நான் பிறந்த ஊரில் பங்குனிப் பொங்கலும் பொருட்காட்சியும் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் போல...
இன்றும் அப்படித்தான்; ஆனாலும்...
தலைமுறை இடைவெளி என்பது அகில உலகிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் நடைமுறைச் சிக்கல் என்பது மறுக்கவொண்ணாதது அல்லவா!
///அன்றைய விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் மற்றும்க்ஷத்திரியா வித்யாசாலா மேனேஜ்மென்ட் நிர்வாகத்தினர்கள் பங்குனி பொங்கல் மண்டகப்படி நிகழ்ச்சிக்கும் பொருட்காட்சி நிகழ்ச்சி நிரல்களுக்கும் தமிழகத்திலேயே சிறந்த கலை விற்பனர்களை அழைத்துவந்து திருவிழாக்காலங்களில் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் அதாவது 25 பைசா 50காசு டிக்கட்வழங்கி அவர்களின் கச்சேரியை கேட்க ஏற்பாடு செய்தனர். வேறு ஊர்களில் சிறப்புக்கட்டணம் வசூலித்து தனி சபாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விருதுநகரில் பொது இடங்களில் மண்டகப்படி அமைத்து அதில் இலவசமாக இசைப்பிரியர்கள் கேட்டு மகிழுமாறு திருவிழாக்கள் நடைபெற்றது. சமூகநோக்கு கல்வி வளர்ச்சிக்கான
சமுதாயத் திருவிழா-
'சந்தைலாபம் பள்ளிக்கு; நட்டம் வந்தால் மகமைக்கு; நிகர லாபம் கே.வி.எஸ். பள்ளிகளுக்கே'
இந்த விளம்பரம் ஏன்
புரோக்கிராம் நோட்டிஸில் பிரசரிக்கப்படுவது வழக்கம். தற்சமயம் பிரசுரிப்பதில்லை???
விருதுநகரில் பொருட்காட்சியை
அறிமுகப்படுத்தியது பகளம் வகையறா ப.அ.ராமசந்திர நாடார்; பலசரக்கு மகமை தரப்பின் பொறுப்பில் ஆரம்பிக்கப்பட்டது. PTKT ராமசாமி நாடார் பொருட்காட்சி ஆரம்பிக்க முக்கிய காரணம்.
இதன் வளர்ச்சியில் பெரும் பங்கு பகளம் மற்றும் சிவராம் வகையாறக்களால் தான்.
விருதுநகர் பொருட்காட்சியைத் தொடரந்து சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை போன்ற நகர்களிலும் சமூக நோக்கு, கல்வி வளர்ச்சிக்கான
சமுதாயத் திருவிழாச் சந்தை தொடங்கப்பட்டன.
பலசரக்கு கடை மகமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
லாபம் பள்ளிக்கு; நட்டம் வந்தால் மகமைக்கு...
விருதுநகர் KVS நடுநிலைப் பள்ளி பொருட்காட்சியின்
மு.அ.பழநிச்சாமி நாடார்
கலை அரங்கம் !
முன்னொரு காலத்தில் விருதுநகர் மக்களை மகிழ்வித்த பொருட்காட்சிக் கலையரங்கம்...
அன்றைய சினிமா நட்சத்திரங்கள் மேடையில் நடித்துத்தந்த நாடகங்கள்தான் எத்தனை?!?!?!
வேறு எங்குமில்லாத குறைந்த கட்டணம்; திறமையானவர்களின் கலைநிகழ்ச்சி; ஸ்டேஜின் அருகில் சென்று கலைஞர்களை காணும் வசதியாக ஒருவழிப்பாதை அமைத்துக் கூட்டம் கட்டுப் படுத்தப்பட்ட விதம்... மேலும் இந்த கலையரங்கில் ஸ்டேஜ் செய்த கலைஞர்கள் அனைவரும் புகழின் உச்சத்துக்குச் சென்ற ராசியான இடம்.
1946ல் கீற்றுக் கொட்டகை ஆகப் பிறந்து பின்னர்
தியாகராஜ பாகவதர் வந்த அன்று மழை... பாகவதரும் மக்களுடன் அமர்ந்து பேசிப் புகழ் பரவியது.
1960 முதல் மு. அ. பழனிச்சாமி நாடார் கலை அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டு புது வடிவம் பெற்றது.
விருதுநகரில் கலை நிகழ்ச்சிகளுக்குத் தனிக்கட்டணம் இல்லாததால் உனது mass reach அதிகம்; என்று தமிழ்த்திரை உலகினர் கொண்டாடினர்.
1964 ல் விஸ்வநாதன் கச்சேரியில் மேடையில் மயில்வாகனனை ஏற்றி, இவரை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்க; எவருக்கும் தெரியவில்லை... மைக்ல் 'நேரம் சரியாக' என்று கூற ஆரம்பித்ததும்... மயில்வாகனன் அறிவிப்பாளராகத் தன் உன்னதக் குரலால் இன்ப அதிர்ச்சி தந்த அரங்கம்
பங்குனி & சித்திரை கோடையிலே M.K தியாகராஜ பாகவதர், K.B சுந்தராம்பாள், M.S.விஸ்வநாதன், K.Vமஹாதேவன், T.M.S, P.சுசிலா, ஜேசுதாஸ், S.P.B. போன்றோரின் இன்னிசை மழை...
NSK, தங்கவேலு, கிரேசி மோகன் முதலானோரின் கிச்சு கிச்சு மழை...
MGR ன் அட்வகேட் அமரன், இன்பக்கனவு நாடகங்களில் முதன் முறையாக அவரைக் கண்டு மக்கள் 'அங்கமா இல்லை தங்கமா' என்று திளைத்திட்ட ஆனந்த மழை... மேடையில் MGR குண்டுமணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சுழற்றியதில் எப்படிப்பட்ட ஆர்ப்பாட்ட மழை...
1959 ல் உன் புதிய திறந்தவெளி அரங்கின் வடிவிற்கு அடிப்படைக் கல் நாட்டிய சிவாஜி கணேசன், தேன்கூடு நாடகத்தில் காட்டிய நேர்த்தியான நெஞ்சு வலியால் கலங்க வைத்த மழை... கட்டபொம்மனாக வீரவசன மழை ....
சிவாஜி கணேசன் நாடகம் போட்டு ஒரு லட்சம் நன்கொடை கொடுத்து கட்டிய கலை அரங்கம்... கல்வெட்டு உண்டு.
(முகம்மது பின்- நான் பார்த்து இருக்கிறேன்) துக்ளக் ஆக சோவின் பரபரப்பு மழை...
ஹேமமாலினியின் பரதநாட்டியப் பூ மழை...
(வெண்ணிற ஆடை நிர்மலாவின் நாட்டியம் நான் கண்டு ரசித்து இருக்கிறேன்.)
R.S.மனோகர் சரித்திர நாடகங்களின் பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளை அம்மேடை அழகுற ஜொலிக்கச் செய்தது... மனோகர் நாடகங்கள், மாலிக்காபூர் (விஸ்வாமித்திரர், ஒட்டக்கூத்தர் நாடகங்கள்- நான் பார்த்தவை), காடகமுத்தரையன் பார்த்து மகிழ்ந்த ஞாபகம் வரும்.
ஒவ்வோர் ஆண்டும் இறுதி நாடகங்களாக லட்சுமிகாந்தன், ரத்தக்கண்ணீர் நாடகங்களை தன் இறுதி நாட்கள் வரை அதிரடியாக M.R.ராதா நடத்தியது... (அவர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகும் நடத்தினார்- நான் அப்போது தான் பார்த்தேன்).
இப்படி எத்தனை, எத்தனை....
பின்னர் எம்.ஆர்.ராதா மகன்
எம்.ஆர்.ஆர்.வாசு
எம்.ஆர்.ஆர்.ரவி காலத்தில் அதே நாடகங்கள்...
பல ஆண்டுகள் MSV யின் கச்சேரி...
அதில் T.M.S. P.சுசிலா L.R.ஈஸ்வரி இன்னும் பலரின் குரல் சங்கமித்த மேடை...
இனிமையான நினைவுகள்...
பின்னர் இளையராஜா
கங்கை அஅமரன்
சங்கர் கணேக்ஷ்
இன்னிசைக் கச்சேரி...
எத்தனையோ புது மேடைப் பாடகர்களுக்கும், பாடகிகளுக்கும் வாய்ப்பளித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பெருமை இந்த அரங்கத்துக்கு உண்டு.
ராணுவம் தவிர்த்துத் தனிப்பட்டோர் பைனாகுலர் எனும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்திய வரலாற்றில் விருதுநகரின் இந்தக் கலையரங்கத்திற்கு முக்கியப் பங்கு உண்டு,
சிறுவர்கள் உறவினர்களிடம் இருந்து இலவச பாஸ் பெறவும் பைனாகுலர் இரவல் பெறவும் என காலை முதல் வேலைகள் மாலைவரை களைகட்டியதற்கு காரணமே இந்தக் கலையரங்கம்தான்
💐
அரங்கத்துக்கு முன்னால் உள்ள பள்ளத்தில் நடந்து நடிகர்களை அருகில் பார்க்கும் அனுபவம் புதுமை. கலைஞர்களை அருகில் காண இதன் அருகே அமைக்கப்பட்ட பள்ளமான குறுகிய ஒரு வழிப் பாதையில் பாதம் படாதவர் எவரேனும் இருந்திருப்பார்களா?...
ஊர்மக்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல ஏற்றத் தாழ்வின்றி அன்னியோன்யமாகத் தரையில் அமர்ந்து நிகழ்வுகளை ரசிக்க வைத்தது மிகப்பெரும் வெற்றி...
வீட்டுக்கு ஒரு பிள்ளை bed sheet உடன் வந்து, தன் குடும்பத்தினருக்காக இடம் பிடித்துப் பொறுமை காட்டிக் காத்திருந்த குடும்பப் பாங்கு இந்த மேடை கற்றுத் தந்தது...
காதும் காதும் வைத்த மாதிரியாக எவர் மனமும் புண்படாது decent ஆக மைதானத்தில் உன் முன்னிலையில் நடந்த பெண் பார்க்கும் படலங்கள் தானே விருதுநகரின் கல்யாண மாலை ஆகியது.... மனிதநேயத்துக்கும் உணர்வுக்கும் ஆதாரமாக இருந்த இடம்... பெண் வீட்டார் தனது மகளுக்குக் கல்யாணம் பண்ண முடிவு பண்ணினால் சேலை உடுத்தி அழைத்து வருவது நடைமுறை வழக்கம்... இன்று அந்தப் பெருமையெல்லாம் இழந்துவிட்டோம்
1951 ஆம் ஆண்டு ஈட்டிய லாபத்தினால் மதுரை சாலையில் உள்ள K.V.S. நிலத்துக்கு அருகாமையில் உள்ள நிலங்கள் சேர்த்து வாங்கப்பட்டு இன்றைய கட்டிடங்களும், விளையாட்டு மைதானங்களும், வியத்தகு ஸ்டேடியமும் நிறுவ உதவியது இதே மேடை தான். இப்படி சாதனைகள் பலப்பல...
1988 இல் இருந்து
மதுரை ரோடு மேல் நிலைப்பள்ளிக்கு மாற்றும் வரை பொருட்காட்சி அலுவலக
அறை (நிர்வாகிகள் அறை) முன்பு ஒலிபெருக்கி மூலம்
விளம்பரத்திற்கு இடையே பொருள்காட்சி நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு செய்யும் பணி அனைவரையும் கவரும்.
விருதுநகரின் கலை உணர்விற்கு அரை நூற்றாண்டுக்கும் மேல் உயிர் ஊட்டியது... 2003 ஆம் ஆண்டு வரை தீவிரக் கலைப் பணி ஆற்றியது.
கலைஅரங்கமாக, விருதுநகரின் 20ம் நூடு.ப் புவிசார் குறியீடு ...
ஆம், விருதுநகரின் மற்றும் ஓர் பெருமை ....
பின்னர் மதுரை ரோடு பள்ளிக்கு மாறியது.
இப்போது பொருட்காட்சி பிரம்மாண்டமாயிருந்தாலும் அந்தக் காலப் பொருட்காட்சி ஒரு அற்புதம்தான்!///
அடைப்புக் குறிக்குள் என் நினைவுகள்
தெரிவு: சக