யாப்பருங்கலக் காரிகை

17 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 7, 2023, 7:43:28 PM8/7/23
to Santhavasantham
முத்துவீரியம் பேசும் 8 வகை அளபெடைகள் :

1. இயற்கை அளபெடை - அழைத்தல், விலைகூறல், புலம்பல் - இவற்றுள் வருவது
2. செயற்கை அறபெடை - செய்யுளில் சீர் தளை கெட்ட விடத்துப் புலவன் கொள்வது.
3. இன்னிசை அளபெடை - ‘கெடுப்பதூஉம்’ எடுப்பதூஉம்’ (குறள் 15)
4. சொல்லிசை அளபெடை - தளைஇ (தளைந்து என்பது திரிந்து அளபெடுத்தது.)
5. நெடிலளபெடை - தனி நெட்டெழுத்து அளபெடுப்பது : ஆஅ
6. குறிலளபெடை - குற்றெழுத்து நெடிலாகி அளபெடுப்பது:
பழூஉப் பல்
7. ஒற்றளபெடை - கண்ண்
8. எழுத்துப்பேறு அளபெடை - உவாஅப் பதினான்கு.
                - கோதை மோகன்

நன்று. முத்துவீரியத்தில் உள்ள செய்தி:
https://www.tamilvu.org/slet/l0100/l0100pd2.jsp?bookid=16&pno=450
உயிரளபெடை அலகு பெறாமை

963. அளபெடை யாவியு மவற்றோ ரற்றே.

என்பது, உயிரளபெடையும் அலகு காரியம் பெறாவாம்.

(வ-று.)

‘‘பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னந் தோற்றிலவால்-நெல்லுக்கு
நூறோஒநூ றென்பாள் நுடங்கிடைக்கும் மென்முலைக்கும்
மாறோமா லன்றளந்த மண்.’’

உயிரளபெடை. (2)

இதற்கு நல்ல காட்டு, யாப்பருங்கலக் காரிகையில் உள்ளது:
   மாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக்
   கேவின் முரணு மிருள்பரந் தீண்டள பாஅவளிய
   ஓவிலந் தாதி உலகுட னாமொக்கு மேயிரட்டை
   பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பணிமொழியே. 18
   
   பாஅவளிய - இது கூவிளங்காய் அலகுபெறும்.
   
   நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 7, 2023, 8:25:49 PM8/7/23
to Santhavasantham, Mylsamy Mohanasundaram
நன்றி, திரு. கோதை மோகன். யா. கா.யில் அடியீற்றுச் சீர்கள்.
Kaarigai.docx

N. Ganesan

unread,
Aug 7, 2023, 11:21:39 PM8/7/23
to Santhavasantham
யாப்பருங்கலக் காரிகையில், சில அடிகளின் ஈற்றுச்சீர்கள்: காகும்வெள்ளை, மூன்றின்வந்தால், நிகரில்வெள்ளைக், முடியின்வெள்ளைச், செய்யும்விழி, விருத்தங்களே. இவற்றில் மெல்லெழுத்தை நீக்கி அலகிடுவது உண்டா?
   
An analogy: In mathematics, e.g., DSP FFT analysis, we use generalized/pseudo-inverses. This makes it possible the JPEG revolution in digital images. Not just square matrices, but even rectangular ones, can be inverted. Just like this, can the above "ciir"-s be considered as "generalized viLaGkAyc ciir", omitting the mellezuttu “soft letters”, such as ங், ஞ், ண், ந், ம்,ன், + ல்

நா. கணேசன்

Kaarigai.docx

N. Ganesan

unread,
Aug 8, 2023, 12:10:21 AM8/8/23
to Santhavasantham
இந்த இழையில் உள்ள உதாரணங்கள் பயன்படும்:
Reply all
Reply to author
Forward
0 new messages