On Sun, Mar 15, 2026 at 8:06 AM Niranjan Bharathi <
niranjan...@gmail.com> wrote:
> வைரம் / வயிரம் + முத்து = வைரமுத்து என்று இதுகாறும் நினைத்திருந்தேன். அப்படி பொருள் கொள்ளலாகாதா?
சினிமா உலகில் அவ்வாறே துதி செய்கின்றனர். ஆனால், பெயர் அமைந்த சரிதம் வேறு.
சிறுகூடல்பட்டி கண்ணதாசன் ஊர். அவ்வூர்ப் பெண் வைரமுத்து. தன் பெயர்க் காரணத்தை நீயா நானா நிகழ்ச்சியில்
விளக்கினார். 2011-ல் (15 ஆண்டு முன்!) குறிப்பிட்டு எழுதினேன். வைரமுத்தின் காணொளி கண்டு தெளியலாம்.
https://cruelkingstvshows.blogspot.com/2014/06/neeya-naana-vairamuthu-girl-from.html(காணொளி தரவிறக்கி அனுப்பவும். பாதுகாக்க வேண்டியது.)
Later on, Sirukoodalpatti Vairamuthu gave an interview during the Jallikattu battle.
https://cinema.vikatan.com/television/78263-village-girl-vairamuthu-speaks-her-love-for-cattlehttps://www.youtube.com/watch?v=wfQa2UxEqx8இடைக்குறை (Syncope) எடுத்துக்காட்டு:
(1) வைரவமுத்து > வைரமுத்து
(2) யாவர் > யார்
(3) வானவன் > வானன்
வல்லை யேஎனக்கு இன்னும் உன்கழல்
காட்டி மீட்கவும் மறுவில் வானனே. (திருவாசகம்)
(4) வீரராகவமங்கலம் > வீரராகமங்கலம் (கல்வெட்டு, முதுமுனைவர் குடவாயில் பாலு கட்டுரை).
(5) சொல்லிவிடு > சொல்லிடு
(6) விற்றுவிடு > விற்றிடு
(7) மலையமான் > மலைமான்
(8) பாண்டியநாடு > பாண்டிநாடு
(9) அமுதகலையநாதர் > அமுதகலைநாதர். கலையநல்லூர் (சாக்கோட்டை). சுந்தரர் தேவாரம் அழகானது. கலியாணங்களில் ஓதப்படுவது.
(10) சேரலன் > சேரன்
(11) யக்ஷி/யட்சி/யக்கி குடி > (இ)சக்கிகுடி > சக்குடி (மதுரை அருகே உள்ள ஊர்). Cf. லக்ஷ்மி > லக்குமி/லட்சுமி/லச்சுமி.
(12) பேரரையன் > பேரையன்
(13) சாவ + ஊர் > சாவவூர் > சாவூர். Cf. சாவூர் பரஞ்சோதி. பாரதச் செம்மொழிகள் இரண்டிலும் வல்லவன் ஆன, சைவ சமய ஆச்சாரியன். சுமார் 80 ஆண்டுகள், 3 சோழ சக்கிரவர்த்திகளின் கல்வெட்டுகளில் வருகிறான். சைவ சித்தாந்த சாத்திரங்களையும், திருமுறைகளையும், பரத நாட்டிய சாத்திரத்தையும், இசையையும் சாவம் (ஜாவகம்) நாட்டில் பரப்பியவன். எனவே, "சாவூர்" பரஞ்சோதி எனப் புகழ்பெற்றவன். கொல்லி (கொற்றவை) + ஊர் > கொல்லியூர் > கொல்லூர் ... போல.
(14) கிரகணம் > கிரணம் (சந்திரகிரணம், சூரியகிரணம்)
(15) கிராகக > கிராக்கி (grAhaka > girAki in Telugu, Kannada. kirAkki in Tamil.)
(16) உதாகரணம் > உதாரணம்
(17) வேட்டுவப்பட்டி >
...
இன்னும் syncope காட்டுகள் இருக்கும். தெரிந்தோர் தரலாம்.
--------------
கொங்குநாட்டில் ஒரு வேட்டுப்பட்டி உண்டு.
https://ta.wikipedia.org/wiki/காளிக்கவுண்டம்பாளையம்_வேட்டுப்பட்டி_மாரியம்மன்_கோயில்“ இடைப்பாடி அருகே, கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இடைப்பாடி தாலுகா வெள்ளரிவெள்ளி பகுதியில், செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவில், நான்கு நாட்களுக்கு முன், இரவில் நாடகம் நடந்த போது, கல்லபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், வேட்டுவப்பட்டியை சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ”
http://www.dinamalar.com/news_detail.asp?id=618253&Print=1 (தமிழக முதலமைச்சர் தொகுதி இது.)
’பூலாம்பட்டி அருகே உள்ள, வேட்டுவப்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து. ’
http://www.dinamalar.com/district_detail.asp?id=1383134&dtnew=11/9/2015&Print=1வேட்டுவப்பட்டி > வேட்டுப்பட்டி எனக் குறுகுதற்கு நல்ல காட்டு ஒன்றுண்டு.
பாண்டிநாட்டில் பைரவர் வழிபாடு மிகுதியாய் இருந்துள்ளது.
வைரவன் அருள் என்னும் பொருளில் வைரவமுத்து என ஆணுக்கும், பெண்ணுக்கும்
பெயர் ஏற்பட்டிருக்கிறது. வைரவமுத்து > வைரமுத்து. கவிஞர் வைரமுத்து.
சிறுகூடல்பட்டி வைரமுத்து (< வைரவமுத்து)
http://cruelkingstvshows.blogspot.com/2014/06/neeya-naana-vairamuthu-girl-from.htmlhttps://cinema.vikatan.com/tamil-cinema/television/78263-village-girl-vairamuthu-speaks-her-love-for-cattle.htmlஇப்பெண் பேச்சைக் கேட்டு வைரவமுத்து > வைரமுத்து என 2011-ல் எழுதிய இழை:
-முத்து என முடியும் பெயர்கள். ஆயிமுத்து என்பது கோவை அய்யாமுத்துவின் பெயர்.
https://groups.google.com/forum/#!msg/mintamil/zBimydXnQgo/R07c-N5ZdccJ
--------------
கிராம தெய்வங்களின் அருளால் பெற்ற குழந்தையர்க்கு தெய்வப்பெயர் + முத்து எனப் பேர் இடுதல் மரபு.
நாச்சிமுத்து, காளிமுத்து, மாரிமுத்து, பேச்சிமுத்து, ஆயிமுத்து (கோவை அய்யாமுத்து அவர்களின் பெயர்), காத்தமுத்து, சுடலைமுத்து, செல்லமுத்து (செல்லாண்டி அம்மன்), நல்லமுத்து (நல்லபுள்ளி அம்மன்), சவரிமுத்து, மரியமுத்து, ...
வைரவருக்கு வடுகநாதன் எனப்பேர். வடுகமுத்து. வைரவமுத்து > வைரமுத்து.
சிறுகூடல்பட்டி வைரமுத்து:
இதுபோல் -முத்து என்னும் இன்னும் பேர்கள் உண்டா? நாஞ்சில்நாட்டில்
சொரிமுத்து (ஜீவாவின் பெயர்), ஒதிமுத்து.
நா. கணேசன்