தெரிந்து கொள்வோம்

46 views
Skip to first unread message

kanmani tamil

unread,
May 28, 2026, 10:24:30 PMMay 28
to vallamai

/// நாம் நினைப்பதுபோல் இந்திய நாட்டின் ராணுவப் பணி பிறநாட்டின் ராணுவத்தினரைப் போன்று எளிதானதல்ல... உலகின் வலிமையான ராணுவங்களான அமெரிக்கா, சீனா, ரஷ்யாவே அஞ்சும் சீதோஷ்ண நிலையும், போரினால் ஏற்பட்ட சேதத்தை விட இயற்கை சீதோஷ்ண மாறுபாடுகளால் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்புகள் அதிகம்.... கரணம் தப்பினால் மரணம்... என்ற நிலையில் உலகின் மிகப் பெரிய மலைச் சிகரங்களின் மேல் உள்ள போர்க்களத்தையும் அதற்கான பயிற்சியையும் கொண்ட திறமையான பலம் வாய்ந்த உலகின் மிகப்பெரிய ராணுவம் நமது இந்திய ராணுவம்தான்....

 ஐ.நா.சபையே பல போர்களில் இந்திய ராணுவத்தின் உதவியை நாட... முன்னிலையில் நின்று ஐ.நா. படைகள் வெற்றி பெற உதவியிருக்கிறது இந்திய ராணுவம்...
     
அந்நிய சக்திகளின் காசுக்காக, பதவி வெறிக்காக இங்குள்ள அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், மாவோயிச நக்கல்கள், தீவிரவாதிகளின் உதவியுடன் செய்யும் தீவிர விஷமமான பிரச்சாரத்தால் மக்களில் சிலர் ராணுவ வேலையை எண்ணற்ற வேலைகளில் அதுவும் ஒரு சாதாரண வேலை என்பது போல நினைக்கின்றனர்.... நமது ராணுவத்தினர் மிக உயரமான பனிப்பிரதேசங்களுக்குப் (Hi Altitude) போய் வருவது மிக சுலபமான வேலை போல் நினைக்கிறார்கள்... இந்தப் பகுதிகள் ஊட்டி, கொடைக்கானல், குலுமணாலி, சிம்லா போல் அல்ல..... 

 இரண்டு நிமிடம் படியுங்கள்...

அங்குள்ள தட்பவெட்பநிலை மைனஸ் 40 (Minus 40 degree) வரை சென்றுவிடும்... அங்கு நினைக்கும் நேரத்தில் சென்று வரமுடியாது. அதுபோல் அங்கிருந்து நினைத்த நேரத்தில் விடுமுறை எடுத்து ஊருக்கெல்லாம் வரமுடியாது. பனிப் பிரதேசங்களுக்கு போகும் முன்னர் 90 நாட்கள் அடிவாரத்திலிருந்து நமது உடல்நிலையை அந்த தட்பவெட்பத்திற்குப் பழக்குவார்கள் (acclimatization). அங்கே ஏற்படும் உடலுபாதைகளை எப்படி சமாளிப்பது, வீரர்கள் தங்களது உடல்நிலையை எப்படி பாதுகாப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். மருத்துவத் தகுதி பெற்றபின் மிக உயரிய பனிப்பிரதேசங்களுக்கு அனுப்புவார்கள். அங்கே அவர்கள் 90 நாட்கள் மட்டுமே பணிபுரிவார்கள். நாம் அங்கே சென்றுவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் ?

சூரிய வெளிச்சம் 10மணிக்குமேல் வரும். 
3 மணிக்கு இருட்டிவிடும்... நமக்கு வேண்டிய அனைத்து சத்தான விலையுர்ந்த உணவுப்பொருட்கள் இருக்கும்... ஆனால் சாப்பிட முடியாது. குளிரில் பசியெடுக்காது. மதியம் மட்டும் வேண்டா வெறுப்பாக உயிர் வாழ்வதற்காக சாப்பிடுவார்கள்... மிக உயரம் என்பதால் காற்றின் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கும். மூச்சுத் திணறல் ஏற்படும்.. தினமும் டெண்டை சுற்றி குழி தோண்டி நிலக்கரியை போட்டு எரிப்பார்கள்... இருந்தும் குளிர் அடங்காது. தீயெரியும் இடத்தில வாளிகளில் பனியை போட்டு தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும்.. அதை பாட்டில்களில் நிறைத்து; முன்பகுதியில் இரண்டு பாட்டில், பின் பகுதியில் இரண்டு பாட்டில் கட்டிக் கொண்டு; படுக்க வேண்டும். இதன் சூடு பத்து நிமிடம் கூட இருக்காது... அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சென்று சுடுதண்ணீரை பாட்டிலில் மாற்றி வந்து படுக்கவேண்டும்... இது தான் இரவு முழுவதும் டைம் பாஸ்... சவப் பெட்டிபோல் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்லீப்பிங் பேக்கில் தூங்கவேண்டும்... பனிப்பாறைகளை வெறும் கண்களால் பார்த்தால் கண் எரியும். கலர் பிளைண்ட்னஸ் வந்துவிடும்... 11 மணிக்குமேல் வெயில் அடிக்கிறது என்று வெயிலில் நின்றால் உடம்பில் கொப்புளங்கள் வந்துவிடும்... மதியம் ஒரு மணிக்குமேல் சுழல் காற்று வீசும்... அது உடலில் படும்பொழுது உயிர் போய்விடும் வேதனை... சிலசமயம் இந்தச் சுழல்காற்று பனிச்சரிவை ஏற்படுத்திவிடும். பனிச்சரிவு மணிக்கு 80 கிமீ வேகத்தில் நகரும்; தப்பிப்பது என்பது இயலாத காரியம். அங்கே பணிபுரியும் போது ஏதாவது உடல்நிலை கோளாறு ஏற்பட்டால் சண்டிகருக்கோ அல்லது டெல்லிக்கோ அவர்களை அழைத்து வர முடியாது. வெப்பநிலை மாறும்போது ஸ்ட்ரோக் வந்து இறந்துவிடுவார்கள். ஏதாவது காயங்கள் ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும். சில பள்ளமான இடங்களில் பனிக்குக் கீழ் தண்ணீர் இருக்கும். கால்தவறி அதனுள் விழுந்துவிட்டால் உயிர் பிழைப்பது மிகக் கடினம். அதிகப்படியான பனி என்பதால் உடல் கருத்துவிடும். 90 நாட்கள் பணி முடிந்த பின் மலை அடிவாரத்திற்கு சென்று 30 நாட்கள் கீழே இருக்கும் தட்பவெட்பத்திற்கு உடலைப் பழக்க வேண்டும் (deacclimatization). பின்பு விடுமுறை கிடைக்கும். ஏழு மாதங்களுக்கு வீரர்கள் குடும்பத்தில் என்ன நடந்தாலும் விடுமுறைக்கு வரமுடியாது. இங்கு பணிபுரிந்து விட்டு வந்த பிறகு பலவித உடல் உபாதைகள் ஏற்படும். சிலருக்கு நினைவு தப்பிவிடும். ஒரு ராணுவ வீரன் நாட்டைக் காக்க இவ்வளவு தியாகங்கள் செய்யவேண்டியிருக்கிறது. இங்கே உட்கார்ந்துகொண்டு பேசுவது மிகவும் சுலபம். அங்கிருக்கும் சூழலை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அதன் வேதனை என்னவென்று... ஒருமுறை அங்கே சென்றுவிட்டு வந்தபின்... உடல் பழையநிலைக்கு வர பல மாதங்கள் பிடிக்கும்...///


நம் நாட்டு வீரர்களைப் பணிந்து நன்றி சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல; சில்லரைத் தனமாகப் பேசுவதையும் செயல்படுவதையும் தவிர்க்க வேண்டும். 

தெரிவு:சக

kanmani tamil

unread,
May 30, 2026, 4:40:45 AMMay 30
to vallamai
/// நேற்று இரவு 11 மணிக்கு இரண்டாவது மகனுக்கு கட்டை விரலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. உடனே கொப்பளித்தது; தாங்க முடியாத வலியும் எரிச்சலும் அதிகமானது...

வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பு ஒரு ஸ்பூன் தண்ணீரில் ஊற வைத்து இரண்டு நிமிடங்களில் தெளிந்த நீர் கிடைக்கும்.. இந்த சுண்ணாம்பு தெளிந்த நீரில் சம பங்கு நல்லெண்ணெய் கலந்து இடைவிடாமல் கலக்கும்போது வெண்ணெய் போல் களிம்பு (கிரீம்) ஆக மாறிவிடும்..(படத்தில் உள்ளது போல்)

மகனுக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் இதை உடனடியாகத் தயார் செய்து தீப்புண்ணில் வைத்தவுடன் உடனடியாக குளிர்ச்சியாக உணர்ந்து வலியும் எரிச்சலும் உடனே மறைந்தது...

சுண்ணாம்பு நீரையும் நல்லெண்ணெயையும் கலந்து தீப்புண்களுக்குப் பயன்படுத்தும் முறை நமது பாரம்பரியத்தில் "சுண்ணாம்புத் தைலம்" அல்லது "வஜ்ர களிம்பு என்று பெயர்.. தீப்புண் பட்ட இடத்தில் இதைத் தடவினால் தீப்புண் ஆறுவது மட்டுமல்லாமல் ஆறிய பின்பு தழும்பு இல்லாமல் மறையும். இந்தப் பதிவை save செய்து வைத்துக் கொள்ளுங்கள் ஏதோ ஒரு நேரத்தில் உங்களுக்கு உதவும்.. நல்லெண்ணைக்கு பதில் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்...
#homeremedies 
Riyaz///



தெரிவு:சக



kanmani tamil

unread,
Jun 2, 2026, 2:55:02 AMJun 2
to vallamai
பழப்புழுக்கு கேரளத்தின் பாரம்பரியமான குழந்தை உணவு. 

'பழப்பொரி'யும் அந்த மாநில மக்களிடம் புகழ் பெற்றதே. 

பழப்பாயசம்... இதுவும் கேரளத்தின் முத்திரை பெற்ற விருந்துணவு ஆகும். 

/// வாழைப்பழத்தை வேகவைத்து சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன ஆச்சர்யம் நடக்கும் தெரியுமா?
🌽🌽🌽🌽
ஒரு நாளுக்குத் தேவையான அளவு பொட்டாசியம் எடுத்துக் கொள்வதால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள், எலும்பு இழப்பு, போன்ற பாதிப்புகளில் இருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளில் 4,700 மிகி அளவு பொட்டாசியம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்கர்கள் இதனை 60 சதத்தை விட குறைவாக அதாவது 2640 மிகி அளவு மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர்.

பொதுவாக அமெரிக்கர்கள் பரவலாக உட்கொள்ளும் ஒரு பழமாக வாழைப்பழம் உள்ளது. இந்த வாழைப்பழம் பொட்டாசியம் சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. எந்தவித பாரம்பரிய தயாரிப்பு முறையும் இந்தப் பழத்தின் கனிம அளவில் எந்த பாதிப்பையும் உண்டாக்குவதில்லை. சமைக்கப்பட்ட வாழைப்பழமும் பச்சையாக இருக்கும் பழத்தைப் போல் பொட்டாசியம் அதிகம் உள்ள பழமாகவே உள்ளது.
 
மினரல் என்னும் கனிமங்கள் வெப்பத்தின் வெளிப்பாட்டிலும் அதன் ஊட்டச்சத்துகளின் ஸ்திரத் தன்மை மாறமால் இருக்கும் தன்மை கொண்டவை ஆகும். இதன் காரணமாக உலர் வெப்ப சமையல் தயாரிப்பு முறைகளிலும் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து பாதிக்காமல் இருக்கிறது.
நீண்ட நேரம் சமைக்கப்படும்போது அல்லது உயர் வெப்ப நிலையில் வைக்கப்படும்போதும் அதன் பொட்டாசியம் சத்து குறைவதில்லை. பல மணி நேரம் குறைந்த வெப்பத்தில் வைக்கப்பட்ட வாழைப்பழம் உலர் வாழைப்பழம் எனப்படுவதாகும்.

புதிய பச்சை வாழைப்பழத்தை விட இந்த வகை உலர் வாழைப்பழங்களில் ஒரு அவுன்சுக்கு நான்கு மடங்கு அதிக பொட்டாசியம் உள்ளது. சமைக்கப்படும்போது இதன் பொட்டாசியம் அளவு உயர்கிறது என்பது இதற்கு பொருள் அல்ல,
ஈரப்பத அளவு குறையும்போது இந்த கனிமத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். கலோரிகள் என்று வரும்போது, உலர் வாழைப்பழம் மற்றும் புதிய வாழைப்பழம் ஆகிய இரண்டுமே ஓரளவிற்கு ஒரே கலோரி அளவுகளைக் கொடுக்கின்றன.

வேக வைப்பதால் உண்டாகும் தாக்கம்... உலர வைத்த; தீயில் வாட்டிய; க்ரில் செய்யப்பட்ட; இளந்தீயில் பொரித்த; எண்ணெய்யில் பொரித்த வாழைப்பழத்தில் பச்சை வாழைப்பழத்தில் உள்ள அதே அளவு பொட்டாசியம் உள்ளது. இந்த வகை சமையலில் இந்த மினரலில் எந்த ஒரு பாதிப்பும் உண்டாவதில்லை. தண்ணீர் - குறிப்பாக கொதிக்க வைத்த தண்ணீர், உணவில் உள்ள மினரல் அளவு, குறிப்பாக பொட்டாசியம் அளவில் மாற்றத்தை உண்டாக்குகிறது.
உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து குறித்த ஒரு சர்வதேஸ் பத்திரிக்கை 2014ம் ஆண்டு நடத்திய ஆய்வில் வாழைப்பழத்தை தண்ணீரில் ஊறவைப்பதால் 40% பொட்டாசியம் சத்து குறைவதாக அறியப்படுகிறது.
ஆப்ரிக்க சுகாதார அறிவியல் என்ற பத்திரிக்கை 2013ம் ஆண்டு நடத்திய ஆய்வின் முடிவு, கொதிக்கும் நீர், வாழைப்பழத்தின் பொட்டாசியம் அளவை குறைக்கிறது என்று முடிவு வெளியிட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் எந்த ஒரு உணவுத் தயாரிப்பிலும் வாழைப்பழத்தை அதிகமாக ஊற வைப்பதில்லை என்பதால் நாம் இதுபற்றி அதிகம் கவலைக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.
 
பிரட்டுடன் சேர்த்து வாழைப்பழத்தை தீயில் வாட்டிச் சாப்பிடுவதால் அதன் பொட்டாசியம் சத்து அழிக்கப்படுவதில்லை என்பது தீர்க்கமாக அறியப்படும்போது, இப்படி இதனை சமைத்து உட்கொள்வதால் இதர ஊட்டச்சத்துகளின் அளவு பாதிக்கப்படுகிறது. சமைக்கப்படாத பச்சை வாழைப்பழம், வைடமின் சி சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் இந்த தண்ணீரில் கரையக் கூடிய ஊட்டச்சத்து வெளிச்சம் மற்றும் வெப்பத்தில் வெளிப்படுவதால் அதன் சத்து அளவை இழக்க நேரிடுகிறது.
ஒரு மிதமான அளவு வாழைப்பழத்தில் 100 கலோரிகள் இருப்பதாக அமெரிக்க விவசாயத் துறை தெரிவிக்கிறது என்றால், இதே 100 கலோரி உலர வைத்த வாழைப்பழத்தை விட வைடமின் சி சத்து 5 மடங்கு அதிகம் கொண்டதாக பச்சை வாழைப்பழம் உள்ளது. வைட்டமின் சி சத்தை விட ஸ்திரமாக இருக்கும் வைட்டமின் பி சத்தும், அதிக வெப்ப வெளிப்பாட்டில் அதன் சத்து அளவை இழக்க நேரிடுகிறது.
 
உயர் வெப்ப நிலையில் சமைக்கப்படும்போது வைடமின் பி சத்து குறையலாம். சமைப்பதால் அணுக்களின் சுவர்கள் மற்றும் ஸ்டார்ச் அளவில் மாறுபாடு காரணமாக, வாழைப்பழத்தின் உறுதி மற்றும் நார்ச்சத்து போன்றவற்றில் தாக்கம் ஏற்படுகிறது. அதனால் தான், சமைத்த வாழைப்பழம் ஜெல் போன்ற அடர்த்தியான மேல்பகுதியைக் கொண்டிருக்கும்.///


தமிழர்  வாழைப்பழத்தைச் சமைத்து உண்பதை என்றும் நான் பார்த்தது இல்லை.

சக 

kanmani tamil

unread,
Jul 1, 2026, 12:08:32 AMJul 1
to vallamai
தண்டட்டி / பாம்படம் போன்ற அணிகளின் பெயர்க் காரணமும் பூர்விக வரலாறும்...

/// தங்கட்டி, தண்டட்டி, பாம்படம் என பல பெயர்களில் அழைக்கும் காதணிகளை இன்று பெரும்பாலான பாட்டிகள் அணிந்திருந்தாலும் இதை ஏன் அணிகிறார்கள்? முன்பு யார் எதற்காக அணிந்தார்கள்? என்ற விளக்கங்களைத் தேடிப்பார்த்தால் விஞ்ஞானமும் வாழ்வியலும் வரலாறும் இதனூடே கொட்டிக்கிடக்கிறது.

தங்கட்டிகள் ஆண், பெண் பேதமில்லாமல் அணிந்திருந்தாலும் பெரும்பாலும் சதுரம் மற்றும் முக்கோணங்களாக மட்டுமே முன்பு இருந்திருக்கிறது.  இதை அழகுக்காக இல்லாமல் அந்த சமூகக் குழுக்கள் செய்யும் தொழில்களின் அடிப்படையிலும் செய்து அணிந்திருக்கிறார்கள்.

நில அளவை மற்றும் கட்டமைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடுபவர்கள் முக்கோண வடிவ அணிகளை அணிவார்கள் அதாவது இரண்டு அணிகளையும் சேர்த்து வைத்தால் அது நவீன அளவீடுகளில் பயன்படுத்தும் Setsquare களாக மாறும். 

இதையே தாடங்கம் என்ற பெயரில் ஆன்மீகவாதிகள் சூரிய, சந்திரன் அல்லது சங்கு, சக்கர வடிவில் அணிவார்கள் இதில் பெரும்பாலும் திருமண், திருச்சாம்பல், சாந்துகளை சிறிய அளவில் சேகரித்து வைத்திருப்பார்கள். 

மருத்துவர்கள் முதலுதவி மருந்துகளை எப்போதும் கூட வைத்துகொள்ளும் பொருட்டு சதுர அணிகளில் சேகரித்து மாட்டியிருக்கிறார்கள் அது அந்த காலத்து First aid kit.

பாம்புகளை பிடிக்கும் பிடாரிகள் நஞ்சுமுறிக்கும் மருந்தை அடைத்துவைக்க பயன்பட்ட முக்கோண அணியின் கொக்கி பாம்பு படமெடுப்பதை போல இருப்பதால் அதற்கு பாம்படம் எனப்பெயர்... இது இன்றளவும் பிடாரர்களிடம் வழக்கிலிருக்கிறது.

செய்தி சொல்பவர்கள் தாங்கள் எடுத்துச்செல்லும் ஓலைநறுக்கை காதில் சுருட்டி வைத்துச் செல்வார்கள் அது அவர்களின் தனி அதிகாரமும் அங்கீகாரமும்... அதன் பெயர் காதோலை அதாவது அந்தக் காலத்து SMS! இந்தப் பழக்கம் இன்றளவும் குலதெய்வ வழிபாட்டில் காதோலை வைக்கும் வழிபாடாக பின்பற்றப்படுகிறது.

நடனமாடுபவர்கள் அணிவது பத்ரகுண்டலம்
இதை கடவுள்களில் சிவனுக்கு மட்டுமே அணிவிப்பார்கள்.
சிவன் ஒரு காதில் பிரேதத்தை அணிந்திருப்பார் அதற்கு பிரேத குண்டலம் என்றே பெயர்.
கர்ணன் பிறக்கும்போதே குண்டலங்களோடு பிறந்ததாக மஹாபாரதம் சொல்கிறது.

தண்டட்டிகள் தங்கம், தாமிரங்களில் மட்டுமே செய்யப்படும்... வெள்ளி மற்றும் வேறெந்த உலோகத்திலும் செய்ய மாட்டார்கள். அணிபவரின் காதுகளில் கனமான பொருள்களை சேகரித்து மாட்டுவதால் காதுகள் தொங்கி பெரிய ஓட்டைகளாக தெரியும். 

புத்தர், பல நாயன்மார்கள் தீர்த்தங்கரர்களின் சிலைகளில் காதுகள் தளர்ந்து தொங்கியவாறு காட்டுவார்கள் காரணம் அவர்கள் பூர்வாங்கத்தில் நல்ல வசதியோடு காதுகளில் பெரிய காதணி அணிந்ததால் காதுகள் தளர்ந்திருக்கிறது என்பதை குறிக்கவே.

ஆதிக்குடிகளில் பல குழுக்கள் இப்போதும் அவர்களின் வாழ்வியலோடு ஒத்துப்போகும் பல பொருட்களை காதுகளில் அணியும் பழக்கமிருப்பதை பார்த்திருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் காணி மக்கள் மஞ்சாடி, குன்றிமணியால் செய்த காதணிகளை அணிவார்கள்.  அதே மலைத்தொடர்களுக்கு அருகிலிருக்கும் மக்களின் வழிபாட்டுப் பொருளாகவும் இவை இருக்கும். குருவாயூர் கோவிலில் இதைப் பார்க்கலாம்.

படம்: Srivatsansankaran என்ற insta பக்கத்திலிருந்து எடுத்தது.

#தங்கட்டி 
#தண்டட்டி///


தெரிவு:சக 

Raju Rajendran

unread,
Jul 2, 2026, 10:13:17 PMJul 2
to vall...@googlegroups.com
கனங்குழை மாதர்கொல்!

செவ்., 30 ஜூன், 2026, 9:08 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvg-PEgLAQWq-R9_Wc9o%3DN440KysOauZrzuoNXHXiTzQg%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jul 16, 2026, 12:23:27 AMJul 16
to vallamai
இமயமலையின் 5 மர்மமான இடங்கள்...

/// மனித அறிவிற்கு அப்பாற்பட்டு...
நமக்கு பிரமிப்பூட்டி அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு பனிக்குழந்தையே இமயமலை. ஆண்டுதோறும் வளரும் இமயம் 5 நாடுகளின் பாதுகாவலனாக திகழ்கிறது. அறிவியலையே ஆர்வம்கொள்ள வைக்கும் பல அற்புதங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது. இத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய இமயமலை, பல மர்மங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
 
இமயம் எப்போதுமே ஒரு வியப்பு தான். தன்னுள் பல ஆச்சரியங்களை அடக்கி வைத்து வானுயர்ந்த நிற்கிறது இமயமலை. ஆன்மிகம், புவியியல், அட்வென்சர், சுற்றுலா என பலதரப்பட்ட மக்களையும் தன்பால் ஈர்த்திருப்பது இமயமலையின் தனிச்சிறப்பு என்று கூறலாம். சூப்பர்ஸ்டாரில் இருந்து சாமானிய மனிதர் வரை பலரை கண்டிருக்கும் இமயமலையில் இருக்கும் ஐந்து மர்மமான இடங்களை குறித்து தான் இந்த கட்டுரையில் நாம் அறிந்துக் கொள்ளவிருக்கிறோம்.

#குருடோங்மர் ஏரி:

டீஸ்டா நதியின் மூலமாக விளங்கும் இந்த ஏரி, கஞ்சன்சுங்கா மலைத்தொடரில் ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது.நீங்கள் இப்போது இந்த ஏரிக்கு சென்றாலும் அல்லது கடுமையான குளிர்காலத்தில் சென்றாலும் கூட ஏரியில் உறைந்து போகாத ஒரு சிறிய இடத்தைக் காண்பீர்கள். அதன் மர்மத்தை பொறுத்த வரையில், புகழ்பெற்ற பௌத்த குரு பத்மசம்பவா அவர்கள் ஏரியில் அந்த இடத்தை தொட்டு, மக்கள் பயன்பெற அந்த நீர் உரையாமலிருக்க ஆசீர்வதித்தார் என்று இன்றளவும் அங்கு வாழும் மக்களால் நம்பப்படுகிறது. உங்களால் நம்ப முடிகிறதோ இல்லையோ, மிகக் கடுமையான குளிர்காலத்தில் கூட சுற்றுலா வாசிகளும், உள்ளூர் மக்களும் அந்த ஏரியில் உரையாமலிருக்கும் அந்த சிறிய பகுதியை கண்டு வியக்கிறார்கள்.

#ரூப்குண்ட் ஏரி:

ரூப்குண்ட் உத்தரகண்ட் மாநிலத்தில் மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் அழகான மலைப்பிரதேசத்தில் ஒன்றாகும். இதற்கு பிரம்மிக்கக்கூடிய வகையில் பல சிறப்புகள் இருந்தாலும் ,ஒரு பரபரப்பான மர்மம், சுற்றுலாவாசிகளை இங்கு வர ஆர்வத்தை தூண்டுகிறது. இதன் மர்மம்,ஏரியின் அருகில் உள்ள பாறைகளில் சிதறிக் கிடக்கும் மனித மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள் மற்றும் எலும்புகள். இங்கு மலையேறும் மனிதர்களின் பல புகைப்படங்கள் மற்றும் பார்வையாளர்களின் கணக்குகளில் பகிரப்பட்ட புகைப்படங்களே ஆதாரமாக விளங்குகிறது. இந்த எலும்புக்கூடுகள் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற படையினர் மலையேற்றத்தின் போது பெரிய ஆலங்கட்டி மழையால் தாக்கப்பட்டனர் என்று ஒரு கோட்பாடு கூறுகிறது. மற்றொரு கோட்பாடு இவை ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூறுகின்றன, இந்த வழியில் இறப்பதற்கு அவர்கள் ஒரு தெய்வத்தால் சபிக்கப்பட்டனர் என்றும் கூறுகின்றன. எதுவாயினும், இவை அனைத்தும் செவிவழிக் கதைகளாகவே உள்ளது. இதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் உறுதியாக கூற மாட்டோம்.ஏனெனில் ரூப்குண்ட் ஏரி இன்றளவும் மர்மத்தின் புகலிடமாகவே விளங்குகிறது.

#பாரோ தக்சங் அல்லது புலியின் கூடு:

பூட்டானின் ஒவ்வொரு பயணத்திலும் இன்றியமையாத, செங்குத்தான மலை முகட்டிலுள்ள இந்த பெளத்த மடாலயம் பற்றி கூற ஒரு கதை உள்ளது. இந்த மடத்தின் மையத்தில், ஒரு குகை உள்ளது.இங்கு குரு பத்மசம்பவா மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்கள், மூன்று வாரங்கள், மூன்று நாட்கள் மற்றும் மூன்று மணி நேரம் தியானித்தார். இங்குள்ள மர்மம் அது அமைந்திருக்கும் இடமே ஆகும். மிகக் கடினமான இந்த மலையேற்றத்திற்கு குரு பத்மசம்பவா திபெத்திலிருந்து ஒரு புலியின் மீது பறந்து இந்த இடத்தை அடைந்தார் என்பதால் இவ்விடம் புலியின் கூடு என்று அழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.மேற்கண்ட படத்தில் அந்த ஆபத்தான இருப்பிடத்தைப் கண்டால் நம்பிக்கையும் உண்மையாகத் தோன்றலாம். இந்த மடாலயம்,1692 ஆம் ஆண்டில் தியான மண்டபமாக கட்டப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இது ஒரு அறிய சாதனையாகும்.

#கங்கர் புயென்ஸம்:

உலகின் மிக உயரமான, மனிதக் காலடி படாத இடமாக விளங்குகிறது கங்கர் புயென்ஸம். பூட்டானில் அமைந்துள்ள இந்த மலை பல முறை அளவிடப்பட்டுள்ளது. ஆனால் அளவிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. அது மனித அளவீட்டின் தவறாகக் கூட இருக்கலாம். என்றாலும், இந்த மலையின் உச்சியை மனிதன் அடைய முடியவில்லை என்பதே உண்மையாகும். பூட்டானியர்கள் இங்கு எடிஸ் மற்றும் கடவுள்கள் உள்ளிட்ட புராண உயிரினங்களின் இருப்பிடமாக இருப்பதாக நம்புகிறார்கள். அதன் உச்சியை அடைய முற்பட்டு பல தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, இந்த மலைகள் புகழ்பெற்றன. விவரிக்கப்படாத சப்தங்கள், மர்ம விளக்குகள் மற்றும் மாயத்தோற்றங்கள் உள்ளிட்ட விசித்திரமான நிகழ்வுகளின் வழக்குகள் மலைக்கு அருகில் வசிப்பவர்களிடமிருந்து பதிவாகியுள்ளன.

#ஞாங்கஞ்ச்:

அழிவில்லாதவர்களின் நகரம் என்று அழைக்கப்படும் ஞாங்கஞ்ச் இமயமலையின் தொலைதூர, அணுக முடியாத பள்ளத்தாக்கில் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தை அறிய மலையேறுபவர்கள் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைகின்றன. நவீன செயற்கைக்கோள்கள் மற்றும் பிற மேப்பிங் தொழில்நுட்பங்களால் கூட அதை கண்டறிய முடியவில்லை.குறிப்பாக திபெத் மற்றும் இந்தியாவை சேர்ந்த பௌத்தர்கள், ஞாங்கஞ்ச் ஒரு இடம் மட்டுமல்ல, உயர்ந்த பரிமாணமும் என்று கருதுகின்றனர். முனிவர்கள், யோகிகள் மற்றும் பிற தகுதியான ஆத்மாக்களால் மட்டுமே ஞாங்கஞ்சைக் கண்டுபிடித்து அடைய முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இங்கு தங்க விரும்புவோர் அழியாமையைப் பெறுவார்கள்! என்று நாட்டுப்புறக் கதைகளில் கூறப்பட்டுள்ளது, ஆனால் சில புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர்கள் இதைப் பார்வையிடுவதாகக் கூறி, இவ்விடத்தை மேலும் பிரபலமடையச் செய்தனர்.


kanmani tamil

unread,
Jul 20, 2026, 9:28:29 PMJul 20
to vallamai
'அவன் சரியான எம்டன்'பா'- இன்றும் சாமர்த்தியசாலி பற்றிய பதட்டத்தைக் கொடுக்கும் விமர்சனம்... ஏன்?!

///எம்டன்: சென்னை மாநகரை பத்தே நிமிடங்களில் கதிகலங்கச் செய்த போர்க்கப்பல்...

அன்று 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி... நேரம் சரியாக இரவு 10 மணி இருக்கலாம். இப்போது சென்னை என்றழைக்கப்படும் அப்போதைய மெட்ராஸ் மாநகரை நோக்கி வேகமாக நெருங்கிய அந்தக் கப்பல் கரையில் இருந்து 2 கடல்மைல் தொலைவில் நின்றுவிட்டது. அடுத்த கனமே அந்த கப்பலில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகள் சென்னையை நோக்கி குண்டுமழை பொழிந்துவிட்டன. வெறும் பத்தே நிமிடங்களில் 130 குண்டுகள் அந்த பீரங்கிகளில் இருந்து வெளிப்பட்டு சென்னையை துளைத்தெடுத்துவிட்டன.

 துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகளின் கிளப், பொது மருத்துவமனை, வெப்பேரி, நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலை, பூந்தமல்லி ஹை ரோடு, ராயபுரத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை, காசா மேஜர் சாலை, ஜார்ஜ் டவுன் ஆகிய இடங்களில் எம்டன் போர்க்கப்பலின் பீரங்கிகளில் இருந்து வெளிவந்த குண்டுகள் தாக்கின.

பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமான பர்மா ஆயில் நிறுவனத்தில் 4 டேங்குகளில் இருந்த 3.5 லட்சம் கேலன் கச்சா எண்ணெய் தீப்பிடித்துக் கொண்டது. அதில் இருந்து வானளாவ தீ ஜூவாலைகள் வெளிப்பட்டன. சுற்றியிருந்த பகுதியை கரும்புகை சூழ்ந்தது. எம்டன் போர்க்கப்பலின் பீரங்கிகளில் இருந்து வெளிப்பட்ட பல குண்டுகள் வெடிக்காமலேயே சென்னை மண்ணில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டன.

ஐரோப்பாவில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா என்று நேச நாடுகளும், ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி என்று அச்சு நாடுகளும் எதிரெதிரே நின்று போரிட்டுக் கொண்டிருந்தன. முதல் உலகப்போர் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டாலும், போர் பிரதானமாக ஐரோப்பாவையே மையம் கொண்டிருந்தது. இதனால், ஐரோப்பாவில் இருந்து பல ஆயிரம் கி.மீ தொலைவில் இந்தியா மீது அச்சுநாடுகள், குறிப்பாக ஜெர்மனி தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் குறித்தே கூட யாரும் சிந்தித்திருக்கவில்லை. அதுவும் சென்னை மாநகரம் 1758ஆம் ஆண்டு பிரெஞ்சு தாக்குதலுக்குப் பிறகு 150 ஆண்டுகளாக எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொண்டதே இல்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அமைதிப் பூங்காவான நகரங்களில் ஒன்றாகவே திகழ்ந்து வந்தது. ஆகவே, சென்னை மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவே இல்லை. வழக்கமான போர்க்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. சென்னை மாநகரில் இயல்பு வாழ்க்கை அப்படியே தொடர்ந்தது. அதுவும், நவராத்திரி காலம் என்பதால் சென்னை மாநகரமே அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கலங்கரை விளக்கம் வழக்கம்போல் ஒளி வீசிக் கொண்டிருந்தது. துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகளின் கிளப்பில் கூட விடிய விடிய கேளிக்கைகள் களைகட்டியிருந்தன. எதிரிகள் வர வாய்ப்பே இல்லை என்று கருதியதால் எம்டன் தாக்குதலை எதிர்கொள்ள யாருமே தயாராக இருக்கவில்லை.

அந்த நேரத்தில், முன்னெச்சரிக்கை ஏதுமின்றி திடீரென வந்த எம்டன் போர்க்கப்பல் வெறும் பத்தே நிமிடங்களில் சென்னை மாநகரை கதிகலங்கச் செய்துவிட்டு; பிரிட்டனின் எதிர்த் தாக்குதலைச் சந்திக்க காத்திருக்காமல், கனநேரத்தில் கிழக்கு நோக்கிச் சென்றுவிட்டது. இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். எம்டன் போர்க்கப்பல் நடத்திய சென்னையில் நடத்திய திடீர் தாக்குதலில் ஏற்பட்ட நேரடி சேதத்தைக் காட்டிலும் உளவியல் ரீதியிலான பாதிப்புகள் மிகவும் அதிகம். எம்டனின் எதிர்பாராத தாக்குதல் சென்னை மக்களின் நம்பிக்கையை ஒரேடியாக குலைத்துவிட்டது.

சென்னையில் எம்டன் கப்பல் தாக்குதல் நடத்தியபோது, அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் பென்ட்லாண்ட், உதகமண்டலத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

தாக்குதல் குறித்துக் கேள்விப்பட்டதும் அடுத்த 3 நாட்களில் சென்னைக்கு விரைந்து வந்த அவர், ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே தலைநகரில் தங்கினார். சென்னையில் நிலைமை சீரவடைவதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அவர் மீண்டும் உதகைக்கே ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். ஆனால், இது மக்கள் மத்தியில் வேறுவிதமான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டது.

'சென்னையில் இருப்பது பாதுகாப்பானதாக இல்லை என்று ஆளுநரே கருதுகிறார்' என்ற வதந்தி தீயாய் பரவ அதுவும் ஒரு காரணமாகிவிட்டது. இதனால், சென்னையில் இருக்கவே பயந்துபோன மக்கள் அவசர அவசரமாக நகரை காலி செய்துவிட்டு வெளியேறத் தொடங்கினர். இதனால் சென்னையை விட்டு வெளியேறுவதற்கான சாலைகள், ரயில் நிலையங்கள் மக்கள் வெள்ளத்தில் திணறிப் போயின. பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்காத மக்கள் மாட்டு வண்டிகளில் சென்னையை விட்டு வெளியேறினர்.

இன்னும் ஏராளமானோர் மூட்டை, முடிச்சுகளை சுமந்துகொண்டு நடந்தே சென்றனர். அவர்கள் அனைவரின் ஒரே குறிக்கோள்; சென்னையைவிட்டு முடிந்தவரை பாதுகாப்பாக வெகுதூரம் செல்வதாகவே இருந்தது.

சென்னையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இன்னொருபுறம் உணவுப் பற்றாக்குறை மக்களை வாட்டி வதைத்தது. இதையடுத்து, மக்களின் அச்சத்தைப் போக்க குஜிலிப்பாட்டு வகையில் துண்டுப் பிரசுரங்களை சென்னை மாகாண அரசு ஏராளமாக அச்சடித்து வெளியிட்டது.

சென்னை மீதான எம்டன் போர்க்கப்பலின் திடீர் தாக்குதலை தங்களுக்கு விடப்பட்ட நேரடி சவாலாகவே பிரிட்டன் எடுத்துக் கொண்டது. ஏனெனில், பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை தாக்குதலுக்கு ஜெர்மனி தேர்வு செய்யும் என்று பிரிட்டிஷ் அரசு எதிர்பார்க்கவே இல்லை.

இதையடுத்து, எம்டன் போர்க்கப்பலை தேடிப் பிடித்து அழித்தொழிக்கும் வேலையில் பிரிட்டிஷ் கடற்படை முனைப்புடன் ஈடுபட்டது. இந்த வலுவான கடற்படையைக் கொண்டுதானே இந்தியா உள்பட பூமிப்பந்து முழுவதும் பல நாடுகளை அவர்கள் ஆக்கிரமித்தார்கள்.

உச்சம் தொட்ட எல்லாமே கீழே வந்துதானே ஆகவேண்டும். அந்த விதிக்கு எம்டன் போர்க்கப்பல் மட்டும் விதிவிலக்கா என்ன!

சுமார் 56 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு வெற்றிகரமாகப் பயணித்து 40க்கும் மேற்பட்ட எதிரி நாட்டு போர்க்கப்பல்களை ஆழ்கடலிலேயே சமாதியாக்கிய பெருமை கொண்ட எம்டன் போர்க்கப்பலுக்கான முடிவுரையும் அந்த நாளில் எழுதப்பட்டது.

சென்னையில் தாக்குதல் நடத்திய 50 நாட்கள் கழித்து 1914ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி கொக்கோஸ் தீவுக் கூட்டம் அருகே எம்டன் போர்க்கப்பலை பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான 3 கப்பல்கள் சுற்றி வளைத்தன. அங்கே நடந்த கடும் சண்டையில் பிரிட்டிஷ் கடற்படையின் எச்.எம்.ஏ.எஸ்.சிட்னி போர்க்கப்பல் நடத்திய கடும் தாக்குதலால் நிலைகுலைந்த எம்டன் போர்க்கப்பல் எதிரி நாடுகளின் 40 கப்பல்களை எங்கே அனுப்பியதோ அதே ஆழ்கடலுக்குள் சமாதியாகிப் போனது.

சென்னையை தாக்க எம்டன் தீர்மானித்தது ஏன்?

வெறும் பத்தே நிமிட தாக்குதலில் ஒட்டுமொத்த சென்னை மாநகரையும் கதிகலங்கச் செய்ததுடன், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கோபத்தையும் சம்பாதித்த எம்டன் போர்க்கப்பல் குறித்தும் அது தாக்குதல் நடத்திய நேரத்தில் சென்னை எப்படி இருந்தது என்பது குறித்தும் எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான வெங்கடேஷிடம் பேசினோம்.

முதல் உலகப்போர் காலகட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சென்னையை தாக்குதல் இலக்காக எம்டன் போர்க்கப்பல் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அதற்குப் பதிலளித்த அவர், "முதல் உலகப்போரில் இந்தியா நேரடியாகப் பங்கேற்கவில்லையே தவிர; பிரிட்டனுக்கு ஆதரவாக இந்தியாவை சேர்ந்த 15 லட்சம் ராணுவ வீரர்கள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

அதோடு 1.7 லட்சம் குதிரைகள், ஒட்டகங்கள் பிரிட்டனுக்கு போரில் உதவிபுரிய இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆகவே இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கு அந்த நேரத்தில் ஜெர்மனிக்கு போதுமான காரணங்கள் இருந்தன" என்றார்.

அதேநேரத்தில் "ஜெர்மன் கடற்படையில் இடம் பெற்றிருந்த எம்டன் போர்க்கப்பல் ஒரு இலகுரக நாசகாரி போர்க்கப்பல். அது ஜெர்மன் கடற்படையின் மத்திய கட்டளை மையத்தின் உத்தரவுக்காக காத்திராமல், தானே தனது தாக்குதல் இலக்கை தேர்வு செய்துகொள்ளும் சுதந்திரத்தைப் பெற்றிருந்தது. அந்த போர்க்கப்பலை தலைமையேற்று வழிநடத்திய லெப்டினன்ட் கர்னல் வான் முல்லர் மிகுந்த திறமைசாலி, தந்திரசாலியும்கூட. அவரது வியூகங்களும், தாக்குதல் உத்திகளும்தான் எம்டன் போர்க்கப்பலை பிரிட்டிஷ் கடற்படைக்கு சிம்மசொப்பனமாக மாற்றின.

தன்னுடைய நேர்த்தியான திட்டங்களால்தான் 40க்கும் மேற்பட்ட நேச நாட்டுப் போர்க்கப்பல்களை எம்டன் மூலம் அவர் ஆழ்கடலுக்குள் அனுப்பியிருந்தார். அந்த நேரத்தில் சீன கடல் பகுதியில் எம்டன் கப்பல் நிலைகொண்டிருந்த போதுதான் சென்னை மீது எதிர்பாரா திடீர் தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டிருக்க வேண்டும்.

இதன் மூலம் ஜெர்மனியால் உலகின் எந்த மூலையிலும் தாக்குதல் நடத்த முடியும் என்று பிரிட்டிஷ் அரசை திகைக்கச் செய்யவேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் அதுவே எம்டன் போர்க்கப்பலின் முடிவுக்கும் காரணமாகிவிட்டது," என்று கூறினார் வெங்கடேஷ்.

தமிழில் அச்சுறுத்தலை குறிக்கும் சொல்லாக நிலைபெற்றுவிட்ட 'எம்டன்'
மேலும் தொடர்ந்த அவர் "கொகோ தீவுக் கூட்டத்தின் அருகே பிரிட்டிஷ் கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் சுற்றி வளைத்துவிட்ட பிறகும்கூட எம்டன் கப்பல் சரணடையவில்லை. அதன் கேப்டன் லெப்டினன்ட் கர்னல் வான் முல்லர் இறுதி வரை தீரத்துடன் போரிடவே தீர்மானித்தார்.

இதனால், கடும் சேதமடைந்து எம்டன் போர்க்கப்பல் மூழ்கத் தொடங்கிய போதும்கூட பிரிட்டிஷ் கப்பல்களை நோக்கிச் சுட்டுக் கொண்டேதான் இருந்தது" என்று விளக்கினார். இந்தக் கடும் சண்டையில் எம்டன் போர்க்கப்பலில் இருந்த பாதி பேர் உயிரிழந்துவிட்டனர். முடிவில் கப்பலில் எஞ்சியிருந்த பாதி பேர் பிரிட்டிஷ் கடற்படையிடம் சரணடைந்தனர்.

"எம்டன் போர்க்கப்பல் பிரிட்டிஷ் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டாலும் கூட ஜெர்மனியில் வீர தீரத்தை வெளிப்படுத்தியதற்காக வழங்கப்படும் இரும்புச் சிலுவை பதக்கத்தை அந்த போர்க்கப்பலுக்கு அன்றைய ஜெர்மானிய சக்கரவர்த்தி வில்லியம் கெய்சர் வழங்கி கௌரவித்தார். அதில் பணியாற்றிய உயிர் தப்பிய ஜெர்மானிய வீரர்கள் அனைவரும் தங்களது பெயரில் எம்டன் என்பதைச் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்" என்று கூறினார் வெங்கடேஷ்.

முதல் உலகப்போரைப் பொருத்தவரை, இந்தியா ஒரே ஒருமுறை மட்டுமே தாக்குதலை எதிர்கொண்டது. அதுவும் சென்னை மண்ணில் நடத்தப்பட்டது.

எம்டன் போர்க்கப்பலின் எதிர்பாரா திடீர் தாக்குதல் தமிழ் மக்களிடையே உளவியல்ரீதியாக ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாத அளவுக்கு மிகப்பெரியது. ஆகவேதான்; 'எம்டன்' என்ற பெயர் அச்சுறுத்தலைக் குறிக்கும் சொல்லாக இன்றும் கூட தமிழில் நிலைபெற்றுவிட்டது.


தெரிவு:சக

kanmani tamil

unread,
Jul 24, 2026, 8:39:53 PM (11 days ago) Jul 24
to vallamai
கடையில் விற்கப்படும் நெய்யின் தயாரிப்பு முறை...


பாரம்பரியத்தை மீட்டெடுத்தே ஆக வேண்டியதன் அவசியம் புரிகிறது!

தெரிவு:சக
Reply all
Reply to author
Forward
0 new messages