முழவு என்னும் சொல்லின் உற்பத்தி

24 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 30, 2022, 4:34:57 PM3/30/22
to vallamai, housto...@googlegroups.com
முழவு என்னும் சொல்லின் உற்பத்தி
-------------------------------

பழனி> ஒரு கேள்வி:  முழவு (பொருள் முரசு) என்ற சொல்லை எப்படிப் பகுக்கலாம்

நல்ல வினா. முழ்-/முள்- என்பது கோல், அம்பு போன்றவற்றின் அடிப்படைச் சொல். வில்லில் கோக்கும் அம்புக்கே ‘கோல்’ என்ற பெயர் உண்டு. வில் = சாபம் என வடமொழியில் ஒரு பெயர். சாய்ப்பது எனப் பொருள். சாபம்/சாவம். சாய்வது என்பதில் இருந்து சவம்/ஶவம் என்ற வடமொழி வார்த்தை உருவாகிற்று என்பர் ஸம்ஸ்கிருத மொழியியலார் (உ-ம்: பேரா. மைக்கேல் விட்சல், ஹார்வர்ட் பல்கலை).

முழ்-/முள்- தாதுவேரினின்றும் உருவாவது முழம். ஓர் அளவை, முழங்கை நீளம். கோல் கொண்டு அடிப்பது முழக்கு/முழங்கு. எனவே, முழா. முழவு.
கலூழ்- கலூஷ என வடமொழியில் திரியும். காவேரி டெல்ட்டா மாவட்டங்களில் திருவிழா திருவிஷா என ஆகும். (அ.மு.ப.) சூரியன் ஒவ்வொரு ராசியிலும் விழுவது, விஷு என வரும். Equinox, Solstice உள்ள நான்கு விஷுக்கள் (< விழு) விசேடம் ஆனவை. 1000 ஆண்டுகளாய் திருக்கோவில்களில் கொண்டாடப்படுபவை.  https://groups.google.com/g/houstontamil/c/CUCDt6Y_qQA/m/83tW0fW0AgAJ

முழ்-/முள்- முழிகி/முளிகி தொல்திராவிட பாஷையில் ‘அம்பு’. முழிகி/முளிநாடு தெலுங்கிலே முலிகிநாடு. இது  baaNa-raaSTram/vaaNa-raaSTram என வடமொழியிலே பெயர்க்கப்பட்டுள்ளது. வட தெக்காணப் ப்ரதேசம். வாணர்கள் வடக்கே இருந்து தமிழ்நாட்டை அடைந்த வீரர்குடியினர். பங்கு தமிழ்நாட்டு வரலாற்றில் பெரிது.
muz-/muLiki > muSika 'mouse' - this mythology of baaNa chieftains originating in the Deccan to enter Tamil country links 4 Southern states.  

பிற பின்!
நா. கணேசன்

DEDR:
4994 Ta. mur̤ai (-v-, -nt-) to enter; (-pp-, -tt-) to pierce, bore; n. large mountain cave, cavern, den; mur̤aiñcu cave, hole; mūr̤ai a hollow place; mōr̤ai cleft, crevice, subterranean water-course, pool. Ma. muḷayuka to creep in, retire, cattle to enter the stable; muḷekka to gather, shut up as cattle for the night. Ka. mōḷe a small hole (made by crabs, etc.) in the banks of ricefields or tanks, a fissure. Cf. 3714 Ta. nur̤ai. DED 4097.
   4995 Ta. muḷ thorn, brier, thistle, bristle, spine, anything sharp or pointed as a fishbone, porcupine's quill, etc., goad, spur, sharp-pointed instrument, sharpness; muḷku (muḷki-) to enter, pierce; muḷḷi thorny plant, name of various plants; muḷari bramble, thorny twig; muḷavu, muḷā porcupine; muḷḷam-paṉṟi porcupine; muṇṭakam thorn, thorn-bush, fragrant screw-pine, Pandanus odoratissimus. Ma. muḷ sharp-pointed, thorn, prickle, an iron pin, spur, bones of fish and snakes; muḷḷan thorny, as plants; porcupine; muḷḷi different plants; a fish. Ko. muḷ thorn; miḷyp thorny plants. To. muḷ thorn; muḷ digging-fork; muḷ-ody porcupine (< Badaga); müḷy sp. thorny plant; penis. Ka. muḷ, muḷu, muḷḷu thorn, pointed thing as a prickle, a sting, spur, hand of a clock, tongue of a balance, etc.; vb. to prick, sting; muḷuhu pricking, stinging, goading, goad; muḷḷa hand of a clock; muḷḷu fork. Koḍ. muḷḷï thorn; muṇḍe screw-pine. Tu. muḷḷu thorn, thorny bush, iron prickle, spur, bone of a fish or serpent, spine, fork; muḷḷaḍi thorny ground; muṇḍeyi screw-pine. Te. mulu, mullu thorn, prick, prickle, the hand, pointer, needle, spur; muliki arrow, arrowhead, iron point of a goad, peg of a spinning top; muṇḍla thorny. Kuwi (S.) mullu needle Cf. 4998 Ta. muḷai. DED(S) 4098.
Reply all
Reply to author
Forward
0 new messages