எந்த ஒரு மொழியிலும் அதைப் பயன்படுத்தும் சமுதாயம் சார்ந்த தாக்கம் இல்லாமல் போகாது. தமிழிலும் தமிழ்ச் சமுதாயத்தின் தாக்கத்தைப் பல கோலங்களில் காண இயல்கிறது.
அவற்றில் ஒன்று 'ஒற்று மிகுதலும் மிகாமையும்' ஆகும்.
கம்பு + தோசை = கம்புத்தோசை என்பது சென்ற நூற்றாண்டு வரை வழங்கிய தமிழின் போக்காக இருந்தது.
ஆனால் இந்த நூற்றாண்டில் அவ் வழக்கு மறைந்து கம்பு தோசை என்றே பேசவும் எழுதவும் படுகிறது.
குடும்பங்களே தனித்தனியாக (nuclear) வாழ்ந்து வரும் சமுதாயத்தில் சொற்கள் கூடப் புணர்ந்து ஒன்றுவதைத் தவிர்ப்பதைக் காண இயல்கிறது. கம்பும் தோசையும் 'என் இடத்தில் நான் இருக்கிறேன்; உன் இடத்தில் நீ இருந்து கொள்' என்று சமரசம் செய்து கொள்வதைப் போல ஒட்டாமல் ஒன்றாமல் தனித்தனியே வழங்குகின்றன.
சக