ஸ்குடாய்ட்: என்பதன் தொடர்ச்சியாகக் கொள்ளலாம் / நத்து / மீசையிடை

8 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Aug 5, 2018, 2:11:22 AM8/5/18
to தமிழ் மன்றம், mintamil, vallamai, thamizayam, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com, Raji M
நூ த லோ சு
மயிலை
ஸ்குடாய்ட்: என்பதன் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்
/
நத்து
மீசையிடை 
    

மூக்கிற்கு கீழே ஆனால் மேலுதடுக்கும் மேலே இடையில்
உள்ள பள்ளத்தாக்கு அதனுக்கு தமிழில் என்ன சொல் ?


ஆண்களானால் மீசைஇடை(பள்ளத்தாக்கு)
பெண்களானால் நத்து (இடஆகுபெயராக - மூக்கின்அணிகலன் நத்து-புல்லாக்கு 
தொங்கும்
 
இடம்)

ஆங்கிலத்தில்  philrum (
https://en.wikipedia.org/wiki/Philtrum
எனச் சொல்கிறார்கள்
பெண்கள் அணிகலன் அணிவதற்கு தேர்ந்த உறுப்புதான்
                                   ------------------------

2018-08-05 0:10 GMT+05:30 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>:
அருமையான கட்டுரை முனைவர் தேமொழி!

மிகநன்றி.

scutellum   என்பது பூச்சிகளின் உடலமைப்பில் நெஞ்சுப்பகுதியில்
இருக்கும் முப்பகுதிகளில் இடைப்பகுதியின் புறப்பக்கத்தில் உள்ள
ஒரு பகுதி.. 
இது  வண்டு முதலான பூச்சிகளில் முக்கோண வடிவில் அமைந்த
புறக்கேடயத்தில் உள்ள ஒருபகுதி.
கீழுள்ள படத்தில்
9 என்னும் எண் குறிப்பிடும் பகுதி. (படம் விக்கிப்பீடியா)
இந்த  scutellum  என்பது இலத்தீனச்சொல்லாகிய  scutum (shield).  (கேடயம்)
என்பதிலிருந்து சிறிய கேடயம் என்னும் பொருளில் உருவாக்கப்பட்டது
(ஏறத்தாழ 1819 இல்)


எனவே scutoid என்பது இந்தச் சிறிய கேடயம் போன்ற
வடிவையொத்த வடிவம் என்று பொருள்.  
எனவே  scutoid   என்பதை கேடயப்போன்மி  எனலாம். 

இதே போல  hemihelix  என்றும் ஒரு வடிவத்தைக் குறித்திருந்தீர்கள்.
அதில்  hemi என்றால் பாதி, அரை என்றுபொருள்
(இதனை நீங்களும் அறிவீர்கள்),
helix  என்பது சுருள், திருகுசுருள், சுரி என்று பலவாறு தமிழில்
அழைக்கப்படுகின்றது. இதனை அரைச்சுரி எனலாம். இங்கே
பாதி என்பதினும் இடையிலே சுருள்திசை மாறுபடுவது என்றும்
பொருள்படும். எனவே குறைச்சுரி எனவோ முறைமாறிச்சுரி என்றோ
சொல்லலாம்.   

மீண்டும் நன்றி.

செல்வா



2018-08-04 12:44 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நன்றி: http://siragu.com/ஸ்குடாய்ட்-கணித-வடிவியல/

ஸ்குடாய்ட்: கணித வடிவியலில் ஒரு புதிய வடிவம் அறிமுகம்

தேமொழி 

Aug 4, 2018
Untitled.jpg

ஸ்குடாய்ட் (Scutoid) வடிவம் இயற்கையில் எங்கும் காணும் ஒரு வடிவம். ஒரு நீண்ட ஐந்து பக்கங்கள் கொண்ட பட்டக வடிவத்தின் ஒரு முனையில் மட்டும் வெட்டப்பட்டு, அப்பகுதியில் மட்டும் ஆறு பக்கங்கள் கொண்ட தோற்றத்தில் அமைந்த வடிவம் ஸ்குடாய்ட். இவ்வடிவத்தின் நீண்ட முனையில் இருக்கும் சமதளப் பகுதிகளின் ஒரு புறம் அறுகோண வடிவையும், அதன் எதிர்ப்புறம் ஐங்கோண வடிவையும் கொண்டிருக்கும். இத்தகைய வடிவ அமைப்பால் ஆறு பக்கங்கள் கொண்ட ஒரு பட்டகத்தின் பகுதியையும், ஐந்து பக்கங்கள் கொண்ட மற்றொரு பட்டகத்தின் பகுதியையும் அருகருகே இடைவெளி இன்றி வளைவான தளங்களிலும் மாற்றி மாற்றி வரிசையாகவும் நெருக்கமாகவும் இணைக்க முடியும். நம் உடலில் உள்ள திசுக்களில் உள்ள உயிரணுக்கள் இந்த வடிவம் கொண்டவையே. இத்தகைய பல பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் கொண்ட அமைப்பு, உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இடைவெளி இன்றி அமைந்திட உதவுகிறது. இத்தகைய மேம்பட்ட அமைப்பு உடலின் சக்தியை குறைவாகச் செலவழிக்க உதவுவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முப்பரிமாண தோற்றத்தில் காணும்பொழுது, வளைவுகள் கொண்ட உடலுறுப்புகளிலும் மிக நெருக்கமாக அடுக்கப்பட்டவகையில் இந்த ஸ்குடாய்ட் வடிவம் கொண்ட உயிரணுக்கள் அமைந்துள்ளன. தோலின் மேற்புறம் ‘எபித்தீலியல்’ உயிரணுக்களின் (epithelial cells) தோற்றமும் ஸ்குடாய்ட் வடிவமே. இவ்வாறு இயற்கையில் பரவலாக எங்கும் காணக்கிடைக்கும் இந்த வடிவத்திற்கு, வடிவியலில் இதுவரை பெயர் இல்லாதிருந்ததால், பெயர் சூட்ட எண்ணிய அறிவியலாளர்கள் வண்டுகள் சிலவற்றின் மேற்புறம் கவசம் போல அமைந்த ‘ஸ்கூட்டெல்லம்’ (scutellum) என்ற அமைப்பின் தோற்றத்தை ஒத்திருக்கும் இந்த வடிவத்திற்கு ஸ்குடாய்ட் வடிவம் என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

ஸ்குடாய்ட் வடிவம் உயிரியல் ஆய்வாளர்கள் உலகிற்குத் தந்த ஒரு புதிய கண்டுபிடிப்பு. ஸ்குடாய்ட் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த ஆய்வுக்கட்டுரை, சமீபத்திய ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ (Nature Communications, Published: 27 July 2018) இதழில் வெளியானது. இவ்வாறே ‘ஹெமிஹெலிக்ஸ்’ (hemihelix) என்றொரு வடிவமும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. வட்டம், நாற்கரம், முக்கோணம், கூம்பு, கோளம் என்ற வகையில் கணிதத்தில் வடிவியலில் படித்திருந்த அனைவருக்கும் இனி ஸ்குடாய்ட் வடிவத்தின் கனவளவு கொள்ளளவு, பரப்பளவு என்றெலாம் கணக்கிட சூத்திரங்களும் படிக்க வேண்டியிருக்கும்.


Contents and Image Courtesy:

Scutoids are a geometrical solution to three-dimensional packing of epithelia, Pedro Gómez-Gálvez et. al., Nature Communicationsvolume 9, Article number: 2960 (2018), Published: 27 July 2018

https://www.nature.com/articles/s41467-018-05376-1#rightslink


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages