திருப்பரங்குன்றம்

12 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 8, 2026, 11:37:40 AMApr 8
to Santhavasantham
திருப்பரங்குன்றம்
------------------

திருப்பரங்குன்ற வேலா!
      - பாபநாசம் சிவன்
 
சீர்காழி மூவர் எனப் புகழ்பெற்ற சைவர்கள் தொடங்கிய தமிழ்க்  கீர்த்தனங்கள், பின்னர் கர்நாடக சங்கீத மூவரால் தெலுங்குக் கீர்த்தனங்கள் ஆக வளர்ந்தன. மூவரும் திரூவாரூரைச் சார்ந்தவர்கள். 20-ம் நூற்றாண்டில், பாரதி, பாபநாசம் சிவன், பெ. தூரன், பாரதிதாசன், ... எனப் பலர் தமிழிசை வளர்த்தனர்.

கர்நாடகக் கச்சேரிகளில் பிரபலமாய் உள்ளது "திருப்பரங்குன்ற வேலா" என்னும் தமிழ்க் கீர்த்தனம் ஆகும். அதன் முன்னர் அறுபடைவீட்டுக்கும்  ஓர் அருச்சனை உண்டு. அதை விருத்தம் போல் செய்யறிவு கொண்டோ, பிறர் பாடியோ சேர்த்தலாம். சங்கீத வித்வான்கள் இந்த விருத்தத்தைப் பாடிக் கேட்டதில்லை.

விருத்தம்

திருச்செந்தூர் சீரலை வாழ் தேவா போற்றி
திருப்பழனியில் இருக்கும் தேவா போற்றி
திருவேரகத்து சாமிநாதா போற்றி
திருத்தணி முதல் மலைகள் திகழ்வாய் போற்றி
தேன்பழங்கள் உதிர் சோலை சேர்வாய் போற்றி
திருப்பொலிய உலகாளும் செம்மால் போற்றி
செந்தமிழ் தெய்வமே போற்றி
ஆறுபடை கொண்ட திருமுருகா போற்றி போற்றி.
   (செம்மல் என்பதன் விளி: செம்மால்)
   
திருப்பரங்குன்ற வேலா! - பாடல்
https://www.youtube.com/watch?v=UN2c6Ev2KNc  - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்
https://www.youtube.com/watch?v=oN64a1Fx_RY - அருணா சாய்ராம்
https://www.youtube.com/watch?v=Q2zYBQZw7k4 -  காயத்ரி கிரீஷ்
https://www.youtube.com/watch?v=LB-oi73q-IU - பிரியா சோதரியர் (25 நிமிடம்)
https://www.youtube.com/watch?v=OamTZiEHaCQ - பரதம்
 
திருப்பரங்குன்ற வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  எனவே, வழக்கு மீதான தீர்ப்பு புதிய ஆட்சி அமைந்தபின் எனத் தீர்க்கமாக நம்பலாம்.

சர்வே தூண் என அரசு தரப்பில் சொல்லியபோது, "மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் இருப்பது தீபத் தூண். நான்கு மாத விரதம் முடிந்தபின் கார்த்திகை தீபம், தேவ தீபாவளி எனப்படுவது ஏற்றுவது போல நடந்திருக்கும். ஆனால் 1000 ஆண்டுகளாக ஏற்றாமல் உள்ளது" என விளக்கினேன். பின்னர் அரசு தரப்பில், "பரங்குன்றத்  தூண் சர்வே தூண் அல்ல, தீபத் தூண் தான்" என மதுரை  நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

வருகிறது தேர்தல்! - சீர்காழி
https://youtube.com/watch?v=IQNJRwAoY4E

முதலில் பரங்குன்றம் என்ற பெயர் ஏன் வந்தது? அதன் காரணம் பற்றித் தமிழ் பிராமி (தமிழி) கல்வெட்டு மூலமாக ஆராய்வோம். மிக அழகான கல்வெட்டு, சில ஆண்டுகள் முன்னர் தான் கிடைத்தது.

பிற பின்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 12, 2026, 8:20:47 AM (11 days ago) Apr 12
to Santhavasantham
திருப்பரங்குன்ற மலையுச்சியில் உள்ள தீபத் தூணும், அருகே கிடைத்துள்ள நிசீதிகைக் கல்வெட்டும்
https://x.com/naa_ganesan/status/1998625836463780350

மதுரையைச் சுற்றி உள்ள மலைகளில் சமணம். எண்பெருங்குன்றங்களில் முதலாவது பரங்குன்று.

பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி
அருங்குன்றம் பேராந்தை ஆனை - இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டு மோபிறவித் தீங்கு

                                  - பழம் பாடல்.

(1) திருப்பரங்குன்று (2) திருவுருவகம் (சமணர்மலை = கீழ் குயில்குடி). செட்டிப்புடவு கல்வெட்டில் உருவகம் என்றுள்ளது (3) பள்ளி (குரண்டி மலை) (4) ஆனைமலை (5) இருங்குன்றம் (அழகர்மலை) பேராந்தை, அருங்குன்றம், பப்பாரம் எவை?
மற்ற மூன்று தலங்கள் பற்றி விரிவாகப் பார்க்க, https://x.com/naa_ganesan/status/1998625836463780350

நிசீதிகைக் கல்வெட்டு: மதுரை திருப்பரங்குன்றத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
https://x.com/naa_ganesan/status/1998775879309160448
ஐராவதம் மகாதேவன், இரா. நாகசாமி போன்றோர் காலத்தின் பின்னர், கிடைத்துள்ள தமிழகத்தில் முக்கியமான கல்வெட்டு. வடக்கிருத்தல் பற்றியது ஆகும்.

2026 ஜூன் மாதம் மீண்டும் விசாரணைக்கு உயர்நீதி மன்றில் பரங்குன்று வழக்கு வருகிறது. 2300 வருடம் பழைமையான தமிழ் பிராமிக் கல்வெட்டு பரன் + குன்று பெயரை விளக்குவதாய் அமைந்துள்ளது சிறப்பு. பரன் வடசொல்லாகவும், குன்று தென்சொல்லாகவும் அமைந்து இந்தியாவின் இரு செம்மொழிகளையும் இணைக்கும் பாலமாகப் பரங்குன்று இருப்பது தெளிவு. மேலும் ஆராய்வோம்.

மதிப்புமிகு நீதிபதிகள் 2300 ஆண்டுக்கால நெடிய பரங்குன்ற வரலாற்றை ஆழ வாசித்துச் சிந்தித்து நல்ல தீர்ப்பை வழங்கிட இறையருளை வேண்டுகிறோம். Some Suggestions for the future development:
https://x.com/naa_ganesan/status/2042400672851603765

There are very nice, modern towers giving the corresponding city view in major cities of the USA and Europe. In Tamil Nadu, when the Courts settle the cases about Tirupparankunram, a tall tower (say, 150 feet) - Deepa Stambha - can be built with modern technology. It can be specially lit on Maha Kartikai Deepam and other monthly Kartikai days. On other days, people can be allowed to climb using electric elevators and take a good look at the entire Madurai region. Such a modern Deepa Stambham will be a technological achievement, a first in Tamil Nadu. In a separate thread, modern towers which are used by people around the World can be shown.

My letter to Stalin Rajangam, American College, Madurai on December 28, 2025:
https://x.com/naa_ganesan/status/2005354936712999311
திருப்பரங்குன்றம் வழக்கு நீதிமன்றங்களில் ~150 ஆண்டுகளாய் ஓடிக் கொண்டுள்ளது. முருகபக்தர் பூர்ணசந்திரன் உயிர்த்தியாகம் செய்துள்ளார். முதன்முதலாக, அரசாங்கமே, ஸர்வே கல் தியரியைக் கைவிட்டுவிட்டு, சமணர்களின் தீப ஸ்தம்பம் என்று தாக்கல் செய்துள்ளது. மேலே எழுதியுள்ள இழைகளில் ஒளிப்படங்களைத் தொல்லியலாரும், அரசும், நீதவான்களும் பார்த்து ஆராயவேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் 100 அடிக்கும் மேலான பெருஞ்சிலைகள் இந்தியா முழுதும் தோன்றுகின்றன. நல்ல தொழில்நுட்பத்துடன், தமிழர் சங்க இலக்கியம், சிந்து முத்திரைகள் காட்டும் கார்த்திகை தீபப் பெருந்தூண் (Tower) - மேலை நாடுகளில் உள்ள Towers போல - பாரதக் கட்டிட மரபில் பரங்குன்ற மலையின் உச்சியில் காலப்போக்கில் அமைந்திட வேண்டும். அப்போது பல மைல்களுக்கு மதுரை மாநகரம் முழுதுமாகப் பார்க்க இயலும். ரூ. 100 கோடி HRCE, தனியார் கம்பெனிகள், பக்தர்கள் நிதியால் செய்யலாம்.

---------------------------

இத்துடன் இந்தியத் தொல்லியல் துறை, சமணர் படுக்கைகள் உள்ள திருப்பரங்குன்றத்துக் குகைகளில் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் உள்ளதை அறிவிக்கிறது. அதன் ஒளிப்படம் இணைப்பில்.

மதுரை உயர்நீதிமன்றம் இன்றைய தீர்ப்பு மே திங்கள் இறுதிக்குள் மலையைச் சுற்றி அளந்து அளவீட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-high-court-order-thiruparankundram-hill-survey-archaeological-department-collector-11708362

https://thehindu.com/news/cities/Madurai/hc-orders-joint-survey-of-thirupparankundram-hill/article70839065.ece
https://newindianexpress.com/states/tamil-nadu/2026/Apr/09/madras-high-court-directs-joint-asi-revenue-survey-of-thiruparankundram-hill-by-may

https://timesofindia.indiatimes.com/city/madurai/hc-bins-plea-on-lighting-lamp-atop-thiruparankundram-hill/articleshow/130152130.cms

நா. கணேசன்
https://x.com/naa_ganesan/status/2005354936712999311
Reply all
Reply to author
Forward
0 new messages