பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல்

3 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Oct 11, 2025, 2:06:28 AM (6 days ago) Oct 11
to

 வீடுகளில் பெற்றோர் குழந்தைகளுடன் பேச வேண்டும்

தலைமை ஆசிரியர் வேண்டுகோள் 

பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் 

தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது. 

                                இதில் ஒன்று முதல் ஐந்தாம்  வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் பெற்றோர்களிடம் பேசும்போது, மாணவர்கள் அதிகம் விடுமுறை எடுப்பதை தவிர்க்குமாறும் , தேர்வு நேரம் மட்டுமில்லாமல் மற்ற அனைத்து நாட்களிலும் அவரவர் வீடுகளில் பாடங்களை படிக்க வலியுறுத்துமாறும், பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த உடன் பள்ளியில் அன்று நடந்த நிகழ்வுகளை பெற்றோர் கேட்குமாறும், நண்பர்களுடனான கலந்துரையாடல் தொடர்பாக ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளுமாறும்  கேட்டுக்கொண்டார்.பெற்றோர்கள் பலரும் பள்ளியில் நடைபெறும்  நிகழ்வுகளை பாராட்டி பேசினார்கள். 

                       மாணவர்களின் வீடுகளில் மரங்கள் வளர்ப்பது தொடர்பாகவும், நூலக புத்தகங்களை வாசிப்பது தொடர்பாகவும் அறிவுகளை வழங்கப்பட்டது.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி, முத்துமீனாள் ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.மாணவி ரித்திகா பள்ளியின் நடைபெற்ற சிறப்பான நிகழ்வுகள் குறித்து விளக்கினார்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது. இதில் ஒன்று முதல் ஐந்தாம்  வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=9-lAZlmI9rs

https://www.youtube.com/watch?v=aMCLnL3hQKo


IMG_2201.JPG
IMG_2207.JPG
IMG_2205.JPG
IMG_2199.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages