ர, ற வேறுபாடு மறைதலைக் காட்டும் நல்ல பதிவைக் கவிஞர் கு. மகுடேசுவரன் எழுதியுள்ளார். சங்ககாலச் சேரர்கள் தலைநகர் வஞ்சி. இது ஆன்பொருநை ஆற்றின் கரையிலே இருந்ததைச் சங்க நூல்களில் காண்கிறோம். ஆக்களின் வளத்திற்குப் புகழ்பெற்ற கொங்கு நாட்டில் ஆன்பொருநை பாய்கிறது. இன்றைய பெயர் அமராவதி ஆறு.
கரூர் என்னும் வஞ்சி மாநகருக்குப் பல பொருள்களை பாலக்காட்டுக் கணவாய் வழியாகத் தந்தது முசிறி என்னும் துறைமுகம். இது பேரியாற்றங்கரையில் இருப்பது எனச் சங்க நூல்கள் பதிவிட்டுள்ளன. முசிறி இப்பொழுது ஆர்க்கியாலஜியால் தெரிகிறோம். பெரியாறு, சுருளி/சுள்ளி மலையில் பிறக்கிறது. சுள்ளியம் பேரியாறு என
இன்றைய பெரியாற்றின் பெயர். கேரளாவின் பேராறு இது.
அடையாறு > அடையார், பெரியாறு > பெரியார், ... என எழுதப்படுகிறது. மலையாளம் ற > ர் மாற்றம். இது தமிழிலும் தாறு > தார் என்றாகிறது. உ-ம்: வாழைத்தார். சீப்புச் சீப்பாய் தாண்டுவது தாறு. உழிஞ்சில் மரத்து நெற்றுக்கள் இதுபோலத் தாறு தாறாய் இருப்பதைச் சங்க நூல்கள் பாடியுள்ளன. பாக்குக் குலைகளையும் கமுக
ந் தாறு என்கிறோம்:
https://www.researchgate.net/figure/Arecanut-Bunches-on-an-Arecanut-Tree-The-image-above-shows-a-typical-arecanut-tree-with_fig2_370054845பவழம் > ப்ரவால, கமுகு > க்ரமுக, ... போல, தமிழ் > தமிள, தமிட, ... > த்ரமிட, த்ரவிட, திராவிட (ஸம்ஸ்கிருத பாஷையில்). இன்றைய கக்ஷிப் பெயர்கள்.
நீறுடை யார்நெடு மால்வணங்கும்
நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார்
குவலய மேத்தஇ ருந்தவூராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி
தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.7 (தேவாரம்)
சாறு/சாடு :: தாறு/தாடு/தாண்டு தொடர்புடையவை. எண்ணுப் பெயர்கள் விளக்கத்தில், ஆறு (6) என்னும் எண்ணின் பெயர் பற்றிக் கூறியுள்ளேன். தாடு, மேகெதாடு (mēkedāṭu)) - ஆடுதாண்டு காவேரி - : கர்நாடகா அணை கட்டுகிறது. வறட்சிக் காலங்களில் தண்ணீர்ப் பஞ்சம் தமிழ் நாட்டில் பெருகும்.
https://groups.google.com/g/vallamai/c/CIpQ0NEVj18/m/vl-LjQ-tBQAJநல்ல தமிழில் அடையாறு, பெரியாறு, வாழைத்தாறு ... என எழுதுவோம்.
பாவாணர்:
https://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=171&pno=492எண்ணுப் பெயர் ஆறு பற்றிச் சொல்வேன். பழைய மடல்களில் எழுதியுள்ளேன்.
பிற பின்,
நா. கணேசன்
https://www.facebook.com/permalink.php/?story_fbid=636245336997468&id=381738205781517வாழைத்தார் என்று எழுதுகின்ற வழக்கம் நம் அனைவர்க்கும் உண்டு. அதனில் ஒரு பிழை இருக்கிறது.
தார் என்பது தவறு. தாறு என்பதுதான் சரி. வாழைத்தாறு என்று எழுத வேண்டும்.
எழுத்து வழக்கை விடவும் பேச்சு வழக்கு பிழையின்றி இருக்கும் என்பதற்கு வாழைத்தாறு நல்ல எடுத்துக்காட்டு.
உரிய அளவில் சிறுபகுதிகளாகப் பிரிபட்டிருக்கும் நிலையில் தொகுபட்டிருப்பது தான் தாறு.
முழுமையான வாழைத்தாறு தனிப் பழங்களாகப் பிரிபட்டிருப்பதனை இங்கே கருத வேண்டும்.
ஒரு முழுமையை மேலும் கீழும் முன்னும் பின்னும் உரியவாறு பிரித்துப் பகுத்தல் என்பது தான் தாறு. வாழைத்தாற்றில் இயற்கையே அவ்வாறு பிரித்து வைத்திருக்கிறது.
நாமே அவ்வாறு செய்வதற்கு "தாறு தாறாய் கிழித்தல்" என்று பெயர். அதனைத்தான் பிற்காலத்தில் "டாரு டாராய்க் கிழித்தான்" என்று கூறத் தொடங்கினோம்.
தாறு என்பது முற்றிலும் ஓர் ஒழுங்குக்கு உட்பட்டது. அதன் பகுப்பும் உருவமும் தொகுப்பும் முழுமையான வடிவத்தில் அமைவது. அவ்வமைப்பில் ஒழுங்கின்மையும் கேடும் தோன்றினால் அதுதான் "தாறுமாறு". ஒழுங்கின் மாறுபாடு.
" எல்லாம் தாறுமாறாய் நடக்குது, நினைச்சபடி இல்லாமல் தாறுமாறாப் போச்சு" என்று பேச்சு வழக்கில் சொல்கிறோம்.
நினைவிருக்கட்டும் .
வாழைத்தாறு
தாறு தாறாய்க் கிழித்தல் = டாரு டாராய்க் கிழித்தல்
தாறுமாறு
#நன்றி_கவிஞர்_மகுடேசுவரன்