குடில் - குடிசை வேர் பொருள்
குல் > குள் > குட் என்ற சிறுமைக் கருத்தில் வந்தது தான் குடில், குடிசை ஆகிய சொற்கள். இதாவது, அறைகள் இல்லாத சிறிய வீடு என்பதே அதன் பொருள். மல் > மாள் > மாளிகை என்பது உயர்ந்த கட்டடம் என்ற பொருளில் வந்தது.
குல் + கு > குங்கு - குங்கிப்போதல் - குறைதல்
குல் + சு > குச்சு - சிறுகுடில், hut, மரக்குச்சி ; குச்சில் - சிறிய வீடு
குல் > குன் - குன்று; குன் + சு > குஞ்சு - பறவை, மீன் ஆகியவற்றில் சிறியது
குட்டி - சிறிய விலங்கு, குட்டை - உயரக் குறைவான ; குடங்கர் - குடிசை, cottage; குடிசில் - குடிசை; குடிசீலை - கோவணம்; கைக்குட்டை - சிறு கைத்துணி;
குள் > குணம் - பள்ளமான, தாழ்வான இடம்; குணுங்கர் - இழிந்தோர்;
குள் + து = குத்து - துளித் துளியாக விடு அல்லது ஊற்று;
குல் + பு = குப்பு > குப்பி - சிறு புட்டி, சிறு பேழை
குல் > குரு > குரம்பை - சிறு குடில்