Re: இந்த வார வல்லமையாளர்!

612 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 20, 2015, 12:07:39 AM7/20/15
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com, vall...@googlegroups.com

ஜூலை 20, 2015

இவ்வார வல்லமையாளர்கள்
வல்லமைமிகு சொற்பொழிவாளர் இசைக்கவி இரமணன் அவர்கள் 

 

 

best of isaikkavi -ramanan


இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படும் இசைக்கவி இரமணன் அவர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் முற்றிலும் தேவையற்றது. அவரது இலக்கிய பகிர்வுகளில் மூழ்கித் திளைத்திராத தமிழரும் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் முன்னுரையாக ஓரிரு அறிமுக வரிகள் தரவேண்டும் என்ற மரபில் அடுத்து சில வரிகள் அவரைப் பற்றி இங்கு தரப்படுகிறது. நெல்லையில் பிறந்த இசைக்கவி இரமணன், கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், தொகுப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட பல்கலை வித்தகர் என்று அறியப்படுகிறார். ‘தி இந்து’ பத்திரிகையில் 28 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.


இசைக்கவி இரமணன் பொதிகை தொலைக்காட்சியில் “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியும், அகில இந்திய வானொலியிலும் பல சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார். தற்பொழுது சங்கரா தொலைக்காட்சியில், மஹா பெரியவா என்று போற்றி வணங்கப்படும் காஞ்சி மகான் அவர்களைப் பற்றி தினமும் காலை 5.40 மணிக்கு ‘காஞ்சி மகான் பற்றிய சொற்பொழிவுகளை வழங்கி வருகிறார். இதுவரை ‘காஞ்சி மகான்’ பற்றி 139 சொற்பொழிவுகளை இந்நிகழ்ச்சியின் மூலம் வழங்கியுள்ளார் (https://www.youtube.com/watch?v=tzYeHk_Zoz8&list=TLp3FHEL4CnDUxNzA3MjAxNQ).


வல்லமை இதழின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் இசைக்கவி ரமணன். வல்லமை இதழ் தொடங்கிய 2010 ஆம் ஆண்டு, ஒரு நூல் அறிமுகக் கட்டுரையை வல்லமையில் எழுதியது முதல், வல்லமை இதழின் வளர்ச்சியில் தனது படைப்புகளின் மூலம் தொடர்ந்து பங்களித்து வருகிறார். வல்லமை தனது ஐந்தாண்டு இலக்கியப் பயணத்தைக் கடந்து ஆறாம் ஆண்டில் காலடி வைத்ததைக் கண்டு மகிழ்ந்து, வாழ்த்துக் கவிதையொன்றையும் வழங்கி பாராட்டி மகிழ்ந்தார். கவிதையின் சிறு பகுதி கீழே, முழுக்கவிதையையும் இந்தச் சுட்டி வழி சென்று ஆண்டுவிழாக் காணும் வல்லமைக்கு வாழ்த்து! (- http://www.vallamai.com/?p=57588) படிக்கலாம்.

[…]
பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
சொல்லாண்டு வாழ்க! சுவைபலவும் காண்க!
சோகமே இல்லாத சொர்க்கமாக விரிக!
எல்லோர்க்கும் இடம்தந்தே மிகவிரிந்து வளர்க! இந்த
ஏழைக்கும் இடம்தந்தீர் என்நன்றி ஏற்க!
வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

சென்ற ஆண்டின் மகளிர் தினத்தை (மே 2014) முன்னிட்டு வல்லமை இதழ் ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற தலைப்பில் நடத்திய கடித இலக்கியப் பரிசுப் போட்டியின் (http://www.vallamai.com/?p=44563) நடுவராகப் பொறுப்பேற்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்து வழங்கியதுடன், படைப்புகளின் சிறப்புகள் கண்டு  மனம் மகிழ்ந்து, வழக்கமான, குறிப்பிட்ட முதல், இரண்டு, மூன்று, ஆறுதல் பரிசுகளையும் தேர்ந்தெடுத்த பின்னர்; தனது சார்பாக மேலும் அறுவரைத் தெரிவு செய்து சிறப்புப் பரிசு என, அவரே  தலா ரூ. 200 பரிசுத் தொகையை ஒவ்வொருவருக்கும் வழங்கி மகிழ்ந்தவர். வல்லமை இதழ், எழுத்தாளர்களின் எழுத்துகளின் மேன்மையைக் கருதி சிறப்புப் பிரிவு ஒதுக்கிய எழுத்தாளர்களுள் இசைக்கவி இரமணனும் ஒருவர். இசைக்கவியின் இதயம்கவிப்பேழை ஆகிய பிரிவுகளின் கீழ் இசைக்கவி இரமணனின் பல்வேறு படைப்புகள் தொடர்ந்து சென்றவாரம் வரை வல்லமையில் வந்துள்ளன.


சென்னைக் கம்பன் கழகமும், பாரதிய வித்யா பவனும், சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை 2011 ஆண்டு சென்னையில் நடத்தின. அந்த நிகழ்ச்சியில் ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு நடத்தினார். அதுமட்டுமன்று, இன்றுவரை சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் பல இலக்கிய சங்கங்களுடன் இணைந்து வழங்கும் இலக்கிய விழாக்களில் சொற்பொழிவாற்றி வருகிறார். சென்ற சனிக்கிழமையன்று ‘(ஜூலை, 18, 2015) , தத்வலோகா – ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் தொடர் நிகழ்ச்சியின் குறள் விளக்கம் என்ற சொற்பொழிவொன்றையும் வழங்கியிருக்கிறார்.


திறமைமிகு புலவர்கள் அக்காலத்தில் அரசவைப் புலவர்கள் என்ற பெருமையுடன் மன்னர்களின் அரசவையை அலங்கரித்தது போல, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் அரசவை சொற்பொழிவாளர் போன்று தொடர்ந்து அவர்கள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களில் சொற்பொழிவுகள் நடத்தி வருகிறார் இவர். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நடத்தும் மாதாந்திரத் தொடர் சொற்பொழிவுகளில் ஒன்றான, தேவியும் மனிதனும் (தசமஹா வித்யா) என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் பராசக்தியின் ஒவ்வோர் அம்சம் பற்றிய விளக்கங்கள் வழங்கி வருகிறார். சென்ற வாரம் வியாழக்கிழமையன்று மாலை, சென்னை பாரதிய வித்யா பவனில், தசமஹா வித்யையில் ஏழாவதாய் வரும் தூமாவதி தேவியைப் பற்றி சொற்பொழிவாற்றினார். இந்த உரையின் கட்டுரை வடிவத்தை வல்லமையில், சென்ற வெள்ளிக்கிழமையன்று தசமஹா வித்யா – 7 ஆம் வித்யை – தூமாவதி என்று அவர் வழங்கிய கட்டுரையின் (http://www.vallamai.com/?p=59719) மூலம் அறியலாம்.

அழிவின் ஆயாசத்திற்கும் ஆக்கத்தின் ஊக்கத்திற்கும் இடையே உள்ள நிலை, அந்த நிலையின் உருவகம்தான் தூமாவதி! தூமாவதி பற்றியும், அவள் தோற்றம் செயல் பற்றியும் விளக்கும் இசைக்கவி இரமணனின் கட்டுரை இங்கு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. கவிதைகளையும், மேலும் விளக்கங்களையும் காண “தசமஹா வித்யா – 7 ஆம் வித்யை – தூமாவதி” கட்டுரையைப் படிக்கவும்.


ஒளிக்கு விளக்கமுண்டு. இருட்டுக்கு விளக்கமேது, துலக்கமேது, திகழ்ச்சியேது?
இன்மையிலிருந்தே இருப்பு.

ஆனால், ஒளிக்கு இத்தனை சிறப்பிருப்பதற்குக் காரணம், இருள் என்று ஒன்று இருப்பதால். அதாவது இல்லாத ஒன்று இருப்பதால். அந்த இல்லாத ஒன்றாகிய இருட்டிலிருந்துதான், இருப்பு என்னும் ஒளி தோன்றுகின்றது.

அந்த இல்லாதது என்பது மூன்று வகைப்படும்:
1. ப்ராக் அபாவம் – இருப்பது எழுவதற்கு முந்தைய நிலை – விதையிலிருந்து மரம் எழும். அது எழுவதற்கு முன் அங்கே மரம் இல்லை

2. ப்ரம்வம்ச அபாவம் – இருப்பது அழிந்த நிலை – பானை உடைந்ததால் இல்லாமல் போன நிலை

3. அத்யந்த அபாவம் – எப்போதுமே இல்லாதது – முயற்கொம்பு, கானல் நீர்

ஆனால், இல்லாதது என்பது அறவே இல்லாத சூனிய நிலை இல்லை:

· விதையில் மரத்தின் கருத்து இருப்பதால்தான், அது உந்துவதால்தான் விதை விழிக்கிறது

· மண்ணிலிருந்து விளைந்த பானை மண்ணிலேயே சேர்வது, தோற்றத்தின் மாற்றமே

· நீரைக் கண்ட நினைப்புதான் கானலில் நீரைக் காண வைக்கிறது. கொம்பின் ஞாபகம்தான் அதை, அது இல்லாத முயலில் பொருத்திப் பார்க்கிறது

அறியாமைக்கும் அறிவுக்கும்
இருளுக்கும் ஒளிக்கும்
அழிவுக்கும் தோற்றத்திற்கும்
ப்ரளயத்திற்கும் படைப்புக்கும்
இடையில் இருக்கின்ற இருட்டும் வெளிச்சமுமான நிலை,
அழிவின் ஆயாசத்திற்கும் ஆக்கத்தின் ஊக்கத்திற்கும் இடையே உள்ள நிலை, அந்த நிலையின் உருவகம்தான் தூமாவதி!

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம், அவளை
அன்னையெனப்பணிதல் ஆக்கம் என்பான் பாரதி.

சந்திகளின் உருவகம்
இரவுக்கும் பகலுக்கும் இடையே ஒரு சந்தி, அது வைகறை
பகலுக்கும் இரவுக்கும் நடுவில் ஒரு சந்தி, அது அந்திப் பொழுது
முதல் சந்திக்கும், இரண்டாவது சந்திக்கும் மத்தியில் ஒரு சந்தி, அது உச்சிப் பொழுது

அது போல, படைப்புக்கும், பிரளயத்துக்கும் இடையே ஒரு சந்தி
பிரளயத்துக்கும், படைப்புக்கும் நடுவே ஒரு சந்தி
தூமாவதி, இந்த இரண்டு சந்திகளைக் குறிக்கிறாள்.

ஒன்று, படைப்புக்கு முந்தைய நிலை.
இரண்டு, அழிவுக்கு முந்தைய நிலை.

அழிவுக்குப் பின் நேரும் ஆயாசம் இளைப்பாறத் தோதான மடியாகவும் இருக்கிறாள்.
ஆக்கத்திற்கு முன்னிருக்கும் எண்ணமற்ற தன்னந்தனிமையாகவும் இருக்கிறாள்.
வீட்டைக் கூட்டும் விளக்குமாறாகவும் இருக்கிறாள். விளக்கு ஏற்றப்படும் முன் எண்ணெய்யும் திரியும் நிமிண்டும் நேரமாகவும் இருக்கிறாள்.

[…]

இவளே காலராத்ரி, மோஹராத்ரி, மஹாராத்ரி.
ஒவ்வொரு தேவிக்கும் தேவன் உண்டு. ஆனால் தூமாவதிக்குக் கணவன் கிடையாது. ஏன்?
பிரளயத்துக்கும், படைப்புக்கும் உள்ள இடைவெளியில், சக்தியைப் பிரிந்த சிவன் சவமாக இருக்கிறான்.
அந்த இடைவெளியின் உருவகம்தான் தூமாவதி.
அது, இருட்டு முழுவதும் அகலாத, ஒளி சரியாய்ப் புலர்ந்துவிடாத புகை நிலை. புகை, நெருப்புக்கு அறிகுறி. தூமாவதி, இனி தோன்றப் போகும் படைப்புக்கு அறிகுறி.

[…]

படைப்புக்கெல்லாம் மூத்தவளாயிற்றே, அதனால் மூத்த தேவி, மூதேவி, ஜ்யேஷ்டா, தவ்வை.
எல்லோருக்கும் முந்தியவள் என்பதால் கிழவி. உடைந்த பற்கள், குறைந்த பற்கள் கொண்டவள்.
உயிர்களைப் புடைத்து அகற்றுபவள் என்பதால் கையில் முறம் வைத்திருப்பவள்.
அவ்விதம், காலனின் தன்மை இருப்பதால் அவளுடைய வாகனமும், கொடியும் காக்கைதான்.
வெளுத்த முகம், நீண்ட கைகள், கால்கள், தொங்கும் முலைகள், பெரிய காதுகள், கொடூரமான பார்வை.
அழுக்கடைந்த உடைகள் கொண்டவள். மங்களங்களுக்கு விரோதமான குணங்களையும் தோற்றத்தையும் கொண்டிருப்பதால் இவள் துஷ்டா எனப்படுகிறாள்.


வாழ்ந்தே புரிவது வாழ்க்கை, அதில்
வருவதும் செல்வதும் இயற்கை
வழுக்கி விழுந்தபின் எழுவதில்தான்
வளரும் மானிட மேன்மை
சூழ்ந்தே புரிவது உறவு, அதில்
சுவாரசியம்தான் பிரிவு
சுடரை இருளும் இருளைச் சுடரும்
ஒருபோதும் விழுங்காது!

என்பது போன்ற அழகிய கவிதைகள் சொல்லும்…

வல்லமைமிகு கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பல்கலை வித்தகர் என அயராது பலதுறைகளிலும் பங்களித்து, தமிழக மக்களை பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் மகிழ்விக்கும் இசைக்கவி இரமணன் அவர்களுக்கு வல்லமை  இதழின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகின்றன.


**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]



தொடர்புக்கு:
ஃபேஸ்புக் வலைத்தளம்: https://www.facebook.com/venkateswaran.taruvai?fref=ts



நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=59772

DEV RAJ

unread,
Jul 20, 2015, 12:28:36 AM7/20/15
to vall...@googlegroups.com
ஜூலை 20, 2015
இவ்வார வல்லமையாளர்கள்
வல்லமைமிகு சொற்பொழிவாளர் இசைக்கவி இரமணன் அவர்கள் 

நல்ல தேர்வு


 

1. ப்ராக் அபாவம் – இருப்பது எழுவதற்கு முந்தைய நிலை – விதையிலிருந்து மரம் எழும். அது எழுவதற்கு முன் அங்கே மரம் இல்லை

2. ப்ரம்வம்ச அபாவம் – இருப்பது அழிந்த நிலை – பானை உடைந்ததால் இல்லாமல் போன நிலை

3. அத்யந்த அபாவம் – எப்போதுமே இல்லாதது – முயற்கொம்பு, கானல் நீர்



ப்ரத்வம்ஸ அபாவம் - சரி

ப்ராக் அபாவம் - prior negation

ப்ரத்வம்ஸ அபாவம் - posterior negation

அத்யந்த அபாவம் - absolute negation



தேவ்

Innamburan S.Soundararajan

unread,
Jul 20, 2015, 1:12:08 AM7/20/15
to vall...@googlegroups.com
திரு. இசைக்கவி ரமணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jul 27, 2015, 12:15:04 AM7/27/15
to மின்தமிழ், jsthe...@gmail.com, vall...@googlegroups.com, jsthe...@gmail.com, mrhub...@gmail.com

ஜூலை 27, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  எம்.  ஆர். ஹப்பர்ட்  அவர்கள் 

m r hurbert

 

வறட்சிக்குப் பிறகு புத்துயிர் அளிக்கும் மழைக்கு ஷப்னம் என்று பெயர். அதைப் போன்று வறண்டு போன வறிய நிலையில் வாழும் சிறுவர், சிறுமியரும், இளைஞர்களும் வாழ்வில் வளம் பெறும் வகையில் தொண்டூழியம் செய்யும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஷப்னம் ரிசோர்செஸ் என்ற அறக்கட்டளை அமைப்பு. அரசு பதிவு பெற்ற இந்த  ஷப்னம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவித்து, கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வருபவர் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படும் திரு. எம். ஆர். ஹப்பர்ட் என அழைக்கப்படும் மைக்கேல் ஹப்பர்ட் அவர்கள். இவரது ஷப்னம் தொண்டு நிறுவனத்தின் குறிக்கோள் புறநகர், கிராமப்பகுதிகளில் வறுமையின் பிடியிலும், வன்முறைகள் நிறைந்த குடும்பச் சூழலில் வாழும் சிறுவர், சிறுமியர்கள்; கல்வி, சுகாதாரம், நல்வாழ்வு ஆகியவற்றில் பின்தங்கும் சூழ்நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவுவது. குழந்தைத் தொழிலாளராக இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கான பாதுகாப்பு இல்லம், கல்வி வளர்ச்சிக்கு உதவுவதும் ஷப்னம் அமைப்பின் நோக்கம்.

சிறுவர்களுக்காக காலணிகள் வழங்குவது முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்குவது வரை பலவகைகளில் ஷப்னம் அமைப்பால் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்கு உழைத்துக் கொண்டே கல்வியைத் தொடர உதவுவதும், TUPA (The underpriveleged angels) என்ற வாழ்த்து அட்டைகளை கைவினைப்பொருட்களாக உருவாக்கி விற்பனை செய்து நிதி திரட்டுவதும் ஷப்னம் ஈடுபட்டுள்ள பணிகளின் சில கோணங்கள் என்றால், சமூகத்திற்கு விழிப்புணர்வுச் செய்திகள்தரும் நோக்கில் ஓட்டங்கள் போன்ற கவன ஈர்ப்பு நிகழ்வுகளும், தற்கால இளைஞர்களுக்கு உதவும் காலத்திற்கேற்ற பயிற்சி பட்டறைகளும் நடத்தி வருவது ஷப்னம் அமைப்பின் மற்றொரு வகை பரிமாணம்.

hurbert2

இந்த வகையில் சென்ற சனிக்கிழமையன்று ஒரு பயிற்சிப் பட்டறை ஒன்றின் வழியாக ஷப்னம் தொண்டு நிறுவனம் இளைஞர்களுக்கு தனிமையை எதிர்கொள்ளும் பயிற்சியை அளித்தது.

Mr Hubert 2

lonliness

“தனிமை நிறைந்த வாழ்க்கை வறுமையையும் விடக் கொடிதானது” என்பதன்   அடிப்படையில் முதியோரும், இளைஞர்களும்,  சிறுவர்களும் இக்கால வாழ்க்கை முறையினால் எவ்வாறு தனித்து விடப்படுகிறார்கள் என்பதையும், இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக இக்கால சமூகம் இழந்து நிற்கும் ஒன்று மூதாதையர் தங்கள் பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்வது போன்று இரு சாராரையும் இணைக்க இருந்த ஒரு பிணைப்பு  மறைந்து போனது.  தனிமை வாழ்க்கையில் அகப்படுபவர்களை எப்படி தனிமையில் இருந்து மீட்கலாம் என்பதற்கான வழிகள் சில பயிற்சி பட்டறையில் பங்கேற்ற உளவியல், சமூகவியல் புலம்சார்ந்த கல்லூரி மாணவ மாணவியரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

சிறுவர்களின் நல்வாழ்விற்காகவும், கல்விக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் எம். ஆர். ஹப்பர்ட் அவர்களும் அவரது சமூகப் பணிகளுக்காக பாராட்டுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.

Mr Hubert 1

வறிய நிலையில் உள்ள சிறுவர் நல்வாழ்விற்காக சமூக அமைப்பை நிறுவித் தொண்டாற்றிவரும் திரு. மைக்கேல் ஹப்பர்ட் அவர்களின் தொண்டு மனப்பான்மையைப் பாராட்டி அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]



தொடர்புக்கு: 

Mr. M.R. Hubert
SHABNAM RESOURCES
(REGD. Charitable Non Profit Trust)
Old No 5, New No 13, Buddha Street,
Rangarajapuram, Kodambakkam.
Chennai 600 024
Phone: +91-44-64547089
E-Mail: mrhub...@gmail.com

http://www.shabnamresources.com/

https://www.facebook.com/pages/Shabnam-Resources/161348097284778

 

Sources of News and Pictures:
Free workshop on tackling loneliness

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/free-workshop-on-tackling-loneliness/article7438905.ece

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/free-workshop-on-tackling-loneliness/article7438849.ece


Hundreds Run for the Better Future of the World in Kodambakkam

http://www.newindianexpress.com/cities/chennai/Hundreds-Run-for-the-Better-Future-of-the-World-in-Kodambakkam/2015/06/30/article2893326.ece


Chennai-based NGO celebrating Christmas differently

http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-based-NGO-celebrating-Christmas-differently/articleshow/27803350.cms


Sketches of a safe Deepavali

http://www.newindianexpress.com/education/student/article251398.ece


Director of Shabnam Resources awarded for his work in education and children’s welfare

http://overcomingpoverty.org/article/director-of-shabnam-resources-awarded-for-his-work-in-education-and-childrens-welfare



நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=59992

தேமொழி

unread,
Aug 3, 2015, 12:19:06 AM8/3/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, freetamil...@gmail.com

ஆகஸ்ட் 3, 2015

இவ்வார வல்லமையாளர்கள்

வல்லமைமிகு “ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம்” குழுவினர்

freetamilebooks-troup

 

சென்ற வாரம் ஜூலை 26, 2015 அன்று “மூலிகை வளம்” என்ற மின்னூல் வெளியீட்டின் மூலம், இரண்டு ஆண்டுகளில் 200 மின்னூல்களை வெளியிட்டு தனது மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ள தன்னார்வப் பணி செய்யும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினரை (freetamilebooks.com) இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.


சென்னை, மும்பை, காரைக்குடி, கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை, பூனே என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்; அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அரேபியா ஆகிய நாடுகளிலும் வாழ்ந்து வரும் 15 தன்னார்வப் பணியாளர்கள், சென்னையில் வாழும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் திரு. த.சீனிவாசன் தலைமையில் இணையம் வழியாக ஒருங்கிணைந்து தன்னார்வப் பணியாகத் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்கள். படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons) உரிமத்தின் கீழ் தங்கள் நூல்களைப் பதிப்பிக்க அனுமதி அளித்த 80 நூலாசிரியர்களின் நூல்களை மின்னூல்களாக மாற்றி இணையம் வழி அனைவரும் பெறச் செய்யும் சிறப்பான பணியை மேற்கொண்ட இக்குழுவினர் தங்களது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நேரத்தில் அவர்களது தொடர் வெற்றிக்காகப் பாராட்டவேண்டியது தமிழர்களின் கடமை. தங்கள் நூல்களைப் பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர்களும் மின்னூலாக்கம் செய்து வழங்கும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினரின் தன்னார்வத் தொண்டும் காலத்தால் நிலைத்து நிற்கும்.

freetamilebooks-books

மின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல், மென்பொருள் உருவாக்கம், அட்டைப்படம் உருவாக்கம், ஒருங்குறியாக்கம் செய்தல், ஆன்டிராய்டு செயலி உருவாக்கம், மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்கிணைப்பு, திட்ட மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு, மின்னூல் வெளியீடு, பதிப்பகப்பணி என தங்கள் திறமைக்கேற்ற பணியைத் தேர்ந்தெடுத்து தன்னார்வப் பணி செய்துவரும் இக்குழுவிலுள்ள 15 உறுப்பினர்களின் பணியும், அவர்களது பங்களிப்பும், வசிப்பிடம் பற்றிய தகவலும் கீழே அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர்: 
அ. இரவிசங்கர் – புதுக்கோட்டை (மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு) 
அன்வர் – சென்னை (மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்கிணைப்பு) 
இராஜேஸ்வரி – ஆஸ்திரேலியா (மின்னூலாக்கம்) 
கலீல் ஜாகீர் – விழுப்புரம் (ஆன்டிராய்டு செயலி உருவாக்கம்) 
கிஷோர் – சிங்கப்பூர் (மென்பொருள் உருவாக்கம்) 
சிவமுருகன் பெருமாள் – அமெரிக்கா (மின்னூலாக்கம்) 
த.சீனிவாசன் – சென்னை (மின்னூல் வெளியீடு, பதிப்பகத்தார்) 
நித்யா – சென்னை (மின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல்) 
பிரியா – மும்பை (மின்னூலாக்கம்) 
ப்ரியமுடன் வசந்த் – அரேபியா (அட்டைப்படம் உருவாக்கம்) 
மனோஜ் குமார் – கோவை (அட்டைப்படம் உருவாக்கம்) 
மு. சிவலிங்கம் – தமிழ்நாடு (ஒருங்குறியாக்கம் செய்தல்) 
லெனின் குருசாமி – காரைக்குடி (அட்டைப்படம் உருவாக்கம்) 
ஜெகதீஸ்வரன் – சென்னை (அட்டைப்படம் உருவாக்கம்) 
ஜெயேந்திரன் சுப்பிரமணியம் – பூனே (மின்னூலாக்கம்)


தன்னார்வலர்களாகச் செயல்படுகின்ற இக்குழுவினரின் நோக்கம், தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாகப் பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மின்னூல் வெளியீட்டை அச்சு நூல் வெளியீடு அளவுக்குப் பெருமிதத்துக்கும் பொதுமக்கள் ஏற்புக்கும் உரிய ஒன்றாக மாற்றி வரும் இவர்களது பணியின் பயனாக வெளியிட்ட ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் தரவிறக்கங்கள், ஏராளமான பின்னூட்டங்களைப் பெற்ற நூல்களையும், பல்லாயிரக் கணக்கான வாசகர்களையும் பெற்றிருப்பது இவர்களது உழைப்பின் சிறப்பு.


மின்னூல்களைப் படிக்க வசதியான கையடக்கமான கருவிகள் பலவும் சந்தையில் சிறந்த தொழில் நுட்பத்துடனும், குறைந்த விலையிலும் கிடைக்கத் துவங்கிய காரணத்தினால் பலரும் அவற்றைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். ஆங்கில மொழி வாசகர்களுக்கு எண்ணிறைந்த மின்னூல்கள் இலவசமாகவும் கிடைத்து வருகின்றன. தமிழிலும் மதுரைத்திட்டம்தமிழ் மரபு அறக்கட்டளைபோன்ற தன்னார்வக் குழுக்களும், இணைய ஆவணகம்கூகுள் புத்தகங்கள்திறந்த நூலகம்திறந்த வாசிப்பகம் போன்ற நிறுவனங்களும், தமிழ் இணையக் கல்விக்கழகம் போன்ற அரசு நிறுவனங்களும் தமிழ் மின்னூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை முன்னெடுத்துள்ளன என்றாலும் இவையாவும் காப்புரிமை காலம் முடிந்த பல பழமையான நூல்களையே சட்ட சிக்கல்கள் இன்றி செய்யும் பணியை மேற்கொண்டுவருகின்றன.


ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர் இவர்களில் இருந்து வேறுபட்டு தற்கால எழுத்தாளர்களையும், இணையம் வழி வலைப்பூக்களில் எழுதிவரும் எழுத்தாளர்களின் படைப்புகளை காப்புரிமையற்ற இலவச மின்னூல்களாகத் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இரண்டாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முயற்சியால் தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்னூல்களாகக் கிடைக்கப்பெற்றுள்ளோம். கிரியேட்டிவ் காமன்ஸ் எனும் உரிமத்தின் கீழ் நூல்கள் வெளியிடப்படுவதால் மூல ஆசிரியருக்கான உரிமைகளும் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது மக்கள் அதிக அளவில் மின்னூல்களைப் படிக்க வசதியான கருவிகள் பயன்படுத்துவதால் எழுத்தாளர்களுக்கும் அவர்களை நெருங்குவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இக்குழுவினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றிய நூலாசிரியர் சிலரது புகழுரைகள் சில …

சிறப்பானசேவை. பாராட்டுகள். என் நான்கு நூல்களில் வேதமும் சைவமும் என்ற நூல் மட்டும் ஒரு லட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் பத்து சதவீதத்தினராவது படித்திருப்பார்கள் எனநினைக்கிறேன். இதே நூல் அச்சடிக்கப்பட்ட புத்தகமாக சந்தைப்படுத்தப் பட்டபோது ஐந்து ஆண்டுகளில் 1400 பிரதிகளுக்கு மேல் ஓடவில்லை. உங்கள் சேவை மூலம் இது மிக அதிகமான மக்களைச் சென்றடைந்தது பற்றி எழுத்தாளன் என்ற முறையில் மிக மகிழ்கிறேன். 
– கோதண்டராமன்


ஒரே மாதத்தில் என் மின்னூல் வெளியாக, மகிழ்ச்சி பொங்கியது. இப்போது எனது பல சிறுகதைத்தொகுப்புகளையும், நாவல்களையும் நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே ஒரு வாசகர் மட்டும் கானடா நாட்டிலிருந்து என்னைப் பாராட்டி, மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருக்கிறார். உற்சாகமாக இருந்தது — நம் எழுத்து உலகின் பல பாகங்களுக்கும் பரவுகிறதே என்று. 
– நிர்மலா ராகவன்


ஒரு சிலரால் மட்டுமே எவரும் நினைத்துப் பார்க்காத சில புதிய முயற்சிகளை யோசித்து அதனைப் பிடிவாதமான முயற்சிகளின் மூலம் நிலைநிறுத்தி தன்னை மிகச் சிறந்த ஆளுமையாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதுவும் தன் சுய வளர்ச்சிக்கு, வருமானத்திற்கு எவ்வித பலனும் இல்லாமல் பொதுநலம் சார்ந்து இருப்பது என்பது மிகவும் அரிது. தன் நேரம், பல சமயம் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற அழுத்தங்கள் இருந்தாலும் இதே நோக்கத்தில் ஒரு குழுவாக அமைந்து ஒத்த கருத்தோடு செயல்படுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் ஆச்சரியமான நிகழ்வே. அப்படியொரு ஆச்சரியத்தைத் தந்த தளம் தான் freetamilebooks.com 
– ஜோதிஜி திருப்பூர்


அறிவியல், ஆன்மிகம், ஆளுமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள், வரலாறு நூல் வகைகள் என்ற பல்வகை நூல்களையும் வெளியிடும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. த. சீனிவாசன் அவர்கள், “ஆங்கிலத்தில் கிடைக்கும் அறிவுச் செல்வங்கள் யாவும் துறைசார் வல்லுநர்களால் மட்டுமே எழுதப்படுவது அல்ல. தம் அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சாமானியர்களால் மட்டுமே ஆங்கிலத்தில் எல்லா அறிவுகளும் கிடைக்கின்றன. எனவே, தமது புலமை, திறமை பற்றி ஐயம் கொள்ளாமல், நமக்குத் தெரிந்ததை, தெரிந்த வரையில் தமிழில் பகிரலாமே. இலக்கியம், சினிமா, அரசியல் பற்றி எழுதுவோருக்கு இருக்கும் அதே ஆர்வமுடன் பிறதுறைகளிலும் எழுதத் தொடங்கினால் , தமிழ்த்தாயின் ஆயுள் கூடும்” என்ற ஊக்க மொழிகளைத் தமிழ் எழுத்தாளர்கள் முன் வைக்கிறார்.


தன்னார்வப் பணி மூலம் தமிழ்த் தொண்டாற்றி தமிழுக்கும், தமிழ் வாசகர்களுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் அரும்பணி ஆற்றிவரும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினருக்கு பாராட்டுகளையும், அவர்கள் மேலும் பல வெற்றி எல்லைகளை மின்பதிப்புத் துறையில் அடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]


தொடர்புக்கு: 

email: freetamil...@gmail.com
Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks
Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948
Web: http://freetamilebooks.com/


* மின்னூல் வெளியீட்டில் பங்கு பெற விரும்பும் எழுத்தாளர்களுக்காக படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons) உரிமம் பற்றிய தகவல்:
Attributions:
Attribution CC BY – http://creativecommons.org/licenses/by/4.0/
Attribution-ShareAlike CC BY-SA – http://creativecommons.org/licenses/by-sa/4.0/
Attribution-NoDerivs CC BY-ND – http://creativecommons.org/licenses/by-nd/4.0/
Attribution-NonCommercial CC BY-NC – http://creativecommons.org/licenses/by-nc/4.0/
Attribution-NonCommercial-ShareAlike CC BY-NC-SA – http://creativecommons.org/licenses/by-nc-sa/4.0/
Attribution-NonCommercial-NoDerivs CC BY-NC-ND – http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/


நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=60287

Shrinivasan T

unread,
Aug 4, 2015, 11:40:51 PM8/4/15
to vallamai, மின்தமிழ், freetamilebooks
வல்லமையாளர் விருதுக்கு மிக்க நன்றி ;-)

பங்களிப்பாளர் அனைவருக்கும், தம் படைப்புகளை யாவரும் பகிரும் வகையில் வெளியிடும் எழுத்தாளர் அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் தரும் உற்சாகமும், பாராட்டும், வாழ்த்துகளும் இன்னும் வெகுதூரம் பயணிக்கும் ஆர்வத்தை அளிக்கின்றன.

நன்றி.

3 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 9:49 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge

Tthamizth Tthenee

unread,
Aug 5, 2015, 7:25:18 AM8/5/15
to vall...@googlegroups.com, மின்தமிழ், freetamilebooks
ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர்: 
அ. இரவிசங்கர் – புதுக்கோட்டை (மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு) 
அன்வர் – சென்னை (மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்கிணைப்பு) 
இராஜேஸ்வரி – ஆஸ்திரேலியா (மின்னூலாக்கம்) 
கலீல் ஜாகீர் – விழுப்புரம் (ஆன்டிராய்டு செயலி உருவாக்கம்) 
கிஷோர் – சிங்கப்பூர் (மென்பொருள் உருவாக்கம்) 
சிவமுருகன் பெருமாள் – அமெரிக்கா (மின்னூலாக்கம்) 
த.சீனிவாசன் – சென்னை (மின்னூல் வெளியீடு, பதிப்பகத்தார்) 
நித்யா – சென்னை (மின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல்) 
பிரியா – மும்பை (மின்னூலாக்கம்) 
ப்ரியமுடன் வசந்த் – அரேபியா (அட்டைப்படம் உருவாக்கம்) 
மனோஜ் குமார் – கோவை (அட்டைப்படம் உருவாக்கம்) 
மு. சிவலிங்கம் – தமிழ்நாடு (ஒருங்குறியாக்கம் செய்தல்) 
லெனின் குருசாமி – காரைக்குடி (அட்டைப்படம் உருவாக்கம்) 
ஜெகதீஸ்வரன் – சென்னை (அட்டைப்படம் உருவாக்கம்) 
ஜெயேந்திரன் சுப்பிரமணியம் – பூனே (மின்னூலாக்கம்)

வல்லமையாளர்  குழுவுக்கு  இனிய பாராட்டுக்கள்

உங்கள் பணி தொடர்ந்து வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



தேமொழி

unread,
Aug 9, 2015, 10:57:50 PM8/9/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

ஆகஸ்ட் 10, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் 

 

வல்லமை இதழின் எழுத்தாளர்களில் ஒருவராகத் தனது இலக்கியப்படைப்புகள் மூலம் வல்லமை வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்துவரும் திருமதி மீனாட்சி பாலகணேஷ் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய இலக்கியங்களையும் அதில் வரும் காதலர்களையும் அறிமுகப்படுத்தி, இலக்கிய நயம் பாராட்டுதலையும், அக்காதலர்களின் காதலின் மேன்மையையும் ஒருங்கே வழங்கிவரும் “காதலின் பொன்வீதியில்” (http://tinyurl.com/kadhalin-ponveethiyil) என்ற கட்டுரைத்தொடருக்காக அவர் பாராட்டப் படுகிறார்.

அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றிய மீனாட்சி பாலகணேஷ் அவர்கள், பணி ஓய்விற்குப் பிறகு தனது நெடுநாளையக் கனவான தமிழ் கற்பதில் ஆர்வம் கொண்டு தமிழில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார். தற்பொழுது தமிழ் இலக்கியக் கட்டுரைகளைப் பல இணையதளங்களிலும் எழுதி வருகிறார். இவரது பாடுதும் காண் அம்மானை, குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல், திருநடனம் ஆடினது எப்படியோ, கோபுலுவின் ஏகலைவி, காதலின் பொன்வீதியில் ஆகிய கட்டுரைகள் வல்லமை இதழில் வெளிவந்துள்ளன. சென்ற வாரத்தின் ‘காதலின் பொன்வீதியில்’ தொடரில் வாசவதத்தையும் உதயணனும் கொண்ட காதலை விவரித்து, “உதயணகுமார காவியம்”  நூல் வழங்கும் பாடல்களின் இலக்கியநயத்தோடு இணைத்து வழங்கியவிதம் சிறப்பானது.

காதலின் பொன்வீதியில் என்ற தொடரை கீழ்வரும் அறிமுகத்துடன் தொடங்கினார் மீனாட்சி பாலகணேஷ் …

காதல், காதல், காதல் இன்றேல் 
சாதல் சாதல் சாதல் – ( குயில் பாட்டு)

என்றான் பாரதி, இதனை ஏன் இவ்வாறு கூறினான் என நான் பலமுறை யோசித்ததுண்டு. காதல் எனில் அன்பு, பக்தி, விருப்பம், ஆவல், வேட்கை, காமம் எனவெல்லாம் பொருள் கொள்ளலாம். இங்கு நாம் பார்க்கப் போவது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான அன்பு அல்லது காதல் என்பதனைப் பற்றித் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வை இயற்கை படைத்ததற்குக் காரணம் ஒரு இனம் அழிந்து விடாமல் தொடர்ந்து வளர ஏதுவாக இருப்பதற்கும், அதற்கான முதல் படியாக இருபாலரிடையும் அன்பு செழித்து வளர்வதற்காகவும்தான் எனலாம். ஆகவேதான் காதல் போயின் எல்லாம் போயிற்று, சாதல் ஒன்றே எஞ்சி நிற்பது என்றானோ பாரதி!

இத்தகைய காதல் உணர்வு நூதனமானது. சிறிது சிந்தித்துப் பார்த்தால் இத்தனைப் புலவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் காதலைப் பற்றியே விதம் விதமாக ஏன் எழுதிக் குவித்துள்ளனர் என ஆராயலாம்! காதல் சம்பந்தமான உணர்வுகள் மனித குலத்துக்கு மட்டுமே உரிமையானதா என அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. காதல் சம்பந்தப்பட்ட அழகிய மென்மையான உணர்வுகள் பற்றி கற்ப கோடி காலங்களாக இருந்து வரும் இனிய நயங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் இதன் நோக்கம்.

இந்தியத் தொன்மமாகிய இராமாயணக்கதையில் வரும் காதலர்களான இராமன் சீதையின் காதலைக் குறித்துக் கூறி, கம்பராமாயணத்தில் கம்பரின் வரிகளிலும் அக்காதலின் தன்மையை விவரிக்கிறார். ‘அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய’ பிறகு, இராமனின் வடிவழகை, ஆண்மையின் கம்பீரத்தை, காதலின் கருணை நோக்கினை மீண்டும் கண்டு களிக்கச் சீதையின் உள்ளம் விழைகின்றது. இயலாமையினால் கடலெனக் குமுறிக் கொந்தளிக்கின்றது.

விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இம் 
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் 
எண்ணுளே இருந்த போதும் யாவரென்று தேர்கிலேன் 
கண்ணுளே இருந்த போதும் என்கொல் காண்கி லாதவே.

“மண்ணுள் இழிந்த விண்மேகம்” என வந்த இராமனின் வடிவழகை காண ஏங்கும் சீதையின் கனிந்துருகும் காதல் உள்ளத்தை மீனாட்சி உணர்த்தும் பாணி இலக்கிய வாசகர்களை மகிழ்விக்கக்கூடியது.

மீனாட்சி பாலகணேஷ்

இத்தொடரில் தொடர்ந்து …

புலவர் புகழேந்தியார் யாத்த ‘நளவெண்பா’ வரிகளின் மூலம் நளன் – தமயந்தி காதலையும்,

கவியரசர் தாகூர் படைப்பில் ஒரு புதிய கோணத்தில் அவர் அறிமுகப்படுத்திய சித்ராங்கதா – அர்ஜுனன் காதலையும்,

அரசிளங்குமரி ருக்மிணி கிருஷ்ணனுக்கு காதல்கடிதமாக எழுதிய ஏழு ஸ்லோகங்களின் வழி ருக்மிணி – கிருஷ்ணன் காதலையும்,

பெரியபுராண ஆசிரியரான சேக்கிழார் பெருமான் பாடல்களின்வழி சுந்தரர் – பரவை நாச்சியார் காதலையும்,

ரூப்மதி இயற்றிய காதல் ரசம் சொட்டும் ஒரு தோஹாவின் மொழிபெயர்ப்பு மூலம் இளம் காதலர்கள்ரூப்மதி – பாஜ்பஹதூர் காதலையும்,

காளிதாசரின் குமாரசம்பவம் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தின் பாடல்களின் துணைகொண்டு பார்வதி – பரமசிவன்  காதலையும்,

கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தின் வரிகளின் வழி வள்ளி – முருகன்  காதலையும்,

உதயணகுமார காவியம் பாடல்கள் மூலம் வாசவதத்தை – உதயணன்  காதலையும்,

காதலின் பொன்வீதியில் உலாவரும் பொழுது நாமும் படித்துப் பரவசமடைந்தோம்.

இலக்கியவிருந்து வழங்கும் இந்த அறிவியல் பின்புலம் கொண்ட மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் ஒருபன்முகம் கொண்ட கலைஞர்.

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66) ஒன்றிற்கு ஓவியர் கோபுலு வரைந்த அழகிய படம் ஒன்றை அவர் போலவே வரைந்து கோபுலுவிடம் காட்டி, “எனது அருமை ஏகலைவி மீனாட்சிக்கு ஆசிகள்” என்று கோபுலுவிடம் கையொப்பமும், பாராட்டும், ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார்.

விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதேஸ்- 
த்வயாரப்தே வக்தும் சலித சிரஸா ஸாது வசனே 
ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம் 
நிஜாம் வீணாம் வாணீம் நிசுளயதி சோளேன நிப்ருதம் 
— சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66)

அந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை தமிழ்ப் பாடலாகவும் மொழிபெயர்த்துள்ளார் மீனாட்சி பாலகணேஷ்.

பல்லவி 
நாதன் பெருமைதனை நாத வீணையினில் 
வேதன் தலைவியவள் கீதம் இசைத்திடவே (நாதன்)

அனுபல்லவி 
யாதும் இனிமையென யாழின் இனிமைகெட 
ஓதும் திருவாய்மொழி சாது என்றனையே (நாதன்)

சரணம் 
இனிதென்று சிரமசைத்து இசைதன்னை நீ ரசிக்க 
இனிதன்று வீணையென இசைவாணி பரிதவிக்க 
இனியொன்றும் தோணாமல் உறையிட்டு மூடிவைக்க 
கனிவான நகைகாட்டி கருணைவெள்ளம் நீ பெருக்க (நாதன்)

அத்துடன் நவராத்திரி கொலு பொம்மைகளைச் செய்வதில் திறமைசாலியான அவரது கைவண்ணத்தில் உருவான பொம்மைகளின் படங்களையும் வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் மீனாட்சி பாலகணேஷ்.

மீனாட்சி பாலகணேஷ்2

பலகலைகளிலும் சிறந்து விளங்கும் மீனாட்சி பாலகணேஷ் அவர்களின் நெடுநாள் கனவான தமிழில் முனைவர்பட்ட ஆராய்ச்சியை அவர் வெற்றியுடன் முடிக்கவும், தொடர்ந்து இலக்கியப்பணியாற்றவும் வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=60534

Nirmala Raghavan

unread,
Aug 10, 2015, 12:33:00 AM8/10/15
to vallamai
அடேயப்பா! பிரமிக்க வைக்கும் சாதனைகள்!

--

துரை.ந.உ

unread,
Aug 10, 2015, 1:13:47 AM8/10/15
to Groups, வல்லமை

வாழ்த்துகள் ... வாழ்த்துகள் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

தேமொழி

unread,
Aug 17, 2015, 12:01:21 AM8/17/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

ஆகஸ்ட் 17, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள் 

Dr. Tessy Thomas profile

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகச் சிறப்பிக்கப்படுபவர் “இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி“(Missile Woman of India) எனவும், “அக்னிபுத்திரி” எனவும் அன்புடன் அழைக்கப்படும் “டாக்டர் டெஸ்ஸி தாமஸ்” அவர்கள். இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

வல்லமையாளர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள், பணியிடத்தில் “இந்தியாவின் ஏவுகணை மனிதர்” (Missile Man of India) என்றழைக்கப்பட்ட மறைந்த மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைத் தனது வழிகாட்டியாக அடையும் பேறு பெற்றவர்.

இந்தியாவில் ஏவுகணை திட்டப்பணி ஒன்றிற்குத் தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் என்ற பெருமை கொண்ட டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள் பற்பல விருதுகளும், பாராட்டுகளும், கௌரவங்களும் பெற்றவர். கல்யாணி பல்கலைக் கழகமும், இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் (Kalyani University & Hindustan University) இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. சென்ற வாரம் “ஸ்ரீ பத்மாவதி மகிள விஸ்வ வித்யாலயம்” (Sri Padmavati Mahila Viswa Vidyalayam -SPMVV) இப்பல்கலைக்கழகங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டு, தனது 16 வது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

Dr. Tessy Thomas

இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிய அக்னிபுத்திரி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் (Research and Development – R&D) ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளக்க உதவும் மிக முக்கியமான அளவீடுகளில் ஒன்று எனக் குறிப்பிட்டார், மேலும்…

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். இளைஞர்கள் எத்துறையைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் தரமான செயல்களிலும், ஆக்கபூர்வமான பணிகளிலும் ஈடுபட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும். இந்திய மக்களில் 60 விழுக்காட்டினர் 35 வயதிற்கும் குறைவானவர்கள் என்பதால், சிறந்த பயிற்சி பெற்ற மனிதவள மேம்பாட்டைப் பெற இந்தியாவிற்குத் திறன் இருக்கிறது. பட்டம் பெற்று பணியுலகத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் தாங்கள் ஏட்டில் கற்ற கல்வியைச் செயல்படுத்த முனைவதுடன், சிறந்த நூல்களையும் படித்து ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் புரிதலுடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களுக்குத் தரமான கல்வி வளர்ச்சியை வழங்குவதில் விணையூக்கியாகச் செயல்படும் கல்விநிறுவனங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. தற்கால உலக நடப்புகளில் ஆசிரியர்கள் அதிகக் கவனம் செலுத்தி அறிவதுடன், அதை மாணவர்களும் அறியச் செய்து அவர்களது திறமையை உயர்த்தத் தொடர்ந்து பாடுபட்டு மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். இக்காலத்தில் பெண்கல்வி அதிகரித்திருந்தாலும் தொடர்ந்து அவர்களது பங்களிப்பு அறிவியல் துறைகளிலும், தொழில்நுட்பப் பணிகளிலும் குறைவாகவே இருந்து வருவதால், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் வண்ணம் பெண்களை ஊக்குவிக்க வேண்டும்.

உணர்வுசார் நுண்ணறிவுப் பயிற்சி, தொழில்நுட்ப வாய்ப்புகள், மேலாண்மை, வழிநடத்துதல், நிர்வாகத் திறன், வளாகத்தில் குழந்தை பராமரிப்பு வசதிகளை அவர்களுக்கு வழங்க எடுக்கப்படும் முயற்சிகள் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். எதிர்காலத்தில் மாணவர்கள் எத்துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் சிறந்து விளங்க முயலவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

டாக்டர் டெஸ்ஸி தாமஸ் மேம்பட்ட அமைப்புகள் ஆய்வக இயக்குநர் (Director of Advanced Systems Laboratory – ASL), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் அக்னி – 5 ஏவுகணைக்கான திட்டப்பணி இயக்குநர் (Agni-V Project Director, Defence Research & Development Organization) ஆவார். ஐம்பது வயதைக் கடந்துள்ள அக்னிபுத்திரி கேரளத்தின் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தும்பா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கும் தளத்துக்கு அருகில் வளர்ந்தவர். சீறிப்பாய்ந்த ராக்கெட்கள் கொடுத்த ஆர்வத்தின் காரணமாக ஏவுகணைத் தொழில்நுட்பம் பற்றிக் கற்க விரும்பி அத்துறையைத் தேர்ந்தெடுத்தவர். திருச்சூரில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் (B.Tech) பட்டப்படிப்பை முடித்தார். புனேயில் உள்ள “போர்த்தளவாட தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில்” (Institute of Armament Technology, Pune, இது தற்காலத்தில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் / the Defence Institute of Advanced Technology என அழைக்கப்படுகிறது) ஏவுகணைக் கல்வியில் தொழில்நுட்ப முதுநிலைப் பட்டம் (M.Tech) பெற்றார்.

நான் பணி புரியும் அறிவியல் தொழிநுட்பத்துறை பாலின பேதம் (Gender Discrimination) பற்றி அறியாதது என்று பி.பி.சி. நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டவர் அக்னிபுத்திரி. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளராக 1988 ஆண்டுமுதல் பணியாற்றி வரும் அக்னிபுத்திரி அக்னி-1 ஏவுகணையின் வடிவமைப்புப் பணிகளில் பங்கேற்றவர். தொடர்ந்து அக்னி-3 மற்றும் அக்னி-4 ஏவுகணைகளின் இணை திட்டப்பணி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு 2009ஆம் ஆண்டு 5,000 கிமீ வீச்சுள்ள அக்னி-5 திட்டப்பணிக்குத் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்று, ஏப்ரல் 2012 இல் இவரது தலைமையில் அக்னி-5 வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

Dr. Tessy Thomas 0

உலகில் ஏவுகணை தொழில்நுட்பப் பணியாற்றும் ஒருசிலரில் டெஸ்ஸி தாமஸ்ஸும் ஒருவர். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறிய பெண்மணிக்கு டெஸ்ஸி தாமஸ் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சுங்கால் பாராட்டப்பட்டவர் அக்னிபுத்திரி. இந்தியாவைப் பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறச் செய்த அக்னிபுத்திரிக்கு லால்பகதூர் சாஸ்திரி-தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் போரைத் தவிர்த்து இந்தியாவை அமைதிப்பாதைக்கு வழிவகுக்கும் ஒரு திட்டம் என்பதும், “இந்திய ஏவுகணைகள் அமைதிக்கான ஆயுதங்கள்” (weapons of peace) என்பதும் இவர் கருத்து. வெற்றியை அடைந்த பிறகு ஒருவர் எதிர்கொள்ளும் சவால், கிடைத்த வெற்றியின் களிப்பால் பெருமையில் திளைத்துவிடாமல், வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது என்பது அக்னி புத்திரி வழங்கும் அறிவுரை.

Sastri-Award
அக்னிபுத்திரி பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்க சில:
= India Today Woman Summit & Awards 2009 
= Shastri Award 2012 
= CNN-IBN Indian of the Year 2012 
= JFW Women Achievers Award 2013 
= Maharana Udai Singh Award 2013 
= GR8! Women Awards 2014 
= Dr. Y. Nayudamma Memorial Award – 2014

சேவையின் மறுவுருவமான அன்னை தெரசாவின் பெயரைச் சூட்டப்பட்டவர் டெஸ்ஸி தாமஸ். இந்திய பெண் அறிவியலாளர் அமைப்பு (The Indian Woman Scientists Association), “பணிபுரியும் ஏனைய பல பெண்களைப் போல இவரும் பணியின் கடமைகளையும், குடும்பப் பொறுப்பையும் கயிற்றின்மீது நடக்கும் வித்தைக்காரர் போன்று கவனமுடன் கையாண்டவர், அன்னையாகவும் அறிவியல் ஆய்வாளராகவும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். டெஸ்ஸி தாமஸ் பெண் அறிவியலார்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்கி அவர்கள் இரு உலகங்களிலும் தடம் பதித்து தங்கள் கனவுகளை வெற்றிகரமாக அடையத் தூண்டுதலாக அமைந்துள்ளவர்” என்று பாராட்டியுள்ளது. பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறையில் ஆர்வம் கொண்டு முன்னேற முன்மாதிரியாக விளங்கும் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களின் வல்லமையைப் பாராட்டுவதில் வல்லமை இதழும் பெருமை கொள்கிறது.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

இக்கட்டுரைக்கான தகவல் பெற்ற இடங்கள்:
Need to encourage women in R&D: ASL Director, August 11, 2015, The Hindu
http://www.thehindu.com/news/national/andhra-pradesh/need-to-encourage-women-in-rd-asl-director/article7523888.ece

அக்னிபுத்திரி
https://jayabarathan.wordpress.com/2012/04/28/agni-puthri/




நன்றி வல்லமை:   http://www.vallamai.com/?p=60831

Innamburan S.Soundararajan

unread,
Aug 17, 2015, 10:25:51 AM8/17/15
to mintamil, vall...@googlegroups.com
இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்கு என்
வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்
2015-08-17 9:31 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
>
> ஆகஸ்ட் 17, 2015
>
> இவ்வார வல்லமையாளர்
> வல்லமைமிகு டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள்
>
> வல்லமையின் இவ்வார வல்லமையாளராகச் சிறப்பிக்கப்படுபவர் “இந்தியாவின் ஏவுகணைப்
> பெண்மணி“(Missile Woman of India) எனவும், “அக்னிபுத்திரி” எனவும் அன்புடன்
> அழைக்கப்படும் “டாக்டர் டெஸ்ஸி தாமஸ்” அவர்கள். இவரை வல்லமையாளர் விருதுக்குப்
> பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன்
> அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.
>
> வல்லமையாளர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள், பணியிடத்தில் “இந்தியாவின் ஏவுகணை
> மனிதர்” (Missile Man of India) என்றழைக்கப்பட்ட மறைந்த மேனாள் இந்தியக்
> குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைத் தனது வழிகாட்டியாக அடையும்
> பேறு பெற்றவர்.
>
> இந்தியாவில் ஏவுகணை திட்டப்பணி ஒன்றிற்குத் தலைமை தாங்கும் முதல் பெண்
> அறிவியலாளர் என்ற பெருமை கொண்ட டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள் பற்பல
> விருதுகளும், பாராட்டுகளும், கௌரவங்களும் பெற்றவர். கல்யாணி பல்கலைக் கழகமும்,
> இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் (Kalyani University & Hindustan University)
> இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. சென்ற வாரம் “ஸ்ரீ பத்மாவதி
> மகிள விஸ்வ வித்யாலயம்” (Sri Padmavati Mahila Viswa Vidyalayam -SPMVV)
> இப்பல்கலைக்கழகங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டு, தனது 16 வது
> பட்டமளிப்பு விழாவில் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம்
> வழங்கிச் சிறப்பித்துள்ளது.
>
> உலகில் ஏவுகணை தொழில்நுட்பப் பணியாற்றும் ஒருசிலரில் டெஸ்ஸி தாமஸ்ஸும் ஒருவர்.
> ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறிய
> பெண்மணிக்கு டெஸ்ஸி தாமஸ் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று முன்னாள் பிரதமர்
> மன்மோகன் சுங்கால் பாராட்டப்பட்டவர் அக்னிபுத்திரி. இந்தியாவைப்
> பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறச் செய்த அக்னிபுத்திரிக்கு லால்பகதூர்
> சாஸ்திரி-தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் போரைத்
> தவிர்த்து இந்தியாவை அமைதிப்பாதைக்கு வழிவகுக்கும் ஒரு திட்டம் என்பதும்,
> “இந்திய ஏவுகணைகள் அமைதிக்கான ஆயுதங்கள்” (weapons of peace) என்பதும் இவர்
> கருத்து. வெற்றியை அடைந்த பிறகு ஒருவர் எதிர்கொள்ளும் சவால், கிடைத்த
> வெற்றியின் களிப்பால் பெருமையில் திளைத்துவிடாமல், வெற்றியைத் தொடர்ந்து தக்க
> வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது என்பது அக்னி புத்திரி வழங்கும் அறிவுரை.
>
>

Tthamizth Tthenee

unread,
Aug 17, 2015, 10:51:55 AM8/17/15
to vall...@googlegroups.com, mintamil
இந்தியாவின் ஏவுகணைப்
பெண்மணி “டாக்டர் டெஸ்ஸி தாமஸ்” அவர்களைப் பாராட்டுகிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 23, 2015, 10:26:52 PM8/23/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, makebeli...@gmail.com

ஆகஸ்ட் 24, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  இயக்குநர் நந்தினி அவர்கள்

Nan FAVFAV

‘சிவப்புக்கல் மூக்குத்தி’ என்ற தமிழின் முதல் எண்ணிம படக்கதை புதினத்தை (Tamil’s First Digital Graphic Novel ) மின்னூலாக வெளியிட்டமைக்காக இயக்குநர் நந்தினி அவர்கள் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுகிறார்.

“திருதிரு துறுதுறு” படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராக அறிமுகமாகிய நந்தினி, தமிழக திரைப்பட விளம்பரப்பட கல்வி நிலையத்தின் மாணவியும், 2003 ஆம் ஆண்டு அக்கல்வியில் தங்கப்பதக்கமும் பெற்றவர் (Gold Medalist (2003) from Film and Television Institute of Tamilnadu). இவர் மாணவராக இயக்கிய “ஓட்டம்” என்ற குறும்படத்திற்காக, சிறந்த மாணவ இயக்குநருக்கான தமிழக அரசின் விருதை, 2003 ஆண்டு தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களிடம் இருந்து பெற்றவர். இப்பொழுது ‘மேக் பிலீவ் ப்ரொடக்ஷன்’ (Make Believe Productions – www.makebelieveonline.com) என்ற நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நிர்வாக பங்குதாரராக, பல விளம்பரப் படங்கள், வணிக நிறுவனங்களின் மக்கள்தொடர்பு படங்களை இயக்கி வருகிறார். இவரது “திருதிரு துறுதுறு” படமும் இந்தியாவிலேயே முதன்முதலாக டிஜிட்டலாகத் தயாரிக்கப்பட்டு, டிஜிட்டலாகவே வெளியிடப்பட்ட படம்.

State Award small

Nan FAVFAV6

Nan FAVFAV5

இந்தியா மற்றும் தமிழகத்தின் படக்கதை நூல்கள் யாவும் அயல்நாட்டுக் கதைகளின் மொழிபெயர்ப்பாகவும், சிறுவர்களுக்காகத் தயாரிக்கப்படுவதுமாகவே இருந்து வருவது வழக்கம். அப்போக்கில் இருந்து மாறுபட்டு இயக்குநர் நந்தினி அவர்கள் பெரியவர்களுக்காக கதை எழுதி, இயக்கி அதை எண்ணிம வடிவிலும் படக்கதையாக வெளியிட்டுள்ளார். இக்கதையை வெளியிட ஒன்றரை வருட உழைப்பினை இவரும் இவரது குழுவினரும் கொடுத்துள்ளனர். திரைப்படமாக இல்லாமல் படக்கதையாகவா? படக்கதைகள் படிப்பவர் அதிகம் இல்லையே, வழக்கமான காகித நூலாகவே வெளியிடலாமே என்பது போன்ற ஆர்வத்தை மட்டுப்படுத்தும் பல கருத்துக்களை எதிர்கொண்ட பொழுதும் தளராது இப்படத்தை உருவாக்கியுள்ளார் நந்தினி.

மூக்குத்தி2

முதலில் திரைக்கதையாக எழுதி உருவாக்கிய கதையை படக்கதை நூலாக வெளியிடலாம் என்று வெளியிட முடிவெடுத்தவர், திரைப்படமாக வந்தால் ஆண்டுக்கு 300 படங்கள் வெளியாகும் சூழ்நிலையில் இக்கதை தனித்து தெரிய வழியின்றி, அதிகப் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். கலைஞர்களின் திறமை ஊடகங்களின் கட்டுப்பாட்டிற்குள் அடங்காது. திரைப்படம், இசை, கலை, எழுத்து, எனப் பலதுறைகளிலும் ஆர்வமுள்ள கலைஞரான இவரால் எந்த ஊடகத்திலும் அவரது கற்பனையை வெளிப்படுத்த முடியும் என்று கூறும் நந்தினி, தனது எண்ணத்தில் கதை எவ்வாறு உருவாகியுள்ளது என்பதைக் கூற படக்கதையாகச் சொல்வது நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் கூறுகிறார்.

புதிதாகத் திருமணமான காதலர்கள் வேலையின் காரணமாக வெளியூருக்குப் பயணமாகிறார்கள். அங்கு இளம் மனைவிக்குக் கிடைக்கும் சிவப்புக்கல் மூக்குத்தியும், அதற்குப் பிறகு அவள் எதிர்கொள்ளும் மர்ம நிகழ்ச்சிகளும், கொலைகளும், அவளது மாறான நடவடிக்கைகளின் காரணத்தை பற்றியும் அவளது கணவன் துப்பறிவதுதான் சிவப்புக்கல் மூக்குத்தியின் கதை.

மூக்குத்தி3

நந்தினி வெளியிட்டுள்ள சிவப்புக்கல் மூக்குத்தி படக்கதை புதினத்தைப் படிக்க விரும்புபவர், “எம் பி காமிக் ஸ்டூடியோ” (http://www.mbcomicstudio.com/#buy-skm) இணையதளத்தின் வழியாக, இந்திய விலை ₹ 249/அயல்நாட்டினர் விலை $ 3.99 க்கு அதை வாங்கலாம். இந்தப் படக்கதை புதினம் தமிழிலும் ஆங்கிலத்திலும் (‘Girl with a Red Nose Ring’) கிடைக்கிறது. மேலும் பிற மொழிகளிலும் வெளியிடத் திட்டமும் வைத்துள்ளார் நந்தினி.

புதிய கதைகள், காதல், திகில், மர்மப்படங்கள் எனப் பல வகைப் பின்னணிகள் கொண்ட கதைகள், அத்துடன் அவற்றை எண்ணிம படக்கதைகளாக வெளியிடும் முயற்சிகளுக்கு வருங்காலத்தில் நல்ல வாய்ப்பிருக்கிறது என்றும், இம்முயற்சியில் எழுத்தையும், காட்சியையும் அழகியலோடு ஒன்றிணைக்க முடிவதால் தமிழ்ப் படங்களுக்கும் தமிழ்ப்படக் கதைகளுக்குமான இடைவெளி குறையும். இதனால் நல்ல படங்களை படக்கதைகளாகவும், நல்ல படக்கதைகளை திரைப்படங்களாகவும் எடுக்க முடியும் என்று கூறும் நந்தினியின் புதுமையான முயற்சிக்காக, அவரை நாம் வல்லமையாளர் என்று பாராட்டி வாழ்த்துவோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

தகவல் பெற்ற தளங்கள்:
தமிழ் நெட்டிசன்களை ‘நம்பும்’ நந்தினியின் டிஜிட்டல் காமிக்ஸ் நாவல் முயற்சி, க.சே.ரமணி பிரபா தேவி

http://tamil.thehindu.com/opinion/blogs/தமிழ்-நெட்டிசன்களை-நம்பும்-நந்தினியின்-டிஜிட்டல்-காமிக்ஸ்-நாவல்-முயற்சி/article7503293.ece

நந்தினியின் ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ – டிஜிட்டல் தமிழ் காமிக்ஸ்!

http://www.inneram.com/opinions/readers/3372-sivappu-kal-mookkuthi.html

Girl with a Red Nose Ring: Filmmaker speaks about her first digital Tamil graphic novel

http://www.dnaindia.com/website/report-girl-with-a-red-nose-ring-filmmaker-speaks-about-her-first-digital-tamil-graphic-novel-2111282

படம் உதவி: நந்தினியின் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம்
_____________________________________________________________________________
நந்தினியைப் பற்றிய மேலதிகத் தகவலுக்கும், தொடர்புக்கும்:

https://www.facebook.com/sivappukalmookuthi/photos_stream

http://mbcomicstudio.com

http://makebelieveonline.com/about.html

https://nandhinijs.wordpress.com/

http://nandhinijs.blogspot.com

https://www.facebook.com/nandhinijs

http://twitter.com/nandhini_js

https://plus.google.com/+NandhiniJS

http://www.youtube.com/user/nanfilmmaker

makebeli...@gmail.com
_____________________________________________________________________________



நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=61032

தேமொழி

unread,
Aug 30, 2015, 10:43:43 PM8/30/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

ஆகஸ்ட் 31, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு அன்பு ஜெயா அவர்கள்

Anbu Jeya

 

வல்லமை இதழின் இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சிட்னி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திருவாளர் அன்பு ஜெயா அவர்கள். மருந்தாக்கியல் துறையில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவராயினும் தமிழின்பால் ஆர்வம் மிக்கவர். உயரதிகாரியாகப் பணியாற்றிய இவர் தனது பணி ஓய்விற்குப் பிறகு, தான் பங்கேற்ற தமிழ் சார்ந்த தன்னார்வப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அந்த வரிசையில், சென்ற வாரம் (ஆகஸ்ட், 24 அன்று)மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்று, ஆஸ்திரேலியாவில் தமிழ் வளர்ச்சிப் பணிகள் பற்றிய சிறப்புரையாற்றினார். அயல்நாட்டில் தமிழ் வளர்க்கும் அரும்பணியை ஆற்றிவரும் திரு. அன்பு ஜெயா அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

சென்னையைச் சேர்ந்த முனைவர் அன்பு ஜெயா அவர்கள், மதுரை மருத்துவக் கல்லூரியிலும், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேலஸ் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றவர். இரண்டாம் மொழி கற்பித்தலில் பயிற்சி பெற்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிட்னி பாலர் மலர் தமிழ்ப்பள்ளிகளில் தன்னார்வலராகவும், அதன் மக்கள்தொடர்பு அதிகாரியாகவும், ஹோல்ஸ்வொர்த்தி கிளை தமிழ்ப்பள்ளியின் முதல்வராகவும் எனத் தொடர்ந்து பற்பல பொறுப்புகளை ஏற்றுத் தமிழ்ச்சேவை செய்து வருபவர். தற்பொழுது பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகராகவும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கூட்டமைப்பின் புத்தகக் குழுவில் பங்கேற்று, பாடப்புத்தகங்கள் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் ஆஸ்திரேலியன்” மாதஇதழின் (http://www.tamilaustralian.com.au/) இணையாசிரியரான அன்பு ஜெயா அவர்கள், ஆஸ்திரேலியாவிலும், புலம்பெயர்ந்த தமிழர் வாழும் அயல்நாடுகளிலும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார். தமிழை இரண்டாம் பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு உதவியாகத் தனது இணையதளத்தில் (http://www.anbujaya.com/) பல பயிற்சிகளை தொகுத்து அளித்துள்ளார். தமிழ் பயிற்றுவிக்கும் அயலக பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இத்தளம் பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளது.

வாரம் ஓரிரு மணிநேரங்களே தமிழ்கற்கும் சூழ்நிலையில் வளர்பவர் அயலகத்தில் வளரும் தமிழ்க்குடும்பங்களின் பிள்ளைகள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிறுவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பொழுது, தாயகத்தில் கற்பிக்கும் முறையில் இருந்து சற்று வேறுபட்ட உத்திகளைப் பயன்படுத்தவேண்டியத் தேவையுள்ளது. இத்தேவை குறித்தும், அதற்கு உதவும் உத்திகள் குறித்தும் “சிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்” என்று அன்பு ஜெயா விவரிக்கும் கட்டுரையும் இத்தளத்தில் இடம் பெறுகிறது. இக்கட்டுரையை அவர் மலேசியாவில் 2013 ஆம் ஆண்டு நடந்த 10 ஆவது உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார். மறு ஆண்டு, கோவையில் நடந்த “தாயகம் கடந்த தமிழ் 2014″ எழுத்தாளர் மாநாட்டில், “ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் சமர்ப்பித்தார்.

இந்த ஆண்டு, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற ஆஸ்திரேலியா பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகரான திரு. அன்பு ஜெயா அவர்கள்,

Anbu Jeya Madhurai

“ஆஸ்திரேலியாவில் தமிழர்களின் வளர்ச்சியும் தமிழ்மொழியின் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஆஸ்திரேலியாவில்தான் முதன்முதலில் தமிழ் வளர்ச்சிக்கான பன்மொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டது என்றும், தாய் மொழியைத் தவிர வேற்று மொழியொன்றை அறிந்துகொள்ள இத்திட்டம் வழிவகுக்கிறது என்றும் கூறினார். அந்த பாடத்திட்டத்திற்கேற்ப ஏழாம் வகுப்பு நூல்கள் உருவாக்கப்பட்டுவிட்டன என்றும், அடுத்த கட்டமாக எட்டாம் வகுப்புக்கான நூல்கள் உருவாகும் பணி தொடர உள்ளது என்றும் கூறினார். மேலும், திருக்குறள் நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு மாணவர்களுக்குத் தமிழின் சிறப்பு உணர்த்தப்படுகிறது என்றும், மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசனைகளும் பெறப்பட்டு ஆஸ்திரேலியாவின் தமிழ்வளர்சிப் பணி தொடரும் எனவும் கலந்துரையாடலில் ஆஸ்திரேலியாவில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் தமிழ் வளர்ச்சிப்பணிகள் பற்றியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் உள்ளன. பன்மொழிச் சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்மொழியில் சொல்வளம் பெற இத்தகைய வானொலிகள் பெரும் பங்காற்றுகின்றன. தமிழ் ஓசை, கலப்பை, தென்றல், மெல்லினம் போன்ற அச்சு இதழ்களும் ஆஸ்திரேலியாவில் வெளி வருகின்றன. தமிழ்க் கல்வியினைப் பொறுத்தவரை தமிழ் அமைப்புகள் சில சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழைக் கற்பிக்கின்றன போன்ற தகவல்களையும் வழங்கி ஆஸ்திரேலிய தமிழ்வளர்ச்சியின் நிலையை எடுத்துரைத்தார்.

புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களின் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ந்து கடந்த கால்நூற்றாண்டாகத் தன்னார்வப் பணியாற்றிவரும் வல்லமையாளர் அன்பு ஜெயா அவர்களைப் பாராட்டி அவர் பணிகள் சிறப்புறவும், அதனால் அயலகத் தமிழர்கள் பயன் பெறவும் வாழ்த்துகிறோம்.


**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]


Hari Krishnan

unread,
Aug 30, 2015, 11:28:57 PM8/30/15
to mintamil, vall...@googlegroups.com

வாழ்த்துகளும் பாராட்டுகளும் அன்பு ஜெயா அவர்களே.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Natrajan Kalpattu Narasimhan

unread,
Aug 31, 2015, 12:24:51 AM8/31/15
to வல்லமை
அன்பு ஜயா அவர்களுக்கு வாழ்த்துகள்!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


துரை.ந.உ

unread,
Aug 31, 2015, 12:40:29 AM8/31/15
to வல்லமை
​வாழ்க ஐயா ....வாழ்த்துகள் ​

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 31, 2015, 12:56:55 AM8/31/15
to vallamai, mintamil, Anbu Jaya
அன்பிற்கினிய சகோதரர் திரு அன்புஜெயா தமிழார்வம் அளவிடமுடியாதது. தமிழ்மொழி வளர்ச்சிக்கும் காப்பினிர்கும் ஆக்கபூர்வமாகச் செயல்படும் அவருக்கு அளித்துள்ள வல்லமையாளர் விருது பொருத்தமானதாகும். வாழ்த்திமகிழ்கிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


Innamburan S.Soundararajan

unread,
Aug 31, 2015, 1:38:12 AM8/31/15
to vall...@googlegroups.com, mintamil, Anbu Jaya
அன்பு மிகு அருமை நண்பர் திரு.அன்புஜெயாவை கெளரவிப்பது நமக்கு கெளரதை.

Anna Kannan

unread,
Aug 31, 2015, 1:44:28 AM8/31/15
to Vallamai
முனைவர் அன்பு ஜெயா அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது திறனும் பணிகளும் மேன்மேலும் சிறக்கட்டும்.

Tthamizth Tthenee

unread,
Aug 31, 2015, 1:48:41 AM8/31/15
to vall...@googlegroups.com
​முனைவர் அன்பு ஜெயா அவர்களுக்கு  வல்லமை விருது பெற்றமைக்கும்
அவரின் தமிழ்ப்பணிகளுக்கும்  மனமாரப் பாராட்டுகிறோம்

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




2015-08-30 22:44 GMT-07:00 Anna Kannan <annak...@gmail.com>:
முனைவர் அன்பு ஜெயா அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது திறனும் பணிகளும் மேன்மேலும் சிறக்கட்டும்.

--

shylaja

unread,
Aug 31, 2015, 4:09:09 AM8/31/15
to vallamai
திரு அன்பு ஜெயா அவர்களைப்பாராட்டுகிறோம்!
--
 




அன்புடன்
ஷைலஜா

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்
பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!

பெரியாழ்வார்

KAVIRI MAINDHAN

unread,
Aug 31, 2015, 4:13:16 AM8/31/15
to vallamai
அன்பின்வழிநின்று ஆற்றல்பல கொண்டு.. இன்பத் தமிழோடு என்றும் உறவாடி.. நண்பர் பலரென்னும் செல்வம் மிகுகின்ற.. .. அன்பு ஜெயாவிற்கு வல்லமையாளர் விருது என்பது..  உள்ளம் மகிழ்கின்ற உயர்ந்த செயலாகும்..


-- 
கவிஞர் காவிரிமைந்தன் 
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் 
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் 
பம்மல்,  சென்னை 600 075
தற்போது - அபுதாபி - அமீரகம் 
00971 50 2519693
00971 50 4497052

Anbu Jaya

unread,
Aug 31, 2015, 10:16:31 AM8/31/15
to vall...@googlegroups.com
தெரிவுசெய்த வல்லமைக் குழுவினர்க்கும் பாராட்டி வாழ்த்திய நண்பர்களுக்கும் மிக்க நன்றி. 

அன்புடன்,
அன்பு ஜெயா


Megala Ramamourty

unread,
Aug 31, 2015, 10:29:09 AM8/31/15
to vallamai, மின்தமிழ்
அன்பும் ஜெயமும் இணைந்தவராம்
பண்பும் பணிவும் பிணைந்தவராம்
மருந்தாக்கியல் துறையில் பணிசெய்தாலும்
தமிழ்விருந்தாக்கிப் படைப்பதிலேயே இன்பம் கண்டவர்!

ஆஸ்திரேலியாவிற்கு அடையாளம் தாவிச் செல்லும் கங்காரு!
ஆஸ்திரேலியத் தமிழருக்கு அடையாளம் தன் ஆவியாய்த் தமிழை எண்ணும் அன்புஜெயா காரு!  :-))

வல்லமையாளர் விருது பெறும் அன்பு நண்பரை வாழ்த்திப் பாராட்டுகிறேன். வெல்க மேலும் பல விருதுகள்!

அன்புடன்,
மேகலா

Anbu Jaya

unread,
Sep 2, 2015, 1:05:33 AM9/2/15
to vallamai
வல்லமை மேலாண்மைக் குழுவினருக்கு என் நன்றி.



அன்புடன்,
அன்பு ஜெயா


--

Anbu Jaya

unread,
Sep 2, 2015, 1:09:25 AM9/2/15
to vallamai, mintamil
வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி. 


அன்புடன்,
அன்பு ஜெயா


தேமொழி

unread,
Sep 6, 2015, 11:36:54 PM9/6/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

செப்டம்பர் 7, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள்

சங்கர் மகாதேவன் - 1

 

சென்னை தியாகராய நகரில் உள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பு கடந்த வாரம் (ஆகஸ்ட் – 30) ஏழை எளிய குடும்ப் பெண்களுக்கு தையல், கணினி மற்றும் அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி அளித்து, அதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கி, அதிகம் படித்திராத எளிய குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவியுள்ளது. இத்தகைய சமூகப்பணிகளுக்குத்  தூண்டுகோலாய் இருந்து வந்துள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனரும் மற்றும் அமைப்பின் அறங்காவலருமான திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்களின் சமூகப்பணியைப் பாராட்டி அவரை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

இதுவரை நான்கிற்கும் மேலான தொழிற்பயிற்சி நிலையங்கள், பத்திற்கும் மேலான பள்ளிமாணவர்களுக்கான நலத்திட்டங்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவி, பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி என சமூகத் தொண்டு செய்துள்ளது “உதவும் உள்ளங்கள்” நிறுவனம். இந்த அமைப்பின் குழுவினர்கள், தன்னார்வலர்கள் பலரை ஒருங்கிணைத்தும், நன்கொடைகள் சேகரித்தும் தேவையுள்ளோர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். “உதவும் உள்ளங்கள்” சேவை நிறுவனத்தின் நிறுவனரான திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள் முன்னாள் வங்கி ஊழியர். இவர் 2000 ஆம் ஆண்டு உதவும் உள்ளங்கள் அமைப்பைத் தோற்றுவித்து தமது குழுவினர் துணையுடன் சமூகப்பணி செய்து வருகிறார். சமீபத்தில் வங்கிப்பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சமூகப்பணிக்கு முழுநேரத்தையும் செலவிட்டு வருகிறார்.

சங்கர் மகாதேவன் - 2

தற்பொழுது நானூற்றுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, உதவும் உள்ளங்கள் அமைப்பு சமூகப்பணியாற்றி வருகிறது. உதவும் உள்ளங்களின் சேவைகள் பொதுவாகக் கல்வி உதவி, மருத்துவ உதவி, வாழ்வாதார தொழிற்பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் அடங்குகிறது.

சங்கர் மகாதேவன் - 3

மருத்துவ உதவி

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்துடனும், பாளையங்கோட்டையில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து திருல்வேலியில் புற்றுநோய்க்கான மருத்துவப்பணிகளிலும் உதவும் உள்ளங்கள் அமைப்பு பங்காற்றி வருகிறது. இதனால் புற்றுநோயினால் பாதிக்கப்பட பதினறாராயிரம் பேர் ஆரம்பக்கட்ட நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார்கள். தொழுநோயாளிகளுக்கு உதவித்தொகை என்று மருத்துவ உதவிகளும் உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

சங்கர் மகாதேவன் - 5

கல்வி உதவி

சுனாமியில் பாழடைந்த பள்ளிகளுக்குக் கட்டிட சீரமைப்பு உதவி, கழிப்பறையற்ற பள்ளிகள் ஒருசிலவற்றிற்குக் கழிப்பறை கட்டும் உதவி, மாணவர்களுக்கு மேற்கல்வி பயில உதவித்தொகையளித்தல், தேவையான குழந்தைகளுக்கு காலையுணவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், பள்ளிப்பாடங்களில் பயிற்சி, நேர்முகத் தேர்வு பயிற்சி வகுப்புகள், அவர்கள் வேலைவாய்ப்புக்கு உதவி, பெண்களுக்குக் கணினி, தையல், அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி எனக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி உதவிகளும், உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

சங்கர் மகாதேவன் - 4

தொழிற்பயிற்சி

இத்தகைய சமூகப்பணிகளுடன், 1998 ஆம் ஆண்டுமுதல், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கு “ஆனந்த தீபாவளி’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, சென்னையில் உள்ள 18 இல்லங்களைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு ஆகியவையும் பரிசாக வழங்குவதை உதவும் உள்ளங்கள் அமைப்பு செய்து வருகிறது.

சங்கர் மகாதேவன்

ஆனந்த தீபாவளி நிகழ்ச்சி

இந்திய செஞ்சிலுவை அமைப்பு, இரத்த வங்கி, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு ஆகியவற்றிலும் உறுப்பினராகத் தொடர்ந்து பங்களித்து வரும் திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள், துன்பத்தில் உழலும், உதவும் தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என்ற எளிய கொள்கையின் அடிப்படையில் உதவும் உள்ளங்கள் அமைப்பைத் துவக்கி, அதன் மூலம் இன்று பல்லாயிரம் மாணவர்களும், பெண்களும், நோயாளிகளும் பலன்பெறும் வண்ணம் சேவை அமைப்பினை வழி நடத்திச் செல்கிறார்.  அவரது சமூகப்பணியைப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

தொடர்பு கொள்ள:
Udhavum Ullangal
No.77, 1st Main Road,
C.I.T Nagar, Nandanam,
Opp FIAT Car Showroom
Chennai – 600 035
Phone numbers:
+91-44-24344743
+91-9444194743

Email: in...@udhavumullangal.org.in, uu1s...@gmail.com
http://www.udhavumullangal.org.in/ 
https://www.facebook.com/udhavumullangal

தகவல்கள் மற்றும் படங்கள் உதவி:
உதவும் உள்ளங்கள் வலைத்தளம்
மற்றும் …

http://www.dinamalar.com/news_detail.asp?id=1334519


நன்றி வல்லமை:   http://www.vallamai.com/?p=61575

Innamburan S.Soundararajan

unread,
Sep 7, 2015, 12:29:54 AM9/7/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்
வாழ்த்துக்கள்,திரு. பி.சங்கர் மகாதேவன்.
இன்னம்பூரான்









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com



2015-09-07 9:06 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
> செப்டம்பர் 7, 2015
>
> இவ்வார வல்லமையாளர்
> வல்லமைமிகு திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள்
>
>
>
> சென்னை தியாகராய நகரில் உள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பு கடந்த வாரம் (ஆகஸ்ட் –
> 30) ஏழை எளிய குடும்ப் பெண்களுக்கு தையல், கணினி மற்றும் அழகுக்கலை ஆகியவற்றில்
> தொழிற்பயிற்சி அளித்து, அதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கி, அதிகம்
> படித்திராத எளிய குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவியுள்ளது. இத்தகைய
> சமூகப்பணிகளுக்குத் தூண்டுகோலாய் இருந்து வந்துள்ள “உதவும் உள்ளங்கள்”
> அமைப்பின் நிறுவனரும் மற்றும் அமைப்பின் அறங்காவலருமான திரு. பி.சங்கர்
> மகாதேவன் அவர்களின் சமூகப்பணியைப் பாராட்டி அவரை வல்லமை இதழின் இவ்வார
> வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.
>
> இதுவரை நான்கிற்கும் மேலான தொழிற்பயிற்சி நிலையங்கள், பத்திற்கும் மேலான
> பள்ளிமாணவர்களுக்கான நலத்திட்டங்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட
> மாணவர்களுக்குக் கல்வி உதவி, பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய்
> நோயாளிகளுக்கு மருத்துவ உதவி என சமூகத் தொண்டு செய்துள்ளது “உதவும் உள்ளங்கள்”
> நிறுவனம். இந்த அமைப்பின் குழுவினர்கள், தன்னார்வலர்கள் பலரை ஒருங்கிணைத்தும்,
> நன்கொடைகள் சேகரித்தும் தேவையுள்ளோர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி
> செய்து வருகின்றனர். “உதவும் உள்ளங்கள்” சேவை நிறுவனத்தின் நிறுவனரான திரு.
> பி.சங்கர் மகாதேவன் அவர்கள் முன்னாள் வங்கி ஊழியர். இவர் 2000 ஆம் ஆண்டு உதவும்
> உள்ளங்கள் அமைப்பைத் தோற்றுவித்து தமது குழுவினர் துணையுடன் சமூகப்பணி செய்து
> வருகிறார். சமீபத்தில் வங்கிப்பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு,
> சமூகப்பணிக்கு முழுநேரத்தையும் செலவிட்டு வருகிறார்.
>
> தற்பொழுது நானூற்றுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, உதவும்
> உள்ளங்கள் அமைப்பு சமூகப்பணியாற்றி வருகிறது. உதவும் உள்ளங்களின் சேவைகள்
> பொதுவாகக் கல்வி உதவி, மருத்துவ உதவி, வாழ்வாதார தொழிற்பயிற்சி அளித்தல்
> ஆகியவற்றில் அடங்குகிறது.
>
> மருத்துவ உதவி
>
> சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்துடனும், பாளையங்கோட்டையில் உள்ள
> கிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து திருல்வேலியில் புற்றுநோய்க்கான
> மருத்துவப்பணிகளிலும் உதவும் உள்ளங்கள் அமைப்பு பங்காற்றி வருகிறது. இதனால்
> புற்றுநோயினால் பாதிக்கப்பட பதினறாராயிரம் பேர் ஆரம்பக்கட்ட நிலையிலேயே நோய்
> கண்டறியப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார்கள். தொழுநோயாளிகளுக்கு உதவித்தொகை
> என்று மருத்துவ உதவிகளும் உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.
>
> கல்வி உதவி
>
> சுனாமியில் பாழடைந்த பள்ளிகளுக்குக் கட்டிட சீரமைப்பு உதவி, கழிப்பறையற்ற
> பள்ளிகள் ஒருசிலவற்றிற்குக் கழிப்பறை கட்டும் உதவி, மாணவர்களுக்கு மேற்கல்வி
> பயில உதவித்தொகையளித்தல், தேவையான குழந்தைகளுக்கு காலையுணவு, அரசுப்பள்ளி
> மாணவர்களுக்கு ஆங்கிலம், பள்ளிப்பாடங்களில் பயிற்சி, நேர்முகத் தேர்வு பயிற்சி
> வகுப்புகள், அவர்கள் வேலைவாய்ப்புக்கு உதவி, பெண்களுக்குக் கணினி, தையல்,
> அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி எனக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி
> உதவிகளும், உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.
>
> தொழிற்பயிற்சி
>
> இத்தகைய சமூகப்பணிகளுடன், 1998 ஆம் ஆண்டுமுதல், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான
> ஆதரவற்ற குழந்தைகளுக்கு “ஆனந்த தீபாவளி’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, சென்னையில்
> உள்ள 18 இல்லங்களைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு
> ஆகியவையும் பரிசாக வழங்குவதை உதவும் உள்ளங்கள் அமைப்பு செய்து வருகிறது.
>

Tthamizth Tthenee

unread,
Sep 7, 2015, 4:49:43 AM9/7/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்

2015-09-06 21:29 GMT-07:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
திரு. பி.சங்கர் மகாதேவன்.

திரு. பி.சங்கர் மகாதேவன்.
​ அவர்களுக்கு மனமார்ந்த​ பாராட்டுக்கள்

Anbu Jaya

unread,
Sep 8, 2015, 7:36:44 AM9/8/15
to vallamai
வல்லமையாளருக்கு வாழ்த்துகள் 



அன்புடன்,
அன்பு ஜெயா


தேமொழி

unread,
Sep 14, 2015, 1:38:05 AM9/14/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

செப்டம்பர் 14, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. ரவிக்குமார் அவர்கள்

ravikkumar

சென்ற ஆசிரியர் தின விழாவையொட்டி, தமிழ்நாட்டில் வெளிவரும் சிறந்த தமிழாய்விதழ்களில் ஒன்றான “மணற்கேணி ஆய்விதழ்” சார்பாக “நிகரி விருது” அளித்து, வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த ஆசிரியர்களாக, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களையும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் தலைமைஆசிரியர் துளசிதாசன் அவர்களையும் இனங்கண்டு பாராட்டிய திரு. ரவிக்குமார் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

சமத்துவ ஆசிரியர் விருதுகளை வழங்கிய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், “சமுதாய அக்கறையை மாணவர்களிடம் விதைப்பவரே உண்மையான ஆசிரியர்” என்று பாராட்டினார். சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கான மாறுதல்களைக் கொண்டுவர விரும்பினால் அதை இளைஞர்களிடம் இருந்தே துவக்க வேண்டும் எனச் சொன்ன அறிஞர்கள் பலர். “இளைய பாரதத்தினாய் வா வா வா” என்று எழுச்சியூட்டிப் பாடினார் பாரதி, அக்கொள்கையைக் கொண்ட மனிதருள் மாணிக்கம் ஜவஹர்லால் நேருவும் இக்கருத்தைக் குறிப்பிட்டே குழந்தைகளிடம் அன்பு செலுத்தினார், சிறுவர்களுக்கு கல்விக் கண் திறந்து இதனை முயற்சித்தார் கர்மவீரர் காமராசர், இளைஞர்களை கனவுகாணச் சொல்லி ஊக்குவித்தார் அப்துல் கலாம். அறிஞர் அனைவரும் முதிர்ந்த மூங்கில்களைக் காட்டிலும், விளையும் பச்சை மூங்கில்களை வளைப்பது சுலபம் என்பதை அறிந்து தங்கள் அறிவுரைகளை இளைஞர் குழுவிடம் எடுத்துச் சென்றனர்.

அரசியல் களத்தில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும், சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு சமூக சீர்திருத்தவாதியே துணிச்சல் மிக்கவர்என்றார் அம்பேத்கர். இந்நோக்கில் பள்ளி ஆசிரியர் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணர்ந்து, வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்குவித்து ஆசிரியர் தின நாளில் அவர்களைக் கௌரவித்து மணற்கேணி ஆய்விதழ் சார்பாக “நிகரி விருது” அளித்து வரும், மணற்கேணி இதழ் மற்றும் அதன் நிறுவனருமான திரு. ரவிக்குமார் அவர்களின் பணி பாராட்டிற்குரியது. விருதின் நோக்கம் குறித்து எழுத்தாளர் ரவிக்குமார் விழாவில் ஆற்றிய உரையில், “மதிப்பெண் மட்டுமே நோக்கமாகக் கொண்டு சென்று கொண்டிருக்கும் இன்றைய கல்வி முறையில், பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி வகுப்பறையைச் சமத்துவமாக நடத்துகிற ஆசிரியர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கான பிரக்ஞையுடன் கூடிய ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்,” என்றார்.

இனி தொடர்வது, தமிழகம் நன்கறிந்த “மணற்கேணி திரு. ரவிக்குமார்” பற்றியும் அவரது “மணற்கேணி ஆய்விதழ்” பற்றியும், அதன் “நிகரி விருது” பற்றியும் ஒரு சிறு அறிமுகம்.

எழுத்தாளர் திரு. ரவிக்குமார் ஒரு வழக்கறிஞர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். மேலும், சமூகப் பணியாளரும், மணற்கேணி பதிப்பகத்தின் நிறுவனரும், மணற்கேணி தமிழ் ஆய்விதழின் ஆசிரியருமான இவர் 1961 இல் சீர்காழி வட்டம், மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் துரைசாமி – கனகம்மாள் இணையரின் மகனாகப் பிறந்து, பள்ளி நாட்களிலேயே ஆசிரியர் மூலம் பகுத்தறிவு சிந்தனைப் பாதையில் நடக்கத் துவங்கியவர். அண்ணாமலை பல்கலைக்கழக நாட்களில் நக்சல்பாரி அரசியலிலும், முற்போக்கு மாணவர் சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவர். பேராசிரியர் அ. மார்க்கஸ், பொ. வேலுசாமி அவர்களுடன் 1990 களில் இணைந்து நடத்திய “நிறப்பிரிகை இதழில்” இவர் வடித்த எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தி மக்களின் கவனத்தைக் கவர்ந்தார். தமிழகத்தின் தலித் அரசியலில், தலித் பண்பாட்டு எழுச்சியில், மனித உரிமை நடவடிக்கைகளில் இவர் காட்டிய ஈடுபாடு, பல ‘உண்மை அறியும் குழு’க்களை நிறுவவும், காவல்துறையினரின் அத்துமீறல்களை வெளிக்கொணரவும் உதவியது.

‘தடா’ ஒழிப்பு, மரணதண்டனை ஒழிப்பு மாநாடு போன்றவற்றில் 1990 ஆண்டுகளில் முன்னணியில் செயல்பட்ட இவர்; ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கம்’, ‘மக்கள் கல்வி இயக்கம்’, ‘மனித உரிமை இயக்கம்’, ‘பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்’ எனப் பல சமுதாய இயக்கங்கள் உருவாக ஆலோசகராகப் பின்னணியில் இருந்தும் பங்களித்துள்ளார். ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ காவல்துறையின் அடக்குமுறைகளைச் சந்தித்த பொழுதும், இந்துத்துவ சக்திகளால் இஸ்லாமியர், கிறிஸ்துவர் பாதிக்க நேர்ந்த பொழுதும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்துப் போராடியவர் திரு. ரவிக்குமார். காட்டு மன்னார் கோவில் சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற வாய்ப்பைத் தக்கவாறு பயன்படுத்தி, சமூகப்பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குப் பாடுபட்டதன் விளைவாக நரிக்குறவர்கள், புதிரை வண்ணார், பதிவுபெற்ற பாரம்பரிய மருத்துவர்கள், அரவாணிகள், நாட்டுப்புற கலைஞர்கள், வீட்டுப் பணியாளர்கள், நலவாரியங்களும் உருவாகின. அந்நாளைய முதல்வராக ஆட்சியில் இருந்த கலைஞரின் கான்கிரீட் வீடுகட்டும் திட்டத்திலும் பெரும் பங்கு வகித்தார். அவரது சமூகப்பணிகளுக்காக, ‘அண்ணா விருதை’ 2010 ஆம் ஆண்டில் பெற்றவர் திரு. ரவிக்குமார்.

ravikkumar with kalaingar

மணற்கேணி: தனித்துவம் பெற்ற மணற்கேணி இருமாத ஆய்விதழ் துவக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் எண்ணிக்கை முப்பதையும் தாண்டியுள்ளது.

மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது: 
நிகரி விருது – நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து பாராட்டுவது விருதின் நோக்கம்.

                     manarkaenimanarkaeni logo
2013 ஆம் ஆண்டு பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் , கடலூர் ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர்.
2014 ஆம் ஆண்டு பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும் ‘ஆயிஷா’ இரா. நடராசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப்பட்டனர்.
2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப் பட்டுள்ளனர்.

Untitled

“பள்ளிப் பருவம்” என்ற மணற்கேணி பதிப்பக நூலின் பதிப்புரையில், திரு. ரவிக்குமார் அவர்கள் ‘நிகரி’ விருது தோற்றுவித்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறார், “பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பெற்றோர்கூடத் தம் பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறவேண்டும் என விரும்புகிற காலம் இது. அதனால்தான் ஆட்சியாளர்கள் ‘சமச்சீர் கல்வி’யைப் பற்றி அக்கறை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. சமூக, பொருளாதார பாகுபாடுகளைப் பள்ளிகளுக்குள் அனுமதித்துக்கொண்டு, அதைப்பற்றிக் கவலைப்படாமல், பாடத் திட்டங்களை மட்டும் ஒரேமாதிரியாக அமைத்துவிட்டால் கல்வியில் சமத்துவம் வந்துவிடும் எனக் கூறுவது கல்வியில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை மறைப்பதற்கானதொரு தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். தமிழ்நாட்டில், ‘சமச்சீர் கல்வி’ குறித்த கல்வியாளர்களின் பேச்சுகள்கூட பாடத் திட்டங்களைத் தாண்டிச் செல்லாதது நமது துரதிர்ஷ்டம். சமத்துவக் கல்வியை வலியுறுத்தும் நோக்கில் ‘நிகரி – சமத்துவ ஆசிரியர்’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிவிருக்கும் மணற்கேணி, கல்வி குறித்த நூல்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. அதன் துவக்கமாக “பள்ளிப் பருவம்” என்ற நூல் அமைந்தது,” என்று குறிப்பிடுகிறார்.

தமிழக கல்வி நிறுவனங்களில் நடைபெற்று , கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நாளேடுகளில் வெளியான சாதிவெறி நடவடிக்கைகள் பற்றிய ஒருசில சான்றுகளைக் குறிப்பிட்டு (http://manarkeni.blogspot.com/2014/09/blog-post.html), ஆதிதிராவிட / பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்காக எத்தனையோ முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தபோதிலும் பொதுவான கல்வியறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இந்தச் சமூகத்தினரில் கல்வி அறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காணமுடிகிறது. இதற்கு அரசாங்கமும் சமூகமும் சேர்ந்து பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில் அரசாங்கம் போடும் சட்டங்கள் சாதிய சமூகத்தின் முன்னால் செயலற்றுப் போய்விடுகின்றன. அவற்றைச் செயல்படவைக்கும் அரசியல் உறுதி இருந்தாலொழிய இந்த நிலையை மாற்ற முடியாது என்கிறார் திரு. ரவிக்குமார். எனவே இந்த மாறுதல் நோக்கிய முயற்சிக்கு செயல்வடிவம் கொடுத்து, சமத்துவத்தை ஊக்குவிக்க எடுத்த நடவைக்கையின்விளைவே ஆசிரியர்களுக்கான நிகரி விருது. இவர் இவ்வாறு சமூகத்தை மாற்றக்கூடிய நம்பிக்கையைத் தனது கவிதை ஒன்றிலும் வெளிப்படுத்துகிறார்.

வானத்தை நோக்கி விட்டெறியும் கனவு 
சிலநேரம் 
இன்மையிலிருந்து இன்மையைநோக்கிப் பாயும் 
எரிகல்லாய் தடயமற்றுப் போகிறது 
சிலநேரம் 
மின்மினிப் பூச்சியாய் தலையைச் சுற்றி வருகிறது 
சிலநேரம் பனியாக மாறி இலைகளில் படிகிறது

வானை நோக்கி விட்டெறியும் கனவு 
நட்சத்திரமாக மாறுவது 
எப்போதோதான் நடக்கும். 
என்றபோதிலும் மனந்தளராதே 
உன் முன்னோர் எறிந்த கனவுதான் நிலவு 
சூரியனும்கூட அப்படியென்றுதான் சொல்கிறார்கள்

தனது சமத்துவக் கனவிற்கு “நிகரி விருது” மூலம் செயல்வடிவம் கொடுத்து, தளரா நம்பிக்கையுடன் சமூகப்பணி செய்து வரும் திரு. ரவிக்குமார் அவர்களைப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

_____________________________________________________________________________________________

மேலதிகத் தகவல்களின் இணைப்பு …

ரவிக்குமார் அவர்களின் படைப்புகள்:

கட்டுரைத் தொகுப்புகள்: -
1.கண்காணிப்பின் அரசியல், விடியல் பதிப்பகம், 1995
2.கொதிப்பு உயர்ந்துவரும் , காலச்சுவடு, 2001
3.கடக்க முடியாத நிழல்,காலச்சுவடு,2003
4.மால்கம் எக்ஸ்,காலச்சுவடு,2003
5.வன்முறை ஜனநாயகம், தலித் வெளியீடு, 2004
6.சொன்னால் முடியும், விகடன்,2007
7.இன்றும் நமதே, விகடன்,2008
8.சூலகம், உயிர்மை, 2009
9.கற்றனைத்தூறும், உயிர்மை, 2009
10.பிறவழிப் பயணம், உயிர்மை,2010
11.பாப் மார்லி, உயிர்மை, 2010
12.அண்டை அயல் உலகம், உயிர்மை,2010
13.ஆள்வதன் அரசியல், உயிர்மை, 2010
14.தமிழராய் உணரும் தருணம், ஆழி பதிப்பகம், 2010
15.துயரத்தின்மேல் படியும் துயரம், ஆழி பதிப்பகம்,2010
16.காற்றின் பதியம், மணற்கேணி,2010
17.கடல்கொள்ளும் தமிழ்நாடு,மணற்கேணி,2010
18. மீளும் வரலாறு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,2010
19.காணமுடியாக் கனவு, ஆழி பதிப்பகம், 2011
20.சொல்லும் செயல், மணற்கேணி, 2011
21.அ-சுரர்களின் அரசியல்,மணற்கேணி,2014

கவிதை: -
1.அவிழும் சொற்கள், உயிர்மை, 2009
2.மழை மரம், க்ரியா,2010

சிறுகதை: -
1.கடல் கிணறு, மணற்கேணி,2014

மொழிபெயர்ப்பு: -
1.உரையாடல் தொடர்கிறது, விடியல்,1995
2.கட்டிலில் கிடக்கும் மரணம்,மருதம்,2002
3.வெளிச்சமும் தண்ணீர்மாதிரிதான்,தலித் ,2003
4.பணிய மறுக்கும் பண்பாடு,காலச்சுவடு,2003
5.வரலாறு என்னும் கதை, மணற்கேணி,2011
6.வலசைப் பறவை, மணற்கேணி,2011
7.அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்,மணற்கேணி,2011
8.மாமிசம்,மணற்கேணி,2014
9.அதிகாரத்தின் மூலக்கூறுகள், மணற்கேணி,2014
10.வெள்ளை நிழல் படியாத வீடு, மணற்கேணி,2014
11.குரல் என்பது மொழியின் விடியல்,மணற்கேணி,2014

ஆங்கிலம்: -
Venomous Touch,Samya,2010

தொகுப்புகள்: -
1.தலித் கலை இலக்கியம் அரசியல், தலித் கலைவிழாக்குழு,1996
2.தலித் என்னும் தனித்துவம், தலித் வெளியீடு ,1998
3.அயோத்திதாச பண்டிதர் சிந்தனைகள், 4 தொகுதிகள், தலித் சாகித்ய அகாடமி,1999
4.ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், தலித் சாகித்ய அகாடமி , 1999
5. தலித் காலம், தலித் வெளியீடு,1998
6.மிகைநாடும் கலை,காலச்சுவடு,2003
7.தொல்.திருமாவளவன் எழுத்துகள், 17 தொகுதிகள்,கரிசல்,2008
8.ஒடுக்கப்பட்ட இந்துக்கள், கரிசல்,2008
9.எங்கள் காலத்தில்தான் ஊழிநிகழ்ந்தது, மணற்கேணி,2010
10.நூர்ந்தும் அவியா ஒளி,மணற்கேணி,2010
11.சுவாமி சகஜானந்தா, மணற்கேணி,2010
12.எல்.இளையபெருமாள், மணற்கேணி,2010
13.பள்ளிப்பருவம், மணற்கேணி,2014
14.நூல் ஏணி,மணற்கேணி,2014

ஆங்கில தொகுப்புகள்: -
1.We the Condemned, PUCL,1998
2.Waking is another dream, Navayana,2011
3.Tamil Dalit writing,Oxford,2012

***

வல்லமையாளரின் தொடர்புக்கு:
திரு. ரவிக்குமார்
ஆசிரியர், மணற்கேணி
எண் 2, நோபிள் மேன்ஷன்
10, டாக்டர் நடேசன் சாலை
திருவல்லிக்கேணி
சென்னை 600005

Manarkeni Publication
B-1-4 Templeway Avenue
East coast road
Lawspet
Pondicherry 605 008

tamildal...@gmail.com
adhe...@gmail.com
Mobile: 94430 33305

http://manarkeni.blogspot.com/

http://nirappirikai.blogspot.com/

***

கட்டுரைக்கான செய்தி மற்றும் தகவல் பெற்ற இடங்கள்:
செய்தி: சமுதாய அக்கறையை விதைப்பவரே உண்மையான ஆசிரியர்: துணைவேந்தர்
http://www.dinamani.com/edition_trichy/trichy/2015/09/06/சமுதாய-அக்கறையை-விதைப்பவரே-/article3013434.ece

நிறப்பிரிகை மற்றும் மணற்கேணி இணையதளங்கள்.





நன்றி வல்லமை:   http://www.vallamai.com/?p=61858

தேமொழி

unread,
Sep 20, 2015, 11:10:39 PM9/20/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

செப்டம்பர் 21, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு முனைவர் பத்மாவதி அவர்கள்

Padmavathy-a

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி அன்னையப்பன் அவர்கள். இவரைக் குறிப்பிடும் செய்திகள் யாவும் “முனைவர் பத்மாவதி, தொல்லியல் ஆய்வாளர் (பணி ஓய்வு), சென்னை” என்றே குறிப்பிடுகின்றன. ஆனால் “தொல்லியல் பணிகளில்” இருந்தோ அல்லது “தொல்லியல் ஆய்வுகளில்” இருந்தோ ஓய்வு பெற்றதாக முனைவர் பத்மாவதியின் செயல்பாடுகள் இதுவரையில் குறிப்பதாக இல்லை. மாறாக இவர், வழக்கமான பணிஓய்வு பெற்றவர் வாழ்க்கைமுறையில் இருந்து வேறுபட்டு தொல்லியல் துறை வளர்ச்சியிலும், வரலாற்று ஆய்வுகளிலும், வரலாற்றுக் கல்வியிலும், தொல்லியல் துறையில் இளையதலைமுறையினரை உருவாக்குவதிலும் ஆர்வம் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஆதலினால், இவரை பணிஓய்வு பெற்றவர் என்று குறிப்பிடுவதும் பொருத்தமற்றதே. செப்டெம்பர் 6, 2015 அன்று ஓசூரில் நடைபெற்ற, “அறம் இலக்கிய அமைப்பு ஓசூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்” இணைந்து நடத்திய “மாமன்னர் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1001 ஆவது ஆண்டுவிழாவில்”, தொல்லியல் துறையில் ஆர்வமுடன் செயலாற்றும் இளையதலைமுறை ஆர்வலர்களுக்கு “தொல்லியல் முனைவோர்” விருது வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் பாராட்டிப் பேசியுள்ளார். தொல்லியல்துறையில் பத்மாவதியின் தொடர் பங்களிப்பைப் பாராட்டி அவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ அமைப்பின் நிறுவனர் முனைவர் சுபாஷிணி அவர்கள், முனைவர் சுபாஷிணிக்கு வல்லமைக்குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

viruthu

முனைவர் பத்மாவதி தொல்லியல் கல்வி சார்ந்த பயிலரங்குகளையும், கல்வெட்டுகளைப் படிக்க உதவும் கிரந்தம் பயிலரங்கங்களையும் தொடர்ந்து நடத்தி வருபவர். சமீபத்தில் இவர் பங்கேற்ற பயிலரங்கங்கள் குறித்த தகவல்கள் சிலவற்றை கீழே காண்க …

▪தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையம் நடத்திய கிரந்தம் பயிலரங்கில் பங்கேற்று, தமிழகக் கல்வெட்டுகளில் கிரந்த எழுத்து பயன்பாடு என்ற தலைப்பில் பல்லவர் கல்வெட்டுகளில் கிரந்தம் பற்றிய வகுப்பு, மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கும் பொருட்டு தஞ்சை பெரிய கோயிலில் நேரடி கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி

   Padmavathy6 Padmavathy5

▪நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி தமிழ்த்துறை நடத்திய பயிலரங்கில் கலந்துகொண்டு மாணவ மாணவியர்க்கு கிரந்தஎழுத்துக்கள் கற்பித்து பயிற்சி

▪காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இலக்கியச் சான்றுகளுடன் “தொண்டைமண்டல வரலாறு” பற்றிய சொற்பொழிவு

▪சென்னை சமூக ஆய்வுவட்டம் கூட்டத்தில் “களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும்” பற்றிய சொற்பொழிவு

Padmavathy-b

▪தமிழக மூதறிஞர்கள் குழு நடத்தும் மாதாந்திர கலந்துரையாடலில் சென்ற ஜூலை மாதக் கூட்டத்தில், “தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் கூறும் முக்கியச் செய்திகள்” என்ற தலைப்பில் தமிழக வரலாற்றில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டு ஆதாரங்கள், தமிழர்களின் சங்ககாலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இருப்பதற்கான தகவல் தரும் மீனாட்சிபுரம் கல்வெட்டு ஆகியன குறித்த சொற்பொழிவு

▪தமிழ் மரபு அறக்கட்டளையின் களஆய்வுகளில் பங்கேற்பு, தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவுகளுக்கு தகவல் அளித்து வரலாற்றுத் தகவல்கள் இணையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வழி பதிவாக்கம் பெற உதவுதல், தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக வழிநடத்துதல் ஆகிய தொடர் பணிகளுடன்…

“பனுவல் புத்தக நிலையம்” நடத்திவரும் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் (Archeological Tour ) பங்கேற்று வரலாறு மற்றும் தொல்லியல் கல்வி பயிற்சி அளிப்பது, கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் படி எடுக்கும் முறை பற்றிய பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு இதுவரை,
பனுவல் ஒருநாள் வரலாற்று தொல்லியல் கல்விப் பயணம் திட்டம் வழியாக (1) மகாபலிபுரம், (2)காஞ்சிபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், (3) செஞ்சி ஆகிய இடங்களில் தொல்லியல்துறை கல்வி வளர்ச்சிக்காகப் பயிற்சிகள் அளித்துள்ளார்.

   காஞ்சிபுரம் கல்விச் சுற்றுலாவில்பனுவலின் செஞ்சி வரலாற்று பயணம்

கார்த்திக் புகழேந்தி

அடுத்து வரும் அக்டோபர் 4, 2015 அன்று பனுவல் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் திருக்கோவிலூரிலும், திருக்கோவிலூரைச் சுற்றியுள்ள பகுதிகளான திருவெண்ணைநல்லூர், கிராமம், ஜம்பையில் 1981 ல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட, கி. பி. 1 ஆம் நூற்றாண்டு சங்க காலத்தமிழ் எழுத்துக் கல்வெட்டு ஆகியவற்றைப் பற்றி மங்கை ராகவன் அவர்களுடன் இணைந்து பயிலரங்கம் வழங்க உள்ளார்.

பணி ஓய்விற்குப் பிறகும் வரலாற்றுக் கல்வி, கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி, தொல்லியல் கல்வி ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு வழங்கி அவர்களை ஊக்குவித்துவரும் முனைவர் பத்மாவதி அவர்களின் பணிகளுக்காக அவரை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

_____________________________________________________________________________________________

கட்டுரைக்கான தகவல்களும் படங்களும் பெறப்பட்ட தளங்கள்:
முனைவர் பத்மாவதியின் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் – https://www.facebook.com/padmavathy.anaiappan
பனுவல் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் – https://www.facebook.com/panuval.thiruvanmiyur
கார்த்திக் புகழேந்தி – https://www.facebook.com/gsrkteam
காற்றில் எழுதியவன்… கார்த்திக் புகழேந்தி வலைப்பூ – http://writterpugal.blogspot.com/2015/05/blog-post.html
தமிழ் மரபு அறக்கட்டளை – http://www.tamilheritage.org/old/ec/ec.html#_pathma

வல்லமையாளர் பற்றிய மேலதிகத் தகவல்கள்:
களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும், தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி உரை
http://samoogaaaivuvattam.blogspot.in/2014/12/blog-post.html

கல்வி: முதுகலை தமிழ், முதுகலை கல்வெட்டு, தொல்லியல் பட்டயப்படிப்பு, முனைவர் ஆய்வு

நூல்கள்:
– சோழர் ஆட்சியில் அரசும் மதமும்
– சைவத்தின் தோற்றம்
– சோழர்கால சமயம்
– அம்பாசமுத்திரம்

ஆசிரியர்:
– நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – I
– நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – II
– நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – III
– திருவிழிமிழலை கல்வெட்டுகள்
– திருவலஞ்சுழி கல்வெட்டுகள்
– தாமரைப் பாக்கம் கல்வெட்டுகள்

துணை ஆசிரியர்:
– தொல்லியல் கருத்தரங்கம் தொகுதி – I
– தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 2004
– காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்
– தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்
– திருவாரூர் மாவட்டக் கல்வெட்டுகள்

மின்னஞ்சல்: padm...@hotmail.com
https://www.facebook.com/padmavathy.anaiappan




நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62086

Anna Kannan

unread,
Sep 21, 2015, 6:14:45 AM9/21/15
to Vallamai

வல்லமையாளர் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள். சில கூட்டங்களில் இவரைச் சந்தித்துள்ளேன். அர்ப்பணிப்புடன் கூடிய இவரது பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்.

தேமொழி

unread,
Sep 27, 2015, 11:51:06 PM9/27/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

செப்டம்பர் 28, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு கிரண் சேத்தி அவர்கள்

Kiran Bir Sethi

வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர் எனப் பாராட்டப்படுபவர் திருமிகு “கிரண் பிர் சேத்தி”(Kiran Bir Sethi) அவர்கள். தான் வாழும் சமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் தன்னார்வத் தொண்டர்களாகவும், அத்துடன் மாற்றம் கொண்டு வருபவர்களைக் கண்டறியும் வினையூக்கி (catalysts)களாகவும் விளங்கும் பலரை வல்லமை விருது கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் இடம் பெரும் ‘கிரண் சேத்தி’ அவர்கள் அகமதாபாத்தில் உள்ள ‘ரிவர்சைடு பள்ளி'(The Riverside School, Ahmedabad) யின் நிறுவனர் மற்றும் இயக்குநராக கல்விப்பணியில் மறுமலர்ச்சி செய்து வருகிறார். உலகளாவிய அளவில் நடத்தப்பெறும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ (Design for Change) என்ற திட்டத்தை, இந்தியாவில் இவர் அமைப்பு முன்னெடுத்து நடத்திவருகிறது. இந்த அமைப்பு நடத்தும் ‘புராஜக்ட் எக்ஸ்போ’ (Design for Change – DFC I CAN School Challeng) என்ற போட்டியை ஆண்டு தோறும் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தி, சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறது. பள்ளி மாணவர்களை ஆய்வில் ஊக்குவிக்கும் இந்தச் செயல் ஓர் அருமையான முயற்சி. தேசிய அளவில், 8 வயதிலிருந்து 13 வயது வரை உள்ள பள்ளி (நடுநிலைப்பள்ளி வரை பயிலும்) மாணவர்களுக்காக நடக்கும் இந்தப்போட்டியில் ஆண்டுதோறும் பல பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்ட பங்கேற்கிறார்கள்.

Design for Change World

இந்த ஆண்டு கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கும் ஆர்வத்தில் “இயற்கை கிருமிநாசினி” தயாரித்து அதனைப் போட்டிக்கு சமர்பிக்கிறார்ககள். இவர்களின் இந்த முயற்சிக்காக ஏழாம் வகுப்பு மாணவர்களான நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோரையும், அவர்களுக்கு ஊக்கமூட்டி உதவி வரும் பள்ளியின் கணித ஆசிரியர், சத்யபிரபா தேவி ஆகியோரையும் வல்லமை இதழ் சார்பில் பாராட்டுகிறோம். அன்றாடம் சுகாதாரத்திற்காக நாம் பயன்படுத்தும், ‘சோப்பு’, ‘ஷாம்பூ’ உள்ளிட்ட கிருமிநாசினி அனைத்தும் வேதிப் பொருட்களால் ஆனவை. இவற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு தோல் நோய்களும் வருகின்றன. இவற்றைக் கணக்கில்கொண்டு இயற்கை முறையில், கிருமி நாசினி தயாரித்துள்ளதாக இம்மாணவர்கள் தமிழ் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளனர். செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, திருநீற்றுப்பத்து, கற்பூரவல்லி ஆகியவற்றைக் கலவையாக்கி, இயற்கை கிருமி நாசினி தயாரித்து; அத்துடன், இவை அதிக நாள் மக்கள் பயன்படுத்த வசதியாக, எலுமிச்சையையும் இயற்கை கிருமிநாசினியில் சேர்த்துள்ளார்கள். சுத்தமாக்குவதுடன் பாதிப்பும் தராத இவர்களது இயற்கை கிருமிநாசினியை சுற்றுவட்டாரப் பள்ளிகளிலும் பயன்படுத்த இவர்களே தயாரித்தும் வழங்கியுள்ளார்கள்.

Tamil_News_large_1348855 (1)

இந்தத் தமிழக மாணவர்களைப் போன்று ஆர்வமுள்ள மாணவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஆராய்ச்சிக் கோணத்தில் வளர்த்துவரும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ அமைப்பும், அதனை முன்னெடுத்து நடத்தி வரும் கிரண் சேத்தியின் பணியும் பாராட்டிற்குரியவை.

கிரண் சேத்தியின் கல்வி மறுமலர்ச்சி முயற்சிகள் உலக அளவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக அளவில் ‘வர்கி அறக்கட்டளை’ (Varkey Foundation) சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதுக்கான (Global Teacher Prize in the Global Education & Skills Forum 2015) இறுதிப்பட்டியலில் ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்தவர்களில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளார் கிரண் சேத்தி. இந்தப் பரிசு, தங்களது தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிகச் சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியருக்கே வழங்கப்படும். ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவோர்க்காக வழங்கப்படும் இந்தப் பரிசு ஒப்பீட்டில் நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படக்கூடிய ஒன்று என்பதும், இதற்காக சுமார் 5000 ஆசிரியர்கள் வரை அனைத்துலக அளவில் பரிந்துரைக்கப்படுவர் என்பதும் இதன் சிறப்பு.

Kiran Bir Sethi3

Kiran Bir Sethi4

Kiran Bir Sethi5

Kiran Bir Sethi2

பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்கும் கலையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்றும், இவர் முதல் நாள் ஒரு ஆராய்ச்சியாளரின் பார்வையில் பாடம் சொல்லித் தரும் முயற்சியை மேற்கொண்டால், மறுநாள் ஒரு கலைஞராகவும், அதற்கும் அடுத்த நாள் ஒரு கதை சொல்லியாகவும் மாறி பாடம் நடத்தும் முறையைக் கடைப்பிடிப்பதாகவும் கூறும் கிரண் சேத்தி, மாணவர்களை இவ்வாறு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், அவர்கள் தாங்களே முயன்று வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

தனது மகன் கல்வியில் எதிர்கொண்ட கட்டுப்பாடுகளையும் சவால்களையும் கண்ட பின்னர், அகமதாபாத்தில் ரிவர்சைட் பள்ளி என்ற பள்ளியைத் துவக்கி, 2001 ஆம் ஆண்டு முதல், மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் முறையை மாற்றி அமைப்பதில் அக்கறை காட்டி வருகிறார்.

TED இந்தியாவின் சொற்பொழிவாளர், பல அயல்நாட்டுக் கருத்தரங்குகளில் சிறப்பு சொற்பொழிவாளர் என்ற வகையில் சமூக அளவில் மாற்றம் தர வேண்டிய கல்வியின் அவசியம் பற்றிய கருத்துகளை முன்னிறுத்தி வருகிறார். இவரது பள்ளியில் இவர் கடைபிடிக்கும் மாற்றம் நோக்கிய புதுமையான கல்விமுறை பாடத்திட்டங்களுக்காக 2009 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ‘கால் டு கான்சயின்ஸ்’ (Call to Conscience) விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘டிசைன் பார் சேஞ்ச்’ என்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியை முன்னெடுத்தது மட்டுமல்லாது, ‘அப்ரோச்’ (aProCh) என்ற அமைப்பைத் துவக்கி, நகரத்தைச் சிறுவர்களுக்கான பாதுகாப்பான இடமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டதற்காக 2008ம் ஆண்டின் அசோகா (Ashoka Fellow in 2008) விருதைப் பெற்றார். சமூகத்தில் கல்வியின் வழி இவர் மாற்றம் கொண்டு வரச் செய்யும் முயற்சிகளுக்காக இந்த ஆண்டு, ஏசியா சொசைட்டியின் ‘கேம் சேஞ்சர்’ விருதுக்காகவும் (Asia Society’s, 2015 Asia Game Changer of the Year) பரிந்துரைக்கப்பட்டார்.

இந்திய மாணவர்களின் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ள கிரண் சேத்தியை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம், கிரணுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

_____________________________________________________________________________________________

கட்டுரைக்கான தகவல்களும் படங்களும் பெறப்பட்ட தளங்கள்:

கட்டுரைக்குத் தகவல் தந்து உதவிய தளங்கள் (Resourses):

http://www.globalteacherprize.org/

http://asiasociety.org/asia-game-changers

http://asiasociety.org/asia-game-changers/kiran-bir-sethi

http://www.ted.com/speakers/kiran_sethi

http://www.schoolriverside.com

https://en.wikipedia.org/wiki/The_Riverside_School,_Ahmedabad

The Importance of a Teacher in Society

http://www.newindianexpress.com/education/The-Importance-of-a-Teacher-in-Society/2015/02/23/article2681963.ece

இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1348855

Info on DFC I CAN School Challenge – தகவல்:
இணையதளம்: http://designforchangeindia.com/
ஃபேஸ்புக்: https://www.facebook.com/designforchangeindia?fref=nf
யூடியூப்: https://www.youtube.com/user/icandfc
போட்டி மற்றும் போட்டியின் விதிமுறைகள்: http://www.dfcworld.com/file2015/asia_society_press.pdf
மின்னஞ்சல்: in...@dfcworld.com



நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=62334

Innamburan S.Soundararajan

unread,
Sep 28, 2015, 3:30:06 AM9/28/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்
இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு கிரண் சேத்தி அவர்களுக்கும்,
ரிவர்சைட் பள்ளிக்கும் என் வாழ்த்துக்கள்.


2015-09-28 9:21 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
> செப்டம்பர் 28, 2015
>
> இவ்வார வல்லமையாளர்
> வல்லமைமிகு கிரண் சேத்தி அவர்கள்
>
> வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர் எனப் பாராட்டப்படுபவர் திருமிகு “கிரண் பிர்
> சேத்தி”(Kiran Bir Sethi) அவர்கள். தான் வாழும் சமூகத்தில் மாற்றம்
> விளைவிக்கும் தன்னார்வத் தொண்டர்களாகவும், அத்துடன் மாற்றம் கொண்டு
> வருபவர்களைக் கண்டறியும் வினையூக்கி (catalysts)களாகவும் விளங்கும் பலரை வல்லமை
> விருது கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் இடம் பெரும் ‘கிரண் சேத்தி’ அவர்கள்
> அகமதாபாத்தில் உள்ள ‘ரிவர்சைடு பள்ளி'(The Riverside School, Ahmedabad) யின்
> நிறுவனர் மற்றும் இயக்குநராக கல்விப்பணியில் மறுமலர்ச்சி செய்து வருகிறார்.
> உலகளாவிய அளவில் நடத்தப்பெறும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ (Design for Change) என்ற
> திட்டத்தை, இந்தியாவில் இவர் அமைப்பு முன்னெடுத்து நடத்திவருகிறது. இந்த
> அமைப்பு நடத்தும் ‘புராஜக்ட் எக்ஸ்போ’ (Design for Change – DFC I CAN School
> Challeng) என்ற போட்டியை ஆண்டு தோறும் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்காக
> நடத்தி, சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறது. பள்ளி
> மாணவர்களை ஆய்வில் ஊக்குவிக்கும் இந்தச் செயல் ஓர் அருமையான முயற்சி. தேசிய
> அளவில், 8 வயதிலிருந்து 13 வயது வரை உள்ள பள்ளி (நடுநிலைப்பள்ளி வரை பயிலும்)
> மாணவர்களுக்காக நடக்கும் இந்தப்போட்டியில் ஆண்டுதோறும் பல பள்ளி மாணவர்கள்
> தங்கள் திறமையைக் காட்ட பங்கேற்கிறார்கள்.
>
> இந்த ஆண்டு கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள்
> இப்போட்டியில் பங்கேற்கும் ஆர்வத்தில் “இயற்கை கிருமிநாசினி” தயாரித்து அதனைப்
> போட்டிக்கு சமர்பிக்கிறார்ககள். இவர்களின் இந்த முயற்சிக்காக ஏழாம் வகுப்பு
> மாணவர்களான நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோரையும்,
> அவர்களுக்கு ஊக்கமூட்டி உதவி வரும் பள்ளியின் கணித ஆசிரியர், சத்யபிரபா தேவி
> ஆகியோரையும் வல்லமை இதழ் சார்பில் பாராட்டுகிறோம். அன்றாடம் சுகாதாரத்திற்காக
> நாம் பயன்படுத்தும், ‘சோப்பு’, ‘ஷாம்பூ’ உள்ளிட்ட கிருமிநாசினி அனைத்தும்
> வேதிப் பொருட்களால் ஆனவை. இவற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு
> தோல் நோய்களும் வருகின்றன. இவற்றைக் கணக்கில்கொண்டு இயற்கை முறையில், கிருமி
> நாசினி தயாரித்துள்ளதாக இம்மாணவர்கள் தமிழ் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி
> அளித்துள்ளனர். செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, திருநீற்றுப்பத்து,
> கற்பூரவல்லி ஆகியவற்றைக் கலவையாக்கி, இயற்கை கிருமி நாசினி தயாரித்து;
> அத்துடன், இவை அதிக நாள் மக்கள் பயன்படுத்த வசதியாக, எலுமிச்சையையும் இயற்கை
> கிருமிநாசினியில் சேர்த்துள்ளார்கள். சுத்தமாக்குவதுடன் பாதிப்பும் தராத
> இவர்களது இயற்கை கிருமிநாசினியை சுற்றுவட்டாரப் பள்ளிகளிலும் பயன்படுத்த
> இவர்களே தயாரித்தும் வழங்கியுள்ளார்கள்.
>
> இந்தத் தமிழக மாணவர்களைப் போன்று ஆர்வமுள்ள மாணவர்களின் ஆக்கப்பூர்வமான
> செயல்பாடுகளை ஆராய்ச்சிக் கோணத்தில் வளர்த்துவரும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’
> அமைப்பும், அதனை முன்னெடுத்து நடத்தி வரும் கிரண் சேத்தியின் பணியும்
> பாராட்டிற்குரியவை.
>
> கிரண் சேத்தியின் கல்வி மறுமலர்ச்சி முயற்சிகள் உலக அளவிலும் அடையாளம்
> காணப்பட்டுள்ளது. உலக அளவில் ‘வர்கி அறக்கட்டளை’ (Varkey Foundation) சிறந்த
> ஆசிரியருக்கான விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறந்த ஆசிரியர்
> விருதுக்கான (Global Teacher Prize in the Global Education & Skills Forum
> 2015) இறுதிப்பட்டியலில் ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்தவர்களில் முதல்
> பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளார் கிரண் சேத்தி. இந்தப் பரிசு, தங்களது
> தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிகச் சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியருக்கே
> வழங்கப்படும். ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவோர்க்காக வழங்கப்படும் இந்தப் பரிசு
> ஒப்பீட்டில் நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படக்கூடிய ஒன்று என்பதும், இதற்காக
> சுமார் 5000 ஆசிரியர்கள் வரை அனைத்துலக அளவில் பரிந்துரைக்கப்படுவர் என்பதும்
> இதன் சிறப்பு.
>

தேமொழி

unread,
Oct 4, 2015, 10:45:12 PM10/4/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, arvind.thi...@mail.wvu.edu

அக்டோபர் 5, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு முனைவர் அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி அவர்கள்


வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் ஆய்வுப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி (http://www.mae.cemr.wvu.edu/faculty/faculty-detail.php?id=1069&type=faculty) அவர்கள். வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த மோசடியை வெளியுலகிற்குக் காட்டிக் கொடுத்த ஆய்வறிக்கையை வெளியிட்டதற்காக இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள், அவருக்கு நன்றிகள் உரித்தாகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம்நிலைப் பொறிமுறைப் பொறியியல்(B.E. Mechanical Engineering) பட்டம் பெற்ற அரவிந்த், அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். ஊர்திகளின் மாசுக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இவரின் ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகள், ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த குற்றத்தை வெளியுலகிற்குக் காட்டிக் கொடுத்தது. இதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஊர்திகளில் மாசுக்கட்டுப்பாட்டுச் சோதனைகளின் பொழுது ஆய்வாளர்களை ஏமாற்றுவதற்காக ஊர்திகளில் பொருத்தியிருக்கும் மென்பொருள் பற்றி அமெரிக்க அரசு கண்டறிந்தது. அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (U.S. Environmental Protection Agency) வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மீது தொடுத்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட வோல்க்ஸ்வேகன் நிறுவனம், 11 மில்லியன் வண்டிகளில் மென்பொருள் நிறுவி, அரசை ஏமாற்றியதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் விளைவாக வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகியுள்ளார், பதினெட்டு பில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தவிருக்கும் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் பற்றிய உண்மை தெரிந்தவுடன், பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இப்பொழுது பிற வாகன நிறுவனங்களும் எச்சரிக்கையடைந்துள்ளன.

முனைவர் அரவிந்த் அவர்களின் ஆய்வும் அதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் குற்றம் வெளிப்பட நேர்ந்த நிகழ்வுகள் பற்றிய மிகச் சுருக்கமாக அறிமுகம்.


மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மாற்று எரிபொருள் ஆய்வு மையம் (Center for Alternative Fuels, Engines and Emissions - CAFEE) ஊர்திகளின் மாசு கட்டுப்பாட்டு சோதனைகள் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு அத்துறையில் முன்னணி வகிக்கிறது. இந்த மையத்தில் ஒரு ஆய்வாளராகப் பணியாற்றும் முனைவர் அரவிந்துடன், மார்க் பேஷ்க், கிரிகரி தாம்ப்சன், டேனியல் கார்டர், ஹேமந்த் கப்பண்ணா (Marc Besch, Gregory Thompson, Daniel Carder, and Hemanth Kappanna) ஆகியோர் அடங்கிய ஐவர் குழு , கலிஃபோர்னியா மாநில அரசு அளித்த ஆய்வுநிதி பெற்று அந்த மாநிலத்தின், கண்டிப்பான சூழ்நிலை மாசுக்கட்டுப்பாடு விதிகளை ஊர்திகள் கடைப்பிடிக்கின்றனவா என்ற ஆய்வில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் இம்மாநிலத்தின் ஊர்திகள் மாநில அரசு விதிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குள் இருந்தால் மட்டுமே அவற்றை இயக்க அனுமதி அளிக்கப்படும். அந்தச் சோதனைகளில், ஆய்வக சூழலில் கிடைக்கும் சோதனை முடிவுகள், வண்டிகள் சாலைகளில் இயக்கப்படும் பொழுதும் அதே அளவில் அமைந்துள்ளனவா என்ற சோதனையை மேற்கொண்டனர் இந்த ஆய்வுக் குழுவினர்.




முனைவர் அரவிந்தும் துணை ஆய்வாளர் மார்க் பேஷ்க்கும், வோல்க்ஸ்வேகன் ஊர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்து, தங்கள் சோதனைக் கருவியை அதில் பொருத்தி, கலிஃபோர்னியாவில் இருந்து வாஷிங்டன் மாநிலம் வரை சுமார் 2,500 மைல்கள் ஓட்டி சோதனை செய்தனர். அப்பொழுது வெளிப்படும் நைட்ரஜன் ஆக்சைட்களின் (Nitrogen oxides - NOx) அளவு, அமெரிக்க அரசு அனுமதித்த குறைந்த அளவு விதிக்கும் மேலாகா 35 மடங்கு வரை அதிகம் இருப்பது தெரிய வந்தது. சோதனைக் கருவிகளின் குற்றமோ எனச் சந்தேகித்து ஆராய்ந்ததில், அதிலும் குறை இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. ஆய்வக சோதனையில் தேறிய ஊர்திகள் எவ்வாறு சாலைப்பயணத்தில் இதுபோன்ற மாறுபட்ட முடிவைக் கொடுக்க முடிகிறது என்பதைத் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கண்டறியாவிட்டாலும், தங்கள் முடிவை முனைவர் அரவிந்த் குழு ஆய்வறிக்கையாக வெளியிட்டது. இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது 2013 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில். இவர்களுக்கு நிதிவழங்கி ஆய்வை முன்னெடுத்த 'இண்டர்நேஷனல் கவுன்சில் ஆன் கிளீன் டிரான்ஸ்போர்ட்டேஷன்' (International Council on Clean Transportation) ஆய்வின் முடிவுகளை அமெரிக்க அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.




இது போன்று தனிப்பட்ட பல்கலைக்கழக ஆய்வறிக்கைகளில் வோல்க்ஸ்வேகன் ஊர்திகள் அரசு நிர்ணயித்த மாசுக்கடுப்பாட்டு விதிகளை மீறுவதைக் கவனித்து வந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை அடைந்தது. இதற்கு முன்னரே 1973, 1998 ஆண்டுகளிலும் ஏமாற்று வேலைகள் செய்து வோல்க்ஸ்வேகன் பிடிபட்டிருந்தால், அரசு மேலும் ஆராயத் தொடங்கியது. முடிவில் ஆய்வக சோதனையில் ஊர்தியின் ஸ்டியரிங் வீல் அசையாமல் இருக்கும்பொழுது வண்டியின் இயந்திரம் மட்டும் தொடர்ந்து இயங்கினால், அது ஊர்தி சோதனைக்குள்ளாகும் நேரம் என மென்பொருள் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு மாசுக்கட்டுப்படுத்தும் பாகங்களை இயங்கச் செய்து நைட்ரஜன் ஆக்சைட்களின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் நிறுவனம் வண்டிகளை வடிவமைத்து வைத்திருக்கும் உண்மை வெளியாகியது. இது அரசை ஏமாற்றும் மிகப்பெரிய குற்றச் செயல் மட்டுமல்ல, சுற்றுப்புறச் சூழல் மீதும், மனித நலத்திலும் அக்கறையற்ற செயலும் ஆகும். மாசுநிறைந்த காற்றைச் சுவாசிக்கும் பொழுது ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் அதிகரிக்க வழிவகுக்கும்.

ஏன் ஊர்தி சோதனைக்குள்ளாகும் பொழுது மட்டும் மாசுக்கட்டுப்பாடு திட்டம் இயங்க வேண்டும் என்ற கேள்விக்கு ... வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் பேராசை என்பதே பதில். பெட்ரோலுக்குப் பதில் மாற்று எரிபொருளாக டீசல் பயன்படுத்தும் ஊர்திகளை அதிகரிக்கும் எண்ணம் சந்தையில் பரவலாகத் தோன்றியது. அமெரிக்கர்கள் விரும்பும் வண்ணம் பெரிய வண்டிகளையும், அதே சமயம், அமெரிக்க அரசு விதிகள்படி குறைந்த எரிபொருளில் அதிக மைல்கள் கொடுக்கும், டீசலில் ஓடும் வண்டிகளைத் தயாரித்து விற்றால் அமெரிக்க சந்தையைப் பிடித்துவிடலாம் என்பது வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் திட்டம். ஆனால் அமெரிக்க அரசு நிர்ணயித்த மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வண்டி இயங்க நேர்ந்தால், குறைந்த எரிபொருளில் அதிக மைல்கள் ஓடாது. வண்டியை இயக்க அதிகம் செலவானால் ஊர்திகளும் விற்பனையாகாது. இதற்கு வழி, சரியான தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதாக இருக்கும். ஆனால் வோல்க்ஸ்வேகன் நிறுவனம், அதிக செலவைக் கூட்டி, ஊர்தியின் விலையை அதிகரிக்கச் செய்யும் முறையைத் தவிர்க்கும் நோக்கில் குறுக்கு வழியைக் கண்டுபிடித்தது. அரசு செய்யும் சோதனைகளில் ஆய்வாளர்களின் கண்களில் மண்ணைத்தூவும் வண்ணம் சோதனை நேரங்களில் மட்டும் வண்டிகள் மாசுக்கட்டுப்பாடு திட்டத்திற்கு ஏற்ப இயங்கும். பிற வேளைகளில், சாலைகளில் ஓட்டும்பொழுது வெளியாகும் நைட்ரஜன் ஆக்சைட்களின் அளவைக் கட்டுப்படுத்தும் முறை செயலிழந்து போகுமாறு வண்டிகளை இயக்க மென்பொருள் பொருத்தியது. அதனால் ஊர்தியும் குறைந்த எரிபொருளுக்கு அதிக தூரம் ஓடும். வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த இந்த மோசடி வெளியாகக் காரணமாக இருந்தது முனைவர் அரவிந்தின் ஆய்வறிக்கையே.

மாசுக்கட்டுப்பாட்டைக் குறைப்தற்கும், ஏமாற்றும் நிறுவனத்தின் குற்றம் வெளிப்படவும் உதவியாக இருந்த ஆய்வினை செய்த 32 வயதாகும் முனைவர் அரவிந்த் அவர்களின் ஆய்வுப்பணியைப் பாராட்டி அவரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

_____________________________________________________________________________________________

வல்லமையாளர் முனைவர் அரவிந்தின் கட்டுரை:
The routine study that led to the discovery of the VW scandal
by Arvind Thiruvengadam Oct 01, 2015
http://www.autocarpro.in/news-international/routine-study-led-discovery-huge-scandal-9408

_____________________________________________________________________________________________

Arvind Thiruvengadam:
Research Assistant Professor
Mechanical and Aerospace Engineering
West Virginia University
Morgantown, West Virginia 26506
Email: 
arvind.thi...@mail.wvu.edu
Phone: 304-293-0805
http://www.mae.cemr.wvu.edu/faculty/faculty-detail.php?id=1069&type=faculty
Google+ 
https://plus.google.com/103696045919648975153/
Google.scholar. 
https://scholar.google.com/citations?user=yNpEEDAAAAAJ&hl=en
Linkedin 
https://www.linkedin.com/pub/arvind-thiruvengadam/31/732/644

_____________________________________________________________________________________________

தகவல்களும் படங்களும் கொடுத்து உதவிய தளங்கள்:
How a university lab helped unearth the VW emissions scandal
http://www.autocarpro.in/news-international/university-lab-led-unearthing-vw-emission-scandal-9373#sthash.SEqL1nbL.dpuf


As Volkswagen Pushed to Be No. 1, Ambitions Fueled a Scandal
http://www.nytimes.com/2015/09/27/business/as-vw-pushed-to-be-no-1-ambitions-fueled-a-scandal.html?_r=0


Unexpected VW emissions results catapult WVU researchers to fame
http://www.newsshine.com/us-local-news/west-virginia/business/140060-unexpected-vw-emissions-results-catapult-wvu-researchers-to-fame.html


The Indian-origin scientist who took a test drive, exposed VW
http://www.hindustantimes.com/business/a-long-ride-by-a-tamilian-that-exposed-the-vw-emission-fraud/story-DNB9Px86mMb4Fout6QiokN.html


The Chennai-Born Scientist Who Exposed The Volkswagen Scam
http://www.outlookindia.com/blogs/post/the-chennaiborn-scientist-who-exposed-the-volkswagen-scam/3627/12

_____________________________________________________________________________________________

நன்றி: http://www.vallamai.com/?p=62537

Innamburan S.Soundararajan

unread,
Oct 5, 2015, 10:51:01 AM10/5/15
to vall...@googlegroups.com, மின்தமிழ், arvind.thi...@mail.wvu.edu
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு முனைவர் அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி அவர்களை நவீன ரால்ஃப்
நாடெர் என்று பாராட்டுகிறேன்

தேமொழி

unread,
Oct 12, 2015, 3:15:13 AM10/12/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

அக்டோபர் 12, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு லட்சுமி  அவர்கள்

2015 Winner - Lakshmi Moorthy2

வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், அக்டோபர் 8, 2015 அன்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின், பெர்க்லி நகரில் நடைபெற்ற விழாவில், சீக்காலஜி என்ற கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் 2015 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான சீக்காலஜி பரிசைப் பெற்ற மீனவர் திருமிகு லட்சுமி அவர்கள்.

2015 Winner - Lakshmi Moorthy

இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைக் கிராமம் சின்னப்பாலத்தைச் சேர்ந்த 46 அகவை நிரம்பிய மீனவர் லட்சுமி அவர்கள், கடந்த நாற்பதாண்டுகளாகக் கடற்பாசி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருபவர். மீனவச் சிறுமிகள் சிறுவயதிலிருந்தே கடற்பாசி சேகரிப்பில் பெற்றோர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இராமேஸ்வரம், பாம்பன், சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த 25 கிராமங்களின், சுமார் 2,000 த்திற்கும் மேற்பட்ட மீனவமகளிரின் வாழ்வாதாரம் மன்னார் வளைகுடாப்பகுதியில் மருக்கொழுந்து, கட்டக் கோரை, கஞ்சிப் பாசி, பக்கடா பாசி வகைகளை, நீரில் மூழ்கி, இரண்டு நிமிடங்களுக்கு மேல் மூச்சை அடக்கிச் சேகரித்து விற்று வருவது.

மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பகத் தீவுகளான சிங்கில் தீவு, குருசடை தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவு ஆகியப் பகுதிகளில் பவளப்பாறைகளுடன், கடற்பாசிகளும் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு இவர்களால் சேகரிக்கப்படும் இவ்வகை கடற்பாசிகள் விண்வெளி வீரர்களுக்குத் தயாரிக்கப்படும் உணவு தயாரிப்பதில் அடிப்படைத் தேவையான உணவுப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல மீனவமகளிருக்கு வாழ்வாதாரமாக இருக்கும் கடற்பாசி சேகரிப்பு, 2002 ஆண்டிலிருந்து இந்திய அரசால், கடல்வளம் பாதுகாக்கும் நோக்கத்தைக் காரணம் காட்டி தடை செய்யப்பட்டது. ஆழ்ந்த ஆய்வின்றி, மீனவ மகளிரின் வாழ்வாதாரத்திற்கும் ஒரு மாற்றுவழி காட்டாது எடுத்த அவசர முடிவினால் மீனவ மகளிர் பாதிக்கப்பட்டனர். கடற்பாசி சேகரிக்க செல்லும் மீனவ மகளிரின் படகுகள், கையூட்டு பெற நினைக்கும் ஊழல் அரசு அதிகாரிகளால் கைப்பிடிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கில் அபராதங்களும் விதிக்கப்பட்டதுடன், மீனவமகளிரும் சில அரசு அதிகாரிகளால் மரியாதைக் குறைவாகவும் நடத்தப்பட்டனர்.

லட்சுமி இவ்வாறு பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து, அவர்களது கோரிக்கையை அரசிடம் எடுத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்களது பாரம்பரிய கடற்பாசி சேகரிக்கும் முறை எவ்வாறு கடல்வளத்தைப் பாதிப்பதில்லை என்று கடல் ஆய்வாளர்களுக்கும், அரசுக்கும் எடுத்துக் கூறி, பாரம்பரிய முறையில் பாசி சேகரிக்கும் முறை குறித்து அவர்களுக்குக் கொடுத்த விளக்கங்களுக்குப் பிறகு, குறிப்பிட்ட காலங்களில் கடற்பாசி சேகரிக்கலாம் என்ற அனுமதியும், பணியை முறைப்படுத்தி பயோமெட்ரிக் அடையாள அட்டைகளும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. மீனவமகளிரின் வாழ்வாதாரத்தை மீட்க உதவியதுடன் இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு முயற்சிகளால் மன்னார்வளைகுடா கடல்வளப் பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது. லட்சுமியின் தன்னார்வப்பணி பரிந்துரைமூலம் சீக்காலஜி அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

அரசு சாராத அறக்கட்டளை அமைப்பான சீக்காலஜி அமைப்பினால், 1992 ஆம் ஆண்டு முதல் கடல்சார்சுற்றுச்சூழல் மற்றும் கடல்வள பாதுகாப்பிற்காகவும், கலாச்சார பாதுகாப்பிற்காகவும் தனி நபருக்காக வழங்கப்படும் சீக்காலஜி விருதினைப் பெறும் முதல் இந்தியப்பெண்மணி லட்சுமி ஆவார். இவரது கடல்வள பாதுகாப்பு முயற்சிக்காகவும், மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பேற்று, மீனவ மகளிருக்கு வாழ்வாதாரப் பணியை மீட்டுத் தர இவர் மேற்கொண்ட நடவடிக்கைக்காகவும் இவர் சீக்காலஜி விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதையும், சான்றிதழையும், ஆறரை லட்சம் ரூபாய் (பத்தாயிரம் டாலர்) மதிப்புள்ள பரிசுத் தொகையையும் சீக்காலஜி அமைப்பின் நிறுவனர் டாக்டர் பால் ஆலன் காக்ஸ் அவர்கள் லட்சுமிக்கு வழங்கி அவரைச் சிறப்பித்தார்.

2015 Winner - Lakshmi Moorthy1

விருது மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை மீனவ குழந்தைகளின் கல்விக்கும், மீனவ மகளிர் கூட்டமைப்பு செயல்பாட்டிற்கும் வழங்கவிருக்கிறார் லட்சுமி. மீனவ மகளிரின் உழைப்பிற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்ததில் மகிழும் லட்சுமி, மீனவ மகளிர் சேகரிக்கும் பாசிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்தால் மீனவமகளிரின் வாழ்க்கை நிலை உயரும் எனக் கருதுகிறார்.

திருமிகு லட்சுமியின் கடல்வள பாதுகாப்பு முயற்சிக்காகவும், மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பேற்று, மீனவ மகளிருக்கு வாழ்வாதாரப் பணியை மீட்டுத் தர இவர் மேற்கொண்ட நடவடிக்கைக்காகவும் இவரை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமை மின்னிதழ் குழுமத்தினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

_____________________________________________________________________________________________

தகவல் பெற்ற தளங்கள்:

http://www.seacology.org/about/seacology-prize/

http://tamil.thehindu.com/todays-paper/tp-tamilnadu/ராமேசுவரம்-மீனவப்-பெண்ணுக்கு-அமெரிக்க-கடல்சார்-விருது/article7743942.ece

http://tamil.thehindu.com/society/women/முகம்-நூறு-கடல்பாசியால்-கிடைத்த-அமெரிக்க-விருது/article7620004.ece

http://www.thehindu.com/news/national/tamil-nadu/seaweed-collector-wins-environment-award/article7613833.ece

http://keelakaraitimes.com/award-ceremony-in-california/

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=164786

http://www.viduthalai.in/home/viduthalai/women/108353-2015-09-08-11-35-57.html

http://news.webindia123.com/news/Articles/India/20151006/2695535.html

http://keelakaraitimes.com/seacology-award/

http://newstodaynet.com/tamil-nadu/tn-woman-gets-us-prize-protecting-sea-life

படங்கள் பெற்ற தளங்கள்:

http://www.seacology.org/about/seacology-prize/

http://keelakaraitimes.com/award-ceremony-in-california/

_____________________________________________________________________________________________

நன்றி  வல்லமை: http://www.vallamai.com/?p=62790

Innamburan S.Soundararajan

unread,
Oct 12, 2015, 5:20:19 AM10/12/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்
மீனவர் திருமிகு லட்சுமி அவர்களை பாராட்டியதால் வல்லமைக்குப் பெருமை.
அவருடைய முகத்தில் ஒரு சாதனையாளரின் களை தென்படுகிறது. வாழ்த்துக்கள்.

2015-10-12 12:45 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
> அக்டோபர் 12, 2015
>
> இவ்வார வல்லமையாளர்
> வல்லமைமிகு லட்சுமி அவர்கள்
>
> வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், அக்டோபர் 8, 2015
> அன்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின், பெர்க்லி நகரில் நடைபெற்ற
> விழாவில், சீக்காலஜி என்ற கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் 2015
> ஆம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான சீக்காலஜி பரிசைப் பெற்ற மீனவர் திருமிகு
> லட்சுமி அவர்கள்.
>

Oru Arizonan

unread,
Oct 12, 2015, 3:54:38 PM10/12/15
to vallamai


2015-10-12 0:15 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

//அக்டோபர் 12, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு லட்சுமி  அவர்கள்

2015 Winner - Lakshmi Moorthy2

வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், அக்டோபர் 8, 2015 அன்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின், பெர்க்லி நகரில் நடைபெற்ற விழாவில், சீக்காலஜி என்ற கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் 2015 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான சீக்காலஜி பரிசைப் பெற்ற மீனவர் திருமிகு லட்சுமி அவர்கள்.//

எங்கள் பாண்டிநாட்டுத் தமிழ்ப்பெண்மணி வல்லமையாளராகத் தேர்ந்தேடுக்கப்பட்டதுபற்றி ஒரு பாண்டிய்நாட்டுத் தமிழனாக மிக்கமகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடனும், பெருமையுடனும்,
ஒரு அரிசோனன்

தேமொழி

unread,
Oct 18, 2015, 10:29:10 PM10/18/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

அக்டோபர் 19, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. சேசாத்திரி சிறீதரன்  அவர்கள்

Seshadri Sridharan2

வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி சிறீதரன் அவர்கள். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகள் செம்மொழி தகுதிச்சான்றினை இந்திய அரசிடம் இருந்து பெறும் பொருட்டு சமர்ப்பித்த கல்வெட்டுகளை இவர் மறுஆய்வு செய்துள்ளார். அதன் அடிப்படையில், மாற்றுக்கோணத்தைக் காட்டும் கட்டுரைகளை வல்லமை கூகுள் குழுமத்தில் (https://groups.google.com/forum/?fromgroups#!forum/vallamai) எழுதியதற்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள், 2000 ஆண்டு வாக்கில், அந்நாளில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படாமல் இருக்க நேர்ந்ததன் காரணத்தை விளக்க முற்பட்டபொழுது (Statement on the Status of Tamil as a Classical Language, Professor of Tamil at the University of California, Berkeley, April 11, 2000), இந்திய அரசியல் சூழ்நிலையும், தமிழுக்குச் செம்மொழி தகுதி வழங்கினால் பிற இந்திய மொழிகளும் தங்கள் மொழிக்காக வற்புறுத்தும் நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் என்று கீழ்வருமாறு தனது மடல் ஒன்றில் (http://southasia.berkeley.edu/tamil-classes) குறிப்பிட்டிருந்தார்…

“In trying to discern why Tamil has not been recognized as a classical language, I can see only a political reason: there is a fear that if Tamil is selected as a classical language, other Indian languages may claim similar status. “

இந்திய மொழிகளில் செம்மொழித்தகுதிகள் கொண்டவை தமிழும் சமஸ்கிருதமும் மட்டுமே என்பது பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் கருத்து. அவர் குறிப்பிட்ட “அரசியல்” என்ற காரணம் பின்னாளில் பொய்க்கவில்லை. தமிழுக்குச் செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதும், தமிழில் இருந்து கிளைத்த பிற திராவிட மொழிகளும் தங்கள் மொழிக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில் செம்மொழி தகுதி கேட்டு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கத் துவங்கின.

இதைத் தொடர்ந்து, ஒரு மொழிக்கு செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றியது. அந்த நெறிமுறைகளின்படி, ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. இந்த வரைமுறைகளின் அடிப்படையில் இதுவரை தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ளன.

தங்கள் மொழியின் பழமைக்குச் சான்றாக கன்னட மொழியினர் “ஹல்மிடி” கல்வெட்டினையும், தெலுங்கு மொழியினர் “கலமல்லா” கல்வெட்டினையும் சமர்ப்பித்து தங்களது மொழிகளுக்குச் செம்மொழி தகுதியினைப் பெற்றனர்.

இதற்கான சான்றுகளையும், அதன் மேல் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி அவர்கள் எழுப்பும் கேள்விகளையும் இனி சுருக்கமாக கீழே காணலாம் (கருத்துக்களை விளக்க இயன்றவரை அவர் எழுத்துகள் கையாளப்பட்டுள்ளன). அக்கட்டுரைகளின் முழு வடிவங்களையும் கீழ்காணும் சுட்டிகளின் வழி சென்று படிக்கலாம்.

செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு 
https://groups.google.com/d/msg/vallamai/iLKZBO5bKsc/_WWdsK_qBQAJ

செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு 
https://groups.google.com/d/msg/vallamai/GLpn2097IAw/mqMoWM1MAwAJ

Seshadri Sridharan1

கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின்கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது. கல்வெட்டில் காலக் குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை. கதம்பன் ககுஸ்தன் என்ற பெயர் இடம்பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு இக்கல்வெட்டு கி.பி.450 இல் வடிக்கப்பட்டது என்று அறிஞர் முடிவு கொண்டு விட்டனர். இது ஒரு தவறான அணுகுமுறை, என்று கூறும் சேசாத்திரி,

  • இக்கல்வெட்டில் குறிப்பிடும் அரசன் அதே பெயரிலுள்ள பிற்காலத்தவர் என்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன
  • கல்வெட்டில் சமஸ்கிரதம் அதிகம் கலந்துள்ளது, ஆனால் தென்னகத்தில் சமற்கிருத மொழி 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமானது என்பதால் கல்வெட்டின் காலம் கி.பி. 450 என்ற கருத்து அடிபட்டுப் போகிறது
  • கல்வெட்டில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவத புராணக் கருத்துகள் எடுத்தாளப்படுகிறது
  • அத்துடன் கல்வெட்டு குறிப்பிடும் பாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மக்களிடம் பரவியது
  • இக்கல்வெட்டில் காணப்படும் மாபாதகன், மாபாதகம் ஆகிய சொற்கள் இந்தக் கல்வெட்டின் காலத்தை கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு நடுவே அல்லது 11 ஆம் நூற்றாண்டில் வைக்கின்றது
  • கற்கோவில்கள் தென்னகத்தில் பரவிய காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் என்பதால் அக்காலத்தியக் கல்வெட்டாகவே இக்கல்வெட்டு இருக்கும் வாய்ப்புள்ளது

எனவே, மேற்கூறிய காரணங்களால் ஹல்மிடி கல்வெட்டு கன்னடத்திற்குச் செம்மொழி ஆவணமாகக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்ற முடிவிற்கு இட்டுச்செல்கிறது எனக் கூறுகிறார்.

 

அடுத்து, தெலுங்கு மொழியின் பழமைக்குச் சான்றாக, கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது, கி.பி. 575 ஆம் நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்குச் சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர் தெலுங்கு மொழியினர். அக் கல்வெட்டுத் தொடர்பான சேசாத்திரியின் கருத்துகள்,

  • தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 ல் இக்கல்வெட்டின் காலம் குறித்தோ அல்லது எழுத்தமைதி மிகப் பழமையானது என்றோ எந்தக் குறிப்பும் இல்லை
  • கல்வெட்டிலும் காலக் குறிப்பு ஏதும் இல்லை
  • ரேனாட்டு சோழன் தனஞ்சயனின் மெய்க்கீர்த்திகளோ அல்லது ரைவணனின் அரச பின்னணிக் குறிப்புகளோ இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை ஆதலால் இது அரசர் வெட்டிய கல்வெட்டு அல்ல
  • எரிகல் முத்துராஜு புண்ணியகுமார என்ற பெயரில் இன்னொரு அரசனும் இருந்துள்ளான். ஆதலால் பிற்கால அரசர் சிலர் எரிகல் முத்துராஜு என்ற மூதாதையின் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்று கருதுவதே சரி
  • கல்வெட்டு குறிக்கும் தனஞ்சயன், ரேவண் ஆகிய பெயர்கள் புராணப் பெயர்கள். தனஞ்சயன் என்ற பெயர் முதன் முதலாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசர் இயற்றப்பட்ட பாகவத புராணத்தில் தான் இடம் பெறுகிறது. அதற்கு முன்னம் இப்பெயர் பரவியிருக்க வாய்ப்பில்லை
  • பாறைகளைச் செதுக்கி கற்றளிகள் கட்டுவது தென்னிந்தியாவில் முதன்முதலாக 8 ஆம் நூற்றாண்டில் தான் ராசசிம்மப் பல்லவனால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட கல்வெட்டு அல்ல மாறாகக் கற்கோவிலின் ஒரு தூணில் இருபக்கங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு எனும்போது இது 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்க முடியாது 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கல்வெட்டாகத்தான் இருக்க முடியும்
  • மேலும், கல்வெட்டில் இழிந்த குலத்தோர் என்ற குறிப்பு இக்கல்வெட்டின் காலத்தை மேலும் பின்னுக்குத் தள்ளுகிறது. புராண இந்து மதம் பரவிய பின்பு 9 – 10 ஆம் நூற்றாண்டுகளில் தான் பிறப்பு வழி ஏற்றத் தாழ்வுகள் மக்கள் கருத்தில் வேரூன்றின. ஆகவே இக்கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டளவில் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதவே இடம் தருகிறது

எனவே, தெலுங்கைச் செம்மொழி என காட்டற்கு இக்கல்வெட்டிற்குச் சற்றும் தகுதி இல்லை. ஏனெனில் இதனினும் பழமையான தெலுங்கு நடுகல் கல்வெட்டுகள் உள்ளன என்பது கல்வெட்டு பற்றிய சேசாத்திரியின் கருத்து

எனவே, இரு கல்வெட்டுகளும் அவை கூறப்படும் காலத்திற்கு பிற்காலத்தவை, இவை பிற்காலத்தில் கற்கோவில்கள் தோன்றிய பிறகு அவற்றின் பகுதிகள், இவை பிற்காலப் புராணக் கதைகளை கொண்டுள்ளன, பிற்காலத்திய அரசன் பெயர்கள் என்பது கருத்தில் கொள்ளப்படவில்லை, பிற்காலத்தில் மக்களிடம் புழக்கத்திற்கு வந்த கருத்தாக்கங்களை கொண்டுள்ளன என்ற காரணங்களைக் காட்டி, கல்வெட்டுகளின் கால நிர்ணயத்தின் மீது கேள்விகள் எழுப்பி அவற்றின் பழமையை நிராகரிக்கிறார் திரு. சேசாத்திரி.

இவ்வாறு புதிய கோணங்களைக் காட்டி, கல்வெட்டு ஆவணச் சான்றுகளின் காலத்தைப் பற்றிய சிறப்பான கட்டுரைகளை வழங்கியதற்காக, திரு. சேசாத்திரி அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]


நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=63029

bala subramani

unread,
Oct 18, 2015, 10:46:05 PM10/18/15
to vall...@googlegroups.com
எங்கள் நெருங்கிய நடப்பு வட்டத்தில் உள்ள இனிய நண்பரும் ,மதினாணன் ஐயா
அவர்களிடம் எழுத்து பயிற்சி பெற்றப்பின் தனி தமிழ் பற்றலாராகவும்
,துருக்கி மெக்சிகோ ,கொரியா எகிப்து போன்ற பல நாடுகளின் அரசர்
காலநிலையில் முந்து தமிழ் பெயர்கள் இருப்பதை இனம் கொண்டவருமான திரு.
சேசாத்திரி. அவர்களுக்கு உங்கள் விருது பற்றி இப்பொழுது தான் பேசினேன்

மிக்க மகிழ்ச்சி

அவரை பற்றிய முழு குறிப்புகளும் இந்த நேரத்தில் வெளி வர வேண்டும்

கடும் உழைப்பாளி


On 19/10/2015, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
> அக்டோபர் 19, 2015இவ்வார வல்லமையாளர்வல்லமைமிகு திரு. சேசாத்திரி சிறீதரன்
> அவர்கள்
>
> [image: Seshadri Sridharan2]
> <http://www.vallamai.com/wp-content/uploads/2015/10/Seshadri-Sridharan2.jpg>
>
> வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கல்வெட்டு ஆர்வலர்
> *திரு.
> சேசாத்திரி சிறீதரன் *அவர்கள். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகள் செம்மொழி
> தகுதிச்சான்றினை இந்திய அரசிடம் இருந்து பெறும் பொருட்டு சமர்ப்பித்த
> கல்வெட்டுகளை இவர் மறுஆய்வு செய்துள்ளார். அதன் அடிப்படையில்,
> மாற்றுக்கோணத்தைக் காட்டும் கட்டுரைகளை வல்லமை கூகுள் குழுமத்தில் (
> https://groups.google.com/forum/?fromgroups#!forum/vallamai) எழுதியதற்காக
> இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.
>
> கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்
> அவர்கள், 2000 ஆண்டு வாக்கில், அந்நாளில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படாமல்
> இருக்க நேர்ந்ததன் காரணத்தை விளக்க முற்பட்டபொழுது (Statement on the Status
> of Tamil as a Classical Language, Professor of Tamil at the University of
> California, Berkeley, April 11, 2000), இந்திய அரசியல் சூழ்நிலையும்,
> தமிழுக்குச் செம்மொழி தகுதி வழங்கினால் பிற இந்திய மொழிகளும் தங்கள் மொழிக்காக
> வற்புறுத்தும் நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் என்று
> கீழ்வருமாறு தனது மடல் ஒன்றில் (http://southasia.berkeley.edu/tamil-classes)
> குறிப்பிட்டிருந்தார்…
>
> *“In trying to discern why Tamil has not been recognized as a classical
> language, I can see only a political reason: there is a fear that if Tamil
> is selected as a classical language, other Indian languages may claim
> similar status. “*
>
> இந்திய மொழிகளில் செம்மொழித்தகுதிகள் கொண்டவை தமிழும் சமஸ்கிருதமும் மட்டுமே
> என்பது பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் கருத்து. அவர் குறிப்பிட்ட
> “அரசியல்” என்ற காரணம் பின்னாளில் பொய்க்கவில்லை. தமிழுக்குச் செம்மொழி தகுதி
> அறிவிக்கப்பட்டதும், தமிழில் இருந்து கிளைத்த பிற திராவிட மொழிகளும் தங்கள்
> மொழிக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில் செம்மொழி தகுதி கேட்டு இந்திய அரசிடம்
> வேண்டுகோள் விடுக்கத் துவங்கின.
>
> இதைத் தொடர்ந்து, ஒரு மொழிக்கு செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில
> நெறிமுறைகளைப் பின்பற்றியது. அந்த நெறிமுறைகளின்படி, ஒரு மொழியின் பழைய
> இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை
> மிக்கதாய் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. இந்த வரைமுறைகளின்
> அடிப்படையில் இதுவரை தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா
> என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
>
> தங்கள் மொழியின் பழமைக்குச் சான்றாக கன்னட மொழியினர் “ஹல்மிடி”
> கல்வெட்டினையும், தெலுங்கு மொழியினர் “கலமல்லா” கல்வெட்டினையும் சமர்ப்பித்து
> தங்களது மொழிகளுக்குச் செம்மொழி தகுதியினைப் பெற்றனர்.
>
> இதற்கான சான்றுகளையும், அதன் மேல் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி அவர்கள்
> எழுப்பும் கேள்விகளையும் இனி சுருக்கமாக கீழே காணலாம் (கருத்துக்களை விளக்க
> இயன்றவரை அவர் எழுத்துகள் கையாளப்பட்டுள்ளன). அக்கட்டுரைகளின் முழு
> வடிவங்களையும் கீழ்காணும் சுட்டிகளின் வழி சென்று படிக்கலாம்.
>
> *செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு*
> <https://groups.google.com/d/msg/vallamai/iLKZBO5bKsc/_WWdsK_qBQAJ>
> https://groups.google.com/d/msg/vallamai/iLKZBO5bKsc/_WWdsK_qBQAJ
>
> *செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு *
> <https://groups.google.com/d/msg/vallamai/GLpn2097IAw/mqMoWM1MAwAJ>
> <http://www.vallamai.com/wp-content/uploads/2015/10/Seshadri-Sridharan1.jpg>
>
> கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர்
> வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின்கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன்
> மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால்
> 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி
> கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இதன் காலம் கி.பி. 450 என
> அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு
> அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது
> பழங்கன்னடம் எனப்படுகிறது. கல்வெட்டில் காலக் குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை.
> கதம்பன் ககுஸ்தன் என்ற பெயர் இடம்பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு
> இக்கல்வெட்டு கி.பி.450 இல் வடிக்கப்பட்டது என்று அறிஞர் முடிவு கொண்டு
> விட்டனர். இது ஒரு தவறான அணுகுமுறை, என்று கூறும் சேசாத்திரி,
>
> - இக்கல்வெட்டில் குறிப்பிடும் அரசன் அதே பெயரிலுள்ள பிற்காலத்தவர் என்ற
> கருத்து வேறுபாடுகள் உள்ளன
> - கல்வெட்டில் சமஸ்கிரதம் அதிகம் கலந்துள்ளது, ஆனால் தென்னகத்தில்
> சமற்கிருத மொழி 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமானது என்பதால்
> கல்வெட்டின் காலம் கி.பி. 450 என்ற கருத்து அடிபட்டுப் போகிறது
> - கல்வெட்டில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசரால் இயற்றப்பட்ட
> ஸ்ரீமத் பாகவத புராணக் கருத்துகள் எடுத்தாளப்படுகிறது
> - அத்துடன் கல்வெட்டு குறிப்பிடும் பாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள்
> கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மக்களிடம் பரவியது
> - இக்கல்வெட்டில் காணப்படும் மாபாதகன், மாபாதகம் ஆகிய சொற்கள் இந்தக்
> கல்வெட்டின் காலத்தை கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு நடுவே அல்லது 11
> ஆம்
> நூற்றாண்டில் வைக்கின்றது
> - கற்கோவில்கள் தென்னகத்தில் பரவிய காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில்
> என்பதால் அக்காலத்தியக் கல்வெட்டாகவே இக்கல்வெட்டு இருக்கும் வாய்ப்புள்ளது
>
> எனவே, மேற்கூறிய காரணங்களால் ஹல்மிடி கல்வெட்டு கன்னடத்திற்குச் செம்மொழி
> ஆவணமாகக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்ற முடிவிற்கு
> இட்டுச்செல்கிறது எனக் கூறுகிறார்.
>
>
>
> அடுத்து, தெலுங்கு மொழியின் பழமைக்குச் சான்றாக, கடப்பை மாவட்டம் கமலாபுரம்
> வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு
> அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு
> எழுத்தமைதியால் பழமையானது, கி.பி. 575 ஆம் நூற்றாண்டினது என்று முடிவு
> செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்குச் சான்று ஆவணமாகக்
> காட்டியுள்ளனர் தெலுங்கு மொழியினர். அக் கல்வெட்டுத் தொடர்பான சேசாத்திரியின்
> கருத்துகள்,
>
> - தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 ல் இக்கல்வெட்டின் காலம் குறித்தோ
> அல்லது எழுத்தமைதி மிகப் பழமையானது என்றோ எந்தக் குறிப்பும் இல்லை
> - கல்வெட்டிலும் காலக் குறிப்பு ஏதும் இல்லை
> - ரேனாட்டு சோழன் தனஞ்சயனின் மெய்க்கீர்த்திகளோ அல்லது ரைவணனின் அரச
> பின்னணிக் குறிப்புகளோ இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை ஆதலால் இது அரசர்
> வெட்டிய
> கல்வெட்டு அல்ல
> - எரிகல் முத்துராஜு புண்ணியகுமார என்ற பெயரில் இன்னொரு அரசனும்
> இருந்துள்ளான். ஆதலால் பிற்கால அரசர் சிலர் எரிகல் முத்துராஜு என்ற
> மூதாதையின்
> பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்று கருதுவதே சரி
> - கல்வெட்டு குறிக்கும் தனஞ்சயன், ரேவண் ஆகிய பெயர்கள் புராணப் பெயர்கள்.
> தனஞ்சயன் என்ற பெயர் முதன் முதலாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண
> வியாசர்
> இயற்றப்பட்ட பாகவத புராணத்தில் தான் இடம் பெறுகிறது. அதற்கு முன்னம்
> இப்பெயர்
> பரவியிருக்க வாய்ப்பில்லை
> - பாறைகளைச் செதுக்கி கற்றளிகள் கட்டுவது தென்னிந்தியாவில் முதன்முதலாக 8
> ஆம் நூற்றாண்டில் தான் ராசசிம்மப் பல்லவனால் தொடங்கி
> வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட கல்வெட்டு அல்ல
> மாறாகக் கற்கோவிலின் ஒரு தூணில் இருபக்கங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு
> எனும்போது இது 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்க முடியாது 8 ஆம்
> நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கல்வெட்டாகத்தான் இருக்க முடியும்
> - மேலும், கல்வெட்டில் இழிந்த குலத்தோர் என்ற குறிப்பு இக்கல்வெட்டின்
> *நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=63029*

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 18, 2015, 11:43:25 PM10/18/15
to vallamai
திரு சேசாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

seshadri sridharan

unread,
Oct 19, 2015, 6:59:00 AM10/19/15
to vall...@googlegroups.com
வல்லமையாளரைத் தேர்ந்தெடுக்கும் வல்லமையாளருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எனக்கு வல்ல தகுது உள்ளதா எனத் தெரியாது ஆனால் உமது இந்த ஊக்கம் பல வல்லாளரை உலகிற்கு வெளிக்காட்டும் என்பது திண்ணம். 

எனை வாழ்த்திய அன்பு உள்ளத்தோர் அனைவரும் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.

அகலன்   

Megala Ramamourty

unread,
Oct 19, 2015, 8:10:15 AM10/19/15
to vallamai, மின்தமிழ்
இவ்வார வல்லமையாளராய்த் தெரிவாகியுள்ள அருமை நண்பரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான திரு. சேசாத்திரி ஸ்ரீதரன் அவர்களுக்கு என் மனம்நிறைந்த பாராட்டுக்கள்!

இன்னும் பல விருதுகளை நீங்கள் வெல்லவேண்டும் ஐயா!

அன்புடன்,
மேகலா

--

seshadri sridharan

unread,
Oct 19, 2015, 12:33:25 PM10/19/15
to vall...@googlegroups.com
2015-10-19 17:40 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
இவ்வார வல்லமையாளராய்த் தெரிவாகியுள்ள அருமை நண்பரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான திரு. சேசாத்திரி ஸ்ரீதரன் அவர்களுக்கு என் மனம்நிறைந்த பாராட்டுக்கள்!

இன்னும் பல விருதுகளை நீங்கள் வெல்லவேண்டும் ஐயா! - மேகலா

வாழ்த்துக்கு நன்றி மேகலையாரே 

தேமொழி

unread,
Oct 26, 2015, 12:59:37 AM10/26/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, jeya...@gmail.com

அக்டோபர் 26, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள்

Chokkalingam L

வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும், அத்துடன் மற்றுமொரு விருதாக, “அக்னி சிறகுகள் அறக்கட்டளை” வழங்கிய நல்லாசிரியர் விருதினையும் சென்ற வாரத்தில் பெற்ற திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், கல்வியில் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தும் வகையில் அவர் ஆற்றிவரும் தொடர் முயற்சிகளுக்காக வல்லமை இதழ் சார்பில் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

- அக்னி சிறகுகள் அறக்கட்டளை வழங்கிய நல்லாசிரியர் விருது
– 2015 ஆண்டுக்கான தினமலர் லட்சிய ஆசிரியர் விருது
– 2015 ஆண்டுக்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது
– கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் தேர்வு
– ஆனந்த விகடனில், கலாமின் காலடிச்சுவட்டில் களத்தில் 100 இளைஞரெனத் தேர்வு
– சுட்டி விகடன் வழங்கிய கனவு ஆசிரியர் என்ற பாராட்டு
– நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ஆனந்த விகடன் குழுமம் இணைந்து செயல் பட உள்ள அறம் செய விரும்பு திட்டத்தில் சேவை செய்ய நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களால் தேர்வு,
எனக் கடந்த ஆண்டில் மட்டும் இவர் பெற்ற பாராட்டு மற்றும் விருதுகளின் பட்டியல் வளர்கிறது. அந்த வரிசையில் வல்லமை இதழின் வல்லமையாளர் விருதும் சேர்கிறது.

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் அவர்கள் புதியதலைமுறை வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்காக தலைமை ஆசிரியர் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல்

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் அவர்கள் புதியதலைமுறை வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்காக தலைமை ஆசிரியர் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல்

திரு. லெ. சொக்கலிங்கமும், இவரது ஆசிரியர் குழுவினரும் மாணவர்களின் கல்வியில் காட்டும் அக்கறை மற்றும் சிறப்புப் பயிற்சிகளினாலும், இவரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும், முயற்சிகளினாலும் இப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களையும் விஞ்சும் வண்ணம் பலபோட்டிகளில் வெற்றிபெற்று வருகிறார்கள். இப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறம் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணமிருக்கும் சாதனைகள், ஒப்பீட்டில் சிறப்புக் கவனிப்பிற்காக நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் எந்த வகையிலும் சளைத்ததாக இல்லை.

- கல்வியை அதற்குரிய அனுபவத்தோடு கற்கும்போது, வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் அது மறக்காது
– கல்வி கற்பது வகுப்பறைக்குள் மட்டுமல்ல, மாணவர்களின் கல்வியை வகுப்பறைக்குள்ளேயே முடக்கிவிடாமல், வகுப்பறைக்கு வெளியேயும் அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கத் தேவை இருக்கிறது

என்ற தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியை வழி நடத்திச் செல்கிறார் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள்.

அரசு உதவி பெறும் பள்ளியான தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, 1934 ம் ஆண்டு (இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் முன்னரே) தேவகோட்டை மக்களின் கல்வி வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு துவங்கப்பட்டது. பின்தங்கிய சமுதாய மாணவர்களின் கல்வி, மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களின் கல்வி நலனுக்குக்காவும் துவக்கப்பட்ட பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவ சமுதாய இன மக்கள், ஊர் ஊராய் சென்று குறி சொல்லும், ஜோசியம் பார்க்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவர்கள், இலங்கை அகதிகள் முகாம் மாணவர்கள் என அனைவரையும் அவர்களின் அவர்களது இருப்பிடத்தில் நேரடியாகச் சந்தித்து இப்பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

Chokkalingam Lakshmanan5

கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளைப் பள்ளியிலும், களப்பயணமாக புத்தக திருவிழா, அஞ்சலகம், வங்கி, நூலகம், அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தைப் புதுமையாக்கி வருகின்றார்கள். திருக்குறள், அபிராமி அந்தாதி போன்ற இலக்கியங்கள் வகுப்பறைப் பாடங்களாக முடிந்துவிடாமல், இசையோடு கூடிய நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலமும் பயிற்றுவிக்கப்படுகிறது.

தமிழக புள்ளியியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ .ஆ.ப., தேவகோட்டை உதவி கலெக்டர் சிதம்பரம், கணேசன், தமிழ்நாடு மின்சார துறை பொறியாளர் சந்திரசேகர், பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி, திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம், தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ் கோவன் போன்ற பல்வேறு துறைகளின் வல்லுநர்களைப் பள்ளிக்கு அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதுடன், மாணவர்கள் அவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று தங்களது அறிவை விரிவாக்கிக் கொள்ளவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் மாணவர்களும் தயக்கமின்றி கலந்துரையாடல்களில் பங்கு பெறுகிறார்கள்.

மாதம் ஒரு தலைப்பின் கீழ், ஒவ்வொருவாரமும் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவியம், மனக்கணக்கு, புதிர்கணக்கு, வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவதுடன், ஒவ்வொரு மாதமும் பாடத்தில் வினாடி வினா போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்படுகின்றன. வெற்றி பெற்றோருக்கு வாய்ப்பு ஒருமுறை மட்டுமே என்ற திட்டத்தினால் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் மாணவர்களுக்கும் உணர்த்தப்படுகிறது.

இது போன்ற தொடர் போட்டிகளும் பயிற்சிகளும் மாணவர்களை மேலும் பல போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கிறது. இதனால், ஊடகங்கள் நடத்தும் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பலர் தன்னம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் பங்கேற்று சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்று வருகிறார்கள். அன்றாடங்காய்ச்சியான நிலையில் வாழும் குடும்பங்களின் மாணவர்களுக்காக விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களே தங்கள் மாணவர்களை மற்ற ஊர்களில் நடக்கும் போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று பங்கேற்க உதவி வருகிறார்கள்.

Chokkalingam Lakshmanan1-2

மத்திய அரசின் அஞ்சல் துறையின் ஓவியப் போட்டி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பேச்சுப் போட்டி, அறிவியல், பாடல் ஒப்புவித்தல், கலைநிகழ்ச்சி போட்டிகள், ஊடகங்கள் நடத்தும் கதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் என இப்பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்டுவது பல ஊடகச் செய்திகளாகவும் வெளிவருகின்றன.

                               Chokkalingam Lakshmanan3aChokkalingam Lakshmanan3b

தங்கள் பள்ளியின் கற்பித்தல் முறையை விளக்கும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், “மாணவர்கள் வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் கல்வி, வாழ்க்கையோடு தொடர்புடையது. வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியது. மாணவர்கள் ஏட்டுப் படிப்பிலேயே கூட்டுப் புழுக்களாய் சுருங்கிவிடாமல், முழுமையான அறிவு பெற்றவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை அதில் பங்கேற்கச் செய்கிறோம். இதனால் மாணவர்களின் அறிவு, திறமை வளர்கிறது. அதுமட்டுமல்ல, பிறரிடம் பழகுவதற்கு அவர்கள் கூச்சப்படுவதில்லை” என்று தனது செய்தி ஒன்றில் குறிப்பிடுகிறார்.

மாணவர்களின் கல்வியில் சிறந்த அக்கறை கொண்டு செயலாற்றும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

_______________________________________________________

ஊடகங்களில் வெளியான சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி பற்றிய செய்திகள் ஒருசில:

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி 1ம் ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி

வாசம் வீசும் வகுப்பறை! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109185

கோணங்கள் கற்றல்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109196

ஓட்டிக்கொண்டே படிக்கலாம்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109792

புதிய உருவம் அறிவோம்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108797

ஓவியத்தில் அறிவோம் இரட்டுற மொழிதல்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108783

கல்வி… வகுப்பறைக்குள் மட்டுமல்ல! – தினமணி: 27 June 2015

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி – தினமணி: 31 May 2015

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் கற்பித்தலில் புதுமை – தினத்தந்தி நாளிதழின் இளைஞர் மலர்: 13 June 2015

_______________________________________________________

To Contact:
Mr. L. Chokkalingam, M.Sc, M.Phil, B.Ed, PGDHRM, BLISc, DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai District
TamilNadu
09786113160.
E-Mail : jeya...@gmail.com

http://www.kalviyeselvam.blogspot.in/

_______________________________________________________

For more Info:
Mr. Chokkalingam Lakshmanan

https://www.facebook.com/chokka.lingam.5815

https://plus.google.com/101382123602736134466/

http://kalviyeselvam.blogspot.com/

_______________________________________________________


நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=63290

வேந்தன் அரசு

unread,
Oct 26, 2015, 10:24:15 PM10/26/15
to vallamai, மின்தமிழ், jeya...@gmail.com
அறிந்திராத வல்லமையாளர்களை அறிமுகம் செய்யும் தேமொழியாருக்கு நன்றி.




--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Oct 27, 2015, 1:52:19 PM10/27/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, jeya...@gmail.com
நன்றி வேந்தே.

இது மறுநாள்... செவ்வாய் அன்று வெளியான செய்தி....

http://tamil.thehindu.com/opinion/letters/ஆர்வம்-கொண்ட-அந்த-மாணவர்கள்/article7809128.ece

Published: October 27, 2015 11:16 ISTUpdated: October 27, 2015 11:16 IST

ஆர்வம் கொண்ட அந்த மாணவர்கள்!

COMMENT   ·   PRINT   ·   &amp;lt;a href="http://tamil.thehindu.com/opinion/letters/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7809128.ece?textsize=large&amp;amp;amp;test=1" title="Large Text Size" style="outline: 0px; text-decoration: none; color: rgb(31, 87, 165);"&amp;gt;T+&amp;lt;/a&amp;gt;&amp;nbsp;&amp;nbsp;·&amp;nbsp;&amp;nbsp;&amp;lt;span class="Apple-converted-space"&amp;gt;&amp;nbsp;&amp;lt;/span&amp;gt;&amp;lt;a href="http://tamil.thehindu.com/opinion/letters/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7809128.ece?textsize=small&amp;amp;amp;test=2" title="Small Text Size" style="outline: 0px; text-decoration: none; color: rgb(31, 87, 165);"&amp;gt;T-&amp;lt;/a&amp;gt;

கடந்த ஞாயிறு அன்று காரைக்குடியில் நடைபெற்ற வாசகர் திருவிழாவில் பங்கேற்ற என் கவனத்தை ஈர்த்தார்கள் - பார்வையாளர்கள் வரிசையில் துறுதுறுவென அமர்ந்திருந்த பள்ளிச் சிறுவர்கள் 11 பேர்.

அவர்கள் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து வந்தவர்கள் என்று அறிந்துகொண்டேன்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் வகுப்புக்கு ஒருவர் என்ற வீதத்தில் ஜெயஸ்ரீ, வெங்கட்ராமன், ஜனஸ்ரீ, அய்யப்பன், கார்த்திகேயன், உமாமகேஸ்வரி ஆகியோரும், ஏழாம் வகுப்பு சார்பில் பரமேஸ்வரி, ராமேஸ்வரி, எட்டாம் வகுப்பு சார்பில் தனம், பூவதி, கண்ணதாசன் என அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.

தங்களது கதை, ஓவியங்களை ‘தி இந்து’வின் மாயாபஜார் இணைப்பிதழில் வெளியிட்டு ஊக்கப்படுத்திவருவதால், வாசகர் திருவிழாவுக்கு உற்சாகமாகக் கிளம்பிவந்ததாக அந்தக் குழந்தைகள் சொன்னபோது வியப்பாக இருந்தது.

பாடத்துக்கு வெளியே சென்று பொது விஷயங்களைப் பற்றி மாணவர்களுடன் பேச ’தி இந்து’ தமிழ் நாளிதழ் உதவிபுரிவதாகச் சொன்னார் அவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியை கலாவதி. இவர்களுடன் ஒரு குழந்தையின் தாய் சித்ரா, மற்றொரு குழந்தையின் பாட்டி சீதாலட்சுமி ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தது என்னை நெகிழவைத்தது.

ராமநாதன், திருப்பத்தூர்.




..... தேமொழி 

தேமொழி

unread,
Oct 27, 2015, 11:47:17 PM10/27/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, jeya...@gmail.com

மாநில அளவில் நடைபெற்ற நியூஸ் 7 சேனலில் வெற்றி பெற்ற பள்ளி மாணவி

  • Wednesday, October 28, 2015, 8:49

prize3

மாநில அளவில் நடைபெற்ற நியூஸ் 7 சேனலில் தனியார் பள்ளிகளுக்கு இணையாகப் போட்டி போட்டு வெற்றி பரிசாக ரூபாய் 5,000 பணமும், சான்றிதழும் பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி முதலாம் ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் சார்பாக நடைபெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா பேச்சு போட்டி மதுரையில் நடைபெற்றது.இதில் இரண்டாவது சுற்றில் 7 மையங்களில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஜூனியர் பிரிவில் மொத்தம் 21 மாணவர்கள் பங்கெடுத்தனர்.

மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி சிறப்பு பரிசாக ரூபாய் 5,000 மும்,சான்றிதழும் வெற்றி பெற்றார்.இப்போட்டியானது சென்னையில் நடைபெற்றது. மாணவியின் தாயார் இதுவரை காரைக்குடியை விட்டு வேறு எங்கும் சென்றதில்லை.

எனவே நியூஸ் 7 தொலைக்காட்சியின் செலவில் இவரது தாயார், ஆசிரியை முத்து மீனாள் ஆகியோர் அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்டார்கள்.இவரது தாயார் வீட்டு வேலை செய்து சொற்ப சம்பளத்தில் வேலை பார்ப்பவர். தந்தைக்கு நல்ல வேலை இல்லை.

இந்த சூழ்நிலையில் ஆசிரியர் உதவியுடன் ( அரசு விடுமுறை அன்று) இம்மாணவி சென்னை சென்று அங்கு வந்திருந்த தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியும் இது போன்று மாநில அளவில் நடை பெற்ற போட்டியில் கலந்து கொண்டது இது தான் முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

prize

prize2

முதன் முதலாக நடைபெறும் போட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்று பரிசுத் தொகை ரூபாய் 5,000 வெற்றி பெற்றது பாராட்ட வேண்டிய ஒன்று.இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு நன்றி.மேடையில் தனது மகள் பரிசு வாங்குவதைப் பார்த்த தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டதில் நானும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

prize4

பள்ளியில் காலை வழிப்பாட்டு கூட்டத்தில் சான்றிதழையும் ,பரிசுத் தொகையும் மாணவியைப் பாராட்டி கொடுத்த போது அவரது தாயார் இது வரை சென்னை வரை செல்லாத என்னை விடுமுறை நாளன்று அழைத்துச் சென்று நல்லபடியாக அழைத்து வந்த ஆசிரியைக்கும்,மிகப்பெரிய வெளிச்சத்தின் நடுவே மிகப்பெரிய கூட்டத்தின் முன்பாக எனது மகள் பேசுவதையும்,பரிசு வாங்குவதையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த தருணத்தை எண்ணி இப்பள்ளிக்கும் , நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

பட விளக்கம் :
மாநில அளவில் நடைபெற்ற நியூஸ் 7 சேனலில் தனியார் பள்ளிகளுக்கு இணையாகப் போட்டி போட்டு வெற்றி பரிசாக ரூபாய் 5,000 பணமும்,சான்றிதழும் பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி பரிசு பெற்றபோது எடுத்த படம். உடன் நியூஸ் 7 சேனல் செய்தி பிரிவு ஆசிரியர் திரு.பகவான் சிங் ,நடுவர்கள் நுருல்லா ,கவிதா முரளீதரன்,சம்பத், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், பயிற்சி அளித்த ஆசிரியை திருமதி.முத்து மீனாள் , மாணவியின் தாயார் திருமதி.மீனாள் .

லெ .சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
______________________________________________

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT


Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.

Sivagangai Dist.
TamilNadu.
09786113160.
E-Mail : jeya...@gmail.com

http://www.kalviyeselvam.blogspot.in/


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=63356





On Tuesday, October 27, 2015 at 10:52:17 AM UTC-7, தேமொழி wrote:
நன்றி வேந்தே.

இது மறுநாள்... செவ்வாய் அன்று வெளியான செய்தி....


Published: October 27, 2015 11:16 ISTUpdated: October 27, 2015 11:16 IST

ஆர்வம் கொண்ட அந்த மாணவர்கள்!


...

தேமொழி

unread,
Nov 1, 2015, 9:27:49 PM11/1/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, nagar...@ssn.edu.in

நவம்பர் 2, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு பேராசிரியர் முனைவர்  டி. நாகராஜன் அவர்கள்

nagarajansir

வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், தமிழில் எழுத்துரை – பேச்சுரை மாற்றிக்கான மென்பொருளை (Tamil text to speech software) உருவாக்கிய, எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் (SSN College of Engineering) தொலைத்தொடர்பு தொழில்நுட்பத் துறையின்(Department of Information Technology) தலைவரும், பேராசிரியருமான முனைவர் டி. நாகராஜன் அவர்கள்.

முனைவர் டி. நாகராஜனும், அவருடைய தலைமையில் அவரது குழுவினரும் உருவாக்கியுள்ள “தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை” அவர் தமிழ் இணையக் கழகத்தில் இயக்கிக் காட்டினார். இந்த மென்பொருளின் செயல்பாட்டை பார்வையிட்ட, தமிழக அரசின் 2013 ஆண்டிற்கான கணித்தமிழ் விருதாளரும், மொழியியல் பேராசிரியருமான முனைவர் ந. தெய்வ சுந்தரம் அவர்கள், உண்மையில் மிக நன்றாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாகயிருந்தது. ஏறக்குறைய 100% சரியாக இயங்குகிறது … மேலும் சிறிது உழைத்தால், மொழியியல் ஆய்வாளர்களுடன் இணைந்து செயல்பட்டால், உச்சரிப்பில் இயல்புத் தன்மையை மேலும் மேம்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முனைவர் டி. நாகராஜன் அவர்களின் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை இயக்கி அதன் செயல்பாட்டை அறிய விரும்புபவர்கள் – http://www.ssn.edu.in/Speech_Lab/tts_demo.html – என்ற தளத்திற்குச் சென்று பயன்பெறலாம். கீழுள்ள படத்தில் காண்பித்துள்ளது போன்று 1. தங்களுக்குத் தேவையான தமிழ் மொழி தகவலைப் பதிவிட்டு, 2. மென்பொருளை இயக்கி (விருப்பமான குரலை – ஆண் குரலையோ, பெண் குரலையோ தேர்வு செய்யலாம்) 3. மென்பொருள் தமிழைப் படிப்பதைக் கேட்கலாம், 4. தேவையானால் அதனை ஒலிக்கோப்பாக தங்கள் கணினியில் சேமித்தும் பயன்பெறலாம்.

dr nagarajan text to speech demo

முனைவர் டி. நாகராஜன் அவர்கள் சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வில் பேச்சொலி மொழியை அடையாளம் காணும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பிறகு தனியார் நிறுவனம் ஒன்றின் ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்றுப் பணியாற்றிய பிறகு, கனடாவின் தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் முதுமுனைவராக (postdoctoral fellow at The National Institute of Scientific Research – INRS, Montreal, Canada) இரண்டு ஆண்டுகள் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அந்த ஆய்வில் தொடர் பேச்சொலியை அடையாளம் காணுவதையும், ஒலியை வகைப்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கண்டறியும் ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இரண்டாண்டு முதுமுனைவர் ஆய்விற்குப் பிறகு, சென்னை எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் பேராசிரியராக பணியில் இணைந்து இன்றுவரை ஆய்விலும், கற்பித்தலிலும், ஆய்வு மாணவர்களை நெறிப்படுத்துவதிலும் பங்கு பெற்று வருகிறார். கருத்தரங்கங்களிலும், ஆய்விதழ்களிலும் தனது ஆய்வுகளைப்பற்றி இதுவரை சுமார் 80 ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார். மேலும், இவர் தற்பொழுது ஈடுபட்டிருக்கும் ஆய்வுகளையும், இவரது ஆய்வுப்பணிகளைப் பற்றி விரிவாக இத்தளத்தில் – http://www.ssn.edu.in/?page_id=1483 – அறிந்து கொள்ளலாம்.

கணினித் தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்கு பெரும் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை உருவாக்கியுள்ளமைக்காக முனைவர் டி. நாகராஜன் அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராக அவரைப் பாராட்டி மகிழ்கிறோம். அவரது ஆய்வுகள் மேலும் வெற்றி பெற வல்லமை இதழின் வாழ்த்துகள்.


**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]


Contact Info:
Dr. T. Nagarajan,
Professor & Head
Department of Information Technology
SSN College of Engineering
Rajiv Gandhi Salai (Old Mahabalipuram Road)
Kalavakkam- 603 110 (off. Chennai)

Phone: 044 27469700 [HOD Extn: 217]
Fax: 044 27469772
Email: nagar...@ssn.edu.in



நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=63475

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 2, 2015, 1:34:51 AM11/2/15
to mintamil, Tamilmanram, உத்தமம், vall...@googlegroups.com, nagar...@ssn.edu.in
வணக்கம்.
இந்த வார வல்லமையாளருக்கு எனது மனம்திறந்த உளம்நிறைந்த பாராட்டுகள்.
http://www.ssn.edu.in/Speech_Lab/tts_demo.html – என்ற தளத்திற்குச் சென்று, மென்பொருளை இயக்கி, எனது சில கட்டுரைகளைப் பேச்சுரையாக மாற்றி  அதன் செயல்பாட்டை கேட்டறிந்து வியந்தேன்.
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலச் சொற்களை  பேச்சுரையாக மாற்றிய ஒரு மென்பொருளை இயக்கிய போது, இவ்வாறு தமிழிலில் செய்ய முடியாது என்றே எண்ணியிருந்தேன்.
ஆனால் பெரும் முயற்சி செய்து ‘தமிழ்ப்பேச்சுரை மாற்றியை‘ உருவாக்கி வெற்றிபெற்றுள்ள வல்லமையாளார் பேராசிரியர் டி.நாகராசன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.  தாங்கள் வாழ்க, தங்களது பணிகள் வளர்க.

அன்பன்
கி.காளைராசன்

2015-11-02 10:01 GMT+05:30 N Deiva Sundaram <ndsun...@hotmail.com>:
" இவ்வார வல்லமையாளர்' என்ற ஒரு பெருஞ்சிறப்பைப் பேரா. டி. நாகராசன் அவர்களுக்கு அளித்துள்ள வல்லமை குழுவினருக்கு
மனமார்ந்த நன்றி.

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்


Date: Sun, 1 Nov 2015 18:27:47 -0800
From: jsthe...@gmail.com
To: mint...@googlegroups.com
CC: vall...@googlegroups.com; nagar...@ssn.edu.in
Subject: [MinTamil] Re: இந்த வார வல்லமையாளர்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 9, 2015, 12:03:44 AM11/9/15
to வல்லமை

நவம்பர் 9, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு பேராசிரியர்  முனைவர் நா. கண்ணன் அவர்கள்

kannan

இந்தியாவின் கொரிய துணைத் தூதரகமும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து “இந்திய – கொரிய கலாச்சார பரிமாற்றம்” என்ற தலைப்பிலான உலகளாவிய ஆய்வுக் கருத்தரங்கை சென்னையில் சென்றவாரம் (நவம்பர் 6, 2015 அன்று) நடத்தின. இக்கருத்தரங்கு நடைபெறத் துவக்கம் முதல் ஒரு வினையூக்கியாக இருந்தவர் பேராசிரியர் முனைவர் நா. கண்ணன் அவர்கள். அக்கருத்தரங்கில் “In search of an ancient relationship between Tamilnadu, India and Kaya Kingdom, Korea: Discovery, research, hopes and questions” என்ற தலைப்பில், “தமிழ் கொரியா ஆகிய இருமொழிகளுக்குமான உறவிற்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொரியாவின் அரசியாக இருந்தவர், இந்தியாவில் இருந்து சென்று கொரிய அரசரை மணந்து கொண்ட, பாண்டியநாட்டு இளவரசியான ஒரு தமிழ்மகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளது” என்ற கருதுகோளில் ஆய்வுரை வழங்கியுள்ளார். இருமொழிகளுக்கும் உள்ள உறவை ஆராயும் அவரது இத்தகைய ஆய்வு முயற்சியைப் பாராட்டும் விதமாக மலேசிய புத்ரா பலகலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் நா. கண்ணன்அவர்களை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டி மகிழ்கிறோம்.

kannan3

தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவரும், நிறுவனர்களில் ஒருவருமான முனைவர் நா. கண்ணன் (நாராயணன் கண்ணன்) அவர்கள், அந்த அறக்கட்டளையின் சார்பில் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளார். முனைவர் நா. கண்ணன் ஒரு அறிவியல் ஆய்வாளர். மதுரைப் பல்கலைக் கழகத்திலும் (Madurai Kamaraj University, India), ஜப்பானிலுள்ள எஹிமே பல்கலைக் கழகத்திலும் ( Ehime University, Japan) வேதியியல் ஆய்வில் ஈடுபட்டு இருமுறை முனைவர் பட்டங்கள் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் ஆகியவற்றில் கொண்ட ஆர்வம் காரணமாக சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துவதால் உயிரினங்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய ஆய்வுகளை நடத்தி வருகிறார். ஜெர்மனியின் ‘கீல்’ பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராகவும், கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றிய முனைவர் நா. கண்ணன், தற்பொழுது மலேசியாவின் புத்ரா பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழ் ஆர்வலரான முனைவர் நா. கண்ணன், தான் நிறுவிய தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) அமைப்பின் மூலம் தமிழ் மரபு சார் இலக்கிய, வரலாற்று, கலை வடிவங்களை எண்ணிம வடிவில் பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொண்ட முன்னோடிகளில் ஒருவர். மதுரைத்திட்டத்தில் ஐரோப்பிய ஒருங்கமைப்பாளராகவும், உத்தமம் அமைப்பின் (உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் – உத்தமம்/ International Forum for Information Technology in Tamil – INFITT) தொன்மை உறுப்பினராக, அதன் ஐரோப்பிய கிளையின் தலைவராகவும் செயல்பட்டு இருக்கிறார்.

கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல் என படைப்புகள் பல உருவாக்கி தமிழிலக்கியப் பங்காற்றிய முனைவர் நா. கண்ணன் அவர்களது படைப்புகள் கணையாழி, சுபமங்களா, இந்தியா டுடே, குங்குமம் மற்றும் புகலிடப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. திசைகள் மின்னிதழ், இ-சங்கமம், சிஃபி டாட் காம் ஆகிய இதழ்களில் சில காலம் ஆசிரியர் குழுவில் பங்கேற்று தனது பங்களிப்பை அளித்துள்ளார். ‘உதிர் இலை காலம்’, ‘நிழல்வெளி மாந்தர்’ ஆகிய சிறுகதை நூல்களையும், ‘விலை போகும் நினைவுகள்’ என்ற குறும்புதினத்தையும், ‘பாசுர மடல்கள்’ என்ற படைப்புக்களை குறுந்தகடு வெளியீடாகவும் வெளியிட்டுள்ளார்.

கொரியாவில் பணிபுரிந்த காலத்தில் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டுணர்ந்து மேலும் ஆராயத் தலைப்பட்டார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பொது ஆண்டு 48 ஆண்டில், கொரியா நாட்டின் பண்டைக்கால ‘கயா’ அரசின் அரசர் ‘சுரோ’ (King Suro of Geumgwan Gaya) என்பவர், ‘ஹூவாங் ஹூ’ (Heo Hwang-ok) என்ற இளவரசியை மணந்தார். இந்த இளவரசி அரசரை மணம் புரிவதற்காக கப்பலில் வந்தவர். இவரது பெற்றோரின் கனவில் இளவரசியை அரசர் சுரோவுக்கு மணமுடிக்குமாறு அறிவித்த கடவுளின் கட்டளையை ஏற்று, அரசகுடும்பம் தனது இளவரசியைக் கப்பலில் ஏற்றி அனுப்பியது. இது போன்றே தனது மனைவி கப்பலில் வருவாள் என்ற தெய்வவாக்கு கிடைத்த அரசர் சுரோவும் கப்பலில் வந்த இளவரசி கூறியதை ஏற்று அவளை மணமுடித்தார் என்பதை பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘சம்குக்யுசா’ (Samguk Yusa) என்ற கொரிய நூல் கூறுகிறது. மேலும், அரசர் சுரோவை மணந்த இளவரசியே கயா அரசின் முதல் அரசி, இவர் தொலைதூரத்தில் இருந்து வந்தவர் என்றும், தனது கப்பலில் யாழ், தேயிலைச் செடி, புயலில் கப்பலை நிலைப் படுத்தும் கல்லடுக்குகள் ஆகியவற்றுடன், இரட்டை மீன் சின்னத்தைக் கொண்டுவந்தார் என்பதும், ஆயுக்த நாட்டின் அரசர் இளவரசியின் தந்தை என்று இளவரசி கூறினார் என்பதும் அந்த நூல் தரும் தகவல். இவரது பெயரின் பொருளான ‘மஞ்சள் நிற ரத்தினம்’ (yellow jade) என்பதைத் தனது கொரிய மொழியில் ஹூவாங் ஹூ என மொழிபெயர்த்து அரசர் அழைத்தார் என்பதும் அந்த நூல் தரும் தகவல்.

நூல் குறிப்பிடும் இளவரசியின் தாயகத்தைத் தேட முற்பட்ட கொரிய மக்கள், ‘ஆயுக்தா’ என்பதனை இந்தியாவின் அயோத்தியுடனும் தொடர்புப்படுத்தி, அங்குக் காணப்படும் இரட்டை மீன் இதை உறுதிப்படுத்துவதாகவும் எண்ணி இந்தியா கொரியா என இருநாடுகளின் நல்லுறவைப் பேண நடவடிக்கைகள் எடுத்தனர். ஆனால், நூற்றுக்கணக்கான தமிழ் சொற்கள் அதே பொருளில் கொரிய மொழியில் உள்ளதாலும்; உழவு, நெசவு, மற்ற பிற அன்றாட நிகழ்வுகளில் காணும் ஒருசில கலாச்சார ஒற்றுமைகள் தமிழ்ப் பண்பாட்டை ஒத்திருப்பதாலும்; இரட்டை மீன் சின்னம் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய பாண்டிய மன்னர்களின் முத்திரையைக் காட்டுவதாலும் இந்த இளவரசி பாண்டிய இளவரசியாகவும், அவரது பெயர் ‘செம்பவளம்’ என்பதாக இருக்கக்கூடும் என்பது முனைவர் நா. கண்ணன் அவர்களது கருதுகோள். தமிழ்மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குழுமத்தில் இவரது கருதுகோள் விவாதங்களுக்கு உட்பட்டு, அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் உதவியுடன், இந்தியாவின் கொரிய துணைத் தூதரகமும் இணைந்து “இந்திய – கொரிய கலாச்சார பரிமாற்றம்” என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்யும் நிலையை எட்டியது.

kannan5

சென்னைக்கான கொரிய துணைத் தூதர் திரு. கிம் கியாங்சூ அவர்கள் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் தொன்று தொட்டு உள்ள உறவை ஆய்வு செய்யவும், மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தக் கருத்தரங்கம் உதவும், இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார உறவு இது போன்ற ஆய்வுக்கருத்தரங்குகள் மூலம் மேலும் வலுவுறும் என்ற கருத்தினை கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். இத்தகைய ஆய்வு முயற்சியை முன்னெடுத்த முனைவர் நா. கண்ணன் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி, அவரது கருதுகோள் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டு இருநாடுகளின்  நல்லுறவை வளர்க்க உதவ வேண்டும் என்று வல்லமை இதழின் குழுவினர் வாழ்த்துகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

செய்தி உதவி:

http://www.dinamani.com/tamilnadu/2015/11/06/திருக்குறள்-கொரிய-மொழியில்-/article3116563.ece

தொடர்புக்கு:

Oru Arizonan

unread,
Nov 9, 2015, 12:31:10 AM11/9/15
to vallamai
கண்ணன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்!
அன்புடன்,

தேமொழி

unread,
Nov 15, 2015, 9:09:54 PM11/15/15
to வல்லமை

நவம்பர் 16, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு “நீச்சல்காரன்” ராஜாராமன் அவர்கள்

S. Raja Raman1

தமிழ் இணையக் கல்விக்கழகமும், தமிழ் விக்கிப்பீடியாவும் கூட்டு முயற்சியாகத் தமிழ் விக்கிபீடியாவில் ‘தமிழக ஊராட்சிகள்’ பற்றிய கட்டுரைகளைச் சேர்த்து வரும்பணி நடந்து வருகிறது. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் தானியக்கமாக விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டுள்ளதுடன் (பார்க்க: https://ta.wikipedia.org/s/4u75) இன்னும் ஓரிரு வாரங்களில் இப்பணி நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியில் முக்கியப் பங்கேற்று செயலாற்றி வருபவர்“நீச்சல்காரன்” என்னும் திருவாளர் சே. ராஜாராமன் அவர்கள். கணித்தமிழுக்காக அவர் தொடர்ந்து ஆற்றிவரும் தன்னார்வப்பணிகளைப் போற்றும் விதமாக நீச்சல்காரன் ராஜாராமன் அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்து பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

நீச்சல்காரன் வல்லமையின் வாசகர்களுக்கு அறிமுகமானவரே. இவரது, “கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?“, “விளம்பரங்களுக்கு விலை போகிறோம்” என்ற கட்டுரைகளும், ‘மறுஜென்மம்‘ என்ற சிறுகதையும் வல்லமை மின்னிதழில் வெளிவந்துள்ளன. திண்ணை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்துக் கமலம் போன்ற மற்ற பிற இணைய இதழ்களிலும்; விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், தமிழ் கம்ப்யூட்டர், அருவி காலாண்டிதழ் போன்ற அச்சுப் பதிப்பில் வெளியாகும் இதழ்களிலும் எழுதியுள்ளார்.

S. Raja Raman

நீச்சல்காரன் பல்துறையில் திறமைபெற்றவர் என்பதுடன் அவரது சமூக அக்கறை என்ற பண்பும் சேர்ந்ததால், தனது திறமைகளை ஆக்கபூர்வமாகத் தன்னார்வப் பணிகளில் செலுத்திவருகிறார். குறிப்பாகக் கணித்தமிழ் சார்ந்த பங்களிப்பினால் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கு உதவும் வகையில்‘நாவி’ என்ற சந்திப்பிழை திருத்தியையும் (http://dev.neechalkaran.com/p/naavi.html), ‘வாணி’ என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தியையும் (http://vaani.neechalkaran.com/) உருவாக்கி தனது நீச்சல்காரன் இணையத்தளத்தில் அனைவரும் விலையின்றிப் பயன்பெறும் வண்ணம் வெளியிட்டுள்ளார். ஆங்கில எழுத்தின் உதவியுடன் ஒலிபெயர்ப்பில் தமிழை எழுதிப் பழகிய இக்கால எழுத்தாளர்களுக்கு நீச்சல்காரன் உருவாக்கிய பிழைதிருத்திகள் உதவிகரமானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஒற்றுப்பிழைகளுடன் எழுதும் பொழுது வலி மிகும், வலி மிகா இடங்களைப் பற்றிய பரிந்துரைகளையும், பிழைகளைச் சுட்டிகாட்டியும் உதவுகிறது நாவி-சந்திப்பிழை திருத்தி. அவசரகதியில் தட்டச்சும் பொழுது அதிகத் தட்டச்சுப் பிழைகளுடன் எழுதுபவர்களுக்கும், பிழைதிருத்துகையில் மேலோட்டமாகப் படித்துச் செல்லும் கூரிய பார்வை கொண்டிராதவருக்கும் வாணி – தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இன்றியமையாத மென்பொருள். சந்திப்பிழை திருத்தியைப் பயன்படுத்திப் பார்த்தவரும், விக்கிபீடியாவில் அதிகக் கட்டுரைகளைப் பதிவிட்டவருமான முனைவர் செங்கை பொதுவன் அவர்கள் இதனை எழுத்தாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

S. Raja Raman3

கணினி சார்ந்த ஐயங்களைத் தீர்க்க உதவும் தகவல்களும் விளக்கங்களும் கொண்ட “மானிட்டர் உலகம்” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார் நீச்சல்காரன். ‘எதிர்நீச்சல்‘, ‘தமிழ்ப்புள்ளி  என்ற இணையதளங்களில், இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் பல பதிவு செய்து வருகிறார்.

விக்கிபீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டுரைகள் எழுதிவரும் நீச்சல்காரன், விக்கிபீடியாவின் தமிழ் அகராதியான விக்சனரியின் சொற்தொகுப்பிலும் உள்ளிடலிலும் பங்கேற்றுள்ளார். விக்கியில் கட்டுரைகளை விரிவாகப் படிப்பதற்கு வழிசெய்யும் பல்வேறு இணைப்புகளையும் சேர்க்கும் ஒரு தானியங்கியையும் இவர் வடிவமைத்துள்ளார், தமிழ் விக்கி பீடியாவில் இயங்கிவரும் முக்கியத் தானியங்கி இது.

நீச்சல்பாட் -விக்கிப்பீடியா தொகுக்கும் தானியங்கி  
தமிழ் அகராதித் தொகுப்பு 
இணையப்படிப்பகம்
வலைப்பூ திரட்டி
தமிழ் டிவிட்/கீச்சு திரட்டி  
கோலசுரபி
ஆடுபுலி ஆட்டம்
தமிழ்ச் சொற்புதிர்  
தமிழ் மாயயெழுத்து வழங்கி
போன்ற மென்பொருள் செயலிகளையும் உருவாக்கி தமிழ் இணையப் பயனர்கள் பயன்பெற அளித்துள்ளார்.

இருபத்தெட்டு வயதாகும் நீச்சல்காரன் மதுரை சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர். மதுரை யாதவர் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர். புனேவில் சிறிதுகாலம் பணியாற்றிய நீச்சல்காரன் தற்பொழுது சென்னையின் புகழ்பெற்ற பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமொன்றில் பிணையக் கட்டுமானத் துறையில் (network-infrastructure) பணிபுரிகிறார். தனது ஓய்வு நேரத்தில் இணையத் தமிழ் தொடர்பான தன்னார்வப்பணிகளைச் செய்து வருகிறார்.

ஆங்கிலம் தவிர்த்த எந்தப் பிற மொழியின் கருவிகளுக்கும் வணிக அளவில் சந்தை இருக்கப்போவதில்லை, அதனால் கணித்தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்களின் வளர்ச்சியைத் தன்னார்வலர்கள், மொழி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசு மட்டுமே முன்னெடுக்க முடியும் என்று கருதும் நீச்சல்காரன், மொழி சார்ந்த நிறுவனம் மற்றும் அரசு ஆகியவற்றில் அவர் அங்கம் வகிப்பதில்லை என்பதால் தன்னார்வலராகத் தனது முயற்சிகளைத் தொடர விரும்புகிறார்.

தமிழ் இலக்கணப் பிழை திருத்தியை உருவாக்கும் திட்டம், பிற இந்தியமொழிகளின் வரிவடிங்களையும் தமிழுக்கு மாற்றும் ஒரு மென்செயலியை உருவாக்கும் திட்டம், மொழிமாற்றி, அருஞ்சொல் பொருள்மாற்றி, எதிர்ச்சொல் மாற்றி என வேறு சில திட்டங்களையும் செயலாக்க விரும்பும் நீச்சல்காரன் ராஜாராமனின் திட்டங்கள் வெற்றி பெற வல்லமை குழுவினரின் வாழ்த்துகளையும், அவரது கணித்தமிழ் தன்னார்வப் பணிகளுக்குப் பாராட்டையும் தெரிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

படங்கள் உதவி:
ஆங்கில மற்றும் தமிழ் இந்து நாளிதழ்

தகவல்கள் பெற்ற இடங்கள்:
[1] தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!

http://tamil.thehindu.com/society/lifestyle/தப்பில்லாமல்-தமிழ்-எழுதலாம்-தமிழா/article7565616.ece

[2] நெட்டெழுத்து: இணைய ஊருக்கு உழைக்கும் நீச்சல்காரன்!

http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டெழுத்து-இணைய-ஊருக்கு-உழைக்கும்-நீச்சல்காரன்/article7184833.ece

[3] Save yourself from sandhi errors – The Hindu

http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/save-yourself-from-sandhi-errors/article5864196.ece

[4] தமிழ் நீச்சலில் ஈடுபட்டு பல்வேறு தானியங்கிக் கருவிகளை உருவாகிவரும் நீச்சல்காரன் – ஜோதிஜி, திருப்பூர், வலைத்தமிழ்

http://www.valaitamil.com/neechalkaaran-involved-in-technology-contribution_12048.html

தொடர்புகொள்ள:
neecha...@gmail.com

http://neechalkaran.com

https://twitter.com/Neechalkaran

https://www.facebook.com/neechalkaran

https://plus.google.com/108891151460637064235/

https://www.youtube.com/user/neechalkaran

http://neechalkaran.blogspot.com/

http://www.neechalkaran.com/p/author.html

வலைப்பூவில்:
மணல்வீடு – http://arts.neechalkaran.com/
எதிர்நீச்சல் – http://tech.neechalkaran.com/
முத்துக்குளியல் – http://opinion.neechalkaran.com/


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=63858

Megala Ramamourty

unread,
Nov 15, 2015, 10:44:01 PM11/15/15
to மின்தமிழ், vallamai
இணையத் தமிழில் நீச்சலடித்துப் பல சாதனைகள் புரிந்துவரும் ’நீச்சல்காரன்’ எனும் புனைபெயர் கொண்ட நண்பர் திரு. ராஜாராமனுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!

அன்புடன்,
மேகலா

2015-11-15 22:40 GMT-05:00 N Deiva Sundaram <ndsun...@hotmail.com>:
இந்த வாரம் வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்  'நீச்சல்காரன்'  ராஜாராமன் அவர்களுக்கு எனது உளங்கனிந்த  பாராட்டுதல்களும் வாழ்த்துகளும்.

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்


Date: Sun, 15 Nov 2015 18:05:32 -0800
Subject: [MinTamil] Re: இந்த வார வல்லமையாளர்!


நவம்பர் 16, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு “நீச்சல்காரன்” ராஜாராமன் அவர்கள்

S. Raja Raman1

தமிழ் இணையக் கல்விக்கழகமும், தமிழ் விக்கிப்பீடியாவும் கூட்டு முயற்சியாகத் தமிழ் விக்கிபீடியாவில் ‘தமிழக ஊராட்சிகள்’ பற்றிய கட்டுரைகளைச் சேர்த்து வரும்பணி நடந்து வருகிறது. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் தானியக்கமாக விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டுள்ளதுடன் (பார்க்க: https://ta.wikipedia.org/s/4u75) இன்னும் ஓரிரு வாரங்களில் இப்பணி நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியில் முக்கியப் பங்கேற்று செயலாற்றி வருபவர்“நீச்சல்காரன்” என்னும் திருவாளர் சே. ராஜாராமன் அவர்கள். கணித்தமிழுக்காக அவர் தொடர்ந்து ஆற்றிவரும் தன்னார்வப்பணிகளைப் போற்றும் விதமாக நீச்சல்காரன் ராஜாராமன் அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்து பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

நீச்சல்காரன் வல்லமையின் வாசகர்களுக்கு அறிமுகமானவரே. இவரது, “கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?“, “விளம்பரங்களுக்கு விலை போகிறோம்” என்ற கட்டுரைகளும், ‘மறுஜென்மம்‘ என்ற சிறுகதையும் வல்லமை மின்னிதழில் வெளிவந்துள்ளன. திண்ணை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்துக் கமலம் போன்ற மற்ற பிற இணைய இதழ்களிலும்; விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், தமிழ் கம்ப்யூட்டர், அருவி காலாண்டிதழ் போன்ற அச்சுப் பதிப்பில் வெளியாகும் இதழ்களிலும் எழுதியுள்ளார்.

S. Raja Raman

நீச்சல்காரன் பல்துறையில் திறமைபெற்றவர் என்பதுடன் அவரது சமூக அக்கறை என்ற பண்பும் சேர்ந்ததால், தனது திறமைகளை ஆக்கபூர்வமாகத் தன்னார்வப் பணிகளில் செலுத்திவருகிறார். குறிப்பாகக் கணித்தமிழ் சார்ந்த பங்களிப்பினால் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கு உதவும் வகையில்‘நாவி’ என்ற சந்திப்பிழை திருத்தியையும் (http://dev.neechalkaran.com/p/naavi.html), ‘வாணி’ என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தியையும் (http://vaani.neechalkaran.com/) உருவாக்கி தனது நீச்சல்காரன் இணையத்தளத்தில் அனைவரும் விலையின்றிப் பயன்பெறும் வண்ணம் வெளியிட்டுள்ளார். ஆங்கில எழுத்தின் உதவியுடன் ஒலிபெயர்ப்பில் தமிழை எழுதிப் பழகிய இக்கால எழுத்தாளர்களுக்கு நீச்சல்காரன் உருவாக்கிய பிழைதிருத்திகள் உதவிகரமானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஒற்றுப்பிழைகளுடன் எழுதும் பொழுது வலி மிகும், வலி மிகா இடங்களைப் பற்றிய பரிந்துரைகளையும், பிழைகளைச் சுட்டிகாட்டியும் உதவுகிறது நாவி-சந்திப்பிழை திருத்தி. அவசரகதியில் தட்டச்சும் பொழுது அதிகத் தட்டச்சுப் பிழைகளுடன் எழுதுபவர்களுக்கும், பிழைதிருத்துகையில் மேலோட்டமாகப் படித்துச் செல்லும் கூரிய பார்வை கொண்டிராதவருக்கும் வாணி – தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இன்றியமையாத மென்பொருள். சந்திப்பிழை திருத்தியைப் பயன்படுத்திப் பார்த்தவரும், விக்கிபீடியாவில் அதிகக் கட்டுரைகளைப் பதிவிட்டவருமான முனைவர் செங்கை பொதுவன் அவர்கள் இதனை எழுத்தாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

S. Raja Raman3

கணினி சார்ந்த ஐயங்களைத் தீர்க்க உதவும் தகவல்களும் விளக்கங்களும் கொண்ட “மானிட்டர் உலகம்” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார் நீச்சல்காரன். ‘எதிர்நீச்சல்‘, ‘தமிழ்ப்புள்ளி  என்ற இணையதளங்களில், இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் பல பதிவு செய்து வருகிறார்.

விக்கிபீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டுரைகள் எழுதிவரும் நீச்சல்காரன், விக்கிபீடியாவின் தமிழ் அகராதியான விக்சனரியின் சொற்தொகுப்பிலும் உள்ளிடலிலும் பங்கேற்றுள்ளார். விக்கியில் கட்டுரைகளை விரிவாகப் படிப்பதற்கு வழிசெய்யும் பல்வேறு இணைப்புகளையும் சேர்க்கும் ஒரு தானியங்கியையும் இவர் வடிவமைத்துள்ளார், தமிழ் விக்கி பீடியாவில் இயங்கிவரும் முக்கியத் தானியங்கி இது.

நீச்சல்பாட் -விக்கிப்பீடியா தொகுக்கும் தானியங்கி  
தமிழ் அகராதித் தொகுப்பு 
இணையப்படிப்பகம்
வலைப்பூ திரட்டி
தமிழ் டிவிட்/கீச்சு திரட்டி  
கோலசுரபி
ஆடுபுலி ஆட்டம்
தமிழ்ச் சொற்புதிர்  
தமிழ் மாயயெழுத்து வழங்கி
போன்ற மென்பொருள் செயலிகளையும் உருவாக்கி தமிழ் இணையப் பயனர்கள் பயன்பெற அளித்துள்ளார்.

இருபத்தெட்டு வயதாகும் நீச்சல்காரன் மதுரை சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர். மதுரை யாதவர் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர். புனேவில் சிறிதுகாலம் பணியாற்றிய நீச்சல்காரன் தற்பொழுது சென்னையின் புகழ்பெற்ற பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமொன்றில் பிணையக் கட்டுமானத் துறையில் (network-infrastructure) பணிபுரிகிறார். தனது ஓய்வு நேரத்தில் இணையத் தமிழ் தொடர்பான தன்னார்வப்பணிகளைச் செய்து வருகிறார்.

ஆங்கிலம் தவிர்த்த எந்தப் பிற மொழியின் கருவிகளுக்கும் வணிக அளவில் சந்தை இருக்கப்போவதில்லை, அதனால் கணித்தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்களின் வளர்ச்சியைத் தன்னார்வலர்கள், மொழி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசு மட்டுமே முன்னெடுக்க முடியும் என்று கருதும் நீச்சல்காரன், மொழி சார்ந்த நிறுவனம் மற்றும் அரசு ஆகியவற்றில் அவர் அங்கம் வகிப்பதில்லை என்பதால் தன்னார்வலராகத் தனது முயற்சிகளைத் தொடர விரும்புகிறார்.

தமிழ் இலக்கணப் பிழை திருத்தியை உருவாக்கும் திட்டம், பிற இந்தியமொழிகளின் வரிவடிங்களையும் தமிழுக்கு மாற்றும் ஒரு மென்செயலியை உருவாக்கும் திட்டம், மொழிமாற்றி, அருஞ்சொல் பொருள்மாற்றி, எதிர்ச்சொல் மாற்றி என வேறு சில திட்டங்களையும் செயலாக்க விரும்பும் நீச்சல்காரன் ராஜாராமனின் திட்டங்கள் வெற்றி பெற வல்லமை குழுவினரின் வாழ்த்துகளையும், அவரது கணித்தமிழ் தன்னார்வப் பணிகளுக்குப் பாராட்டையும் தெரிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

படங்கள் உதவி:


ஆங்கில மற்றும் தமிழ் இந்து நாளிதழ்

தகவல்கள் பெற்ற இடங்கள்:
[1] தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!

http://tamil.thehindu.com/society/lifestyle/தப்பில்லாமல்-தமிழ்-எழுதலாம்-தமிழா/article7565616.ece

[2] நெட்டெழுத்து: இணைய ஊருக்கு உழைக்கும் நீச்சல்காரன்!

http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டெழுத்து-இணைய-ஊருக்கு-உழைக்கும்-நீச்சல்காரன்/article7184833.ece

[3] Save yourself from sandhi errors – The Hindu

http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/save-yourself-from-sandhi-errors/article5864196.ece

[4] தமிழ் நீச்சலில் ஈடுபட்டு பல்வேறு தானியங்கிக் கருவிகளை உருவாகிவரும் நீச்சல்காரன் – ஜோதிஜி, திருப்பூர், வலைத்தமிழ்

http://www.valaitamil.com/neechalkaaran-involved-in-technology-contribution_12048.html

தொடர்புகொள்ள:
neecha...@gmail.com

http://neechalkaran.com

https://twitter.com/Neechalkaran

https://www.facebook.com/neechalkaran

https://plus.google.com/108891151460637064235/

https://www.youtube.com/user/neechalkaran

http://neechalkaran.blogspot.com/

http://www.neechalkaran.com/p/author.html

வலைப்பூவில்:
மணல்வீடு – http://arts.neechalkaran.com/
எதிர்நீச்சல் – http://tech.neechalkaran.com/
முத்துக்குளியல் – http://opinion.neechalkaran.com/


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=63858


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 16, 2015, 1:50:31 AM11/16/15
to mintamil, vallamai

வணக்கம்.

ஐப்பசி 21 (07.11.2015) சனிக்கிழமை யன்று, அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கணித்தமிழ் பேரவை நிகழ்ச்சியில் திரு.நீச்சல்காரன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கணினியில் மிகுந்த ஞானம் உடையவர்.  கணினி வல்லமையாளர்.

அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

அவரை வல்லமையாளராத் தேர்வு செய்தமைக்கு எனது நன்றிகள்.

On 16-Nov-2015 7:35 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:

நவம்பர் 16, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு “நீச்சல்காரன்” ராஜாராமன் அவர்கள்

S. Raja Raman1

தமிழ் இணையக் கல்விக்கழகமும், தமிழ் விக்கிப்பீடியாவும் கூட்டு முயற்சியாகத் தமிழ் விக்கிபீடியாவில் ‘தமிழக ஊராட்சிகள்’ பற்றிய கட்டுரைகளைச் சேர்த்து வரும்பணி நடந்து வருகிறது. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் தானியக்கமாக விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டுள்ளதுடன் (பார்க்க: https://ta.wikipedia.org/s/4u75) இன்னும் ஓரிரு வாரங்களில் இப்பணி நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியில் முக்கியப் பங்கேற்று செயலாற்றி வருபவர்“நீச்சல்காரன்” என்னும் திருவாளர் சே. ராஜாராமன் அவர்கள். கணித்தமிழுக்காக அவர் தொடர்ந்து ஆற்றிவரும் தன்னார்வப்பணிகளைப் போற்றும் விதமாக நீச்சல்காரன் ராஜாராமன் அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்து பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

நீச்சல்காரன் வல்லமையின் வாசகர்களுக்கு அறிமுகமானவரே. இவரது, “கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?“, “விளம்பரங்களுக்கு விலை போகிறோம்” என்ற கட்டுரைகளும், ‘மறுஜென்மம்‘ என்ற சிறுகதையும் வல்லமை மின்னிதழில் வெளிவந்துள்ளன. திண்ணை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்துக் கமலம் போன்ற மற்ற பிற இணைய இதழ்களிலும்; விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், தமிழ் கம்ப்யூட்டர், அருவி காலாண்டிதழ் போன்ற அச்சுப் பதிப்பில் வெளியாகும் இதழ்களிலும் எழுதியுள்ளார்.

S. Raja Raman

நீச்சல்காரன் பல்துறையில் திறமைபெற்றவர் என்பதுடன் அவரது சமூக அக்கறை என்ற பண்பும் சேர்ந்ததால், தனது திறமைகளை ஆக்கபூர்வமாகத் தன்னார்வப் பணிகளில் செலுத்திவருகிறார். குறிப்பாகக் கணித்தமிழ் சார்ந்த பங்களிப்பினால் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கு உதவும் வகையில்‘நாவி’ என்ற சந்திப்பிழை திருத்தியையும் (http://dev.neechalkaran.com/p/naavi.html), ‘வாணி’ என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தியையும் (http://vaani.neechalkaran.com/) உருவாக்கி தனது நீச்சல்காரன் இணையத்தளத்தில் அனைவரும் விலையின்றிப் பயன்பெறும் வண்ணம் வெளியிட்டுள்ளார். ஆங்கில எழுத்தின் உதவியுடன் ஒலிபெயர்ப்பில் தமிழை எழுதிப் பழகிய இக்கால எழுத்தாளர்களுக்கு நீச்சல்காரன் உருவாக்கிய பிழைதிருத்திகள் உதவிகரமானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஒற்றுப்பிழைகளுடன் எழுதும் பொழுது வலி மிகும், வலி மிகா இடங்களைப் பற்றிய பரிந்துரைகளையும், பிழைகளைச் சுட்டிகாட்டியும் உதவுகிறது நாவி-சந்திப்பிழை திருத்தி. அவசரகதியில் தட்டச்சும் பொழுது அதிகத் தட்டச்சுப் பிழைகளுடன் எழுதுபவர்களுக்கும், பிழைதிருத்துகையில் மேலோட்டமாகப் படித்துச் செல்லும் கூரிய பார்வை கொண்டிராதவருக்கும் வாணி – தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இன்றியமையாத மென்பொருள். சந்திப்பிழை திருத்தியைப் பயன்படுத்திப் பார்த்தவரும், விக்கிபீடியாவில் அதிகக் கட்டுரைகளைப் பதிவிட்டவருமான முனைவர் செங்கை பொதுவன் அவர்கள் இதனை எழுத்தாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

S. Raja Raman3

கணினி சார்ந்த ஐயங்களைத் தீர்க்க உதவும் தகவல்களும் விளக்கங்களும் கொண்ட “மானிட்டர் உலகம்” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார் நீச்சல்காரன். ‘எதிர்நீச்சல்‘, ‘தமிழ்ப்புள்ளி  என்ற இணையதளங்களில், இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் பல பதிவு செய்து வருகிறார்.

விக்கிபீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டுரைகள் எழுதிவரும் நீச்சல்காரன், விக்கிபீடியாவின் தமிழ் அகராதியான விக்சனரியின் சொற்தொகுப்பிலும் உள்ளிடலிலும் பங்கேற்றுள்ளார். விக்கியில் கட்டுரைகளை விரிவாகப் படிப்பதற்கு வழிசெய்யும் பல்வேறு இணைப்புகளையும் சேர்க்கும் ஒரு தானியங்கியையும் இவர் வடிவமைத்துள்ளார், தமிழ் விக்கி பீடியாவில் இயங்கிவரும் முக்கியத் தானியங்கி இது.

நீச்சல்பாட் -விக்கிப்பீடியா தொகுக்கும் தானியங்கி  
தமிழ் அகராதித் தொகுப்பு 
இணையப்படிப்பகம்
வலைப்பூ திரட்டி
தமிழ் டிவிட்/கீச்சு திரட்டி  
கோலசுரபி
ஆடுபுலி ஆட்டம்
தமிழ்ச் சொற்புதிர்  
தமிழ் மாயயெழுத்து வழங்கி
போன்ற மென்பொருள் செயலிகளையும் உருவாக்கி தமிழ் இணையப் பயனர்கள் பயன்பெற அளித்துள்ளார்.

இருபத்தெட்டு வயதாகும் நீச்சல்காரன் மதுரை சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர். மதுரை யாதவர் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர். புனேவில் சிறிதுகாலம் பணியாற்றிய நீச்சல்காரன் தற்பொழுது சென்னையின் புகழ்பெற்ற பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமொன்றில் பிணையக் கட்டுமானத் துறையில் (network-infrastructure) பணிபுரிகிறார். தனது ஓய்வு நேரத்தில் இணையத் தமிழ் தொடர்பான தன்னார்வப்பணிகளைச் செய்து வருகிறார்.

ஆங்கிலம் தவிர்த்த எந்தப் பிற மொழியின் கருவிகளுக்கும் வணிக அளவில் சந்தை இருக்கப்போவதில்லை, அதனால் கணித்தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்களின் வளர்ச்சியைத் தன்னார்வலர்கள், மொழி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசு மட்டுமே முன்னெடுக்க முடியும் என்று கருதும் நீச்சல்காரன், மொழி சார்ந்த நிறுவனம் மற்றும் அரசு ஆகியவற்றில் அவர் அங்கம் வகிப்பதில்லை என்பதால் தன்னார்வலராகத் தனது முயற்சிகளைத் தொடர விரும்புகிறார்.

தமிழ் இலக்கணப் பிழை திருத்தியை உருவாக்கும் திட்டம், பிற இந்தியமொழிகளின் வரிவடிங்களையும் தமிழுக்கு மாற்றும் ஒரு மென்செயலியை உருவாக்கும் திட்டம், மொழிமாற்றி, அருஞ்சொல் பொருள்மாற்றி, எதிர்ச்சொல் மாற்றி என வேறு சில திட்டங்களையும் செயலாக்க விரும்பும் நீச்சல்காரன் ராஜாராமனின் திட்டங்கள் வெற்றி பெற வல்லமை குழுவினரின் வாழ்த்துகளையும், அவரது கணித்தமிழ் தன்னார்வப் பணிகளுக்குப் பாராட்டையும் தெரிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

படங்கள் உதவி:

தேமொழி

unread,
Nov 23, 2015, 3:20:12 AM11/23/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

நவம்பர் 23, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு கே. பிரித்திகா யாசினி அவர்கள்

Prithika Yashini

 

தொலைக்காட்சிகளின் பண்டிகைக்காலச் சிறப்புத் திரைப்பட வெளியீடு அறிவிப்பு போல அறிவிக்க வேண்டிய சாதனை திருமிகு பிரித்திகா யாசினி அவர்களுடையது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக, தமிழகத்தின் திருநங்கை பிரித்திகா யாசினி காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். தளரா முயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு, சட்டத்தின் துணையுடன் விடாது போராடி இந்தியவரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார் இவர். இந்த மாதம் (நவம்பர் 6) சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், பிரித்திகா யாசினி காவல்துறைப் பணிக்குத் தகுதியானவர் எனத் தீர்ப்பு வழங்கி, தமிழகக் காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அவரை அமர்த்துமாறு உத்தரவிட்டிருந்தது. சென்றவாரம் (நவம்பர் 16, 2015) தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட பட்டியலில் (Tamil Nadu Uniformed Services Recruitment Board – TNUSRB) நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, பிரித்திகா யாசினி அவர்களைக் காவல்துறை உதவி ஆய்வாளர் (Sub Inspector of Police) பணிக்குத் தேர்வுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடைகள் பல கடந்து வெற்றிவாகை சூடிய திருமிகு கே. பிரித்திகா யாசினி அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம்.

Prithika Yashini - X

Source: http://www.tnusrbexams.net/documents/opq_finalresults.pdf

காவல்துறை அதிகாரியாகப் பணியாற்ற விரும்பி சிறுவயது முதல் கனவு கண்ட பிரித்திகா கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பிரித்திகா, வாடகை ஊர்தி ஓட்டும் தந்தைக்கும், தையல் தொழில் செய்யும் தாய்க்கும் மகனாகப் பிறந்த பிரதீப் குமார் ஆவார். பள்ளி நாட்களில் இருந்தே பெண்மை உணர்வு கொண்ட அவரது நடவடிக்கைகள் பள்ளியிலும், பிறகு கணினி சார்ந்த பட்டப்படிப்பு படித்த கல்லூரி நாட்களிலும் பலரது கேலிகுள்ளானது. இருபதாவது வயதில் தனது பெண்மை நிரம்பிய மனவுணர்வுகளின் வழிநடந்து அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாற விரும்பிய அவரது எண்ணத்தை அவரது பெற்றோர் ஆதரிக்கவில்லை. மாறாக, மந்திரிப்பது முதல் மனநல மருத்துவம் செய்வது வரை பல வழிகளிலும் அவரது எண்ணத்தைக் கைவிடச் செய்ய முயன்றனர். தனது பெற்றோர்களின் தடைகளினால் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார். மகளிர் விடுதியில் காவல் பணியாளர், ஹார்மோன் சிகிச்சை ஆலோசகர், தொண்டு நிறுவன ஊழியர் எனப் பற்பல பணிகளில் ஈடுபட்டதுடன், தமிழினப்படுகொலைக்கு எதிரான போராட்டம், திருநங்கை திருமணம், வேலை வாய்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றில் பங்கு பெற்று தன்னார்வப் பணிகளும் செய்தார். அறுவை சிகிச்சையும் செய்து கொண்டு பெண்ணாக மாறினார்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு இவர் விண்ணப்பித்தார். தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை இவர். விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினப் பிரிவு குறிப்பிடாத காரணத்தால் பெண் எனக் குறிப்பிட்டார். சான்றிதழ்கள் ஆண் பெயரில் இருக்க, பெண்பெயரில் இருந்த இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எழுத்துத் தேர்வுக்கு அனுமதி பெற்று தனது ஆவணங்களையும் சட்டப்படி பிரித்திகா என்ற பெயரில் மாற்றிக் கொண்டார். தேர்வறை நுழைவுச்சீட்டைக் கடைசி நேரத்தில் பெற்று, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதினார். கடந்த மே மாதம் நடந்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இந்த எழுத்துத் தேர்வில் 1078 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அத்துறையில் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கான 20% ஒதுக்கீட்டைக் கணக்கில் கொண்டால், பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கான சுமார் 850 பணியிடங்களுக்குத் தேர்வெழுதியவரின் எண்ணிக்கை இத்தேர்வுக்கான போட்டியின் தீவிரத்தைக் காட்டும்.

இத்தேர்வில் வெற்றி பெற்றும் ஆகஸ்ட் மாதம் நடந்த உடல்தகுதித்திறன் போட்டிக்கு இவர் அழைக்கப்படாததால் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றத்தின் ஆணையில் தேர்வு நடக்கும் நாளுக்கு முதல் நாளன்று தேர்வில் பங்கு பெற வருமாறு அழைப்பைப் பெற்றார். ஆனால் மூன்றாம் பாலினத்திற்கென்ற தகுதி வரையறைகள் நிர்ணயிக்கப்படவில்லை. பல போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்றாலும் உடல் தகுதித் தேர்வின்ல் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாகக் கூறி பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது தேர்வாணையம். இதனால் போட்டியின் காணொளி ஆதாரங்களைக் கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். மனிதநேய அடிப்படையில் மீண்டும் ஒருமுறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அதில் வெற்றி பெற்றார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் இவர் பணிக்குத் தகுதி பெற்றவர் எனத் தீர்ப்பு வழங்கினர். பணிக்குத் தேர்வு செய்ய காவல்துறைக்கு வழங்கிய ஆணையில், தேசிய சட்டப்பணி ஆணைக்குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசுப் பணிகளில் திருநங்கைகளை 3-வது இனம் என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று சென்ற ஆண்டே தீர்ப்பளித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரும் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்வாணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். பாலினப்பிறழ்வுடன் பிறந்த காரணத்தால் வளர்ந்த குடும்பம் முதற்கொண்டு, வாழும் சமூகம் வரை அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு, தகுதிக்கேற்ற வேலையோ தங்குமிடமோ கிடைப்பதில் சிரமங்கள் எதிர்கொண்டு மூன்றாம் பாலினர் பலர் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படுகிறது. சமூகம் இவர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறப் பிரித்திகா ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பார், அவர்களது நலத்திற்காகப் பாடுபடுவார் என்று தீர்ப்பெழுதிய நீதிபதிகளும் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய அரசின் கணக்கெடுப்புப்படி சுமார் ஐந்து லட்சம் திருநங்கைகள் இந்தியாவில் உள்ளனர், அவர்கள் யாவருக்கும் பிரித்திகாவின் போராட்டமும் வெற்றியும் நல்ல வழிகாட்டுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை. திருநங்கைகளின் நல்வாழ்விற்காக உதவும் ‘சினேகிதி’ என்ற அரசுசாரத் தொண்டு நிறுவனம், பிரித்திகாவை நம்பிக்கை நட்சத்திரம் எனப் பாராட்டியுள்ளது. தனது கனவுகளைக் கைவிடாது, எஸ். ஐ வேலைக் கிடைக்காவிட்டால் ஐ.பி.எஸ். ஆகும் திட்டத்தில் இருந்தவர் பிரித்திகா. பிரித்திகாவை வல்லமையாளராக அறிவித்து வல்லமை இதழ் பெருமை கொள்கிறது.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

படம் உதவி: பிரித்திகாவின் ஃபேஸ்புக் பக்கம்

https://www.facebook.com/prithikayashin

தகவல் பெற்ற தளங்கள் பல, குறிப்பாக:

http://www.dinamalar.com/news_detail.asp?id=1387830

http://www.bbc.com/tamil/india/2015/11/151105_transgenderpolice

https://ta.wikipedia.org/s/53up

http://www.tnusrbexams.net/

http://www.tnusrbexams.net/documents/opq_finalresults.pdf


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=64068

தேமொழி

unread,
Nov 29, 2015, 10:07:31 PM11/29/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

நவம்பர் 30, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு ஆர். பி. ரமேஷ் அவர்கள்

Ramesh RB

வழக்கத்திற்கு மாறாக, அளவுக்கதிகமாகப் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தத்தளித்து வருகிறது சென்னையும், சென்னையின் புறநகர்ப்பகுதிகளும், அதன் சுற்றுவட்டாரங்களும். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பலர் வீட்டையும் உடைமைகளை இழந்து துன்பப்படுவது செய்திகளாக வந்த வண்ணம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போர்க்கால அடிப்படையில் உதவிப்பணிகளும் அரசால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மட்டுமின்றி பல அரசு சாரா பொதுப்பணி நிறுவனங்களும் தங்களால் இயன்றவகையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வருகின்றன. அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்களுக்கு உணவளித்து உதவி செய்த சமூக நல ஆர்வலரும், தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகியுமான திரு. ஆர். பி. ரமேஷ் (R. B. Ramesh) அவர்களை அவரது சமூக சேவைகளுக்காக இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழு பாராட்டுகிறது. இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் ஆசிரியர் திருமதி பவளசங்கரிஅவர்கள்.

Ramesh RB1

Ramesh RB2

Ramesh RB3

செங்கல்பட்டைச் சேர்ந்த ஆர். பி. ரமேஷ் அவர்கள் சமூக அக்கறை கொண்டவரும், ஆன்மீக ஆர்வலரும் ஆவார். சமூகநலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ரமேஷ் அவர்கள் சென்னையில் பள்ளிப்படிப்பையும், திருச்சி நேஷனல் இன்ஸ்டிடுயுட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பையும் முடித்து பொறியியலில் பட்டம் பெற்றவர். ரமேஷ் அவர்கள், இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த மேதகு ஆர். வெங்கட்ராமன் அவர்களின் மகளும், புகழ் பெற்ற சமூக சேவகியுமான திருமதி பத்மா வெங்கட்ராமன் அவர்களிடம் பணிபுரிந்தவர்.

நலிவுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் ‘தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு’ என்ற அறக்கட்டளையைத் துவக்கி, அதன் இயக்குநராகத் திட்டங்கள் வகுத்து வாடும் மக்களுக்குப் பலவகைகளிலும் உதவி செய்து வருகிறார். இதைத் தவிர மேலும் பல சமூகநலப்பணி நிறுவனங்களின் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பங்காற்றி வருகிறார்.

தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தொழுநோயாளர்களின் பிள்ளைகளுக்காக நடத்தப்படும் ஞானோதயா உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வியிலும், உணவுத் தேவைக்கும் உதவி வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பல அரசு தொழுநோய் மையங்களில் இருப்பவர்களுக்கு அடிப்படை வசதிக்குத் தேவையான பொருட்களை வழங்கியும், மருத்துவ உதவிகளிலும் பங்கேற்று வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி செல்ல மிதிவண்டிகள், காலணிகள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், உணவு விடுதிக்குத் தட்டுகள் போன்ற உதவிகளும், நோயாளிகளுக்கு இரத்தப் பரிசோதனை போன்ற மருத்துவ உதவிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு உதவிகள், மரம் நடுவோருக்கு மரக்கன்றுகள் வழங்கும் உதவிகள், தேவையுள்ளோருக்கு தொழிற்பயிற்சி உதவிகள் என விரியும் உதவிகளினால் சற்றொப்ப ஆயிரம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த உதவிகளையும், சுமார் ஐந்நூறு தொழு நோயாளிகள் மருத்துவ உதவிகளையும் பெற்று பயனடைந்துள்ளனர்.

தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு தனது எதிர்காலத் திட்டங்களாக; கல்வி, வேலைவாய்ப்புக்கான தொழிற்பயிற்சி, குக்கிராமங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான உதவி, கிராமப்புற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் மருத்துவ உதவி, முதியோர் விடுதி, அனாதை குழந்தைகளுக்கான விடுதி எனத் தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு  திரு. ஆர். பி. ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலில் மேலும் பல சமூகப் பணிகளில் பங்கேற்று தேவையுள்ளோர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட உதவ வேண்டும் என்று வாழ்த்தி அதன் நிர்வாகி திரு. ஆர். பி. ரமேஷ் அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

தொடர்புக்கு :
வலைத்தளம்: http://www.thenewlifetrust.org/
சமூக வலைத்தளங்கள்

https://www.facebook.com/TheNewLifeTrust/

https://www.facebook.com/rbramesh.rb

அறக்கட்டளையின் முகவரி: 
The New Life Trust – Regd
Plot No.1,Akshaya Nagar,
Lake Avenue 1st Street Extn,T.K.M.Road,
Chengalpattu – 603002

தொலைபேசி: +91 96598 47096
மின்னஞ்சல்: thenewlif...@gmail.com

நன்கொடை வழங்க விரும்போவுருக்கான தகவல்: 
Bank : Karur Vysya Bank
Branch : Chengalpattu
Account Name : The New Life
Account Number : 16321152804
IFSC Code : KVBL0001632




நன்றி வல்லமை:   http://www.vallamai.com/?p=64254

தேமொழி

unread,
Dec 6, 2015, 10:55:38 PM12/6/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

டிசம்பர் 7, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு நிகிதா ஆசாத் அவர்கள்

நிகிதா1

சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை ஃபேஸ்புக்கில் துவக்கியுள்ள திருமிகு நிகிதா ஆசாத் (Nikita Azad) அவர்கள் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார். “மாதவிடாய் மகிழ்ச்சிக்குரியதே” (#Happy to Bleed) என்ற கவன ஈர்ப்பு வாசகத்தின் மூலம் பெண்களுக்குச் சமூகத்தில் நடத்தப்படும் அவமதிப்பை எதிர்க்கும் இவரது நோக்கம் பாராட்டப்படவேண்டிய முயற்சி.

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது இனப்பெருக்கப் பருவமடைந்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஓர் இயற்கை நிகழ்வு. கருத்தரித்த பெண்ணின் கரு வளர்ச்சியடைய உதவுவது கர்ப்பப்பையும் அதன் சுவர்களும். அவள் அந்த மாதம் கருத்தரிக்கத் தவறினால் பயனற்றத் திசுக்கள் கழிவாக உதிரப்போக்குடன் உடலில் இருந்து வெளியேற்றப்படும் இயற்கை நிகழ்வே மாதவிலக்கு. இதனைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலான ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்குமே கிடையாது. மேலும் சரியான கழிவறை வசதியற்ற நாடான இந்தியாவில் வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் துன்பம் அதிகம். இதனை வெளிப்படையாகப் பொதுவில் பேசவும் பெண்களுக்குத் தயக்கமும் கூச்சமும் அதிகமிருக்கும். அதனையும் இடக்கரடக்கல்லாக வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு, வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, தீட்டு என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள், சோர்வு, வலி போன்றவற்றால் அவர்களே தினசரி நடவடிக்கைகளைக் கைவிடும் காலமும் முன்னர் இருந்தது. ஆனால் சுகாதார வளர்ச்சி, அறிவியல் கல்வியால் புரிந்துணர்வு, ஆயத்தப் பஞ்சுறைகள் (சானிட்டரி நாப்கின்) ஆகியவற்றின் பயன்பாடுகளால் தினசரி வாழ்க்கையை எந்தவித மாற்றமுமின்றிப் பெண்கள் எதிர்கொள்ளும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது. நம்நாட்டில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் கூடத் தங்களை குடிகாரர் எனப் பிறர் எண்ணிவிடுவார்களே என்று கூச்சநாச்சமில்லாமல் வெளிப்படையாக வாங்கிச் செல்லலாம். ஆனால், ஆயத்தப் பஞ்சுறைகள் வாங்கக் கடைக்குச் சென்றால் அது என்ன என்று அடையாளமே தெரியாதவாறு (?) ஒரு செய்தித்தாளில் பொட்டலம் கட்டித்தரப்படும் நிலைமையும் உண்டு என்பது இன்றைய நாட்டு நடப்பைத் தெளிவாக்கும்.

மாதவிலக்கின் போது பெண்களை அங்கே உட்காரக் கூடாது, இங்கே நிற்கக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இதைப் பார்க்கக்கூடாது போன்ற கட்டளைகள் இட்டு, நடவடிக்கைகள் முடக்கப்பட்டு அவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே ஒதுங்கி வாழ வேண்டிய நிலைமை எல்லாம் இருந்தது அக்காலம். இன்னமும் குக்கிராமங்களில் உள்ள பெண்கள் இதுபோன்ற அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். மாதவிலக்கு நாட்களில் பெண்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படுவது போலவே, இறைவழிபாட்டிலும் பெண்கள் கோவிலுக்குப் போகக் கூடாது, பூசை அறைக்குள் நுழையக்கூடாது, வழிபாட்டிற்குரிய பொருட்களையோ புனித நூல்களையோ தொடக்கூடாது என்பது போன்ற பெண்கள் மீதானக் கட்டுப்பாடுகள் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ’கலம் தொடா மகளிர்’ என்ற பெயரில் சங்க காலம் தொட்டுப் பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்து வருவதற்கு இலக்கியச்சான்றுகளும் காட்டப்படுகிறது.

இவ்வாறு மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் சமீப காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விவாதங்களாக மாறிவருகின்றன. மகாராஷ்ட்ராவில் உள்ள சனி பகவான் கோவில் ஒன்றில், பெண் ஒருவர் சிலை அருகே சென்று வணங்கியதால் சனி பகவான் சிலையைக் கழுவிப் பரிகாரம் செய்துள்ளனர். மாதவிலக்கு, அதனால் தூய்மையில்லை என்பது போன்ற காரணம் கூறப்படவில்லை இந்த சனிபகவான் கோவில் நிகழ்வில். அது பெண்கள் எந்த நாளிலும் அந்தக் கோவிலில் சிலையருகில் சென்று வழிபட உரிமை மறுக்கப்பட்டுள்ள நிகழ்வு. பெண்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற பழமையான எண்ணத்தின் பிரதிபலிப்பாக அமைந்துள்ள மற்றுமொரு நிகழ்வு. பெண்களைமட்டுமல்ல சமூகத்தில் ஒருசில பிரிவினரே இவ்வாறு கோவிலுக்குள் நுழையவிடாமல் ஒதுக்கப்பட்ட காலத்தைக் கடந்து நாம் வெகு தூரம் வந்துவிடவில்லை.

ஃபேஸ்புக்கில் நிகிதா கவனஈர்ப்பு கொண்டு வந்துள்ளது கேரளாவில் நடந்த மற்றொரு நிகழ்வு. கேரளாவின் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்குள் பருவ வயதுப்பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனைக் குறித்து கொல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் செய்தியாளர் ஒருவர், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் எப்பொழுது பெண்களைச் சபரிமலையில் வழிபட அனுமதிப்பீர்கள் என்றக் கேள்வியை எழுப்பினார். அதற்குத் தேவஸ்தான தலைவர், ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பவர்களை அடையாளம் காணும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது போல, பெண்கள் மாதவிலக்கு நாட்கள் பற்றிக் கண்டறியவும், தூய்மையாகத்தான் இருக்கிறார்களா என உறுதி செய்ய உதவும் கருவி ஒன்றினைக் கண்டுபிடிக்கும் வரை பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க இயலாது. அந்தக் காலம் வந்த பின்னர் அதைப்பற்றிப் பேசலாம் என்று பதிலளித்தார். இக்கூற்றின் அடிப்படைக் கருத்து “மாதவிலக்கான அந்நாட்களில் பெண்கள் தூய்மையற்றவர்கள்” என்ற பண்டைய வழக்குதான். தேவஸ்தான தலைவரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய செய்தியானது. பிறகு எனது விளக்கம் தவறான முறையில் புரிந்து கொள்ளப்படுகிறது என்று பிறையார் கோபாலகிருஷ்ணன் மறுப்பும் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற கருத்துகள் பிறமதங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிகிதா2

இருப்பினும், இயற்கையாகப் பெண்களுக்கு நிகழும், தவிர்க்க இயலாத மாதவிலக்குக்காக அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது சரியல்ல என்பது நிகிதாவின் வாதம். இதற்காக நவம்பர் 21ஆம் தேதியில் இருந்து “ஹாப்பி டு ப்ளீட்” என்ற ஃபேஸ்புக் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நிகிதாவுடன் அவரது நண்ப திரு. சுக்ஜீத் சிங் என்பவரும், சுருதி உபாத்தியாய், சாம்பவி விக்ரம் என்ற தோழியரும் (Sukhjeet Singh, Suridhi Upadhyay, Shambhawi Vikram) இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் அவருக்குத் துணையாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பலரும் நிகிதாவை ஆதரித்து, ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளும் படங்களும் பதிவு செய்துள்ளனர். இந்தக் கவனஈர்ப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்த காரணத்தால் தினசரி நாளிதழ்களிலும் செய்தியாகப் பரவி வருகிறது. ஃபேஸ்புக் பிரச்சாரப் பக்கம் தரும் தகவலின்படி ஆண்களில் பலரும் நிகிதாவிற்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் இறங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய செயல்.

நிகிதா2a

இந்தப் பிரச்சாரம் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்காக மட்டும் அல்ல; பெண்களைப் பாலியல் ரீதியில் வேறுபடுத்தி, சிறுமைப்படுத்தும் நோக்கில் இன்றும் நிலவும் இதுபோன்ற சமூக வழக்குகளுக்கு எதிராக எழுப்பிய கண்டனம் என்று நிகிதா ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து, www.change.org லும் இந்தப் போராட்டத்தை எடுத்துச் சென்றுள்ளார். கோயிலுக்குள் நுழைய அனுமதி எதிர்பார்த்து இப்பிரசாரத்தைத் துவக்கவில்லை என்றும், பழமையான நம்பிக்கைகளை எதிர்க்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் என்று கூறும் பஞ்சாபி பல்கலைக்கழக மாணவியான, இருபது வயதாகும் நிகிதா ஆசாத் பாட்டியாலாவில் வசிக்கிறார். இந்தியா ரெசிஸ்ட்ஸ், யூத் கி ஆவாஸ், ஃபெமினிஸம் இன் இந்தியா (India Resists, Youth Ki Awaaz, Feminism in India) போன்ற பத்திரிக்கைகளிலும் எழுதி வருகிறார். காலங்காலமாகப் பெண்கள் எதிர்க்கத் தயங்கிய, மறுகிய, கூசிய, அஞ்சிய மாதவிலக்கைப் பற்றிய கருத்துக்களை; அதனால் பல சமூகக் கட்டுப்பாடுகளுக்குள் பெண்களை முடங்க வைத்த வழக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நிகிதாவின் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

வேந்தன் அரசு

unread,
Dec 7, 2015, 7:36:45 AM12/7/15
to vallamai, மின்தமிழ்
ஆசாத் என்ற பெயர் இருந்தும் பெண்ணுரிமைக்காக போராடுவது மெச்சத்தக்கது

6 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:55 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Dec 11, 2015, 11:03:02 PM12/11/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, December 6, 2015 at 7:55:36 PM UTC-8, தேமொழி wrote:

டிசம்பர் 7, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு நிகிதா ஆசாத் அவர்கள்

நிகிதா1

சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை ஃபேஸ்புக்கில் துவக்கியுள்ள திருமிகு நிகிதா ஆசாத் (Nikita Azad) அவர்கள் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார். “மாதவிடாய் மகிழ்ச்சிக்குரியதே” (#Happy to Bleed) என்ற கவன ஈர்ப்பு வாசகத்தின் மூலம் பெண்களுக்குச் சமூகத்தில் நடத்தப்படும் அவமதிப்பை எதிர்க்கும் இவரது நோக்கம் பாராட்டப்படவேண்டிய முயற்சி.


வல்லமையாளர் நிகிதாவைப் பற்றிப் படித்த நிர்மலா ராகவனின் கற்பனையில் ஒரு சிறுகதை உருவெடுத்துள்ளது.

அதனை சிறுகதைக் கொத்து இழையில் 

இங்கே படிக்கலாம் >>>> https://groups.google.com/d/msg/mintamil/qN11Gl3lMQA/5ZM3CyW8AwAJ   

கதையின் தலைப்பு " நாளும் கோயிலும் "

நன்றி நிர்மலா !!!

..... தேமொழி


 

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது இனப்பெருக்கப் பருவமடைந்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஓர் இயற்கை நிகழ்வு. கருத்தரித்த பெண்ணின் கரு வளர்ச்சியடைய உதவுவது கர்ப்பப்பையும் அதன் சுவர்களும். அவள் அந்த மாதம் கருத்தரிக்கத் தவறினால் பயனற்றத் திசுக்கள் கழிவாக உதிரப்போக்குடன் உடலில் இருந்து வெளியேற்றப்படும் இயற்கை நிகழ்வே மாதவிலக்கு. இதனைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலான ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்குமே கிடையாது. மேலும் சரியான கழிவறை வசதியற்ற நாடான இந்தியாவில் வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் துன்பம் அதிகம். இதனை வெளிப்படையாகப் பொதுவில் பேசவும் பெண்களுக்குத் தயக்கமும் கூச்சமும் அதிகமிருக்கும். அதனையும் இடக்கரடக்கல்லாக வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு, வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, தீட்டு என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள், சோர்வு, வலி போன்றவற்றால் அவர்களே தினசரி நடவடிக்கைகளைக் கைவிடும் காலமும் முன்னர் இருந்தது. ஆனால் சுகாதார வளர்ச்சி, அறிவியல் கல்வியால் புரிந்துணர்வு, ஆயத்தப் பஞ்சுறைகள் (சானிட்டரி நாப்கின்) ஆகியவற்றின் பயன்பாடுகளால் தினசரி வாழ்க்கையை எந்தவித மாற்றமுமின்றிப் பெண்கள் எதிர்கொள்ளும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது. நம்நாட்டில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிச் செல்பவர

...

Anna Kannan

unread,
Dec 11, 2015, 11:40:28 PM12/11/15
to Vallamai
அருமையான நடை. எந்தப் பிரச்சார நெடியும் இல்லாமல் இருப்பது சிறப்பு.

/அறிவுரை தொடர்ந்தது: “ரொம்ப வலிச்சா, வெந்நீர் ஒத்தடம் குடுக்கச்சொல்லு. இந்தமாதிரி சமயங்களிலே சுருண்டு படுக்காம, எக்சர்சைஸ் பண்ணணும். அது ரொம்ப முக்கியம்!”/

இந்த அறிவுரை, இதுவரை நான் கேள்விப்படாதது. அந்த மூன்று நாள்களில் அதிகமாக எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்றுதான் சொல்லக் கேள்வி.

/ஹம்சா சிரித்துக்கொண்டாள். “குளிச்சுட்டு வந்தா போதும். காமாட்சி புரிஞ்சுக்குவா!”
“யாரு, டீச்சர்?”
“காமாட்சி அம்மன்!”/

வாவ், எங்கே கொண்டு வந்து இணைச்சீங்க, பாருங்க.

தேமொழி

unread,
Dec 13, 2015, 9:42:48 PM12/13/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

டிசம்பர் 14, 2015

இவ்வார வல்லமையாளர்கள் 

அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ்

amutha and kajalakshmi

 

இவர்களைப் போன்ற இந்திய ஆட்சிப் பணியாளர்களே நமக்குத் தேவை என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் மக்கள் ஒருமனதாகப் பாராட்டும் வண்ணம் சிறப்பாகப் பணியாற்றிய அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ். ஆகியோர் வல்லமையின் இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டப்படுகிறார்கள்.

அரசு அதிகாரிகள் பேரிடர் காலத்தில் தங்கள் பணியை… கடமையை செய்ததற்குப் பாராட்டுகள் தேவையா என்பது இந்திய அரசியலைப் பற்றிய விவரம் தெரியாதவர்களின் கேள்வியாக இருக்கும். ஆனால் இந்திய அரசியல்வாதிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் அரசுப்பணியாளர்களுக்கு இடையூறு அளிக்காமல் இருந்ததாகக் கேள்விப்பட்டவரும் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. சீரிய முறையில் பணி செய்யும் அரசு அதிகாரிகள் தங்களது “வளர்ச்சிக்கு” இடையூறு தருபவர்கள் என்று முடிவு செய்து, சிறிய, பெரிய என்ற எந்த நிலையில் உள்ள “தலைவர்களும்” அதிகாரிகளை மிரட்டுவதும், அதிகாரிகள் “ஒத்துழைக்க” மறுத்தால், மேலிடம்வரை சென்று ஒத்துவராத அதிகாரிகளுக்கு “பணிமாற்றம்” என்ற “பரிசு” வழங்க ஏற்பாடு செய்வதும்தான் நமக்குத் தெரிந்த நடைமுறை.

இதுபோன்ற முறையற்ற செயல்களினால், சென்னை நகரத்தின் வளர்ச்சி ஒரு திட்டமிடப்படாத வளர்ச்சியாகக் கடந்த அரைநூற்றாண்டாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்டது. விளைவு: சென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கைப் பேரிடர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. செல்வாக்கு உள்ளவர்கள் அரசு இயந்திரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நீர்நிலைகளையும், நீரோட்டத்தின் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பெரும் செல்வந்தர்களாகப் பொருளீட்டி விட்டார்கள். மனசாட்சியை விற்று சுயநலநோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் ஆட்சியாளர்களும் பாராமுகமாக நடந்து கொண்டார்கள், இதனால் துயருற்றது பொதுமக்கள். இப்பொழுதோ வெட்கமில்லாமல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளார்கள். அதற்குக் காரணமும் அடுத்து ஆட்சியைப் பிடிக்கும், அல்லது தக்க வைக்கும் எண்ணம் மட்டுமே.

இவர்களது திருவிளையாடல்களினால் எழுப்பப்பட்டுவிட்ட ஆக்கிரமிப்புகளினால் ஒரு வார பெருமழையைத் தாங்கமுடியாமல் சென்னை வெள்ளக்காடானது, சேர்ந்த வெள்ளமும் வடிய வழியின்றித் தேங்கிப் போன நிலை. தூர்வாருதல் போன்ற பராமரிப்பு இன்றி குப்பைகூளங்கள் அடைத்து, அத்துடன் ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் ஆறு, கால்வாய்களின் அகலம் சுருங்கிப் போயின. ஆக்கிரமிப்பு பகுதிகள் பெரும்பாலும் வியாபார நிறுவனங்களாகவும், கடைகளாகவும் இருந்தாலும், மணிமங்கலம் பகுதி கால்வாயை ஆக்கிரமித்து ஒரு கோவிலே கூட கட்டப்பட்டிருப்பது தெரிகிறது. அதை இடிக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் கூட வைத்துள்ளார்கள் அப்பகுதி மக்கள். அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற பொதுப்பணி துறை நீர்வழித்தடங்களிலும்; ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய் உள்ளிட்ட மாநகராட்சி நீர்வழித்தடங்களிலும் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

Capture

வெள்ள பாதிப்பு கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஒன்பது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைத்த தமிழக அரசு, இக்குழுவை மீட்புப் பணி, நிவாரணப் பணி, எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. இராணுவத்தின் துணையோடு இப்பணிகளை அரசு அதிகாரிகள் செயல் படுத்தினர்.

இவர்களில் வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாஅவர்கள் தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மக்களை மீட்டதுடன், மீண்டும் வெள்ளம் வந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களில் இருந்து ஆற்றுக்குச் செல்லும் வழிகளைச் சீரமைக்கும் பணியில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துப் பல ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ள உதவியுள்ளார். இதனால் ஒருவாரம் வரை வடியாமல் தேங்கிய வெள்ளம் சிலமணி நேரங்களில் வடிந்துவிட்டிருக்கிறது. இவரது பணியை தடை செய்வதற்கு முயன்றவர்களை இவர் பொருட்படுத்தவில்லை. தாம்பரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இவரது ஆணையினால் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் அடையாறு ஆற்றுக் கால்வாயை முதலில் இருந்ததை விட மூன்று மடங்கு அகலமாகியுள்ளது.

amutha 600-vikatan.com-picture

கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ் அவர்கள் சென்ற அக்டோபரில்தான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற ஒருமாதத்தில் அவர் மாவட்டம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டது. முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளநீரில் களமிறங்கி இரவு பகல் பாராது மீட்புப் பணியையும் நிவாரணப் பணியையும் முன்னின்று நடத்தியுள்ளார் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ். வெள்ள பாதிப்பிற்குக் காரணமான மாவட்டத்தின் பல்வேறு நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் இவரது உத்தரவின் பேரில் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன.

kajalakshmi

ஆக்கிரமிப்புகள் யாவும் அரசின் மெத்தனத்தினால் நிகழ்ந்தவை என்றாலும், பேரிடருக்குப் பின்னர் செய்யும் இது போன்ற பராமரிப்பு நடவடிக்கைகள் இழப்புகளை ஈடுகட்டப் போவதில்லை என்றாலும், இனியாவது வருங்காலத்தில் இழப்புகளை இந்த நடவடிக்கைகள் குறைக்கும் என எதிர்பார்க்கலாம். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலக்ஷ்மி போன்றோரின் அதிரடி நடவடிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை. தனது பதவிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை சரிவரப் பயன்படுத்தத் தெரியாத பிற அரசு அதிகாரிகளுக்கு இவர்களது நடவடிக்கைகள் நல்லதொரு பாடமாக அமையுமாறு செயலாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலக்ஷ்மி ஆகியோருக்கு வல்லமை இதழின் பாராட்டுகள்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

 _____________________________________________

தகவல் தந்து உதவிய செய்திகள்:
அமுதா ஐ.ஏ.எஸ்
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்… அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்… வடிந்தோடும் வெள்ளநீர்!

http://www.vikatan.com/news/coverstory/56265-encroachment-sequestration-amutha-ias.art

அரசியல் கட்சியினரின் மிரட்டல்கள் எடுபடவில்லை தாம்பரம், முடிச்சூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அமுதா ஐ.ஏ.எஸ். அதிரடி

http://www.dailythanthi.com/News/State/2015/12/10001525/Amudha-removal-of-IAS-invasions-Action.vpf

கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ்.
அடையாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் தூள் …தூள்:மாநகராட்சிக்கு வழிகாட்டுகிறார் காஞ்சிபுரம் கலெக்டர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=1404910



நன்றி வல்லமை:   http://www.vallamai.com/?p=64625

தேமொழி

unread,
Dec 20, 2015, 11:23:17 PM12/20/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


டிசம்பர் 21, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு ஆக்சாத் பிரகாஷ் அவர்கள்

Akshat Prakash-Photo by PTI profile

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், விபத்தில் உயிர் காக்கும் கருவி ஒன்றை வடிவமைத்தவரும், மேல்நிலைப்பள்ளி மாணவருமான திரு. ஆக்சாத் பிரகாஷ் அவர்கள். மருத்துவ அறிவியலில் மிகுந்த ஆர்வமிக்க ஆக்சாத் பிரகாஷ் உத்தரப் பிரதேசம் காஜியாபாதை சேர்ந்தவர். டெல்லி இந்திராபுரத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும், 17 வயதாகும் இந்த இளைஞர், கைக்கடிகாரம் போல கையில் அணிந்து கொள்ளும் முதலுதவி சிகிச்சை தரும் ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ (wearable technology device) ஒன்றினை வடிவமைத்து, தைவானில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சி – 2015 (Taiwan International Science Fair, 2015) இல் அறிமுகப்படுத்தினார். இக்கருவி செயல்படும்விதத்தைப் பற்றி அறிவியல் கண்காட்சியில் செயல்முறை விளக்கமும் அளித்துள்ளார். ஆக்சாத் பிரகாஷ், ‘ஹெலிக்ஸ்சேஃப்’ (HelixSafe – #HelixSafe on twitter.com) என்று பெயரிட்டுள்ள தனது மருத்துவ கருவிக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளார். காப்புரிமை பெற 2013 இல் இவர் விண்ணப்பித்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வமான காப்புரிமை தகவல் இதழில் (Official Patent Journal, 2015) இச்செய்தி வெளியாகியுள்ளது.

Akshat Prakash-Photo by PTI

விபத்துகள் நிகழும் பொழுது, உயிருக்கு ஊசலாடுபவர்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்கத் துரித கதியில் இயங்கத் தேவை. வீணாக்கும் ஒவ்வொரு பொன்னான வினாடியும் வாழ்வா, சாவா என்ற முறையில் ஒருவரது வாழ்க்கையையே நிர்ணயிக்கும். நகரப்பகுதியில் விபத்து நிகழ்ந்தாலே அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதில் பெருமளவு காலம் விரயமாவதைத் தடுக்க வழி இருப்பதில்லை. ஆளரவமற்ற அத்துவானக்காட்டின் சாலையொன்றில் வாகன விபத்து நிகழ்ந்தால், அதனைக் கண்டு நடவடிக்கை எடுப்பதற்குள் விபத்திற்குள்ளானவர் உடனடி மருத்துவ உதவியின்றி அவரது வாழ்வே முடிந்துவிடலாம்.

இது போன்ற வாகன விபத்து நிகழ்வுகளில் கைகொடுத்து உதவக் கூடியது, விபத்தினால் பாதிக்கப்பட்டவர் கையில் அணிந்திருக்கும் கடிகாரம் போன்ற ஹெலிக்ஸ்சேஃப்-தொழில்நுட்ப அணிகலன். இக்கருவியின் சென்சார் என்ற உணரும் பகுதி விபத்து நிகழ்ந்த நேரத்தில், இக்கருவி அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பைக் கணக்கிட்டு அவரது உடல்நிலையைக் கண்காணிக்கும். அது இயல்புக்கு மாறாக இருந்தால், தானே தேவையான முதலுதவிக்கான மருந்தினை கருவியில் இருக்கும் சிறிய ஊசி உடலுக்குள் செலுத்துவதுடன், அருகாமையில் உள்ள மருத்துவ அவசர சிகிச்சை மையத்திற்கு உடனடித் தகவலும் அனுப்பும்.

இந்த மருத்துவக் கருவியின் மாதிரி வடிவம் ‘அர்டுயினோ டெவெலப்மென்ட் என்விரான்மெண்ட்’, மற்றும் ‘எம்பெடெட் சி’, ‘விஷுவல் பேசிக்’ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது (The prototype has been created with Arduino Development Environment, Heart Rate Sensor and accessories and programmed in Embedded C and Visual Basic). இந்த ‘ஹெலிக்ஸ்சேஃப்’ மருத்துவக் கருவி கண்டுபிடிப்பிற்காக, “சிறந்த கண்டுபிடிப்பை வழங்கிய இந்தியாவின் முதன்மை திறமைசாலிக் குழந்தை” (‘India’s First Whiz Kid’ award for Best Innovation, 2013), என்ற விருதினையும் ஆக்சாத் பிரகாஷ் பெற்றுள்ளார். இந்த விருதினை 2013 ஆண்டு ‘நர்ச்சர் டேலண்ட் அண்ட் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ (Nurture Talent & Computer Society of India) இவருக்கு வழங்கிப் பாராட்டியது. இந்த மருத்துவக் கருவி செயல்படும் முறையைப் பற்றி , ஐ.ஐ.டி. டெல்லி, ஐ.ஐ.டி. மும்பை ஆகிய இந்திய தொழில்நுட்பக் கல்வி பல்கலைக் கழகங்களிலும் ஆக்சாத் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.

Akshat Prakash-Photo by PTI-3

‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ துறை மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை. தற்பொழுது பெரும்பாலும் ஆரோக்கிய வாழ்வினை முன்னிறுத்தும் நோக்கில் உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றின் அளவுகளைக் கண்காணிக்க மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்ற ஆண்டு கலிஃபோர்னியா நிலநடுக்கத்தின் பொழுது, தொழில்நுட்ப அணிகலன் அணிந்திருந்தவர்கள் உறக்கம் தடைப்பட்டு விழிக்க நேர்ந்ததையும், மீண்டும் உறங்கச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது என்பது போன்ற தகவல்களை, தானே சேகரித்து தரவுகளை அனுப்பியது.

Akshat Prakash-Photo by PTI-4

இந்தத் தொழில் நுட்பத்தை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்துவதில் உள்ள ஆதாயம் பற்றி இத்துறை வல்லுநர்கள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். குறிப்பாக மாரடைப்பு, வலிப்பு போன்ற நேரங்களில் உடலில் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ப விரைந்து செயலாற்றி சிகிச்சையைத் துவக்க விரும்பி மருத்துவத் துறையும் இதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. வரும் ஐந்தாண்டுகளில் 2 பில்லியனில் இருந்து 40 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இத்துறை வளரும் என்றும், சிறு கணினிசார் நிறுவனங்கள் இதன் வளர்ச்சியில் அதிகம் பங்கு பெற்றுப் பலனடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு, உடற்பருமன், இதயநோய் எனப் பல்வேறு வகையிலும் உடல்நலம் கண்காணிக்க ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ உதவக்கூடும் எனவும் தெரிகிறது.

முன்னேறும் இத்துறையில் ஒரு பதின்ம வயது பள்ளி மாணவன் இந்தியாவில் முன்மாதிரியாக இருப்பது இந்தியத் தொழில் நுட்ப வளர்ச்சி பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கிறது. கணினி அறிவியலில் தனக்கு மிகவும் ஆர்வம் இருப்பதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் அத்துறையில் ஓர் ஆய்வாளராகப் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாகவும் கூறும் செல்வன் ஆக்சாத் பிரகாஷ்; தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு, சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு நிறைந்த சமுதாயம் உருவாக, மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நல்ல பல கருவிகளைத் தயாரிக்க விரும்புவதாகவும் ‘பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ (PTI-Press Trust of India)விற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். செல்வன் ஆக்சாத் பிரகாஷின் விருப்பங்கள் நிறைவேறி, மக்களுக்குப் பயன்தரும் கருவிகள் பல வடிவமைக்க வல்லமை இதழ் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

 

மேலும் தொடர்புள்ள தகவலுக்கு:
விபத்தில் உயிர் காக்கும் கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்

http://tamil.thehindu.com/india/விபத்தில்-உயிர்-காக்கும்-கருவியை-கண்டுபிடித்த-பள்ளி-மாணவர்/article8004063.ece

Published: December 18, 2015

 

Beyond Fitbit: The quest to develop medical-grade wearables

http://www.reuters.com/article/us-usa-health-wearables-insight-idUSKBN0U10G120151218

Published: December 18, 2015

 

Wearable Technology is Here: Interoperability will be an issue for this technology, just as it is today for communications and data.

http://www.emergencymgmt.com/emergency-blogs/disaster-zone/wearable-technology-is-here.html

Published: December 18, 2015

 

How The Napa Earthquake Affected Bay Area Sleepers

https://jawbone.com/blog/napa-earthquake-effect-on-sleep/

Published: Aug 25, 2014


நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=64837

Tthamizth Tthenee

unread,
Dec 20, 2015, 11:54:14 PM12/20/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்
இவர் போன்ற திறமைசாலிகளை  நாமும் ஊக்குவிக்க வேண்டும்
அரசும் ஊக்குவிக்க வேண்டும்

பாராட்டுக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

தேமொழி

unread,
Dec 27, 2015, 8:47:42 PM12/27/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

டிசம்பர் 28, 2015

இவ்வார வல்லமையாளர்கள் 

தனய் டாண்டன் மற்றும் தீபிகா போடபட்டி 

Deepika and Tanay3

வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர்களாக சிறப்பிக்கப் படுபவர்கள் இளம் தொழில் முனைவோர்களான, ‘அதிலாஸ்’ (Athelas – http://getathelas.com/) நிறுவனத்தின் நிறுவனர்கள் திருமிகு‘தனய் டாண்டன்’ (Tanay Tandon ) மற்றும் ‘தீபிகா போடபட்டி’ (Deepika Bodapati) ஆகியோர். கலிஃபோர்னியா மாநிலத்தின் இந்த இரு இளம் தொழிலதிபர்களும் கல்லூரி மாணவர்கள், இருபது வயதைத் தாண்டாதவர்கள், இந்த ஆண்டு பலகலைக்கழகத்தில் முதலாண்டில் அடியெடுத்து வைத்துள்ளவர்கள். மாணவர்கள் இருவரும் அறிவியல் துறையில் ஆர்வம் மிக்கவர்கள். உயர்நிலைப் பள்ளி நாட்களிலேயே இருவரும் பல அறிவியல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் பெற்றுள்ளனர். தனய் டாண்டன் சிலிக்கான் பள்ளத்தாக்குப் புகழ் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University’) கணிதத்தில் பட்டப்படிப்பையும், தீபிகா போடபட்டி தென்கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of Southern California) பயோமெடிக்கல் என்ஜினியரிங்கில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்கள் துவக்கியுள்ள அதிலாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள எளியமுறை இரத்தப் பரிசோதனைக் கருவியை வணிக அளவில் சந்தைப்படுத்தும் திட்டத்தை, இருவரும் தங்களது பல்கலைக்கழகங்கள் நடத்தும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் போட்டியில் சமர்ப்பித்து பரிசுத் தொகையை வென்று, தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான நிதியையும் பெற்றுள்ளார்கள். இவர்களது இந்தச் சாதனைக்காக தனய், தீபிகா ஆகியோரை வல்லமை விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் நிறுவனர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள்.

கணினி நிரல்கள் (Computer Programming) உருவாக்குவதில் ஆர்வமிக்க தனய் தொடங்கும் இரண்டாவது தொழில் நிறுவனம் இது. இவருடைய மற்றொரு நிறுவனம் “கிளிப்ட்” (http://clipped.me/). ஆப்பிள் ஐஃபோன் அலைபேசியின் செயலியான ‘கிளிப்ட்’, செய்திகளைச் சுருக்கி முக்கியமான கருத்துகளைப் பட்டியலிட்டுப் படிக்க உதவும் ஒரு மென்பொருள். இந்த இலவச செயலியை ஆப்பிள் (https://itunes.apple.com/us/app/clipped/id583616193) தளத்தில் இருந்து தரவிறக்கிப் பயன்பெறலாம்.

பள்ளி நாட்களில் இருந்து தனய் மருத்துவப் பரிசோனையில் உதவக்கூடிய இரத்தப் பரிசோதனைக் கருவியை வடிவமைத்து வருகிறார். இதற்காகப் புகழ் பெற்ற அறிவியல் போட்டிகளான கூகுள் நடத்தும் அறிவியில் போட்டியிலும் (Google Science Fair), இன்டெல் அறிவியல் போட்டியிலும் (Intel Science Talent Search) பரிசுகள் பெற்றுள்ளார். கூகுள் போட்டியில் வெற்றி பெற்றதனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

obamamefinal

இக்காலத்தில் அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்ட திறன்பேசியில் (ஸ்மார்ட்ஃபோன்), மலிவான விலையில் தயாரிக்கக் கூடிய நுண்ணோக்கி வில்லையை (லென்ஸ்) இணைத்துப் பயன்படுத்தி, அதனை ஒரு சக்திவாய்ந்த நுண்பெருக்கியாக (மைக்ராஸ்கோப்) மாற்றுவது கையடக்க இரத்தப்பரிசோதனைக் கருவியின் (பிளட் டெஸ்டிங் கிட்) அடிப்படை. இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிந்த தனது தாத்தா பற்றியும், இரத்தப்பரிசோதனைக்காக ஆய்வகத்தின் வாசலில் வரிசையாக நிற்கும் நோயாளிகளையும், அதற்கு எடுக்கும் நேரம் பற்றிய தகவல்களைத் தனது தாய் மூலம் அறிந்த தனய் இக்கருவியை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டார்.

இக்கருவி இயங்கும் விதம்; மலேரியா போன்ற ஒட்டுண்ணி நோய்க்கிருமியால் பாதிப்பா என்பது போன்ற இரத்தப் பரிசோதனை செய்ய, இரத்தத் துளிகளை ஆய்வகத்தின் கண்ணாடிப் பட்டையில் சேகரித்து, சோதனைக்குத் தயார் செய்து கைபேசியை நுண்பெருக்கியாகப் பயன்படுத்தி அதன் வழியாக ஆராய வேண்டும். பரிசோதனைக் கருவியாக மாறிய கைபேசி அதனை 350 முதல் 400 மடங்குவரை உருப்பெருக்கி ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை, இரத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிடும். இந்தத் தகவலை கைபேசியில் உள்ள செயலியின் மென்பொருள் பிற இரத்தப்பரிசோதனை தரவுகளுடன் ஒப்பிட்டு நோயினால் பாதிப்பா என்பது போன்ற தகவலை அளிக்கும். இந்த சோதனைமுடிவை மிகத் துல்லியமாக்கும் முறையில் இப்பொழுது தனய் மேற்கொண்டு கவனம் செலுத்தி வருகிறார். இந்தச் செயல்முறையை இவர் விளக்குவதைக் கீழ்காணும் காணொளி மூலமும், படம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

Athelas
காணொளி: https://youtu.be/lxBoZVJJdis

இந்த மாதம் (டிசம்பர் 2015), தனய் பயிலும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு கிளையான, ‘கார்டினல் வென்ச்சர்’ (Cardinal Ventures) என்ற புதுமுறை தொழில்களின் முனைவோர்களை ஊக்குவிக்கும் நிதி முதலீடு செய்யும் (venture capitalist) நிறுவனம் நடத்திய போட்டியில் 60 தொழில் முனைவோர் குழுவினர் பங்கேற்றார்கள். அதில் தனய் டாண்டனின் கண்டுபிடிப்பான எளிய இரத்தப் பரிசோதனைக்கருவி உபயோகத்திலும், சந்தைப்படுத்துவதிலும் நம்பிக்கை தரும் ஒரு முயற்சி என்று பாராட்டப்பட்டு தேர்வு பெற்று பரிசும், நிதி உதவியும் பெற்றது. கூகுளும் இதுபோன்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக தொழில் முனைவோர் உருவாக்கியது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தைத் தேர்வு செய்த மூன்று நடுவர்களில் ஒருவரான ‘ஆனி காடவி’ (Annie Kadavy), இது வணிக முதலீட்டாளர்களைக் கவரும் நல்லதொரு தொழில் முயற்சி எனப் பாராட்டியுள்ளார்.

Athelas3

Athelas2

சென்ற அக்டோபர் மாதம் ‘தீபிகா போடபட்டி – தனய் குழு, அதிலாஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான தீபிகா போடபட்டி படிக்கும் தென்கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோருக்கான ஸ்டீவன் மாணவ கண்டுபிடிப்பாளர் போட்டியில்’ (Stevens Student Innovator Showcase) 24 மாணவர்கள் கொண்ட குழுக்களுடன் போட்டியிட்டனர். தேர்வு செய்யப்பட்ட 6 குழுக்களில், சிறந்த புத்தாக்கத்திற்கான சிறப்புப் பரிசையும், $7,000 பரிசுத் தொகையையும் வென்றனர். மேலும் அதே மாதம், அதே பல்கலைக் கழகத்தின் ‘சிலிக்கான் பீச் தொழில் முனைவோருக்கான நான்காவது ஆண்டு போட்டியின் பரிசாக’ (4th Annual Silicon Beach Awards Venture Competition) $25,000 பரிசையும் பெற்றனர். இந்த பரிசுத் தொகைகளின் உதவி கொண்டு தங்கள் இரத்தப் பரிசோதனைக் கருவியை மேம்படுத்தி, மருத்துவதுறையினர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி, ‘அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்தக நிறுவனத்தின்’ (U.S. Food and Drug Administration) அங்கீகாரம் பெறும் வகையில் வடிவமைக்கப் போவதாக தீபிகா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Athelas1

Deepika and Tanay

தனய், தீபிகா இருவரும் தங்களது அதிலாஸ் நிறுவனத்திற்காக இதுபோல போட்டிகளில் வெற்றி பெற்ற பரிசுத் தொகைகளாகவே $50,000 வரை நிதி சேகரித்துள்ளனர். இந்த இளம் தொழில் முனைவோர்களின் முயற்சி வெற்றிபெற்று, மருத்துவத்துறையினருக்கு பெரிதும் உதவி புரிந்து, அதன் மூலம் பல்லாயிரம் உயிர்களைக் காக்க வேண்டும் என்று வாழ்த்தி வல்லமைக் குழுவினரின் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

__________________________________________________________________________

மேலும் தகவலுக்கும் தொடர்புக்கும்:

Athelas:

http://getathelas.com/

கையடக்க இரத்தப் பரிசோதனைக் கருவி பற்றி தனய் டாண்டன் வழங்கும் செயல்முறை விளக்கக் காணொளி:
https://youtu.be/lxBoZVJJdis (https://www.youtube.com/channel/UCIghdhdj3GY3n0P_IYUZBNA)

Tanay Tandon:

http://tanaytandon.com/

http://clipped.me/

https://www.facebook.com/tanay.tandon.5

https://www.linkedin.com/in/tanaytandon

https://twitter.com/tanay_tandon

https://www.youtube.com/channel/UCIghdhdj3GY3n0P_IYUZBNA

Deepika Bodapati:

https://www.facebook.com/deepika.bodapati

https://www.linkedin.com/in/deepika-bodapati-10229773

http://www.huffingtonpost.com/deepika-bodapati/

__________________________________________________________________________

தகவலும் படங்களும் தந்துதவிய தளங்கள்:

(1)
The college freshman looking to shake up blood tests
Athelas CEO Tanay Tandon has developed a blood-testing kit
Tuesday, 8 Dec 2015

http://video.cnbc.com/gallery/?video=3000463731

(2)
Stanford University’s on-campus incubator Cardinal Ventures
Dick Costolo’s advice to entrepreneurs
Harriet Taylor, Tuesday, 8 Dec 2015

http://www.cnbc.com/2015/12/08/dick-costolos-advice-to-entrepreneurs.html

(3)
Next generation of entrepreneurs shines at USC Stevens Student Innovator Showcase
The ninth annual event awards startups that create viable solutions to global problems
BY Peijean Tsai, NOVEMBER 2, 2015

https://news.usc.edu/88158/next-generation-of-usc-entrepreneurs-shines-at-student-innovator-showcase/

(4)
USC Stevens Student Innovator Showcase Awards $25K to Student Startups

https://stevens.usc.edu/usc-stevens-student-innovator-showcase-awards-25k-to-student-startups/

(5)
Intel Science Talent Search finalist, vying for thousands of dollars in scholarships.

http://googleforeducation.blogspot.com/2015_08_01_archive.html

(6)
ABC7 STAR SCHOLAR: TANAY TANDON

https://www.googlesciencefair.com/projects/en/2015/fd6ac2f5d877cecc8705915021b5fc3e5a15f5feb8bde09d0c2f6be1559c2d65

(7)
This teenager could revolutionize malaria testing with a cheap smartphone attachment
by Pavel Curda PAVEL CURDA — 18 Aug 2014

http://thenextweb.com/insider/2014/08/18/teenager-revolutionize-malaria-testing-cheap-smartphone-attachment/

__________________________________________________________________________




நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65083

Anna Kannan

unread,
Dec 28, 2015, 1:42:42 AM12/28/15
to Vallamai
வல்லமையாளர்கள் தனய், தீபிகா இருவருக்கும் வாழ்த்துகள். சிறப்பாகத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ள தேமொழிக்குப் பாராட்டுகள். இது போன்ற புத்தாக்கப் போட்டிகளை நம் கல்லூரி,  பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலும் நடத்த வேண்டும். பல்லாயிரம் புதிய கண்டுபிடிப்பாளர்கள் தோன்ற வேண்டும். இவர்களின் வாயிலாக, உலகில் மகத்தான மாற்றங்களை உருவாக்கலாம்.

வல்லமை வாயிலாகவும் இத்தகைய புத்தாக்கப் போட்டிகளையும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் புதிய தொழில்முனைவோர் ஊக்குவிப்புத் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் என்பது என் அவா. நிதி, ஆலோசனை, பயிற்சி உள்ளிட்ட ஆதரவுகள் கிட்டினால், முதல் கட்டமாக ஏதேனும் ஒரு பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகத்தில் இதனைத் தொடங்கலாம். 

தேமொழி

unread,
Jan 3, 2016, 11:14:56 PM1/3/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
 நன்றி வல்லமை:   http://www.vallamai.com/?p=65320


ஜனவரி 4, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு மகிஷன் ஞானசேகரன் அவர்கள்

Capture

 

நியூ ஜெர்சியில் வசித்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் நிர்மலா மற்றும் செல்லையா ஞானசேகரன் இணையரின் மகன் திரு. மகிஷன் ஞானசேகரன் (Mahishan Gnanaseharan) அவரது தொடர் சமுகநல அக்கறை கொண்ட செயல்களுக்காக வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுகிறார். இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த திரு. மகிஷன் ஞானசேகரன் அவர்கள் அமெரிக்க மாநிலமான நியூ ஜெர்சியின் உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சிறந்த இரு மாணவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு, அம்மாநிலத்தின் பிரதிநிதியாக “வாஷிங்டன் வாரம்” என மார்ச் 5 – 12, 2016 வரை வாஷிங்டன் டி சி யில் நடக்கவிருக்கும் பயிற்சியில் பங்கு பெற இருக்கிறார்.

Senate Youth1

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், மாநிலத்திற்கு இருவரென1)கல்வி, 2) தலைமைப்பண்பு, 3) சமூகப்பணி ஆகிய மூன்றிலுமே மிகச் சிறந்து விளங்கும் உயர்நிலைப்பள்ளி மாணவர் இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறாக அமெரிக்க அளவில் தேர்வு செய்யப்படும் 104 மாணவர்களுக்கும் மார்ச் மாதம் – வாஷிங்டன் வாரத்தில் அமெரிக்க பாராளுமன்றம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நேரடியாகப் பார்க்கவும், சமூகப்பணியில் பங்கேற்க செயல்முறைப் பயிற்சி பெறவும் வாய்ப்பு அளிக்கப்படும். பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகப்பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பெறுவது மிகவும் பெருமைக்குரிய சாதனையாகும். அமெரிக்க நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் என்ற அளவில் இந்த இளைஞர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.

Senate Youth2

பயிற்சி காலத்தில், தேர்வு செய்யப்பட்ட இளையதலைமுறையினர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பினையும், அரசு இயங்கும் விதத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பினையும் பெறுவார்கள். இவர்களுக்குக் கல்லூரி படிப்பிற்காக $5,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்த ஆண்டு மார்ச் 5 – 12, 2016 வாஷிங்டன் டி சி யில் நடக்கவிருக்கும் 54 ஆவது “அமெரிக்க சட்டமன்றத்தின் இளைஞரணி பயிற்சிப் பாசறை” (United States Senate Youth Program – ussenateyouth.org) பயிற்சியாளர்களில் ஒருவராகத் திரு. மகிஷன் ஞானசேகரன் பங்கேற்க உள்ளார். ஜனவரி முதல் வாரம் (இந்த வாரம்) இப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் முறையாகப் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் ‘முதல் தமிழ் மாணவர்’ இவர் என்று ‘கனடா மிர்ரர்’ (www.canadamirror.com) குறிப்பிடுகிறது.

இந்தத் தகுதியை மகிஷன் அடைவதற்குக் காரணம்; நடுநிலைப்பள்ளி நாட்களில் இருந்தே இவர் தொடர்ந்து காட்டிய சமூக அக்கறை கொண்ட பல செயல்களும் பணிகளுமாகும். இவையாவும் ஒவ்வொருபடியாக இவரை உயர்த்தி வந்துள்ளது.

பத்து வயதில் வானியல் வல்லுநராகப் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட மகிஷனின் நோக்கம் பிற்காலத்தில் ஒரு கோளையோ, விண்கற்களையோ கண்டுபிடிக்க வேண்டும் என்று துவங்கியது. நூலகம் நடத்திய போட்டியில் பங்கு பெற்று நூலகத்தின் 1,000 புத்தகங்களைப் படித்தமைக்காக நெவார்க் (Newark)நகர ஆட்சியாளரிடம் இருந்து பரிசு, பிறகு சிறந்த கவிதை ஒப்பித்தற்காகத் தங்கப்பதக்கம், மூன்று “உச்சரிப்புத் தேனீ” (ஸ்பெல்லிங் பீ) போட்டிகளில் பரிசுகள் என்று கல்விக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு பல போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தார்.

Capture7

பொருளாதாரப் பற்றாக்குறையால் நிதியின்றி தனக்கு உதவிய நகர நூலகம் மூடப்பட்ட பொழுது அது ‘மனிதக்குலத்திற்கு எதிரான குற்றம்’ என மிகவும் இளவயதிலேயே தனது கருத்தைத் தயக்கமின்றிப் பதிவு செய்தவர் மகிஷன். மக்களாட்சியைச் சிறப்பாக செயல்படுத்துவதைப் பற்றிய கட்டுரைப்போட்டியில் வன்முறையைக் கட்டுக்குள் வைப்பது பற்றி இவர் எழுதிய கட்டுரை தேசிய அளவில் சிறந்த கட்டுரைக்கானப் பரிசைப் பெறக் காரணமாக அமைந்தது.

Capture5

தனது ஆரம்பப் பள்ளி நாட்களில் (நான்காம் வகுப்பு) தனது நண்பனான நல்ல மாணவன் ஒருவர் அநீதியாகத் தாக்கப்பட நேர்ந்ததைப் பார்த்த இவரது அனுபவம் வன்முறைக்கு எதிரான சமூகப்பணியில் இவரை ஆர்வம் கொள்ளச் செய்துள்ளது. நெவார்க் நகரத்தில் நடந்த அமைதி கருத்தரங்கை (Newark Peace Education Summit – 2011) தலாய்லாமா அவர்கள் தலைமையேற்று அதில் அவர் உரையாற்றிய பொழுது, அதே மேடையில் வன்முறைக்கு எதிராக ஏழாம் வகுப்பு படித்த 13 வயது மகிஷனும், நெவார்க் நகரத்தின் பிரதிநிதியாக, இளைஞர்களிடம் உள்ள வன்முறைப்போக்கை கண்டித்து அமைதிக்காக உரையாற்றினார்.

Capture6

உயர்நிலைப்பள்ளியின் இரண்டாமாண்டில் படிக்கும் பொழுது ‘நியூ ஜெர்சி மாநிலத்தின் வொய்.எம்.சி.ஏ இளைஞர் – அரசாட்சி அமைப்பில்’ (New Jersey YMCA – Youth and Government program) துணை ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டு சமூகப்பணிகளில் பங்குபெற்று வந்தார். அதில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக மாநில அளவின் சிறந்த தலைவர்களுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுப் பாராட்டப்பட்டார். மீண்டும் பதினோராம் வகுப்பு மாணவராக இருக்கும் பொழுது, சென்ற ஏப்ரலில் (ஏப்ரல் – 2015) அதே வொய்.எம்.சி.ஏ அமைப்பின் தேர்தலில் ஆறு மாணவர்களுடன் போட்டியிட்டு அந்த இளைஞர் அமைப்பின் ஆளுநராகத் ( Youth Governor) தேர்வு செய்யப்பட்டு, தலைமைப் பதவியில் வழிநடத்தி வருகிறார்.

           Capture2Capture3

சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டு, தலைமைப் பொறுப்பேற்கும் தகுதியையும் வளர்த்துக் கொண்டுள்ள மகிஷன் உலகப்புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் அடுத்த ஆண்டு தனது பட்டப்படிப்பைத் தொடரவிருக்கிறார். திரு. மகிஷன் ஞானசேகரன் அவர்களின் குறிக்கோள்கள் வெற்றியடைய  வல்லமை இதழின் சார்பாக பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

________________________________________________________

வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள: 
Mahishan Gnanaseharan

https://www.facebook.com/mahishan.g

http://magnaed.com/

________________________________________________________

தகவல் தந்துதவிய தளங்கள்: 
யாழ் அளவெட்டி மகீசன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திக்கவுள்ளார்

http://www.canadamirror.com/canada/54859.html

YMCA New Jersey Youth & Government Program

https://www.facebook.com/YMCA.NJYAG/?fref=nf

Senate Youth (ussenateyouth.org)

https://twitter.com/senateyouth

#USSYP2016 delegates

GNANASEHARAN SELECTED AS ONE OF TWO DELEGATES FROM N.J. FOR THE YOUTH SENATE PROGRAM

http://www.sbp.org/GnanaseharanYouthSenate

GNANASEHARAN CLIMBS THE LADDER TO THE TOP OF YOUTH & GOVERNMENT

http://www.sbp.org/RelId/629227/ISvars/default/Gnanaseharan_YAG_’15.htm

US Capitol Historical Society Awards Mahishan Gnanaseharan Second Place In 2013 ‘Making Democracy Work’ Student-Essay Contest

http://www.prnewswire.com/news-releases/us-capitol-historical-society-awards-mahishan-gnanaseharan-second-place-in-2013-making-democracy-work-student-essay-contest-257996111.html

Di Ionno: A lesson on nonviolence, through the voice of the young

http://blog.nj.com/njv_mark_diionno/2011/05/di_ionno_a_lesson_on_nonviolen.html

Newark community is up in arms about local library closures due to city budget cuts

http://blog.nj.com/njv_barry_carter/2010/07/newark_residents_are_distraugh.html

‘Star reader,’ 10, among honorees at Newark Public Library gala

http://www.nj.com/helpinghands/jamieduffy/index.ssf/2008/11/booked_for_the_evening_a_gala.html

________________________________________________________

Anna Kannan

unread,
Jan 4, 2016, 8:48:10 AM1/4/16
to Vallamai
வல்லமையாளர் மகிஷன் ஞானசேகரனுக்கு வாழ்த்துகள். இன்னும் பல உயரங்களை எட்டுக.

தேமொழி

unread,
Jan 10, 2016, 9:18:38 PM1/10/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=65518




ஜனவரி 11, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு ரிஃபாத் ஷாருக் அவர்கள்

Rifath Shaarook 0

 

வல்லமையின் இந்தவார வல்லமையாளர், இந்தியாவின் இளம் அறிவியலாளராகப் பாராட்டப் பட்டுள்ள, தமிழ்நாட்டின் மேல்நிலைப் பள்ளி மாணவரான திருவளர் செல்வன் ரிஃபாத் ஷாருக் (Mohamed ‘Rifath Shaarook’ Raaj M D / https://www.facebook.com/rifath.stechlabs) அவர்கள். இந்தச் சாதனையாளரை வல்லமைக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் குவைத் நகர் வாழ் தமிழன்பர் திரு. பி.எம். இப்ராஹீம் (BM Ibrahim / https://www.facebook.com/ibrahimadvt) அவர்கள். சென்ற வாரம் ஜனவரி 3 – 7, 2016, மைசூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 103வது இந்திய அறிவியல் மாநாட்டில் (The 103rd edition of Indian Science Congress – ISC / http://www.isc103.in/) கரூரை அடுத்த பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிஃபாத் ஷாருக் தனது கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரிஃபாத் ஷாருக் கரூர் ‘கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் (Crescent Matric Higher Secondary School) பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்

இந்திய அறிவியல் மாநாட்டின் சிறுவர்களுக்கான 23ஆம் “ராஷ்ட்ரீய கிஷோர் வைகையானிக் சம்மேளனம்” (23d Rashriya Kishore Vaigyanik Sammelan / Children’s Science Congress) அமைப்பு முன்னெடுத்த மாணவர்களுக்கான போட்டியில், “இயற்கை அடிப்படையில் பருவநிலையைக் கண்டறிதல்“(Understanding Climate with Nature) என்ற கருத்தில் ஆய்வுகள் பள்ளி மாணவர்களிடம் இருந்து வரவேற்கப்பட்டன. “சாட்டிலாஸ்கோப்“(Sateloscope) என்ற கருவியை தனது ஆசிரியர் பச்சமுத்து (Pachamuth A) அவர்களின் மேற்பார்வையில் வடிவமைத்தார் ரிஃபாத் ஷாருக்.

Rifath Shaarook1

சாட்டிலாஸ்கோப் என்பது உருவில் சிறிய ஒரு செயற்கைக்கோள் மற்றும் தொலைநோக்கி ஆகியவற்றினை இணைத்து உருவாக்கப்பட்ட கருவி (a nano satellite which is a combination of satellite and telescope). பொதுவாக நாம் அறிந்துள்ள செயற்கைக் கோளைவிட உருவில் சிறியதாகவும் எடையில் குறைவாகவும் உள்ளது இந்தக் கருவி. அதனால் குறைந்த எரிபொருளுடன், சிறிய விண்கலம் மூலம் விண்வெளிச் சுற்றுப்பாதையில் இதனை நிறுவிவிட முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள வரிச்சுருள் பாகமானது கருவியைச் சுற்றி ஒரு செயற்கைக் காந்தப்புலத்தை உருவாக்கி, கருவி சுற்றுப்பாதையில் இருந்து விலகிவிடுவதைத் தவிர்க்கும் வகையிலும், சூரியக்கதிர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தில் இக்கருவியின் பங்கு சிறந்த முறையில் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது செயல்படும் நிலையில் உள்ள ஒரு கருவி. இத்துடன் செவ்வாய் கிரகத்தின் கனிம வளங்களை ஆராய உதவும் மேலும் இரு கருவிகளையும் (‘Nano Mars Lander and the other is ‘Nano Mars Rover’) செயல்படும் நிலையிலேயே ரிஃபாத் ஷாருக் போட்டிக்காகச் சமர்ப்பித்திருந்தார்.

Rifath Shaarook2

சமர்ப்பிக்கப்பட்ட 89 கண்டுபிடிப்புகளில் இறுதிச் சுற்றில் மூன்று மாணவர்களின் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. பிறகு அவற்றிலும் ரிஃபாத் ஷாருக் வடிவமைத்த கருவியே சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு இந்திய அறிவியல் மாநாட்டு வழங்கிய மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பரிசைத் தட்டிச் சென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் இவர். இப்பரிசு வியாழனன்று வழங்கப்பட்டு ரிஃபாத் ஷாருக் பாராட்டப் பட்டார்.

***

சுட்டி விகடனின் ‘சீனியர் சுட்டி ஸ்டார்’ பாராட்டைப் பெற்றவரான மாணவர் ரிஃபாத் ஷாருக் இதற்கும் முன்னரே அறிவியல் சாதனைகளுக்காக அறியப்பட்டவர். ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு’ நடத்தும் “இந்திய இளம் அறிவியலாளர் ” போட்டியில் ( ‘Young Scientist India-2015’ organised by Space Kids India) பங்கேற்று நாட்டிலேயே முதல்முறையாக விண்வெளிக்கு அருகில் வானிலை ஆய்வுக் கருவியைச் செலுத்தி சாதனை நிகழ்த்தினார். ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் மறைவுக்குப் பின் சில நாட்களிலேயே நிகழ்த்தப்பட்ட இவரது இச்சாதனை அப்துல் கலாமின் மறைவுக்குச் சிறந்த அஞ்சலியாகக் கருதப்பட்டது.

Rifath Shaarook

‘இங்கிலாந்தின் அதிஉயர குழுவின்’ (U.K. high altitude society) உறுப்பினரான ரிஃபாத் ஷாருக் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (The National Aeronautics and Space Administration – NASA) இணைய தளத்தின் மூலம் தனது விண்வெளி தகவல் அறியும் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்பவர். ஒருமுறை அறிவிக்கப்பட்ட செயற்கைக் கோள் போட்டியில் வெளிநாட்டு மாணவர்கள் பங்கு பெற அனுமதியில்லை என்ற குறிப்பிற்குப் பிறகு, பின்னொருநாள் அதனை முயல வேண்டும் என்று திட்டமிட்டார். ஹீலியம் வாயு பலூனுடன் வானிலை தரவுகள் சேகரிக்கும் கருவிகளைப் பொருத்தி, விண்ணில் உள்ள வாயுக்கள் பற்றி பருவநிலை ஆய்வுக்கு உதவும் வகையில் அதனை அதிக உயரத்தில் விண்வெளிக்கு அருகில் கருவியை செலுத்தி சாதனை நிகழ்த்தினார்.

Rifath Shaarook௪

அதில் இணைக்கப்பட்டிருந்த 10 வகை ஆய்வுக் கருவிகளுடன் 70,000 அடி உயரம் திட்டமிட்டபடி பலூன் உயர்ந்து, 242 கிமீ கடந்து, பலூன் வெடித்து பாராசூட்டின் உதவியுடன் கூத்தானூரில் தரையிறங்கியது. புவியிடத்தைக் குறிக்கும் ஜி பி எஸ் கருவி மூலம் அதனைத் தொடர்ந்து சென்று பருவநிலையைப் பற்றி கருவிகள் பதிவு செய்த தகவல்களை ரிஃபாத் ஷாருக் சேகரித்து வெளியிட்டார். இது போன்ற உயரங்களில் பலூன் பறக்கவிட்டு ஆய்வுகள் செய்யப்படுவதை அன்று வரை வானிலை உயர் ஆய்வு மையங்கள் மட்டுமே மேற்கொண்டுவந்தன. பள்ளிமாணவர் ஒருவர் அத்தகைய செயலை நிகழ்த்திக் காட்டியதே அதன் சிறப்பு. இதற்காகச் சென்ற ஆகஸ்ட் மாதம் பாராட்டப்பட்டவர் ரிஃபாத் ஷாருக்.

சிறுவயதில் காகித ராக்கெட் செய்து பறக்கவிட்டு விளையாடிய தன்னை உண்மையான ராக்கெட் விடவேண்டும் உற்சாகப்படுத்தியவர் அந்நாட்களில் இஸ்ரோவில் பணிபுரிந்த தனது தந்தை என்று செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ரிஃபாத் ஷாருக். இவரை ஊக்கப்படுத்தி அறிவியல் ஆர்வத்தை வளர்க்க உறுதுணையாக இருந்த ரிஃபாத் ஷாருக்கின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், இவரது திட்டத்திற்கு உதவி செய்த பிற ஆர்வலர்களும் கூட இத்தருணத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை.

மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின், இந்தியா ஒரு வல்லரசாக உருவாகவேண்டும் என்ற கனவினை நனவாக்க, வலிமையான இந்தியாவை உருவாக்க விரும்பும் இளையபாரதத்தினருக்கு ரிஃபாத் ஷாருக் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதற்காகப் பாராட்டுகள். விண்வெளி ஆராய்வுத் துறை பயன்பெற அவர் பற்பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி, மேலும் மேலும் உயர்ந்து நாளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர்களை வழிநடத்த வல்லமை இதழ் குழுவினரின் வாழ்த்துகள்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

__________________________________________________

வல்லமையாளரைத் தொடர்புகொள்ள: 
Facebook : https://www.facebook.com/rifath.stechlabs
LinkedIn member : https://in.linkedin.com/in/rifath-shaarook-945a6698
Google.Plus.Com : https://plus.google.com/106488140532656756020/
youtube.com : https://www.youtube.com/channel/UCFuX8hbTIN60XKd8lI6hH_Q
Blogger : http://stlppt.blogspot.com/

__________________________________________________

செய்திகள் பெற்ற தளங்கள்: 
Tamil Nadu‘s Mohamed Rifath wins 23rd Children Science Congress
Current Affairs Recap of the Day: 8 January 2016

https://www.fresherslive.com/news/current-affairs-recap-of-the-week-3-january-to-9-january-2016/

TN lad’s nano sat project is winner – ICAST

http://www.icast.org.in/news/2016/jan16/jan07TOI.pdf

Dharwad boy’s model among best 3 exhibits in children’s congress

http://www.deccanherald.com/content/521644/dharwad-boys-model-among-3.html

Chennai teenager launches helium weather balloon

http://www.deccanchronicle.com/150824/nation-current-affairs/article/chennai-teenager-launches-helium-weather-balloon

Space Kidz India Sends Payload Concieved By A Teen Into Near Space

http://technews.co/2015/09/08/space-kidz-india-sends-payload-concieved-by-a-teen-into-near-space/

__________________________________________________


தேமொழி

unread,
Jan 17, 2016, 10:12:56 PM1/17/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

ஜனவரி 18, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. இ. மயூரநாதன் அவர்கள்

e mayuranathan

 

வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர் கனடா நாட்டின் “தமிழ் இலக்கியத் தோட்டம்”(http://www.tamilliterarygarden.com/) என்ற தமிழை வளர்க்கும் அறக்கட்டளை அமைப்பு வழங்கும் 17 ஆவதுஇயல் விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. இ. மயூரநாதன் (R.Mayooranathan) அவர்கள். வாழ்நாள் சாதனையாளர் விருதாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த இயல் விருதின் 2015 ஆண்டிற்கான விருதினைப் பெறவிருக்கும் திரு. மயூரநாதன் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவருபவர். விருது வழங்கும் விழா கனடா நாட்டின் டொராண்டோ நகரில் 2016 ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. இலங்கை, யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் இரத்தினவேலு தங்கலட்சுமி இணையருக்குப் பிறந்த திரு. மயூரநாதன் அவர்கள் மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்ற கட்டிடவியல் கலைஞர் (architect). கடந்த 35 ஆண்டுகளாகக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வரும் திரு. மயூரநாதன் கொழும்பில் 16 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1993-ல் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் பணியாற்றிவருகிறார்.

e mayuranathan1

இந்த வாரம் (ஜனவரி 15, 2016) தனது 15 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது கட்டற்ற பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமான விக்கிப்பீடியா. விக்கிப்பீடியா துவங்கி இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னரே, அதில் ஆங்கிலக் கட்டுரைகளின் எண்ணிக்கை 200,000யும் கடந்த பின்னரே, தனி ஒரு மனிதராகத் திரு. மயூரநாதன் அவர்கள் செப்டெம்பர் 2003 ஆம் ஆண்டு  தமிழ்மொழி விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தைத்  துவக்கியுள்ளார். அக்காலத்தில் இருந்த ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தைத் தழுவி ஒரு தமிழ் முதல் பக்கத்தையும் உருவாக்கியதுடன், அதற்கான மென்பொருளை மொழிபெயர்க்கத் தொடங்கி அம்மாத இறுதியில் முடித்திருக்கிறார். அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். அதுவே முதல் முறையாகத் தமிழ் விக்கிப்பீடியா உருவான வரலாறு. அன்றிலிருந்து தனது ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காகவே ஆக்கப்பூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவர் 12 ஆண்டுகள் 4 மாதங்களுக்குத் தொடர்ந்து பங்களித்து வருவது சற்றொப்ப 4,500 நாட்களாகும், இவர் பங்களிப்பில் உள்ள தமிழ் விக்கி கட்டுரைகளும் ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் அடங்கும். நாளொன்றுக்கு ஒரு கட்டுரை என்ற அளவில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார் திரு. மயூரநாதன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவர் துவங்கிய நாளில் இருந்து, சென்னையைச் சேர்ந்த தொழில் நுட்பவியலாளர் திரு. சுந்தர் இவருடன் இந்தத் தன்னார்வப் பணியில் கைகோர்க்கும் வரையில் ஒரு தனி மனிதராகவே ஓராண்டுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வந்திருக்கிறார் திரு. மயூரநாதன். புதிய பங்களிப்பாளர்கள் பயமின்றி விரும்பியபடி பயிற்சி செய்வதற்கான இடமான ஆங்கிலத்தில் “sand box” என்று அழைக்கப்படும் விக்கிப்பீடியா பயிற்சி தளத்திற்கு “மணல் தொட்டி” என மொழி பெயர்த்து பெயர் கொடுத்தவரும் இவரே. மணலில் எழுதி பயிற்சி பெறும் வழக்கத்தை ஒத்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார் திரு. மயூரநாதன்.

e mayuranathan2தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுதுவதில் துவங்கியது திரு. மயூரநாதன் அவர்களின் எழுத்தார்வம். பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுதே ஐந்து மாணவர்களுடன் இணைந்து “விஞ்ஞானி” என்னும் கையெழுத்து மாத இதழ் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இவரது இந்த எழுத்து ஆர்வமே பிற்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது எனலாம். ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்ததால் இவர் துவக்கிய தமிழ் விக்கிப்பீடியா பணி, இன்று தரமான கட்டுரைகள் கொண்ட தகுதியில் ‘ஷிஜு அலெக்ஸ்’ (Shiju Alex) 2010 ஆண்டில் செய்த தர ஒப்பீட்டின் அடிப்படையில் இந்திய மொழிகளில் முதலாம் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழிகளில் இரண்டாம் இடத்தையும், விக்கியில் இடம்பெறும் 291 உலக மொழிகளில் தமிழ் மொழி 61 இடத்திலும் தமிழ் விக்கிப்பீடியா இடம் பெறும் நிலையில் உள்ளது. தற்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கட்டுரைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 83,000. இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் தன்னார்வப் பயனர்களாக தங்களைப் பதிவுசெய்து கொண்டுள்ள தமிழ் விக்கிப்பீடியா குழுவில், சுமார் 100 தொடர் பங்களிப்பாளர்களும் அடங்குவர். தமிழ் விக்கிப்பீடியா விரிவாக்கத்திலும், பிற பங்களிப்பாளர்களுடன் இணைந்து சிறப்பாக இயங்கும் கூட்டுக்குழுமமாக அது உருவாகவும் வழிவகுத்தமைக்காக திரு. மயூரநாதன் அவர்களைப் பாராட்டுவது சாலப் பொருந்தும்.

தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி தமிழின் எதிர்கால வளர்ச்சியின் இன்றியமையாப் பங்கு அளிக்கிறது என்று இந்நாட்களில் உணரப்பட்டு, மரபுவழி தமிழ் வளர்ச்சியில் காட்டப்படும் அதே அக்கறை தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் சில திட்டங்களில் தமிழ் விக்கிபீடியாவுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்துள்ளது. தமிழக அரசால் நிறுவப்பெற்ற தன்னாட்சி நிறுவனமான தமிழ் இணையக் கல்விக்கழகம்,  த. இ. க. – தமிழ் விக்கிப்பீடியா கூட்டு முயற்சியாக தனக்கு பதிப்புரிமை உள்ள ஊடக வளங்கள், கணிமை வளங்களை கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றுவதிலும், உலக அங்கீகாரம் பெற்ற திட்டமொன்றில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி தருவதாகக் கூறும் திரு. மயூரநாதன் தான் ஒரு வீக்கிபீடியனாக இருப்பதில் பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார். முதல் பங்களிப்பாளராக தமிழ் விக்கிப்பீடியாவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்த வல்லமையாளரைப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

__________________________________________________________


வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள:

மின்னஞ்சல்: rmayoor...@gmail.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/mayooranathan.ratnavelupillai?ref=br_rs
விக்கிப்பீடியா: https://ta.wikipedia.org/wiki/பயனர்:Mayooranathan

தகவல் தந்துதவிய இணையதளங்கள்:

http://www.tamilliterarygarden.com/

http://annakannan-interviews.blogspot.in/2009/12/blog-post_4780.html

http://www.thehindu.com/news/cities/chennai/tamil-wikipedia-brings-together-generations/article5183023.ece

http://www.muthukamalam.com/interview/p7.html

https://ta.wikipedia.org/s/4ka9

__________________________________________________________




நன்றி வல்லமை:   http://www.vallamai.com/?p=65699

Megala Ramamourty

unread,
Jan 17, 2016, 10:43:15 PM1/17/16
to vallamai, மின்தமிழ்
விக்கிபீடியர் திரு. இ. மயூரநாதன் அவர்கள் கனடாவிலுள்ள தமிழ் அறக்கட்டளை அமைப்பான ’தமிழ் இலக்கியத்தோட்டத்தின்’ இயல்விருது பெறுவதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வளர்க நும் தமிழ்த்தொண்டு!


அன்புடன்,
மேகலா

--

வேந்தன் அரசு

unread,
Jan 17, 2016, 10:44:42 PM1/17/16
to vallamai, மின்தமிழ்
பாராட்டுக்கு உரியவரே.

17 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:43 அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:

Innamburan S.Soundararajan

unread,
Jan 17, 2016, 11:32:43 PM1/17/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
கனடாவிலுள்ள தமிழ் அறக்கட்டளை  [கண்டா] அளித்த  ’தமிழ் இலக்கியத்தோட்டத்தின்’ இயல்விருது பெற்றதற்கு.விக்கிபீடியர் திரு. இ. மயூரநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


Anna Kannan

unread,
Jan 23, 2016, 7:06:30 AM1/23/16
to Vallamai
நாள்தோறும் ஒரு கட்டுரையைத் தொடங்கிவைத்து, இதே பணியை 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்வது, மகத்தான செயலே. அர்ப்பணிப்பும் தொண்டுள்ளமும் கொண்ட மயூரநாதன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியா, மேன்மேலும் வளர்க.

தேமொழி

unread,
Jan 24, 2016, 3:46:44 AM1/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Saturday, May 17, 2014 at 7:28:15 PM UTC-7, தேமொழி wrote:
மே 18, 2014

இந்த வார வல்லமையாளர்!   அறிவிப்பை வழங்கும்  சிறப்புபொறுப்பை வகித்தவர் அன்பிற்குரிய திரு. துரை அவர்கள்.

இந்த வார வல்லமையாளர்!

மே 18, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

திரு. ஜெய.சந்திரசேகரன் அவர்கள்

PP Chandra copy

‘மரபூர்’ ஜெய.சந்திரசேகரன் அவர்கள் ‘ரீச்’ சந்திரா’ என்ற பெயராலும் அறியப்படுபவர். ப்ளாஸ்டிக் மற்றும் தொழில்கள் உற்பத்தி ஆலோசகர் பணியில் இருப்பவர். அத்துடன் புராதனக் கோவில்களில் உழவாரப்பணியைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருப்பவர். புராதனச் சின்னங்களின் புனரமைப்பு இவரின் விருப்பப் பணிகள். இவரின் தற்போதைய தீவிர முழக்கம்: எல்லோர்க்கும் வீட்டுக்கு வீடு கழிப்பறை மற்றும் தூய குடிநீர்.

தண்ணீர் …இன்றைய சூழலில் கீழ்த்தட்டு மக்கள் தாகம் தீர்க்க , ஒரு குடம் தண்ணீருக்கே தெருத்தெருவாய் கிணறு, குளமென அலையும் நிலை. அதுவும் அதள பாதாளத்திலிருந்துதான் எடுக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் நீரும் சுத்தப் படுத்தப்படாமல் வடிகட்டாமல் குடிக்கும் தரத்தில் இருப்பதில்லை. உடல் நலத்தைக் கெடுக்கும் காரணிகள் பல இதில் கலந்திருப்பதைப் பெரும்பான்மையானோர் அறியாமலே உட்கொள்வதால்  கிராமப்பகுதிகளில் பெரும்பாலானவர்கள் பலவகையான உடல் ஊனங்கள், சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.


தேசிய விருது பெறுகிறார் வல்லமையாளர்      Jayaraman Chandrasekaran


The National Award for making toilets using glass fibre waste. Anyone in CSR looking this? on 20th Jan from Hon'ble minister of Petrochemicals and Fertilizers, Shri. Anantha Kumar

Jayaraman Chandrasekaran's photo.




..... தேமொழி





 
  • இதை எப்படி சரி செய்ய முடியும் ? மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும்?

அம்மக்களிடம் சென்று விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த வேண்டும் .

  • இது நடைமுறையில் சாத்தியமா? 

சத்தியமாய் இல்லை.

  • பின் என்னதான் செய்ய முடியும்? 

அவர்களுக்குப் புரியும் வகையில் எளிய தொழில் நுட்பமுள்ள, அவர்களது பொருளாதார நிலை ஏற்கக் கூடிய ஒரு நீர்வடிகட்டி(water filter) வழங்கினால் முடியும்.

  • அட..இரண்டும் எப்படி முடியும் ? 

முடியும் என சாதித்திருக்கிறார் இந்தத் தமிழர்…

ஆம்..  புதிய /எளிய தொழில் நுட்பத்தில் வடிகட்டி ஒன்றினை கண்டுபிடித்திருக்கிறார். ஆறாயிரம், பத்தாயிரம் என்றிருக்கும் சந்தை நிலவரத்தில், ஒரு நாள் சம்பள விலையில் ஒரு குடிநீர் வடி கட்டி.. ஏழை எளிய மக்களுக்கு மின்சாரத் தேவையில்லாத குறைந்த விலைக் குடிநீர் வடிகட்டி … என்பதை இவரால் சாதிக்க முடிந்திருக்கிறது.

PP Chandra copy2

இதுமட்டும் உலக எளிய மக்களைச் சென்றடைந்தால் ஒரு தமிழனின் தொண்டுள்ளம் இனம் காணப்படும்.. நாம் தமிழனாய்த் தலை நிமிர்ந்திடுவோம் .. தமிழினம் பெருமை கொள்ளும்.. அவரது பலவருட அயராத உழைப்பும் , தன்னலமில்லாச் செயல்பாடுகளும் இப்பொழுதுதான் உலக ஊடகங்களின் பார்வையின் முன் வந்திருக்கிறது . ஆம் … ஆசியாவின் மிகப்பெரிய (பொதுமக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கான) போட்டியில் அரை இறுதிச் சுற்று வரையிலும் அவர் வந்துள்ளார்.

அவர் இறுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெறவும், சுத்தமான குடி நீர் மற்றும் சுகாதாரமான வாழ்வும் அனைவரையும் சென்றடையவும் அவருக்கு நமது வாக்குகள் தேவை. இங்கு நமது ஒவ்வொரு வாக்கும் மிகமிக முக்கியமானது. இது உலகச் சுகாதாரம் சார்ந்தது.

திரு. சந்திரசேகரன் வெற்றிபெற கீழ் காணும் சுட்டிக்குச் சென்று வாக்களிக்கலாம், வாக்களிக்க இறுதி நாள் 19ஆம் தேதி மாலை 6 மணி.

வாக்களிக்கும் முறை:
1.http://socialventurechallenge.asia/vote/#top சுட்டியில் உள்ள WATER FOR ALL (SANITATION) எனும் வீடியோவைக் கிளிக்கவும்

2. பக்கத்தின் கீழ் பாகத்தில் சென்ற இ-மெயில் அல்லது முகநூல் (Facebook) கணக்கை வைத்து உள்நுழையவும்.

3. கமெண்ட்ஸ் அருகே தெரியும் vote buttonஐ (இரட்டை இலை சின்னம் காண்பிப்பதுபோல் தெரியும் விரல்கள்) கிளிக் செய்யவும்.

[ஆரஞ்சு நிறத்தில் ஓட் பட்டன் தெரிந்தால் ஓட்டு விழவில்லை என்று அர்த்தம். அதுவே சாம்பல் நிறத்துக்கு மாறிவிட்டால் உங்கள் ஓட்டு விழுந்துவிட்டது என்று அர்த்தம். (An orange icon indicates ready to vote, grey indicates that you have already voted for that video.)]

4. இறுதி நாளுக்குள் திரு.சந்திரசேகரன் அவர்களது WATER FOR ALL (SANITATION) வீடியோவிற்கு அதிக ஓட்டுகள் வரவேண்டும். எனவே உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து இதை வெற்றிபெறச் செய்து ஏழை மக்களின் குடிநீர் வடிகட்டியை மேலும் மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கும் கரத்தை வலுப்படுத்துங்கள்.

உலகச் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய /எளிய தொழில் நுட்பத்தில் வடிகட்டி ஒன்றினை வடிவமைத்து அரையிறுதிச் சுற்றில் வெற்றிபெற்ற ஜெய.சந்திரசேகரன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

...

தேமொழி

unread,
Jan 24, 2016, 3:49:17 AM1/24/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Sunday, January 24, 2016 at 12:46:44 AM UTC-8, தேமொழி wrote:


தேசிய விருது பெறுகிறார் வல்லமையாளர்      Jayaraman Chandrasekaran


The National Award for making toilets using glass fibre waste. Anyone in CSR looking this? on 20th Jan from Hon'ble minister of Petrochemicals and Fertilizers, Shri. Anantha Kumar

Jayaraman Chandrasekaran's photo.



சந்திராவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். 

Anna Kannan

unread,
Jan 24, 2016, 5:23:38 AM1/24/16
to Vallamai, chandrasekaran sekaran
அன்பு நண்பர், வல்லமையாளர் சந்திரா அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இவரது கண்டுபிடிப்புகள், கோடிக் கணக்கான  மக்களிடம் சென்று சேர வேண்டும். அரசுகள், தமது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம்... உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இந்த நீர்வடிகட்டியையும் புதிய முறை பொதுக் கழிப்பறையையும் அறிமுகப்படுத்த வேண்டும். 

700 ரூபாய் விலையுள்ள நீர்வடிகட்டியின் விலையை இன்னும் குறைக்க, சந்திரா முயல வேண்டும். மேலும் கீழும் உள்ள பிளாஸ்டிக் பாத்திரங்களைக் குறைத்து, எந்தப் பாத்திரத்திலும் இந்த நீர்வடிகட்டியைப் பயன்படுத்தும் வாய்ப்பினை அளிக்க முடிந்தால், இதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும்.

Innamburan S.Soundararajan

unread,
Jan 24, 2016, 9:36:09 AM1/24/16
to vall...@googlegroups.com, chandrasekaran sekaran
19 ஜூலை 2014ல் முடிவு கண்ட கட்டுரையில் இந்த தொடர்பு எனக்குப் புரியவில்லை.

--

தேமொழி

unread,
Jan 24, 2016, 9:06:09 PM1/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

ஜனவரி 25, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. கோட்டலாங்கோ லியோன் அவர்கள்

Cottalango Leon

வல்லமையின் இவ்வார வல்லமையாளர்; ஹாலிவுட் திரைத்துறை சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் ஆஸ்கார்விருதுகளில், இந்த ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப பங்களிப்பிற்காக வழங்கப்படும் ஆஸ்கார் விருதைப் பெறுபவர்களில்ஒருவரான கோவைத் தமிழர் திரு. கோட்டலாங்கோலியோன் (Cottalango Leon) அவர்கள். இவரும், இவரது வழிநடத்தலில்இவரது குழுவினரும் சோனிபிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் (Sony Pictures Imageworks) நிறுவனத்திற்காக உருவாக்கிய இட்வியூ (itview) என்ற மென்பொருள்*, உருவாகி வரும் திரைப்படத்தின் பகுதிகளை திரைக் கலைஞர்கள் மீண்டும் பார்த்து ஆய்வுசெய்து செப்பனிடும் முறையை எளிமையாக்குவதற்காக உருவாக்கப் பட்டது. உருவாகி வரும் படத்தின்பலநிலைகளிலும் இது பயன்படுத்தப்படுவதால் திரைப்படம் தயாரிப்பதில் பெரிதும் உதவுகிறது.

The-Academy-of-Motion-Picture-Arts-and-Sciences-150தொழில்நுட்பத்திற்காக “வடிவமைப்பு, பொறியியல் பங்களிப்பு, தொடர் மேம்பாடு” ( ‘Scientific and Technical Achievements’ category for the design, engineering and continuous development) என்ற பிரிவில் விருதினைப் பெரும் திரு.கோட்டலாங்கோ லியோன்விருது கிடைத்ததைப் பற்றிய தனது செய்தியை அவரது ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “சாதாரணமான நாளொன்றைத் துவக்கிய எனக்கு ஆஸ்கார் விருது பற்றிய செய்தி இன்ப அதிர்ச்சியைத் தந்தது.திரைப்படங்களை உருவாக்குவதில், இன்றியமையாத வகையில் பின்புலத்தில், திரைப்பட தொழில்நுட்பத்தில் உதவிகள்செய்யும் 30 தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்குபவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கும் போட்டிகள் அதிகம், இதற்காகப் பலநேர்காணல்களில் கலந்து கொள்ளவும், தொழில்நுட்பம் பற்றியவிளக்கங்களும் தரவேண்டியிருக்கும். இருபதாண்டுகளுக்கு முன்னர் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் பணியில் என்முதல் நிரலி வரியை எழுதிய பொழுது நான் பின்னாட்களில் அதன் விளைவுகளை எதிர்பார்க்கவில்லை.

எங்கள் தொழில் நுட்பப் பணியில் உடன் பணியாற்றிய ராபர்ட் ரே, சாம் ரிச்சர்ட்ஸ், மற்றும் ராப்ப்ரேடோ (Robert Ray, Sam Richards and Rob Bredow) ஆகிய குழுவினருக்கும், எனது முன்னேற்றத்திற்கு உதவிய என் நண்பர்களுக்கும், நான்பணிபுரியும் ‘சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ்‘ நிறுவனம் என்னிடம் இதுநாள் வரை காட்டிய அன்பிற்கும், கடினஉழைப்பின் மதிப்பை அறிவுறுத்தி எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற உறுதுணையாக இருந்த எனதுபெற்றோர்களுக்கும், பொறுமையுடன் எனக்கு ஆதரவளித்த எனது மனைவி ரூபா மற்றும் மகள் ஸ்ருதிஆகியோருக்கும்நன்றி,” எனத் தனது ஃபேஸ்புக் செய்தியில் (https://www.facebook.com/cottalango) எனக் குறிப்பிட்டுள்ளார்.

திரு. கோட்டலாங்கோ லியோன் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து கோவையில் வளர்ந்தவர். இவரது பணி ஓய்வு பெற்றதாய் திருமதி எல்இராஜம் அம்மையாரும், மறைந்துவிட்ட இவரது தந்தையும் ஆசிரியப்பணி புரிந்தவர்கள்.கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் உள்ள கல்வர்சிட்டி என்ற இடத்தில் வசிக்கும், 44 வயதாகும்திரு. கோட்டலாங்கோ லியோன், கோவை பி எஸ் ஜி தொழில் நுட்பக் கல்லூரி (PSG College of Technology) பொறியியல் பட்டப்படிப்பிற்குப் பிறகு அரிசோனாமாநிலப் பல்கலைக்கழகத்தில் (Arizona State University) மேற்படிப்பைத் தொடர்ந்தவர்.தற்பொழுது 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் நிறுவனத்தில் மேல்நிலைகணினிமென்பொருள் பொறியாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், ‘ட்ரீம் வொர்க்ஸ்இன்டெர்ஆக்டிவ்‘ (Dreamworks Interactive) நிறுவனத்திலும் பணிபுரிந்தவர். இந்த ஆண்டின் ஆஸ்கார்தொழில்நுட்ப விருதினைப்பெறும் மற்றொரு இந்தியர் திரு. ராகுல் தாக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப ஆஸ்கார் விருதுகளுக்காக வழங்கப்பெறும் ஆஸ்கார்பரிசளிப்பு விழா வரும் பிப்ரவரி 13 அன்றும், பிற விருதுகளை வழங்கும் விழா பிப்ரவரி 28, 2016 அன்றும்நடைபெறவிருக்கிறது.

திரைப்படத்துறையில் தொழில்நுட்பவளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றியுள்ள திரு. கோட்டலாங்கோலியோன் அவர்களைஇவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமை மின்னிதழ் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

_______________________________________________________

* The Academy Awards for scientific and technical achievements –
TECHNICAL ACHIEVEMENT AWARDS (ACADEMY CERTIFICATES)

To J Robert Ray, Cottalango Leon and Sam Richards for the design, engineering and continuous development of Sony Pictures Imageworks Itview.

With an extensive plugin API and comprehensive facility integration including editorial functions, Itview provides an intuitive and flexible creative review environment that can be deployed globally for highly efficient collaboration.

_______________________________________________________

வல்லமையாளரைத் தொடர்புகொள்ள:

https://www.linkedin.com/in/loorthu

https://www.facebook.com/cottalango

https://www.youtube.com/user/loorthu1

தகவல் பெற்ற தளங்கள்: 
ஆஸ்கார் தொழில்நுட்ப விருது பெறும் கோவை பொறியாளர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1439250

http://www.dinamalar.com/news_detail.asp?id=1439546

Academy to Honor 11 Sci-Tech Achievements

http://www.animationmagazine.net/vfx/academy-to-honor-11-sci-tech-achievements/

Oscars: Sci-Tech Winners Unveiled by Academy

http://www.hollywoodreporter.com/behind-screen/oscars-sci-tech-winners-unveiled-853503

Indian-Origin Technician Cottalango Leon Wins Oscar

http://www.ndtv.com/indians-abroad/indian-origin-technician-cottalango-leon-wins-oscar-1269117

Cottalango Leon, another Indian-origin technician, wins Oscar

http://timesofindia.indiatimes.com/entertainment/english/hollywood/news/Cottalango-Leon-another-Indian-origin-technician-wins-Oscar/articleshow/50681522.cms

Oscars: Sci-Tech Winners Unveiled by Academy

http://www.hollywoodreporter.com/behind-screen/oscars-sci-tech-winners-unveiled-853503

படம் உதவி:

http://www.ndtv.com/

_______________________________________________________


நன்றி வல்லமை:   http://www.vallamai.com/?p=65893

Innamburan S.Soundararajan

unread,
Jan 24, 2016, 11:22:43 PM1/24/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்

Tthamizth Tthenee

unread,
Jan 25, 2016, 2:44:19 AM1/25/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
திரு. கோட்டலாங்கோலியோன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





தேமொழி

unread,
Jan 31, 2016, 11:24:23 PM1/31/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, 00e...@gmail.com

பிப்ரவரி 1, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  மாணவர் திரு. ஆண்டனி எடிசன் அவர்கள்

 

ஆண்டனி எடிசன்

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர், “குறைந்த விலையில்” ரோபோட்டிக் செயற்கை கை (prosthetic robotic hand) ஒன்றை வடிவமைத்துச் சாதனை புரிந்துள்ள பொறியியல் கல்லூரி மாணவர் திரு. ஆண்டனி எடிசன் (Antony Edison, https://www.facebook.com/akon.antoni) அவர்கள். தஞ்சையைச் சேர்ந்த மாணவர் ஆண்டனி எடிசன் அவர்கள் கோவையின் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் (Hindusthan College of Engineering and Technology) மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் கல்வி பெறும் மாணவர்.

இளம் வயதிலேயே ரோபோட்டிக்ஸ் பொறியியல் துறையில் ஆர்வம் கொண்டதால் மெக்கட்ரானிக்ஸ் படிப்பைத் தேர்ந்தெடுத்தவர் ஆண்டனி எடிசன். கோவாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி ஒன்றில் ஜெர்மனி அறிவியலாளர் ஒருவர் காட்சிப்படுத்தியிருந்த செயற்கை கை ஒன்றில் இவரது ஆர்வம் திரும்பியது. அதனைப் பற்றி விசாரித்து அறிந்த பொழுது, அது இந்திய விலைவாசிக்குக் கட்டுப்படியாகாத ரூபாய் 50,000 வரை அதிக விலையில் அமைந்திருக்கக் கண்டார். எனவே நம் நாட்டினருக்குக் குறைந்த விலையில் எளிதில் கிடைக்கக் கூடிய ரோபோட்டிக் செயற்கை கையை வடிவமைக்கத் திட்டமிட்டார்.

மேலைநாடுகளில் ரோபோட்டிக் செயற்கை கைகள் உருவாக்கப்பட்டு வந்தாலும் அவற்றினை இந்தியாவில் உள்ளவர் பயன்படுத்த விரும்பினால் லட்சக் கணக்கில் செலவிட நேரும். அத்துடன் அதற்கான உதிரிப் பாகங்களைத் தருவித்து இந்தியாவில் தயாரிப்பதும் ரோபோட்டிக் செயற்கை கையின் அடக்கவிலையைக் குறைக்கும்வகையில் அமைந்திருக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட ஆண்டனி எடிசன், இந்தியாவிலேயே கிடைக்கக்கூடிய ஃபோம் ஷீட், மோட்டார், சென்சார்கள் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

ஒரு பொருளைப் பிடித்து, அதனை எடுத்து மற்றொரு இடத்தில் வைப்பதுதான் பெரும்பான்மையாக உதவக்கூடிய அடிப்படை செயல் என்பதால் அதன் அடிப்படையில் செயற்கை கை இயக்கத்தை வடிவமைக்க விரும்பினார் ஆண்டனி எடிசன். செயல்முறையை நிகழ்த்தும் கட்டளைகளை குரல்வழியாக செயல்படுத்தும் முறை உள்ளது. செயற்கை கை இயக்கத்திற்காகப் பெரும்பான்மையாக இம்முறையே கையாளப்பட்டாலும், கண்ணசைவு வழியே கட்டளைகளை அளிக்கும் முறையைத் தேர்வு செய்து அதற்கான கண்ணாடி ஒன்றையும் வடிவமைத்தார். மொத்த எடை 700 கிராம்களே கொண்ட செயற்கை கை, இடது கண்ணின் அசைவுகள் மூலம் கட்டுப்படுத்தப்படும்.

ஆண்டனி எடிசன்-x

கண்ணாடியில் உள்ள சென்சார் கண்ணசைவுகளை செயற்கைக் கைக்குத் தெரிவிக்கும். ஒரு பொருளைப் பற்றுவதற்கு மூன்று நொடிகள் கண்ணை மூடினால் கை அதனைப் பற்றிக் கொள்ளும், அதனை வேறு இடத்தில் வைத்து மீண்டும் மூன்று நொடிகள் கண்ணை மூடினால் கை பொருளைப் பற்றுவதை நிறுத்தி விலகிவிடும். எலக்ட்ரானிக் சர்க்கியூட்கள், பாகங்கள் ஆகியவற்றைக் கைகளாலேயே இணைத்து அமைக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் செயற்கை கையைத் தயாரிக்க பன்னிரண்டாயிரம் ரூபாய் செலவானது என்றும், இதனைப் பெரிய அளவில் தயாரிக்கும் பொழுது மேலும் திறனை மேம்படுத்தியும், அழகாகவும், எளிமையாகவும் ஏழாயிரம் ரூபாய் அடக்க விலையில் அமையுமாறும் உருவாக்கலாம் என்பது இவரது கணிப்பு.

இவரது விலைகுறைந்த ரோபோட்டிக் செயற்கை கையை மும்பையில் நடந்த கல்லூரி கண்காட்சியில் காட்சிப்படுத்திய பொழுது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சில தொழில் நுட்ப நிறுவனங்களும் ஆர்வம் காட்டியுள்ளன. கண்காட்சியில் ஆண்டனி எடிசனுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இவர் மேலும் சில அறிவியல் போட்டிகளில் பங்கு பெற்றுத் தனது திறமையைக் காண்பித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற NIYANTRA 2015 இயந்திரங்கள் வடிவமைப்பு போட்டியில் (NIY-37) இறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்றவர் இவர். சூரியமின்சக்தியில் இயங்கும் ஊர்தியை (electric solar vehicle) இவரும் இவரது குழுவினரும் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர்.

தற்போது ரோபோட்டிக் செயற்கை கையின் காப்புரிமையினைப் பெற விண்ணப்பிப்பதற்குத் தேவையான பணத்தினை சேர்த்துக் கொண்டுள்ளார் ஆண்டனி எடிசன். ரோபோட்டிக் செயற்கை கையை மேம்படுத்தி பலரும் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பது இவரது நோக்கம். அறிவியலிலும் மருத்துவத்துறையிலும் முன்னேற்றங்கள் பல நிகழ்ந்தாலும், புதிய பல கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றை சாதாரண மக்கள் அடைந்து பலன் பெரும் வகையில் அவை அமையாது போனால் அதனால் கிடைக்கும் பயன் குறைவே. செயற்கை உறுப்புகளை நம்பியிருக்கும் விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு, அழகிற்காகப் பொருத்தப்படும் செயலற்ற உடல் உறுப்புகளைவிட, இயங்கும் கை கால்கள் கிடைத்தால் நடைமுறை வாழ்க்கையில் பிறர் தயவை அவர்கள் நாடி இருப்பதைக் குறைக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த வகையில் குறைந்தவிலையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்ப ஆண்டனி எடிசனால் வடிவமைக்கப்பட்ட ரோபோட்டிக் செயற்கை கை புதிய பாதையை வகுத்து மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது நம்பிக்கைத்யைத் தருகிறது. மெக்கட்ரானிக்ஸில் மேற்படிப்பிற்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் கல்வியைத் தொடர விரும்பும் ஆண்டனி எடிசனின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகள். அவரது ரோபோட்டிக் செயற்கை கை சாதனைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

 

_______________________________________________________

வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள:
Mr. Antony Edison
B.E. (Mechatronics), Undergraduate 2013 – 2016
Department of Mechatronics Engineering
Hindusthan college of Engineering and Technology
Coimbatore – 32, Tamil Nadu, India
Phone: +917502576366
e-mailto:00e...@gmail.com


சமூக வலைத்தளங்களில்:

https://www.facebook.com/akon.antoni

https://in.linkedin.com/in/antony-edison-92ba00a0

https://plus.google.com/103307734384379919513/

http://hindusthan.academia.edu/AntonyEdison

https://www.youtube.com/channel/UCo8U_KYSTvj2iTp2VPaH1Uw


தகவல் மற்றும் படங்கள் பெற்ற தளங்கள்:
குறைந்த விலையில் ரோபோட்டிக் செயற்கை கை: தமிழனின் அசத்தல் சாதனை!

http://www.vikatan.com/news/miscellaneous/58304-robotic-artificial-hand-tamil-student-invention.art?

Electronics for You, June 2015

https://books.google.com/books?isbn=1329172744

NIYANTRA 2015 Finalists!

http://india.ni.com/niyantra/shortlist

http://www.ni.com/en-us.html

மற்றும் ஆண்டனி எடிசனின்
வல்லமையாளரின் சமூக வலைத்தளங்கள்

_______________________________________________________



நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=66046

தேமொழி

unread,
Feb 8, 2016, 4:33:32 AM2/8/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

பிப்ரவரி 8, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  மாணவி திருமிகு. உதயகீர்த்திகா அவர்கள்

உதயகீர்த்திகா

 

வல்லமையின் இந்த வார வல்லமையாளர், உக்ரைன் நாட்டிலுள்ள, உலகின் சிறந்த விண்வெளிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘கார்க்கிவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஏர்ஃபோர்ஸ்’ (Kharkov Air Force University, Ukraine) இல் ‘ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங்’ (Aerospace engineering) படிக்கும் மாணவி திருமிகு. உதயகீர்த்திகா அவர்கள். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர், வல்லமையின் அறிவியல் எழுத்தாளரான திரு. சி. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

தேனியின் அல்லிநகரம் என்ற ஊரினைச் சேர்ந்த, ஓர் எளிமையான சராசரி இந்தியக் குடும்பத்தில், தனியார் நிறுவனமொன்றில் குறைந்த ஊதிய வேலையிலிருப்பவரும், சிறுகதை எழுத்தாளரும் ஓவியருமான திரு. தாமோதரனுக்கும், தட்டச்சுப் பணிபுரியும் திருமதி. அமுதாவிற்கும் ஒரே செல்ல மகளாகப் பிறந்தவர் உதயகீர்த்திகா. குழந்தைப் பருவத்தில் இருந்தே வானவியல் பற்றிய ஆர்வம் கொண்டவர். பள்ளி நாட்களில் நிலா, வானம், அண்டம், விண்வெளி, விண்வெளி வீரர் என விண்வெளி தொடர்பான நூல்களைத் தேடித் தேடிப் படித்துத் தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்வதிலும், விண்வெளி தொடர்பான போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளைக் குவிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது தந்தையும் ஆய்வுக்குத் தேவையென மகள் கேட்கும் விலை அதிகமான நூல்களையும் வாங்கிக் கொடுப்பதற்காக ஒரு வேளை உணவைத் தியாகம் செய்யத் தயங்காதவர்.

2011-ம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடைபெற்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் தனது ஆய்வைச் சமர்ப்பித்து,‘Inspire Award’ விருதும், 2012-ம் ஆண்டு மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் சார்பாக மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பரிசும், 2014-ம் ஆண்டு அதே விண்வெளி ஆய்வு மையம் நடத்திய ‘வழி நடத்தும் விண்வெளி’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியிலும் மாநில அளவில் முதல் பரிசும் பெற்றுள்ளார். மேலும் இவர் பெற்ற பல பரிசுகளின் பட்டியல் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

உதயகீர்த்திகா1பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளியின் முதல் மாணவி, அறிவியல் பாடத்தில் நூற்றுக்குநூறு, ப்ளஸ் டூ தேர்விலும் நல்ல மதிப்பெண்களைப் (1030 ) பெற்றவரான உதயகீர்த்திகா தமிழ்வழிக் கல்வி பெற்றவர். விண்வெளி ஆய்வு பற்றி படிக்க விரும்பி தனது ஆய்வுகள், கட்டுரைகள், பெற்ற பரிசுகள், மதிப்பெண்கள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து கார்க்கிவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஏர்ஃபோர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்த பொழுது அங்குப் படிக்க உதவித் தொகையும் வழங்கப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டார். மேற்கொண்டு, நான்காண்டு படிப்பிற்குத் தேவையான சுமார் 12 லட்சம் ரூபாய் செலவிற்காக, வங்கியில் கொஞ்சம் கல்விக் கடன், பிற இடங்களில் கடன் என ஒரு 7 லட்சம், உதவும் உள்ளங்கள் நீட்டிய உதவிக்கரங்கள் வழங்கிய தொகை எனச் சேகரித்தது போக, நடிகர் ராகவா லாரன்ஸும் ஆனந்த விகடனும் இணைந்து செயல்படுத்தும் ‘அறம் செய விரும்பு’ திட்டத்திலும் விண்ணப்பித்தார். மீதம் உள்ள தொகைக்கு 1.80 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி நடிகர் ராகவா லாரன்ஸும் உதவி செய்துள்ளார்.

தனக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருக்கும் தனது அப்பாவிற்காக விண்வெளி ஆய்வில் வெற்றிபெறுவதுதான் தான் செய்யும் கைமாறு எனக் கூறும் உதயகீர்த்திகா, “அறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கியதாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன்களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லைதாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மையில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது … விண்வெளி ஆய்வு தொடர்பான பொறியியல் படிப்பை முடித்து விண்வெளி வீராங்கனையாகவும், அப்துல்கலாம் போல மிகச்சிறந்த விஞ்ஞானியாகவும் ஆவேன். உக்ரைன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, இந்திய விண்வெளி ஆய்வுத்துறைக்கு எனது பங்களிப்பைச் செலுத்துவேன். ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உதவியாக இருப்பது, அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, ஏழை மாணவர்களும், விண்வெளி ஆய்வு தொடர்பான கல்வி கற்பதற்கு வழிவகை செய்வேன்,” என்று பத்திரிக்கைகளுக்கு வழங்கிய நேர்காணல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

உயர்ந்த குறிக்கோள்களையும், நோக்கங்களையும் கொண்டுள்ள உதயகீர்த்திகாவின் முயற்சிகள் வெற்றியடைந்து விண்வெளி ஆய்வுகள் பலசெய்து நாட்டிற்குப் பெருமை தேடித்தரவும், இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியாக இருந்து வழி நடத்தவும் வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

_______________________________________________________
தகவல் பெற்ற இடங்கள்:
தேனி பெண்ணின் விண்வெளி கனவு..

http://siragu.com/?p=19568

உதயகீர்த்திகா… நிறைவேறும் விண்வெளிக் கனவு!

http://www.vikatan.com/news/article.php?aid=55240

காணொளி:

https://youtu.be/cFv90F0TeEo

_______________________________________________________
உதயகீர்த்திகா பெற்ற பரிசுகளும் விருதுகளும்:
* 2005-ஆம் ஆண்டு திண்டுக்கல் நேருகலைமன்றம் சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவியருக்கிடையே நடைபெற்ற ஓவியப்போட்டியில் முதற்பரிசு.
* 2007-ஆம் ஆண்டு மதுரை உயர்மாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பாக நடத்தப்பட்ட உரையாடல் போட்டியில் மூன்றாம் பரிசு.
* 2007-ஆம் ஆண்டு தேனி மேரிமாதா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் இரண்டு நிமிடங்களில் 53 திருக்குறள்களை ஒப்புவித்து 2-ஆம் பரிசு.
* 2009-ஆம் ஆண்டு என்னுடைய கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் கல்வித்திறன்களைப் பாராட்டி, பாரதியுவகேந்திரா என்ற தன்னார்வ நிறுவனம் சார்பாக, “யுவஸ்ரீகலாபாரதி’ என்ற விருது.
* 2010-ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகள் தினவிழாவையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு பற்றிய கட்டுரைப் போட்டியில், முதல் பரிசாக தங்கப் பதக்கம் பெற்றேன்.
* 2010-ஆம் ஆண்டு தேனி ஜூனியர் சேம்பர்ஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டியில் முதற்பரிசு.
* 2011-ஆம் ஆண்டு மத்தியஅரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புப் போட்டியில், அறிவியல் கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்ததற்காக, அறிவியல் விருது.
* 2011-ஆண்டு என் கவிதை, ஓவியம், கட்டுரை மற்றும் கல்வி ஆற்றலைப் பாராட்டி, மதுரையில் உள்ள ரோஜா கலைமன்றத்தின் சார்பில் சுவாமி விவேகானந்தர் விருது. 2012-ஆம் ஆண்டில் தேனி மாட்டஅளவில் பள்ளி மாணவ-மாணவியருக்கிடையில் நடத்தப்பட்ட தனித்திறன் மற்றும் நாட்டுப்புற நடனம் போட்டியில் முதற்பரிசு.
* 2013-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றதற்காக பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.
* 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சர்வதேச நுகர்வோர் தினவிழாவை முன்னிட்டு மாவட்டஅளவில் உள்ள பள்ளிமாணவ-மாணவியருக்கிடையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
* 2012-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் சார்பில் “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பில் மாநிலஅளவில், நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில், பெங்களுரு இஸ்ரோ மைய விஞ்ஞானி இராம கிருஷ்ணனிடமிருந்து விருது பெற்றேன்.
* 2014-ஆம் ஆண்டும் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் மாநிலஅளவில் பள்ளிமாணவ-மாணவியருக்கிடையில் “வழிநடத்தும் விண்வெளி’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு. இதன் மூலமாக பெங்களூரில் உள்ள விண்வெளி ஆய்வுமையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளையும் பி.எஸ்.எல்.வி., மங்கள்யான் ராக்கெட்டுகளை உருவாக்கிய விஞ்ஞானிகளையும் சந்தித்துப்பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

_______________________________________________________



நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=66054

Tthamizth Tthenee

unread,
Feb 8, 2016, 6:47:47 AM2/8/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
2016-02-08 15:03 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
மாணவி திருமிகு. உதயகீர்த்திகா


 மாணவி திருமிகு. உதயகீர்த்திகா
​  அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ​

தேமொழி

unread,
Feb 14, 2016, 8:44:50 PM2/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, muela...@gmail.com

பிப்ரவரி 15, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

elangovan

 

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்கள். பாரீசைத் தலைமையகமாகக் கொண்டு, கனடாவிலும், துபாயிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி “உலகத் தொல்காப்பிய மன்றம்” கிளையின் இந்திய பொறுப்பாளராக, புதுச்சேரி அரசு காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆய்வு மையத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் மு.இளங்கோவன் பணியினை முன்னெடுத்துச் செல்கிறார்.

elangovan2

துவக்கப்பட்டிருக்கும் “உலகத் தொல்காப்பிய மன்றம்” புதுச்சேரி கிளையின் சார்பாக, மாதம் ஒரு தமிழறிஞர் உரை என்ற திட்டத்தில், தொல்காப்பியம் கற்றோர் அல்லாது பொதுமக்களையும் சென்றடையும் நிலை வரவேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறப்போகும் சொற்பொழிவுகளின் வரிசையில் முதல் பொழிவு சென்ற வாரம் 08.02.2016 அன்று “தொல்காப்பியம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சியில் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்றிவரும் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

elangovan3

முனைவர் மு.இளங்கோவன் இணையத்தமிழ் வளர்ச்சி பற்றியும், கணினித்தமிழ் வளர்ச்சி பற்றியும் தமிழ் இணையப் பயிலரங்கங்கள் பலவற்றையும், ஊடகக் கட்டுரைகளையும் தொடர்ந்து வழங்கி வருபவர். உலக அளவில் பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் பலவேற்றில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளையும், உரைகளையும் வழங்கி வருபவர். இருபது நூல்களை வெளியிட்டுள்ள முனைவர் மு.இளங்கோவன் அவர்கள், இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘செம்மொழி இளம் அறிஞர்’ விருது பெற்றவராவார்.

கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சார்ந்த பன்னாட்டு நிகழ்வுகளைப் பற்றியத் தகவல்களையும், உள்ளூர்த் தமிழறிஞர்கள் முதல் உலகத் தமிழறிஞர்கள் வரை பலரை நேர்காணல்கள் செய்தும், சென்ற காலங்களில் தமிழ்த்தொண்டாற்றிய மறைந்தவர்கள் பலரைப் பற்றியும் தனது வலைப்பதிவில் செய்திகளைத் தொகுத்து வழங்கி வருபவர். தமிழ் முன்னணி தினசரி நாளிதழ்களும் இவரது வலைப்பதிவுக் கட்டுரைகளில் காணும் தகவல்களையும் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஒரு இன்றியமையாத் தகவல் கருவூலம், ஒரு வரலாற்றுப் பெட்டகம் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவுகள் (http://muelangovan.blogspot.com/) என்பது குறிப்பிடத்தக்கது.

elangovan4

இசையார்வலர்கள் மகிழும் வண்ணம், கால்நூற்றாண்டு ஆய்வுகளைத் தேடித்தொகுத்த இசையாய்வுப்புதையலாக , பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் உருவாவதில் முயன்று தொகுத்து ஓராண்டிற்கு முன் வழங்கினார் முனைவர் மு.இளங்கோவன்.

“உலகத் தொல்காப்பிய மன்றம்” பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்கள் மேற்பார்வையில் சிறப்புற வளர்ந்து, அதன் நோக்கமான தொல்காப்பியம் கற்றோர் அல்லாது பொதுமக்களையும் சென்றடையும் நிலை வரவேண்டும் என்ற குறிக்கோளை அடைய வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

_______________________________________________________

தொடர்புக்கு:
முனைவர் மு.இளங்கோவன்
Dr.Mu.Elangovan
Assistant Professor of Tamil
K. M. Centre for Postgraduate Studies,
Government of Puducherry,
Puducherry-605 008, India
மின்னஞ்சல்: muela...@gmail.com
செல்பேசி: +91 9442029053
ஃபேஸ்புக்: https://www.facebook.com/muelangovan
வலைப்பூ: http://muelangovan.blogspot.com/

_______________________________________________________



நன்றி வல்லமை:   http://www.vallamai.com/?p=66340

Anna Kannan

unread,
Feb 14, 2016, 10:23:15 PM2/14/16
to Vallamai, muelangovan
நண்பர், வல்லமையாளர் மு.இளங்கோவனின் தமிழ்ப் பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்

தேமொழி

unread,
Feb 21, 2016, 10:15:45 PM2/21/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

பிப்ரவரி 22, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  ரூபாதேவி அவர்கள்

 

ரூபாதேவி0

 

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சென்றவாரம் (பிப்ரவரி 5 முதல் 16 வரை) மேகாலயா மாநிலத்தில் கௌஹாத்தி/ஷில்லாங்கில் நடைபெற்ற “தெற்காசிய போட்டி”களில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA – Federation Internationale de Football Association) கால்பந்தாட்ட நடுவராகச் செயல்பட்ட, தமிழகத்தின் “முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவரான” திருமிகு ரூபாதேவி அவர்கள். அவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான அணுவியல் விஞ்ஞானி திரு. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவின் நன்றிகள் உரித்தாகிறது.

ரூபாதேவி1

திண்டுக்கல்லைச் சேர்ந்த 25 வயதான ரூபாதேவி பள்ளி நாட்களிலேயே கால்பந்தாட்ட விளையாட்டினால் ஈர்க்கப்பட்டவர். இவரது ஆர்வத்தைக் கண்ட பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ் இவருக்கு அளித்த ஊக்கத்தினாலும் பயிற்சியாலும் பள்ளிநாட்களில் திண்டுக்கல் அணியின் சார்பாக மாவட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். பல்கலைக்கழக நாட்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக்கழக அணிக்காகவும், பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளில் பங்கேற்றும் விளையாடி வந்துள்ளார்.

இளைஞர்களுக்கு நடுவர் பயிற்சி அளிக்கும் நோக்கில், 25 வயதுக்குட்பட்டோருக்காக ஆசிய கால்பந்து சம்மேளனம் உருவாக்கிய ‘புராஜெக்ட் ஃப்யூச்சர்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுத் தேறிய இரு பெண்களில் ரூபாதேவியும் ஒருவர். இலங்கை, கத்தார், பஹ்ரைன், மலேசியா, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் நடுவராகப் பணியாற்றி இருப்பதுடன், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேசிய அளவிலான கால்பந்துப் போட்டிகளுக்கும், ஆசிய அளவிலான போட்டிகளுக்கும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

ரூபாதேவி

ரூபாதேவியின் ஈடுபாட்டைக் கவனித்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் சர்வதேச அளவில் நடுவராகப் பணியாற்ற இவரைப் பரிந்துரைத்தது. அதற்கான எழுத்து, உடல் திறன் தேர்வுகளில் வெற்றிபெற்ற இரு பெண்களில் ஒருவரான ரூபாதேவிக்கு சர்வதேச நடுவராகப் பணியாற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனம் வாய்ப்பளித்துள்ளது. இவரது முயற்சிகளுக்குக் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரத்தினால், தென் இந்தியாவின் முதல் சர்வதேச பெண் நடுவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமை ரூபாதேவிக்குக் கிடைத்துள்ளது.

ரூபாதேவி2

இந்திய “தேசிய அளவில்” இதுவரை ஆறு பெண்கள் மட்டுமே கால்பந்தாட்ட நடுவராகத் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் ரூபாதேவியும், இவருக்குப் பிறகு எஸ். வசந்தியும் தேசிய அளவு நடுவராகத் தகுதி பெற்றார்கள். சர்வதேச அளவில் பெண்கள் கால்பந்தாட்ட நடுவராகப் பங்கேற்கும் நிலை இதுவரை மகளிருக்கு இருந்ததில்லை.

ஆண்களின் களமாக இருந்துவரும் கால்பந்தாட்ட நடுவர் பணியில் அதிரடியாக இறங்கி அனைவரையும் தனது முயற்சியால் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ரூபாதேவியின் எதிர்காலக் குறிக்கோள், ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலகக் கால்பந்து போட்டிகளில் நடுவராகப் பங்கேற்க வேண்டும் என்பதே. ரூபாதேவி அந்த உயரங்களை அடைய வல்லமை குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

_______________________________________________________
படங்களும் தகவல்களும் பெற்ற இடங்கள்: 
இணையத்திலிருந்தும் கீழ்காணும் தளங்களில் இருந்தும் …
South Asian Games – 2016

http://southasiangames2016.com/

 
தமிழக பெண்ணுக்கு அங்கீகாரம் : சர்வதேச கால்பந்து நடுவராக ரூபாவை தேர்வு செய்த பிஃபா!

http://www.vikatan.com/news/sports/57134-indian-woman-referee-selected-by-fifa.art

 
ஃபிஃபா ரெஃப்ரி ரூபாதேவி!

http://www.vikatan.com/article.php?aid=115146

 
கால்பந்து தமிழச்சி!

http://siragu.com/?p=19756

_______________________________________________________



நன்றி வல்லமை:   http://www.vallamai.com/?p=66506



தேமொழி

unread,
Feb 27, 2016, 4:44:53 PM2/27/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Saturday, February 27, 2016 at 11:17:22 AM UTC-8, Anna Kannan wrote:
இந்த வார வல்லமையாளர் தேர்வினை வாரந்தோறும் தொடர்ந்து நடத்தி, 100 வல்லமையாளர்களை அடையாளம் காட்டிய முனைவர் தேமொழி அவர்கள், கடந்த வாரம் 200ஆவது வல்லமையாளரை அறிவித்தார்.

தகுந்தவர்களைத் தேடி, பரிந்துரைகளைப் பெற்று, அலசி ஆராய்ந்து, உரிய நேரத்தில் உரியவர்களைக் கண்டறிந்து,  அவர்களுக்கு விருதளித்து, ஊக்கமும் உற்சாகமும் ஊட்டிய தேமொழி அவர்களை இந்தத் தருணத்தில் பெரிதும் பாராட்டுகிறோம். நமது முயற்சிகளுக்குச் சிறந்த முறையில் ஒத்துழைத்த அவருக்கு நன்றிகள். வல்லமையில் அவரது பங்களிப்பு, வேறு வகையில் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முதல் 100 வல்லமையாளர்களைத் திவாகர் அவர்களும் (சில வாரங்கள் இன்னம்பூரான்) அடுத்த 100 வல்லமையாளர்களைத் தேமொழியும் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, அடுத்த 100 பேர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தேமொழி பல மாதங்கள் முன்பே கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன்படி, எமது வேண்டுகோளை ஏற்று, அடுத்த வாரத்திலிருந்து வல்லமையாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பினைக் கனேடிய வாட்டர்லூ பல்கலையின் மின்னணுவியல் துறைப் பேராசிரியரும் 126ஆவது வல்லமையாளருமான  முனைவர் செ.இரா.செல்வக்குமார் அவர்கள் ஏற்கிறார். அவரை உங்கள் அனைவரின் சார்பிலும் பேருவகையுடன் வரவேற்கிறேன்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்




அன்பு நண்பர்களுக்கு வணக்கம். 

திரு. திவாகர் அவர்களின் முதல் 100 வல்லமையாளர்களைத் தொடர்ந்து, அடுத்த 100 வல்லமையாளர்களைத் தெரிவு செய்து பாராட்டும் வாய்ப்பை எனக்களித்த வல்லமையின் நிர்வாகக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

நிறுவனர் அண்ணாகண்ணன் மற்றும் நிர்வாக ஆசிரியர் பவளசங்கரி ஆகியோர் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை தந்த ஊக்கத்தில் ஒவ்வொரு கட்டுரையை எழுதும்பொழுதும் அந்த எழுத்து மனநிறைவைத் தந்தது. 

சாதனைகள் மூலம் தங்களை வேறுபடுத்திக் கொண்டு உலகிற்கு முன்மாதிரியாக விளங்கியவர்களைப் பாராட்டி ஒவ்வொரு வார இறுதியிலும் கட்டுரை எழுதிய தருணங்கள் மகிழ்ச்சி தரும், நினைவில் உறைந்து போய்விட்ட அருமையான நேரங்கள். ஒவ்வொரு வாரமும் கலந்தாலோசனையில் உதவிய அண்ணாகண்ணன், பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி ஆகியோருக்கு நன்றிகள். அவர்களது ஆலோசனையின் காரணமாக வல்லமையாளர் தெரிவுகள் சிறப்பாக அமைந்தது. 

இந்நேரத்தில் சாதனையாளர்களை அடையாளம் காட்டும் பந்தத்தைக் கையிலெடுத்து, வழிகாட்டியாய் முன்னெடுத்துச் சென்று, தொடர் ஓட்டத்தில் என் கையில் பந்தத்தை கொடுத்துச் சென்ற திரு. திவாகர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் பங்கைச் சிறப்பாக மனநிறைவுடன் செய்ய உற்சாகப் படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பரிந்துரைகள் கூறி உதவிய நண்பர்கள் (அகரவரிசையில்): 
அண்ணாகண்ணன் 
காவிரிமைந்தன் 
சி. ஜெயபாரதன் 
சு. ரவி 
சொ.வினைதீர்த்தான் 
தமிழ்த்தேனீ 
திருவள்ளுவன் இலக்குவனார் 
திரு. திவாகர் 
தேவ்ராஜ் 
ந. உ . துரை 
நரசையா 
நா. கணேசன் 
பவளசங்கரி 
பழமைபேசி 
பி. ஆர். ரமேஷ் 
பி.எம். இப்ராஹீம் 
மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
முனைவர் இராஜம் 
முனைவர் சுபாஷிணி (மின்தமிழ் நிறுவனர்) 
மேகலா இராமமூர்த்தி 
ரஞ்சனி 
ரவி சுப்பிரமணியன் 
வேந்தர் 
அனைவருக்கும் என் நன்றிகள், பட்டியலில் எவருடைய பெயராவது விடுபட்டிருந்தால் என் கவனக் குறைவென்று கருதிப் பொருத்தருள்க. பரிந்துரைக்கப்பட்டவர்களில் சிலர் விருது பெறும் நிலையை அடையாமல் போயிருந்தாலும், பரிந்துரைத்து எனது முயற்சிக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள அணுவியல் விஞ்ஞானி திரு. ஜெயபாரதன் அவர்கள் மகளிர் பலரைப் பரிந்துரைத்து ஆதரவாக இருந்தது நெகிழ்வு தரும் செயல். பெண்களின் சார்பில் அவருக்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணிடம் தொடங்கி (முனைவர் வி.எஸ். இராஜம்) பெண்ணுடன் (சர்வதேச கால்பந்து நடுவர் ரூபாதேவி) முடிவடைந்துள்ளது எனது வல்லமையாளர்கள் கட்டுரை வரிசை என்பதில் எனக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சி. 

பந்தத்தை என்னிடம் இருந்து பெற்று தொடர்ந்து எடுத்துச் செல்லவிருக்கும் பேராசிரியர் முனைவர் செ.இரா.செல்வக்குமார் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும், பேராசிரியர் செல்வா மூலம் மேலும் பல வல்லமையாளர்களை அறியும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கப்போவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

அனைவருக்கும் நன்றி. 

அன்புடன் 
தேமொழி 

பின் குறிப்பு: 
என் கட்டுரைகளைப் பற்றிய கருத்துகள் இருப்பின் இந்த இழையில் பகிர்ந்து கொள்வதை வரவேற்கிறேன். வல்லமையாளர்கள் கட்டுரைகள் நூல்களாக உருவாக வாய்ப்பிருப்பின் அவற்றை வாசகர் கருத்து பகுதியில் இணைக்கவும் உதவும். 

திரு. திவாகர் அவர்கள் வல்லமையாளர் கட்டுரை வழங்க இயலாது இருந்த ஒருசில நேரங்களில் திரு. இன்னம்பூரான் அவர்களுடன், பேராசிரியர் நாகராசன் அவர்களும் ஒருசிலரை வல்லமையாளராக அடையாளம் காட்டி உதவியுள்ளார்.



 


On Sunday, February 21, 2016 at 7:15:43 PM UTC-8, தேமொழி wrote:

பிப்ரவரி 22, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  ரூபாதேவி அவர்கள்

 

ரூபாதேவி0

 

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சென்றவாரம் (பிப்ரவரி 5 முதல் 16 வரை) மேகாலயா மாநிலத்தில் கௌஹாத்தி/ஷில்லாங்கில் நடைபெற்ற “தெற்காசிய போட்டி”களில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA – Federation Internationale de Football Association) கால்பந்தாட்ட நடுவராகச் செயல்பட்ட, தமிழகத்தின் “முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவரான” திருமிகு ரூபாதேவி அவர்கள். அவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான அணுவியல் விஞ்ஞானி திரு. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவின் நன்றிகள் உரித்தாகிறது.

...

சி. ஜெயபாரதன்

unread,
Feb 27, 2016, 6:54:03 PM2/27/16
to vallamai, மின்தமிழ், தேமொழி, C.R. Selvakumar
தேமொழி,

இனிய எளிய தமிழில் ஒப்பற்ற 100 வல்லமையாளரை ஒவ்வொரு வாரமும் வல்லமையில் ஏற்றியதற்கு என்னினிய பாராட்டுகள்.  அவற்றை [100] மட்டும் உங்கள் பெயரில் ஒரு தமிழ் நூலாக வெளியிட வேண்டுகிறேன்.  

செல்வக்குமார்,

வல்லமைக் குழுவில் வல்லவரைத் தேர்ந்தெடுத்து எழுதும் பணியை ஏற்றுக் கொண்டதற்கு முதலில் பாராட்டுகள்.

நான் யாரையும் பரிந்துரைத்தால் என் பெயரைச் சி. செயபாரதன் என்று எழுதி என்னைப் புண்படுத்துவீர்கள்.  தந்தை எனக்கு வைத்த பெயர் அதுவன்று.  

கஸ்தூரி என்ற பெயருள்ள ஒருவரைப் பரிந்துரைத்தால், கத்தூரி என்று எழுதி அவரையும் புண்படுத்துவீர்கள். ரூபாதேவி என்றால் உரூபாதேவி, இரூபாதேவி என்று புதிய எழுதுவீர்கள்.  வல்லமையாளர் தன் பெயர் அதுவில்லையே என்று வருந்தலாம்.

வல்லமையில் இப்படிக் கிரந்தமற்று எழுதப் போகும் உங்களை யாரும் தடுக்க முடியாது.

வல்லமை.காம் வலையின் வாசகர் தனித்தமிழர் மட்டும் அல்லர். கலப்புத் தமிழரும் உள்ளார்.  நீங்களோ ஸ, ஷ, ஹ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கலந்தால், தமிழ் இலக்கியம் பாழ்படும் என்று போராடும் தனித்தமிழர்.  

இவை உங்கள் தேர்வைக் குறைகூற எழுதப்பட வில்லை.  பெயர்ச்சொற்கள் முறிவுபடும் என்று மனதில் இருப்பதை எழுதினேன்.

நடபுடன்,
சி. ஜெயபாரதன்.
  

--

coral shree

unread,
Feb 27, 2016, 8:27:23 PM2/27/16
to vallamai, மின்தமிழ்
கடந்த 100 வாரங்களும் வல்லமையாளர் தேர்வை எந்தவித தொய்வும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் தேர்ந்தெடுத்து வெளியிட்ட முனைவர் தேமொழி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். ஒவ்வொரு கட்டுரையையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பும், எழுதி முடித்த பின்பும் ஆசிரியர் குழுவின் ஆலோசனையையும் பெறத் தயங்கியதில்லை அவர். இருப்பினும் அவருடைய கருத்துச் சுதந்திரத்திற்கு எந்தவித தடையும், இடையூறும் நம் ஆசிரியர் குழுவிலிருந்து அவருக்கு ஏற்படுத்தவில்லை. வல்லமையாளர் தேர்வு மற்றும் வல்லமையாளர் குறித்து அவர் வெளியிட்ட அனைத்துத் தகவல்களும், பரிந்துரை வழங்கியவர்கள் கொடுத்த தகவல்களுடன்,  அவருடைய சொந்த தொகுப்புகளும், கருத்துகளுமே. அந்த வகையில் வல்லமையாளர் தேர்வை வல்லமையாக நடத்தி முடித்துள்ள தேமொழிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். தொடர்ந்து வல்லமை ஆசிரியர் குழுவில் அவருடைய பங்களிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நன்றி.

அன்புடன்
பவள சங்கரி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Tthamizth Tthenee

unread,
Feb 27, 2016, 9:10:39 PM2/27/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
வல்லமையாளர்களையே  தேர்ந்தெடுக்கும் வல்லமை பெற்ற    தேமொழிக்கு பாராட்டுக்கள்

இனி வல்லமையாளரகளைத்  தேர்ந்தெடுக்கவிருக்கும்   திரு  செல்வ குமார் அவர்களுக்கும்    வாழ்த்துக்கள்


அன்புடன்
தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




Anna Kannan

unread,
Feb 28, 2016, 8:36:17 AM2/28/16
to Vallamai, தேமொழி, C.R. Selvakumar
வல்லமையில் படைப்பாளர்கள் அவரவர் நடையில் எழுதலாம். கூடிய வரை தமிழில் எழுதலாம் என்பதே எமது பரிந்துரை. பெயர்ச் சொற்களைப் புரியும் வகையில் எழுதுவது நல்லது. அயல் சொற்கள் சிலவற்றைத் தமிழில் எழுதுகையில், படிக்க எளிதாக இல்லாத சூழலில் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் பெயரைக் குறிப்பிடலாம். 

அன்புடன் என்றும்,
அ.க.
--
Dr.Annakannan
Localization Lead
Indus OS

C.R. Selvakumar

unread,
Feb 28, 2016, 9:55:24 AM2/28/16
to Anna Kannan, Vallamai, தேமொழி
தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி  அ.க.

வரவேற்பு நன்மொழிகள் கூறிய அனைவருக்கும் நன்றி.
ஐயன்மீர் இன்னம்பூரன், திவாகர், தமிழ்த்தேனீ, வினைதீர்த்தான் 
யோகியார் ஆகிய யாவருக்கும் என் நன்றி.

அன்புடன்
செல்வா
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

C.R. Selvakumar

unread,
Feb 28, 2016, 10:27:41 AM2/28/16
to Anna Kannan, Vallamai, தேமொழி
//இன்னம்பூரன்// 
ஐயா  இன்னம்பூரான் எனத் திருத்திப்படிக்க வேண்டுகின்றேன். மன்னிக்கவும்.

அன்புடன்
செல்வா
Reply all
Reply to author
Forward
0 new messages