சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். 20:7
(படத்தில் உள்ள கல்கத்தா ஆல மரத்தின் அடி மரம் கெட்டுப்போனதால் 1925 ஆம் ஆண்டு அகற்றப்பட்டுவிட்டது)
கல்கத்தா ஆலமரம் போலவே, நாலடியாரின் பாடலுக்கு விளக்கமாய், அடையாறு ஆலமரத்தின் அடிமரமும்
1989-ல் வீசிய புயலாய் சிதையுண்டது. அடிமரத்தின் உயிர்மீட்கப் பட்ட பாடு வீணானது. ஆனால், அதிசயமான
முறையில் விழுதுகள் அடையாறு ஆலமரத்தைக் காப்பாற்றிவிட்டன:
ஆல் < யால்-. யாடு > ஆடு, யாமை > ஆமை, ..... போல யால்- > ஆல் என்றானது.
யால நேஷனல் பார்க் இலங்கையின் தென்கோடியில் உண்டு. பொள்ளாச்சி, மூணாறு, பறளியாறு (குன்னூர்) போல இயறகைவளம் மிகுந்த வனம் யால வனம்.
பழந்தமிழர்கள் இலங்கை முழுதும் வாழ்ந்தபோது யால (=ஆலமரம்) மரங்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.
ஆலுக்கு யால் என்ற பெயர் வேதத்தில் முக்கியமான பகுதியை வர்ணிக்கும் பரிபாடல் பகுதியில் இருக்கிறது எனக் கருதுகிறேன்.
அந்த ஆலைப் பெருமரம் என்கிறார் மதுரை தமிழ் சங்கத்தில் புலவர்களை வென்ற பாட்டில் நம்மாழ்வார்.
100+ ஆண்டுகளுக்கு முன் கிடைத்த அப்பாடலைக் கண்டுபிடித்த ரா. ராகவையங்கார் விளக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை நூலகத்தில்
நான் கொடுத்தது இருக்கிறது. பாருங்கள். இப் பெருமரம் பற்றி சிந்து சமவெளிக் கண்டுபிடிப்புகள், தமிழக வரலாறு (சங்கம், Pre-Sangam archaeology
of Visirikkal athropomophic axe megalithic sculptures) கொண்டு மேலும் விளக்கவியலும்.
முதியோர் இல்லம் (நாலடியார்)
கோடை இன்னும் முடிந்தபாடில்லை. வெயிலின் கடுமையும் குறைந்த பாடில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு பனையூர் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார் புலவர். நண்பர் நல்லயனைப் பார்த்து எத்தனைக் காலம் ஆயிற்று. இதோ இன்னும் அரை கல் தொலைவில் பனையூர். புலவருக்கு களைப்பு மேலிட்டது. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் தருவாய் சாலையோரத்தில் ஆலமரம் ஒன்று விரிந்து பரந்திருந்தது. ஆலமரத்தின் நிழலில் இருந்த சுமைதாங்கியில் இடுப்பில் இருந்த மூட்டையை வைத்து விட்டு, பக்கவாட்டில் இருந்த நெடுங்கல்லில் சாய்ந்து உட்கார்ந்தார். அங்கும் இங்குமாக விழுதுகள் இறங்கி நிலத்தில் ஊன்றியிருந்தன. இளம்விழுதுகள் காற்றில் ஊசலாடிக் கொண்டிருந்தன. ஆனால் அடிமரமோ பாதிக்குமேல் கரையானால் அரிக்கப்பட்டு வலுவிழந்து இருந்தது.
பார்வையை மேலே உயர்த்தினார் புலவர். பச்சைப் பசேலென்ற இலைகள், இடையிடையே பழுத்து சிரித்துக் கொண்டிருந்த சிவந்த பழங்கள். பழங்களைக் கொத்தி அங்கும் இங்கும் பாடிப் பறந்து கொண்டிருந்த குயில்கள், அந்தப் பாடல்களை சீட்டியடித்து ரசித்துக் கொண்டிருந்த பச்சைக் கிளிகள். எல்லாமே அற்புதமாக இருந்தன. ஒரு குறைவும் இல்லை விழுதுகள் தாங்கி நிற்கும் இந்த ஆல மரத்திற்கு
இந்த எழிலான காட்சியை உவமைப் படுத்தி பாடல் ஒன்று எழுத எண்ணம் வந்தது புலவருக்கு. உடன் உதித்தன உவமை வரிகள்
“சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி ஆங்கு.”
.....................................................................................................................................
மண்வெட்டியை தோளில் சுமந்து கொண்டு சாலை வழியே வந்த ஓர் இளைஞன், புலவரைப் பார்த்து
“ஐயா, தாங்கள் யார், யாரைப் பார்க்க வேண்டும்”
“யான் ஓர் புலவன் தம்பி.. இதோ இந்த பனையூரில் என் நண்பர் நல்லயனைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன். சந்தைத்தோப்பு பக்கத்திலேதான் அவர் வீடு”
“அப்படியா..வணக்கம்.... வணக்கம் அய்யா. நான் அவரின் பிள்ளைதான். இ வாருங்கள் போகலாம்.”
“மகிழ்ச்சி மகிழ்ச்சி ....பத்து ஆண்டுகளுக்கு முன் உன்னைப் பார்த்தது. வளர்ந்து இளைஞனாகி ஆகி விட்டாய் .உன் பெயர் நல்லமுத்து தானே ?”
“ஆமாம் ஐயா.”
“ம் ம் , உன் தந்தை நல்லயனுக்கு உன் தாத்தா முத்தையன் மீது பாசம் அதிகம்.எனவேதான் அவர் பெயரையே உனக்கு சூட்டியுள்ளார். நீயும் அப்பாவிடம் பாசத்தோடும் பற்றோடும் நடந்து கொள்ள வேண்டும்”
“ உங்கள் ஆசியின்படி அப்படியே ..........இதோ வீடு வதுவிட்டது”
.இருவரும் வாசலில் கால் கழுவிக்கொண்டு உள்ளே சென்றனர். கயிற்றுக் கட்டிலில் சாய்ந்திருந்த நல்லையன் நிமிர்ந்து
“வாருங்கள் புலவரே .....வாருங்கள்....எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன உங்களைக் கண்டு...அமருங்கள்”
“ மகிழ்ச்சி நல்லையா, மகிழ்ச்சி. என்ன தளர்ச்சியாக இருக்கிறீர்கள்”
“வயதாகி விட்டது...... வேறொன்றும் இல்லை. தளர்ச்சி உடலுக்குத்தானே தவிர மனதுக்கு இல்லை. பிள்ளை வேளாண்மையை நன்றாக பார்த்துக் கொள்கிறான்.மனைவியும் மருமகளும் வீட்டை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்.தளர்ச்சியிலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.சரி, உணவு ஏற்பாடாகிவிட்டது .....வாருங்கள்”
புலவருக்கு உவமேயமும் உதித்து விட்டது.
“குதலைமை தந்தைகட் தோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.”
இதோ அந்த நாலடி :
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். 20:7(படத்தில் உள்ள கல்கத்தா ஆல மரத்தின் அடி மரம் கெட்டுப்போனதால் 1925 ஆம் ஆண்டு அகற்றப்பட்டுவிட்டது)
திரு. சிங்கநெஞ்சன்,அற்புதமாக ஒருகதை போல், நாலடி வெண்பா விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். 20:7(படத்தில் உள்ள கல்கத்தா ஆல மரத்தின் அடி மரம் கெட்டுப்போனதால் 1925 ஆம் ஆண்டு அகற்றப்பட்டுவிட்டது)
கல்கத்தா ஆலமரம் போலவே, நாலடியாரின் பாடலுக்கு விளக்கமாய், அடையாறு ஆலமரத்தின் அடிமரமும்
1989-ல் வீசிய புயலாய் சிதையுண்டது. அடிமரத்தின் உயிர்மீட்கப் பட்ட பாடு வீணானது. ஆனால், அதிசயமான
முறையில் விழுதுகள் அடையாறு ஆலமரத்தைக் காப்பாற்றிவிட்டன:
ஆற்றங்கரை ஆலமரம்

ஆற்றங் கரையி லோர் ஆல மரம்
நேற்று வரை நின்றிருந்தது
போற்றிடும் எழிலுடனே அது
பல வண்ணப் பறவைகள் பழந் தின்று
இசை பாடி மகிழ்ந்த மரம்
விழுதுகள் பல விட்டே
கம்பீரமாய் நின்ற தம்மரம்
தொங்கிடும் விழுதுகளிலே
தொங்கியே ஆடி மகிழ்வார்
அங்கு வந்தே
எங்களூர் சிறார் பலர்
வறுத் தெடுக்கும் வெய்யிலில்
கருத்து வந்த வழிப் போக்கர்
களைப்பு தீர ஆற்று நீர் பருகியே
படுத் துறங்குவார் அதன் குளிர் நிழலில்
எங்கிருந்தோ வந்தா ரிருவர்
கையில் வாளும் அறுவாளும் கொண்டு
வெட்டிச் சாய்த்தார் கிளை கிளையாய்
அழகு தந்த அந்த மரம்
வேண்டுமா மிந்த இடம்
உல்லாசப் பயணிகளுக்கு
விடுதி யொன்று கட்டிடவே
தங்குவோர் ரசிப்பாராம்
இயற்கையின் எழிலினை!
வீடழித்துக் காப்போரோ
வீதியின் அழகு தனை
எங்கு போய்ச் சொல்வேன்
இந்த அவலம் தனை?
(படத்திற்கு நன்றி நவில வேண்டும் விக்கிமீடியாவிற்கு)
09-02-2012 நடராஜன் கல்பட்டு
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
###அருமை!!! அருமை!!! அருமை!!! தொடருங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.###நீங்கள் இப்படி பாராட்டியிருப்பது பார்த்து என் உச்சி குளிர்ந்து விட்டது.உங்கள் படைப்புகளைப் பார்த்து வியப்பவன் நான். மிக்க நன்றி. தொடர்வேன்.
2016-06-12 22:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அன்பு நா. கணேசன்,நீங்கள் கண்டு மகிழ ஒரு ஆற்றங்கரை ஆல்மரம் இங்கே: