குருகு = water bird

72 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 29, 2016, 1:07:41 AM6/29/16
to வல்லமை, vallamai, housto...@googlegroups.com
குருகு என்று தமிழ் இலக்கியங்களில் பயிலும் சொல் பறவையாளர்களின் ‘water bird’ என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்.


Water bird

From Wikipedia, the free encyclopedia
Water birds

The term water birdwaterbird or aquatic bird (not to be confused with wading birds) is used to refer to birds that live on or around water. Some definitions apply the term especially to birds in freshwater habitats, though others make no distinction from birds that inhabit marine environments. In addition, some water birds are more terrestrial or aquatic than others, and their adaptations will vary depending on their environment. These adaptations include webbed feetbills and legs adapted to feed in water, and the ability to dive from the surface or the air to catch prey in water.

The term aquatic bird is sometimes also used in this context. A related term that has a narrower meaning is waterfowl. Some birds of prey, such as ospreys and sea eagles, take prey from water but are not considered water birds. The term waterbird is also used in the context of conservation to refer to any birds that inhabit or depend on bodies of water or wetland areas. Examples of this use include the Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds (AEWA) and the Wallnau Waterbird Reserve.

Some examples of water birds are:

N. Ganesan

unread,
Jun 30, 2016, 9:53:22 PM6/30/16
to வல்லமை, housto...@googlegroups.com, மின்தமிழ்
குருகு என்பது விஞ்ஞானிகள் வகைப்படுத்தும் ‘Water bird' https://en.wikipedia.org/wiki/Water_bird எல்லா இனங்களுக்கும் தமிழில் வரும். நாரை, அன்றில் (க்ரௌஞ்சம்), அன்னம் (ஹம்ஸம்), கிளுவை, குளிவை, கொக்கு, வாத்து, ... என நீர்ப்பறவைகள் யாவற்றுக்கும் தமிழில்  குருகு என்பது பொதுப்பெயர்

குருகு - நீர்ப்பறவை

M. Winslow:
குரண்டம் - stork, Indian crane (Skt. Kurankara).
Indian crane என்பதற்கு White stork என வின்சுலோவைக் கொண்டாலும்,
ardea sibirica (Siberian crane) என MTL சொல்வது ஏற்றாலும்,
சாதாரண கொக்கு என்பதை ஏற்றாலும் ஒருவகைக் குருகு தான் குரண்டம் என்பது தெளிவு.
குரண்டம் வெண்ணிறமான கொக்கு வகைகள் என்கிறார் கம்பர்.

கார் எனும் பெயர்க் கரியவன் மார்பினின் கதிர் முத்து-
ஆரம் என்னவும் பொலிந்தன-அளப்ப அரும் அளக்கர்
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து,
கூரும் வெண் நிறத் திரை எனப் பறப்பன குரண்டம் - கம்பன்

குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன் - கம்பன்

ஏங்கி அமரர் இரிந்தோடவே துரந்த
ஓங்கு குரண்டத்து உருக்கொண்ட தானவனைத்
தீங்கு பெறத்தடிந்து சின்னமா வோர் சிறையை
வாங்கி அணிந்த அருள் இங்கென்பால் வைத்திலையே - கந்தபுராணம்

குரண்டாசுரனை வதம் செய்து அக் குரண்ட இறகைத் தலையில்
சூடினவர் சிவபெருமான். நடராஜ மூர்த்தி சிரசில் கொக்கிறகு
இருக்கும். கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய் - அப்பர்

பகன் என்பது சூரியர்களில் ஒரு சூரியன். பகலைச் செய்பவன் பகன்.
குரண்டாசுரனைப் பகன் என்பதும் உண்டு போலும்:

பகாசுரனின் வாய் கீண்டதை ஆண்டாள் சொல்கிறாள்:
கள் அவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு 
கடல்வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய்பிளந்தான் என்பதோர் 
இலக்கினில் புக என்னை எய்கிற்றியே

குருளுதல் - சுருளுதல் (வளைதல்). எனவே குருள்- குருண்டம்.
குருண்டம் என்பது பேச்சில் குரண்டம் என கொக்கிற்கு ஒருபெயராயிற்று.
அடும்பு: அடம்பு, அணுங்கு: அணங்கு, ... போல குருண்டம் : குரண்டம்.

குருகு குலுங்கம் என தெலுங்கு, இந்தி மொழிகளில் வழங்கப்படுகிறது:
ஹாப்சன் - ஜாப்சன் அகராதி:
”CULLUM"> COOLUNG, COOLEN, and in W. India CULLUM , s. Properly the great grey crane (Grus cinerea), H. kulang (said by the dictionaries to be Persian, but Jerdon gives Mahr. kallam, and Tel. kulangi, kolangi, which seem against the Persian origin), [and Platts seems to connect it with Skt. kurankara, the Indian crane, Ardea Sibirica (Williams)]. Great companies of these are common in many parts of India, especially on the sands of the less frequented rivers; and their clanging, trumpet-like call is often heard as they pass high overhead at night.
"Ille gruum . . .
Clamor in aetheriis dispersus nubibus austri."
(Lucr. iv. 182 seq.).

The name, in the form Coolen, is often misapplied to the Demoiselle Crane (Anthropoides virgo, L.), which is one of the best of Indian birds for the table (see Jerdon, ed. 1877, ii. 667, and last quotation below). The true Coolung, though inferior, is tolerably good eating. This bird, which is now quite unknown in Scotland, was in the 15th century not uncommon there, and was a favourite dish at great entertainments (see Accts. of L. H. Treasurer of Scotland, i. ccv.).

1698. -- "Peculiarly Brand-geese, Colum, and Serass, a species of the former." -- Fryer, 117.

c. 1809. -- "Large flocks of a crane called Kolong, and of another called Saros (Ardea Antigone -- see CYRUS), frequent this district in winter. . . . They come from the north in the beginning of the cold season, and retire when the heats commence." -- Buchanan's Rungpoor, in Eastern India, iii. 579.

1813. -- "Peacocks, partridges, quails, doves, and green - pigeons supplied our table, and with the addition of two stately birds, called the Sahras and cullum, added much to the animated beauty of the country." -- Forbes, Or. Mem. ii. 29; [2nd ed. i. 331].

1883. -- "Not being so green as I was, I let the tempting herd of antelopes pass, but the kullum I cannot resist. They are feeding in thousands at the other end of a large field, and to reach them it will only be necessary to crawl round behind the hedge for a quarter of a mile or so. But what will one not do with roast kullum looming in the vista of the future?" -- Tribes on my Frontier, p. 162.

"*** N.B. -- I have applied the word kullum, as everybody does, to the demoiselle crane, which, however, is not properly the kullum but the Koonja." -- Ibid. p. 171.”

குருகு/குருங்கு (தமிழ்) - குருங்கர, குலுங்கி (வடமொழிகளில்) தமிழின் மிச்சம் வடக்கே.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 6, 2017, 10:25:56 PM1/6/17
to மின்தமிழ், kalair...@gmail.com, vallamai, Aragalur pon. venkatesan, ponvenk...@gmail.com


On Wednesday, January 4, 2017 at 5:26:22 PM UTC-8, kalai wrote:

வணக்கம்.

https://m.facebook.com/story.php?story_fbid=846947678742336&id=100002813356056

இந்தப் பறவையின் பெயர் என்ன ?


இந்தக் குருகின் (waterbird) பெயர் தாழைக்கோழி. நெய்தல் திணையின் தாவரம் தாழை. அதனடியில் இருப்பதால் தாழைக்கோழி ( https://en.wikipedia.org/wiki/Grey-headed_swamphen )

நெய்தல் திணைத் தெய்வம் வருணன். குடிமல்லம் லிங்கத்தில் தாழை அலங்காரம் உள்ளது. குடிமல்லம் லிங்கம் 
சிவனுக்கு லிங்கம் குறியீடு ஆவதன் முன் இருந்த நிலை. அதுபோல்,  தாழை தண்ணீர்ப்பறவை என்பதைக் காட்டுவது.

தாழைக்கோழி:


உலகில் தாழைக்கோழி வகைகள்:



நா. கணேசன்


N. Ganesan

unread,
Jan 7, 2017, 12:21:26 AM1/7/17
to மின்தமிழ், kalair...@gmail.com, vall...@googlegroups.com, ponvenk...@gmail.com, ponvenk...@gmail.com, Theodore Baskaran, Iravatham Mahadevan, housto...@googlegroups.com


On Wednesday, January 4, 2017 at 5:26:22 PM UTC-8, kalai wrote:

வணக்கம்.

https://m.facebook.com/story.php?story_fbid=846947678742336&id=100002813356056

இந்தப் பறவையின் பெயர் என்ன ?


இந்தக் குருகின் (waterbird) பெயர் தாழைக்கோழி. நெய்தல் திணையின் தாவரம் தாழை. அதனடியில் இருப்பதால் தாழைக்கோழி ( https://en.wikipedia.org/wiki/Grey-headed_swamphen )

நெய்தல் திணைத் தெய்வம் வருணன். குடிமல்லம் லிங்கத்தில் தாழை அலங்காரம் உள்ளது. குடிமல்லம் லிங்கம் 
சிவனுக்கு லிங்கம் குறியீடு ஆவதன் முன் இருந்த நிலை. அதுபோல்,  தாழை தண்ணீர்ப்பறவை என்பதைக் காட்டுவது.


தாழைக்கோழி (porphyrio poliocephalus) - சங்க இலக்கியத்தில்.

நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்றுநின்
மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே - ஐங்குறுநூறு 51

”நீரில் வாழும் நீல நிறத்தையுடைய சேவற் கோழியைக் கூர்மையான நகங்களை உடைய அதன் பெட்டை எண்ணி வேட்கை மிக்கு வாழும் ஊரனே, இவளது காதல் நோய்க்கு நின் பரந்த மார்பு புளிங்காய் வேட்கை தானும் விளைப்பதன்றி நினைக்குந் தோறும் புலவிக்குக் காரணமாய் உள்ளது:” என்று தோழி தூது மறுத்துச் சொன்னாள்.



படம்: தாழைக்கோழியின் கூர் உகிர்.

N. Ganesan

unread,
Jan 8, 2017, 2:16:06 PM1/8/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, Theodore Baskaran, Iravatham Mahadevan, George Hart, Ashraf N.V.K.
On Saturday, January 7, 2017 at 1:00:58 AM UTC-8, Dev Raj wrote:

On Friday, 1 July 2016 07:23:25 UTC+5:30, N. Ganesan wrote:
குருகு - நீர்ப்பறவை
குரண்டம் - stork, Indian crane (Skt. Kurankara).
பகன் என்பது சூரியர்களில் ஒரு சூரியன். பகலைச் செய்பவன் பகன்.
குரண்டாசுரனைப் பகன் என்பதும் உண்டு போலும்:

பகாசுரனின் வாய் கீண்டதை ஆண்டாள் சொல்கிறாள்:


भग [bhaga] - சூரியன்
बक [baka] -  பறவை

பறவைக்கும் பகலுக்கும் தொடர்புள்ளதா ?
தேவ்

பறவைக்கும் பகலுக்கும் தொடர்புண்டு. வேதத்தில் கருடன் சூரியப்பறவை. உதித்து மேலெழும்பி கீழே இரையை நோக்கிப் பாய்வதால்.

ஆனால், நீங்கள் குறிப்பிடுவதுபோல், bhaga (sun), baka (waterbird) தொடர்பில்லை தான்.
bhaga, like bhagavat etc., could be for splitting. Splitting darkness and making daylight - this may be why the sun has a name, bhaga.

ஆனால், baka - பக- என்பது த்ராவிடச்சொல். ஆங்கிலத்தில் buck, அதற்கு நேரான (cognates) பார்த்தால் ஆடுகளுக்கு இந்தோ-ஐரோப்பியப் பெயர்.

 வக-வக்கா என்பது baka என குருகுக்கு வருகிறது:. https://groups.google.com/forum/#!msg/mintamil/lbyurVJaEpk/PyBte6gqTwgJ
கன்னடத்தில் வ- ப-(ba-) மாறும்: வயல் > bayalu, விதை/விசை > bIja, விந்து (cf. வித்து) > bindu (Sanskrit) etc.,

வக்க- என்று தமிழில் சொல்லும் சொல் வக > பக (baka) என்று எழுதற்கு ஒப்பீடுகள்:

(1) அரத்தம் = சிவப்பு. செம்பு அரத்தை = செம்பருத்தி. சிகப்புமணி அரதநம் (ந என்னும் பிரத்தியம் சேர்ந்து). அது ரதனம் என வடக்கே எழுதப்படுகிறது. உ-ம்: ரதன் டாட்டா.
(அ)ரதனம் < அரத்தம்.

(2) ஹனுமான் லாங்கூர் - என்னும் முசுவின் முகம் இருள் கப்பியது. எனவே, கபி (அல்லது) கவி என அதன் பெயர்.
வாதாய கபிலா வித்யுத். அதாவது, ’இருள் கப்புகிற/கவிகிற மாலை மசங்கும் வேளையிலே மின்னலடித்தால் மழைவரும்’ மாலைமயக்கம் = இருள் கப்பும்போது கரியின் நிறமாகிய கபிலை. யானையின் உருவப்பண்புகளில் தலையாயது கருமை. கப்புதல்/கவ்வுதல்/கவிதல் கபி. அசுவம் (குதிரை) கட்டும் இடம் என அரைச மரத்தை அசுவத்தம் என்றனர் வடமொழியில். அதுபோல், யானைக்கு விருப்பமானது விளாம்பழம். இதன் நில்லுயிரியல் (botany) பேரே யானையால் அமைந்துள்ளது: Feronia elephantum. இந்தியாவில் பல குரங்குகள் உண்டு. ஆனால், மிகப் புகழ்பெற்றது, அனுமார் லாங்கூர் (நாங்கூழை - நீள வால்). இதன் முகம் கறுப்பு என்பதும் கபித்த - விளாம்பழத்துக்கு பொருந்தும். கபி/கவி என ராமாயணத்தில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற பாத்திரங்களை https://en.wikipedia.org/wiki/Gray_langur (Hanuman Langur) வகை முக்கிய குரக்கினத்தால் ஏற்பட்ட பெயர். அதன் முக வர்ணம் கபிலை. எனவே, கபி. யானையும், கபி என்னும் குரங்குகளும் விரும்புவது கபித்தம் என்னும் விளாம்பழம். “கபித்த, ஜம்பூ பலஸார பக்‌ஷிதம்” - இந்த கணபதி சுலோகத்திலும் யானைக்கு விருப்பமான விளாம்பழம் (கபித்தம்) முதலில் பேசப்படுகிறது காண்க. பலம் என்பது பழம் என்ற சொல்லின்  வடமொழித் திரிபு.. https://groups.google.com/forum/#!msg/mintamil/bLtNrbsseko/IjrTxhwjEgAJ

கபி, ரதனம், ... போல, வக்கா என்னும் தமிழ்/த்ராவிடச் சொல் வக (baka) என ஸம்ஸ்கிருதம் ஆகிறது.

வக(baka) என ஏன்   குருகுகளில் சிலவற்றுக்குப் பெயர்? ஓர் ஆய்வு:

MTL:
வக்கட்டை vakkaṭṭai

n. Outlet for surplus water. See கடவான். (யாழ். அக.)

வக்கரை¹ vakkarai , n. 1. Wooden ridge- piece to hold the ropes that tie down the thatch; tie-piece; வரிந்துகட்டும் முகட்டுக்கட்டை.
வக்கா² vakkā, n. A kind of cockle-shell; சிப்பிவகை. வக்காவின் மணிபூண்டு (குற்றா. குற. 79). https://en.wikipedia.org/wiki/Cockle_(bivalve)
வக்காப்புல் vakkā-p-pul , n. < வக்கா² +. A kind of weed; களைவகை. Tj.
Also, vakiTu- :partitioning of hair.

இரண்டு இனங்களை வக்கா எனத் தமிழில் அழைக்கின்றனர். நீளமான இறகுகள் வக்காப் புல் போல தலையில் இருப்பதால் இப்பறவைகள் வக்கா எனப்படுகின்றன.
வக்கா என Phonemic script தமிழில் எழுதவதை ககர ஒலிப்பு Phonetic script-ல் இருப்பதால baka என்று ஸம்ஸ்கிருதத்தில் எழுதினால் போதுமானது.

அடுத்த முறை நீங்கள் ரயிலில் செல்லும்போது இவ்வாறு பாருங்கள். ஏதேனும் ஒரு பறவையின் வடிவத்தில் மா.கிருஷ்ணன் உங்களுக்குத் தென்படலாம்!

தனக்கு இருந்த இருமொழிப் புலமையின் காரணமாகத்தான் பல பறவைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை அவரால் இனம் காண முடிந்தது. ஆங்கிலத்தில் ‘நைட் ஹெரான்' எனும் பறவை ‘வக்கா' என்று முன்பு தமிழில் அழைக்கப்பட்டதை அவர் பதிவு செய்துள்ளார்.”


வக்கா:

வக்காவின் தலையிலே நீளவரி (அ) கோல் போன்ற சூட்டிறகு:




File:Black-crowned Night Heron (Nycticorax nycticorax) in Hyderabad W IMG 7256.jpg
வக்காவின் தலையிலே நீளவரி (அ) கோல் போன்ற சூட்டிறகு














வக்காவின் தலையிலே நீளவரி (அ) கோல் போன்ற சூட்டிறகு:

















-----------------------

இதே போல, தலையில் நீள வரி இறக்கை இன்னொரு குருகுக்கும் உண்டு: Little Egret. இதனை வக்கா எனக் குறிப்பிடுகிறது MTL.

வக்கா¹ vakkā, n. < baka. Ardea nivea; கொக்குவகை. வக்காவு நாரையுங் கொக்கும் படுக்கவே (குற்றா. குற. 93, 2).

Ardea nivea - இப்போது உயிரியலில் இல்லை. 
Popular synonyms. Little Egret; White-crested Egret; White Pcke; Black-legged Gaulto (Jamaica) ; Garza blanca chica (Mexico). Ardea nivea J acq. Beitr. 178i,

Cockle (bivalve) - சிப்பிகளில் உள்ள நீளமான வரிகளுடன் ஒப்பிடுக: இவை வக்கா மணிகள். இதே நீள்வரிச் சூட்டிறகு கொண்ட
வக்கா பெயர்க்காரணம் விளங்கும்.






















Little Egret (வக்கா, acc. to MTL). But people say vakkaa is black-crowned night heron.

N. Ganesan














seshadri sridharan

unread,
Jan 9, 2017, 12:49:10 AM1/9/17
to vall...@googlegroups.com
2017-01-09 0:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, January 7, 2017 at 1:00:58 AM UTC-8, Dev Raj wrote:

On Friday, 1 July 2016 07:23:25 UTC+5:30, N. Ganesan wrote
भग [bhaga] - சூரியன்
बक [baka] -  பறவை

பறவைக்கும் பகலுக்கும் தொடர்புள்ளதா ?
தேவ்

பறவைக்கும் பகலுக்கும் தொடர்புண்டு. வேதத்தில் கருடன் சூரியப்பறவை. உதித்து மேலெழும்பி கீழே இரையை நோக்கிப் பாய்வதால்.

பக்கி என்றொரு சொல் பண்டு பறவையை குறிக்க பயன்பட்டதாகக் கருத இடமுள்ளது. பாவாணர் இதற்கு பகுபட்ட இரு இறக்கையை உடையதால் அப்பெயர் ஏற்பட்டது என்கிறார்.இதுவே சமற்கிருதத்தில் பக்ஷி என்றானது என்கிறார் பாவாணர். அது தமிழில் பட்சி என வழங்குகிறது. பக்கி என்ற சொல் கன்னடத்திலும் உண்டு வங்காளியிலும் உண்டு.

 நச்சோணன்   

N. Ganesan

unread,
Jan 9, 2017, 8:33:36 PM1/9/17
to மின்தமிழ், vallamai


On Sunday, January 8, 2017 at 10:59:00 PM UTC-8, காத்தன் தொன்னன் wrote:
2017-01-09 0:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

பறவைக்கும் பகலுக்கும் தொடர்புண்டு. வேதத்தில் கருடன் சூரியப்பறவை. உதித்து மேலெழும்பி கீழே இரையை நோக்கிப் பாய்வதால்.

ஆனால், நீங்கள் குறிப்பிடுவதுபோல், bhaga (sun), baka (waterbird) தொடர்பில்லை தான்.
bhaga, like bhagavat etc., could be for splitting. Splitting darkness and making daylight - this may be why the sun has a name, bhaga.

ஆனால், baka - பக- என்பது த்ராவிடச்சொல். ஆங்கிலத்தில் buck, அதற்கு நேரான (cognates) பார்த்தால் ஆடுகளுக்கு இந்தோ-ஐரோப்பியப் பெயர்.

> பக்கி என்றொரு சொல் பண்டு பறவையை குறிக்க பயன்பட்டதாகக் கருத இடமுள்ளது. பாவாணர் இதற்கு பகுபட்ட இரு இறக்கையை உடையதால் அப்பெயர் ஏற்பட்டது என்கிறார்.இதுவே சமற்கிருதத்தில் பக்ஷி என்றானது என்கிறார் பாவாணர். அது தமிழில் பட்சி என வழங்குகிறது. பக்கி என்ற சொல் கன்னடத்திலும் உண்டு வங்காளியிலும் உண்டு

>காத்தன் தொன்னன் 


அன்பின் சேசாத்திரி,

பக்‌ஷ- என்பது நல்ல இந்தோ-ஐரோப்பியச் சொல். paksha = side, shoulder, groin, feather, ...
எனவே, பக்‌ஷி = புட்பொது. ஆனால், வவ்வாலுக்கும், nightjar என்னும் சிறுபறவைக்கும் பக்கி என்பதுண்டு.
இரவில் நைட்ஜார் பறவை போல திரிவது என்ற பொருளில் ‘பக்கிப் பயல்’ என்பதுண்டு.

பக்கி - கொங்குநாட்டில் உள்ள சொல். ஹக்கி என்கிறார்கள் கன்னடநாட்டில். பக்‌ஷி என்பர் கேரளாவில்
“வெளுத்த பக்‌ஷி பறந்நுபோயி”.

சமண சமயத்தவர்கள் அறிமுகப்படுத்திய வடசொல்: பக்கி (< பக்‌ஷி). ஒருகாலத்தில் கன்னடத்திலும், கேரளத்திலும் இருந்திருக்கும்,
பிராகிருதத்தை விட்டுவிட்டு சம்ஸ்கிருதத்தை எடுத்தபோது பக்கி பக்‌ஷி என ஆள்கின்றனர் மலையாளிகள்.
ஆனால் சேட்டன், அனியன், உழுத்திரன் (=ருத்ர), ... என்று பழைய பிராகிருதச்சொற்கள் சில நிற்கின்றன மலையாளத்தில்.

ஆனால், இவ்விழையில் உள்ள குருகுகள் (waterbirds) வகையான வக்கா (baka/bakka, Skt.) வேறு. பக்‌ஷியில் தோன்றியதல்ல வக்கா.

நா. கணேசன்


 
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 23, 2019, 10:12:13 AM8/23/19
to வல்லமை, housto...@googlegroups.com, மின்தமிழ்
அரத்தை (செவ்வரத்தை = செம்பரத்தை), அரத்தம் (> ரத்தம்/ரக்த), அரம், அரக்கு, அரதனம், அராகம், ... போன்ற
சொற்களின் சிவப்பு நிறத்தில் இருந்து உருவாவது ஆரத்தி என்னும் கண்ணேறு கழித்தல் சடங்கு.
மஞ்சள், சுண்ணாம்பு, வெற்றிலை வைத்து அரத்தம் ஸிமுலேட் செய்யப்படுவது. எனவே, ஆரத்தி
என்ற பெயர் பெறுகிறது. குருகு/குலுங்கு போல, ல/ர மாற்றத்தால் ஆலத்தி என்றும் வழங்குகிறது.
வடமொழியில், ஹாரதி என்று ஆரத்தி பெயர்கிறது. ‘மரமது மரத்தில் ஏறி ...’ (தனிப்பாடல்).

குலுங்கு- மரம் பூத்துக் குலுங்குகிறது. காற்றால் அசைகிறது எனப் பொருள்.
குருகு (Cranes) நாட்டியம், சேர்க்கையின் போது குதித்தும் குலுங்கியும் அசைவதைக்
காணலாம். உடலும், றெக்கையும், வாலும், தலையும் குலுங்குவதைப் பார்க்கிறோம்.
நீர் > நீல் (= நீலம்), அரங்கம் : லங்கா, அரத்தம் : அலத்தம், இரத்தி :இலந்தை, ... போல
ர்/ல் மாற்றம்:   குருகு/குருங்கு >> குலுங்கு-

குருகு - சொல் இப்பறவைகளின் ஓசையால் எழுந்த பெயர்.
இதைப்பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளேன். 
ர-/ல- மாற்றத்திற்கு நல்ல உதாரணம்: குருகு :: குலுங்கு.
கிரௌஞ்சம் என்பது Black Ibis (அன்றில்) என்னும் 16th WSC கட்டுரையில்.

குருகு என்று தமிழ் இலக்கியங்களில் பயிலும் சொல் பறவையாளர்களின் ‘water bird’ என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்.


Water bird

From Wikipedia, the free encyclopedia

 

குருகு என்னும் பண்டைத் தமிழ்ப் பெயரும் ஒலிக்குறிப்புச்சொல்லே. Like kuyil, from the verb, kuuku-/kuuvu- ultimately forms from  onomatopoeia,
kuruku for water birds come from their calls whose prominent note is kr-kr-. Cranes are the primary examples for this word formation in Tamil/Dravidian.

குருகு குருங்,குலுங் என வடமொழிகளில் வரும். குலுங்குதல் என்ற வினைச்சொல் புரியும் என நினைக்கிறேன்:
மரம் பூத்துக் குலுங்கியது. அவள் சிரித்துக் குலுங்கினாள், அவன் அழுது உடலே குலுங்கியது. கும்பகர்ணன் எழுந்து நடந்தபோது பூமி குலுங்கிற்று
.... இவற்றில் உள்ள குலுங்கு-தல் வினை குருகு என்னும் சொல்லினின்றும் பிறந்தது. -ர-/-ல- மாறுபாடு: உ-ம்: இந்தியா முழுதும் ’புலூ கலர்’ நீலம் தான்.
நீர்- நீலம் என மாறி வண்ணத்துக்கு ஆகிநிற்கிறது. அதுபோல, குருகு- (an   onomatopoeic word) > குலுங்கு-.

பழந்தமிழர் ஏன் குலுங்கு- என்ற வினைச்சொல் படைத்தனர்:
இக் காணொளிகளில் குருகுச் சோடிகள் காதலில் குலுங்குவது காண்க,

இந்திய கிராமத்தில் 15000 குருகுகள் - ஆண்டுதோறும்
குருகு - பெயர்க்காரணம்: (ஐரோப்பிய மொழிகளில் Grus) - காணொளி கேட்க.

பறவைகள் குலுங்குதல் - பிபிசி

குருகு நடனம் - சிங்கை

எனக்கு சம்ஸ்கிருத பேரா. நீல்ஸ் ஹேமர் அனுப்பிய கட்டுரைகளால்
குருகு, குலுங்குதல் என்னும் பல்லாயிரம் முன்பு ஏற்பட்ட தமிழ்ச்சொற்கள்
விளக்கமடைந்தன. தமிழுக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் உள்ள தொடர்பை
அவருக்கு விளக்கணும்.

--

N. Ganesan

unread,
Aug 24, 2019, 3:20:40 AM8/24/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Fri, Aug 23, 2019 at 9:55 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆரத்தி பெயர்க்காரணம் சிறப்பு. 
ஆரத்தி > ஆலத்தி மாற்றம்; ர்>ல் மாற்றம் என்பதும் உங்கள் கருதுகோளுக்கு வலுவான ஆதாரம். 
அதனால் குருகு > குலுங்கு என்ற மாற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகிறது. 
சக  



நீர் :: நீல் (=நீலம்)
சூர- :: சூலம் (சூர் = முள்)
தாராட்டு :: தாலாட்டு   (தாராட்டு - முத்தொள்ளாயிரம். தார் - அசைவது. தாரா - அசைந்து நடப்பது).
வார் :: வால்
வேர் :: வேல்  (வேர், வேல் இரண்டும் ஊடுருவிச் செல்வது).
மேரு :: மேல் (A. Parpola, The roots of Hinduism, 2015, OUP)
வீருவீரு எனல் :: வீல்வீல் எனல் (குழந்தை விளக்கை அணைத்ததும் வீர்வீர்/வீல்வீல் என அலறியது)
அரத்தம் :: அலத்தம் (=அரக்கு = லாக்‌ஷ ‘lac')
அரங்கம் :: லங்கா

குருகு :: குலுங்கு
துருக்கர் :: துலுக்கர்
ஆரத்தி :: ஆலத்தி
குரவை :: குலவை
சாம்பர் :: சாம்பல்
பந்தர் :: பந்தல்
குடர் :: குடல்
குதிர் :: குதில்
ரொள்ளு :: லொள்ளு
லாந்தர் (lantern) :: ராந்தல் (இது சரியானது என மக்கள் மாற்றியுள்ளனர்).
etc.,

இன்னும் இருக்கும்.

நா. கணேசன்

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 24, 2019, 9:23:26 AM8/24/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
On Fri, Aug 23, 2019 at 9:55 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆரத்தி பெயர்க்காரணம் சிறப்பு. 
ஆரத்தி > ஆலத்தி மாற்றம்; ர்>ல் மாற்றம் என்பதும் உங்கள் கருதுகோளுக்கு வலுவான ஆதாரம். 
அதனால் குருகு > குலுங்கு என்ற மாற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகிறது. 
சக  



நீர் :: நீல் (=நீலம்)
சூர- :: சூலம் (சூர் = முள்)
தாராட்டு :: தாலாட்டு   (தாராட்டு - முத்தொள்ளாயிரம். தார் - அசைவது. தாரா - அசைந்து நடப்பது).
வார் :: வால்
வேர் :: வேல்  (வேர், வேல் இரண்டும் ஊடுருவிச் செல்வது).
மேரு :: மேல் (A. Parpola, The roots of Hinduism, 2015, OUP)

Two more examples of r/l :

(1) பார் = கால் பார் கோத்து (புறநா. 185, கால் = சக்கரம்) ; வண்டியின் அடிப்பாகத்துள்ள நெடுஞ் சட்டம், வண்டியின் 
இரு பக்கங்களையும் இணைப்பது. பெரும்பாண் ஆற்றுப்படை:
கொழுஞ் சூட்டு அருந்திய, திருந்து நிலை ஆரத்து,
முழவின் அன்ன முழுமர உருளி,
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக் கை நோன் பார்,
பார் - பார்ச் சட்டம் பருமை (வலிமை), இருபக்கத்துக்கும் பரவுவது.

பார்/பாரம் :: பாலம். ஆற்றின் குறுக்கே உள்ள பருமையான அமைப்பு.

(2) பூரித்தல் :: பூலித்தல்
யாலுதல் (= துதிக்கை) > யானை போல.  ஆல மரம் < யால் “areal roots". 
பூரித்தல்/பூலித்தல் > பூனை.

kanmani tamil

unread,
Aug 24, 2019, 10:24:22 AM8/24/19
to vallamai, mintamil
பாரம் >>>பாலம் ஏற்றுக் கொள்ளலாம் .
பூரித்தல் >>>பூலித்தல் எங்கே வழங்குகிறது ?
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfthhdr7SCmr8A0BJWZPURM4ntKwJdmuDJZqGSQwLvhVA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 24, 2019, 10:46:49 AM8/24/19
to மின்தமிழ், vallamai
On Sat, Aug 24, 2019 at 9:24 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பாரம் >>>பாலம் ஏற்றுக் கொள்ளலாம் .
பூரித்தல் >>>பூலித்தல் எங்கே வழங்குகிறது ?
சக 

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூச லாடாமோ.  

பூரித்து :: பூலித்து

NG
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvY5jjG3JZ2yvNhorEM8tcQ5gKYbp0WkWmc9DdHEYwjkw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 24, 2019, 11:02:47 AM8/24/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai


On Sat, Aug 24, 2019 at 9:24 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பாரம் >>>பாலம் ஏற்றுக் கொள்ளலாம் .
பூரித்தல் >>>பூலித்தல் எங்கே வழங்குகிறது ?
சக 


நிரஞ்சன் பாரதியாரின் பேரன். என் கிளாஸ்மேட்ஸின் மகன்.
அவருக்கு யானை, பூனை சொல்லுற்பத்தி பற்றிய மடல்.
 
யானையும், பூனையும் - சொல்லாய்வு:
யால்/ஆல் மரம் - Banyan fig tree (Cf. யானை/ஆனை < யால்-/ஆல்- ‘விழுது’)  

kanmani tamil

unread,
Aug 24, 2019, 11:17:34 AM8/24/19
to vallamai, mintamil

N. Ganesan

unread,
Aug 24, 2019, 12:58:54 PM8/24/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com

ஆர்த்தல் - ஒலித்தல்.
ஆரஆரம் = ஆரவாரம்  ( v is a glide here)
ஆரி-த்தல் āri- , 11 v. tr. cf. ஆலி-. To sound; ஒலித்தல். பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல் (சிலப். 29. வள்ளைப்).

ஆரித்தல் ::: ஆலித்தல் என்றும் வரும். ரகர-லகர மாற்றம்.
ஆலிப்பு ālippu , n. < ஆலி-. [M. āli.] Great noise, uproar; ஆரவாரம். ஆலிப்பா லடுத் தவந் நூல்களும் விரித்தே (தாயு. ஆகார. 9).
 ஆலி²-த்தல் āli- , 11 v. intr. < id. To make a noise, roar; ஒலித்தல். வெங்கூற் றாலிப்ப (பு. வெ. 4, 4).

யால்/ஆல் (Cf. யானை/ஆனை) மரப் பெயரும்,
ஆரித்தல்/ஆலித்தல் சட சட என்று ஒலியுடன் பெய்யும் ஆலங்கட்டி மழையும் வேறானவை.
கட்சி (= இடம்) என்ற சங்க இலக்கியச் சொல்லும், கக்‌ஷி > கட்சி என்ற வடசொல்லும்
வேறான உற்பத்தி கொண்டவை. அதுபோல.
https://groups.google.com/forum/#!msg/santhavasantham/plcY6VvEnes/7ZbvrlvBCQAJ

Srinivasakrishnan L

unread,
Mar 16, 2023, 9:04:46 AM3/16/23
to வல்லமை
குருவாயூர் (Guruvayur) ஸ்தலப்பெயரையும் சொற்பிறப்பியல் ரீதியாக விளக்கினால் நன்றாக இருக்குமே.

அன்புடன்

Srini

seshadri sridharan

unread,
Mar 16, 2023, 9:42:57 AM3/16/23
to வல்லமை


On Thu, 16 Mar, 2023, 18:34 Srinivasakrishnan L, <lns2...@gmail.com> wrote:
குருவாயூர் (Guruvayur) ஸ்தலப்பெயரையும் சொற்பிறப்பியல் ரீதியாக விளக்கினால் நன்றாக இருக்குமே.

அன்புடன்

Srini

தலபுராணம் குருவும் வாயுவும் வணங்கியதாக சொல்கிறது. எப்படி இதற்கு தமிழ் வேர்படி விளக்க முடியும்? .

N. Ganesan

unread,
Mar 16, 2023, 10:06:25 AM3/16/23
to vall...@googlegroups.com
Thanks, LS. Guruvayur is dear to us. Very close to our farms, every year at least twice a year I visited before coming to the USA, Not much crowds then,
nearby is Mammiyuur (Shiva), the Elephant camp, ...

I have written about TiruppuuNittuRai, with puuNi the bird. kurukuvAy might have contracted to kuruvAy-uur.

NG

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages