எகிப்து பிரமிடு தமிழி எழுத்தில் விடுபட்டது என்ன

1 view
Skip to first unread message

seshadri sridharan

unread,
Feb 20, 2026, 11:21:45 PM (2 days ago) Feb 20
to வல்லமை, hiru thoazhamai, அகரமுதல மடல்கள், இலக்குவனார் திருவள்ளுவன், சிறகு இதழ், archcomm...@gmail.com, seshadri sridharan
எகிப்து பிரமிடு தமிழி எழுத்தில் விடுபட்டது என்ன

சுச்சர்லாந்து பேரா இங்கோ திராச்சு அண்மையில் சென்னை எழும்பூர் அருங்காட்சியக கருத்தரங்கில் வழங்கிய செய்தியில் தாம் எகிப்தின் 7 ஆம் ராமிசேசு வேந்தன் கல்லறையில் கண்ட தமிழி கல்வெட்டுகள் குறித்து சில ஒளி படங்களை வெளியிட்டார். அவராக இந்த எழுத்துகளை படித்துள்ளார். துணைக்கு பேரா சார்லொட்டி கிமிட்டு என்ற பிரான்சு நாட்டவரை சேர்த்துக் கொண்டுள்ளார். நம் தமிழ் நாட்டவர் படித்ததாக தெரியவில்லை. எனவே இவற்றை படிக்குங்கால் இவற்றில் உள்ள பொதுமையை வைத்து ஒரு முன்முடிபாக (pre-assumption) "சிகை கொற்றன் வரா கண்டா" என்று தப்பாக படித்துள்ளனர். தமது ஊர் திரும்பும் முன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையிடம் சரியான வாசிப்பை பெற்றுக் கொண்டிருப்பர் என்று நம்புகிறேன். இதில் மொழியின் பொருளுக்கு தக்கவாறு சில எழுத்துகளை அவரும் அவரது உடனாளரும் தவறவிட்டதை இங்கு நான்  சரியாகப் படித்துக் காட்டியுள்ளேன். அவர்களது இந்த தவற்றுக்கு இதில் இரண்டு சிந்து எழுத்துகள் கலந்திருப்பதும் ஒரு காரணம் என்பேன்.

vatha.jpg

sikai.jpg

இணைப்பில் உள்ள படத்தில் "சிகை கொற்றன் வந்து கண்டான்" என்று தான் உள்ளது வரா, வரு என்று குறிக்க ரகரம் அங்கே இல்லை,  மாறாக வந்து என உள்ளது. ''து'' இதில் தெளிவாக இடம் பெற்றுள்ளது. ''ந்'' சிந்து எழுத்தில் உள்ளது. அது சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட வில்லை. அதை பச்சை வண்ணத்தில் நான் காட்டியுள்ளேன். இதற்கு படிப்போர் இரண்டு படத்தையும் பெரிதுபடுத்தி (zoom) ஒப்பிட்டு தெளிக. இறுதியில் உள்ள எழுத்து தமிழியும் இல்லை, வட்டெழுத்தும் இல்லை. ஒரு உய்துணர்வில் (inference) சிந்து எழுத்து என்று நான் கூறியுள்ளேன். ஏனென்றால் இது எகிப்து கல்லறையில் மட்டுமே காணப்படுவது. பனை பனை என்று இவர்கள் படித்த இன்னொரு கல்வெட்டிலும் இது போல உள்ளது காண்க. நான் புது ஆய்விற்காக இதை ஒப்பி இடுகிறேன். மற்றவர் பலரும் தப்பான வாசிப்பையே அதிகம் பகிர்கின்றனர். 

panai panai.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages