தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையும் வானியல் ஆன்மீகத் தொடர்புகளும்...

8 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jun 3, 2026, 11:16:45 PM (7 days ago) Jun 3
to vallamai
இது ஒரு முகநூல் பகிர்வு தான்.

இந்த ஒற்றுமை தற்செயலானதா? / காரணகாரியத் தொடர்புடையதா? என்பதெல்லாம் தனி ஆய்விற்கு உரியது. பண்டைத் தமிழர் வானியல் அறிவு வியப்பைத் தூண்டுவது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இது புதுக் கோணத்தில் சிந்திக்க வைக்கிறது. 


/// தமிழ் எழுத்துக்கள் 247 என்பது சூரியனுடைய சுற்றின் ஒரு பாத (3.33 திகிரி) நகர்வுக்கான ஆண்டுக் கணக்கு தான். (247÷3.33=74.074) 

திருக்குறளின் 1330 குறள்கள் என்பது சூரியனின் 18 திகிரி நகர்வு. (18 x 74.074=1333.333). 

இப்படி விண்ணியல் கணக்குகள் தான் தமிழின் உயிர். 247 எழுத்துக்களை சூரியச் சுற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்க வேண்டும் என்றால் தமிழின் தொன்மை குறைந்தது 54,000 ஆண்டுகளாவது இருந்தால் தான் 247 எனும் எண்ணைப் பயன்படுத்த முடியும். நிலவு ,பூமி, சூரியச் சுற்றுக்களையும், மற்ற கோள்களின் சுற்றுக்களையும் பண்னெடுங் காலங்களாக ஆய்வு செய்து தமிழை வளர்த்து , சித்திர எழுத்துக்களாக்கி , தமிழி எழுத்துக்களாக்கி தற்பொழுது வழக்கத்தில் உள்ள அ, ஆ, இ .... எனும் வரி வடிவங்களுக்கும் அர்த்தம் பொதித்து இயற்பியல், வேதியல், உடலியல், மெய்யியல் தத்துவங்களை உள்ளடக்கிய எழுத்துக்களாக்கி நமது முன்னோர்கள் கொடுத்து உள்ளார்கள். 

உயிர் எழுத்து 12 என்பது நிலவின் ஓட்டத்துடன் தொடர்பு கொண்ட அண்ட வெடிப்பில் ஆரம்பித்து மனிதன் உருவான காலம் வரையிலான (periodic table) கால அட்டவணை.

மெய் எழுத்து 18 என்பது சூரியனுடைய ஓட்டத்தைக் குறித்து மனித உடலியலின் உள் உறுப்புக்களின் வரிசை கிரமமான மெய்இயல். 

கசடதபற என்பது ராச உறுப்புகளையும்; ஙஞனநமன என்பது துணை உறுப்புகளையும்; யரலவழள என்பது சுரப்பிகளையும் குறித்த உடலியலின் விரிவாக்கம்.

உயிர்மெய் என்பது 120 தனிமங்களும் 96 தத்துவங்களின் அட்டவணை.
இதைக் கோயில்களில் இருந்து கருவறையிலிருந்து கொடிமரத்தின் வழியாக வான்பார்த்து; நிழல் குறித்து ஊர்கள் தோறும், கோள்கள் எந்தெந்த ராசிகளில்; எந்த நட்சத்திரங்களில் பயணிக்கிறது என அறிந்து; அதில் பருவங்களையும் பட்டங்கள் மாறுவதையும் குறித்து; சரியான பருவங்களில் பட்டங்களில் வேளாண்மை செய்தும்; ஊழிக் காலங்களை முன்கூட்டியே கணித்து; அறம் சார்ந்து வாழ்ந்த தொன்மையான சமூகம் நம் தமிழ்ச் சமூகம். 

எகிப்து மட்டுமல்ல; உலகெங்கும் பிரமிடுகள் கட்டி ஒவ்வொரு சூரியச் சுற்றிலும் நடக்கும் ஊழிகளில் எது வாழத் தகுந்த இடம் எனக் கணக்குகளோடு குறித்தவர்கள் தமிழ் முன்னோர்கள். Giza பிரமிடின் உயரத்திற்கும் திருக்குறன் எண்களுக்கும் உள்ள தொடர்பு அதை கட்டியவர்கள் தமிழர்கள் என்பதை உணரலாம். 

தொன்மையிலிருந்து விண்ணியல் கணக்குகளோடு ஒவ்வொரு நாகரிக வளர்ச்சிக்கும் காரணமான அறிவினை அண்டத்தின் துணையோடு பிண்டத்தில் அறிந்து மருத்துவத்திலும் தேவையான நாகரிக வளர்ச்சிகளில் பங்கெடுத்து; முன் சென்ற சமூகம் நம் தமிழ்ச் சமூகம்.

கர்ப்போட்ட கணக்குகளின் உதவியால் நம் ஊர்களில் பெய்யும் மழையின் அளவுகளை ஒரு வருடம் முன்பே துல்லியமாகக் கணித்துப் பஞ்சாங்கம் கொடுத்த சமூகம் தமிழ்ச் சமூகம் .

சூரியச்சுற்று மட்டுமல்ல; சக்தி ஓட்டத்தையும் கணித்தவர்கள் தமிழர்கள். ஏழு வகையான சக்திகளைத் (energy) தான் 7 கன்னிமார்களாகக் கொண்டாடிய சமூகம் நம் தமிழ்ச் சமூகம். 
சக்தி ஓட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது தான் திருக்குறள் எண் கணிதம். 
சக்தி ஓட்டத்தைக் குறிப்பதால் தான் அதை உருவாக்கிய திருவள்ளுவரை தெய்வப் புலவர் என்கிறோம்.

கடவுளர்கள் என்பவர்கள் நமக்கு இயற்கையைப் பற்றியும் அண்டம், பிண்டம் என இறைவன் படைப்புகளை நமக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள். 8 வகையான சக்திகளைத்தான் தெய்வங்களாக பெண்கள் வடிவத்தில் நாம் வணங்குகிறோம்.
இறைவன் என்பவன் மிகப் பெரியவன்; இந்த இயற்கையை ஒரு ஒழங்கில் இயக்குபவன்.

சூரியச் சுற்றைக் கணித்தவர்கள் வானில் 12ராசிகளையும்
27 நட்சத்திரங்களையும் உருவாக்கி; நாட்காட்டிகளை உருவாக்கி; 10கோள்களின் நகரும் காலங்களை துல்லியமாகக் கணித்து அதை 60சுழல் ஆண்டுகளில் திருத்தி; அதைக் கண்கானிக்க ஊர்கள் தோறும் கோயில்கள் கட்டி; கருவறை, கொடி மரங்களை ஆகம விதிமுறைகள் படி பஞ்சாங்கம் தயாரித்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். 

அந்தக் கோயில்களில் 64 கலைகளைக்  கற்றுத்தரும் ஆசான்களின் கல்விக் கூடங்களாக்கினார்கள்.
அந்தந்த ஊர்களின் நிலங்கள் கோயில்களின் உடைமைகளாக்கி அதில் வரும் வருமானத்தை அந்தந்த ஊர்களுக்கும், அரசருக்கும் தேவையான பொருள் உதவி செய்து சிறப்பாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

விண்ணியலும் வாழ்வியலும்.///

இவற்றில் எவ்வெவற்றை ஏற்கலாம் / ஒதுக்கி விடலாம் என்பது ஒருபுறம்...

பாண்டியனும் சேரனும் முறையே மீனையும் வில்லையும் தம் சின்னங்களாகக் கொண்ட காரணம் வானியல் / சோதிடவியல் என்ற ஐயம் எழுகிறது. இந்தத் தொடர்பில் தனித்து விடப்பட்டவன் சோழன். இதனால் அவனது பூர்விகம் வேறு திசை ஆகிறது. 

சக 


Reply all
Reply to author
Forward
0 new messages