அதேபோல, சமணர்கள் திருக்குறளை வழிபடும்
பழைய வெண்பா ஒன்றுண்டு. அதனை அபிதான
சிந்தாமணியிலிருந்து (பக். 850) தருகிறேன்.
பாண்டித்துரைத்தேவர் ஆதரவுடன் தமிழ்ப் பேராசிரியர்
ஆ. சிங்காரவேலனார் தொகுத்த கலைக்களஞ்சியம்
தரும் வெண்பா. பானுகுமாரின் பதிவுகளில் இருக்கலாம்.
சைநர் வாழ்த்து:
”முப்பாலு முண்டோம் முலைப்பா லினிநுகரோ
மெப்பாலுக் கப்பாலு மாயினோ மெப்பொருளு
முள்ளபடி யுணர்ந்தோ மோதிக் குறைதீர்ந்தோம்
வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து”
சமயதிவாகர முனிவர் “எம்மோத்து” என்று சைநர்கள்
கொண்டாடும் மரபுடன் சைநர்களின் இப் பழைய வாழ்த்தும்
(ஓதிக் குறை தீர்ந்தோம்) சேர்ந்தது.
நா. கணேசன்
தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுகளிப்புடன் நாமும் கொண்டாடுவோம்.கிமு கிபி என்கிறது உலகம்.திமு திபி என்கிறது தமிழ் உலகம்.திருவள்ளுவருக்கு முன்னும் பின்னும்கரைகள் தோன்ற தமிழ்வரலாற்று ஆறு ஓடுவது அறிவோம்.வள்ளுவ ஆண்டு கொள்ளுவோம் நாமே.துள்ளுதலோடு கொண்டாடி மகிழ்வோம்இனிக்கும் செந்தமிழ்ப் புத்தாண்டு!நண்பர்கள் எல்லோருக்கும் சொல்கின்றேன்நட்புடன்அன்புடன்பண்புடன்மற்றும்உள்ளத்துடன் அதன்வெள்ளத்துடன்தமிழில் நிமிர்ந்ததெம்புடனேசொல்லி சொல்லி மகிழ்கின்றேன்இன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.அன்புடன் ருத்ரா
சைநர் வாழ்த்து:
”முப்பாலு முண்டோம் முலைப்பா லினிநுகரோ
மெப்பாலுக் கப்பாலு மாயினோ மெப்பொருளு
முள்ளபடி யுணர்ந்தோ மோதிக் குறைதீர்ந்தோம்
வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து”
சமயதிவாகர முனிவர் “எம்மோத்து” என்று சைநர்கள்
கொண்டாடும் மரபுடன் சைநர்களின் இப் பழைய வாழ்த்தும்
(ஓதிக் குறை தீர்ந்தோம்) சேர்ந்தது.