தீபாவளிப் பரிசாக ஏதாவது தரலாம் என்று நினைத்தேன். நூற்கடலில் வாழும் ஒருவன் என்ன தரமுடியும்? சில அபூர்வமான நூல்களைப் பற்றிச் சின்ன குறிப்புகளாகத் தர ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள். நிறுத்திவிடுகிறேன். அதற்கென்று வீடு கட்டாதீர்கள்.
நூல் என்ற கருமாந்திரத்தை மறந்து தொலைக்கத்தானே இணையத்துக்கு வருகிறோம். இங்ஙனயும் வந்து ஏன் உயிரை வாங்குகிறாய் என்று அலுத்துக்கொள்கிறவர்களுக்கு என்று இருக்கவே இருக்கிறது டெலீட் பட்டன். இப்பொழுதுதான் நினைச்சேன்; சொல்லிட்டே - என்றபடியான காமெடிகள் ரசிக்கப்படும். Best Policy - அமைதியாகப் படித்துவிட்டு என்ன தோன்றுகிறதோ அந்தக் கருத்தை நன்கு நிதானமாகவும், தெளிவாகவும் யாருக்கும் வருத்தம் ஏற்படாத வகையில் பதிலிடுவது. ஆரம்பத்தில் கொஞ்சம் முயற்சி வேண்டும். போகப்போகப் பழகிவிடும். சரி இனி விஷயத்திற்குச் செல்வோம்.
*
குதிரைகளைப் பார்த்து அதன் துள்ளல்களையும், விரைந்த பாய்ச்சல்களையும், லாகவமான நடைகளையும் கண்டு வியக்காதவர் இருக்க முடியுமா?
சாண்டில்யன் நாவல்களில் குதிரை வீரர்களின் உலகங்கள் மலைச்சரிவுகளில், பிரதான சாலைகளில், காடுகளில் அற்புதமாக வர்ணிக்கப்படும் போது, அடேயப்பா...! குதிரைகளைப் பற்றிய சாத்திரம் ஏதாவது இருக்குமா என்று யோசித்ததுண்டு. இருக்கிறது அப்படி ஒரு சாத்திரம்.
அசவ சாஸ்த்ரம். - தஞ்சை சர்ஸ்வதி மஹால் தொடர் வெளியீடுகளில் நம்பர் 56. 1952 ஆம் ஆண்டு வெளியானது. தஞ்சை மஹாராஜா சர்ஃபோஜி சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது.
இந்த அச்வ சாஸ்த்ரம், நகுலன் என்பவரால் எழுதப்பட்டது. இவர் பாண்டவர்களில் ஒருவரான நகுலனே என்கிறது நூல். சாலிஹோத்ரர், ஸுச்ருதர், கர்கர் ஆகியோரின் நூல்களிலிருந்து கருத்துகளைப் பாமரர்களும் எளிதில் அறிந்துகொள்ளும் படியாக இந்த நகுலரின் நூல் கூறுவதாக முகப்பில் தெரிவிக்கப்படுகிறது. வடமொழியில் உள்ள இந்த நூலை பதிப்பித்தவர் திரு கோபாலன். திரு ஸ்வாமினாத ஆத்ரேயன் அவர்களின் கடும் உழைப்பு நூலை நன்கு உருவாக்கியிருக்கிறது. திரு சுப்ரமண்ய சாஸ்திரிகளின் தமிழாக்கம் மிக எளிமையாக இருக்கிறது. ஆங்கிலத்திலும் நூலின் சுருக்கம் தரப்பட்டு சிறப்படையச் செய்கிறது. இந்தச் சுவடி வண்ணப் படங்களுடன் கூடிய சுவடி. எனவே பலவித குதிரைகளின் வண்ணப் படங்கள், குதிரை உபகரணங்களின் படங்கள் எல்லாம் சேர்ந்து நூலை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகின்றன.
குதிரைகளின் பெருமை, ரைவதர் துதி, குதிரை இறக்கை இழந்த வரலாறு, உடலமைப்பு, அங்கங்களின் இலக்கணம், அசுவ இலக்கண வகுப்பு, வயது முறையும் அங்க வகுப்பும், ஆவர்த்தங்கள், சித்திரவர்ணக் குதிரைகள், புண்டிர லக்ஷணங்களும் பலன்களும், புஷ்ப லட்சணம், குதிரை கனைப்பின் பலன், குதிரையின் மணமும் பலனும், குதிரை சாயையும் பலனும், நடை இலக்கணம், ஸத்துவ (தன்மை) இலக்கணம், முற்றும் தவிர்க்க வேண்டிய தோஷங்கள், கன்னத்தின் நிறமும் பலனும், ஜாதிக் குதிரைகள், வயதறியும் வகை, நிற இலக்கணம், அரசனுக்கேற்ற குதிரை, ஆயுள், குதிரை உணர்த்தும் பெருங்கேடுகள், குதிரைகளைப் பழக்கும் விதம், குதிரைகளின் நடை, க்திரை ஏற்றம் ஆகிய தலைப்புகளில் நூல் குதிரையைப் பற்றித் தெரிவிக்கின்றது.
குதிரைகளின் மனோதத்துவம் பற்றி அநுபந்தம் கூறுகிறது. சாலிஹோத்திர வைசம்பாயனீயம் என்ற ஸாரஸிந்து என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்திருக்கிறார்கள். சில விஷயங்கள் மிக சுவாரசியமானவை.
-- குதிரையில் ஏறியவன் ஒருவித ஆபத்தும் நேராத பொழுது கீழே விழுந்தால் குதிரை சிரிக்கும்.
அரசன் முடிசூடும் பொழுதும், கொள்ளு தின்னும் பொழுதும், மாலை கொள்ளு தின்னும் பொழுதும், மணி ஓசை கேட்கும் பொழுதும், நல்ல மனதுடையோன் ஏறும் பொழுதும் குதிரை சந்தோஷமடையும்.
கலவி, ருதுகாலம், யுத்தம், வெற்றி, யாகம், தீனி, திறமையுள்ளவனின் ஏற்றம், கூட்டத்தை விட்டுப் பிரியும் காலம், புதுக்குதிரையைக் காணும் சமயம் இவைகளில் குதிரை கனைக்கும்.
தனக்குச் சமமான வேகமற்ற குதிரையுடன் ஓட நேரும் போது வெட்கம் கொண்டு புழுதியை வாரி இறைக்கும்.
-- இவை சில மாதிரிக்கு.
குதிரைகளின் வயது பற்றி சாலிஹோத்திரர் கூறுவது --
மனிதனுக்கு நூறு, யானைக்கு நூற்றி இருபது, பசுவிற்கு 24, கழுதை ஒட்டை - 25, நாய் - 16, நரி - 25, புழு - 7 நாள், ஈ - 14 நாள், குதிரை -- 32 வருஷங்கள்.
மத்தம், அவி, காச்யம், அச்மகேயம், மாலிகம், சுவேதவாகனம், மேசகம், சுவேதகிரிஜம், வைதர்பம் ஆகிய ஒன்பது ஜாதிக் குதிரைகளும் ‘கோடகம்’ என்னும் வகையில் அடங்கும்.
இப்படி ஒரு நூல் என் சேகரிப்பில். இதைப் போல் கஜ சாத்திரம் என்று ஒன்று. அது எங்கு போயிற்றோ தெரியவில்லை. கண்ணில் பட்டால் சொல்கிறேன்.
(அடுத்த நூல் என்ன தெரியுமா? -- weather report. ஆதிகால இனங்களில் என்ன என்ன சூசகங்களை வைத்து வானிலை அறிக்கையை அறிந்தார்கள் என்பதைப் பற்றிய ஒரு நூல். விரைவில் எதிர்பாருங்கள் )
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
--
-- குதிரையில் ஏறியவன் ஒருவித ஆபத்தும் நேராத பொழுது கீழே விழுந்தால் குதிரை சிரிக்கும்.
அரசன் முடிசூடும் பொழுதும், கொள்ளு தின்னும் பொழுதும், மாலை கொள்ளு தின்னும் பொழுதும், மணி ஓசை கேட்கும் பொழுதும், நல்ல மனதுடையோன் ஏறும் பொழுதும் குதிரை சந்தோஷமடையும்.
கலவி, ருதுகாலம், யுத்தம், வெற்றி, யாகம், தீனி, திறமையுள்ளவனின் ஏற்றம், கூட்டத்தை விட்டுப் பிரியும் காலம், புதுக்குதிரையைக் காணும் சமயம் இவைகளில் குதிரை கனைக்கும்.
தனக்குச் சமமான வேகமற்ற குதிரையுடன் ஓட நேரும் போது வெட்கம் கொண்டு புழுதியை வாரி இறைக்கும்.
-- இவை சில மாதிரிக்கு.
(அடுத்த நூல் என்ன தெரியுமா? -- weather report. ஆதிகால இனங்களில் என்ன என்ன சூசகங்களை வைத்து வானிலை அறிக்கையை அறிந்தார்கள் என்பதைப் பற்றிய ஒரு நூல். விரைவில் எதிர்பாருங்கள் )
--
நான்கு நூல்களைக் குருவிப் பார்வை பார்க்கப் போகிறோம்.
தீபாவளிப் பரிசாக ஏதாவது தரலாம் என்று நினைத்தேன். நூற்கடலில் வாழும் ஒருவன் என்ன தரமுடியும்? சில அபூர்வமான நூல்களைப் பற்றிச் சின்ன குறிப்புகளாகத் தர ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது.
விவரமாக எழுதுங்கள்.
சந்த்ராபரணம் பற்றிய விவரம் அறிய ஆவல்;
சமணர்களும் சிறந்த சோதிடநூல்களைச்
செய்துள்ளனர்.
சிந்தாமணியில் ‘பசுங்கதிர்க் கடவுள் போகம்’
என்றுள்ளது -
பசும் கதிர்க் கடவுள் போகம் பழிப்பு அற நுனித்து வல்லான்
விசும்பு இவர் கடவுள் ஒப்பான் விரிச்சிகள் அறிந்து கூற
அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவையோடு ஆய்ந்து நாய்கன்
விசும்பு போன் மாதரார் விழுநிதி சிதறினானே.
[ உபயம் : அன்புமணி தேடுபொறி ]
இக்குறிப்பும் தொடர்புடையதாக
இருக்கலாம் -
Census of the Exact Sciences in Sanskrit, Volume 5
http://books.google.co.in/books?id=VB0LAAAAIAAJ&pg=PA417&lpg=PA417&dq=candrAbharaNa&source=bl&ots=7Ix0UOVRfG&sig=jHMpJ1VJslTs6JEjjrxQx-5zxYM&hl=en&sa=X&ei=1fCgULeROYjIrQft24HIAg&sqi=2&redir_esc=y#v=onepage&q=candrAbharaNa&f=false
தேவ்
On Nov 11, 8:51 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2012/11/10 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > தீபாவளிப் பரிசாக ஏதாவது தரலாம் என்று நினைத்தேன். நூற்கடலில் வாழும் ஒருவன்
> > என்ன தரமுடியும்? சில அபூர்வமான நூல்களைப் பற்றிச் சின்ன குறிப்புகளாகத் தர
>
> ...
>
> read more »
தேவ்
On Nov 19, 7:04 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> தர்க்காமிருதம் - என்று ஒரு நூல்.
>
> வடமொழியில் செய்தவர் ஜகதீச பட்டாசாரியார். (16 - 17 நூற்)
>
> இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யாழ்ப்பாணத்து ஸ்ரீதிருஞானசம்பந்தப் பிள்ளை
> அவர்கள். இவர் ஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களுக்கும், அவரது மருகரும்,
> மாணாக்கருமாகிய ஸ்ரீபொன்னம்பலம் பிள்ளை அவர்களுக்கும் மாணவர்.
> தருக்காமிருதத்தை அவர் அச்சிட்ட காலம் கி பி 1883.
>
> அதனை திருவாவடுதுறை ஆதீனம் 1967ல் வெளியீடு எண் 225 ஆக வெளியிட்டது.
>
> 32 + 75 பக்கங்கள் கொண்ட சிறு நூலாயினும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்புப்
> படைப்பு நூல். நியாய வைசேஷிகம் ஆகிய இரு தரிசனங்களும் இணைந்து 16 ஆம் நூற்
> பிறகு தருக்கம் என்று அழைக்கப்பட்டது. அதாவது தருக்கம் என்பது இரு
> தரிசனங்களின் கூட்டுப் பெயர் எனலாம்.
>
> இந்தத் தருக்க சாத்திரத்தை 300 வருடங்களாக நம் தமிழகத்தில் பலர் பல வடமொழி
> நூல்களைத் தமிழில் ஆக்கி உதவினர்.
>
> தர்க்க பரிபாஷை என்னும் நூல் 1040 வருடங்களுக்கு முன்னர் கௌதமரின் நூலை முதல்
> நூலாகக் கொண்டு கேசவ மிசிரர் என்னும் மைதில கௌடரால் செய்யப்பட்டது. இதற்கு
> கௌரீகாந்தீயம், தாமோதரீயம், கோவர்த்தனீயம் என்னும் உரைகளோடு சுமார் 23 உரைகள்
> ஏற்பட்டுள்ளன. இந்த தர்க்க பரிபாஷையைத் தமிழில் மொழிபெயர்த்தவர் துறைமங்கலம்
> சிவபிரகாச சுவாமிகள் 17ஆம் நூற்.
>
> இனி தர்க்க சங்கிரகம் என்னும் நூலைத் தமிழில் ‘பதார்த்த தீபிகை’ என்னும்
> பெயரால் தமிழ்ச் செய்யுள் வடிவில் செய்தவர் யாழ்ப்பாணத்துச் சுன்னாகம்
> ஸ்ரீமுருகேச பண்டிதர் என்பவர் 20 ஆம் நூற் தொடக்க காலத்தில்.
>
> இந்த செறிந்த மரபில் ‘தர்க்காமிருதத்தை’ தமிழாக்கி உதவியவர் திருஞானசம்பந்தப்
> பிள்ளை.
>
> ஆதீனம் இது போன்ற நூல்களை காலத்தில் மறைந்து விடாமல் மீண்டும் அச்சிட்டுக்
> காக்க வேண்டும், ஏற்கனவே அச்சில் இல்லாமல் இருந்தால்.
>
> நூல், முகவுரை, அகத்தியத் தருக்கச் சூத்திரம், தர்க்க நூல் வரலாறு,
> மொழிபெயர்ப்பாசிரியர் வரலாறு, தருக்கக் கண்ணாடி, பதிவணக்கம், ஆரம்பம்,
> பதார்த்தம், திரவிய நிரூபணம், குண நிரூபணம், கரும நிரூபணம், சாமானிய நிரூபணம்,
> விசேட நிரூபணம், சமவாய நிரூபணம், அபாவ நிரூபணம், பிரத்தியக்க நிரூபணம், அநுமான
> நிரூபணம், உபமான நிரூபணம், சத்த நிரூபணம், சொற்பொருளகராதி என்ற தலைப்புகளில்
> சுருக்கமாகவும் நிறைவாகவும் நியாய வைசேஷிகக் கலவையாகிய தருக்க நெறியைப் பற்றிய
> வடமொழிச் சுருக்க அறிமுகத்தைத் திறம்படத் தமிழில் தருகிறது.
>
> ***
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> *
திவாஜிக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.
முதன்முதலில் என்னிடமிருந்து 5 கோணிகளில் நூல்கள் திவாஜிக்குத்தான் சென்றன. அவர்தான் முதன்முதலில் மின்னாக்க யந்திரம் ஒன்று செய்து அதை அனைவருக்கும் சொல்லிக்கொடுத்து, தானும் பல நூல்களைச் செய்தார்.
அதன் வழியே தங்களுடைய பங்களிப்பும் சிறந்து பல நூல்களை அளித்தீர்கள்.
எவ்வளவோ நேரம் விரயம் செய்யப்படுகிறது குழுமங்களில். பல குழுமங்களும் இந்த மின்னாக்கப் பணியையும் கூடவே செய்து வந்தால், அவரவர்களுக்கு முடிந்த அளவு, காப்பிரைட் வரம்பை மீறாமல், பல பழம் நூல்கள் காப்பாற்றப் படலாம்.
தாங்கள் என்னிடமிருந்து வெளியில் சென்ற பல பழம் நூல்களைக் கவனமாகத் தங்கள் வீட்டில் வைத்துக் காப்பாற்றியதை இன்று நினைத்தாலும் இனிமையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. தங்களுடைய ஆர்வத்திற்கு வயதே இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தாங்கள் எனக்கு அளித்த நூல்களும் அருமையானவை. தங்களுடைய ஆர்வமும் படிப்பும் எவ்வளவு விரிந்தது என்பதைக் காட்டுவது. நன்றி ஐயா.
***--
2012/11/20 Innamburan Innamburan <innam...@gmail.com>
இதெல்லாம், சென்னையில் நான் இருந்தபோது கொடுத்திருந்தால், மின்னாக்கம் செய்திருப்பேன். ஏன் நமக்கு மின்னாக்கம் செய்ய உதவி கிடைப்பதில்லை, திவாஜி தவிர?இ2012/11/20 Karuannam Annam <karu...@gmail.com>
அரிய செய்திகள். தொடர்க நண்பரே.அன்புடன்சொ.வினைதீர்த்தான்.2012/11/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நளவெண்பா
இது என்ன அபூர்வமான நூலா?
இது இல்லை. இதற்கு ஒரு விருத்தியுரை எழுதியுள்ளார் ஸ்ரீ ஆறுமுகஞ் சேர்வை அவர்கள். மதுரை ஜில்லா செம்பூர் வித்வான். இதற்கு உறுதுணை உதவி மதுரை அமெரிக்கன் காலேஜ் தலைமைத் தமிழாசிரியர் ஆ கார்மேகக் கோனாரவர்களும், மதுரை ஸௌராஷ்ட்ர ஹைஸ்கூல் தலைமைத் தமிழாசிரியர் பு சிதம்பர புன்னைவனநாதமுதலியாரவர்கள்.
அச்சிட்டது மதுரை கோபாலகிருஷ்ண கோனாரால் 1929ல். அன்றைய விலை ரூ2ம் எட்டு அணாவும்.
உண்மையிலேயே என்ன அருமையான உரை! எவ்வளவு விஷயங்கள் மாணக்கர்களுக்குச் சொல்கிறார்கள், தமிழ்க் கல்வி அன்று இருந்த நிலை.
புகழேந்திப் புலவரின் வெண்பா கேட்கவா வேண்டும்!
ஒட்டக்கூத்தருக்கும், புகழேந்திக்கும் நடந்த புலமைச் சண்டைகள், ஒட்டக்கூத்தரின் அடாவடித்தனம் எலலாம் முன்னுரையில் கூறுகின்றார்கள். அதுவே ஒரு தமிழ்க்கல்விதான்.
அந்தக் கால அரசனுக்கு இரண்டு புலவர்களுக்கிடையில் மூட்டிவிட்டுக் கவிதை வாங்குவது ஒரு பொழுது போக்கு போலும்!
ஒட்டக்கூத்தரோ புகழழேந்தியைச் சிறையில் போடச் செய்துவிட்டார். ஒரு நாள் பவனி. சிறைச் சாலையின் சன்னலிலிருந்து வேடிக்கை பார்க்கிறார் புகழேந்தி. அரசனோ அவரைக் காட்டி ஒட்டக்கூத்தருக்கு ‘ஓ வித்வானே! அதோ நிற்கும் புகழேந்தி புலமையி மிகச் சிறந்தவரல்லவா!’ என்றார்.
உடனே கூத்தர்,
மான் நிற்குமோ, இந்த வாளரி வேங்கை முன்?
வற்றிச் செத்த கான் நிற்குமோ இவ்வெரியும் தழல் முன்?
கனைகடலின் மீன் நிற்குமோ இந்த வெங்கட் சுறவமுன்?
வீசுபனி தான் நிற்குமோ இக்கதிரோன் உதயத்தில்?
தார்மன்னனே!
என்று பாடினார்.
அரசனை நோக்கிப் புகழேந்தி, ‘மன்னா! இதை நான் வெட்டிப்பாடவா? ஒட்டிப் பாடவா?’ என்றார். ஒட்டிப்பாடுக என்றதும்,
மான் அவன்.
நான் அந்த வாளரி
வேங்கையும் வற்றிச் செத்த கான் அவன்.
நான் அவ்வெரியும் தழலும்.
கனைகடலின் மீன் அவன்
நான் அந்த வெக்கட் சுறவமும்
வீசுபனி தான் அவன்
நான் அக்கதிரோன் உதயமும்.
தார்மன்னனே!
என்று பாடினார் புகழேந்தி.
(தொடரும்)
***
--
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
தீபாவளிப் பரிசாக ஏதாவது தரலாம் என்று நினைத்தேன். நூற்கடலில் வாழும் ஒருவன் என்ன தரமுடியும்? சில அபூர்வமான நூல்களைப் பற்றிச் சின்ன குறிப்புகளாகத் தர ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள். நிறுத்திவிடுகிறேன். அதற்கென்று வீடு கட்டாதீர்கள்.
***
--
திரு. ராவ் அவர்களை ஒரு முறை சந்தித்து இருக்கலாம். இந்த நூலை அந்தக்காலத்தில் படித்திருக்கிறேன். சில நாட்கள் முன்னால் ஓ யூ பி. பிரசுரலாயம் Illustrated Edition of M.K.Gandhi(1932): My Early Life என்ற நூலை விரிவுரையுடன் பதிப்பித்தது. உடனே இந்தியாவிலிருந்து தருவித்தேன். அருமையான நூல்.
மேலும் திரு.வி.க. அவர்களின் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் படிக்கவேண்டிய நூல். இந்த சுட்டி மேல் தட்டினால், முழு நூலும் கிடைக்கும். இளைய தலைமுறை படிக்க வேண்டிய நூல்கள், இவை மூன்றும்.
அன்புடன்,
The Mind of Mahatma Gandhi
மகாத்மா காந்தியைப் பற்றிய இந்தச் சிறு நூல் பெரும் சிறப்பு வாய்ந்தது. காந்தியின் காலத்திலேயே வந்த நூல். முழுதும் காந்தியே பார்த்து ஒப்புதல் அளித்தது.
காந்தியின் தத்துவங்களைப் பல தலைப்புகளில் தொகுப்பு நூலாகப் பெருந்தொகை ஒன்று தயார் செய்தார்கள். அது கடைசியில் பல சூழ்நிலைகளின் நெருக்கடியில் இந்தத் தேர்ந்தெடுத்த ரத்தினச் சுருக்க வடிவிற்கு வந்துவிட்டது.
தேர்வு சும்மா சொல்லக் கூடாது. அருமை. ஒவ்வொரு காந்தி மொழிக்குப் பின்னும் பெரும் விவாதம் அடங்கியிருக்கிறது. பெரும் விசாரம் உள்ளோடித்த்தான் அந்த மொழி வந்திருக்கிறது என்பது நன்கு தெரியும்படியான மொழி முத்துகளாகப் பார்த்துத் தொகுப்பது ஒரு கலை. அந்தக் கலையில் நன்கு தேர்ந்தவர்கள் R K Prabhu and U R Rao.
வெளிவந்த ஆண்டு மார்ச் 1945. இரண்டாவது பதிப்பு அக்டோபர் 1946. ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்ஸிடி பிரஸ், இந்தியா கிளை அன்று இதைக் கொண்டிவந்திருக்கிறது. முன்னுரை சர்வபள்ளி ஸ்ரீராதாகிருஷ்ணன் அவர்கள்.
Neither Saint nor Sinner, My Mahatmaship, I know the Path, The Gospel of Truth, Truth is God, Prayer, the food of my soul, The Inner Voice, Truth and Beauty, My Inconsistencies என்று இவ்வண்ணமாக 36 தலைப்புகளில் காந்தியின் கருத்துலகத்தை நமக்கு ஸ்படிகப் படுத்துகிறார்கள் தொகுப்பாசிரியர்கள்.
முன்னுரையில் ஒரு முக்கியமான கருத்தைக் கவனப்படுத்துகிறார் சர் ராதாகிருஷ்ணன். திறமையான அரசியல்வாதிக்கும், தீர்க்கதரிசியான அரசியல்வாதிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறார்.
There are many who dismiss Gandhi as a professional politician who bungles at critical moments. In one sense politics is a profession and the politician is one trained to transact public business in an efficient manner. There is another sense in which politics is a vocation and the politician is one who is conscious of a mission to save his people and inspire them with faith in God and love of humanity. Such a one may fail in the practical business of government but succeed in filling his fellows with an invincible faith in their common cause. (Pp V)
காந்தி எனக்குப் புரியாத ஒரு புதிர் என்று முன்னம் ஓர் இழையில் எழுதியுள்ளேன். அதை இங்கு மீண்டும் பகிர்கிறேன்
------
“அவதாரம் அன்று. கடவுளிடமிருந்து வந்த தூதரும் அன்று. நம்மைப் போல், நம்மைப் போல் என்றால் நம்மைப் போலவேதான், ஒரு மனிதன். அவனுக்கும் பிறந்தவுடன் ஏதோ சங்கேதங்கள் எல்லாம் எந்த சமிக்ஞைகளாலும் தெரிவிக்கப் படவில்லை. அவன் நான் தான்; நீங்கள்தான்; தோ அவர்தான்.ஆனால் என்ன! திடீரென்று சத்தியம், அஹிம்சை என்ற இரண்டை முரட்டுத்தனமாகப் பற்றிக் கொண்டான். Total Committment இத்தனைக்கும் ராஜ யோகத்தின் படி அஷ்டாங்க யோகாரூடத்தில் முதல் படிக்கட்டு சமம் தமம்.உள்ளே தோன்றும் புலனிச்சைகளைச் சமனப் படுத்தல்; வெளியில் சென்று பாயாதபடி புலன்களைக் கட்டில் நிறுத்துதல். இந்தப் படிக்கட்டில் சம தமங்களில் சேர்ந்த ஓரிரு நியமங்கள்தாம் சத்தியம், அஹிம்சை. ஆன்மிக உச்சிக்குப் போய்ச்சேர கடைசி நிலை சமாதி நிலைக்குப் போக இன்னும் ஏகப்பட்ட படிக்கட்டு. அதில் அநாயசமாக ஏறி விளையாடிய மகனீயர்கள் எனக்குப் புதிராகத் தெரியவில்லை. ஆனால் மோகன் தாஸ கரம் சந்திர காந்தி எனக்கு இன்று வரையிலும் புதிராகத்தான் இருக்கிறார். இனியும் அப்படித்தான் இருப்பாரோ அறியேன்.எதில் புதிர்? அவரை மகாத்மா என்பதில் புதிரா? அல்லது திரு எம் கே காந்தி என்பதில் புதிரா? அவரை மகாத்மா என்பதில் எந்தப் புதிரும் எனக்கு எழவில்லை. செயற்கரிய செய்வர் பெரியோர் ஆகலின் அப்பெற்றியர் யாவரே ஆயினும் மகாத்மா என்று சொல்வது ஒன்றும் இடைஞ்சல் இல்லை. அதை அவர் மறுத்தார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அதை ‘அவர்’ மறுத்தார் என்னும் பொழுதுதான் என் கவனம் முழுதும் அந்தப் பதத்தின் பால் குழிகிறது. காரணம் வெறுமனே அடக்கமாய் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஒன்றை மறுதலிக்கும் நபர் இல்லை அவர். அப்பொழுது அவர் மறுதலிக்கிறார் என்றால் அந்த மகாத்மா என்ற பதத்திற்கு இருக்கும் உண்மையான பொருள் ஆழம் என்னை அவர் பார்வையில் ஒன்றச் செய்கிறது.ஆனால் இந்த மனிதன் தன்னிடம் இருக்கும் ’அந்த நொய்ந்த போக்கினை’த் தாமேதான் ஒளிவு மறைவின்றி ஒரு மருத்துவத் தூய்மையோடு எழுதுகிறார். தாம் அதனோடு போராடுவதாக அவர் கூறும் பொழுது நாம் எதையோ செயித்து விட்டோம் என்ற உணர்வினை அடைகிறோம். ஆம் கள்ளம் கபடம் சூது மறைமுகம் என்ற இருட்டுகளுக்கு ஆடுகளமாக ஆக்கப்பட்ட காமம் என்பது அவருடைய சத்திய சோதனையின் முன் மீண்டும் எரியுண்டு கட்புலனாகி நடுங்குகிறது. ராமனாக வேடம் பூண்டு நீ சீதையிடம் போய்ப் பேசிப் பாரேன் என்று யாரோ ராவணனுக்கு உத்தி கூற அதற்கு ராவணன், “அந்தோ! நான் என்ன செய்வேன்? ராமனாக வேடம் பூண்டால் என் மனத்தை விட்டுக் காம உணர்ச்சி முற்றிலும் மறைந்து விடுகிறதே! உலகத்தை எல்லாம் பிரம்ம பாவமாகக் காணும் பார்வைதான் மிஞ்சுகிறது. எனவே அந்த வேடம் மட்டும் போட மாட்டேன்’ என்றானாம். இது உண்மையில் நடந்திருக்கும் என்று எனக்குக் காந்தியைப் படிக்கும் பொழுதுதான் தோன்றுகிறது.கோட் சூட் போட்டவர் திடீரென்று கதராடை, முழங்கால் வேட்டி, மேலே போர்த்தியபடி ஒரு மேல் துணி என்ற உடையலங்காரத்துக்கு மாறினார்.
’பாதி நிர்வாண பக்கிரி’ பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அஸ்தியில் புளியைக் கரைத்தார்.
இங்கு முனியன் குடிசையில் ராட்டினம் சுத்தினால் மான்செஸ்டரில் ஆலைகள் நிக்கும் என்று எப்படிக் கண்டுபிடித்தார்?
பாதயாத்திரையாய் நடந்து சென்று ஒரு பிடி உப்பை அள்ளினால் அது யுனைடெட் கிங்டம் வாயில் போட்ட வாக்கரிசியாய் ஆகும் என்று எந்த யட்சிணி இவருக்கு வந்து சொல்லியது.?
ஆள்கட்டு, அடிதடி, கொள்ளை, தகிடுதத்தம், அநியாயம் இவையில்லாமல் அரசியல் நடத்த முடியாது என்பதை அறிவாளிகளே ஒரோவழி ஒப்புக்கொண்டு மாக்யவில்லியையும், கௌடின்யரையும் சப்பைக் கட்டுக்குக் காட்டிக் கொண்டிருந்த காலத்தில் ஆத்ம பலத்தை மட்டுமே நம்பி, சத்யம், அஹிம்சை ஆகிய இரண்டை மட்டுமே ஆயுதமாகவும், கவசமாகவும் கொண்டு சத்யத்தின் ஆக்ரஹத்தை போர்முறையாய் அறிவிப்பான் ஒருவன் என்றால், அதன்படியே தானும் நடந்து, அதுமட்டுமில்லாது பல்லாயிரக் கணக்கான பிரிவினைகள் உள்ள பல கோடி மக்களையும் ‘உஸ்’ உஸ்’ என்று ஒற்றை விரலை அசைத்தே ஒருமிப்பான் அந்த வழியில் என்றால், எனக்குப் புதிரானவன் என்பதில் என்ன ஐயம்?
ஏதோ எனக்காக ஏதோ சொல்ல வேண்டும் என்று பேசாதீர்கள். ஓர் ஐந்து நிமிடம் தியானம். யோசித்துப் பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.இந்த அற்புதமான நாலரை நிமிஷங்கள் உங்கள் தியானத்தில் சேரட்டும் ---ரகுபதி ராகவ ராஜாராம்பதித பாவன ஸீதாராம்....ரகுபதி.....ராகவ......ராம்போலா...”
--------
The riddle of Gandhiji's mind is the riddle of his soul. - என்று தொகுப்பாசிரியர்கள் கூறுவது அருமையான வாசகம்.
மகாத்மா என்ற பட்டம் அவரை மிகவும் படுத்தியிருக்கிறது.
The only virtue I want to claim is Truth and Non-violence. I lay no claim to superhuman powers. I want none. I wear the same corruptible flesh that the weakest of my fellow-beings wears, and am, therefore, as liable to err as any. My services have many limitations, but God has up to now blessed them in spite of the imperfections.
கடவுள் மீதும், மனித இயல்பின் மீதும் அவருக்கு இருந்த நம்பிக்கையின் அடிப்படை என்ன?
Somehow I am able to draw the noblest in mankind, and that is what enables me to maintain my faith in God and human nature.
ராமநாமத்தைப் பற்றியும், துளஸிதாஸரைப் பற்றியும் மகாத்மா கூறுவது -
When a child, my nurse taught me to repeat Ramanama whenever I felt afraid or miserable, and it has been second nature with me with growing knowledge and advancing years. I may even say that the Word is my heart, if not actually on my lips, all the twenty-four hours. It has been my saviour and I am ever stayed on it. In the spiritual literature of the world, the Ramayana of Tulsidas takes a foremost place. It has charms that I miss in the Mahabharata and even in Valmiki's Ramayana. (pp 33)
பிரார்த்தனை பற்றி -
Prayer is the key of the morning and the bolt of the evening.
It is better in prayer to have a heart without words than words without a heart.
காந்தி என்றால் நினைவுக்கு வருவது உண்ணாவிரதம், சத்தியம் - அஹிம்சை என்ற இரட்டை நன்மைகளுக்கு அடுத்தபடியாக.
எப்பொழுது வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் கடைப்பிடிக்கலாம் என்பது காந்தியின் எண்ணமா? இல்லை -
Fasting can only be resorted to against a lover, not to extort rights but to reform him, as when a son fasts for a father who drinks. My fast at Bombay and then at Bardoli was of that character. I fasted to reform those who loved me. But I will not fast to reform say, General Dyer, who not only does not love me, but who regards himself as my enemy. (pp 114)
சுதந்திரத்திற்காகப் போராடிய காந்திக்கு நோக்கம் சுதந்திரத்தோடு முடிந்து விடவில்லை. -
My ambition is much higher than independence. Through the deliverance of India, I seek to deliver the so-called weaker races of the earth from the crushing heels of Western exploitation. (pp 169)
மிக அருமையான தொகுப்பு நூல் என்பது நூல் முழுவதும் தெரிகிறது.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
--
பிரார்த்தனை பற்றி -
ஜாயஸ்வால் ஜீ, மஹாவீர் ப்ரஸாத் த்விவேதி அவர்களின்
ஸரஸ்வதி இதழக்கும் ஆசிரியராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்டில் சீன மொழியும் பயின்றவர் இவர்.
’அந்தகார யுகீந பாரதம்’ அற்புதமான நூல் என அறிஞர்
கூறுவர். வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
மண்டையைப் பிளக்கும் வெயிலில் தில்லி
தர்யாகஞ்ஜில் அலைந்ததுதான் மிச்சம்.
ஹிந்து பாலிடியை எதிர்பார்க்கிறேன்
தேவ்
On Nov 24, 12:19 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *Hindu Polity
>
> *பண்டைய பாரதத்தின் வரலாறு என்பதைப் பலரும் சிந்தித்துப் பார்த்திருக்கலாம்.
> ஆனால் பண்டைய பாரதத்தின் அரசியல் சட்ட ரீதியான வரலாறு என்பதை எத்தனை அறிஞர்கள்
> அன்று சிந்தித்திருக்கக் கூடும்!
>
> ஏனெனில் அரசியல் சட்டம் என்பதே நவீனம், மேற்கு கிழக்குக்குத் தந்த கொடை
> என்றெல்லாம்தானே நினைத்திருக்கத் தோன்றும்.
>
> பண்டைய காலத்தில் சட்டம் என்பது என்ன தெய்விக நூல்களில் ரிஷிகளால்
> சொல்லப்பட்டு என்றும் மாறாத சநாதன தர்மங்களாகத்தானே இருந்திருக்கும். நடுவில்
> சில மாற்றங்கள் மீண்டும் அதே மாறா நியதி. அவ்வளவுதானே - என்று நினைத்தவர்கள்
> மத்தியில் பண்டைய பாரதத்தின் அரசியல் சட்டம் என்பதையும், அது எப்படிக்
> காலத்துக் காலம் மாறியது என்பதையும் ஆழ்ந்த ஆய்வுகளின் பலனாக அறிவுலகம் மெச்ச
> நிறுவியவர் டாக்டர் காசி ப்ரசாத் ஜெயஸ்வால். 1881ல் மிர்ஸாப்பூரில் பிறந்தவர்.
> 1937ல் அவரது மறைவு.
>
> சிறு வயதில் அவரது தந்தை சாஹு மஹாதேவ ப்ரசாத் அவரை லண்டன் மிஷன் ஹைஸ்கூலில்
> படிக்க விட்டாலும், சம்ஸ்க்ருதக் கல்வியை வீட்டிலேயே ஹண்டியாபாபா என்னும்
> சாதுவிடம் கற்க வைத்தார். ஹண்டியா என்றால் மட்பாண்டம். வாழ்வின் கடைசி வரை
> சாதுவிடம் கற்ற வடமொழிக் கல்வியை நினைத்து மிகவும் நன்றி பாராட்டினார்
> ஜெயஸ்வால். காரணம் மூல நூல்களின் உள்ளே நெடுகப் போகும் சௌகரியம் அவருக்கு
> இந்தக் கல்வியால் மட்டுமே கிடைத்தது.
>
> 1906ல் 25 வயதில் இரு குழந்தைகளுக்குத் தந்தையான நிலையிலும் ஜெயஸ்வால்
> இங்கிலாந்திற்குப் பயணமானார் மேல்படிப்பிற்கு. அங்கு சியாம்ஜி கிருஷ்ண வர்மா,
> சாவர்கர் போன்ற இந்திய தேசிய புரட்சியாளர்களின் நட்பு கிடைத்தது. மேலும்
> சிங்கள அறிஞர் பெருமகனாரான டான் மார்ட்டினோ டி சில்வா விக்ரமசிங்கே என்பவரின்
> நட்பால் ஜெயஸ்வாலுக்கு பண்டைய நாணயங்களை ஆயும் பயிற்சியும், தொல்பொருள்
> ஆய்வில் திறமையும் ஏற்பட்டன. ஹண்டியாபாபாவிற்குப் பிறகு தனக்குப் பெரும்
> ஊக்கம் விக்ரம்சிங்கே என்று நினைத்தார் ஜெயஸ்வால்.
>
> லண்டனில் பெரும் மொழியியல் வல்லுநரான ஜ்யார்ஜ் ஏ க்ரியர்ஸன், வரலாற்று
> ஆசிரியர் வி ஏ ஸ்மித் போன்றவர்களின் தொடர்புன் கிட்டியது. பண்டைய இந்தியாவின்
> அரசியல் சட்ட ரீதியான வரலாறு எழுத வி ஏ ஸ்மித் பெரும் தூண்டூக்கமாக இருந்தார்.
>
> 1933ல் History of India 150 AD to 350 AD என்ற நூலை எழுதி இந்திய வரலாற்றில்
> இருண்ட காலம் என்று கருதப்பட்ட காலப் பகுதி உண்மையில் தெளிவுகள் உள்ள
> ஆவணப்படுத்தப்பட்ட பகுதியே என்று ஆக்கினார். 1934ல் ஒன்பதாம் நூற்றாண்டு பௌத்த
> காலவிவரண நூலான ஆர்ய மஞ்சுஸ்ரீ மூலகல்பம் என்ற பிரதியை அடிப்படையாகக் கொண்டு
> அதை விளக்கி An Imperial History of India என்ற நூலை எழுதினார். 1936ல்
> நேபாலிய வரலாறு 600கிமு தொடங்கி 800 கிபி வரை என்ற நூல்.
>
> ஜயசந்த்ர வித்யாலங்கார், மஹாபண்டித ராஹுல சாங்க்ருத்யாயன ஆகிய இருவரின்
> தொடர்பும் அவருக்குப் பெரும் உதவிகளாக இருந்தன. சாங்க்ருத்யாயனரின் தொடர்பால்
> திபெத்திய நூல்களின் மூலம் தர்மகீர்த்தியைப் பற்றிய முழுமையான தகவல்
> அவருக்குக் கிடைத்தது.
>
> Hindu Polity, A Constitutional History of India in Hindu Times (Parts I and
> II), IInd Ed, The Bangalore Printing and Publishing Co Ltd, Bangalore City
> 1943
>
> நல்ல வேளையாக இந்த நூல் 2005ல் மீண்டும் அச்சேறியிருக்கிறது போலும். -http://www.exoticindiaart.co.in/book/details/hindu-polity-constitutio...
>
> அவருடைய இந்த ஹிந்து பாலிடி என்னும் நூல் அரசியல் சட்ட ரீதியிலான சரித்திரம்
> என்பது எந்த இனத்திற்கும் ப்ரத்யேக உரிமையான ஒன்றன்று என்ற தெளிவில் உதித்த
> நூல் என்பதைப் பார்ப்போம். (தொடரும்)
(Hindu Polity தொடர்கிறது)
திரு ஜெயஸ்வால் தமது நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கும் விதமே பல செய்திகளைக் கூறுகிறது.
To the memory of The Republican Vrishnis, Kathas, Vaisalas and Sakyas who announced Philosophies of Freedom from Devas, Death, Cruelty, and Caste.
அவருடைய அணுகுமுறை எப்படிப்பட்டது என்பதைக் கோடிகாட்டவும் செய்கின்றது இந்த அர்ப்பணம்.
வ்ருஷ்ணிகளின் ராஜநீதி தேவர்களின் சர்வாதிகாரத்திலிருந்து விடுதலை தந்தது.
கடர்களின் ராஜநீதி மரணத்திலிருந்து விடுதலை வழியைக் கண்டது.
வைசாலர்களின் ராஜநீதி ஹிம்சையிலிருந்து விடுதலையைத் தந்தது.
சாக்கியர்களின் ராஜநீதி ஜாதி என்னும் பிடியிலிருந்து விடுதலையைத் தந்தது.
நவநீதம்
1929 ஆம் ஆண்டு ஒரு நல்ல காரியம் நடந்தது. ஹிந்து பத்திரிகாசிரியராய் இருந்த ஸ்ரீமான் ஏ ரங்கசாமி அய்யங்கார், ஸ்ரீ என் கோபால்சாமி அய்யங்கார் ஆகியோர் தமது சகோதரியான ஸ்ரீ ருக்மணி அம்மாளுக்கு ஞாபகமார்த்தமாக ஒரு சொற்பொழிவுத் தொடர் ஏற்படுத்தினார்கள். அந்த வருஷாந்திர வரிசை எற்பாட்டில் முதன்முதல் 1929ல் வித்யாரத்னாகரம் பண்டிட் வி ஆர் நரஸிம்ஹாசாரியரைக் கொண்டு ஒரு சொற்பொழிவுக் கோவையைச் செய்ய ஏற்பாடாயிற்று.
ஸ்ரீ நரஸிம்ஹாசாரியர் செய்த பிரசங்கத் தொடரின் பொருள் என்னவென்றால் பாரத மண்ணில் பெரும்பான்மையாக வழங்கிவரும் வைதிக மதங்களை மட்டும் விளக்கிப் பேசாமல், சார்வாகம், தார்க்கிகம், பௌத்தம், ஜைனம் என்று அனைத்து தர்சனங்களைப் பற்றியும் விளக்கமாகப் பேசியிருப்பது ஒரு விசேஷம்.
அதைவிடச் சிறப்பு என்னவென்றால் தாம் விசிஷ்டாத்வைத மதத்தில் ஈடுபாடு கொண்டிருந்தும் அந்த தத்வத்தின் ரீதியாகவே மற்ற மதங்களையும், தத்வங்களையும் பார்த்துக் கண்டனம் தெரிவித்துப் போகாமல் பொதுவாக அனைத்து மதங்களுமே மக்களுக்கு ஒவ்வொரு விதத்தில் நல்ல அம்சங்களைப் போதிக்க வந்தவையேயாம்; எனவே ஒவ்வொரு மத்தினரும் தம்தம் மதத்தில் ஈடுபாடு கொண்டுள்ள போதும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களை வண்டு தேன் சேகரித்துக் கொள்வதைப் போல அல்லாதவற்றைக் கண்டுகொள்ளாமல் அவ்வவற்றில் உள்ள நல்ல அம்சங்களை மாத்திரம் தாம் கொண்டு அவற்றின் பால் கௌரவ புத்தியோடு அணுகுவது சரியான வழி என்று நல்ல நிதானம் பேசுகிறார். அதையே தமது சொற்பொழிவின் அணுகுமுறையாகவும் கைக்கொண்டு பேசியுள்ளார்.
உதாரணமாக பௌத்த மதத்தைப் பற்றிக் கூறும்பொழுது வைதிகர்கள் பொதுவாக புத்தாவதாரம் அசுரர்களை மயக்குவதற்காக ஸ்ரீமந் நாராயணன் எடுத்த அவதாரம் என்று சொல்வதை மறுக்கிறார் ஆசிரியர். ஏன் அவ்வாறு கூற வேண்டும்? அது ஸ்ரீமந் நாராயணனுக்கே பெருமைதரும் விஷயம் அல்லவே என்கிறார்.
எல்லாவற்றிலும் சாரமான அம்சங்களைப் போற்ற வேண்டும்; வேண்டாத அம்சங்கள் இருந்தால் தூற்றாமல் விலக்கிவிட வேண்டும் என்பது உதயணாசாரியரிடமிருந்து ஆசிரியர் தாம் பெற்ற வழிநடத்தும் கருத்து என்றும், அதையே அனைவரும் கொள்ளத்தகும் என்றும் கூறுகிறார்.
பழைய சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு நடுநிலையோடு பொதுவாக மதம் என்ன என்பதையும், பிறமதங்களையும் நன்கு நிதானத்துடனும், அமைதியான புரிந்துணர்வுடனும் நன்கு விளக்கமாகவும் எளிமையாகவும் பேசியிருப்பது அருமை. அதுமட்டுமின்றிப் பல தர்சனங்களையும் பற்றிப் பேசுமிடத்து மிக நுணுக்கமாகச் சில விஷயங்களை ஆசிரியர் அலசும் விதம் அறிஞர்களுக்கும், பொது மக்களுக்கும் ஒரு சேர விருந்தாகும்.
அந்தச் சொற்பொழிவுகளை அப்படியே ‘நவநீதம்’ என்னும் நூல்வடிவில் The Rukmini Lectures 1929 என்னும் உபதலைப்புடன் 1930ல் வெளியிட்டுள்ளார்கள்.
அப்படியே நூலைச் சிறிது தற்காலத் தமிழுக்குத் தக்கவாறு சீர்படுத்தி மீண்டும் வெளியிட்டால் எவ்வளவோ உபகாரமாய் இருக்கும்.
283 பக்க நூலுக்குக் குறிப்புகள் தனியாக 68 பக்கங்களுக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
--
நவநீதம்
ஸ்ரீ நரஸிம்ஹாசாரியர் செய்த பிரசங்கத் தொடரின் பொருள் என்னவென்றால் பாரத மண்ணில் பெரும்பான்மையாக வழங்கிவரும் வைதிக மதங்களை மட்டும் விளக்கிப் பேசாமல், சார்வாகம், தார்க்கிகம், பௌத்தம், ஜைனம் என்று அனைத்து தர்சனங்களைப் பற்றியும் விளக்கமாகப் பேசியிருப்பது ஒரு விசேஷம்.
செய்கிறேன் ஐயா.
***
----
குதிரைகளின் வயது பற்றி சாலிஹோத்திரர் கூறுவது --
மனிதனுக்கு நூறு, யானைக்கு நூற்றி இருபது, பசுவிற்கு 24, கழுதை ஒட்டை - 25, நாய் - 16, நரி - 25, புழு - 7 நாள், ஈ - 14 நாள், குதிரை -- 32 வருஷங்கள்.
--
குதிரைகளைப் பார்த்து அதன் துள்ளல்களையும், விரைந்த பாய்ச்சல்களையும், லாகவமான நடைகளையும் கண்டு வியக்காதவர் இருக்க முடியுமா?
ஸ்கூட்டரில் நானும் நண்பனும் போய்க்கொண்டிருக்கிறோம். வண்டி, கிண்டி குதிரைகள் ஆஸ்பத்திரியைத் தாண்டியது. மொழுமொழுவென்று, ஆரோக்கியமான பளபளப்புடன் வரிசையாகக் குதிரைகள் தார்ச்சாலையில் குளம்பொலி கிளப்பித் தாளம் தப்பாமல் நடைபயின்று சென்றன. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று திரும்புகிறார்கள். பாரவண்டிக் குதிரையா! பந்தயக் குதிரையாயிற்றே! உயரமான அரபுக் குதிரை. ஒவ்வொன்றின் முதுகே ஒரு மனிதனின் சராசரி உயரத்துக்கும் மேல் இருக்கும். கண்டு கண்டாக முறுக்கேறித் திமிறும் தசைகள் புடைத்துத் தெறிக்கும்படியான கால் அசைவு. சீராக வெட்டிவிடப்பட்ட பிடரி மயிரும், வாலும். வாலை வீசி வீசி, சுழற்றிச் சுழற்றி நடக்கும் கம்பீரம். 'என் முதுகில் உட்கார்ந்திருப்பவன் என்னைச் இழுத்துப் பிடித்துச் செலுத்தாவிட்டால் நான் பறந்து விடுவேன்' என்று ஒரு திமிறல். முதுகில் உட்கார்ந்திருப்பவனுக்குத்தான் என்ன பெருமை! புத்தம் புது பிஎம்டபிள்யூவில் உட்கார்ந்து போகின்றவனுக்குக் கூட அத்தனை மகிழ்ச்சி இருக்காது. பின்னே, அவன் ஆளுவது சும்மா அழகாகத் தட்டப்பட்டு, வளைக்கப்பட்ட ஒரு இரும்பு ஜடத்தையா? உயிரும், மனமும், யோசனையும் உள்ள ஒரு ஜீவனை அல்லவா? டட்டக்கு டட்டக்கு டகடக்கு டட்டக்கு என்று சீரான நடை. Trot, piaffer, amble, canter, gallop என்று மனிதன் ரசித்து ரசித்து வைத்த அசுவகதியின் பெயர்களில் இது piaffer. தமிழில் அசுவகதி ஆறு என்று நினைவு. இல்லை, எட்டா? மறந்துவிட்டது.
குதிரைகளின் மனோத்தத்துவம் புதிய விசயம். இனிமேல் டிஸ்கவரி சேனலில் குதிரைகளைப் பார்த்தால் கட்டாயம் இதெல்லாம் சரியா என்று ஆய்வு பண்ணத் தோன்றும்..
--
நவநீதம்
1929 ஆம் ஆண்டு ஒரு நல்ல காரியம் நடந்தது. ஹிந்து பத்திரிகாசிரியராய் இருந்த ஸ்ரீமான் ஏ ரங்கசாமி அய்யங்கார், ஸ்ரீ என் கோபால்சாமி அய்யங்கார் ஆகியோர் தமது சகோதரியான ஸ்ரீ ருக்மணி அம்மாளுக்கு ஞாபகமார்த்தமாக ஒரு சொற்பொழிவுத் தொடர் ஏற்படுத்தினார்கள். அந்த வருஷாந்திர வரிசை எற்பாட்டில் முதன்முதல் 1929ல் வித்யாரத்னாகரம் பண்டிட் வி ஆர் நரஸிம்ஹாசாரியரைக் கொண்டு ஒரு சொற்பொழிவுக் கோவையைச் செய்ய ஏற்பாடாயிற்று.
ஸ்ரீ நரஸிம்ஹாசாரியர் செய்த பிரசங்கத் தொடரின் பொருள் என்னவென்றால் பாரத மண்ணில் பெரும்பான்மையாக வழங்கிவரும் வைதிக மதங்களை மட்டும் விளக்கிப் பேசாமல், சார்வாகம், தார்க்கிகம், பௌத்தம், ஜைனம் என்று அனைத்து தர்சனங்களைப் பற்றியும் விளக்கமாகப் பேசியிருப்பது ஒரு விசேஷம்.
அரங்கனாரே,
என்ன எழுதுவதென்று தெரியவில்லை;
அலங்கார நூல்களின் வரிசை உமது
எழுத்துக்கு அணி சேர்க்கிறது.
ப்ராக்ருத மொழி எது ?
அபப்ரம்சம் எது என வரையறை செய்வதில்
ஏன் அலங்கார நூல்களுக்குள் கருத்து வேற்றுமை
ஏற்பட வேண்டும் ?
பாமஹரும், தண்டியும் பாகதம் வேறு,
அவஹத்தம் வேறு என்கின்றனர்;
ருத்ரடரின் காவ்யாலங்காரத்துக்கு உரை எழுதிய
நமிஸாது பாகத , அவஹத்த மொழிகளில்
வேறுபாடு இல்லை என்கிறார்.
காலரீதியாக பாமஹர் தண்டிக்கு முற்பட்டவர்.
நமிஸாதுவின் காலம் 11ம் நூற்.
தேவ்
On Dec 3, 9:41 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *தண்டியலங்காரம்*
ஸத் தர்சன சமுச்சயம்
ஹரிபத்ரர் என்னும் ஜைனர் எழுதிய நூல் இது.
பௌத்தம், நியாயம், சாங்க்யம், ஜைனம், வைசேஷிகம், மீமாம்சை, லோகாயதம் என்னும் தர்சனங்களைப் பற்றிய அழகான சிறு அறிமுகங்கள் அடங்கிய நூல் இது.
‘ஜினர் என்னும் வீரரை, ஸ்யாத்வாத தேசிகரை, நன்ஞானத்து உறைவிடத்தை வணங்கித் தொழுது அனைத்து தர்சனங்களின் உரைபொருளும் சுருக்கமாக இங்கு உரைக்கப்படும்.’
என்னும் பொருள் உள்ள செய்யுளான
ஸத்தர்சனம் ஜினம் நத்வா வீரம் ஸ்யாத்வாத தேசிகம் |
ஸர்வதர்சன வாச்யோSர்த்த: ஸங்க்ஷேபேண நிகத்யதே ||
என்பதனோடு நூல் ஆரம்பிக்கிறது.
இந்தச் சிறு அழகிய நூலைத் திறம்பட ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் மிகப்பெரிய தத்துவ இயல் பேராசிரியரான ப்ரொஃபஸர் கே சச்சிதாநந்தமூர்த்தி அவர்கள். மொழிபெயர்ப்பு, கூடவே குறிப்புகள் என்று செப்பமுறச் செய்திருக்கிறார். படித்தவுடன் ‘நன்றி’ என்ற சொல்லை நம் நாவே உதிர்க்கிறது.
தத்துவ இயல் வரலாறு என்னும் வகையில் பழங்காலத்தில் உலகில் எங்குமே நூல்கள் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த 1500 வருஷங்களுக்கும் மேலாக நம் நாட்டில் பல தர்சனங்கள், தத்துவங்கள், மதங்கள் ஆகியவற்றின் உபதேசங்கள் பற்றிய தொகுப்புகள் அங்கங்கே எழுதப்பட்டுள்ளன. பலதும் மறைந்து எஞ்சியதில் பிரபலம் என்று பார்த்தால் ஹரிபத்ரரின் ஸத்தர்சன சமுச்சயம், சங்கரரின் ஸர்வ சித்தாந்தசார சங்கிரஹம், மாதவரின் ஸர்வ தர்சன சங்கிரஹம் என்பன. ஹரிபத்ரரின் காலம் 500 முதல் 700 வரையில் கூறுகிறார்கள். அவருடைய வாழ்க்கையைப் பற்றி அறிய இங்கே பார்க்கலாம். http://en.wikipedia.org/wiki/Haribhadra
தர்சனங்கள் எப்படித் தம்முள் வேறுபடுகின்றன என்று ஹரிபத்ரர் கூறும் கருத்து ஆர்வக்கவனத்தை ஈர்க்கிறது.
தர்சனானி ஷடேவ அத்ர மூல பேத வ்யபேஷயா |
தேவதா தத்வ பேதேந ஞாதவ்யாநி மநீஷிபி: ||
தர்சனங்கள் ஆறே, அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டு பார்க்கும் பொழுது. தேவதை, தத்வம் ஆகிய பேதங்கள் கொண்டு பிரித்தறிதல் அறிஞர் கடன். - என்பது இந்தச் செய்யுளின் பொருள்.
ஆஸ்திக தர்சனங்கள் ஆறு, நாஸ்திக தர்சனங்கள் ஆறு என்று சநாதன தர்மத்தின் ரீதியாகக் கூறுவர். ஆனால் முதலில் ஆறு தர்சனங்களின் கணக்கு வேறு வேறு வகையாக இருந்திருக்கிறது. ஆனால் எல்லா கணக்கிலும் நியாயம், சாங்கியம், மீமாம்ஸை என்பன இடம் பெறுகின்றன.
பௌத்தம், ஜைனம் ஆகிய வழிகளை நாஸ்திகக் கணக்கில் சநாதன தர்மந்தான் சேர்த்து வைக்கிறதே அன்றி ஹரிபத்ரர் என்னும் இந்த மாபெரும் ஜைன ஆசிரியரின் கருத்துப்படி பௌத்தமோ, ஜைனமோ நாஸ்திக மதங்கள் அல்ல என்று தெரிகிறது. இந்தச் செய்யுளை நோக்குக. -
நையாயிக மதாத் அந்யே பேதம் வைசேஷிகை: ஸஹ, ந மந்யந்தே மதம் தேஷாம் பஞ்சைவாஸ்திக வாதிந: |
ஷட்தர்சன ஸங்க்யா து பூர்யதே தன்மதே கில, லோகாயத மத க்ஷேபாத் கத்யதே தேந தன்மதம் ||
‘நியாயம் வேறு வைசேஷிகம் வேறு என்று பிறர் கருதுவதில்லை. அவர்களின் கருத்துப்படி ஆஸ்திக மதங்கள் ஐந்து. அவர்கள் கருத்துப்படி ஆறு தர்சனக் கணக்கு என்பதைப் பூர்த்தி செய்ய லோகாயதம் என்பதை ஒரு தர்சனமாகப் போட்டு வைக்கிறார்கள்.’
ஹரிபத்ரர் கிட்டத்தட்ட 1400 நூல்கள் ஜைனத்தில் செய்திருப்பதாகச் சொல்லுவர். இல்லை 100 ஏ என்பர் சிலர். இரண்டு ஹரிபத்ரர் உண்டு என்பர் இன்னும் சிலர்.
நூலின் இவரம் -
Saddarsana Samuccaya, (A Compendium of Six Philosophies), by Haribhadra, Tr into Eng with notes by Prof K Satchidananda Murthy. Eastern Booklinkers Delhi
pp 120 + x,
பேராசிரியரைப் பற்றி அறிய இங்கே காணலாம்
http://en.wikipedia.org/wiki/Kotha_Satchidanda_Murthy
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்.
*
வழக்கம்போல் பழமை சார்ந்த புதிய தகவல்கள்.
”ஷட்தர்சந ஸமுச்சயம்” சரியான வடிவம்.
Compendium of Six Philosophies
என்பது அப்போதுதான் சரியாக இருக்கும்.
இவர் எழுதிய முக்கியமான நூல்களில் சில -
அநேகாந்த ஜயபதாகா
அநேகாந்த வாதப்ரவேசம்
சாஸ்த்ரவார்த்தா ஸமுச்சயம்
இவர் செய்த ந்யாய நூல்கள் கிடைக்கவில்லை
என்று தெரிகிறது. லோகாயதத்தை ஆறு
தர்சநங்களோடு சேர்ப்பது சரியாகாது;
ஏனெனில் புலன்களுக்கு அகப்படாதவற்றை
லோகாயதம் ஒரே முட்டாக மறுத்து விடும்,
தொல்லறிஞர்களின் பார்வை மறைகளை
அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது.
மறைக்கருத்துக்களே சிந்தனைக்கு அலகு
எனும் போக்கையே பார்க்கிறோம். இது
பலருக்கும் பிடிக்காது என்றாலும் உண்மை
அதுதான்
தேவ்
On Dec 9, 12:49 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *ஸத் தர்சன சமுச்சயம்*
>
> ஹரிபத்ரர் என்னும் ஜைனர் எழுதிய நூல் இது.
>
> பௌத்தம், நியாயம், சாங்க்யம், ஜைனம், வைசேஷிகம், மீமாம்சை, லோகாயதம் என்னும்
> தர்சனங்களைப் பற்றிய அழகான சிறு அறிமுகங்கள் அடங்கிய நூல் இது.
>
> ‘ஜினர் என்னும் வீரரை, ஸ்யாத்வாத தேசிகரை, நன்ஞானத்து உறைவிடத்தை வணங்கித்
> தொழுது அனைத்து தர்சனங்களின் உரைபொருளும் சுருக்கமாக இங்கு உரைக்கப்படும்.’
>
> என்னும் பொருள் உள்ள செய்யுளான
>
> ஸத்தர்சனம் ஜினம் நத்வா வீரம் ஸ்யாத்வாத தேசிகம் |
> ஸர்வதர்சன வாச்யோSர்த்த: ஸங்க்ஷேபேண நிகத்யதே ||
>
> என்பதனோடு நூல் ஆரம்பிக்கிறது.
>
> இந்தச் சிறு அழகிய நூலைத் திறம்பட ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர்
> மிகப்பெரிய தத்துவ இயல் பேராசிரியரான ப்ரொஃபஸர் கே சச்சிதாநந்தமூர்த்தி
> அவர்கள். மொழிபெயர்ப்பு, கூடவே குறிப்புகள் என்று செப்பமுறச்
> செய்திருக்கிறார். படித்தவுடன் ‘நன்றி’ என்ற சொல்லை நம் நாவே உதிர்க்கிறது.
>
> தத்துவ இயல் வரலாறு என்னும் வகையில் பழங்காலத்தில் உலகில் எங்குமே நூல்கள்
> எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த 1500 வருஷங்களுக்கும் மேலாக நம்
> நாட்டில் பல தர்சனங்கள், தத்துவங்கள், மதங்கள் ஆகியவற்றின் உபதேசங்கள் பற்றிய
> தொகுப்புகள் அங்கங்கே எழுதப்பட்டுள்ளன. பலதும் மறைந்து எஞ்சியதில் பிரபலம்
> என்று பார்த்தால் ஹரிபத்ரரின் ஸத்தர்சன சமுச்சயம், சங்கரரின் ஸர்வ
> சித்தாந்தசார சங்கிரஹம், மாதவரின் ஸர்வ தர்சன சங்கிரஹம் என்பன. ஹரிபத்ரரின்
> காலம் 500 முதல் 700 வரையில் கூறுகிறார்கள். அவருடைய வாழ்க்கையைப் பற்றி அறிய
> இங்கே பார்க்கலாம்.http://en.wikipedia.org/wiki/Haribhadra
மிக அபூர்வமான ஒரு நூல்
ப்ரின்ஸிபால் சாரநாதன் -- இந்தப் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள். இது ஒரு மந்திரப் பெயர்.
தமிழ்நாடு பெற்ற தவப்பயன்களில் ஒன்று இந்தப் பெயர். இந்தியாவின், தமிழ் நாட்டின் கல்வி ஊக்கங்களில் ஒரிஜினல் அக் மார்க் ஊக்கம் என்று சொன்னால் இந்த ப்ரின்ஸிபால் சாரநாதன் என்ற திருப்பெயர் எனலாம்.
துல்லியமான வீணையின் சுநாதம் போன்று அவரது எழுத்துகளின் அடிநாதம் அமைந்திருக்கிறது. ஆங்கிலம் அருமையான நடை. இந்தியனாங்கில இலக்கிய வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஆதிகாலத்தில், தொடக்க நாட்களில் அதாவது தற்கால இலக்கியம் தொடக்கம் என்று கூசாமல் நவீன இலக்கிய வாதிகள் கூறும் மணிக்கொடிக் காலக் கட்டத்திற்கு முன்னமேயே நவீன இலக்கியம் எழுதிய இலக்கிய வாதி
தமிழில்
வாழ்க்கைச் சிற்பம் -- மூலக்கற்பனை, நெசவு, வர்ணம், சிற்ப ஒருமிப்பு
நம் நாகரிகப் போக்கு, ஆதி கவியின் சிறப்பு, இந்தியத்தாய் I to V, கல்வி பற்றிய எழுத்துகள், சில பேரறிஞர்கள், சுய சரிதம், சமூக முற்போக்கு, கதம்பம்.
பாரதியைப் பற்றிய ஆரம்ப கால விமர்சகர்கள் என்னும் தகவலை மாற்றி எழுத வேண்டும் இவரை வெளிக்கொணர்ந்தால்.
நெடுநாளாக இவரைப் பற்றித் தனி இழை துவங்க வேண்டும் என்பது என் அவா. சீக்கிரம் துவங்குகிறேன்.
மிக அபூர்வமான ஒரு நூல்
ஏன் இதை ‘மிக அபூர்வமான’ என்று சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களோ?
ஆம். அபூர்வம் என்றால் முன்னர் இல்லாதது என்று பொருள். நிச்சயம் இந்த நூல் அச்சுலகில் முன்னரே இல்லாதது. 1949ல் நினைவு மலராக வந்தது அப்படியே நின்று போயிருக்கிறது. ஏன் யாரும் இதை நூலாகக் கொண்டு வரவில்லை? தெரியவில்லை. ஒரு வேளை வந்து நான் தான் கவனிக்கத் தவறிவிட்டேனோ அதுவும் புரியவில்லை. மர்மம் வேண்டாம். விஷயத்திற்கு வருகிறேன்.
நா. கண்ணனின் ஆடி மாசம் என்ற வியாக்கியானம் பார்க்கக் கிடைத்தது.
இப்பொழுது எனக்குத் தினந்தோறும் சிலப்பதிகாரம், வடமொழி (பஞ்சதந்திரம்,
பரத சாஸ்திரம், ...) பாடம் எடுத்துக்கொள்ளார் ரா. நாகசாமி அவர்கள்.
கலை, கல்வெட்டு, வட-தென் மொழிகளின் தொடர்புகள் எனப் பலவும்
கற்பிக்கிறார்கள்.
நாடகக் காப்பியமாய் முத்தமிழையும் குழைத்துச் செய்த சிலம்பின்
கடைசியில் நூற்கட்டுரை (summary of the book) உள்ளது. அதில்
இந்த உவமை தமிழில் முதலில் வருகிறது அல்லவா? :
”தெரிவுறு வகையாற் செந்தமி ழியற்கையில்
ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம்
காட்டு வார்போற் ” - சிலப்பதிகாரம்,
தமிழகத்தில் (= தமிழ்நாடு+ஈழம்+கேரளம்) உள்ள வாழ்க்கையின்
பரந்துபட்ட வழக்காறுகளையெல்லாம், ஒரு பெருமலையை ஓர் ஆடி
பிடித்துக் காட்டுவான்போல், இந்த முத்தமிழ்க் காப்பியம்
காட்டுகிறது எனச் சிலப்பதிகாரத்தை நிறைவு செய்கிறார்கள்.
3-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்நாடகக் காப்பியத்துக்கு
இணையாய் வேறொன்று அக்காலத்தில், காளிதாசனுக்கு
முன்னமே, எதுவும் இந்தியாவில் இல்லை என்கிறார் ஸ்ரீ நாகசாமி.
--------------------------------------------------
சிலப்பதிகாரம்
நூற்கட்டுரை
குமரி வேங்கடங குணகுட கடலா
ம்ண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொரு ளின்பம்
மக்கள் தேவ ரெனவிரு சார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்தசொல் லகத்தெழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூஉஞ் செவ்விசிறந் தோங்கிய
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் (10)
அரங்கு விலக்கே ஆடலென் றனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவை
தெரிவுறு வகையாற் செந்தமி ழியற்கையில்
ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம்
காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதி காரம் முற்றும்.
நூற் கட்டுரை முற்றும்
--------------------------------------------------------------------------------
நா. கணேசன்
> அடிகளின் வாழ்க்கை எப்படி ஞான நிலைக்கு மலர்ந்தது என்பதை இரண்டாம் பகுதி
> விவரிக்கிறது.
>
> மூன்றாம் பகுதி அடிகளின் நூல்களான திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றைப்
> பற்றிப் பேசுகிறது.
>
> சதசத்து என்று கூறப்படும் ஆன்மா பளிங்கு போன்று சார்ந்ததன் வண்ணமாகத் திகழ்வது
> ஆதலினால் இறைவன் அருளால் ஆன்மாவைத் தன்னைச் சார்ந்து தலைப்பட வழிவகுப்பன்
> என்று கூறி ஆசிரியர் எப்படி அடிகளின் வாழ்க்கை ஞானத்துச் சரியை, ஞானத்துக்
> கிரியை, ஞானத்து யோகம், ஞானத்து ஞானம் என்ற படித்தரங்களில் மலர்ந்து நிறைந்தது
> என்று விவரிக்கும் பாங்கு சிறந்துள்ளது.
>
> ***
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> *
3-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்நாடகக் காப்பியத்துக்கு
இணையாய் வேறொன்று அக்காலத்தில், காளிதாசனுக்கு
முன்னமே, எதுவும் இந்தியாவில் இல்லை என்கிறார் ஸ்ரீ நாகசாமி.
இந்த உவமை தெரிந்தது தான். ஆனால், ஸ்ரீ ரங்கனின்
”ஆடியுள் அகல்வானம் அடக்கலொப்ப” என்பதற்கு
இளங்கோ அடிகளின் சிலம்பு ஸம்மரி முன்னோடி.
நீங்கள் காட்டும் குறுந்தொகைப் பாடல் போல
கவிச்சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டார் இந்தியாவின்
ஒரே லோகாயத நூலில் (ஜெயராசியின் தத்வ உபப்லவ
ஸிம்மத்தை விட்டுவிட்டால்) பயன்படுத்தியுள்ளார்.
குறுந்தொகைப் பாடலை 11 ஆண்டு முன்னர்
ஜெயங்கொண்டார் உவமையுடன் பொருத்திக் காட்டினேன்.
http://www.treasurehouseofagathiyar.net/13000/13006.htm
http://www.treasurehouseofagathiyar.net/12900/12998.htm
http://www.treasurehouseofagathiyar.net/14300/14313.htm
ஆனால், சிலம்பின் நூற்கட்டுரை தான்
ரங்கன் அவர்களின் ”ஆடியுள் அகல்வானம் அடக்கலொப்ப”
என்பதற்குப் பொருந்துவதால் குறிக்கவில்லை.
குறுந்தொகை ஆடிப்பாவையை நினைவூட்டியதற்கு நன்றி.
நா. கணேசன்
Like the dharmic Wheel (அறவாழி) of Mahavira and Buddha,
the wheel of Philology always turns slowly.
For example, agastya and aaNDaaL myths, presence of jAti in Sangam
literature,
Tolkappiyar and Valluvar jainism are discovered by philology slowly.
It takes time. ~ கடுமிமான் கொங்குகிழான்
கீறல் எதுவும் விழுந்திருக்கான்னு பாக்கதான் பைனாகுலர். தெர்தா?
சந்தேகம்....
விளக்கமுடியுமா?
நான் இதனை கையையும் காலையும் தூக்கினால் அதற்கேற்றவாறு ஆடும் பொம்மலாட்டப் பாவை (ஆடிப் பாவை ) என்று புரிந்து கொண்டேன்.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே?
நீங்கள் விளக்குவது கண்ணாடியில் கையையும் காலையும் அசைப்பதற்கு ஏற்றவாறு கை கால்களை அசைத்து பிரதிபலிக்கும் பிம்பப் பாவை என்று பொருள் சொல்கிறீர்கள் (சரியாகப் புரிந்து கொண்டேனா?)
ஏன் பொம்மலாட்டப் பாவை பாவை எனப் பொருள் கொள்ளக் கூடாது என விளக்க வேண்டுகிறேன்.
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.
"ஆடிப் பாவை” என்று குறுந்தொகையில் இருப்பதால் இப் பொருள்.
உ-ம்: தண்ணாடி - cooling glasses.
பொம்மலாட்டப்பாவை - முன்னாளில் தோற்பாவை -
ஆடுபாவை என்பதுபோல் இருப்பின் தோற்பாவை எனப் பொருள் வரும்.
ஆனால் குறுந்தொகையில் இருப்பது கண்ணாடிப் பிம்பம்.
அப்போது கண்ணாடிகள் வெண்கலத்தால் ஆனவை எனலாம்.
இவ்வகை கண்னாடிகள் ஆறன்முளை என்னும் ஊரில்
இன்றும் (கேரளா) செய்யப்படுகின்றன:
http://aranmulakannadi.org/about/making/
இந்தியாவின் வெண்கல ஆடிகள் மத்திய ஆசியாவில்
புகழ்பெற்றவையாய் 2500 ஆண்டுகள் முன்னரே இருந்துள்ளன.
பேரா. ய. வசில்காப் கட்டுரை (பல ஆயிரம் வருடத்துக்கு முந்தைய
வெண்கல ஆடிகளின் படங்களுடன்)
http://www.laurasianacademy.com/Mirrorscompressed.pdf
உவேசா உரை - குறுந்தொகையில் இப் பாடலுக்கு:
http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=8
நா. கணேசன்
பி.கு. பொம்மலாட்டம் சங்க காலத்தில் இருந்ததா? எனவும்
தெளிவாய் தெரியவில்லை.
விளக்கம் அளித்ததற்கு அறிஞர்கள் இருவருக்கும் என் நன்றிகள்.
"சங்ககாலத்தில் பொம்மலாட்டம் இருந்ததா?" என்பது பேராசிரியர்க்கு உரிய "எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி" கேள்வி.
எனவே இந்தப் பதிலில் நான் திருப்தி அடைந்து விடுகிறேன்.
...தேமொழி
இந்த இழை என்னவாயிற்று? தொடரும் உத்தேசம் இல்லையோ ?சுபா2013/1/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
2013/1/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வடமொழி நிகண்டுகளில் சிறந்தது அமரசிம்ஹனின் நிகண்டு. அமரசிம்ஹனின் காலம் கி பி 375 என்பர். சந்திரகுப்த விக்கிரமாதித்யன் (II) சபையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவர் அமரசிம்ஹன் என்று விக்கியின் கூற்று http://en.wikipedia.org/wiki/Amara_Sinha
ச்லோகங்களில் பொருள் தொகையாக அமைக்கப்பட்ட நிகண்டு இது எனலாம். மூன்று பகுதிகள் கொண்டமையால் திரிகண்டம் எனவும், பெயர்ச்சொற்கள், அவற்றின் எண், பால் முதலிய அடையாளங்களுடன் வகை தொகைப் படுத்துவதால் ‘நாம லிங்க அனுசாஸனம்’ எனவும் வேறு பெயர்களும் உண்டு.
இந்த நூலுக்கு சம்ஸ்க்ருதத்தில் வியாக்கியானங்கள் பெருகியுள்ளன என்பது சொல்ல வேண்டாம். ஆனால் திராவிட வியாக்கியானம் ஒன்றும் 1873 லேயே திருவிசைநல்லூர் மகாலிங்க சாஸ்திரிகள் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
நூலும், வியாக்கியானமும் சேர்ந்து பெரிய சைஸ் நூலாக 1873, ஜனவரி மாதம் ஹிந்து பாஷா சங்சீவினி ப்ரஸ், எஸ் திருவேங்கடாசாருலூ, வி ராமசாமி சாஸ்திரி அண்ட் கோ என்பவ்ர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.
திருவிசநல்லூர் மகாலிங்க சாஸ்திரிகள் எழுதிய மணிப்ரவாள வியாக்கியானத்தின் பெயர் - லிங்காபட்டீய டீகா ஸர்வஸ்வாதி ஸாரஸங்க்ரஹ ரூபமான குருபால ப்ரபோதிகை என்பதாகும்.என்ன பெயர் இது? இவ்வளவு நீளமாக ..:-))
அட்லாஸ் சைஸ் நூலானது 464 பக்கங்களுக்கு வருகிறது. வடமொழி மூலம் முழுவதும் கிரந்தாக்ஷரத்தில் அச்சிடப்பட்டும், தமிழ் மொழிக்கு நடுவில் வரும் வடமொழிப் பதங்கள் கிரந்தாக்ஷரத்திலும், தமிழ்ச் சொற்கள் தமிழிலும் அச்சிடப்பட்ட நூல்.
*
மற்றுமொரு வெளியீடு (50 ஆண்டுகள் கழித்து)
அமரசிம்ஹம் என்னும் நிகண்டு நூல் 1924 ஆம் வருஷம் டி சுவாமிநாத சாஸ்திரி என்பவரால் சாஸ்திர சஞ்ஜீவனி முத்ராக்ஷர சாலை, 313, தங்கசாலைத் தெருவு, மதராஸ் என்னும் முகவரியிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சுருக்கமாகத் தமிழில் குறிப்புரை ‘அமரபத கல்பதரு’ என்னும் பெயருடன் தரப்பட்டிருக்கிறது. காமாக்ஷிபுர வாசியான ப்ரஹ்மஸ்ரீ வெங்கடராம சாஸ்திரி அவர்களால் நன்கு பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்படுவதாய்க் கூறப்பட்டிருக்கிறது.
முன்னுரையில் ஸ்ரீ டி சுவாமிநாத சாஸ்திரிகளால் அழகிய முன்னுரை தமிழில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் அமரசிம்ஹன் சமணரா அல்லது பௌத்தரா என்னும் கேள்வியை எழுப்பி பௌத்தரே என்று முடிவு கூறுகிறார். அவரது முன்னுரையில் ஒரு பகுதி --
“ஸாராம்சம் - அமரசிம்ஹன் பௌத்த கவியேயாம் என்றும், சிலர் ஜைனமதத்தினெனச் சொல்லினும்
பிரமாணங்களால் பௌத்தமதத்தினனே யென ஸ்பஷ்டமாகிறதென்றும், அமரசிம்ஹன் சக கர்த்தாவான விகரமார்க்கனுடைய ஸபையிலிருந்த ஆஸ்தாந பண்டிதனே என்றும், இப்போதைக்கு விக்ரம சகந்தொடங்கி 1962 வருஷங்கள் ஆயின என்றும், ஆதலால் நாமலிங்காநுசாஸனம் இயற்றப்பட்டு 1950 வருஷங்களாவது கடந்திருக்க வேண்டும் என்றும் விளக்கமாகிறது. பிற விஷயங்களை “சரித்ர சிந்தாமணி” எனு நூலில் ஸவிஸ்தாரமாகக் காணலாம்.”
இந்த ‘சரித்ர சிந்தாமணி’ என்னும் நூல் என்னது? யார் எழுதியது? ஆர்வம் உடையோர் முனைக !. கிடைத்தால் பல தகவல்கள் கலந்து கட்டியாகவேனும் கிடைக்கலாம் அன்றோ!உண்மைதான். தேடிப்பார்த்தால் கிடைக்கலாம். கூகளில் ஒரு செர்ச் கொடுத்துப் பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை. வேறு எங்காவது தான் தேடிப் பார்க்க வேண்டும்.நல்ல தகவல். நன்றி.சுபாஸ்ரீ டி சுவாமிநாத சாஸ்திரிகள் அமரகோசம் என்பதற்குப் பெயர்களாக நாமலிங்கானுசாஸநம், அமரம், அமரகோசம், டீகாமரம், பெயரமரம் என்று வழங்கப்பட்டது என்கிறார்.
பெயரமரம் - என்னும் சொல் புழக்கத்தில் இருந்தது என்னும் செய்தி தமிழகத்தில் அமரகோசம் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வந்தமையைக் காட்டுகிறதோ!
சாதாரண நூல் சைஸில் உள்ள இந்த வெளியீடு 470 பக்கங்கள் கொண்டு, முதலில் வந்த (?) பெரிய நூல் வெளியிடப்பட்டு (1873) 50 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil--
Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஏன் சமணத்திற்கு மட்டும் இந்த மாதிரி நிலை. எல்லாவற்றிற்கும் நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது??? . :-(
--
ஏன் சமணத்திற்கு மட்டும் இந்த மாதிரி நிலை. எல்லாவற்றிற்கும் நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது??? . :-(
அமரகோசம் சமணருடையது எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது.
இந்திரனுடைய பெயர்களாக 39 நாமங்கள் அதில் சொல்லப்படுகின்றன.
அதில் 34ம் பெயராக அமைந்திருப்பது ஸஹஸ்ராக்ஷ - ஆயிரங்கண்ணான்.
அரவிந்தாக்ஷ - தாமரைக் கண்ணான் பெயர்ப்பட்டியலில் இல்லை :
--
தேவ்
ஓர் அபூர்வ நூலின் ஆய்வும், அதன் கதையும்( The Earliest Missionary Grammar of Tamil,Fr. Henriques' Arte da Lingua Malabar: Translation, History and analysisBy Jeanne Hein and V S RajamPublished byThe Department of South Asian studiesHarvard University2013.)*
உ-ம்: தமிழ் அகப் பாடல்கள் பிராகிருதமாக மலயம், தென்றல், சந்தனம் பற்றியும், 1000 தாம்ரைக்கண்ணன் இந்திரன்என்பது பற்றியும் மூல ப்ராகிருத வாக்கியத்துடன் உள்ளது.
Jeanne அம்மையார் குணமடைந்து வந்து இந்த நூலைக் கையில் தொட்டுப் பார்க்கும் அந்த நாள் நன்னாள் என்கிறார் முனைவர் ராஜம். நாமும் கடவுளிடம் பிரார்த்திப்போமாக.

Jeanne Harbison Hein of Bethany; 94 -- BETHANY - Mrs. Jeanne Hein, 94, died peacefully after a long struggle with Alzheimer's disease on Saturday, July 6th at her home in Bethany, CT. Jeanne was born March 17, 1919 in Erie, Pennsylvania. She graduated from Strong Vincent High School with honors in 1936, serving as president of the school's National Honor Society chapter. She graduated from the University of Pittsburgh cum laude in 1940 and earned her Bachelor of Divinity degree from Yale Divinity School in 1954.
Jeanne attended Sarah Hearn Memorial Presbyterian Church as a youth where she was very committed and active within the United Christian Youth Movement and its Pennsylvania chapter. She was nominated as a delegate and attended the World Conference of Christian Youth held in Amsterdam, The Netherlands in July 1939.
She married Stanley Parker Harbison August 2, 1942. As a conscientious objector, and committed pacifist, Stanley was assigned by the Civilian Public Service Program to service in Castaner, Puerto Rico. Jeanne served as Missionary under appointment of the Presbyterian Board of National Missions 1943-48. Stanley and Jeanne administered a hospital and clinic serving the rural poor from 1943-45. Following the war, they continued their service in Guacio, Puerto Rico directed by the Presbyterian Christian Service in San Sebastian, Puerto Rico. With Stanley, she was Co-founder and Co-director of the rural reconstruction project serving the communities in and around Guacio. They also developed a conference center there to serve the churches of Puerto Rico. Returning to the US in 1948, Stanley served as minister of the First Church Christ (Congregational) in East Haddam, CT. He graduated from Yale Divinity School, B.D., June1952. One month later he died from polio.
Jeanne served as Secretary to the Dean and Advisor to Women Students, Yale Divinity School 1954-57. She declined an offer from the Presbyterian Church to accept the post of Secretary of Foreign Missions' Missionary Personnel. She then dedicated herself to the care of her two sons and their great-grandmother.
Following Mr. Harbison's death, in 1959 she married Yale Professor Norvin Hein whom she accompanied with their growing family on year-long sabbaticals in England and India in the early 1960s. While she was never ordained in the Christian Ministry, Jeanne received the Award for Distinction in Lay Ministry from Yale Divinity School in 1992. Jeanne also co-authored, with Rajam Ramamurti, The Earliest Missionary Grammar of Tamil, published by Harvard University Press in 2013 after an effort that spanned some 47 years.
Beyond missionary work and research into the Age of Discoveries, Jeanne's adventurous nature expressed itself in travels to the Yukon, Hudson Bay and the Canadian Maritime provinces. She was also an avid UCONN Huskies Women's basketball fan.
She dedicated much of her time, love and attention to the care of her daughter Margaret who was born with autism. Her tireless advocacy for persons with disabilities made an impact on public policy and programs.
Jeanne is survived by her husband Norvin Hein, her children Stanley and Donald Harbison, Lisa, Chris and Meg Hein, and seven grandchildren.
A Memorial Service will be held at First Church Christ, 511 Amity Road, Bethany, CT on Saturday, July 20, 2013 at 11:00 a.m. A reception will follow at the church. In lieu of flowers donations may be made to the Autism Society http://www.autism-society.org. Arrangements under the direction of Beecher & Bennett, 2300 Whitney Ave., Hamden.