பரிபூஜந பஞ்சாமிர்த வண்ணம் (1891)

10 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 30, 2022, 12:22:41 PM11/30/22
to Santhavasantham

பரிபூஜந பஞ்சாமிர்த வண்ணம் (1891)
-----------------------------------------------------------------------

தமிழில் வண்ணப் பாடல்களைப் பெரிதும் பாடியவர் அருணகிரிநாதர். அதன் பின்னர் பலர் வண்ணப்பாடல்களை எழுதலாயினர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அப்பாவகைக்கு இலக்கணமாக, வண்ணத்தியல்பு பாடினார். சிரவையாதீனத்துப் பெரும்புலவர் ப. வெ. நாகராசன் உரையெழுதி வெளியிட்டார். தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் இருவரும் முருகனைப் பல்லாயிரம் பாடல்களால் 19-ம் நூற்றாண்டில் புகழ்ந்து பாடிய கவிஞர்கள்.

பஞ்சாமிர்த வண்ணம் (1891), பாம்பன் சுவாமிகள் பாடல்:
http://mscherweroyar.blogspot.com/2008/06/blog-post_1007.html
https://kaumaram.com/pamban/panchamirthavannam_u.html   (உரை)

பஞ்சாமிர்த வண்ணம் செவிகுளிரக் கேட்க:
https://youtu.be/07kBAboYZd4 மயிலை சற்குருநாத ஓதுவார்
https://youtu.be/JAzUttA-eQc டி. எல். மகராஜன் பாடுகிறார்
https://youtu.be/TX-KZHYayF0 திருப்பூர் சோதரிகள்

நான்மறைகள், திராவிட மொழிகள், ... ஆராய்வதில் மொழியியல் அறிஞர் கைக்கொள்ளும் முறை ஒன்று உண்டு. தொகைம மொழியியல் (Corpora Linguistics) என்னும் துறை. 17-ம் நூற்றாண்டில் தமிழில் துணைவினைகள் (Auxiliary Verbs) இயங்குதலைத் தமிழ் இலக்கணிகள் கண்டு எழுதலாயினர். 19-ம் நூற்றாண்டில் தமிழில் உள்ள எல்லா வெண்பாக்களையும் ஆராய்ந்து ஓசைபற்றி ஒரு நுட்பமான விதியை பாம்பன் சுவாமிகள் விளக்கினார். வெண்பா இயற்றுவோருக்குப் பயன்தர வல்லது. https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/

நா. கணேசன்


Reply all
Reply to author
Forward
0 new messages