மதுரையை வென்ற சோழ வேந்தன் முதற் பராந்தகனின் 31 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி. 938 இல் அவன் வைப்பாட்டி / போகி இந்த ஊர் தேவதான பொன்கால்குடியில் புஞ்செய் நிலம் தோண்டி பண்படுத்திய நிலத்திற்கு கிழக்கே பூஞ்சேரியும் அதற்கு மேற்கின் தென் அப்பகுதியில் அமைந்த தென் எல்லையாக அமைந்த கரிகால் கால்வாய் கரைக்கு வடக்கில் அதன் மேற்கில் பொன்கால்குடி வாய்க்காலுக்கு கிழக்கில் அதன் வட எல்லையில் மண்ணி ஆற்றுக்கு தெற்கில் இந்த நான்கு எல்லைகள் கொண்ட இரண்டரை. அந்தண் உள்ளே நிலம் ஏதும் அற்ற நிலத்தை சந்திர சூரியன் நிலைக்கும் கால அளவு ஒவ்வொரு நாளும் பத்து பிராமணருக்கு, மடைப்பள்ளி சமையலோனுக்கு விறகு இடுபவனுக்கு நெய் ஒரு பலம் மிளகு உப்பு வெற்றிலை மட்கலம் தரும் குயவனுக்கு அரிசி களைபவனுக்கு உண்ட எச்சில் சிறுகூலி உட்பட ஒரு ஆளுக்கு நாள் ஒன்றுக்கு பதின் நாழி நெல்லாக தருவதற்கு இந்த ஏற்பாடு சந்திர சூரியர் உள்ள காலம் வரை செல்வதாக தனியே வைத்த நிலம் 2. இதை பாதுகாத்து சோறு வழங்க வேண்டுவது இவ்வூர் பதிபாதமூலத்தார் கடமை