிராமணரும் பிள்ளைப் பட்டம் கொண்டிருந்தனர் என்று தெரிகின்றது. கல்வெட்டு முழுமையாக முற்றுப் பெறவில்லை.

 

கல்வெட்டு எண் 354 தெற்கு சுவர்

1.   திருபுவனச் சக்கரவத்திகள் சிறி வீரகண்ட கோபால தேவற்கு

2.   யாண்டு 5 வது (1296 AD) கூவமான தியாகசமுத்திர நல்லூர் உடையார் திருவிற்கோலமுடை

3.   ய நாயநார்க்கு பண்டரங் கிழான் திருவரங்கமுடையார் பாரி உமையாழ்வானேன் சந்தி

4.   ராதி(த்)தவரை எரிக்கக் கடவதாந சந்தி விளக்கு ஒன்றும் எரிப்பதாக கை(க்)கொண்டோம் செநல இவை சோமனாத தே _ _ _ _ _ _

5.   வைத்தாந் பள்ளநும் பொந்நன் பட்டன் உலகாள உடையானும் சோமநாத தேவநும் இமூவர் இவை உலக உடையான் எ - - - - -

6.   ரோம் இப்படிக்கு ச(ம்)மதித்து கை(க்)கொண்ட இமூவரோம் இவை பள்ளன் எழுத்து.

 

விளக்கம் வீரகண்ட கோபாலனுக்கு 5 ஆவது ஆட்சி (1296 AD) ஆண்டில் திருவிற்கோல இறைவனுக்கு பண்டரம் கிழான் திருவரங்கமுடையான் பாரி உமையாழ்வான் ஒரு சந்தி விளக்கு எரிக்க ஒப்புகிறான்.  பள்ளன் என்ற பெயர் ஈண்டு உற்று நோக்கத்தக்கது. கல்வெட்டின் முக்கியமான இடத்தில் வெற்றிடம் விடப்பட்டுள்ளது.

 

கல்வெட்டு எண் 362  வடக்கு சுவர் 

1.   _ _ _ _ யாண்டு இருபத்து எட்டாவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து கூவமான தியாகசமுத்திர நல்லூர் ஆளுடையான் திருவிற்கோலமுடைய நாயனார்க்கு இம்மண்டலத்து மணவிற் கோட்டத்து சிவபுரத்து

2.   _ _ _ _ _ பரையன் பக்கல் இக்கோயில் சிவபிராமணரில் கௌதமன் அரசபட்டனும் கௌதமன் தாழிபட்டனும் கௌதமன் திருவல்லமுடையான் உலகாளுடையான் பட்டனும் காசிவன் பொற்கோவில் நம்பி சோமனாத தேவபட்டனும் இவ்

3.   _ _ _ _ _ _  கைக்கொண்ட பணம் பத்து. இப்பணம் பத்துக்கும் ஒரு சந்தி விளக்கு சிந்திராதித்தவரை எரிப்பதாக பொலியூட்டாகக் கைக்கொண்டோம் இவ்வனைவோம் இவை சென்னெல் பெற்றான் அரசபட்டஸ்ய, இவை பொன்னம்பலக் கூத்தன் தாழி பட்டஸ்ய, இவை உலகாளுடைய பட்டஸ்ய இவை சோமநாத தேவபட்டஸ்ய 

விளக்கம் வேந்தன் பெயர் கட்டட மறைப்பால் விடுபட்டுள்ளது. சிவபுரத்தை சேர்ந்த (கட்டடத்தில் பெயர் மறைந்துள்ள) பரையன் சந்தி விளக்கு எரிக்க 10 காசுகளை வட்டிக்கு விட பொலியூட்டாக கொடுத்துள்ளான். 10 காசில் வரும் வட்டியில் சந்தி விளக்கு எரிப்பதாக சிவபிராமணர் மூவர் ஒப்புக் கொண்டனர். சந்தி விளக்கு எரிக்கும் முதல் சிலநாளில் இப்பரையர் தாம் மட்டும் அல்லாது தம் உற்றார் உறவினர் சொந்த பந்தம் ஆகியோருடன் கோவிலுக்கு வந்து மற்றவரைப் போல  இறைவனை தொழுதிருக்க வேண்டும்.  அப்படியானால் பரையர்கள் தமிழ் வேந்தர் ஆட்சியில் தீண்டாமைக்கு உட்பட்டிருக்க வில்லை என்று தெரிகின்றது. அப்படியானால் இந்த வழக்கம் பிற்பட்டு ஏற்பட்ட அயலவர் ஆட்சியில், விசயநகர ஆட்சி அல்லது நாயக்கர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும் என்று புலனாகின்றது. இக்கல்வெட்டு சமூக நோக்கில் பரையர் அக்காலத்தே நல்ல முறையில் நடத்தப்பட்டதை தெரிவிக்கின்றது.  ஒரு மிக முக்கியமான கல்வெட்டு. 

பார்வை நூல் தென்னிந்திய கல்வெட்டுகள் மடலம் 26

கோவில் தொடர்பான தொடுப்பு https://www.dharisanam.com/temples/sri-thiripuranthakeswarar-temple-at-thiruvirkolam-koovam

seshadri sridharan

unread,
Oct 1, 2018, 10:59:45 PM10/1/18
to vall...@googlegroups.com, coral shree
இந்த பதிவை  கூகிளில் வரச்செய்யுங்கள் 

வேந்தன் அரசு

unread,
Oct 2, 2018, 7:30:20 AM10/2/18
to vallamai, coral shree
பரையன் என்ற சாதிமட்டும் இருந்துள்ளது.

செவ்., 2 அக்., 2018, முற்பகல் 8:29 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

seshadri sridharan

unread,
Oct 2, 2018, 7:44:14 AM10/2/18
to vall...@googlegroups.com
பரையன் என்று இருப்பதை தான் விளக்க முடியும். பரையன் என்று விளிக்கப்பட்டோர் கோவிலுக்குள் சென்று வந்தனர் என்பது தான்இங்கே சொல்லப்பட்டுள்ளது சாதி சொல்லப்படவில்லை. சொல்லப்பட்டவரின் உற்றார் உறவு சொந்தம் பந்தம் என்று தான் சொல்லியிருக்கிறேன் சாதி என்று நான் குறிக்க வில்லை. பரையர் பள்ளன் என்போர் உழவுக் கூலிகள். முல்லை, குறிஞ்சி, நெய்தல் மக்களில் எவரும் இன்று வரை தீண்டாமைக்கு ஆட்படவில்லை. மாறாக மருதநில மக்கள்தாம் தீண்டாமைக்கு ஆளாயினர். இது நடந்தது விசயநகர நாயக்கர் ஆட்சியில் தான்.

சேந்தன் கூத்தாடுவான். 

On Tue, Oct 2, 2018 at 5:00 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
பரையன் என்ற சாதிமட்டும் இருந்துள்ளது.

N D Logasundaram

unread,
Oct 2, 2018, 9:28:44 AM10/2/18
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan
நூ த லோ சு
மயிலை

அன்புள்ள வேந்தரசு  

பரையனில் வருவது  இடையின ரகரமா ? 
எனக்குத்தெரிந்தவரை வல்லின றகரம்  தான்  பயன்கொள்ளும் பிரிவினர் 
தனியாக ஓர் அமைப்பினை கொண்டு தாங்கள்தான் ஆண்ட பரம்பரை என 
கட்சி, மாநாடு, சொற்பொழிவுகள் செய்து வருவதாக சுவரொட்டிகள் வைத்
தமை கண்ட நினைவு 

மேலும் ஓர் செய்தி 
பாறைகளை கைக்கொள்வதில் சிறப்புத்தன்மை உடைய இனம் தமிழர் எனும்
 பொருளில்தான் அணித்த வடநாட்டு வடுகர் தமிழரை அரவாடு(அரவம் = ஒலி )
என விளி ப்பர் எனக்கேள்வி 

தொல்காப்பிய திணைபாகுபாட்டிலேயே தனி தனியான பறை குறிக்கப்படுவன 
நான்கே அறிவீர். 

8 + 10 +18 எனும் பழம் தமிழ் நூல்களில் (சங்கம்) 127 இடங்களில் பறை எனும் சொல் 
பயனில் உள்ளன அதனில்நூல்வரிகள்  பலவிதமாக பாறைகள் பயன் கொல்வதைப்பேசும் 

நந்திக்கலம்பகம் எனும் பிற்கால பல்லவமன்னன் நந்திவர்மன் (2) மேல் பா டப்பட்ட
நூலில் அவனுக்கு உரிய பறை கடுவாய் எனக்குறிக்கப்படுவதை அதனை மதுரைத்
திட்டத்திற்காக  உள்ளீடு செய்யும் போ து அறிந்தேன்
 (***) இந்த  நந்திவர்மன் தமிழ்நாட்டில் பிறக்காத காம்போச நாட்டு அரசுக்கட்டிலில்
இருந்த பல்லவ மன்னர் வழி வந்தவன் எனபது காண்க  https://en.wikipedia.org/wiki/Nandivarman_II

மேலும் 
தேவார பாடல் பெற்ற தலங்களில் கடுவாய்க்கரை புத்தூர் என ஒர் தலம் அங்கு 
பயன்கொள்வது கடுவாய் என்னும் பறை இதனில் கரை என்பது ஆற்றின்கரை
அல்ல கரைதல் எனும் வினைச் சொல் பயன் எனபது டன் வட சென்னையில் உள்ள 
திருஒற்றியூர் ஆண்டவனுக்கு படம்பக்கநாதர் எனும் பெயர் அங்கு பயனில் உள்ள
படம்பாக்கம் எனும் பறை வழிதான் என்பதை ஞானசம்பந்தர்(2.39.7) மற்றும்
சுந்தரர்தேவாரம் (7.2.6) "படம்பாக்கம்  கொட்டும் ஒற்றியூர் " என்பதால் காட்டும்
ஓர் கருத்து(மடல்) காட்டப்பட்டுள்ளது 
அதான்று 
சங்க நூல்களில் 4 இடங்களில் குறிக்கப்படும் அசுணமா எனும் மலை விடர் வாழ் விலங்கு
பறை தொடர்புடன் பேசப்படும் கருத்து ஆய்தலுக்குரியதே  
 ------------------------------------------------------------------------

On Tue, Oct 2, 2018 at 5:00 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

N D Logasundaram

unread,
Oct 2, 2018, 9:36:49 AM10/2/18
to thamizayam, vallamai, mintamil, தமிழ் மன்றம், SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan
நூ த லோ சு
மயிலை
படம்பக்கம் எனும் சொல் தட்டச்சுப்பிழையாக படமபா க்கம் என உள்ளதை மன்னிக்க

N D Logasundaram

unread,
Oct 2, 2018, 9:47:59 AM10/2/18
to vallamai
நூ த லோ சு
மயிலை
அன்புள்ள சேசா த்திரி அந்தச்சொல் பரை யன் அல்ல அரையன் என்பதுதான் எனக்கட்டப்பட்டுள்ளதே 
மேலும் நீங்கள் நன்றே அறிவீர் கல் வெட்டுக்களில் நூற்றுக்கணக்கான எழுத்துப்பிழைகள் வருவதை நன்றே அறிவீர்.

பரம் பரை எனபதில் காணும் பரை தமிழே அல்ல என நினைக்கின்றேன் பரம்பரா (param para)  வடசொல் 

பரை தல் எனும் வினை மலையாளத்தில்தான் (பரா )_  சொல்லுதல் எனவரும் அதன் வழி பரை யன் என்றாலும் 
அரசன் முன் கட்டியம் கூறும் பணிசெய்வோரைக்குறிக்கும் 


வேந்தன் அரசு

unread,
Oct 3, 2018, 3:24:32 AM10/3/18
to vallamai, மின்தமிழ், தமிழ் மன்றம், தமிழாயம், M.A.Siva Kumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan
கட்டுரையில் பரையன் என உள்ளதால் நானும் அதையே.

செவ்., 2 அக்., 2018, பிற்பகல் 6:58 அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

seshadri sridharan

unread,
Oct 6, 2018, 4:06:53 AM10/6/18
to vall...@googlegroups.com
பரையன் மட்டும் அல்ல. இதே கட்டுரையில் பள்ளன் என்ற இன்னொரு இழிவுபடுத்தப்பட்ட சாதி முன்னோன் ஒருவன் குறிக்கப்படுகிறான். அதை  பற்றி உங்கள் கருத்து என்ன?   எனது பிள்ளைப் பருவத்தில் வெளியே விளையாடிவிட்டு மேனியெல்லாம் மண்ணும் தூசியும் ஒட்டியிருக்க வீடு திரும்பினாள் என்னைவீ ட்டுப்  பெரியோர் "பாரேன், பள்ளி பறையன் கெட்டான் இவனிடம். அந்த அளவு மோசமாக இருக்கிறான்" என்று ஏசுவார்கள்.   எனது கருத்து 14 ஆம் நூற்றாண்டு வரை  தமிழக கோவில்களில் தீண்டாமை இல்லை என்பதே அன்றி பறையர்கள் அரச குடியினர் என்ற கருத்தை நான் ஆதரிக்கவும் இல்லை அந்த கருத்திற்கு போகவும் இல்லை. ஏனென்றால் தமிழகத்தை ஆண்ட அரசர் பெரும்பாலார் ஆரியர்களே. 

இப்படிப்பட்ட நிலையில்  பிராமணர்கள் தாம் தீண்டாமையை தமிழகத்தில் உருவாக்கினார், புகுத்தினர் என்ற திராவிட இயக்க பொய்க்  கருத்திற்கு எதிர்வினையாகவே இந்த கட்டுரையில் தேடிப்பிடித்து இரண்டு குழு மக்கள் கோவிலில் நுழைந்ததை சான்றுடன் வெளியிட்டேன். அம்பேதுகர் மனு ஸ்மிருதியில் வெட்டியான் பற்றிய தீண்டாமைக் குறிப்பை, எல்லா தீண்டத்தகாத சாதி மக்களையும் குறிப்பதாக தவறாக  விளக்கம் அளித்தார். உண்மையில் தீண்டத்தகாதோர் உருவானது நிலப்பபண்ணைகளில் தான். அக்காலத்தே நிலைப்பண்ணைகள் அரச குடும்பத்தவராகவே இருந்தனர். பழி பிராமணர்  பக்கம் பாவம்  பண்ணையார்  பக்கம். பல்லவ குடும்பத்தார் இன்று ரெட்டிகளாகவும் துளுவ வேளாளர்களாகவும் உயர்குடி வன்னியராகவும் உள்ளனர். பண்ணைக் கூலிகள் நாயக்கர் ஆட்சியில் தீண்டத்தகாதோர் ஆனதற்கு  வட தமிழகத்தில் இவர்களே பொறுப்பு.


நான் எங்கோ  இதே போல் பரையன் என்று குறிப்பு வரும்  கல்வெட்டை வைத்திருந்தேன் சட்டென்று கிடைக்கவில்லை. கிழே பிற தலங்களில் ஒரு பார்வை.



திருவிற்கோலம் கோவிலில் ஒரு பறையன் சந்திவிளக்கு ஏற்றியது போல இன்னொரு கோவிலில் ஒரு பறையன் ஏற்றிய சந்தி விளக்கு 

image.png



image.png



image.png

image.png


On Tue, Oct 2, 2018 at 5:00 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

seshadri sridharan

unread,
Oct 12, 2018, 12:06:50 AM10/12/18
to seshadri sridharan, vall...@googlegroups.com

வேளான், தேவேந்திப்பரையன், பரையன் தொடர்பு என்ன?

தென்னிந்திய கல்வெட்டுகள் மடலம் 8 பக்கம் 87/88 AR No 178 இல் இடம் பெறும் காளையார் கோவில் காளீசுவரர் கோவில் சௌந்தர்ய நாயகி சன்னதி மேற்குசுவர் 47 வரி கல்வெட்டுப் பதிவு. சுந்தர பாண்டியனின் 10 ஆம் ஆண்டு கல்வெட்டு.கீழே முழுகல்வ்டு படமும் இணைப்பில்  


40. றம் மற்றும் எ(க்)குற்றமுங் குற்றமன்றியே விற்று விலைப் பிரமாணம் பண்ணிக்கு

41. டுத்தேன் ஆதிசண்டேசுர நாயனார் தேவகன்மிகளும் மாள(வ) தேவேந்திரப்(ப)

42. ரையனேன் இப்படிக்கு மாளவதேவேந்திரப் பரையன் தற்குறிமாட்டா(ன்)

43. மையும் இட்டு நானுமறிவேன் சக்கரவத்தி கா(ளை)யர் எழுத்து இப்படி

44. க்குச் சக்கரவத்திமல்லனான அஞ்சாத(க)ங்கராயனெழுத்து கா(ண)வினியகங்

45. கன் தற்குறிமாட்டெறிந்தேனும் அஞ்சாத (க)ங்கராயனெழுத்து இப்படி

46. க்கு இவர்கள் சொல்ல இ(வ்)விலைபிரமாணம் எழுதினேன் _ _ _ _ _

47. மங்கல நாட்டு வேளா னெழுத்து.

வேளான் என்ற பட்டம் ராஜேந்திரச்சோழன் காலத்தில் ஆட்சியில் இருந்த மன்னர், அரையர் ஆகியோரின் வழிவந்த அரச குடும்பத்தவர் ஏற்றுக் கொண்ட பட்டம்.

கல்வெட்டில் இடம்பெறும் மாளவ தேவேந்திரப்பரையன் மூன்றாம் அதிகார அரையன் நிலையில் இருந்தவர் எனத் தெரிகின்றது. அப்படியானால் தேவேந்திரர் மற்றும் பரையர் தொடர்பு என்ன?

devendra parayar 1.jpg           devendra parayar 2.jpg


On Sun, Sep 30, 2018 at 6:35 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன் 


மனிதரை மனிதர் விலக்கி வைக்கும் தீண்டாமை இழிவு தமிழ் வேந்தர் ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழக கோவில்களில், தமிழகத்தில் வழக்கில் இல்லை என்று காட்ட ஒரு கல்வெட்டைத் தன்னகத்தே வைத்து வா என்று விளக்கின்றது கூவமான திருவிற்கோலம்.

திருவிற்கோலம் தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் திருவிற்கோலம் என்ற பெயரில் தான் இருந்தது. பின்னாளில் அங்கே கூவம் ஏரி கட்டப்பட்டதும் திருவிற்கோலம் என்ற பெயர் அருகிய வழக்காகி கூவம் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. திருவிற்கோலம் பேரம்பாக்கம் பூந்தன்மல்லி வழியில் பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருஇலம்பையன்கோட்டூர், சிவபுரம், நரசிங்கபுரம் ஆகிய கூவ ஆற்று சைவ, வைணவ தளங்கள்  3 – 4 கி.மீ. இடைவெளியில் உள்ளன. இக்கோவில் நல்ல முறையில் பேணப்படுகின்றது. இக்கோவிலில் சற்றொப்ப முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு SII XXVI / தென்னிந்திய கல்வெட்டுகள் 26 இல் அச்சாகி வெளிவந்துள்ளன.

                                                       

seshadri sridharan

unread,
Oct 12, 2018, 10:41:33 PM10/12/18
to vall...@googlegroups.com

என்ன ஐயாமாரே! உங்களிடமிருந்து எந்த விடையும் காணோம்.

பண்டு ற-ர, ந-ண, ல-ள தவறுதலாக ஒன்றிற்க்கு ஒன்றை மாற்றி இலக்கண பிழையோடு எழுதியே வந்துள்ளனர்.

நான் திசைக்கு ஒன்றாக வடக்கே தொண்டை மண்டலத்தில் திருவிற்கோலக் கல்வெட்டு, மேற்கே கொங்கில் ஒரு கல்வெட்டு, தெற்கே காளையார் கோவில் கல்வெட்டு எனத் தந்தது தமிழகம் முழுவதும் பரவலாக கோயில்களில் தீண்டாமை இல்லை என காட்டத் தான். இதில் பிராமணர் மீது எந்த பாவமும் இல்லை! இல்லை!! பழி தான் திராவிடத்தால் போடப்பட்டுள்ளது.

Reply all
Reply to author
Forward
0 new messages