ஆனால்கருப்பு வில்லி என காமனைக் குறிக்கும் சொல் உள்ளதுஅதாவது கரும்பினை வில்லாக ஏந்தியவன் எனும் பொருளில்
துணையுந் தொழுந்தெய் வமும்பெற் றதாயும் சுருதிகளின்
பணையுங் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையுங் கருப்புச் சிலையுமென் பாசாங் குசமுங்கையி
லணையுந் திரிபுர சுந்தரி யாவ தறிந்தனமேஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே, n. < கறு-. [M. kaṟuppu.] 1. Blackness, darkness; கருமை. (பிங்.) 2. Anger, displeasure; வெகுளி. (தொல். சொல். 372.) 3. Moral delinquency, blemish, fault; குற்றம். உள்ளக் கறுப்பினை யறுத்து (சிவதரு. சிவதரும. 25). 4. Spot, taint, pollution, moral defilement; கறை. 5. See கறுப்புப்புள்ளி. 6. Scar; தழும்பு. கைத் தலத்துணை கறுப்புற (உபதேசகா. சிவபுண்ய. 315). 7. (Astron.) Rāhu, the ascending node; இராகு. (சூடா.) 8. Minor evil spirits; பேய்பிசாசுகள். Loc. கறுப்பென்னிலோ போய்ப்பணிகுவார் (அறப். சத. 30). 9. Opium; அபின். Tinn. 10. Ambergris; மீனம்பர். (W.) 11. Ebony. See தும்பிலி. (M.M.)
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:6061.tamillex, n. < கரு-மை. [T. karuvu.] Famine, dearth, scarcity; பஞ்சம். மழையின்றிப் பசையில் கருப்புவர (சேதுபு. வேதாள. 20).
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:4312.tamillex--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2016-08-04 1:31 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:ஆனால்கருப்பு வில்லி என காமனைக் குறிக்கும் சொல் உள்ளதுஅதாவது கரும்பினை வில்லாக ஏந்தியவன் எனும் பொருளில்இந்த இடத்தில் கரும்பின் வலித்தல் விகாரம் கருப்பு. கருப்புச் சிலை மன்மதனுக்கு மட்டுமல்லாமல் உமையம்மையின் (லலிதை போன்ற) பல வடிவங்களுக்கும் உண்டு.
காரெனவும் கரியெனவும் கருமையெனவும் பயன் காணும் காலத்தில் கருப்பு எனப்படுவது நிறத்தை விடுத்து பஞ்சத்தை குறிக்கும் சொல்லாக கைகொளப்பட்டது மரபு
கருப்பு கறுப்பாகாது. கருப்பு கருமையை குறிக்காது
286 அகநானூற்று பாடலில் வரும் கருப்பு உலக்கை என்பதை சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் தீங்கரும்பு நல்லுக்கையாக என்னும் பகுதியோடு ஒருங்கக்காண கரும்பை உலக்கையாக்கல் வளத்தை பாடும் மொழியென தேறி, கருப்புலக்கை என்பது கரும்புலக்கை என்றே பொருளாய் நிற்கும். ஆக கருப்பு என்பதை நிறத்தை குறிக்கும் மொழியாக சங்கத்தில் காணக்கிடக்காது
ஜலசயனன்