தெரிந்து கொள்வோம்

29 views
Skip to first unread message

kanmani tamil

unread,
May 28, 2026, 10:24:30 PMMay 28
to vallamai

/// நாம் நினைப்பதுபோல் இந்திய நாட்டின் ராணுவப் பணி பிறநாட்டின் ராணுவத்தினரைப் போன்று எளிதானதல்ல... உலகின் வலிமையான ராணுவங்களான அமெரிக்கா, சீனா, ரஷ்யாவே அஞ்சும் சீதோஷ்ண நிலையும், போரினால் ஏற்பட்ட சேதத்தை விட இயற்கை சீதோஷ்ண மாறுபாடுகளால் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்புகள் அதிகம்.... கரணம் தப்பினால் மரணம்... என்ற நிலையில் உலகின் மிகப் பெரிய மலைச் சிகரங்களின் மேல் உள்ள போர்க்களத்தையும் அதற்கான பயிற்சியையும் கொண்ட திறமையான பலம் வாய்ந்த உலகின் மிகப்பெரிய ராணுவம் நமது இந்திய ராணுவம்தான்....

 ஐ.நா.சபையே பல போர்களில் இந்திய ராணுவத்தின் உதவியை நாட... முன்னிலையில் நின்று ஐ.நா. படைகள் வெற்றி பெற உதவியிருக்கிறது இந்திய ராணுவம்...
     
அந்நிய சக்திகளின் காசுக்காக, பதவி வெறிக்காக இங்குள்ள அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், மாவோயிச நக்கல்கள், தீவிரவாதிகளின் உதவியுடன் செய்யும் தீவிர விஷமமான பிரச்சாரத்தால் மக்களில் சிலர் ராணுவ வேலையை எண்ணற்ற வேலைகளில் அதுவும் ஒரு சாதாரண வேலை என்பது போல நினைக்கின்றனர்.... நமது ராணுவத்தினர் மிக உயரமான பனிப்பிரதேசங்களுக்குப் (Hi Altitude) போய் வருவது மிக சுலபமான வேலை போல் நினைக்கிறார்கள்... இந்தப் பகுதிகள் ஊட்டி, கொடைக்கானல், குலுமணாலி, சிம்லா போல் அல்ல..... 

 இரண்டு நிமிடம் படியுங்கள்...

அங்குள்ள தட்பவெட்பநிலை மைனஸ் 40 (Minus 40 degree) வரை சென்றுவிடும்... அங்கு நினைக்கும் நேரத்தில் சென்று வரமுடியாது. அதுபோல் அங்கிருந்து நினைத்த நேரத்தில் விடுமுறை எடுத்து ஊருக்கெல்லாம் வரமுடியாது. பனிப் பிரதேசங்களுக்கு போகும் முன்னர் 90 நாட்கள் அடிவாரத்திலிருந்து நமது உடல்நிலையை அந்த தட்பவெட்பத்திற்குப் பழக்குவார்கள் (acclimatization). அங்கே ஏற்படும் உடலுபாதைகளை எப்படி சமாளிப்பது, வீரர்கள் தங்களது உடல்நிலையை எப்படி பாதுகாப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். மருத்துவத் தகுதி பெற்றபின் மிக உயரிய பனிப்பிரதேசங்களுக்கு அனுப்புவார்கள். அங்கே அவர்கள் 90 நாட்கள் மட்டுமே பணிபுரிவார்கள். நாம் அங்கே சென்றுவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் ?

சூரிய வெளிச்சம் 10மணிக்குமேல் வரும். 
3 மணிக்கு இருட்டிவிடும்... நமக்கு வேண்டிய அனைத்து சத்தான விலையுர்ந்த உணவுப்பொருட்கள் இருக்கும்... ஆனால் சாப்பிட முடியாது. குளிரில் பசியெடுக்காது. மதியம் மட்டும் வேண்டா வெறுப்பாக உயிர் வாழ்வதற்காக சாப்பிடுவார்கள்... மிக உயரம் என்பதால் காற்றின் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கும். மூச்சுத் திணறல் ஏற்படும்.. தினமும் டெண்டை சுற்றி குழி தோண்டி நிலக்கரியை போட்டு எரிப்பார்கள்... இருந்தும் குளிர் அடங்காது. தீயெரியும் இடத்தில வாளிகளில் பனியை போட்டு தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும்.. அதை பாட்டில்களில் நிறைத்து; முன்பகுதியில் இரண்டு பாட்டில், பின் பகுதியில் இரண்டு பாட்டில் கட்டிக் கொண்டு; படுக்க வேண்டும். இதன் சூடு பத்து நிமிடம் கூட இருக்காது... அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சென்று சுடுதண்ணீரை பாட்டிலில் மாற்றி வந்து படுக்கவேண்டும்... இது தான் இரவு முழுவதும் டைம் பாஸ்... சவப் பெட்டிபோல் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்லீப்பிங் பேக்கில் தூங்கவேண்டும்... பனிப்பாறைகளை வெறும் கண்களால் பார்த்தால் கண் எரியும். கலர் பிளைண்ட்னஸ் வந்துவிடும்... 11 மணிக்குமேல் வெயில் அடிக்கிறது என்று வெயிலில் நின்றால் உடம்பில் கொப்புளங்கள் வந்துவிடும்... மதியம் ஒரு மணிக்குமேல் சுழல் காற்று வீசும்... அது உடலில் படும்பொழுது உயிர் போய்விடும் வேதனை... சிலசமயம் இந்தச் சுழல்காற்று பனிச்சரிவை ஏற்படுத்திவிடும். பனிச்சரிவு மணிக்கு 80 கிமீ வேகத்தில் நகரும்; தப்பிப்பது என்பது இயலாத காரியம். அங்கே பணிபுரியும் போது ஏதாவது உடல்நிலை கோளாறு ஏற்பட்டால் சண்டிகருக்கோ அல்லது டெல்லிக்கோ அவர்களை அழைத்து வர முடியாது. வெப்பநிலை மாறும்போது ஸ்ட்ரோக் வந்து இறந்துவிடுவார்கள். ஏதாவது காயங்கள் ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும். சில பள்ளமான இடங்களில் பனிக்குக் கீழ் தண்ணீர் இருக்கும். கால்தவறி அதனுள் விழுந்துவிட்டால் உயிர் பிழைப்பது மிகக் கடினம். அதிகப்படியான பனி என்பதால் உடல் கருத்துவிடும். 90 நாட்கள் பணி முடிந்த பின் மலை அடிவாரத்திற்கு சென்று 30 நாட்கள் கீழே இருக்கும் தட்பவெட்பத்திற்கு உடலைப் பழக்க வேண்டும் (deacclimatization). பின்பு விடுமுறை கிடைக்கும். ஏழு மாதங்களுக்கு வீரர்கள் குடும்பத்தில் என்ன நடந்தாலும் விடுமுறைக்கு வரமுடியாது. இங்கு பணிபுரிந்து விட்டு வந்த பிறகு பலவித உடல் உபாதைகள் ஏற்படும். சிலருக்கு நினைவு தப்பிவிடும். ஒரு ராணுவ வீரன் நாட்டைக் காக்க இவ்வளவு தியாகங்கள் செய்யவேண்டியிருக்கிறது. இங்கே உட்கார்ந்துகொண்டு பேசுவது மிகவும் சுலபம். அங்கிருக்கும் சூழலை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அதன் வேதனை என்னவென்று... ஒருமுறை அங்கே சென்றுவிட்டு வந்தபின்... உடல் பழையநிலைக்கு வர பல மாதங்கள் பிடிக்கும்...///


நம் நாட்டு வீரர்களைப் பணிந்து நன்றி சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல; சில்லரைத் தனமாகப் பேசுவதையும் செயல்படுவதையும் தவிர்க்க வேண்டும். 

தெரிவு:சக

kanmani tamil

unread,
May 30, 2026, 4:40:45 AMMay 30
to vallamai
/// நேற்று இரவு 11 மணிக்கு இரண்டாவது மகனுக்கு கட்டை விரலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. உடனே கொப்பளித்தது; தாங்க முடியாத வலியும் எரிச்சலும் அதிகமானது...

வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பு ஒரு ஸ்பூன் தண்ணீரில் ஊற வைத்து இரண்டு நிமிடங்களில் தெளிந்த நீர் கிடைக்கும்.. இந்த சுண்ணாம்பு தெளிந்த நீரில் சம பங்கு நல்லெண்ணெய் கலந்து இடைவிடாமல் கலக்கும்போது வெண்ணெய் போல் களிம்பு (கிரீம்) ஆக மாறிவிடும்..(படத்தில் உள்ளது போல்)

மகனுக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் இதை உடனடியாகத் தயார் செய்து தீப்புண்ணில் வைத்தவுடன் உடனடியாக குளிர்ச்சியாக உணர்ந்து வலியும் எரிச்சலும் உடனே மறைந்தது...

சுண்ணாம்பு நீரையும் நல்லெண்ணெயையும் கலந்து தீப்புண்களுக்குப் பயன்படுத்தும் முறை நமது பாரம்பரியத்தில் "சுண்ணாம்புத் தைலம்" அல்லது "வஜ்ர களிம்பு என்று பெயர்.. தீப்புண் பட்ட இடத்தில் இதைத் தடவினால் தீப்புண் ஆறுவது மட்டுமல்லாமல் ஆறிய பின்பு தழும்பு இல்லாமல் மறையும். இந்தப் பதிவை save செய்து வைத்துக் கொள்ளுங்கள் ஏதோ ஒரு நேரத்தில் உங்களுக்கு உதவும்.. நல்லெண்ணைக்கு பதில் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்...
#homeremedies 
Riyaz///



தெரிவு:சக



kanmani tamil

unread,
Jun 2, 2026, 2:55:02 AMJun 2
to vallamai
பழப்புழுக்கு கேரளத்தின் பாரம்பரியமான குழந்தை உணவு. 

'பழப்பொரி'யும் அந்த மாநில மக்களிடம் புகழ் பெற்றதே. 

பழப்பாயசம்... இதுவும் கேரளத்தின் முத்திரை பெற்ற விருந்துணவு ஆகும். 

/// வாழைப்பழத்தை வேகவைத்து சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன ஆச்சர்யம் நடக்கும் தெரியுமா?
🌽🌽🌽🌽
ஒரு நாளுக்குத் தேவையான அளவு பொட்டாசியம் எடுத்துக் கொள்வதால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள், எலும்பு இழப்பு, போன்ற பாதிப்புகளில் இருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளில் 4,700 மிகி அளவு பொட்டாசியம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்கர்கள் இதனை 60 சதத்தை விட குறைவாக அதாவது 2640 மிகி அளவு மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர்.

பொதுவாக அமெரிக்கர்கள் பரவலாக உட்கொள்ளும் ஒரு பழமாக வாழைப்பழம் உள்ளது. இந்த வாழைப்பழம் பொட்டாசியம் சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. எந்தவித பாரம்பரிய தயாரிப்பு முறையும் இந்தப் பழத்தின் கனிம அளவில் எந்த பாதிப்பையும் உண்டாக்குவதில்லை. சமைக்கப்பட்ட வாழைப்பழமும் பச்சையாக இருக்கும் பழத்தைப் போல் பொட்டாசியம் அதிகம் உள்ள பழமாகவே உள்ளது.
 
மினரல் என்னும் கனிமங்கள் வெப்பத்தின் வெளிப்பாட்டிலும் அதன் ஊட்டச்சத்துகளின் ஸ்திரத் தன்மை மாறமால் இருக்கும் தன்மை கொண்டவை ஆகும். இதன் காரணமாக உலர் வெப்ப சமையல் தயாரிப்பு முறைகளிலும் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து பாதிக்காமல் இருக்கிறது.
நீண்ட நேரம் சமைக்கப்படும்போது அல்லது உயர் வெப்ப நிலையில் வைக்கப்படும்போதும் அதன் பொட்டாசியம் சத்து குறைவதில்லை. பல மணி நேரம் குறைந்த வெப்பத்தில் வைக்கப்பட்ட வாழைப்பழம் உலர் வாழைப்பழம் எனப்படுவதாகும்.

புதிய பச்சை வாழைப்பழத்தை விட இந்த வகை உலர் வாழைப்பழங்களில் ஒரு அவுன்சுக்கு நான்கு மடங்கு அதிக பொட்டாசியம் உள்ளது. சமைக்கப்படும்போது இதன் பொட்டாசியம் அளவு உயர்கிறது என்பது இதற்கு பொருள் அல்ல,
ஈரப்பத அளவு குறையும்போது இந்த கனிமத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். கலோரிகள் என்று வரும்போது, உலர் வாழைப்பழம் மற்றும் புதிய வாழைப்பழம் ஆகிய இரண்டுமே ஓரளவிற்கு ஒரே கலோரி அளவுகளைக் கொடுக்கின்றன.

வேக வைப்பதால் உண்டாகும் தாக்கம்... உலர வைத்த; தீயில் வாட்டிய; க்ரில் செய்யப்பட்ட; இளந்தீயில் பொரித்த; எண்ணெய்யில் பொரித்த வாழைப்பழத்தில் பச்சை வாழைப்பழத்தில் உள்ள அதே அளவு பொட்டாசியம் உள்ளது. இந்த வகை சமையலில் இந்த மினரலில் எந்த ஒரு பாதிப்பும் உண்டாவதில்லை. தண்ணீர் - குறிப்பாக கொதிக்க வைத்த தண்ணீர், உணவில் உள்ள மினரல் அளவு, குறிப்பாக பொட்டாசியம் அளவில் மாற்றத்தை உண்டாக்குகிறது.
உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து குறித்த ஒரு சர்வதேஸ் பத்திரிக்கை 2014ம் ஆண்டு நடத்திய ஆய்வில் வாழைப்பழத்தை தண்ணீரில் ஊறவைப்பதால் 40% பொட்டாசியம் சத்து குறைவதாக அறியப்படுகிறது.
ஆப்ரிக்க சுகாதார அறிவியல் என்ற பத்திரிக்கை 2013ம் ஆண்டு நடத்திய ஆய்வின் முடிவு, கொதிக்கும் நீர், வாழைப்பழத்தின் பொட்டாசியம் அளவை குறைக்கிறது என்று முடிவு வெளியிட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் எந்த ஒரு உணவுத் தயாரிப்பிலும் வாழைப்பழத்தை அதிகமாக ஊற வைப்பதில்லை என்பதால் நாம் இதுபற்றி அதிகம் கவலைக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.
 
பிரட்டுடன் சேர்த்து வாழைப்பழத்தை தீயில் வாட்டிச் சாப்பிடுவதால் அதன் பொட்டாசியம் சத்து அழிக்கப்படுவதில்லை என்பது தீர்க்கமாக அறியப்படும்போது, இப்படி இதனை சமைத்து உட்கொள்வதால் இதர ஊட்டச்சத்துகளின் அளவு பாதிக்கப்படுகிறது. சமைக்கப்படாத பச்சை வாழைப்பழம், வைடமின் சி சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் இந்த தண்ணீரில் கரையக் கூடிய ஊட்டச்சத்து வெளிச்சம் மற்றும் வெப்பத்தில் வெளிப்படுவதால் அதன் சத்து அளவை இழக்க நேரிடுகிறது.
ஒரு மிதமான அளவு வாழைப்பழத்தில் 100 கலோரிகள் இருப்பதாக அமெரிக்க விவசாயத் துறை தெரிவிக்கிறது என்றால், இதே 100 கலோரி உலர வைத்த வாழைப்பழத்தை விட வைடமின் சி சத்து 5 மடங்கு அதிகம் கொண்டதாக பச்சை வாழைப்பழம் உள்ளது. வைட்டமின் சி சத்தை விட ஸ்திரமாக இருக்கும் வைட்டமின் பி சத்தும், அதிக வெப்ப வெளிப்பாட்டில் அதன் சத்து அளவை இழக்க நேரிடுகிறது.
 
உயர் வெப்ப நிலையில் சமைக்கப்படும்போது வைடமின் பி சத்து குறையலாம். சமைப்பதால் அணுக்களின் சுவர்கள் மற்றும் ஸ்டார்ச் அளவில் மாறுபாடு காரணமாக, வாழைப்பழத்தின் உறுதி மற்றும் நார்ச்சத்து போன்றவற்றில் தாக்கம் ஏற்படுகிறது. அதனால் தான், சமைத்த வாழைப்பழம் ஜெல் போன்ற அடர்த்தியான மேல்பகுதியைக் கொண்டிருக்கும்.///


தமிழர்  வாழைப்பழத்தைச் சமைத்து உண்பதை என்றும் நான் பார்த்தது இல்லை.

சக 

kanmani tamil

unread,
Jul 1, 2026, 12:08:32 AM (6 days ago) Jul 1
to vallamai
தண்டட்டி / பாம்படம் போன்ற அணிகளின் பெயர்க் காரணமும் பூர்விக வரலாறும்...

/// தங்கட்டி, தண்டட்டி, பாம்படம் என பல பெயர்களில் அழைக்கும் காதணிகளை இன்று பெரும்பாலான பாட்டிகள் அணிந்திருந்தாலும் இதை ஏன் அணிகிறார்கள்? முன்பு யார் எதற்காக அணிந்தார்கள்? என்ற விளக்கங்களைத் தேடிப்பார்த்தால் விஞ்ஞானமும் வாழ்வியலும் வரலாறும் இதனூடே கொட்டிக்கிடக்கிறது.

தங்கட்டிகள் ஆண், பெண் பேதமில்லாமல் அணிந்திருந்தாலும் பெரும்பாலும் சதுரம் மற்றும் முக்கோணங்களாக மட்டுமே முன்பு இருந்திருக்கிறது.  இதை அழகுக்காக இல்லாமல் அந்த சமூகக் குழுக்கள் செய்யும் தொழில்களின் அடிப்படையிலும் செய்து அணிந்திருக்கிறார்கள்.

நில அளவை மற்றும் கட்டமைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடுபவர்கள் முக்கோண வடிவ அணிகளை அணிவார்கள் அதாவது இரண்டு அணிகளையும் சேர்த்து வைத்தால் அது நவீன அளவீடுகளில் பயன்படுத்தும் Setsquare களாக மாறும். 

இதையே தாடங்கம் என்ற பெயரில் ஆன்மீகவாதிகள் சூரிய, சந்திரன் அல்லது சங்கு, சக்கர வடிவில் அணிவார்கள் இதில் பெரும்பாலும் திருமண், திருச்சாம்பல், சாந்துகளை சிறிய அளவில் சேகரித்து வைத்திருப்பார்கள். 

மருத்துவர்கள் முதலுதவி மருந்துகளை எப்போதும் கூட வைத்துகொள்ளும் பொருட்டு சதுர அணிகளில் சேகரித்து மாட்டியிருக்கிறார்கள் அது அந்த காலத்து First aid kit.

பாம்புகளை பிடிக்கும் பிடாரிகள் நஞ்சுமுறிக்கும் மருந்தை அடைத்துவைக்க பயன்பட்ட முக்கோண அணியின் கொக்கி பாம்பு படமெடுப்பதை போல இருப்பதால் அதற்கு பாம்படம் எனப்பெயர்... இது இன்றளவும் பிடாரர்களிடம் வழக்கிலிருக்கிறது.

செய்தி சொல்பவர்கள் தாங்கள் எடுத்துச்செல்லும் ஓலைநறுக்கை காதில் சுருட்டி வைத்துச் செல்வார்கள் அது அவர்களின் தனி அதிகாரமும் அங்கீகாரமும்... அதன் பெயர் காதோலை அதாவது அந்தக் காலத்து SMS! இந்தப் பழக்கம் இன்றளவும் குலதெய்வ வழிபாட்டில் காதோலை வைக்கும் வழிபாடாக பின்பற்றப்படுகிறது.

நடனமாடுபவர்கள் அணிவது பத்ரகுண்டலம்
இதை கடவுள்களில் சிவனுக்கு மட்டுமே அணிவிப்பார்கள்.
சிவன் ஒரு காதில் பிரேதத்தை அணிந்திருப்பார் அதற்கு பிரேத குண்டலம் என்றே பெயர்.
கர்ணன் பிறக்கும்போதே குண்டலங்களோடு பிறந்ததாக மஹாபாரதம் சொல்கிறது.

தண்டட்டிகள் தங்கம், தாமிரங்களில் மட்டுமே செய்யப்படும்... வெள்ளி மற்றும் வேறெந்த உலோகத்திலும் செய்ய மாட்டார்கள். அணிபவரின் காதுகளில் கனமான பொருள்களை சேகரித்து மாட்டுவதால் காதுகள் தொங்கி பெரிய ஓட்டைகளாக தெரியும். 

புத்தர், பல நாயன்மார்கள் தீர்த்தங்கரர்களின் சிலைகளில் காதுகள் தளர்ந்து தொங்கியவாறு காட்டுவார்கள் காரணம் அவர்கள் பூர்வாங்கத்தில் நல்ல வசதியோடு காதுகளில் பெரிய காதணி அணிந்ததால் காதுகள் தளர்ந்திருக்கிறது என்பதை குறிக்கவே.

ஆதிக்குடிகளில் பல குழுக்கள் இப்போதும் அவர்களின் வாழ்வியலோடு ஒத்துப்போகும் பல பொருட்களை காதுகளில் அணியும் பழக்கமிருப்பதை பார்த்திருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் காணி மக்கள் மஞ்சாடி, குன்றிமணியால் செய்த காதணிகளை அணிவார்கள்.  அதே மலைத்தொடர்களுக்கு அருகிலிருக்கும் மக்களின் வழிபாட்டுப் பொருளாகவும் இவை இருக்கும். குருவாயூர் கோவிலில் இதைப் பார்க்கலாம்.

படம்: Srivatsansankaran என்ற insta பக்கத்திலிருந்து எடுத்தது.

#தங்கட்டி 
#தண்டட்டி///


தெரிவு:சக 

Raju Rajendran

unread,
Jul 2, 2026, 10:13:17 PM (4 days ago) Jul 2
to vall...@googlegroups.com
கனங்குழை மாதர்கொல்!

செவ்., 30 ஜூன், 2026, 9:08 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvg-PEgLAQWq-R9_Wc9o%3DN440KysOauZrzuoNXHXiTzQg%40mail.gmail.com.


--

Raju M. Rajendran
Reply all
Reply to author
Forward
0 new messages