எது சரி.. எது பிழை.. ஏன் - விளக்கம் தாருங்களேன்.

5,228 views
Skip to first unread message

Kaviri Maindhan

unread,
Aug 31, 2014, 12:37:56 AM8/31/14
to vallamai
அன்பர்களே.. நண்பர்களே..

அன்னைத் தமிழில் உள்ள அழகும் நயமும் வேறு எந்த மொழியிலும் இருக்குமோ நானறியேன்.

கண்ணையும் கருத்தையும் உறுத்தும் வகையில் சில பயன்பாடுகள் எழுத்துப் பிழையாய் மனதில் பதிந்துள்ளன.  

அறிவுசார் வல்லமையின் மொழியாளர்கள் இது போன்ற ஐயங்களை தீர்த்துவைப்பார் என்கிற நம்பிக்கையில் இந்த வினாக்கள் இங்கே பதிவு...


என்னைப் பொறுத்தவரை    

என்னைப் பொருத்தவரை   -  இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???


மெல்ல மெல்ல நகர்ந்தாள் ...


மெள்ள மெள்ள நகர்ந்தாள்  - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???


வாழ்த்துகள்...

வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???


பாராட்டுக்கள் 

பாராட்டுகள்   -  இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???



ஐயம் நீக்க உதவுங்கள்...

அன்புடன் 

காவிரிமைந்தன் 


Theetharappan R

unread,
Aug 31, 2014, 1:51:37 AM8/31/14
to vall...@googlegroups.com

என்னைப் பொருத்தவரை என்பதே சரி  அது போல மெல்ல மெல்ல நகர்ந்தாள் என்பதே சரி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Aug 31, 2014, 10:32:38 AM8/31/14
to vallamai



31 ஆகஸ்ட், 2014 12:37 முற்பகல் அன்று, Kaviri Maindhan <kavir...@gmail.com> எழுதியது:

என்னைப் பொறுத்தவரை    

என்னைப் பொருத்தவரை   -  இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???


என்னைப் பொருத்தவரை சரி
 

மெல்ல மெல்ல நகர்ந்தாள் ...


மெள்ள மெள்ள நகர்ந்தாள்  - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???

மெள்ள  மெள்ளதான் சரி
மெள்ள = சுலோ, மெல்ல= மாஸ்டிகேட், ச்சூ, மென்மை

தான் நோக்கி மெல்ல நகும், மென்மையாக சிரித்தாள்
தமிழ் இனி மெல்ல சாகும் + பாரதி செய்த தவறு. (கொஞ்சம் சாகும் என்றால் சரி)

 


வாழ்த்துகள்...

வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???


பாராட்டுக்கள் 

பாராட்டுகள்   -  இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???



வாழ்த்துகள், பாராட்டுகள்தான் சரி

 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 31, 2014, 10:52:24 AM8/31/14
to vall...@googlegroups.com


On Sunday, August 31, 2014 7:32:38 AM UTC-7, வேந்தன் அரசு wrote:



31 ஆகஸ்ட், 2014 12:37 முற்பகல் அன்று, Kaviri Maindhan <kavir...@gmail.com> எழுதியது:
என்னைப் பொறுத்தவரை    

என்னைப் பொருத்தவரை   -  இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???


என்னைப் பொருத்தவரை சரி
 

மெல்ல மெல்ல நகர்ந்தாள் ...


மெள்ள மெள்ள நகர்ந்தாள்  - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???

மெள்ள  மெள்ளதான் சரி
மெள்ள = சுலோ, மெல்ல= மாஸ்டிகேட், ச்சூ, மென்மை

இரண்டுமே சரிதான். மெல்ல என்பதுதான் சரி. அது மெள்ள என்று பேச்சில் வருதலும் உண்டு.

மெள்ள எழுந்தது அரி என்ற பேரரவம் - திவ்வியப் பிரபந்தம்.

மெல்ல > மெள்ள - இரண்டும் சரியே.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Sep 1, 2014, 6:23:57 AM9/1/14
to vallamai



31 ஆகஸ்ட், 2014 10:52 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Sunday, August 31, 2014 7:32:38 AM UTC-7, வேந்தன் அரசு wrote:



31 ஆகஸ்ட், 2014 12:37 முற்பகல் அன்று, Kaviri Maindhan <kavir...@gmail.com> எழுதியது:

என்னைப் பொறுத்தவரை    

என்னைப் பொருத்தவரை   -  இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???


என்னைப் பொருத்தவரை சரி
 

மெல்ல மெல்ல நகர்ந்தாள் ...


மெள்ள மெள்ள நகர்ந்தாள்  - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???

மெள்ள  மெள்ளதான் சரி
மெள்ள = சுலோ, மெல்ல= மாஸ்டிகேட், ச்சூ, மென்மை

இரண்டுமே சரிதான். மெல்ல என்பதுதான் சரி. அது மெள்ள என்று பேச்சில் வருதலும் உண்டு.

சங்க இலக்கியங்களில் சுலோ எனும் பொருளில் மெல்ல எனும் சொல்பயன்பாட்டை நான் கண்டது இல்லை. இனி கவனிக்கணும். ஆனால் பைய, பைப்பய எனும் சொற்கள்தான் பயன்படுத்தப்பட்டன.

அவள் மெல்ல சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்

மென்மையான புன் சிரி. முகை அவிழ்வதுபோல் காலை தொடங்கி மதியம் மலரவது அல்ல.


seshadri sridharan

unread,
Sep 1, 2014, 10:37:07 AM9/1/14
to vall...@googlegroups.com
மெல்ல என்பதே சரி ஆனால் மக்கள் வழக்கில் மொள்ள! மொள்ளமா நட என்ற வழக்கை பார்க்குங்கால் இது மெல் என்பதன் கொச்சைத் திரிபு என்றே படுகிறது.

சேசாத்திரி   


--

N. Ganesan

unread,
Sep 1, 2014, 11:18:03 AM9/1/14
to vall...@googlegroups.com, mintamil
On Monday, September 1, 2014 3:23:57 AM UTC-7, வேந்தன் அரசு wrote:

NG> மெல்ல என்பதுதான் சரி. அது மெள்ள என்று பேச்சில் வருதலும் உண்டு.

சங்க இலக்கியங்களில் சுலோ எனும் பொருளில் மெல்ல எனும் சொல்பயன்பாட்டை நான் கண்டது இல்லை. இனி கவனிக்கணும். ஆனால் பைய, பைப்பய எனும் சொற்கள்தான் பயன்படுத்தப்பட்டன.


பைய- என்பது color-based ஆகுபெயர். பை - பச்சை. பைய- வினைச்சொல், பையிர் என்பது தொல்த்ராவிட காலத்தில் ப(ய்)யிர் > பயிர்.
பையல். கொங்குநாட்டில், ஆக்கள் கருவுறல் பயிராதல் என்போம். பைய-, பயிர், பையல் - color based semiotics பற்றி பலமுறை எழுதியுளேன்.

மெல்ல என்பதுதான் சரி. அது மெள்ள என்று பேச்சில் வருதலும் உண்டு.
திமிரம் என்ற சொல் வேளாண்சொல்லான காளை (cf. காங்கயம் காளை) திமில்.
அதுபோல, மெதுவாக ஆக்கள் படுத்துக்கொண்டு அசைபோடுதல் மெல்லுதல் என்று
வழங்கியிருக்கும். அதிலிருந்து மெல்ல என்றால் slow. 

மெல்- எனும் வேர்கொண்ட சொற்கள் - சங்கத்தில். மெள்- என்று இப்பொருளில் காணோம்.

மெல்²-(லு)-தல் mel-

3 v. tr. [K. mellu.] 1. To chew, as betel; to masticate; வாயாற் குதட்டுதல். மெல்லிலைப் பண்டியும் (சீவக. 62). 2. To chide; கடித்தல். இரவும் பகலும் என்னை மென்று கொண்டிருக்கிறான்.

N. Ganesan

N. Ganesan

unread,
Sep 1, 2014, 11:52:23 AM9/1/14
to vall...@googlegroups.com, mintamil


On Aug 31, 2014 10:07 AM, "Kaviri Maindhan" <kavir...@gmail.com> wrote:
அன்பர்களே.. நண்பர்களே..

அன்னைத் தமிழில் உள்ள அழகும் நயமும் வேறு எந்த மொழியிலும் இருக்குமோ நானறியேன்.
கண்ணையும் கருத்தையும் உறுத்தும் வகையில் சில பயன்பாடுகள் எழுத்துப் பிழையாய் மனதில் பதிந்துள்ளன.  
அறிவுசார் வல்லமையின் மொழியாளர்கள் இது போன்ற ஐயங்களை தீர்த்துவைப்பார் என்கிற நம்பிக்கையில்
இந்த வினாக்கள் இங்கே பதிவு...


என்னைப் பொறுத்தவரை    

என்னைப் பொருத்தவரை   -  இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???


On Saturday, August 30, 2014 10:51:37 PM UTC-7, THEETHARAPPAN R wrote:
என்னைப் பொருத்தவரை என்பதே சரி  அது போல மெல்ல மெல்ல நகர்ந்தாள் என்பதே சரி

தீத்தாரப்பன் அவர்கள் சொல்வது சரி.

பொறுத்தல் - பொறுமை - ‘பொறுத்தார் பூமியாள்வார்’ 
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ - தமிழ்வேதம். 

ஆனால் பொருத்தல் = பொருத்துதல். ஒருவனது உள்ளத்தில் பொருந்தியதைச் சொலும்போழ் ‘பொருத்தவரை’ என்பதே சரியானது.

>என்னைப் பொறுத்தவரை (அ) என்னைப் பொருத்தவரை   -  இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???

என்னைப் பொறுத்தவரை - பிழை. 

என்னைப் பொருத்தவரை - சரி

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 1, 2014, 12:01:18 PM9/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Karanthai Jayakumar, மு இளங்கோவன், rathina pugazhendi, guna thamizh
மெல்ல- = ஸ்லோ. பையல், திமிரம் (வடமொழியில் இருட்டு. காங்கயம் காளை பார்த்தால் இச்சொல் எங்கிருந்து வந்தது
சம்ஸ்கிருதத்திற்கு என வெளிச்சமாகும்) போல இதுவும் ஒரு வேளாண்டொழிற்சொல்.
மெல்லுதல் = cud chewing.

மெல்- என்ற சொற்களை சங்கத்தமிழினில் ஆராயத் தொடுப்புகள் (கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றுவித்த
பள்ளியகரம் நீ. கந்தசாமிப் பிள்ளையவர்கள் செய்தது.)




Tthamizth Tthenee

unread,
Sep 1, 2014, 12:05:29 PM9/1/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Karanthai Jayakumar, மு இளங்கோவன், rathina pugazhendi, guna thamizh
உணவை  மென்று  உண்ணுங்கள் என்பார்கள்

மென்று என்பதை  மெல்லு , அப்படியே  சாப்பிடாதே என்பர்

மெல்லுவது   மென்மை 
கடித்து தின்பது   வன்மை

மெள்ளுவது   என்பதே தவறு

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





--

வேந்தன் அரசு

unread,
Sep 1, 2014, 4:34:49 PM9/1/14
to vallamai, மின்தமிழ், Karanthai Jayakumar, மு இளங்கோவன், rathina pugazhendi, guna thamizh
வீங்குபொறி  
    
நூழை நுழையும் பொழுதின் தாழாது  
5
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென 
    
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்துதன் 
    இந்த நற்றிணை பாடலில் மென்மை சரியான பொருளாக தோணுது






கல்லளைப் பள்ளி வதியும் நாடன் 



செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் 
5
கல்பொரு சிறுநுரை போல 
    
மெல்ல மெல்ல வில்லா குதுமே

இந்த குறுந்தொகை பாடலில் பைய பைய சரியான பொருளாக தோணுது.

தெலுகில் மெல்லிக என்றும் மலையாளத்தில்  மெல்லெ மெல்லே என்றும் கன்னடத்தில் ನಿಧಾನವಾಗಿ (மெது??)  என்

இந்தியில் தீரே தீரே धीरे धीरे.

இந்தியும் ஒரு திராவிடமொழிதானோ?



ஆக மெல்ல மெல்ல என் இரட்டி வரும் போது பைய,. ஒற்றையாக வரும்போது மென்மை.

தேமொழி

unread,
Sep 1, 2014, 5:28:31 PM9/1/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

மெள்ள - மெதுவாக, மந்தமாக
மெல்ல - மென்மையாக

பொருத்து = பொருந்தச்செய்
பொறுத்து = தாங்கி, ஏற்று

பயன்பாடு:
பொருத்து எனும் சொல், ஒன்று சேர், இணைப்புச் செய் என்று பொருள்தருகிற கட்டளைச் சொல். பொறுத்து எனில் தாங்கி, ஏற்று என்று பொருள் தருகிற எச்ச வினைச் சொல் (வினையெச்சம்). இச்சொல் முற்றுப் பெறவில்லை. வேறொரு சொல் கொண்டு முடிக்க வேண்டும் .

- நீரின் அளவைப் பொறுத்து தாமரை உயரும்.

- என்னைப் பொறுத்தவரையில் என்றால் நான் கொண்டுள்ள கருத்தைக் கொண்டு பார்க்கும்போது எனும் பொருள் தருவதைக் காணலாம்.

------

எனக்கு ஒரு சொல்லின் சரியான பொருளைப் பற்றிய ஐயம் வரும்பொழுது http://ta.wiktionary.org/ பயன்படுத்துவேன்.

அதில் கொடுக்கும் சொற்களை வாக்கியங்களில் பயன்படுத்திக் காட்டும் பொழுது பொருள் நன்கு விளங்கும்.. எந்த இடத்தில் எது சரி என்பது புரியும்.

அது போலவே ...

எழுத்துப் பிழை பற்றியச் சந்தேகம் வரும் பொழுது நான் பயன் படுத்தும் ஒரு குறுக்கு வழி கூகுளில் அந்த வார்த்தையினை இரு வகையாகவும் தட்டச்சி தேடுவது.

எது அதிக தேடல் முடிவுகளைத் தருகிறதோ அதன் வழி செல்வேன்.


வல்லல் = About 188 results
வள்ளல் = About 134,000 results
அந்த தேடல் முடிவுகளில் கிடைக்கும் வாக்கிய அமைப்பும்சரி பார்க்க  உதவும்.

பெரும்பாலும் தட்டச்சும் பொழுதே அதிக முறை பயன்படுத்தும் சரியான சொற்களை கூகுள் காட்டி உதவியும் செய்யும்.


..... தேமொழி

N. Ganesan

unread,
Sep 2, 2014, 12:23:27 AM9/2/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
ஒற்றையாக வரும்போதும் ‘பைய’ (slowly) பொருளும் உண்டு. சென்னை அகராதி:
மெல்ல mella

adv. < மென்-மை. [T. mell- agā, K. mellane.] Softly; slowly; gently; quietly; மெதுவாக. தானோக்கி மெல்ல நகும் (குறள், 1094).

மெல்- இந்த வேர் கால்நடை வேளாண்மையிலிருந்து த்ராவிட பாஷைகள் பெற்றது:
DEDR 5077 Ta. mel (melv- meṉṟ-), melku (melki-)

5077 Ta. mel (melv- meṉṟ-), melku (melki-) to chew, masticate; chide. Ma. melluka to chew, champ. Ko. mek cud. To. meḷk id., mouthful. Ka. mel(u), mellu, meli to chew, masticate, eat with a muttering sound, mumble, eat; melaku, meluku, melku, malaku, maluku bringing up again for rumination. Te. mekku to eat, gobble, swallow, gormandize. Ga. (S.3mekkap- to eat like a glutton. Manḍ. mreṭ- to chew. Kui mrēḍa (mrēḍi-) to chew; n. chewing; mērṛi giva to chew the cud, ruminate. Kuwi (Mah., p. 250) mreṛ- to chew (prob. for mrēḍ-); (Isr.) mērḍ- (-it-) to eat, chew (joking expression). DED(S) 4166.

நா. கணேசன்

Anna Kannan

unread,
Sep 2, 2014, 1:23:17 AM9/2/14
to Vallamai

தேமொழி சொல்வது சரி.

என்னைப் பொறுத்து, என்னைப் பொறுத்த வரை என்றே நான் எழுதுவேன்.

இது, என்னளவில், என் எல்லையில், என் சக்திக்கு உட்பட்டு, எனக்குத் தெரிந்த வரையில் ஆகிய பொருள்களைக் கொண்டுள்ளது.

மெள்ள என்பது, மெல்ல என்பதன் மரூஉ. மெல் என்பதே சரியான வேர்ச்சொல்.

N. Ganesan

unread,
Sep 2, 2014, 9:38:51 AM9/2/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
மெல்- என்பது மெல்ல என்றாகி மெள்ள என்று மருவியது.

அதே போல்தான், பொருத்தவரை பொறுத்தவரை என்றாகியுள்ளது/

(1) தமிழ் நூல்
பாவும் உரையும்
நூற்றியற்றியோன்
 
இலக்கணப் புலவன்
த.சரவணத்தமிழன்

327. நூ: சிலசொல் இறுதிர றுகரமோ(டு) உறழும்.

 

    பொ: சில சொற்களின் இறுதியில் ரகரமெய் றுகர இறுதியாய்த் திரிந்து
உறழும்.

    தாறு(தாற்றுக்கோல்) - தார் (க்குச்சி).

    ஒளிர் - ஒளிறு (ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி).  உளர் - உளறு; கிளர் (கின்றான்) - கிளறு (கின்றான்).

விளக்கும் வார்-விளக்குமார் அலம்+வரல்.
விளக்குமார்-விளக்குமாறுஅலமரல்-அலமலப்பு.

 

    இத்திரிபில் வார் என்பதே மெய்ச் சொல்லாதலை (வார் கோல்,
கூட்டுமார்) என்னும் இக்கால் வழக்காலும் அறிக.  இதனை றுகர ஈறாகவே
கருதுவதைச் செருப்பு எனத் தொடக்கி விளக்குமாறு என முடித்த காளமேகப்
பாட்டாலும், விளக்குமாற்றான் விளக்கப்படும் என்ற பரிதிமாற்கலைஞர்
(றகரம் இரட்டித்த) சதுரப்பாட்டுரையாலும் தெளிக.

    சுவல்+சுவர் (போலி)=சுவறு எனத் [ (சுவல்+து = சுவறு தவல்+து = தவறு
‘தவலருந் தொல் கேள்வி’ (நாலடி) ] திரிந்ததெனக் கொளின் சுவர்ப்
பொருள் விளங்கும்.  இதனான் சுவற்றில் என்றெழுதல் பிழையின்றாம்.
ரம்மெய் என்னாமையால் - நிரை (கூட்டம்) நிறை (நிறுத்தல்) இரண்டும்
தம்முள் நிரைய, நிறைய எனக் கலந்து நடப்பதையும், புரந்தருதல் என்பது

‘குடிபுறங்காத்தோம்பி’ போலும் தொடர்களான் புறந்தருதல் என்ற
பிழைச்சொல் வழக்கும், பொருத்தவரை என்பது - பொறுத்தவரை எனப்
பிழைபட நிற்றலும் கொள்க.

 (1) பாவாணர் பொருத்தவரை என்றே ஆள்கிறார்:
தமிழ்நடைக் கையேடு
1.3.1 துணைநூற்பட்டியலில் பொதுவாக ஆசிரியர் பெயர் அகரவரிசைக்கு எடுத்துக்
கொள்ளப்படுகிறது. ஆனால், பழைய இலக்கிய, இலக்கண நூல்களைப் பொருத்தவரை 
அவற்றின் தலைப்புகளையே அகரவரிசைக்கு எடுத்துக்கொள்வது வழக்கமாக இருக்கிறது.
இருப்பினும், ஆசிரியர் பெயரை விட்டுவிடாமல் அடைப்புக்குறிக்குள் தரும் முறையை 
இங்கே பின்பற்றியிருக்கிறோம்.

(3) பேரா. பெஞ்சமின் லெபோ, வல்லமையில் விரிவாக எழுதியிருக்கிறார்:

என்னைப் பொருத்தவரை, பொருத்தவரை என்பதே சரி.
மெல்ல என்பது மெள்ள என்றாதற்போல், பொருத்தவரை என்பதன் மரூஉ தான் பொறுத்தவரை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 2, 2014, 9:50:44 AM9/2/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Monday, September 1, 2014 2:28:31 PM UTC-7, தேமொழி wrote:

மெள்ள - மெதுவாக, மந்தமாக
மெல்ல - மென்மையாக


மெல்ல என்பதற்கு slowly, softly  இரண்டு பொருளும் உண்டு. இது மாடு chewing the cud  என்பதன் பொருளை
விரிவாக்கத்தால் தொல்தமிழர் அமைத்த வேளாண்தொழிற்சொல். மெல்ல மெள்ள என மருவும் -
பொருத்தவரை என்பது பொறுத்தவரை என்று திரிதல்போல.

மெல்+து - (மெற்ற)மெத்த (மெத்தனம், மெதுவாக).
மெல்+த்(உ)+ஐ = (மெற்றை என ஆகாமல்) மெத்தை ஆகியுள்ளது.
மெத்தை - மெத்தைவீடு (அடுக்குவீடு), மெத்தை - soft அமளி.

சிறு சிற்றே பொறு என்பது ’சித்த பொறு’ என்கிறோமே ஆனால் ’சற்றே பொறு’ உண்டு,
 அதுபோல். மெல்+து- > (1) மெத்தனம், (2) மெது (3) மெத்தை.

மெது என்பது வடமொழிக்கு ம்ருது என்றாகிவிட்டது.
நோ- என்னும் வேர் நோய், நோலுதல் (நோற்கும் நோன்பு வ்ரதம் எனப்படுகிறது.
உடலை வருத்தி வதைப்பது  வத- > வ்ரத ஆனதா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 2, 2014, 8:31:29 PM9/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Monday, September 1, 2014 1:34:51 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

ஆக மெல்ல மெல்ல என் இரட்டி வரும் போது பைய,. ஒற்றையாக வரும்போது மென்மை.

ஒற்றையாகவும் மெல்ல என்பது பைய (ஸ்லோ) என்ற பொருளில் வரும்.


(1)
சேரி சேர மெல்ல வந்துவந் 
தரிது வாய்விட் டினிய கூறி (குறுந்தொகை 298:1-2)

மெல்ல - பைய

(2)
நல்ல இனிய கூறி மெல்லக்
கொயல்தொடங் கினரே கானவர் (நற்றிணை 306:5-6)

மெல்ல - பைய

(3) இல்லை கொல்லென மெல்ல நோக்கி
நினைந்த மிருந்தன மாகநயந் தாங்கு (அகநானூறு 317:18-19)
ஆண்டை இல்லை கொல் என - அவரிருக்குமிடத்தில் இல்லையோ என, 
மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தனமாக - பைய ஆராய்ந்து சிந்தித்து இருந்தேமாக

(4) வாஅப் பாணி வயங்குதொழிற் கலிமாத் 
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க 
இடிமறந் தேமதி (அகநானூறு 134)

தார்க்குச்சியால் குத்தாமல் வேகமான குதிரைகளை,
அதன் தாள்கள் பைய நடக்கும்படி ஏவுக.

மெல்ல = பைய, மென்மையான இருபொருளும் உண்டு.

மெல்+து = (மெறு என ஆகாமல்) மெது என்றாகிறது.
மெது - பைய, மென்மையான இருபொருளும் உண்டு
(1) மெதுவாக நடத்தல் - slow walk
(2) மெது வடை - soft vadai

நா. கணேசன்

தேயும் உயிர் (கிவாஜ)

அழகிய ஓடை; மலையடிவாரத்தில் இருபுறத்திலும் உள்ள பாறைகளில் மோதும் அலைகள், மெல்ல மெல்ல ஓரங்களில் ஒதுங்கி வரும் மலர்கள், தளிர்கள், இடை இடையே அருவியே பூத்தது போன்ற சிறுசிறு நுரைத் தொகுதிகள். முதல் நாள் தான் மழை பெய்தது. அதனாற் புதுவெள்ளம் வந் திருக்கிறது. 'நுரையும் நுங்குமாக' அருவியின் புதுமைக்கோலம் விளங்குகின்றது.

ஒரு சிறு நுரை. அதன் ஜன்மஸ்தானம் எதுவோ தெரியவில்லை. கரையோரத்தில் மெல்ல மெல்ல வரும் போதே அங்கேயுள்ள சிறு கற்களின்மேல் அது மோதுகின்றது. ஒரு தடவை மோதினவுடன் அதிலிருந்து ஒரு பகுதி கரைந்துவிடுகிறது. அப்புறம் சிறிது தூரம் மெல்ல மெல்ல அருவியின் போக்கிலே கலக்கிறது. மீண்டும் கரையோரத்தில் உள்ள பாறை யில் மோதிச் சுழலுகிறது. அந்தச் சுழற்சியிலே அதன் உருவம் பின்னும் சிறுத்துவிடுகின்றது. இப்படி வரவர அது தேய்ந்து உருமாறி வருகின்றது.

என்ன வியப்பு! சிறிது நேரத்திற்கு முன்னே கண்ட அந்த நுரை எங்கே! இப்போது அதைக் காணோமே! அந்தச் சிறு நுரை அருவிக் கரையிலுள்ள கற்களில் மோதிமோதி மெல்ல மெல்லத் தேய்ந்து இப்பொழுது இல்லையாயிற்று.

* * *

ஒரு புலவன் இந்தக் காட்சியிலே உள்ளத்தை இழந்துவிடுகிறான். உலக வாழ்க்கையாகிய அருவியிலே எத்தனை உயிர்களாகிய நுரைகள் வேதனைக் கற்களில் மோதி மோதித் தேய்கின்றன! அந்த நினைவைத் தான்கண்ட காட்சியோடு அவன் பொருத்திப் பார்க்கிறான்.

புறத்தே கண்ட ஈசுவர சிருஷ்டியை உபமானமாக வைத்து அப்பெரும்புலவன் அகத்தே ஒரு ஜீவ சித்திரத்தைச் சிருஷ்டிக்கிறான்.

உயிர் ஒன்று உடல் இரண்டாக வாழ்ந்த காதலர்களில், காதலன் காதலியைச் சிலகாலம் பிரிய நேர்கிறது. அவள் பிரிவெனும் கொடுந்தீயினால் வெம்புகிறாள். முன்பு இன்ப மயமாக இருந்த உலக முழுவதும் அவளுக்கு இப்பொழுது முள்ளடர்ந்த காடாக இருக்கிறது.

அவளுடைய நிலை, மலரினும் மெல்லிய காதலின் தன்மை முதலியவற்றின் உண்மையை வெளியில் உள்ளார் எப்படி அறியக்கூடும்? அவளுடைய உயிர்த் தோழியே அறியவில்லை.

"உலகத்திலே கணவன் மனைவி யென்று இருந்தால் பிரியாமலும் வேறு ஊருக்குப் போகாமலும் இருப்பார்களா? உன்னுடைய ஆசையை அடக்கிக் கொள்ளக்கூடாதா?" என்று அவள் கேட்கிறாள்.

காதலின் சக்தியை அவள் அறிந்துகொள்ள வில்லை என்பதைத் தலைவி உணர்கின்றாள்; 'இப்படியும் வன்னெஞ்சக்காரர்கள் இருப்பார்களா? காதலை அடக்குவதாவது!' என்று எண்ணுகிறாள். காதல் உயிரோடு பிணைக்கப்பட்டதாயிற்றே: அதை விரிப்பதும், சுருக்குவதும் எப்படி? அவளுடைய நெஞ்சத்தில் பிரிவால் உண்டான துன்பத்தோடு, மனமறிந்த தோழிகூடத் தன் நிலையை அறியாமல் இப்படிச் சொல்லும் கொடுமையும் கலந்து வேதனையை மிகுவிக்கிறது.

தோழிக்குப் பதில் சொல்ல விரும்பினாள். ஆனால் அந்தக் கல்நெஞ்சக்காரியினுடைய முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கு அவள் மனம் பொருந்த வில்லை. யாரையோ பார்த்துச் சொல்லுவதுபோலச் சொல்ல ஆரம்பிக்கிறாள்:

"காதலைத் தடுத்து அடக்குவாயென்று சொல்கிறார்களே, அவர்களுக்கு அந்தக் காதலைப்பற்றி ஒன்றுமே தெரியாதோ? அவர்கள் காதலைத் தெரிந்துகொள்ள மாட்டாத அவ்வளவு வன்மை யுடையவர்களா? அவர்கள் அப்படியே இருக்கட்டும். நமக்கு அது சாத்தியமில்லை. நாம் எம்முடைய காதலரைக் காணோமானால் மிகுந்த துன்பம் பெருகிய உள்ளத்தோடு, கரையிலுள்ள கற்களில் மோதிவரும் சிறிய நுரையைப்போல மெல்ல மெல்ல இல்லையாகி விடுவோம்" என்று சொல்லுகின்றாள்.
* * * *

இவ்வாறு கவிஞனது மனத்துள் ஒரு சிறிய காட்சி சிருஷ்டிக்கப்படுகிறது. அதன் பயனாக அவன் வாயிலிருந்து ஒரு செய்யுள் எழுகின்றது:

தலைவி கூற்று

காமம் தாங்குமதி என்போர், தாம் அ•து
அறியலர் கொல்லோ? அனைமது கையர்கொல்!
யாம்எம் காதலர்க் காணோம் யின்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே.

      -குறுந்தொகை - கல்பொரு சிறு நுரையார் பாட்டு.

[தாங்குமதி - தடுப்பாயாக. மதுகை - வன்மை. துனி - துன்பம். பொருதல் - மோதுதல்.]
* * * *
இந்த அரிய கவியைக் கவிஞன் புலவர் குழாத்திலே மிதக்கவிடுகிறான். புலவர் நெஞ்சை இக்கவி அள்ளுகின்றது. அதுமுதல் இக்கவியை இயற்றின கவிஞனை அவர்கள் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவனைக் காணும்போதெல்லாம் அவர்கள் தம்முடைய அகத்தே, கல்பொரு சிறுநுரையை அல்லவா காணுகிறார்கள்? ஆதலால் அக்கவிஞனையும் "கல் பொரு சிறு நுரையார்" என்றே வழங்கத் தலைப் பட்டனர்.

------------------- 

வேந்தன் அரசு

unread,
Sep 2, 2014, 8:43:20 PM9/2/14
to vallamai, மின்தமிழ்
மெல்ல நோக்கி. 
மெல்ல கொயல்

இவ்விடங்களில் சாஃப்டாக என்பதே சாலப்பொருத்தம். 

மென்மையாக அரிதல் = மெல்ல கொயல்
சுலோவா பார்க்கிறது எப்படி?


2 செப்டம்பர், 2014 8:31 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 2, 2014, 10:59:01 PM9/2/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, September 2, 2014 5:43:20 PM UTC-7, வேந்தன் அரசு wrote:
மெல்ல நோக்கி. 

இல்லை கொல்லென மெல்ல நோக்கி
நினைந்த மிருந்தன மாகநயந் தாங்கு (அகநானூறு 317:18-19)

ஆண்டை இல்லை கொல் என - அவரிருக்குமிடத்தில் இல்லையோ என, 
மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தனமாக - பைய (spending time contemplating about him - this takes time & she
spends it slowly) ஆராய்ந்து சிந்தித்து இருந்தேமாக

 

மெல்ல கொயல்

இவ்விடங்களில் சாஃப்டாக என்பதே சாலப்பொருத்தம். 

மென்மையாக அரிதல் = மெல்ல கொயல்

விரைவாக இல்லாமல், மெதுவாகக் கொய்யத் தொடங்கினர்.
பணியின் ஆரம்பத்தில் விசை இருக்காது.


தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ-
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல்  5
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ- தீம் சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள்  10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?  

கிளிகடி கருவி பொருந்திய கையையுடைய கொடிச்சியே! நீ மனையகம் புகுவாயாக! என்று நல்ல இனிய மொழிகளை மொழிந்து; கானவர் மெல்லத் தினைக் கதிரைக் கொய்யத் தொடங்கினர்; ஆதலின் எம் தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்துகொண்டு போமாறு மெல்ல மெல்ல வருகின்ற சிறிய கிளிகளை வெருட்டுதல் இனி எப்படியாகும்?; அங்ஙனம் வளைந்த கதிர்களாகிய குலவிய பொறையைக் கொய்தொழித்த கொம்பாகிய தலையுடைய தினைத்தாள்கள்தாம் திருவிழாச் செய்தொழிந்த அகன்ற அவ் விழாக்களம் போலப் பொலிவழிந்து எம்மை வருத்தாநிற்கையில் இவ் வண்ணம் கொல்லை அழிந்த தன்மையையும்; இனிய சொல்லும் நெருங்கிய தொகுதியான ஒளி பொருந்திய வளையுமுடைய இளமையுற்ற எங்கள் தலைமகள்; முன்பு சிறிய தினைப் புனத்துப் பெரிய மேற்கூரை உடைய கட்டுப் பரணிலே நின்ற நிலைமையையும்; பார்க்கும் பொருட்டுக் காலையிலே தலைமகன் எப்படி வருதல் இயையுமோ? இயையாதே!

வேந்தன் அரசு

unread,
Sep 3, 2014, 5:58:16 AM9/3/14
to vallamai, மின்தமிழ்
ஆனால் எதிர்ச்சொல்லான வல்லே, வல்லை என்பன சீக்ரம், விரைந்து  எனும் பொருள் தருவதால் நீங்க சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.


2 செப்டம்பர், 2014 10:59 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 3, 2014, 8:18:03 AM9/3/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Wednesday, September 3, 2014 2:58:16 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
ஆனால் எதிர்ச்சொல்லான வல்லே, வல்லை என்பன சீக்ரம், விரைந்து  எனும் பொருள் தருவதால் நீங்க சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.


ஒரு தொழிலை ஆரம்பிக்கறபோது ஸ்லோ ஆகத்தான் இருக்கும். ட்ரெட்மில்-லெ நடைபயில்கிறது மாதிரி.

மாமரம் நிறைந்த மாந்தோப்பு. கனிந்துள்ளன மரங்கள். கனிகளை எப்படி ஸாப்டாக் கொய்யறது?
ஆட்கள் மாங்காய்களைக் கொய்ய தொடங்கும்போது பாருங்க. Pace will be slow. & then as time goes on in the work day,
pace increases. 

N. Ganesan

unread,
Sep 3, 2014, 8:33:37 AM9/3/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Wednesday, September 3, 2014 2:58:16 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
ஆனால் எதிர்ச்சொல்லான வல்லே, வல்லை என்பன சீக்ரம், விரைந்து  எனும் பொருள் தருவதால் நீங்க சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.

மெல்ல- ஸ்லோ, ஸாப்ட் என்ற இருபொருளும் வருவதற்குக் காரணம் கால்நடை வேளாண்டொழில்.
பார்த்த தமிழர் ஸ்லோ, ஸாப்ட் வார்த்தைக்கு மெல்லுதலை எடுத்து சொற்பொருளை விரிவாக்கியுளர்.

மெல்லுதல் = chewing the cud slowly and softly by cattle > மெல்ல = soft & slow.

NG
 
Reply all
Reply to author
Forward
0 new messages